கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
தோழர் பாட்டு எட்டூரும் பாத்திருக்க என் ஆத்தா உச்சி மோர நான் வளர்ந்தேன் புழுதிக்காட்டில் எங்கூட அவன் வளர்ந்தான் சிற்றோடை போல சிலுசிலுக்கும் தென்றல்போல பற்றாடை வரிசைபோல பஞ்சு வண்ண மேகம்போல பட்டாலே மனதிலே படபடக்கும் காலங்கள் சுட்டாலும் எரிக்கேலா சுவையான கனவுகள் வற்றாமல் வரிசையாய் வந்து குதிச்சு நெஞ்சார சுழன்றடிச்சு நினைவுகள் பறக்கிறதே சிற்றாடை கட்டி சிலிர்த்துக்கொண்டு பேசும் உற்றாரும் ஊராரும் உரிமை கொண்டாடா பொற்றாமரை குளத்தடி பொதிகை மர நிழலில் பொழுது விழும் நேரம் பொரி உறுண்டை வாங்கி வந்து பொத்திப்பொத்தி நீ திண்ண பொறுக்காமல் நான் பொங்க பத்திரமாய் மறைத்து பையிலே வாங்கி வந்து பரிவுடனே நீ தர பணிவுடன் நான் ஏற்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
சேய்கள் நாங்கள் வளர்ந்தோம்-தமிழ்த் தாய் வயிற்றில்தானே பிறந்தோம்.. நாய்கள் போல்தான் குரைப்போம்-நம் தூய்மை ஒன்றே உரைப்போம்... தேய்கின்ற நிலவை நகைப்போம்-ஒரு பேய் உள்ளிருக்கும் மறைப்போம்.. பாய்களில் தூங்கிய உடலம்-வெயிலில் காய்ந்ததே ஊரில் மறந்தோம்.. ஏய்ப்பதும் நகைப்பதும் திறமை-அடச் சீய் எனவுரைத்தால் பெருமை ஓய்ந்திடும் பொழுதினும் உயிரே-நம் வாய் ஓய்வதென்பது அரிதே.. செய்வதற்கினியென்ன பாவம்-வேகும் மெய் தொட்டு விழிமையிட்டு வாழ்வோம்.
-
- 11 replies
- 2.1k views
-
-
திருதக்க தேவர் சீவகசிந்தாமணியில் வடிவமைத்த அழகிய கதை. ஒரு செல்வன் ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று பொருள் ஈட்டி தங்க உருண்டையாக மாற்றி இல்லத்தில் வைத்திருக்கிறான். அவனுடைய துணைவிக்கும் அது தெரியும். கணவன் செய்யப் போகும் அறத்திற்க்கு அவளும் சம்மதித்தாள். அடுத்த ஆண்டு செய்வோம், அடுத்த ஆண்டு செய்வோம் என்று ஒத்திப் போட்டுக் கொண்டே வந்தான். ஒரு நாள் அவனுக்கு வாத நோய் வந்தது. கையும் காளும், நாவும் செயலற்று போயின. ஊர் பெரியவர்களை அழைத்து வருமாறு மனைவிக்கு சாடை காட்டினான். மரணத்தின் விளிம்பிற்க்குச் சென்று விட்டதை உணர்ந்து விட்டான். இனியும் ஒத்திப்போட முடியாது. ஊர் பெரியவர்கள் சூழ்ந்திருக்க மனைவியிடம் தங் உருண்டையை கொண்டு வா என்று சாடை காட்டினான். மனைவியை தவிர ம…
-
- 6 replies
- 1.8k views
-
-
-
அகதி முகாம் கோடைக் கொதிப்பையும் மாரித் தூறலையும் மாறி மாறி வடி கட்டுதே - இந்த அரிதட்டுக் கூரைகள் சூரிய விளக்கையும் பனிமழைத் தென்றலையும் அணைகட்ட முடியாமல் இலவசமாகக் கொடுக்கும் கிடுகுச் செத்தைகள் மீன் பிடி வலைகளாக! பௌர்ணமி வெளிச்சத்தில் எங்கள் சிறுவர்கள், அ....ஆ எழுதிப் பழகும் பால் நிறச் சிலேட்டுக்கள் எங்கள் முற்றங்கள்! குப்பி விளக்கு திரியிற்க்கு வக்கில்லை எண்ணை வார்க்க எதுவுமில்லை நுளம்புக்கு எங்கே கொயில் வாங்குவது....? மனித உரிமை மங்கினாலும் நுளம்பின் உயிருக்கு உரிமையுண்டு அதுதான் அகதி முகாம்கள்...! இருபத்தோரம் நூற்றாண்டிண் எங்கள் யாவருக்கும் புகலிடம் இதுதானா.........?
-
- 8 replies
- 1.3k views
-
-
சமாதான தேவதை - நீ சமர் கண்டு சோர்வதா? அவமான அர்ச்சனை - நீ அருகிராமல் எங்கெங்கோ போவதே! சுகமான வாழ்வது சுடராமல் அணைவதா? சாவின் கரத்தில் உயிர் சடுகுடு விளையாடி மாய்வதா? நிழலாக எம் கழல் தனை தொடர்கின்ற சுற்றமது சுவர்க்கமதை அணைப்பதா? இமையாக நின்றெமை சுமையாக நினையாத அன்னை, அப்பனை அடுத்தடுத்து அவலமாய் இணைப்பதா? தமையனாய் நின்றவர் தம்பியாய் வந்தவர் தமக்கையாய் அணைத்தவர் தங்கையாய்ச் சிரித்தவர் நீட்டி முழங்கிப் போக அனுமன் வாலாய் நீள்பவர் கவலை மறந்து, சிரித்து மகிழ்ந்து இந்நாட்டு மன்னராய் நின்றவர் அன்பென்னும் ஆகுதியில் உயிர்தனைச் சலவை செய்து அவலம் எதுவென மறந்தவர் பட்... பட்... எனப் பறக்கும் வேட்டுக்கு சட்... ச…
-
- 9 replies
- 1.7k views
-
-
திரு செல்வா கனகநாயகம் ஆங்கில விரிவுரையாலார் ரொரன்ரோ பல்கலைக் கழகம் தமிழ் இலக்கிய வரலாரூ எழுதிய பேராசிரியர் வி செல்வநாயகம் அவர்கலாது மகனாவார், ஈழத்து தமிழ் கவிதை சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பவர்களூள் முக்கியமானவர். 1970பதுகளின் பிற்பகுதியில் நான் யாழ் பல்கலைக் கழக மாணாவன்/மணவர் தலைவனாக இருந்தபோது அவருடைய நட்ப்புக் கிட்டியது. செல்வாவின் மனைவி திரு எங்கள் ஆங்கில விரிவுரையாளாராக இருந்தார். மொழிபெயர்ப்புகளூக்கூடாக என்னையும் சேரனையும் புதுவை இரத்தினதுரையையும் ஆங்கிலத்தில் அறிமுகம் செய்த பெருந்தகை. மேலதிக தகவலுக்கு http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE…
-
- 11 replies
- 1k views
-
-
1983ம் ஆண்டு கலவரம் தொடங்குவதற்கு ஒரு சில நாட்களின் முன்னம்தான் எனது யப்பானியத் தோழி ஆரி யுடன் தமிழகத்தில் இருந்து கொழும்பு திரும்பியிருந்தேன். கொழும்பில் சி.ஐ.டி தொல்லை இருந்தது. அதிஸ்டவசமாக கலவரத்துக்கு முதன்நாள் முஸ்லிம் கிராமமான மல்வானைக்குப் போயிருந்ததால் உயிர் தப்பியது. 1983ம் ஆண்டுக் கலவரத்தைப் பதிவுபண்ணிய இக் கவிதை வெளிவந்த நாட்களில் பேராசிரியர் பெரியார்தாசன் 100க்கும் அதிகமாக பிரதி பண்ணி தமிழகத்தில் பலருக்கு கிடைக்கச் செய்திருக்கிறார். இது அதிகமாக வாசிக்கப் பட்ட எனது கவிதைகளில் ஒன்று. உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன். ஜெயபாலன் உயிர்த்தெழுந்த நாட்கள் -வ.ஐ.ச.ஜெயபாலன் அமைதிபோல் தோற்றம் காட்டின எல்லாம் துயின்று கொண்டிருக்கும் எரிமலை போல. மீண்டும…
-
- 7 replies
- 1.7k views
-
-
"ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே" "ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே செத்த பிணங்களும் எழும்பி பார்க்குது சொத்தை மனமும் பூரிப்பு கொள்ளுது பித்தம் ஏறி என்காலும் தொடருது!" "ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே ஒளிரும் அவள் பல் அழகில் ஒடிந்து நானும் காதல் கொள்ள ஒப்புதல் கேட்டு மனம் கெஞ்சிநிற்குது!" "வித்தை பல உடலால் காட்டி கத்தை கத்தையாக காதல் எறிந்து முத்தம் பல இதழால் தந்து ஒத்தையடிப் பாதையில் அத்தமக போகிறாள்!" "ஒழிந்து ஓடி ஆடிப் பாடி ஒற்றை காலில் சலங்கை கட்டி ஒய்யாரமாய் வரம்பில் விழாமல் நடந்து ஒத்தையடிப் பா…
-
- 0 replies
- 322 views
-
-
ஈரமாக இருந்த நிலம் .... வறண்டு வருவதுபோல் .... விவசாயியின் மனமும் .... வறண்டு வருகிறது .....!!! கடனை கொடுக்கமுடியாமல் ..... உயிரை கொடுகிறார்கள் .... உலக மயமாக்கலின் ..... ஈர்ப்பு உலக முதலீட்டை .... அதிகரிக்க செய்கிறது ..... உணவளிப்பவனை.... உதறி தள்ளி விடுகிறது .....!!! + கே இனியவன் சமுதாய சிறு கவிதைகள்
-
- 4 replies
- 7.6k views
-
-
வெற்றி.... மன திருப்தியை .... கொடுக்கும் ... தோல்வி .... மன உறுதியை ... கொடுக்கும் .....!!! தோல்வியென்னும் ... அக்கினிக்குள் வெந்து .... வெற்றியென்னும் ... அன்னத்தை உண் ....!!! ^ எழுந்திரு போராடு வெற்றி கே இனியவன்
-
- 2 replies
- 831 views
-
-
புரியாத ஏக்கம்… என் கண்கள் அவனையே கூர்மையாக நோக்கின… வாட்ட சாட்டமான உடல் ஆடை அணியும் அழகாகத் தெரிந்தன. ஆனால்… அவனின் செயற்பாடு… அவன் போடும் சத்தம்… என்னைத் திடுக்கிட வைத்தது… இந்த வயதில்… இப்படியான தோற்றத்தில்… இப்படி ஒரு நிலையா! கடவுளே!!! ஊரில்… மருத்துவ வசதியிலாத இடத்தில்… பொருளாதர பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழும் மக்களிடையே… ஒரு சிலர்தான் இப்படியான நிலையில்… தனிமையிலே கதைப்பார்கள்… தனிமையிலே சிரிப்பார்கள்… தன்பாட்டிலேயே துள்ளிக் குதிப்பார்கள்.… ஆனால்… இங்கே …. எல்லா வசதிகளும் உள்ள மருத்துவ வசதி மிக்க நாட்டில்… அவர்களைப்போல்தான் இவர்களுமா?; ஒரு நேரத்தில் எத்தனை பேர்! சனத்தொகை வீதத்தில்… எ…
-
- 6 replies
- 1k views
-
-
இந்த திரியிலே நான் எழுதிய கவிதைகளை இணைக்கலாம் என்று நினைக்கிறேன்.புதிய கவிதைகளையும் நான் இதுவரை களத்திலே எழுதிய கவிதைகளையும் தொகுக்கலாம் என்று எண்ணுகிறேன்.நான் இங்கு எழுதிய கவிதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கின்றது ஆகவே அவற்றை ஒன்றாக சேர்த்தால் பிரயோசனமாக இருக்கும் . முதலில பெண் தெய்வங்களை வணங்கி தொடங்குவம் என்ன. பெண் தெய்வம் சொல்லாதே பெண்ணே நீயும் உன் -சொல்லுக்கு பொருளில்லை இங்கு பொற்சிலையாக நீயிருந்த நேரம் மொய்த்ததோ -ஆண்கள் கூட்டம் சிந்தையிலே திடம் கொள்ளு தாயே நீ -புகட்டிடு …
-
- 54 replies
- 8.1k views
-
-
ஒரு அழகான காலைப்பொழுது !சூரியன் மலைகளில் பட்டுத் தெறித்ததில் பூமியெங்கும் பரவசம் ! மலை விட்டு இறங்கிய அருவி மெதுவே தரை தட்டி நதியானது. பார்வை பட்ட இடமெல்லாம் திரும்ப மனமின்றி பதிந்து நின்றது. நதி நிலை அருகே தனி வழி நடந்தேன். கண் முன்னே கடவுளின் உலகம் போல் கரும் கல் மலை! நிமிர்ந்து பார்க்கும் போதெல்லாம் அந்த இயற்கை கட்டிய சுவரின் பின்னே இன்னுமோர் உலகமும், மனிதர்களும் இருக்கிறார்கள் என்கிற பிரமை எழுவதை தவிர்க்க முடியவில்லை. உயர்ந்து நின்ற அந்த மலை மௌனத்தின் பரிமானம் எனக்கு உணர் த்தி நின்றது. அடிவாரத்தில் போய் அப்படியே தங்கி விடலாமா, மனம் கேட்டது..! உற்றுப் பார்த்த போதெல்லாம் என்னை வாவென்று அழைக்கிறதோ, என்ணத் தோன்றியது. ' உனக்கும் எனக்கும் அதி…
-
- 10 replies
- 12.3k views
-
-
ஆக்ரோசமான நீலவானில்... அரைமதி நிலவின் மீதேறி... அலைக்கழிந்த பயணம்! நிலமிழந்த நிலையில்... புலம்பெயரும் விலையில்... யாரோ தலைமையில்... போவோர் கவலையில்... ஏதேதோ தேவைகள்! சில கால முன்னெடுப்பில்... பல தடவை பின்னெடுப்பு! மனதில் அணையா அடுப்பாய்... நடுக்கடலில் அசையும் துடுப்பு! மலை அலை தாவி... நீர்த் திவலைகள் மேவி... புயல் மழை தூவ... கரு முகில்களுக்குள் நிலவு மெல்ல மெல்ல அமிழ்ந்து போகும்! பசியோடு தாகத்தோடும் பழகிய தொண்டைக்குழிகள் களைத்துப் போகும்! வந்தோர் கண்ணீர் உப்புநீரில் கலக்க, மீன் தின்றது போக... மீதி மிதந்து சில நாளில் கரையொதுங்கும்!
-
- 2 replies
- 696 views
-
-
முப்பது வருஷங்களாய்த் தெரியும் அவளை, ஒரு வினாடிகூட எனைவிட்டுப் பிரியாதவள்! எங்கெல்லாமோ எனை இழுத்துச் சென்றவள்... இப்பொழுதும், ஒரு கேள்விக்குறியின்மேல் என்னை உட்கார வைத்திருக்கின்றாள்!? என் வாழ்க்கையைச் சுற்றவிட்டு முடிச்சவிழ்ப்பதில்.. அவளுக்குக் கொள்ளைப் பிரியம்! அவளுக்கென்ன... அவளது சுவாரஸ்யத்துக்காக சுவாசிப்பது நானல்லவா? சுமைகளைச் சுமப்பதும் நானல்லவா? அவளுக்கெங்கே தெரியப்போகிறது... அவளோடு கூடவே வாழ்வதின் கஷ்டம்! நான் சிறுகுழந்தையாய் இருந்தபோதில்... இனிமையாகத்தானே இருந்தாள்! எப்படி மாறினாள் என்று... எனக்கே தெரியவில்லை!? இன்றல்லாது... என்றாவது ஒருநாள், இவளது தொல்லை இல்லாமற் போகும்! அப்பொழுது என் சுவாசமும் அவள் கூடவே செல்லும் -பழகிய பாவத்திற்காக!
-
- 11 replies
- 822 views
-
-
-
கருணை இல்லாதவனுக்குப் பெயர் கருணாநிதி பச்சைத்துரோகி கபட நாடகதாரி திராவிட முன்னேற்றக்கழகத் தலைவனில்லை அவன் திராவிட துரோகிகளின் தலைவன் இராமாயணம் தந்த நாட்டில் இராவணர்கள் மகாத்மா வாழ்ந்த நாட்டில் மாபாவிகள் பெரியார் வாழ்ந்த நாட்டில் பெரும் பூதங்கள் அண்ணா பிறந்த மண்ணில் அயோக்கியர்கள் புத்தர் பிறந்த மண்ணில் அற்பப்புளுக்கள் சேடம் இழுக்கும் வரை பதவியில் இருக்க உனக்கேன் இத்தனை ஆசை? பொய்யனே.....உன் பொய்கள் இலங்கை அரசின் பொய்களை மிஞ்சிவிட்டனவே தமிழர்கள் தினமும் சாகையிலே அங்கே போர்நிருத்தம் அமுலில் உள்ளதென்று அறிக்கை விடுகிறாய் எந்த உலகத்தில் உள்ளாய் நீ? உன் போக்கு எம் நெஞ்சில் தைக்கும் முள்ளு கண்ணை மூடிக்கொண்டு பால்குடிக்கும் க…
-
- 1 reply
- 1.3k views
-
-
கட்டுண்டு கிடக்கும் காலச்சக்கரம் தன்னியக்கம் பெறுக கண்கள் சிவப்பேறிக் கிடக்கின்றன. அழுகின்றேனா? அனல்கின்றேனா? விழியோடையில் உலர்ந்த திரவத்தின் சாட்சியமாக இமையோரத்தில் பிசுபிசுப்பு. பிம்பங்களற்ற எழுதுகோல் நட்பின் கவிதைப் பேச்சும், தோழமைக் கடிகளும் இருண்ட துயருக்குள்… எழுதும்போதே எண்ணங்கள் தோற்கின்றன மீளாத் துயரின் வடுக்களாக ஒளித்தெறிப்புகள் மங்கிக் கலங்குகின்றன. எல்லையற்ற கற்பனை வெளிகள் வெறுமைப்பட்டதாய் ஆங்காங்கே சுமைதாங்கிகளின் படிமங்களாய்…. உன்னில், என்னில் ஆழப்படிந்து, உயிர்ப்பின் மூச்சுவரை உட்கார்ந்து விட்டன. வானம்பாடிகள் ஊமையான வரலாறு ஒன்று தோற்றம் கொண்டுள்ளது. பிராணவாயு இல்லாவிடத்தில் …
-
- 3 replies
- 1.1k views
-
-
சாக்கடையில் சந்தன மலர்கள்........ கவிதை - இளங்கவி....... வேலிப் பூவரசு வெண்மஞ்சல் பூப்பூத்து வாசலில் போவோரை வா வாவென்று வரவளைக்கும்..... முன்வைத்த காலை பின் வைய் என்று சொல்லி எங்கள் மொட்டைவால் நாய்க்குட்டி முன் வந்து குரைத்து நிற்கும்..... மொத்த அரசியலை ஒரு பத்திரிகையில் உள்வாங்கி எங்கள் பொக்குவாய் தாத்தா பொழுதுகள் போக்கிடுவார்.... ஆட்டிறைச்சிக் குழம்புவைக்க அயலட்டம் எல்லாம் மணக்க அந்த வாசக் குழம்புடனே வயிறாறச் சாப்பிட்ட நம் சந்தன மலர்களெல்லாம் இன்று சாக்கடைச் சகதிக்குள்....! அன்று திருவிழாக் காலத்திலே சிறிதாக வலம் வந்தோம்...... இன்றோ திண்ட மலம் கழிப்பதற்கும் நீண்டதாய் வரிசை நிற்போம்.... என்னையா கொடுமைகள்…
-
- 6 replies
- 1.1k views
-
-
நீர் பகைஅருகில் போகும்போது பாம்புகளும் நடுங்கும் பாதைதனை விடும் .. கம்பி பட்டு முள்வேலிகள் பூமாலையாய் தெரியும் .. எதிரியின் மண்ணரன் சிறு புற்றாய் இருக்கும் . கந்தகப்பொதி புத்தக்பைபோல இருக்கும் சுடுகோல் எழுதுகோலாய் இருக்கும் கைக்குண்டு அழி ரப்பர் ஆகமுன் நிங்கள் அதிகாலை மீண்டும் வந்திடுவீர் ஓய்விடம் ... மச்சான் நீ எனக்கு பூசிவிட்ட கரி போகவில்லை நாளை உனக்கு பூசுறன் கரி எண்ணை கலந்து கழுவினாலும் போகாது காய்ந்தாலும் போகாது பருவாயில்லை மச்சான் வெடிவிளுந்தா போயிடும் ... டேய் நான் பக்கத்தில் உள்ளவரை ஒரு ரவை .. உன்னை நெருங்கா வேங்கையா கொக்கா .. என்று நீ கட்டி என்னை அணைத்த கணம் நினைவில் ... கண்கள் கண்ணீரை தூவுதடா உன் மேல் என் பாசக்கார தோழா..
-
- 3 replies
- 769 views
-
-
கருக்கொள்ளும் போதே கல்லறைத் தெய்வங்களாகக் கடவது என காலன் சொன்னானோ என்னவோ கனவுக்காக உயிர்கொடுக்கச் சென்ற காலத்தின் புதல்வர்களே கார்த்திகை நாளில் வணங்குகிறோம் உம் காலடித்தடம் பற்றி கணப்பொழுதும் கண்துஞ்சாது காத்திருந்து கந்தகம் சுமந்து காவியமான காவிய நாயகர்களை காசுக்காக விற்றுவிட்டு உங்கள் கல்லறைகளிலும் வைத்து சில்லறை பார்க்கும் கார்த்திகை நாளில் வணங்குகிறோம் எம் இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் சிறு கடுகளவேனும் கருணை கொண்டு கார்த்திகைப் பூக்களை காலால் நசுக்குவது போல் கல்லறை தெய்வங்களையும் சிறு கணப் பொழுதுடன் மறந்துவிடுகிறோம் எம் களியாட்டங்கள் தொடர்வதற்காய் விளக்கிலே பட்டு வீழ்ந்துபோகும் விட்டில்கள் போல உங்கள் வீரம் விளைந்…
-
- 17 replies
- 2.1k views
-
-
துவேச துவசத்தின் திவசம்! ஆண்டாகி போனதுவோ மாண்ட கதை கேட்டு ? பூண்டோடு கொளுத்தி கொன்றான் இனவெறியன் ! தாங்க முடியாமல் பாராளுமன்ற சதுக்கம் சென்று இரவிரவாய் ஓலமிட்டு கதறிய காலம் அது ! பச்சிளம் குழந்தை தாயின் பிணத்தினிலே பால் தேடி புழுவோடு போட்டி போட்ட அந்த கேவலத்தை கண்டோமே ! பிறக்காத குழந்தைதனை வயிற்றை பிளந்து கொன்று இனவெறியின் கொடுமை அதை கொதித்தபடி பார்த்தோமே ! எத்தனை கொடுமை அதை என்னால் எழுத பலமில்லை ! இன்னும் என் இமைக்குள்ளே உறுதியாய் பதிந்த படம் ! தூக்கமும் வாராமல் கண் முழித்து வலையில் தேடி பார்த்தேன் எதாவது ஒரு "பதில்" செய்தி, அதை இன்றுவரை தேடுகிறேன் ! முள்ளிவாய்காலில் பாய்ந்து ஓடிய தமிழ் இனத்தின் ரத்தம் கடலோடு கலந்ததுவோ? இல்லை! உலக…
-
- 3 replies
- 1k views
-
-
பொங்குவோம் பகிர்ந்துண்டு வாழ்வோம் விடுதலைக்காய்ப் பசித்திருப்போம் புறம் சொல்லோம் போகியில் மனத்தீமையெல்லாம் விட்டொழித்து புதிதாய்ப்பிறப்பெடுப்போம் எமக்கிது விதியே என ஏங்காது எதிரிக்காய் விழித்திருப்போம் இனி ஒரு விதிசெய்வோம் வரும் கணங்கள் எல்லாம் மீண்டும் வாராக்கணங்களே அதனால் ஆயிரம் கதைகள் பேசி அடுக்குத் தமிழ்பேசி பெருவாழ்வு வருகுதென பொய்சொல்லி ஏய்ப்போரைப் புறமொதுக்கி ஒட விரட்டி முட்டிமோத வரும்போது எதிர்நின்று மோதிடும் கட்டுக்காளையை அடக்கும் காளையாய் சேர் இடம்போகுமட்டும் பொருதுவாய் புலியாய் தமிழ…
-
- 0 replies
- 908 views
-
-
குஞ்சு பொரித்து மூன்றே நாளுக்குள் முட்டையிலிருந்து எட்டிப்பார்த்த குஞ்சுகளுக்காய் இரைதேடவந்த ஜோடிக்குருவிகள் வேடனின் வலையில் சிக்கி கூண்டுக்குள் இன்று காட்சிப்பொருளாய் வித்தை காட்டிப் பிழைக்கின்றான் வேடன் வேடிக்கை பார்க்க வருபவர்களோ இறைக்கை இருந்தது தானே பறந்திருக்கலாமே என்றும் கண்ணிருந்தது தானே பார்த்திருந்தால் மாட்டி இருக்கத்தேவையில்லை தானே என்றும் வியாக்கியானம் கூறுகிறார்கள் தத்தமக்கு ஏற்ப வியாபாரிகள் வந்து விலை பேசிப் போகிறார்கள் வேடனின் குடும்பம் சமையலுக்கு தயாராகிறது பார்ப்பவர்கள் மனங்களில் பரிதாபம் மட்டும் சிலர் சிவனை வேண்டுகிறார்கள் சிலர் புத்தரை வேண்டுகிறார்கள் சிலர் அல்லாஹ்வை வேண்டுகிறார்கள் சிலர் யேசுவை வேண்டுகிறார்கள் …
-
- 11 replies
- 2.9k views
-