கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
என் இனமே என் சனமே கூடு சேரும் பறவைகளே நம்புங்கள் தமிழீழம் நிச்சயம் கிடைக்கும் தானைத்தலைவன் கண்சிவப்பது என் இனத்தின் மீது சூரிய ஒளி பட்டொளியாய் வீசவே அன்னைபூமியின் மடியில் உறங்கும் பாலகர் மீது சத்தியம் மாய்ந்து விட்ட மழழைகள் மீது சத்தியம் மரணித்த மங்கையர் மீது சத்தியம் வித்துக்களை தந்த வீரத்தாய் மீது சத்தியம் பண்பாட்டின் பாட்டிகள்.பாட்டனார்மீது சத்தியம் மானம் காத்த மறவர் மீது சத்தியம் சகோதரி சகொதரன் மீது சத்தியம் என் இனமே என் சனமே கூடு சேரும் பறவைகளே நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும் அதுவும் தானைத் தலைவன் காலத்திலே என் இனமே என் சனமே பூக்கள் பூத்துக் குலுங்கும் தேனீக்கள் இசை பாடும் நெற்கதிர்கள்வரவேற்கும் தலயசைத்து முற்றத்து ஒற்றை ப…
-
- 0 replies
- 852 views
-
-
தேவியே, தேவாரம் பாடும் பக்தன் நான் ஆவியே ஆராதனை உனக்கானபோது ஆரவாரம் எதற்கு தாரை தப்பட்டைகள் எதற்கு - உந்தன் முத்திரை ஒன்று என்மூச்சாக ஆகாதா! அபிசேகமும் ஆராதனையும் உனக்கென் றானபோது உன்வரம் ஒன்றே என் வார்த்தைகளின் வளமல்லவா வாய்பேசா விட்டால் என்ன உன் னுதடுகளின் ஒவ்வொரு ரேகைகளும் ஊட்டச் சத்தல்லவா? மனமேடைதனிலே மழைபொழியும் அன்பில் உளிபொழியும் அம்மி உணர்வுகளில் உயிர்த்தேன் தனமிடையில் சரிந்து தலைபுதைய மகிழ்ந்து உயிரோடு பரவும் உறவாக வளர்ந்தேன்!
-
- 0 replies
- 635 views
-
-
மனதை நெருடிய கவிதை. கடவுள்......? கலைமகள்: பாலுமினி பாகும் பருப்புடனே தேனீந்து காலம் முழுதுமுனைக் கைதொழுதோம் - சீலமுடன் சங்கத் தமிழ்வீரம் சாற்றும் மறத்தமிழைச் சிங்கம் சிதைக்கவிட்ட தேன் வெள்ளைக் கொடிபிடித்து வெள்ளை மனமெடுத்து வெள்ளம் எனும்மக்கள் வாழ்வதனை - அள்ளி கோரக் கொலைசெய்வோர் கேடு நிறுத்தவர வாரி உடல்சிதைத்த தேன் மலைமகள்: தேருங் கலை,கல்வி திறைபொன்னும் பின்வைத்துப் பேரும் புகழ்வீரம் பெரிதென்றோம் - சேருமனம் உன்னை முதல்வைத்தே உள்ளம் தொழுதவரை அன்னைநீ மாளவிட்ட தேன் கல்விபணம் காப்பதெனில் காணும் சுதந்திரமே இல்லையொரு வேற்றுவழி என்றெண்ணி - வல்லவராய் வாழ்வின் விடுதலைக்கு வாளெடுத்த நல்லவரை வீழ்ந்திடவென் றாக்கியது மேன் கலைமகள…
-
- 0 replies
- 694 views
-
-
-
அன்பின் நண்பனே... பட்டாம்பூச்சி பெண் என்னை விழிகளுக்குள் சிறைபடுத்தி கொண்டாய் ... எப்போது விடுவிக்கப் போகிறாய்... உன் நெஞ்சை மஞ்சமாக்கி துயில் கொள்ள என் நெஞ்சம் கெஞ்சுகின்றதே... எப்போது என்னருகில் வரப்போகிறாய்... விழி மூடி தூங்க முயற்சித்தால் இமைகளுக்குள் வந்து இம்சிக்கிறாய்... எப்போது தூக்கம் தரப்போகிறாய்... மயக்கும் சிரிப்பிலும் வசீகர குரலிலும் உயிரை வசியம் செய்தவனே... எப்போது என்னுயிரை திருப்பி தரப்போகிறாய்... சிரிக்க வைத்து ரசிக்க வைத்த என் நண்பனே எப்போது என்னுள் நுழைந்தாய் காதலனாக... நண்பன் காதலனான கதை இருக்கட்டும் அன்புக்காதலா எப்போது மீண்டும் என் நண்பனாகப் போகிறாய்... அறுசுவை.- அனுதீபா
-
- 0 replies
- 934 views
-
-
தூக்கத்தில் நடப்பவை தூக்கத்தில் கனவுகள் நிகழ்கின்றன கனவுகள் பெரும்பாலும் நினைவிலிருப்பதில்லை தூங்குவதுபோல் கனவு கண்டு விழிப்பவர்களுக்கு தூக்கமே கனவாகப் போய்விடுகிறது தூக்கத்தில் மரணங்கள் நிகழ்கின்றன தூக்கத்தில் சாவது நல்ல சாவென்று செத்தவனைத் தவிர்த்து எல்லோரும் சொல்லுவார்கள் தூக்கத்தில் விபத்துகள் நிகழ்கின்றன இறந்து போன பயணிகளும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்ததாக யூகங்களினடிப்படையில் ஊடகங்கள் தெரிவிக்கின்றன சாவதற்கு சற்றுமுன் அவர்கள் விழித்திருப்பதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளன. தூக்கத்தில் நிகழ்கின்ற விபத்துகளில் பெண்களின் தூக்கத்தில் அதிகார்ப்பூர்வ கணவர்களால் நிகழ்த்தப்படும் விபத்துகள் சேர்க்கப்படக் கூடாதென உச்ச நீதிமன்றமே தீர்ப்ப…
-
- 0 replies
- 558 views
-
-
பார்வைபோல் இருளுக்குள் அலைமோதுகிறது பக்குவமாய் நான் கோர்க்கநினைக்கும் சொற்கள் ஒளி கொண்டு கலைப்பதற்குள் கருப்பைக்குள் வீசப்பட்ட விந்தைப்போல் எண்ணத்துள் கருக்கட்ட பாலின் ஆடையென நிலாமேல் படர்ந்து தவிக்கிறது நினைவெனும் பறவை எண்ணங்களின் பறப்பு விரிக்க விரிக்க காலப்பெருநதியை கட்டுடைத்துக் காத்தல் கற்றோடு கரைந்து தவிக்கிறது தனியே
-
- 0 replies
- 843 views
-
-
வாழ்க்கையை மண்ணின் விடுதலைக்கும் மரணத்தை அஞ்சாத தியாகத்தாலும் எம் விடுதலைக்கு வித்தாகிய மாவீர செல்வங்களே! நியாயத்தின் செவிகளில் உமது கர்ச்சனை வரலாற்றின் நெற்றியில் உமது திருப்பெயர் இந்த மானுட பிறப்பின் நல்ல உள்ளங்கள் முகர்ந்து பார்க்கும் ஒவ்வொரு பூவிலும் உங்கள் உயிரின் வாசம் கமழும் நாளை பிறக்கும் ஈழத்தில் உமது உயிரின் சூடும் கலந்து இருக்கும் இந்த நாளை எமக்காக மரணித்த உமக்காக எம் மக்களுக்காக நாம் ஓரணியில் நின்று சிரம் தாழ்த்தி வணங்குகின்றோம்
-
- 0 replies
- 488 views
-
-
பொய்த்துத்தான் போகாயோ ******************************* சத்தம் இன்றி - பெரும் யுத்தம் இன்றி சலசலப்பு ஏதுமின்றி சிணுங்கி வழிகிறாள் சிலநாளாய் வானமகள் முன்பெல்லாம் அவள் வரவு கண்டு ஆனந்தித்த பொழுதுகள் அளவுக்குள் அடக்க முடியாதவை மனம் ஆனந்தப்பூங்காற்று பாடி மமதையிலே திழைத்திருக்கும் மண் மணம் நாசி ஊடு புகுந்து மண்ணில் வாழ்ந்த நாளை மறுபடியும் மறுபடியும் கிளறி நிற்கும் ஊர் போய் வந்த பின்னர் உறவுகள் நிலை கண்ட பின்னர் பெய்யெனப் பெய்யும் மழை பிய்ந்த கூரை வழி வழிந்து நிறைவில்லா வீடுகளை நிறைத்து நின்றதனை கண்டதனால் நீ எம்மவர் நிலை மாறுமட்டும் பொய்த்துத்தான் போகாயோ எனும் பெரும் ஏக்கம் நெஞ்சமெங்கும்... #ஈழத்துப்பித்தன் 01.02.2016 …
-
- 0 replies
- 1.8k views
-
-
மேதினியில் உயிர்களது மேன்மை பற்றிப் பேசுகின்ற மேற்பூச்சுப் பூசிய மேலான நாடெல்லாம், காதிருந்தும் செவிடனாக கண்முன்னே இனஅழிவை வாய்மூடிப் பார்த்திருந்த வரலாற்றுத் துயரநாள். பூர்வீக நிலம்தனிலே பூச்சரம் போல்வாழ்ந்த மக்கள் தார்மீக நெறிகளற்று தரக்குறைவாய் அழித்தநாள். கோணிகளை அவிழ்த்துக் குப்பைகளைக்கொட்டுதல்போல் வானிருந்தும் நிலமிருந்தும் வளம் கொழிக்கும்கடலிருந்தும் குண்டுகளைக் கொட்டிக் கொலை புரிந்த கரிநாள் குஞ்சென்றும் கிழவியென்றும் கொஞ்சுமிள நங்கையென்றும் இஞ்சித்தும் இரக்கமின்றி வஞ்சம் கொண்டு அழித்தநாள் மே பதினெட்டு மேதினியில்…
-
- 0 replies
- 576 views
-
-
மூன்று கவிதைகள் இங்கு மூன்று கவிதைகள் பற்றிய தொகுப்பினை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். உங்களின் கருத்துக்களினை முன்வையுங்கள். சங்ககாலத்தில் கடையேழு வள்ளல்களில் ஒருவனாகிய பாரி வஞ்சனையால் இறந்தபின்னர் பாரிமகளிரின் நிலைகண்டு எழுதப்பட்ட ஐந்து வரிகளில் அமைந்த கண்ணீர்க் காவியத்தின் தொடர்ச்சி இன்றுவரை நீண்டுகொண்டிக்கின்றது. "அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையுமுடையேம் எம் குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் வென்றெறி முரசின் வேந்தர் எம் குன்றுங் கொண்டார் யாம் என்தையுமிலரே" (கலித்தொகை - முல்லை - 13) நீண்ட நெடிய தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக வரும் இன்றைய கவிதைகளிலும் சங்க காலத்தின் சாயலைக் க…
-
- 0 replies
- 882 views
-
-
மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா ஒளியின் நர்த்தனம்! மின்னொளியே! என்னரும் ஒளியே! உள்ளத்துக் கினிய ஒளியே! விழிகள் முத்தமிடும் ஒளியே! உலகை மூழ்க்கிடும் ஒளியே! என் கண்மணியே! நர்த்தனம் ஆடும் ஒளிக்கதிர்கள், வாழ்வின் வாலிபக் காலத்தில்! மோதி மீட்டும் ஒளிச் சிதறல், காதல் வீணையின் நாண்களை! மின்னலிடி திறக்கும் விண்ணை! மீறிக் கொண்டு ஏறி அடிக்கும் காற்று! என் கண்மணியே! வானத்தின் மின்னல் வெடிச்சிரிப்பு ஞாலத்துக்கும் அப்பால் தாவிச் செல்லும்! தமது பாய்மரத்தை விரித்துப் பட்டுப் பூச்சிகள் படகாய் மிதந்தேகும் ஒளிக் கடல் மீது! அல்லி மலர்களும், மல்லிகைப் பூக்களும் ஒளியலைகளின் சிகரத்தில்…
-
- 0 replies
- 732 views
-
-
[size=4]காலை விடிந்து கண் விழித்தால் குழந்தைக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே இருப்பான் எதிர்வீட்டுக்காரியின் கணவன் இவளைப் பார்த்தபடி[/size] [size=4]வீட்டு வாசலைக் குனிந்து வளைந்து கூட்டும்போது மாடியின் ஜன்னல் வழியே கிழட்டு விழியிரண்டு கீழே விழும்[/size] [size=4]ஏறிட்டுப் பார்த்தால் உதிர்ந்த விழிகள் உடனே சென்று ஒட்டிக் கொள்ளும்[/size] [size=4]நகரப் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்கும்போது தரிசனம் கேட்கும் வழியில் சில தடிமாடுகள்[/size] [size=4]அலுவலகம் போய் அடைந்தால் மின்விசிறி சுழல வீற்றிருக்கும் மேலதிகாரியின் கண் விசிறி சுழல… இளமைக் காகிதம் படபடக்கும்[/size] [size=4]உடன் பணியாற்றும் உத்தமக் கொக்குகளோ ஓடும…
-
- 0 replies
- 647 views
-
-
உங்கள் வீடுகளில் 3 மணி நேர மின்வெட்டாமே! எமக்கு அந்த பிரச்சினை இல்லை! உங்கள் தெருக்களில் உள்ள குழாய்களில் நல்ல குடிநீர் வருவதில்லையாமே! எமக்கு அந்த பிரச்சினை இல்லை! உங்கள் கிராமங்களில் உள்ள தெருக்கள் குன்றும் குழியுமாமே! எமக்கு அந்த பிரச்சினை இல்லை! உங்கள் நகரங்களில் வாகன நெரிசல் அதிகமாமே! எமக்கு அந்த பிரச்சினை இல்லை! மெழுகுவர்த்தி வெளிச்சத்திற்காக 50 ரூபாய் எரியவைக்கும் ஒரு தீப்பெட்டிக்கும் , ஆறடி ஆழத்தில் தோண்டிய பின் கிடைக்கும் அரைச்சொட்டு தண்ணீருக்கும், பதுங்கு குழி அமைப்பதற்கு வேறிடமில்லாமல் கைவைக்கும் மண் பாதை ஹைவேக்களுக்கும் சைக்கிள்களையும், செல்ல நாய்க்குட்டிகளையும் ஏற்றிச்செல்லவதற்காகவாவது, இடம் தரு…
-
- 0 replies
- 802 views
-
-
கிட்டு உன் பெயர் சொன்னபோதே சட்டென வாயெடுத்து மாமா என்று சொல்லும்-உன் இறப்பின் பின் பிறப்பெடுத்த மழலைகளும். நீ மரணித்துப்போன மனித பிறப்பல்ல, மண்டியிடாத மனிதராய் விடுதலை வாழ்வை வாழ கற்றுக்கொடுத்த வரலாற்று பிறவி, வரலாறுகளை வாரி வாரி கற்றுக்கொண்டாய்-உன் வாழ்வை எமக்கு வரலாறாய் வழி காட்டிவிட்டாய். எங்கள் விடுதலை போருக்கு நீ ஒற்றை பனைமரம். காற்றை கிழித்த சன்னங்கள் சொல்லும்-உன் களங்களின் வீரத்தை, கழுத்தில் தொங்கிய புகைப்பட கருவி சொல்லும்-உன் கலைகளின் காவியத்தை, போரியல் மரபுகளுள் போராடிய போர்மகனே எதிரி சொல்வான்-உன் அன்பான அரவணைப்பை, கிட்டண்ணா கிட்டண்ணா என்று சொல்லி கட்டப்பொம்மனையே மறந்து போனோம், மண்ட…
-
- 0 replies
- 487 views
-
-
2009 மஏ 17,18ம் திகதிகள் மனசுடைந்து தொடர்ந்து சிந்தியும் சினந்தும் சிவந்த கண்களோடு 2009 மே மாத இறுதி ஜூன்மாத ஆரம்பங்களில் எழுதி முடித்த கவிதை. 1000 வருடங்களுக்குப் பிறகும் வாசிக்கப் படப்போகிற எனது கவிதைகளுள் இக்கவிதை முக்கியமானதாக இருக்கும். தோற்றுப் போனவர்களின் பாடல் - வ.ஐ.ச.ஜெயபாலன் * எல்லா திசைகளில் இருந்தும் எழுந்து அறைகிறது வெற்றி பெற்றவர்களின் பாடல். பாடலின் உச்சம் எச்சிலாய் எங்கள் முகத்தில் உமிழ் படுகிறபோதும் அவர்கள் அஞ்சவே செய்வார்கள். ஏனெனா? அவர்களிடம் தர்மத்தின் கவசம் இல்லையே.. எரிந்த மேச்சல் நிலத்தின் சாம்பரில் துளிர்க்கும் புற்களின் பாடலைப்போல தோற்றுப் போன எங்களுக்கும் பாடல்கள் உ…
-
- 0 replies
- 1.3k views
-
-
கனவு .! காண்பவை எல்லாம் காட்சிகள் அன்றி நிஜம் இல்லை அப்படி ஒன்று இருத்தால் உழைப்பு ஒன்று இருக்காது ..!! நான் .! நான் எனக்கு சொல்லிக்கொள்ளும் மந்திர சொல் எனக்கு நான்தான் என்பதே .. உலகம் என்னால் மட்டும் தான் முடியும் என்கிற திமிர் இந்த நினைப்புதான் உலகத்துக்கு.. என்னால் மட்டும் மாற்ற முடியும் என்ற நினைப்பு எனக்கு இதில் யாரு வலியவன் யாரு எளியவன் ......?????? பூ .! அழகின் ஆரம்பம் முடிவும் அதுதான் மாலையில் உதிர்த்து விடுவதால் ...!!! கோவம் .! ஏனோ எனக்கு அடிக்கடி வருகிறது கோவம் ஏழையை எவனாவது திட்டினால் உடன் வருகுது முரட்டு கோவம்... சிறு பிள்ளையை யாராவது கைநீட்டி அடித்தால் அக்கணம் வருகுது பாச கோவம்... என்னேருவனை கேலி பண்ணினால் வருகுது பழிவாங்க…
-
- 0 replies
- 600 views
-
-
கனவு உப்பிய நெஞ்சறை – தீபச்செல்வன்:- ஒரு சோடி பட்டாம் பூச்சிகள் திரும்பாத திசையிற் சன்னம் தைத்துக் கிடந்தது கனவு உப்பிய நெஞ்சறை. உயிருக்கு மதிப்பற்ற நகரில் சக்கரங்களிலும் சப்பாத்துக்களின் கீழும் நசிந்தொட்டிய வெற்றுடல்கள். அவர்கள் நினைத்திருக்கக்கூடும் இத் தெருக்களுக்கு இரத்தம் புதிதல்ல சுடுகலன்களை நீட்டுவதும் அதிசயமல்ல கொல்வது இங்கு பிரச்சினையே இல்லை. குருதியில் தோய்ந்த பின்னிரவில் பிசுபிசுத்தன உருளும் பந்துகளும் சில்லுட…
-
- 0 replies
- 837 views
-
-
ஜம்மு பேபி மிகவும் விரும்பி படிக்கும் கவிதைகளிள் புதுவைஇரத்தின துரை அண்ணாவின் கவிதைகள் தான் முதலிடத்தில் அடங்கும் அந்த வகையில் இந்த பக்கத்தில் நான் புதுவைஇரத்தின துரை அண்ணா எழுதிய கவிதைகளிள் என்னை மிகவும் கவர்ந்த கவிதைகளை இணைக்கிறேன் !!அவர் எழுதிய கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகு அதிலும் எனக்கு பிடித்த கவிதைகளை இங்கே இணைக்கிறேன் .........முதலாவதாக நான் தெரிவு செய்யும் கவிதை "காதல் பற்றிய ஒரு கவிதை" எவ்வளவு அழகான வரிகள் கற்பனை என்பதை நீங்களும் வாசித்து பாருங்கள்!! காதலிக்க கற்று கொள்!! காதலே உன்னதம் காதலே பரிபூரணம் காதலே நேசிப்பின் "நிலாவரை" ஆதலால் மானுடனே! காதல் செய்வாய். காதலிப்பதென்று முடிவெடுத்து விட்டாயானால்' யாரை காதலிக்கலாம்? …
-
- 0 replies
- 2.6k views
-
-
நீ புனிதன்... ( நிமலராஜன் ) தோழனே... ஆண்டுகளோ ஆறாச்சு எம்மை நீ பிரிந்தாச்சு.... ஆனாலும் எம் மனசில் நீ நீங்காத நினைவாச்சு.... எங்கள் மண்ணில் நின்று பகை எம் தமிழை கொல்லையிலே... உந்தன் பேனா நீ எடுத்து உண்மைகளை நீ உரைத்தாய்... எம் தமிழர் அவலங்களை எங்கனுமே நீ உரைத்தாய்... அச்சமில்லை என்றென்னி உன் உயிரை துச்சமதாய் நீ நினைத்து உந்தன பணி நீ செய்தாய்... செம்மணியின் கொலைகளையும் செம்மையாக நீ உரைத்தாய்.... அம்மணியின் ஆட்சியதின் அவலங்களை நீ உரைத்தாய்.... ஜயோகோ பொறுக்கலையே அவர்தனைக்கு... பாய்நதடித்து வந்துந்தன் பாவி உயிர் குடித்தனரே.…
-
- 0 replies
- 771 views
-
-
நாலு நாள் சுற்றுலாவும் நரிகள் அடைந்த புளுகும்..! நரிகளை பரிகளாகினார் மாணிக்கவாசகர்,புலிகளை நரிகளாக் 19.10.2014-கினார் மகிந்தரும்,பிரபாவும்.அடுத்த கட்டத்தை தாண்டும் தமிழினம் மீதான அழிப்பு -துலாத்தன். இருந்திருந்து பார்த்தேன் எழுதாமல் இருக்க முடியவில்லை. மனசுக்குள் குபீர் என்று ஒரு சிரிப்பு குமைவதாய் பரபரப்பு. உலையில் அரிசி ஏறாவிட்டாலும் பரவாயில்லை. உலைக்களத்தை திறக்காமல் உட்கார முடியவில்லை. மன்னாதி மன்னர் வந்துபோன கொட்டகைகள் இன்னும் கழற்றி முடியவில்லை. கொஞ்ச நாளுக்கு முதல் ஒரே கொலைவெறி கோழிக் கூட்டுக்குள்ளும் புகுந்து பதிவெடுத்தார்கள் படைத்தம்பிகள். புலி இருந்த குகைக்கே இந்தனை பயமா? அங்குமிங்கும் பார்த்துவிட்டு எங்கள் சனம் எள்ளி நகையாடியது. கடித்து குதறி கபளீகரம் செ…
-
- 0 replies
- 725 views
-
-
மறைவதில்லை ! -------------------------- அந்தச் சின்னஞ் சிறு நட்சத்திரமோ விடியலுக்குக் கட்டியம் கூறியவாறு எப்போதும் மறையாது ஒளிர்கிறது அந்தப் பெரிய நிலாவுக்கு அண்மையாக ஆனால் நிலாவோ அப்பப்போ மறைகிறது நட்சத்திரமோ என்றுமே மறைவதில்லை ! இவண் நொச்சியான்
-
- 0 replies
- 636 views
-
-
உன்போல் ஆயிரமாயிரம் தங்கைகளை அக்காக்களை தின்னக் கொடுத்துவிட்டு அக்கிரமம் இறுதியில் பெண்ணுடலையே தின்னும் ஆதிக்கம் அதற்கு நீயும் விலக்கில்லாமல் ஆழ்கடல் நுனிமட்டும் அலைகிறதுன் ஆத்ம ஓலம்…… கண்ணுக்குள் நிறைந்த சிரிப்பும் கதைசொல்லும் பொன்முகமும் பூவினும் இனியதாய் பொலிந்த உன் பெண்மையும் நாயினும் கடையதாய் உனக்கு நடந்தவைகள்…… நெஞ்சமெல்லாம் நெருப்புப்பற்ற நீ சிரிக்கும் கொள்ளையழகின் தூய்மை அலங்கோலமாய் அணுவணுவாய் படம்பிடித்து மகிழும் காட்சியாய் நினைக்க நினைக்க மூழும் தீயின் எச்சம் நெஞ்சுக்குள் மட்டுமே புதைகிறது…… தீயெரித்த கண்ணகியின் கோபத்தை கதைகளில் தான் படித்தோம். ஆனால் எங்கள் சக்திகள் உங்களின் சாதனைகளை சமகாலத்தில்…
-
- 0 replies
- 2.2k views
-
-
[size=5]கார்த்திகை இருபத்தேழில் நாம் துயிலும் இல்லம் செல்வோம்.............................. தம்மினத்தை நெஞ்சில் கொண்டார் தம்மண்ணை பூசிக்கொண்டார் தலைவன் சொல்லை கொண்டார் தளரா நிலையும் கொண்டார் ...... நெஞ்சிலே உறுதி கொண்டார் நெருப்பில் அணையாத நிலை கொண்டார் தலைவனை தமையனாய் கொண்டார் தமிழீழம் வேதமாய் கொண்டார் இல்லம் துறந்து வந்தார் .....இலட்சியம் தளரா நிலை கொண்டார் கார்த்திகைப்பூவாய் மலர்ந்தார் ....நல்ல கவிதைப்பூக்கள் தந்தார் ....[/size]
-
- 0 replies
- 650 views
-
-
[size=3] [/size] [size=3]நீங்கள் சே குவாராவின் பிள்ளைகள். முத்தங்களுடம் உங்களை பிரிகிறேன், உங்கள் அன்பு அப்பா சே குவாரா (1965)[/size] [size=2]தன் குழந்தைகளுக்கு எழுதப்பட்ட[/size][size=3] [size=2]தோழர் சே குவாரவின் இறுதி கடிதம்...!"[/size] [size=2]"அன்புள்ள [/size] [size=2]இல்டிடா , அலைடிடா, கமிலோ , மற்றும் எர்னெஸ்டோ [/size][/size][size=2] ஒரு நாள் இந்த கடிதத்தை நீங்கள் படிப்பீர்கள், உங்கள் அப்பா அன்று உயிரோடு இருக்கமாட்டேன், நீங்கள் இந்த அப்பாவை மறந்திருக்கலாம், குழந்தை எர்னெஸ்டோ என்னை முற்றிலும் மறந்திருக்கலாம். உங்கள் அப்பா மனசாட்சிக்கு நேர்மையாகவும், கொள்கையில் உறுதியாக இருந்தேன். ஒரு புரட்சியாளனின் பிள்ளைகள் ந…
-
- 0 replies
- 521 views
-