கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
தீ... கவிதை - இளங்கவி உனக்கு தமிழனில் என்ன பகை சொல்.... பலகாலமாய் எங்களை ஓட ஓட விரட்டுகிறாயே...... சிங்களனைப் போல உனக்கும் எங்கள் இரத்தம் தான் பிடிக்குமா... அன்றி அவனுக்கு நீ அடிமையா..... தொட்டந் தொட்டமாய் கட்டங் கட்டமாய் எங்களைக் காவுகொண்டும் அடங்கலையா உன் பசி...... கருஞ்சாம்பல் புகையாகி காவியம் படைத்தவர் உன்னை வென்றவர்..... அவர் கதையை உன்னில் அட க்க எனக்கு விருப்பில்லை...... காரணம் அவர்கள் உனக்கு அஞ்சாதவர்..... ஆனால் நீ எரித்த அப்பாவி உயிர்களுக்கு நீ தானே பொறுப்பு..... முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டி நீ எரித்த எம் மூச்சுக்களுக்கு நீ தானே பொறுப்பு.... அழக்கூட நேரமின்றி அந்த இடத்…
-
- 5 replies
- 2.6k views
-
-
ஆனந்த விகடனில் இந்த வாரம் (28.10.15) "பூம்பாவாய்" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பூம்பாவாய் பூம் பூம் மாடு வாசலில் நிற்கிறது. அதன் அலங்கார உடை கண்டு அறியாதார் அதிசயிப்பர். கொம்புகளின் கூர்மை குத்திக் கிழிக்குமோ என்று குழந்தைகள் அஞ்சும். பூம்பூம் மாட்டுக்காரன் வந்துவிட்டால் செய்கிற வேலையை விட்டுவிட்டு ஓடிவந்து பத்து ரூபாய் கொடுப்பாள். நான் அந்த மாட்டுக்கு இரு வாழைப்பழங்கள் கொடுப்பேன் அவளிடம் கேட்டுக்கொண்டு! (நன்றி: ஆனந்தவிகடன் 28.10.15)
-
- 6 replies
- 1.8k views
-
-
ஆண்டான் அடிமை விடும் நிலை தன்னை பூண்டோடு ஒழித்து இங்கு நாம் மாற்றுவோம் நீண்ட நெடுங்கலாம் தொடரும் மடமைக் கருத்தினை களை எடுப்போம் ஒரு சாதி சமய பேதங்கள் இல்லாத சமூக நீதி படிப்போம் ! (முகநூல்)
-
- 1 reply
- 492 views
-
-
நாம் தான் தமிழ் மக்களின் அரசியல் வாரிசுகள்! தொடக்கி வைத்தவர் கொள்கை மறந்தார் இடையிலே கைவிட்டு எதிரிதம் வால் பிடித்தார் பயங்கரமாய் சட்டங்கள் ஆட்சியாளர் கைவர வாழாதிருந்தார்! அண்டையில் இருந்தவன் சொந்த நலனுக்காய் காய் நகர்த்த புரிந்தும் புரியாததுமாய் சொகுசு கண்டார்! தமிழன் கண்ணீர் கண்டு போலியாய் இரங்கி ஆளவந்தவனை ஆழக்கால்பதித்து வலுவாக உட்காரவைத்து கதிரைக்காய் சண்டையிட்டார்! வட்டம் என்றும் சதுரம் என்றும் மேசையில் உட்கார்ந்து வருடம் கடத்தினார் பயன் தான் ஏதுமில்லை! எதிரியோ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வலுவாகி கொன்று குவித்தான் நாங்களோ தலை நகரிலே பஜ்றோவில் பவனிவந்தோம்! தமிழ் மக்களின் பிரதிநிதிகளாய்! அம்மாதான் விடிவின் விடிவெள்ளி என்று …
-
- 1 reply
- 739 views
-
-
பூட்டி வைத்த பைங்கிளிக்கும் பறந்து பார்க்க ஆசை வரும் பருவம் கண்ட பாவைக்கும் வாழ்ந்து பார்க்க ஆசை வரும்..! ஆசைகள் கோடி இதய அறைகள் எங்கும் பறந்தடிக்க.. சமுதாயக் கேடிகள் பூட்டிவிடுவர் அவளை கோட்பாட்டுக் கோட்டைக்குள்..! நாளும் அவள் அடக்கி வைத்த ஆசைகள் வேட்கைகளாகி வெறுமையில் கழிய ஆசைகள் அலுத்து மனதும் பாளடைந்து ஆகிறாள் பைத்தியம்..! இறுதியில் அருவமும் உருவரும் அற்ற பேய்களாய் அவள் ஆசைகள் ஆடுகின்றன. கூடி இருக்கும் மனிதரோ வேப்பிலையால் போக்குகின்றனராம் பேய்களை..!! யார் தான் புரிந்திடுவர் சமுதாயக் கோட்டைக்குள் சிறகடிக்க நினைக்கும் பேதையவள்.. உள்ளுணர்வை..??!
-
- 21 replies
- 2k views
-
-
அம்மா - நீ பெத்த கடனுக்கு நடையாய் நடக்கிறாய் கிடையாய் கிடக்கிறாய் ஆனாலும் அம்மா - நான் இந்தக் course படிக்கமாட்டன். மண்றாடிப் பயனில்லை மண்டியிட்டும் பயனில்லை நான் தெளிவோடு சொல்கிறேன் அம்மா - நான் இந்தக் course படிக்கமாட்டன். வரலாற்றைப் புரட்டிப் பார் சிக்கென்று இருந்த நீயே சிதைந்து போனது எதனால்..??! சில்லறை கூட வேண்டாம் சிலிர்த்து வந்த சிங்கத்தை கட்டி - நீ ஆண்டும் கண்டதென்ன..?! அம்மா - நான் இந்தக் course படிக்கமாட்டன். அம்மா - நீ ஒரு காலத்தில் சிங்கக் குட்டிகளை பெற்றதாய் பெருமை கொண்டாய் அந்தக் குட்டிகள் - இன்று எலிக் குஞ்சுகளாய் பதுங்கும் நிலை பார்த்தாய் தானே அம்மா - நான் இந்தக் course படிக்கமாட்டன். அம்மா - நீ கெஞ்சிக் கூத்…
-
- 25 replies
- 2k views
-
-
வெட்டி கதை பேசி வெண்ணிலா ஒளியில் என் வீட்டு முற்றத்தில் அக்கம் பக்கம் உள்ளவர் எல்லாம் சேர்ந்து இருந்து பக்கத்துவீட்டு நிலவும் நானும் ஓரமாய் விடுப்பு கேட்டு தெரித்த சினிமா தெரியாத அரசியல் போன கோயில் என வண்ண வண்ண கலர் பூசி கதை பேசி இருந்த காலம் விஜயகந்தும் அர்ஜுனும் இந்தியாவை காப்பது போல் எமக்கு ஒரு ராம்போ இருந்தா நாடு விரைவா கிடைக்கும் என எமக்குள் ஓடும் என்ன ஓட்டம் தலைகால் புரியா சந்தோஷம் பக்கத்து வீட்டு பெடியள் எல்லாம் நல்லவங்கள் இல்லை நிலா நானே உனக்கு எல்லாம் செய்யும் யோக்கியன் என பொய்பேசி அறியாத வயது அதில் ஆயிரம் கதைசொல்லி மனதுக்குள் பூரித்து நமக்குள் ஒரு உலகம் ஏற்படுத்தி வண்ணத்து பூச்சி போல இறக்கை விரித்து திரிந்த காலம் அது வெட்டை வெளியும் பூவரசம் மரநிழ…
-
- 8 replies
- 1.1k views
-
-
மாறாத வடுக்களை எம் இதயங்களில் எழுதிவிட்ட எதிரியே.. இந்தப் பிஞ்சுகள் செய்த குற்றம் என்ன..??! ஏன் இந்தத் தண்டனை…??! உலகம் இயக்கும் இயந்திரப் பறவைகள் கொண்ட உன் பலத்தால்.. அதன் திமிரால் மக்களை… தண்டிக்க அவசரப்பட்ட நீ… இழந்து போன இந்த மொட்டுக்களின் வாழ்வை மீளளிக்க முடியுமா..??! போர் செய்து என்ன வென்றாய்..?! தமிழர் நிலங்களைப் பறித்தாய். மனித மனங்களை சரித்தாய்.. மனிதம் அழித்தாய்..! ஏன்… நீ.. மனிதன் அல்ல சிங்களப் பேரினப் பிசாசு என்று மொழிந்தாய். மனிதனாய் உன்னோடு வார்த்தைகளால் பேசிப் பயனில்லை.. இந்த மொட்டுக்கள் விர…
-
- 9 replies
- 1.3k views
-
-
ரத்தக்காட்டேறி ராஜபக்ஷே! கவிதை, குரல் - பா.விஜய் இசை - தாஜ்நூர் கோர்வை - கார்த்திகேயன் ஆக்கம் - வா.கௌதமன்
-
- 0 replies
- 808 views
-
-
மூன்றாம் அறிவு -------------------------- "அ" எழுதியவுடன்...... ஆரம்பமாகிவிடும்..... ஏட்டறிவு........! ஏட்டறிவில்..... ஏற்றம் கண்டவரும்........ உள்ளனர்...... ஏட்டறிவு எட்டாதவரும்..... உள்ளனர்.........! ஒவ்வொரு வயதுக்கும்..... ஒவ்வொரு பட்டறிவு....... ஏட்டறிவில்லாமல்....... பட்டறிவால் வாழ்வியலில்..... பட்டதாரியானவர்களும்..... ஏராளம்.........! ஏட்டறிவும் பட்டறிவும்..... போராட்டத்தாலேயே....... பெறப்படுகிறது.......! ஏட்டறிவும் பட்டறிவும்..... ஏதோ ஒருவகையில்..... யாரோ ஒருவரின் சாயல்.... அல்லது நிழலாகவே..... இருக்கிறது...........! சாயல்களும் நிழல்களும்..... காலத்தால் மறைந்துவிடும்... இல்லையேல் அவரவர்...... காலத…
-
- 0 replies
- 953 views
-
-
-
நான் ஒர் முற்போக்குவாதி வேண்டாம் தனி மனித வழிபாடு மார்க்ஸ் எனது மானசீக குரு மாவோ சித்தாந்தம் மானிடத்தின் சிறப்பு பெடல் கஸ்ரோ பெருந்தலைவன் நவயுகத்தின் செகுவாரா புரட்சியின் செந்தணல் அம்பேத்கார் தலித்களின் அழியாச் சுடர் நான் முற்போக்குவாதி வேண்டாம் தனி மனித வழிபாடு கவிக்கோர் கண்ணதாசன் கதைக்கோர் சுஜாதா கலைக்கோர் கமல் கடவுளுகோர் பாபா புலிகளின் தோல்விக்கு காரணம் தனிமனித வழிபாடு
-
- 7 replies
- 2.3k views
-
-
தெரியவில்லை எனக்கு தெரிந்தால் நீ சொல்லு.... ஜயனே... யான் அறியவில்லை வரலாறு அறிந்தால் வந்து நீ சொல்லு.... தெரியவில்லை எந்தனுக்கு தெரிந்தால் வந்து நீ சொல்லு.... புரியாமால் வந்து இங்கு பளுகவில்லை நானிங்கு.... ஆழ ஆராய்ந்தால் அதை வந்து நீ சொல்லு.... எந்தனுக்கு விலையாக கொண்டு வந்து நீ வில்லு.... எம் தமிழர் மீதினிலே எறி வந்து நீ சொல்லு... காலம் புராவும் அக்கருத்தை நீ வில்லு.... ஒரு காலம் போவேன் யான் ஊண்டியே தான் பொல்லு.... அன்நேரம் கூட நான் வாழ்த்துவேன் உன் சொல்லு... அறியாமால் இருக்கிறேன் அறிந்தாலே நீ சொல்லு.... அறியாமை விலகட்டும் ஜ…
-
- 2 replies
- 1.1k views
-
-
வாழ்க மா. . . வீரர் மெழுகுவர்த்தி கண்டால் எனக்கு என்றும் உங்கள் ஞாபகமே உயிரை உருக்கி விடிவைத் தருவீர் எண்ணக் கண்ணில் நீர் வருமே நூறு வருடம் வாழவேண்டும் ஆசையுண்டு எங்களுக்கு மூன்றே நிமிடம் வாழ்ந்தால்க் கூட அர்த்தம் வேண்டும் உங்களுக்கு முருக்கை முள்ளு காலில் ஏற உயிரும் எங்கோ போய் வருமே நாளை நாங்கள் போறோம் என்று எப்படி ஐயா சிரிக்கின்றீர் ஈழப்போரைக் கருவறைக்குள்ளே கதையாய் கரைத்துக் குடித்தனீரோ மடிந்த பின்பும் மறுபடி எழுந்து தமிழ்த்தாய் வயிற்றில் பிறக்கிறீரோ மில்லர் முதற்கொண்டு இன்னாள் வரையிலே எத்தனை எத்தனை கரும்புலிகள் எண்ணிப் பார்க்கிறேன் கண்களின் ஓரமாய் சிறிதாய்த் துளிர்க்குது நீர்த்துளிகள் எங்கள் உறவுகள் உங்களை நினைக்க உடம்பு மெல்லச்…
-
- 6 replies
- 969 views
-
-
-
தனித்திருத்தல் வரம். நீண்ட இரவில் ஏதாவது ஒரு மாலையில் தன் குரல் கேளாத தொலைவில் எதுவும் தேவையில்லை நீ நான் அவர்கள் ஒரு புல்வெளியில் குளக்கரையில் குறைந்த பட்சம் ஒரு பெருமரநிழலில்.. தனித்திருத்தல் பெரும் தவம். இழக்கவும் ஏற்கவும் எதுவுமில்லாமல், கேட்கவும் சொல்லவும் எவருமில்லாமல் பெருவெளியொன்றில் மிதந்துபோகும் ஒற்றை மேகம் போல கிளைநுனியொன்றில் சலனமின்றிக் கிடக்கும் ஒரு பறவையைப் போல தனித்திருத்தல் வரம் தனித்திருத்தல் பெரும் தவம். தனித்திருத்தலில் ஒரு தற்கொலை நிகழலாம் ஒருவன் வன்புணர்வை முயலலாம் தாயொருத்தி அடிவயிற்றின் வலியோடு ஏதாவது கடையொன்றில் பணத்தினை வீசலாம் எவனோவொருவன் எப்பவோ கடந்துபோன பெண்ணின் வனப்போடு காமத்தை கழித்துக் கொண்…
-
- 11 replies
- 2k views
-
-
எனக்கும் அவளுக்கும் .... உயிர் பிரியும்வரை .... காதல் பிரியாத காதல் .... இருக்கிறது .....!!! அவளூக்கு ஏதும் நடந்தால் .... நான் இறந்து பிறப்பேன் .... எனக்கு ஒன்றென்றால்.... அவளும் இறந்து பிறப்பாள்.....!!! நாம் ஒருவரை ஒருவர் .... சந்திக்கும்போது ..... கீறியும் பாம்புமாய் .... இருப்போம் -காதல் நகமும் சதையும்போல் இனிமையாய் இருக்கும் ....!!! + கே இனியவன் ஈகோ காதல் கவிதை
-
- 0 replies
- 2.5k views
-
-
இனவாதச் சிங்கள அரசின் - தமிழ் இனப் படுகொலைப் பாதிப்பால் ஐ.நா.சபையில் நீதி தேவதை தற்கொலை மரணவிசாரணை மட்டும் தொடர்கிறது.
-
- 0 replies
- 813 views
-
-
பிரசவ அறை வாசலில் "பெண் குழந்தை" என்றதும் அதுவரை என் கண்ணில் இருந்த ஈரம் ஏனோ மெதுவாய் இதயத்தில் இறங்கியது... அவள் கொலுசொலியிலும் புன்னகையிலும் வரும் இசை போல இதுவரை எந்த இசையமைப்பாளரும் இசை அமைத்ததில்லை... வீட்டில் அதுவரை இருந்த என் அதிகாரம் குறைந்து போனது அவள் பேச ஆரம்பித்த பிறகு... "அப்பாவுக்கு முத்தம்" என நான் கெஞ்சும் தோரணையில் கேட்டால் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு ஏதோ எனக்கு சொத்தெழுதி வைத்த புன்னகை வீசி செல்வாள்... என்னுடன் தினமும் விளையாடிய என் ரோஜாப்பூ, பூப்பெய்த நாளில் கதவோரம் நின்று என்னை பார்த்த பார்வைய…
-
- 7 replies
- 1.4k views
-
-
இவை கவிதைகளும் அல்ல, ஹைக்கூக்களும் அல்ல, எவையும் அல்ல...ஆனால் ஏதோ கணங்களில் கடந்து போன சில வரிகள் 1. ரயிலில் எனை உதைத்தது நான் இருக்கை வழங்காத கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை 2. பூச்செடி பூக்கவில்லை; தூக்கி எறியும் போது முளையில் தொங்கியது உயிர் கொண்ட புழு 3. சிவனே அர்த்தநாரீஸ்வரன்!! மறுத்து தானே என்றது மண் புழு சின்னக் குறிப்பு: மண் புழுவில் ஆண் உடலும் பெண் உடலும் சேர்ந்தே இருக்கும் 4. அன்று வைரவர் திருவிழா ! ஊரில் இருந்த நாய்களுக்கு காயடித்தனர் பக்தர்கள்
-
- 13 replies
- 3.5k views
-
-
என் காதலுக்கு, காலை வணக்கம் சொல்லித் தொடங்கும் என் வேலை இன்று போட்டாலும் பதில் இல்லை எனும் போது தளர்கிறதே என்நிலை! வண்ண வண்ண எழுத்தால் என் எண்ணம் நிறைப்பாயே அள்ளிக் கொஞ்சும் அன்பால் வளைத்து அணைப்பாயே கரும்பினிக்கும் கருத்தால் கவிதை வடிப்பாயே ஓடிவந்துனை கட்டிக்கொள்ளத் தோன்றும் என் உயிரின் பெரும்பேறே! நீ இன்றி ஓடவில்லை வேலை இங்கு இப்படியோர் நிலைகொடுத்தாய் சரியோ சொல்லு!? பாதி வழி வந்த போது தாயைத் தொலைத்த குழந்தை போல் தவிக்கிறதே என் மனது! நிழலாகித் தொடர்கிறது உன் நினைவு உயிருக்குள் வழிகிறது உன் உறவு அன்பு தந்து என்னை சொந்தம் கொண்டாய் அன்பே! நீ இன்றி நகரவில்லை என் பொழுது! உன் குறும்புத்தமிழ் கேட்கும் போது மனம் குளிரும் செந்தமிழின் செழிப்பினிலே த…
-
- 8 replies
- 1.9k views
-
-
குறிஞ்சிப் பாடல் -வ.ஐ.ச.ஜெயபாலன் கரும் திரை அசையும் தோற்பாவைகளாய் நெளியும் நீல மலைத்தொடர்களின் மேல் முலை சிந்தச் சிந்த நிலா நட்சதிரக் கன்றுகளைத் தேடுது. சொட்டும் நிலாப் பாலில் கரையும் இருளில் பேய்களே கால்வைக்க அஞ்சும் வழுக்கு மலைப் பாதை பாம்பொடு பாம்பாய் நெளிகிறது. மின்மினிகள் துளை போடும் இருள் போர்த்த காட்டின் வழி நீழ கமழும் நாவல்மரங்கள் உதிர்க்கும் கனிக்கு கரடிகள் அலையும் இரவில் பூத்துக் குலுங்குது முல்லை. ஆதிவாசிகளே அஞ்சும் வன இருளில் வண்ணத்துப் பூச்சிகளும் உறங்கும் இந்தக் கொடிய நள்ளிரவில் ஏன் பூத்தாய் காட்டு முல்லை. நான் மண்ணுக்கு பழசு கவிஞா பொறுத்திரு என்று நகைத்த முது முல்லை சுட்டும் திசையில் …
-
- 2 replies
- 626 views
-
-
மனதில் தளம்பல் ஈடு செய்யாமுடியா இழப்பின் தடுமாற்றம் இனி என்ன செய்வது எவர் இவர் போல் எம்மை தாங்குவார் அந்த கட்டளைச்சொல்லை எந்த வாய் சொன்னாலும் இனி........ எதிரி ஒருபுறம் துரோகிகள் மறுபுறம் இரண்டையும் தாண்டி வலை இணைப்பாளர் இன்னொரு புறம் புறம் பேசுதலே குண்டுகளாக பாய....... இனி இவருடன்...................... இடத்தை சோர்வுடன் அண்மிக்கின்றேன் புக வழி இல்லை தம்பிமார் அஞ்சலி செலுத்த வழி தரமுடியுமே கொஞ்சம் பொறுங்கள் இருக்கும் சனம் வெளியில் வரட்டும்......... மனதில் ஒரு கீறல் இதற்கிடையில் நிரம்பிவிட்டதா.... மெதுமெதுவாக கொஞ்சம் நகர்ந்தால் மண்டபத்தை சுத்தி மலையென மக்கள் வெள்ளம் மண்டபத்தினுள் கால் வைக்கின…
-
- 11 replies
- 1.3k views
-
-
நேற்றிருந்த வாழ்வகற்றி புதியதோர் ஒளியைத் தேடி விரைந்து மாணவனாக தமிழீழ மண்ணில் விடுதலை வேண்டி உயர்ந்த கரங்களால் உலகின் புருவங்கள் விரிந்தன !!!
-
- 1 reply
- 412 views
-
-
நல்ல பாடம்! குருவி நானும் ஆலமர உச்சியில் ஒரு கூடுகட்டி நான்கு பிள்ளைகள் பெற்றிட அயலிருந்த காக்கையும் உயர பறக்கும் பருந்தும் வல்லூறும் எதிரிகளாகின! அன்றொருநாள் விசை கொடுகாற்றாய் புயலடித்திட கலைந்தது என் மனையொடு குடும்பமே! கலங்கினேன் வருந்தினேன் கவலையில் பிறந்தது உறதி! மீண்டும் கட்டினேன் ஒரு கூடு வலுவான கிளைதனிலே! பல சந்ததி கண்டு வாழ்கிறேன் சுதந்திரமாக! ஈழத்தமிழா நீ குருவியல்ல! மறத்தமிழன் வீணர்கள் காட்டுவர் வார்த்தையாலம்-அதில் மயங்கிடாது முயற்சி என் வாழ்க்கையை பாடமாய்க் கொண்டு! ஒரு நாள் உனது வெற்றித் திருநாளாகும்! யாழில் 2003 இல் பதியப்பட்டுள்ளது. http://www.yarl.com/kalam/viewtopic.php?f=6&t=1033 [காக்கை - இந்தியா பருந்து - …
-
- 1 reply
- 1.1k views
-