கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
"வேதனையும் மகிமையும், வாழ்வின் கதை" / "Pain and glory are Every one's Story" "ஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே!" "அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறது, அங்கே நிம்மதி கிடைக்கிறது, இங்கே வேதனை வலிக்கிறது, அன்பே!" "யார் யாரோ, ஒவ் ஒருவருக்கும், ஒரு கதை சில வலியை கூறும், சில சிறப்பை கூறும், அன்பே!" "எவரடி பூமியில் இன்று, பயம் கொள்ளா மனிதன்? சிலர் அழுவார், சிலர் அழுதுகொண்டே சிரிப்பார் அன்பே!" "வெவ் வேறு கட்டத்தில், எம்மை திட்டி சா…
-
- 0 replies
- 232 views
-
-
ஈழத் தமிழர் - பேராசிரியர் இரா. அரங்கசாமி பீதி யுற்றுப் பிறந்த மண்ணில் பரித விக்கும் ஈழவர் நாதி யற்ற நாய்க ளாக நாளும் சாக லாகுமோ? நீதிக் காக அவர்கள் செய்யும் நியாயப் போரைப் பழித்துமே ஓதிக் கற்ற தமிழர் கூட்டம் ஒதுங்கி நிற்ப தென்னவோ? பயிரை மேயும் வேலி யான பாது காப்புப் படையினால் உயிரை விட்டும் இன்னல் பட்டும் உழைக்கும் மறவர் தளரவே கயிறு திரித்துக் கதைகள் பேசிக் காட்டிக் கொடுத்து நம்மிலே வயிறு முட்டச் சோறு தின்னும் வீணர் கூட்டம் வாழ்வதோ? கூறு கெட்டுத் தமிழர் சாகக் கைகள் கட்டிப் பார்ப்பதோ? சேறு கொண்டு வீசி அவரைச் சாடு கின்ற கும்பலும் மாறு பட்டு நிற்கும் மற்ற மானத் தமிழர் கூடியே வேறு பாடு போக்கி விட்டு வகுக்க வேண்டும் நல்வழி! -தென்…
-
- 0 replies
- 749 views
-
-
நான் உன்னைத் தொலைத்து நீ தேட நீ என்னைத் தொலைத்து நான் தேட இருவரும் தேடினோம் எங்கெங்கோ? இதுவரை கிடைக்கவில்லை நாமெங்கோ! உணர்வுக்குள் சென்று உயிருக்குள் நனைந்து உறவாடி மகிழ்ந்த நாமெங்கே? என்னை அழைத்து அளாவிப் பேசிய ஆருயிர் அன்பே நீயெங்கே! உன்னை அணைத்து உள்ளம் நனைத்த உன்னுயிர் அன்பே நானெங்கே? நம்மை இணைத்த நல்மனம் எங்கே? நன்றி சொல்வோம் தினம் இங்கே! அல்லும் பகலும் உன் நினைவு அழுது துடிக்குதே என் உணர்வு சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 881 views
-
-
ஓரு பயணம் தொடங்கினேன் பல வருடங்களுக்கு முன் பாதி தூரம் கடந்தாயிற்று ஏன் முக்கால்வாசித் தூரமாயுமிருக்கலாம் சிலவேளைகளில் முடியும் தருவாயிலுமிருக்கலாம். முன்பெல்லாம் திருவிழாக்கூட்டமாய் பலர் உடன் வந்தார்கள் பயணங்கள் இனிமையாய் அமைந்தன பாதையின் விதிகள் கற்பிக்கப்பட்டன அவற்றை மீறியபடியும் விதிகளை கற்றுக கொண்டேன் பாதையின் கிடங்குகளைக் கடக்கையில் கைபிடித்து அழைத்தப்போயினர் சிலர் பாதையின் தன்மைகள் மாறிக்கொண்டே இருந்தன விழுந்தால் வலிக்காத மணற்பாதையில் தொடங்கி பாதுகாப்பான ஒழுங்கை, சாலை என்றாகி காலப்போக்கில் பாதைகள் அகன்று நெடுஞ் சாலையாயிற்று அதிலும் நடக்கக் கற்றுக் கொண்ட போது பயணத்தின் கால்வாசி கடந்திருந்தே…
-
- 0 replies
- 860 views
-
-
POETRY AND THE FATE கவிதையும் விதியும் என் அன்புக் கவிஞன் சே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ”புலவனும் வறுமையும் பிரிக்க முடியாதவை” என்று சொன்னதாக கனடா சென்றிருந்தபோது விஜயன் சொன்னான். இது ஆயிரம் ஆயிரம் வருடங்களாக ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கவிஞர்கள் கலைஞர்களால் சொல்லப் பட்டு வருகிற வார்த்தைதான். சில நாட்க்களின் முன்னம் பாவைக்கூத்து கவிதையை எழுதி முடித்தபோது எனக்கும் அப்படித்தான் தோன்றியது. கவிதையை எழுதியபின்னர் என்னை துக்கம் சூழ்ந்தது. என் அப்பா அம்மா இருவருக்குமே கவிதைப் பைத்தியம் பிடித்திருந்தது. இரு துருவங்களான அவர்களைக் கவிதை மட்டும்தான் சேர்த்து வைத்திருந்தது. நான் பிறந்தபோது …
-
- 0 replies
- 828 views
-
-
காற்றின் காத்திருப்பு பிணவறையின் மருந்து நெடி நடுவே அந்த உடல் ஆண் என்பது தவிர வேறெதுவும் தெரியவில்லை முகத்தைத் தேடினேன் கைகளைத் தேடினேன் நெஞ்சுக் கூட்டுக்குள் நினைவெதுவும் மீந்திருந்தால் கொண்டுசெல்லக் குனிந்து தேடினேன் காட்சியின் கொடூரம் மூச்சை அடைத்தது கால்கள் நடுங்கிற்று முத்துக்குமார் அவன் பெயர் என்றார்கள். அவனைத் தின்ற நெருப்பு எங்கிருந்து வந்தது? கூராய்வுச் சோதனையில் கண்டறிய முடியாது. இப்போது அது எங்கே போனது? ஒற்றர்கள் முயன்றாலும் அதன் தடயம் தெரியாது. கண்ணீர் வரவில்லை கதறல் எழவில்லை சொல்லிப் புலம்ப ஒரு சொல்லும் கிடைக்கவில்லை வெளியே வந்தேன் கூடியிருந்தனர் இளைஞர் பலபேர் கண்களில் கோபம் கைகளில் நடு…
-
- 0 replies
- 745 views
-
-
சொந்த நாய்களுக்குச் சொத்தெழுதி வைக்கும் தேசங்களே! ஓர் இனமே நிலமிழந்து நிற்கிறதே நிலம் மீட்டுத்தாருங்கள் பூனையொன்று காய்ச்சல் கண்டால் மெர்சிடீஸ் கார் ஏற்றி மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே! ஈழத்து உப்பங்கழியில் மரணத்தை தொட்டு மனித குலம் நிற்கிறதே! மனம் இரங்கி வாருங்கள்! வற்றிய குளத்தில் செத்துக்கிடக்கும் வாளை மீனைப்போல் உமிழ்நீர் வற்றிய வாயில் ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு ரொட்டி ரொட்டியென்று கைநீட்டிம் சிறூவர்க்குக் கை கொடுக்க வாருங்கள்! தமிழச்சிகளின் மானக்குழிகளில் துப்பாக்கி ஊன்றித் துளைக்கும் சிங்கள வெறிக் கூத்துக்களை நிரந்தரமாய் நிறுத்துங்கள்! வாய்வழி புகட்டிய தாய்ப்பால் காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு கண…
-
- 0 replies
- 1.2k views
-
-
பெத்த மனம் தூங்கலையே பிள்ளை மனம் ஏங்கலையே பார்த்துப் பல நாளாச்சு பங்குனியும் பிறந்தாச்சு வந்து கூப்பிடுவானு வாசல் வந்து நின்னாச்சு விக்கல் வந்தாலும் நீ தான் நினைக்கிறனு வெசனத்த மறந்து பித்துக் கொள்ளும் தாய்மையடா தாய்ப்பால அதிகம் சுரக்குமுனு பத்தியம் பல இருந்தேன் கசக்கும் வைத்தியத்தை கற்கண்டாய்ச் சுவைச்சேன் பேச்சு வரலையினு மண்சோறு சாப்பிட்டேன் டா காத்துக் கருப்பு தீண்டும்னு அப்பா கருப்பசாமிக்கு நேந்துகிட்டார் பள்ளிக்கூடம் போக காலு வலிக்கும்னு அப்பா பத்துக்காதம் தொலவுத் தூக்கி வருவார் மண்ணுக்குள்ள போகும் முன்னே என் மகராசா வந்துடுடா சீக்கிரம் வந்தாக்கா உன்னத் தொட்டு உச்சி முகந்துடுவேன் பார்த்துப் பல நாளாச்சு …
-
- 0 replies
- 923 views
-
-
[size=3][size=4]நேர்மை கண்ணியம் செயற்பாடு எல்லாமாகிநின்றதனால்.... மக்கள் பெருமளவாய் அவர்பின்னே அணிதிரண்டனர்.[/size] [size=4]தலைமைக்கான பண்பில்....[/size] [size=4]அந்தப் பெயர் அடிமைப்பட்டவர்களின் உச்சரிப்பில் என்றும் நிலைத்திருக்கும் தமிழினத்தை வன்முறையால் அழிக்கவெண்ணியோரை அதேவழியில் எதிர் கொள்ள தமிழினத்தை சிந்திக்கவைத்ததந்தப் பெயர் அதில்... அமைதிவழியும் இருந்தது போராயுத வழியுமிருந்தது[/size] [size=4]பசுக்கள் சிங்கங்களைக் கொம்பால்... குத்திக் கிழித்தால் அது பயங்கரவாதம் சிங்கங்கள் பசுக்களை கடித்துக் குதறித் தின்றால்.... அதற்கென்ன பெயர்? என்ற கேள்வியை உலகத்திடம் ஏற்படுத்தும் தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் வரலாறந்தப் பெயர்.....![/size] […
-
- 0 replies
- 633 views
-
-
நாலுலட்சம் பேரின் கண்ணீர் அணையுடைந்து வருகிறது. வல்லரசப் பலம் திரட்டி வன்னிக்குப் படையனுப்பிக் கொன்றதும் குறையுயிரில் துடிதுடிதுடிக்கக் குண்டள்ளி வீசியதும் கொன்றே முடிப்போமென்று கொழுப்பெடுத்து எழுந்ததுவும் பஞ்சாய்ப் பறக்காதோ ? பாவியர் பாடையில் ஏறாரோ ? பழியோ இதுவெங்கள் பாவமோ என்றெம் விழியுடைந்த நேரம் கல்மடுவில் கதவுடைந்ததாம் காணொளியும் கண்ணால் பார்த்தது போல் காதுகளில் எட்டிவிடும் செய்திகள் பொய்க்காமல் போகாதோ ? எமக்காய்ப் பொழுதொன்று விடியாதோ ? புலியைக் கொன்று முடித்துக் கடலில் தள்ளிவிட்டுப்படை திரும்பச் சிங்களர் வீடெங்கும் சிங்கக் கொடியேற்றுவோம் என்றெம் இதயங்கள் நோக வஞ்சம் வைத்து நஞ்சு துப்பியவன…
-
- 0 replies
- 1k views
-
-
தடமழிந்த நிலமிருந்து எழுகின்ற குரல் கேட்கிறதா, சாம்பல்மேடுகளில் படர்ந்த காற்றில் உறைந்து கிடக்கும் உயிர்ச்சூடு புரிகிறதா, துயர் துடைக்கும் கனவைச் சுமந்தவர்களின் நடையோசை எதிரொலிக்கிறதா, தோழர்களே.... கருகியழிந்த இனமொன்றின் பாடல்களல்லவா இவை, அன்றொருநாள் எம் நிலமெங்கும் ஓங்கியொலித்த விடுதலையின் குரல்களல்லவா, இதோ, வீழ்ந்துபட்ட நிலமிருந்து தமிழ்க்கிழவி அழைக்கிறாள் யாருமில்லையாம் குரல் செவிமடுக்க, ************************************* காலம் தன்னை நிசப்தமாக்கிக்கிடக்கிறது. மு…
-
- 0 replies
- 812 views
-
-
விலைமாது விடுத்த கோரிக்கை..! ராமன் வேசமிட்டிருக்கும் பல ராட்சசனுக்கு என்னை தெரியும். பெண் விடுதலைக்காக போராடும் பெரிய மனிதர்கள் கூட தன் விருந்தினர் பங்களா விலாசத்தை தந்ததுண்டு. என்னிடம் கடன் சொல்லிப் போன கந்து வட்டிக்காரகளும் உண்டு. சாதி சாதி என சாகும் எவரும் என்னிடம் சாதி பார்ப்பதில்லை. திருந்தி வாழ நான் நினைத்த போதும் என்னை தீண்டியவர்கள் யாரும் திரும்ப விட்டதில்லை. பத்திரிக்கையாளர்களே! விபச்சாரிகள் கைது என்றுதானே விற்பனையாகிறது.. விலங்கிடப்பட்ட ஆண்களின் விபரம் வெளியிடாது ஏன்...? பெண்களின் புனிதத்தை விட ஆண்களின் புனிதம் அவ்வளவு பெரிதா? காயிந்த வயிற்றுக்கு காட்டில் இரை தேடும் குருவியைப் போல் …
-
- 0 replies
- 3.6k views
-
-
இளம்பிறை கவிதைகள் ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் நிரம்பித் ததும்பும் நீர் உங்கள் கிணற்றிலிருந்து தூர் வாரி வெளியேற்றப்படும் வெற்று மண்ணாய்க் கொட்டப்படுகிறேன் நான். என் கிணற்றில் எப்போதும் நிரம்பித் ததும்பும் நீராக இருக்கிறீர் நீங்கள். இறகுகள் உதிர்ந்துகிடக்கும் ஏரி திருப்பித் துரத்தும் பேராறு எதிர்பாரா தருணத்தில் சாபச் சாம்பலை வீசிமறையும் வரம் கேட்ட தெய்வங்கள் புழுதி மண்ணில் புரண்டழுது அடம்பிடிக்கும் குளிப்பாட்டி துடைத்தெடுத்த நினைவுகள் தனித்தனியே விழிப்பைச் சுற்றிலும் பசித்த மலைப் பாம்புகளாகத் தொங்கிக்கொண்டிர…
-
- 0 replies
- 2.5k views
-
-
கந்தகத்தூள் வாகனத்துடன் கலகலப்பாய் சென்றவரின் தூல உடம்பு சுக்கு நூறானது. விடுதலைத் தாகத்தால் வீறுகொண்டெழுந்து வெளியேறியது ஆன்மா காடு மேடெல்லாம் கடந்து களிப்புடன் மிதந்தது. எம்; மக்களைக் கொன்றவரை நான் கொன்றேன். என் இனம் விடுதலை பெறும் வரை நான் சாந்தியடையேன் என சபதம் எடுத்துச் சத்தியம் செய்தது. ராசபக்சாவின் இரத்தப் பிசாசுகள் முள்ளி வாய்க்காலை முற்றுக்கையிட்டு தமிழரின் இரத்தத்தால் தனக்குத் தானே அபிசேகம் செய்த வேளை பதபதைத்துத் தவித்து பற்பல ஆன்மாக்கள் கிழம்பின. எங்கள் தவிப்புப்போல், எங்களை அழித்தவன் தவிப்பான்; இதுதான் நியதி எனச் சாபம் போட்டு, துயிலும் இல்லத்தை சுற்றிய ஆன்மாக்களைக் கட்டித் தழுவி தங்கள் தவிப்பைக் கொ…
-
- 0 replies
- 592 views
-
-
என் இனமே..!! என் சனமே...!!! -------------------------------------------------------------------------------- என் இனமே..!! என் சனமே...!!! காற்றில் வரும் எங்கள் அழு குரல் உங்களுக்கு கேட்கிறதா..?? எங்கள் உடல் இரத்தம் கருகி வரும் வாசம் வருகிறதா..?? உங்களை விட்டால் எங்களுக்கு யார் இருக்குறார்கள்..?? அழுவதற்கு திராணியும் இல்லை.. தொண்டை குழியில் ஒரு சொட்டு தண்ணீரும் இல்லை.. உங்களை விட்டால் எங்களுக்கு யார் இருக்குறார்கள்..?? அருகிலே இறந்த என் பச்சை பாலகன் மனதிலே இறந்து போன என் கணவன் தூரத்திலே இறந்து போன என் உறவுகளின் சாம்பல் உங்களை விட்டால் எங்களுக்கு யார் இருக்குறார்கள்..?? கண்ணருகில் சிறு துளி கண்ணீர் மூக்கருகில் துளிர் விட…
-
- 0 replies
- 822 views
-
-
கேப்பாபுலவு கவிதைகள் – தீபச்செல்வன் கேப்பாபுலவு – 1 முன்பொருகாலத்தில் எனது தேசம் கடலாலானது இப்போது இராணுவத்தினாலானது எனது தொன்மங்களின்மீதெழுப்பட்ட இராணுவமுகாங்கள் எனது வீட்டின் தளபாடங்களிலானது எப்போழுதும் வீழா நந்திக்கடலருகே பூவரசம் தடிகளில் செய்த வில்லினால் இராணுவமுகாமை நோக்கி அம்பெய்கிறான் கேப்பாபுலவுச் சிறுவன். பனியும் வெயிலும் தின்றது குழந்தையரின் புன்னகையை எனினும், வாடிய மலரைப்போல மரங்களின் கீழே தூங்கும் தொட்டில்களில் அவர்களுமை சுற்றி வளைத்தே உறங்குகின்றனர் துப்பாக்கிகளுக்கு அஞ்சாது வெஞ்சினத்துடன் கொதித்தெழுகின்ற…
-
- 0 replies
- 860 views
-
-
கருணாகரன் கவிதைகள் ஓவிய உதவி தா. சனாதனன் சொல் 01 ‘தம்பியென்றால் சகோதரன்’ என்றான் அண்ணன் ‘தம்பி என்றால் குகன்’ என்றான் ராமன் ‘தம்பியென்றால் எங்கள் வீட்டின் வேலைக்காரப் பையன்’ என்றாள் பெரிய வீட்டுப் பெண். ‘தம்பி என்றால் இளையவன்’ என்றார் ஆசிரியர் ‘தம்பி என்றால் பிரபாகரன்’ என்கிறார் வைகோ. ‘தம்பி என்றால் என் படைத்தளபதி’ என்றான் மன்னன் தம்பி என்றால் யாரென்று நீங்கள் சொல்லுங்கள்? 02 ‘அம்மா என்றால் உயிரின் வேர்’ என்றாள் அக்கா. ‘அம்மா என்றால் அன்னை, தாய், பெற்றவள், பாசம் நிறைந்தவள்...’ என்றெல்லாம் விழித்துரைத்தார் ஆசிரியை ‘அம்மா என்றால் இரக்கம் நிறைந்தவள்’ என்றான் பிச்சைக்காரன் ‘அம்மா என்றால் உயிரின் வாசம்’ என்றான் மகன் ‘அம்மா என்றால் எங்கள் அம்மா தான்’ என்கிறார் அதிமுக …
-
- 0 replies
- 1.3k views
-
-
நண்பனுக்கு திருமண வாழ்த்து மடல் -------- என் .... உயிர் நண்பனுக்கு இன்று .... திருமணநாள் .....! வாழ்க்கையின் அனுபவத்தை ..... அணுஅணுவாய் பங்கேற்ற .... என் இனிய நண்பனுக்கு ..... இன்று திருமண நாள் .....!!! நான் வாழ்த்தாமல் அவனை ..... யார்வாழ்த்தினாலும் அவன் .... திருப்தியடைய மாட்டான் ..... அவனை வாழ்த்தும் உரிமையும் .... கடமையும் எனக்கே உண்டு .....!!! சாத்திரங்கள் படி வாழ்வதை .... காட்டிலும் சாதித்து காட்டும் .... மனிதனாக வாழ்ந்திட வாழ்த்துகிறேன் ..... பஞ்சாங்கப்படி வாழ்வதை காட்டிலும் .... பஞ்ச அங்கங்களோடு வாழ்நாள் .... முழுவதும் வாழ்ந்திட வாழ்த்துகிறேன் .....!!! உறவுகளை அரவணைத்து வாழ்ந்து ..... உற்றாரை உள்ளத்தால் நேசித்து ..…
-
- 0 replies
- 6.9k views
-
-
கோபம் கொண்டு எழு தமிழா.. கொலை வெறி கொண்ட சிங்களவர்களை கடல் வந்து நம் இனத்தவரை அள்ளி சென்றது போல்.. நாம் அவர்களை அள்ளி செல்ல வா தமிழழா.. நம் தமிழ் மண் காக்க சென்ற நம் மாவீரர் வழியில்.. நாமும் செல்வோம் எழுந்து வா தமிழா.. நம் மண் காக்க போராடும் நம் போரளிகளுக்காக எழுந்து வா தமிழா.. நம் இனத்தவரின் அலறல் ஓசை உன் காதில் கேட்கவில்லையா? எழுந்து வா தமிழா.. நம்மை கண்டு அஞ்சி நடுங்கும் சிங்கள படைகளை அடித்து விரட்டுவோம் எழுந்து வா தமிழா.. நம் இனத்தவரின் வீரத்தை கண்டு இந்த உலகம் வியப்பில் ஆளட்டும் எழுந்து வா தமிழா.. நம் தலைவன் வழியில் நாமும் செல்வோம் எழுந்து வா தமிழா.. . அன்புடன் சுஜி
-
- 0 replies
- 1.2k views
-
-
-
உன்னைப் பற்றி எழுதியே கவிதையாகி விடுகிறது என் கிறுக்கல்கள் ஒவ்வொன்றும் * என் முதல் கவியை நினைக்கும்போதெல்லாம் நான் மறப்பதில்லை உன் முதல் முத்ததை * என்னை கிறுக்கனாக்கிக் கொண்டிருக்கிறது உன்னை பார்த்த என் கவிதைகள் * நீ மிக அழகானவள் என்பதற்கு உன் மேல் பொறாமைப்படும் என் கிறுக்கல் ஒன்று போதாதா * எனக்கான உன்னை எப்படியாவது மிஞ்ச வேண்டும் என்பதே என் கவியின் தவம் -யாழ்_அகத்தியன்
-
- 0 replies
- 576 views
-
-
காலைப் பொழுதொன்றில் கூவும் குயிலொன்று-பா.உதயன் 🌺 காலைப் பொழுதொன்றில் கூவும் குயிலொன்று யாரை அழைக்கிறது ஒரு கீதம் கேட்கிறது வானம் திறந்திங்கு மழைகள் பொழிந்திங்கு பூக்கள் மலர்கின்றதே பூமி வாசல் திறக்கின்றதே காலைக் கனவொன்று என் வாசல் வரை வந்து காதில் ஏதோ சொல்கிறது ஒரு கவிதை பிறக்கிறது யாழில் சுரம் ஒன்று தானாய் வந்திங்கு காதில் விழுகின்றது கல்யாணி ராகம் இசைக்கின்றது கடலும் நதியும் ஏதோ காதல் கதை பேசி வந்து கரையில் தவழ்கின்றது காலம் மெல்ல விடிகின்றது பாடும் பறவை எல்லாம் வானில் பறந்து அங்கு வாழ்வை வரைகின்றது வசந்தம் தெரிகின்றது வானம் திறக்கையிலே காலைப் பறவை வந்து பாடி ஏதோ சொல்லி நான் தொலைத்த கவிதை ஒன்றை கையில் தந்து போகின்றது…
-
- 0 replies
- 367 views
-
-
தமிழகத்தின் எழுச்சிகண்டு....... கவிதை...... தைப்பொங்கலுக்கு மகிழும் தரணியின் சூரியன் போல் உங்கள் பொங்கும் உணர்வு கண்டு இலங்கையில் சூரியர் நாம் மகிழ்ந்து விட்டோம்........ எங்களின் அழுகை நீக்க உங்களின் எழுச்சியின்னும் போதாது...! போதாது....! பொங்கி எழுந்திடுங்கள்....... பிள்ளையின் கதறல் கேட்டு பெற்றவளாய் நீர் இன்று பொங்கி எழுந்ததற்காய் பிள்ளைகளாய் மனம் குளிர்ந்து விட்டோம் துடித்து எழுங்கள் உங்களின் கிளர்ச்சியின்னும் போதாது..! போதாது...! பொங்கி எழுந்திடுங்கள்....... இலங்கைத் தமிழனின் பூகோளச் சரித்திரத்தை தன் வைர வரிகளிலே சொன்ன வைர மு(மூ)த்தண்ணன் கொதிக்கும் அவன் சொல் விதை(த்)யில் …
-
- 0 replies
- 673 views
-
-
நான் ஸ்ரீலங்கன் இல்லை ஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள் எமை அழைத்தனர் பயங்கரவாதிகளென ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களை பயங்கரவாதிகள் என்றுதான் அழைப்பார்களா? வேற்றினம் என்பதனால்தானே நமது சந்ததிகள் அழிக்கப்படுகின்றனர் ஒரு கல்லறையையும் விட்டு வைக்காத அபகரிப்பாளர்கள் எமை அழைத்தனர் பிரிவினைவாதிகளென ஆஷா,அபகரிக்கப்பட்ட நாட்டிற்காய் போராடுபவர்களை பிரிவினைவாதிகள் என்றுதான்அழைப்பார்களா? வேற்று நாட்டவர்கள் என்பதினால்தானே நமது நாடு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது …
-
- 0 replies
- 1.9k views
-
-
நேசிக்கிறேனா? புரியவில்லையே.... உன்னுடன் போட்ட சண்டையும் உன்னைத் திட்டிய பேச்சுக்களும் உன்னைப் பார்க்கும் போதெல்லாம் ஏற்பட்ட கோபங்களும் இப்போது காதலாய் மாறிவிட்டதா???? நம்ப முடியவில்லையே........ அடிக்கடி கண்கள் உன்னைத் தேடுகிறது! நீ என்னையே பார்ப்பதாய் இதயம் நினைத்துக் கொள்கிறது! நீ எதிரினில் வரும் போதெல்லாம் இறக்கை முழைத்த உணர்வு! ஏனடா? ஏனடா இப்படி மாறிப் போனேன்??? புரியாத உணர்வுகள் கொடுக்கிறாய்! என்ன முயன்றும் அதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை!!! இந்த உணர்விற்கு என்ன பெயர் சூட்டுவது என்றும் தெரியவில்லை!.... இன்னும் ஈரெட்டு நாட்கள் தான்! அதன் பின் உன்னை நான் பார்ப்பேனா என்று கூடத் தெரியாது! இப்போது எதற்காக இந்…
-
- 0 replies
- 588 views
-