கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நீ எதற்காகப் பயப்படுகிறாய் இரைச்சலுக்கா இல்லையேல் அமைதியான பொழுதுகளுக்கா எதைத் தவிர்க்க விரும்புகிறாய் தனிமையா அன்றேல் அதன் கடினத்தையா உன் அயலில் யாராவது குழந்தை புன்னகைத்தாலும் வாணொலி காதலைப்பாடினாலும் உன் கண்கள் கசிவது ஏன். நீ அலைகளாலேயே தொடர்புற மறுத்த, ஆழத்திலுள்ள தண்ணீர். நீ யாருமே அணுக மறுந்துபோன மலை. எனக்கு நன்றாக உன்னைத் தெரியும் நீ கடினமான டைட்டானியத்தால் செய்யப்பட்ட மனதையுடையவன் இருந்தாலும் உன் அயலில் யாராவது குழந்தை புன்னகைதால் உன் கண்கள் கசிவது ஏன். எனக்குப் புரியும் மொழியையும் சொற்களையும் தெரிவுசெய்து, என்னுடன் உரத்தகுரலில் பேசு எதைக்கூறுகிறாயோ அதையெல்லாம் நான் ஒரு கவிதையில் அடக்குகிறேன் …
-
- 0 replies
- 1.8k views
-
-
எங்களுக்காக தங்கள் இசை வாழ்வையே அர்ப்பணம் செய்யும் தேனிசை ஜயா அவர்கள் facebook ல் வலம் வருவது சும்மா தட்டிய போது கிடைத்தது. அனைவரும் அங்கம் ஆகி மற்றைய பாடகர்கள் போல் பெரும் அங்கத்தவர்களை பெற ஊக்குவிப்போம். http://www.facebook.com/pages/Thenisai-Sellappa/73859321965#!/pages/Thenisai-Sellappa/73859321965
-
- 0 replies
- 1.5k views
-
-
புறப்படு புலியென!!! கொத்துக்கொத்தாய் செத்துவிழும் என் சொந்தங்கள் கண்டு மரணங்கள் மரத்திங்கே போயாச்சு! எத்தர் கூட்டமிங்கே எக்காளமிட்டுக் களித்திருக்க இன்னும் வலுப்பெற்று மனம் உறுதி ஆயாச்சு! ஆரா"றோ"போடும் பணத்துக்காய் பிணம் குவிக்க எம் இனத்துள்ளே எட்டப்பர் கூட்டங்கள்! வாலாட்டும் நாய்கூட தன் எஜமானர் இனத்திற்கே! இங்கோ உயிர் வளர்க்கும் காக்கை வன்னியர்கள்! எந்த நேரம் வந்து நாடுகள் தடை போட்டதோ அந்த நேரம் பொங்கியெழவில்லை அதனால் உயிரிழப்புகளே நாம் கொடுக்கும் விலை! இனியும் இங்கே பொறுத்திருந்தால் வரலாற்றில் எம் இனமே இல்லை! பங்கு போட்டால் பங்கம் வரும் தன் தேசம் துண்டாகும் என்றொரு பாசாங்கு நடத்துகின்ற கூட்டம்! நம்பி நம்பி நின்ற எம்…
-
- 0 replies
- 883 views
-
-
மீள்குடியேற்றம் மீண்டும் அகதியாய் ! கோடைகாலச் சூரியனால் உறிஞ்சப்பட்ட ஆழக்கடலின் கரைகளின் பாழங்களாய் வாழ்ந்திருந்த வீடும் வழியறிவித்த தெருக்களும் வடிவு தந்த பச்சைய மரங்களும் எட்டும் தூரம் வரையும் எதுவுமில்லாத் தரைமட்டமாய்…. சுடுகாட்டு வாசம் நாசியில் முட்டித் தொண்டைக்குள் உறைகிறது…. ஊர் திரும்பிய மகிழ்வு உதிர்ந்து கருக மீளவும் தடையரணில் கால்கள் தடையிடப்படுகிறது….. போரின் கோரம் மேமாதத்து நிகழ்வின் மீதமாய் பெருநிலம் முழுவதும் யாருமற்றுப் போன பின்னும் நிழல் இறக்கித் தலைவிரித்துத் தாண்டவ நெருப்போடு காத்திருக்கும் கனம் இன்னும் மீதமாய் குடியேற்றம் ஆயுதங்கள் நடுவே அமுலாகிறது…… *மீள்குடியேற்றம்* மீண்டும் நிவாரணம் வரிசை நிம…
-
- 0 replies
- 612 views
-
-
தன்வினை தன்னை சுடும்...(நொருங்கிய கிபிர்) முகில்கிழித்து வானதிர உள் நுழைந்தாயே.... எம் தமிழர் உயிர் குடித்து நீ மகிழ்ந்தாயே.... காலையிலே வந்து வேறு குண்டடித்தாயே... கணப் பொழுதில் உடல்கிழிந்து நீ அழிந்தாயே.... செருக்கோடு வந்துயன்று நீ திரிந்தாயே.... அந்த செஞ்சோலை உயிர்களையும் நீ குடித்தாயே.... வெறிபிடித்து உயிர்குடிக்க நீ அலைந்தாயே... இன்றோ பார் உடல் சிதறி நீ விழுந்தாயே....!!! - வன்னி மைந்தன் - :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :P :P :P :P
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆறு வருடங்கள் ஆறுமோ? சொற்கேளாப்பிள்ளையெனினும் ஏறிக் கூரையில் ஏந்திய பொறி ஏற்றாதா சுடர் ஏங்கியமக்கள் நெஞ்சிலும் விழுந்தன தணல்கள். அகம் அழிந்து திரிந்ததும் அறம்பிறழ்ந்ததும் களத்தில் ஆயிரம் கணைகள் பறந்ததும் மறவர்மடிந்ததும் கையறுந்ததும் கண்டவர் விண்டிலர் விண்டவர்கண்டிலர் தீய்ந்தது காடு படர்ந்தது நெருஞ்சி திறமென்றதுஉலகம் தீராது பிணக்கு வராது வழக்கு வரினும் பிழைக்கும் கணக்கு கால ஆற்றில் கண்ணீரா செந்நீரா? படகுகள் பார்ப்பதில்லை போகட்டும் உணர்வழியாது நினைவழியாது என்பிள்ளை தன்பிள்ளைக்குச் சொல்லும் இச்சாவின் கதை எழுதும்: ஈழம் அரும்கனவு. தேவ அபிரா வைகாசி 2015 http://www.globaltamilnews.net/GTMNEd…
-
- 0 replies
- 510 views
-
-
விளக்கு கம்பங்கள் விடுமுறை இன்றிரவிற்கு இரவுக்காவலாளி வேலை ஞாயிறு வர காத்திருந்த திங்கள் குளமும், எரியும் நிறைந்த கார்காலம் முடிந்த முன்பனிக்காலம் குளத்தில் அன்னம் ஏற்படுத்திய நீர்த்திவலை தொடமுன் கரையை தொட நீந்தியதிலோன்று அகாலத்திலிருந்து காத்திக்கிடந்தவனின் நீர்த்திட்டில் வடக்கே பலமைல் பிரயாணம் சென்று நடுநிசியில் வீடு திரும்பிய குடியானவன் மனம்போல் ஆரவாரமின்றி அமைதியாய் சூரியகாந்தி ஆதவன் வரவைநோக்கி சரக்கு ரயில் தண்டவாளத்தை கடந்து வெகுநேரம் கழிந்த பின்னும் கையசைத்தபடி காலைக்கடன் முடிக்க சென்ற சிறுவர்குழாம் ஓட்டமும் நடையுமாய் வரப்பில்போகும் அன்னம்மா இடையில் மோதும் தூக்குவாளியின் ஓசைகேட்டு நிமிர்ந்த நடவுச்சிலைகளின் ச…
-
- 0 replies
- 974 views
-
-
அள்ளி எடுப்ப தூஉவும் இன்பம் எள்ளித் தடுப்ப தூஉவும் இன்பம் பள்ளி கொடுப்ப தூஉவும் இன்பம் தள்ளிப் படுப்ப தூஉவும் இன்பம் (பெண்ணே உன்னை அள்ளி எடுத்து அணைக்கும் போது இன்பமாகின்றது, அவ்வேளை நீ எள்ளி நகைசெய்து தடுப்பது இன்பமாகின்றது, பள்ளியறையில் நீ கொடுக்கின்றதெல்லாம் இன்பமாகின்றது, இருந்தும் ஊடலுற்று நீ தள்ளிப் படுப்பது கூடவும் அல்லவா இன்பமாகின்றது!) -அன்பு மனைவிக்காக 14பெப்பிரவரி2016-
-
- 0 replies
- 1.1k views
-
-
ARM INAS வாகனத்தில் பெரிதாய் நாங்கள் மாஷாஅல்லா ஒட்டினோம் அவர்கள் புதுசரணய் ஒட்டினார்கள் நாங்கள் லாஹிலாஹஇல்லாவை ஒட்டினோம் அவர்கள் தெருவன் சரணய் ஒட்டினார்கள் நாங்கள் Proud to be a Muslim என்று ஒட்டினோம் அவர்கள் சிங்கலே ஒட்டினார்கள் நாங்கள் கஃபா பொம்மையை வைத்தோம் அவர்கள் புத்தர் சிலையை வைத்தார்கள் நாங்கள் மூளை முடுக்கெல்லாம் பள்ளி கட்டினோம் அவர்கள் சந்திகளில் எல்லாம் சிலை வைத்தார்கள் நாங்கள் ஊருக்கே கேட்க பயான் போட்டோம் அவர்கள் உலகத்துக்கே கேட்க பண போட்டார்கள் நாங்கள் முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பித்தோம் அவர்கள் பூமிபுத்ரா கட்சியை ஆரம்பித்தார்கள் நாங்கள் S….TJ…
-
- 0 replies
- 858 views
-
-
மேமாதம் எங்களின் சா மாதமாய்..... முள்ளிவாய்க்கால் ஓராண்டு நினைவுகளோடு ஒலிவடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்துங்கள்.
-
- 0 replies
- 832 views
-
-
இளமைக்கால நட்பு நீயும், நானும் கரகமாடிய அந்த ஒற்றை விளக்கு அரசமரத்தடி... தோல் கிழிந்து இரவெல்லாம் சிராய்ப்பு வலி கொடுத்த நாய்க்கர் வீட்டு வேப்பமரம்... மட்டைகளை தோளில் சுமந்து மைல்கணக்கில் நடந்து கிரிக்கெட் ஆடிய சொசொரப்பு மைதானங்கள்... எதிரியின் பம்பரங்களை சில்லு சில்லாக உடைத்த பிரேமா வீட்டு முன்வாசல்... பசியெடுக்காத நிலாவுக்கு கும்மி தட்டி சோறு£ட்டிய தாவணி சிட்டுக்களை காண அமர்ந்த திண்ணைகள்... குமாரிடம் மூக்குடைபட்டு இரத்தம் சிந்திய நெருஞ்சி முட்புதர்... இப்படி ஒவ்வொன்றாய் பதினைந்து ஆண்டுகளில் எல்லவற்றையும் மிதித்தழித்துவிட்ட கால அரக்கன்.. மிஞ்சியிருக்கும் நினைவுகள் மட்டும் சுவடுகளாய்…
-
- 0 replies
- 914 views
-
-
வரலாற்றுப்பழி ஏற்காதீர் இரா. செம்பியன் மகேந்திரன் எட்டப்பராசன் எழுதியது சற்றெண்ணிப் பாருங்கள் தமிழ்ச்சான் றோரே! சரிதானா கோவையிலே மாநா டின்று? வெற்றிடமா யாக்கிவிட்டே ஈழ நாட்டை வெற்றிவிழாக்கொண்டாடப் போகின் றீரா? வெற்றார வாரத்தில் மிதப்போ ரெல்லாம் விலைகொடுத்து வாங்குகின்றபொருளா நீங்கள்? மற்றவர்க்கு வழிகாட்டும் மாண்புள் ளோரே வரலாற்றுப் பழி ஏற்றுக் கொள்ளா தீர்கள்! குன்றனைய குறையுடலார் முள்வே லிக்குள் கொட்டிவைத்துக் கிடக்கின்றார் தமிழீ ழத்தில் சென்றங்கே கண்டவர்கள் இங்கு வந்து சிறப்பாக நடத்துவதாய்ச்செப்பு கின்றார்! என்னையடா கொடுமையிது! சொல்லக் கூசும் இழிநிலையில் நடத்துவதை மறைக்கு மிந்…
-
- 0 replies
- 920 views
-
-
"என்று - நான் உன்னைக் காண்பேன்??" "ஆந்தை அலறவில்லை?- சுடர் ஒளி அணையவில்லை? எந்தை அவள் - தன் ஒளி அணைத்துவிட்டாள் முந்தை நாளில் - கொஞ்சி கூடி குலாவினாள் பந்தை அடித்து - சேயுடன் ஆனந்தக் கூத்தாடினாள்" "சிந்தை ஓடவில்லை? - என் மனம் ஆறவில்லை? எந்தை அவள் - கண் மூடி உறங்கிவிட்டாள் நிந்தை பேசாள் - நினைவிலும் கெடுதல் செய்யாள் விந்தை புரிந்தாள் - எந்நாளும் உள்ளம் கவர்ந்தாள்" "மந்தை கூட்டம் போல் நாம் இருந்தோம்! தந்தை தாயாக சேர்ந்து நாம் இருந்தோம்! இந்தை பிள்ளை இன்னும் கண்ணீர் துளியில் கந்தை கொண்டு கண் துடைக்க வாரயோ?" "குந்தை அண்டி அவள் ஒய்யாரமாய் இருப்பாள் விந்தை காட்டி சேயுடன் ஒன்றி இருப்பாள் சிந்தை குளிரும் அ…
-
- 0 replies
- 253 views
-
-
"ஆண்டாள் மாலையில் வண்டுகள் மேயுது" "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும் பூவையரின் அழகை ஆண்கள் அறிவர் பூரிப்பு கொண்டு மயங்கித் திரிவர்!" "பூமி முழுவது கூட்டி திரிந்து பூசி மெழுகி காதல் பேசி பூசை செய்து மயக்குவதை பார்த்து பூதங்கள் ஐந்தும் தம்முள் சிரிக்கும்!" "ஆண்டாள் மாலை மகளுக்கு சூடி ஆண்டவன் அருளுக்கு தாய் வேண்ட ஆடவன் நடிப்பை காதலாய்ச் சூடி ஆகாய கோட்டையில் கனவு காண்கிறாள்!" "தையல் திருமணம் வேண்டி நோன்பிருந்து தையில் முன்பனி நீராடி தவமிருந்தவள் தைரியம் இழந்து ஆண்டுகள் போக தைவரல் இன்ப…
-
- 0 replies
- 241 views
-
-
சந்தர்ப்பம்………………! எப்போதும் அரசியல்வாதிகள் தமக்கான சந்தர்ப்பம் குறித்தே கூவுவதேன்! மக்களுக்கான தேவைகளைச் சந்தர்ப்பாதவாதம் விழுங்கிவிடுமதேன்(?) குரல்வளை நெரிபட்டு குற்றுயிராய் கிடந்த தமிழினமோ நம்பிக்கை மைந்தன் கை காட்டிய திசையில் நல்லது நடக்குமென்று நம்பியதன் விளைவாக அரச சபைகளில் புதிதாய் புதிய பிதாமகர்கள்(?) தமது சட்டவலு மூளையைக்கசக்கி சலவையைத் தொடங்கினர்.. சிங்கத்தை வீழ்த்தவல்ல தமிழைத் தாழ்த்த தட்டிக் கேட்போரை… மக்களை மகுடியாக்கி ஒரு மந்தைக் கூட்டத்தை உருவாக்கத் துடிக்கிறது! உருவேறி உருவேற்றி நிற்கிறது ஒரு கூட்டம் இல்லாத புலிபற்றி எப்போதும் சிலாகிப்பு பொல்லாத புலியாம்! புலியுறுமல் ஓய்ந்து பல்லாண…
-
- 0 replies
- 693 views
-
-
கரும்புலிகள் என்று பெயர் எடுத்து எமக்காக உயிரை குடுக்க வந்த அன்பு செல்வங்களே.. என்ன என்று எழுவது உங்கள் பற்றி உங்களை பற்றி கவிதை எழுத எங்களால் முடியாது நீங்கள் எமக்காக வந்த தியாக செல்வங்கள் அல்லவா? ஏழு ஏழு ஜென்மம் எடுத்து வந்தாலும் உங்கள் போல் நம் நாட்டின் செல்வங்களை பெற முடியுமா? நம் நாட்டின் தெய்வங்கள் என்று சொன்னால் உங்களை அல்லவா நாங்கள் பூசிக்க வேண்டும் நம் நாட்டுக்காக இன்னூயிர்களை குடுக்க வந்த தியாக செல்வங்களே.. உங்களுக்காய் இரம் கரம் கூப்பி தலை வணங்குறேன்
-
- 0 replies
- 1.3k views
-
-
வார்த்தைகள் யாவும் வலுவிழந்து போகின்றன கார்த்திகை வானம் போல மனம் கனத்துக் கிடக்கின்றது நேற்று வரை எம்மோடு இருந்த நீ இல்லை என்ற சொற்கேட்டு இடி விழுந்த கோபுரம் போல இதயம் நொருங்கிக் கிடக்கின்றது ஆற்றல் மிகுந்த பேராசானே! நீ ஆக்கி வைத்த இலக்கியங்கள் இன்னும் நூறு தலைமுறைக்கு ஈழத் தமிழர் கதை சொல்லி வாழும் பழகிட இனித்திடும் வெல்லமே பார்வையாலே பேசும் பெருமகனே ஈழத்தமிழர் பெயர் சொல்லி எவர் இரந்து கேட்டாலும் இல்லை எனாமல் நிறைந்து வளங்கும் வள்ளலே உன்னால் உயர்ந்தவர் பலர் - எம் உள்ளத்தில் என்றும் நீ இருப்பாய் பெரும் கனலாய் வருகின்ற எம் படைப்புக்களின் இனியும் நீ வாழ்ந்து கொண்டேய் இருப்பாய்... #ஈழத்துப்பித்தன் 2002 காலப்பகுதிகளி…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஏமாற்றி அணிவிக்கப்பட்ட சங்கிலியுடன் வறட்டு ஓலமிடும் நாய் எப்போதேனும் எலும்புத்துண்டுகள் அவ்வப்போது மிச்ச சோறும்... சில அடிகளும் ஏமாந்த வெறியுடன் பகைத்துக் குரைக்கும் நாய் சுதந்திரமாய் விடப்படும் சில நாழிகையில் மூளைச்சலவையில் எஜமானனுக்கு வாலாட்டியபடி அவனது பின்புறம் பம்மிப் பதுங்கும் சங்கிலி மாட்டிய த்ருணத்தில் இழந்த சுதந்திரமெண்ணி வெற்றாய் முனகும் மீண்டும் அடுத்த எலும்புத்துண்டுக்காய்க் காத்திருக்கும் வாலாட்டி. * தி. பரமேசுவரி
-
- 0 replies
- 559 views
-
-
மனசு கொஞ்சம் வலிக்குது .....!!! -------- பச்சை நிற உடலழகியின்... வண்ண வண்ண பூக்கள் .... அங்காங்கே அழகுபடுத்தும் .... பச்சை நிற அழகியின் வதனம் .... சுற்றும் முற்றும் பார்த்தேன் ... தூரத்தில் யாரும் இல்லை ... தடுப்பாரும் யாருமில்லை ....!!! கிள்ளி எடுத்தேன் பூவை .... தள்ளி போகமுடியாமல் .. தன் வதனத்தை இழந்து ... தவிர்த்த செடியின் சோகத்தை ... இப்போ நினைத்தால் ..... மனசு கொஞ்சம் வலிக்குது .....!!! ஆற்றங்கரைக்கு போனேன் ..... அழகான ஆற்று நீரில் கால் .... பதித்தேன் தட்டி சென்றது மீன் ... கூட்டம் கூட்டமாய் குடும்பத்தோடு .... ஒற்றுமையாய் வந்தபடியிருந்தன ....!!! என்னை மறந்தேன் -தூண்டிலில் ... புழுவை செருகி துடிக்க துடிக்க .... …
-
- 0 replies
- 952 views
-
-
இந்தியாவையும் சீனாவையும் இழுத்து வந்து போட்டீர்-பா .உதயன் இந்து சமுத்திரத்தில் வந்ததொரு சீனக் கப்பல் இலங்கைக்கு வந்திருக்காம் சிக்கல் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இதனால விக்கல் அண்ணன் அமெரிக்காவும் அதனால முறுகல் பூகோள அரசியலில் இங்கே புதிதாய் கயிறிளுத்தல் போட்டி இனி என்ன நடக்கும் இந்து சமுத்திரத்தில் இந்த சிறிய தீவில் புகுந்து இருந்ததெல்லாம் அறுத்துக் கொட்டிப் போட்டு எல்லாப் பெருச்சாளிகளும் இப்போ இந்து சமுத்திரத்தில் கண்ணாம் தங்கள் பாதுகாப்பு என்று சொந்த நலன் போட்டி பட்டுப் பாதை திட்டம் என்று பாதி உலகை சுறுட்டிய சீனா இலங்கைக்கும் வந்து இருந்ததையும் சுருட்டிப் போட்டான் இது சீனாவின் இன்னும் ஓர் ஆசியக…
-
- 0 replies
- 389 views
-
-
பொய் சொல்ல வேண்டியதில்லை எதிர்பார்த்து ஏமற வேண்டியதில்லை வெட்டிக்கதைகள் பேச வேண்டியதில்லை கவலையால் தூக்கம்கெட தேவையில்லை முகத்திற்குமுன் சிரித்துப்பேசி முதுகுக்குப்பின் குறைத்துப்பேச வேண்டியதில்லை ஊருக்கு உபதேசம் செய்யவேண்டியதில்லை நாம் குழந்தையாகவே இருந்திருந்தால்...
-
- 0 replies
- 548 views
-
-
https://www.youtube.com/watch?v=LaINo30pO8o&feature=youtu.be
-
- 0 replies
- 580 views
-
-
"வாழ்வை,கலை தொடும் பொழுது" / "When Life touches by Art" "கலையும் வாழ்வும் பல பல கோணங்கள், மகளே கூர்ந்து பார்த்தால், பல பல வர்ணங்கள் பளபளக்கும்! வாழ்வு எம் இதயத்தை தொடும் பொழுது, மகளே வாழ்வை,கலை பிரதி பலிப்பதை உணர்வாய்!" "வாழ்வை கலை தொடும் பொழுது,நீ ஆறுதலடைவாய், மகளே வேதனைக்கு அது விடியல்,இன்பத்திற்கு அது ஊற்று! இயந்திர வாழ்வு மனிதனை சூழும் பொழுது,மகளே 'இயல் இசை நடனம்',ஒரு புது தெம்பு கொடுக்கிறது!" "சூதும் வஞ்சகமும் வாழ்வை கவ்வும் பொழுது,மகளே கலை எமக்கு துணை நின்று, எம்மை விடுவிக்கும் ! வாழ்வு நேர்கோடும் அல்ல கணிக்கக்கூடியதும் அல்ல, மகளே வாழ்வு எட்ட…
-
- 0 replies
- 145 views
-
-
தமிழிச்சியின் ஓர் வீரப் படைப்பு அருமையான படைப்புக்களை ஒரு தமிழிச்சி துணிவுடன் படைத்துள்ளார். பொதுவாகவே தமிழ் பெண்களின் வீரமிகு எழுத்துக்கள் ஆண்களின் படைப்புகளுடன் ஒப்பிடும் போது குறைவாகவே காணப்படுகின்ற போது ஒரு தமிழிச்சி இதோ வீறு கொண்டெளுகிறாள். நாம் தான் அவளை ஊக்குவிக்க வேண்டும். http://reginidavid.wordpress.com/
-
- 0 replies
- 975 views
-
-
இது 2006 இல் யாழ் களத்தில் நான் பதிந்த கவிதை. கனவுகள் பொய்த்துப்போனாலும் உணர்வுகள் மனதின் ஆழத்தில் இன்னும் ஏக்கத்தின் அலைகளை எழுப்பியவாறே............ இது , நாம் தொலைத்த ஒரு பெருமை மிகு சகாப்தத்தின் மீட்டல் இன்றைய சூழலுடன் பொருத்தி, தியாகங்களைக் காயம் செய்யாதீர்கள். இன்னுயிதன்னை நெய்யெனச்சொரிந்து இலட்சியத்தீச்சுடர் காத்தவரே -உங்கள் புகழுடல் உறங்கும் பூமியில் -வெற்றி மலைர்கலைத்தூவி நாம் வணங்கிடுவோம் . விதையென மண்ணில் வீழ்ந்தவரே -உங்கள் விதை குழிகளில் வேர்பாய்ச்சி ..... வான்வெளி எங்கும் கிளைபரப்பி.... விழுதெறிந்து வளர்வோம் இனி என்றும் வீழமாட்டோம் காலக்கிண்ணமதில் -இன…
-
- 0 replies
- 1.1k views
-