Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இவர்களுக்கானதே! ----------------------------- நேற்று எம் முன்னோர் இன்று நாம் நாளை இவர்களும் ...... மாற்றத்தைத் தேடும் மாந்த நேயனே தியாக தீபத்தின் பொன் மொழியறிந்தாய் மக்கள் போராட்டமொன்றே மண்ணை மீட்குமென்ற மகத்துவம் புரிந்து நோன்பினில் இருந்தே தேசியம் காக்கும் கடைமையில் இருந்தாய் மெல்லென எழுகின்ற கதிரொளியாக எங்களின் இளையோர் உலகை ஒருநாள் வென்றெழும் போது இவர்களுக்கான தாயகம் விடியும் புலியினைத் தாங்கிய எம்கொடி பறக்கும்!

  2. போரியலின் அடிப்படை படைகளின் அணி ஒழுங்கு தகமைகளின் நெறி வழி ஒரு சிறந்த போரியல் ஆசான் .. ஆரம்பிப்பவன் சிப்பாய் ஆனால் கட்டளை பீடம் அரசன் நோக்கம் எல்லாம் தன் தலைவனை காப்பது மட்டுமே சூழ்சி வலையில் இருந்து .. இத்தனைக்கும் படையை ஒழுங்கு படுத்தி பகையை நிலைகுலைய செய்வதும் வைப்பதும் ராணியாம் உதவிக்கு மந்திரி நெடுக்க வழிநடக்க .. முன்னேருவோர் வீழ்வார் என தெரியும் ஆனாலும் அடுத்த கணம் நிலையை பலப்படுத்தி பதில் தாக்குதல் நடக்கும் இறப்பு பெறுமதி வீழ்ந்தவர் பொறுத்து கணிக்கப்படும் ... ஆனாலும் சதுரங்கம் வாழ்க்கையின் மிக சிறந்த ஆசான் போரியலின் ஆசிரியன் களங்களை மாற்றி அமைக்கும் வல்லமை தந்திரங்களை உடைத்து வெளி வரும் கெட்டித்தனம் .. காப்பு தாக்குதல் திறன்களை…

  3. பிரளயத்தின் சாட்சி கண்கொண்டு பார்க்க முடியாது ஒரு பறவை இரத்தம் சொட்டச் சொட்ட நந்திக்கடற்கரைச் சேற்றுக்குள் பிய்த்து வீசப்பட்டிருப்பதை முதலில் நிர்வாணத்தால் கொலை செய்தனர் பின்னர் ஆண்குறிகளால் பின்னர் துப்பாக்கிகளால் அழுகிய பிணங்களைப் புணரும் வீரமிகு படைகள் வேறெதைச் செய்வர்? யாருமற்ற கடற்கரையில் ஈனக்குரல் எழுப்புகையில் ஒரு ஊர்க்குருவியும் துணைக்கில்லை வற்றப்பளையம்மன் எங்கு சென்றாள்? யாராலும் எழுத முடியாது நேரிட்ட நிர்க்கதியை சிந்திய கண்ணீரை உறிஞ்சபடப்ட்ட இரத்தத்தை பிய்த்தெறியப்பட்ட கதையை இறுதிக்குரலை நிராயுதயபாணிகளை வேட்டையாடும் கொலையாளிகளிடம் ‘அது நானில்லை’ என்று சொன்னாய் …

    • 1 reply
    • 629 views
  4. Started by சுபேஸ்,

    பிரிவு... நீயில்லாத நிமிடங்களில் ஒவ்வொரு நொடிகளும் எனைப்பிடித்துப் பெருஞ்சர்ப்பத்தைப்போல அணுவணுவாக விழுங்கிவிடுகின்றன காற்றில்லாத வெற்றிடமொன்றில் அடைத்து விடப்பட்டதுபோல நீயில்லாத கணங்களில் என் ஒவ்வொரு சுவாசங்களும் பெருஞ்ச்சுமையாய் இடம்பெறுகின்றன அருகேதானே இருக்கிறேன் என்று தொலைபேசியில் நீ சிணுங்கினாலும் சுடர் அணையும் சிறுகணத்தில் கனமாய் இறங்கும் இருளைப்போல சிலுவைகளாய்க் கனக்கின்றன நீயற்ற சிறு நொடிகளும் பிரிவு முடித்து உன் ஒவ்வொரு மீள்கையிலும் நீயற்ற நிமிடங்களின் வலிகளை அனுப்பிவிட்டு ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த தாயைப்போல ஒவ்வொரு தடவையும் பூரித்துப்போகிறது எனதுள்ளம் எல்லாப்பிரிவுகளின் முடிவிலும் இன்னமும் இன்னமும் பேரன்…

  5. வசந்தன் மில்லராகி....! ----------------------------------- வசந்தன் மில்லராகி வரைந்தான் ஈழம்தேசம் தொலைத்தான் தாயின் வாசம் சுமந்தான் தாய்நாட்டின் வாசம் ஏற்றான் வெடிகுண்டின் பாரம்! விடியல் படைக்கும் முடிவாய் வெடித்தான் தமிழர் மனதுள் தடுத்தான் பெரும் அழிவின் வரவை பதித்தான் வீரச் சுவட்டை பார்த்தோம் வாழ் நாளிலன்று! வியந்தோம் விழிகள் உயர தொடர்ந்தார் களங்கள் சரிய நிலைத்தார் மனங்கள்தோறும் நிமிர்வோம் அவரீகத்தாலே!

    • 2 replies
    • 628 views
  6. Started by கோமகன்,

    [size=5]கிரிக்கெட்[/size] நடு ரோட்டில கிரிக்கெட் ஆடினதும் நடுச்சாமத்தில அவுட்டான மாதிரி கனவுகண்டு திடுக்கிட்டு எழும்பினதும் அடிச்ச ஸ்கோரை கொப்பியில எழுதி வச்சதும் வீணாக ரன் அவுட்டானதுக்கு அழுது ஃபீல் பண்ணினதும்... இனிமையான கிரிக்கெட் வாழ்க்கை! இப்பொழுது ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரன்! நன்றி : கவிதையின் கவிதைகள்

  7. உணர்வாய் என் தமிழா! இடர்கள் இடர வைக்கும் தடைகள் தளர வைக்கும் நம்பிக்கை ஒன்றே கொண்டால் நல்ல வழி பிறக்கும்! 'வெற்றி" ஒன்றே என்றும் சொந்தம் என்ற திமிர் கூடாது! தோல்விகளே பாடம் சொல்லும் அதனால் உடையக் கூடாது! "நேற்று" நடந்த கசப்புநிகழ்வு இறந்த காலம் ஆயாச்சு இந்த நொடி உந்தன் கையில்! எழுந்து நின்று போராடு! வாழ்க்கைச் சுழலில் இன்பதுன்பம் எல்லாம் உந்தன் கையோடு! மனதில் தளரா உறுதி கொண்டால்! என்றும் வெற்றி உன்னோடு!!

  8. ஒரு செய்தியைக் கூட விட்டுச் செல்லாமலும்ஓர் வார்த்தையைக் கூடச் சொல்லாமலும்அன்று நீ காணாமற் போனாய்..சித்தம் கலங்கிப்போய் உன் தந்தையும்சாவீடு போல உன் வீடும் சிதறிப்போய்க் கிடந்ததுநீ இறந்திருக்கலாமெனபலர் தமக்குள் பேசிக்கொண்டார்கள்காலமும் ஓடிப்போயிற்றுவழமை போலவே தியாகங்களும்நினைவுகளும் எமக்குள்மங்கிப்போயின..சுரணை அற்ற வாழ்வுக்காகதொலை தேசத்திற்கு நான்வந்திருந்தபோதுபனிப் பொழிவினிடையேஉன்னைப் போலவே ஒருவனைப் பார்த்தேன்..!அது நிச்சயமாக நீதான்அதே கூர் மூக்கு,தெத்திப்பல்ஆயின்..நீ இறக்கவில்லை..!ஆனால் இறந்திருந்தாய்நிற்க முடியாமலும் இருக்க முடியாமலும்காலைச் சவட்டியபடி,கல்லூரிக் காலங்களில்எப்படி எல்லாம் கலகலப்பாய்இருந்தாய்..! இப்போதோபேச்சுக் கொடுத்தாலும்பெரும் மெளனம் காக்கின்றாய்..முட்கம…

  9. பூத்த நெருப்பு அறிவுமதி * என் மரணம் அது கண்ணீரை யாசிக்கும் பிச்சைப் பாத்திரமன்று கவிதைக்குள் முகம் புதைத்து யாரங்கே கதறியழுவது... என் மரணம் இரங்கற்பா எழுதுவதற்கானதும் அன்று சவுக்கு மரத்து ஊசி இலைகளில் சறுக்கி விழுகிற பனித் துளிகளாய் நீங்கள் சிந்தும்கண்ணீர்ச் சொற்களால் என் பெயரை உச்சரிக்காதீர்கள் பூமி இது தண்ணீரின் கல்லறை கடல் அது பூமியின் சமாதி என வார்த்தைகளுக்கு வண்ணம் பூசுவதால் கவிதையை நீங்கள் கெளரவப்படுத்தலாம் வாழ்க்கையை கெளரவிக்க இந்த வண்ணங்கள் என்ன செய்யும் மின்னல் இருளின் விரோதியன்று அது மழையின் விளம்பரம் கனவுகளையும் கற்பனைகளையும் மட்டுமே காதலிக்கத் தெரிந்த உங்களின் கவிதைகள் கூட காதல் தோ…

  10. உதயப் பொழுதில் கானத் தமிழில் காதோரம் நனைய களிப்பில் என்மனம்! உலகில் பரந்த தமிழின் செழுமை நிலைத்து நிற்க இறைவா பாராய்!! http://www.esnips.com/doc/15947adc-758f-4b...2256/kavikkuyil கவிக்குயில் பாடுது - குரல்:சங்கீதபூஷணம் (அமரர்) எம்.ஏ.குலசீலநாதன் - இசை: எஸ்.கே.பஞ்ச் - வரிகள்:தீரன் - நாடு: பிரான்ஸ் கொழும்பைக் காட்டிய இரதமே இன்று நீ எங்கே? சமத்துவம் சொன்ன சடப்பொருளே சட்டென நீயும் மறைந்ததென்ன? தினமொரு காட்சி நிதமொரு உணர்வு எவ்வளவற்றைக் கண்டிருப்பாய் அன்றைய பொழுதுகள் உன்னுள் நானும் உறைந்ததும் இன்றும் மனச்சுமையாய்!! http://www.esnips.com/doc/effe271b-e9fe-45...6b/Yarltheviyil யாழ்தேவி - குரல்:சாம் பி.கீர்த்தன் -…

    • 0 replies
    • 627 views
  11. குறிஞ்சிப் பாடல் -வ.ஐ.ச.ஜெயபாலன் கரும் திரை அசையும் தோற்பாவைகளாய் நெளியும் நீல மலைத்தொடர்களின் மேல் முலை சிந்தச் சிந்த நிலா நட்சதிரக் கன்றுகளைத் தேடுது. சொட்டும் நிலாப் பாலில் கரையும் இருளில் பேய்களே கால்வைக்க அஞ்சும் வழுக்கு மலைப் பாதை பாம்பொடு பாம்பாய் நெளிகிறது. மின்மினிகள் துளை போடும் இருள் போர்த்த காட்டின் வழி நீழ கமழும் நாவல்மரங்கள் உதிர்க்கும் கனிக்கு கரடிகள் அலையும் இரவில் பூத்துக் குலுங்குது முல்லை. ஆதிவாசிகளே அஞ்சும் வன இருளில் வண்ணத்துப் பூச்சிகளும் உறங்கும் இந்தக் கொடிய நள்ளிரவில் ஏன் பூத்தாய் காட்டு முல்லை. நான் மண்ணுக்கு பழசு கவிஞா பொறுத்திரு என்று நகைத்த முது முல்லை சுட்டும் திசையில் …

    • 2 replies
    • 627 views
  12. கண்ணீர் யுகத்தின் தாய்! குழந்தைகள் அலைய பூமியில் வெளிச்சம் அணைந்த பொழுது ஒரு யுகத்தின் தாய் இறந்திருந்தாள் பூமி பேரதிர்ச்சியில் நடுங்கியது தாய்மாருக்காய் அழுதழுது கண்ணீர் விடும் குழந்தைகள் வாழும் யுகத்தில் கனத்தன வீடுகள் குழந்தைகளுக்காய் அழுதழுது கண்ணீர் விடும் தாய்மார்கள் வாழும் யுகத்தில் கனமடைகிறது பூமி தாய் கட்டிய சுவர்களில் கனவின் காட்சிகள் நெளிந்தன நிலம் மெழுகும் தாயின் விரல்களில் சிக்காத புதல்வர்களின் பதச்சுவடுகள் தொலை தூரத்தில் தவித்தன அடுப்பில் பொங்கியது துயரம் இலட்சம் குழந்தைகள்தாய்மாரை இழக்க இலட்சம் தாய்மார் கு…

  13. தீயைத்தின்னும் வயதில் தீ தின்று எம் நெஞ்சில் நிறைந்தவனே முள்படுக்கை அறிந்தயோ எம் முற்றத்து மணலில் புரண்டுதான் படுத்தாயோ கல்லெறிகள் கண்டு வந்தவனே எங்கள் ஊர் செல் எறிகள் உணர்ந்தாயோ எதற்காக மடிந்தாய் நாமெல்லாம் இரைமீட்க நீ உணவானாயே நேரத்திற்கு உணவு நீட்டியமர வீடு கால்மேலே கால்போட்டு கட்டணை உடைத்ததாம் கரைந்து எதிரி மடிந்தானாம் கட்டுக்கதைகள் பேசி காலத்தை ஓட்டுகின்றோம் நீயோ எட்டாத உயரத்தில் ஏறி சென்றுவிட்டாய் சத்தமே இல்லாமல் சட்டென்று பற்றிவிட்டாய் புண்ணிய மனிதா நீ பூஜையறையில் வாழ்பவன் புனிதமண்ணாம் எம்மண்ணில் புகழ் பரப்பவேண்டியவன் சொல்லாமல் ஏன் சென்றாய் செல்லெறி அறிவாயோ ஓரடி அகலத்தில் நான்கடி ஆழத்தில் கிடங்கு வெட்டி…

    • 0 replies
    • 626 views
  14. Started by pakee,

    தேவதையாய் நீ வந்த போதே நான் தெரிந்திருக்க வேண்டும் எனக்கு தெரியாமலே போய்விடுவாயென்று...♥

    • 0 replies
    • 626 views
  15. Started by pakee,

    இழந்து விட்டேன் என்கிறேன் இல்லை இல்லை இன்னும் கொஞ்சம் இருக்கிறது என்கின்றது(நம்பிக்கை)...

    • 0 replies
    • 625 views
  16. 1 ‘மாவீரர்கள் சாவையே வென்றவர்கள் மக்கள் மனங்களுக்குள் வாழ்பவர்கள்’ நவம்பர்27ல் எங்கே நாங்கள் வருவோம்? நேசம் மிக்க எங்கள் தேசச்செல்வங்களே! உங்களைக் கண்டு எம் உள்ளத்துணர்வூகளை எடுத்துச்சொல்ல எங்கே நாங்கள் வருவாம்? நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தவர்களல்ல எங்களுள் நிலைத்து வாழும் மாவீரர்கள் எங்களை நேசித்தவர்கள் நீங்கள் எமக்காக உங்கள் உயிர்ப்பூக்களை உதிர்த்தவர்கள் எங்கள் நிம்மதிக்காக உங்கள் சுகங்களைத் துறந்து போராடினீர்கள் நாங்கள் வாழவேண்டும் என்பதற்காக உங்கள் சாவூக்கான நாளை குறித்தவர்கள் நீங்கள் உண்மையாக எங்களை நேசித்தவர்கள் நீங்கள் -அதனால் உங்களிடம் மட்டுமே எங்கள் உள்ளத்து வலிகளை சொல்லி அழமுடியூம் அதனால்த்தான் உங்களைப்பெற்றவர்கள் உங்களின் சோதரங்கள்இஉறவினர்கள் த…

  17. சுனாமிப்பாதிப்பின்போது எழுதிய கவிதைகள் சுனாமியிலே மடிந்த எம் சொந்தங்களுக்குச் சமர்ப்பணம். ---------------------------------------------- கட்டடிப் போட்ட நாய்போல் காலை நக்கும் கடலே - உன்னை அழகியவோர் அவளாக நினைத்திருந்தேன் - உன் அலைச் சேலை உயர்ந்த பின்பு தான் தெரிகிறது நீ ஓர் அருவருக்கத் தக்க மிருகமென்று ஆங்கிலேயன் உனக்கு வைத்த தமிழ்ப் பெயர் சீ! ஐப்பானியன் தனக்குத் தெரிந்த தமிழில் உனக்கு வைத்தான் பெயர் சுனாமியென்று ஆமியடித்தது போதாதென்று சுனாமி நீ வேறு வந்திருக்கிறாய் பஃறுளி ஆற்றையும் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோட்டத்தையும் கொடிய நீ கொண்டாய் பூம்புகார் உன்னால் புதையுண்டு போனது துவாரகா நகரம் துவம்சமானது இவ்வாறுதான் நீ தென் குமரியின் வாழ்வை உன் வக…

    • 2 replies
    • 625 views
  18. பிரளயத்தின் சாட்சி கண்கொண்டு பார்க்க முடியாது ஒரு பறவை இரத்தம் சொட்டச் சொட்ட நந்திக்கடற்கரைச் சேற்றுக்குள் பிய்த்து வீசப்பட்டிருப்பதை முதலில் நிர்வாணத்தால் கொலை செய்தனர் பின்னர் ஆண்குறிகளால் பின்னர் துப்பாக்கிகளால் அழுகிய பிணங்களைப் புணரும் வீரமிகு படைகள் வேறெதைச் செய்வர்? யாருமற்ற கடற்கரையில் ஈனக்குரல் எழுப்புகையில் ஒரு ஊர்க்குருவியும் துணைக்கில்லை வற்றப்பளையம்மன் எங்கு சென்றாள்? யாராலும் எழுத முடியாது நேரிட்ட நிர்க்கதியை சிந்திய கண்ணீரை உறிஞ்சபடப்ட்ட இரத்தத்தை பிய்த்தெறியப்பட்ட கதையை இறுதிக்குரலை நிராயுதயபாணிகளை வேட்டையாடும் கொலையாளிகளிடம் ‘அது நானில்லை’ என்று சொன்னாய் யாரை அவர்கள் விட்டு வைத்தனர்? அன்றொ…

  19. Started by nochchi,

    வதை முகாம் -------------- சதி, திமிருடன் கைக்கோர்த்து - எங்கள் விதியுடன் விளையாடியதால்..... இன்று எம் அம்மையும், அப்பனும் ஆளுக்கொரு முகாமில் அழுகையும், ஆத்திரமுமாய்........ முட்கம்பிவேலி முழங்காலிட்டு நுழையும் கொட்டகை எலும்பும், தோலோடு - என் அண்ணன்களும், தங்கைகளும் ஆடும், மாடுமாய்........ குளிர்ப்பனியோ... கும்மிருட்டோ... சுடுவெயிலோ... கொடும் விடமோ... கடினமல்ல - எம் மக்களுக்கு காட்டிக்கொடுக்கும் கயவனின் கடும் செயலைவிட! சிங்கமுக சொறிநாய்... செருக்குற்ற வெறிநாய்... பிஞ்சையும் புணர்ந்து பேராண்மைப்பேசும் ஓநாய்... துப்பாக்கிமுனையில் துகிலுரிக்கும் கயவனே! உன் அக்காளாய், தங்கையாய் தமிழ்ப்பெண் உனக்குத் தெரியாதோ? அஞ்ச…

  20. மெய்ப்படும்…………. உங்கள் உயிரீந்தீர் எங்கள் வாழ்வுக்காய் உங்கள் உயிரீந்தீர் எங்கள் இருப்புக்காய் உங்கள் உயிரீந்தீர் நிலத்தின் மீள்வுக்காய் உங்கள் உயிரீந்தீர் தமிழினத்தின் மலர்வுக்காய் உங்கள் உயிரீந்தீர் தமிழ்த் தேசியத்திற்காய் உங்கள் ஈகத்தினாலே உலகெங்கும் இருந்து - நாம் உணர்த்தெழும் நாளிலே உங்கள் கனவும் எங்கள் கனவும் மெய்ப்படும் மாவீரரே! மெய்ப்படும் மாவீரரே! (நன்றி : குமாரசாமியவர்களே)

    • 0 replies
    • 624 views
  21. கார்த்திகை பெற்றெடுத்த கல்லறைகளே.. கலங்கரை விளக்குகளாய் நீவிர்... மனக்கரைகளில் நிமிர்ந்து நிற்கையில் கார்த்திகைப் பூக்களுக்கு கண்ணீர் விட ஏது தேவை.?! கார்கால இருளின் மின்னல்களே ஒளிரும் தாரகைகளாய் நீவிர் விண்ணெங்கும் நிறைந்திருக்க.. காட்டுச் சிறுத்தைக்கு சிணுங்க ஏது தேவை...?! தேசக் காற்றின் வாசமான இளம் தென்றல்களே... உயிர் மூச்சுக்களாய் நீவிர் சுவாசப்பைகள் எங்கும் நிறைந்திருக்க... எங்கள் வாகைக்கு வாடி நிற்க ஏது தேவை..?! கடல் கொண்டாடும் அலையாகி நிற்போரே ஓயாத அலைகளாய் நீவிர் உயிரோடிருக்க தத்தித் திரியும் அந்தச் செம்பகத்துக்கு சோர்ந்திருக்க ஏது தேவை..??! கால வெளியில் கோலங்கள் மாறலாம் தேசங்கள் அலங்கோலமாகலாம் கண்மணிகளாய் நீவிர் …

  22. கடுநோய் கொண்டும் காற்றாய்ப் பறந்து கனலாய் தெறிக்கும் விதமாய் பேசி இடுமோர் வெற்றிக்கிணையே இல்லை எதிரிக்கிவரோ பெருமோர் தொல்லை எதானால் இவரை அழைத்தாய் எங்கள் இறைவாஉனக்கேன் இரக்கம் இல்லை பதமாய் பொங்கிப் படைக்கும்வேளை பானைஉடைத்தாய் பார்த்துக்கெடுத்தாய் மனதில் உரமும் செழிக்கும்வேளை மரணம்தந்தே மயங்கச்செய்தாய் கனவில்மட்டும் நிம்மதி என்று காலமெல்லாம் கலங்கச் செய்தாய் உரையைக்கேட்க இதயம் மகிழும் உண்மைப் பேச்சில் உணர்வும் கசியும் வரமாய் தமிழர்க் கொளியாய் வைத்து வழியில் செல்ல இருளைத் தந்தாய் இருந்தால் எங்கள் ஈழம் வெல்லும் என்றா இவரை கொண்டாய் சதியை பெரிதாய்போட்டே பிரிவைச்செய்தாய் பிழையை செய்தாய் பேசற்கரிய தமிழாம் ஈழத்தலைவர் எல்லாம் தர…

  23. வெற்று காகிதம் .. ... நாட்களும் நகருகின்றன. நெருடும் நினைவுகளுடன் வாழ்க்கையும் நகருகின்றது. வண்ண எழத்துக்களாலும். கிறுக்கல்களாலும் வாழ்க்கையின் பக்கங்கள் நிரப்படுகின்றது. கற்பனையில் சில கவிதைகள் நினைவில் சில கவிதைகள் நிகழ்வில் சில கவிதைகள் என என்கை எழுகின்றது. நான் இழந்தவைகள் ஏதுவாயினும் எஞ்சியிருப்பது நம்பிக்கையே. அடி மனதில் அடுக்கடுக்காய் அலுமாரியில் அடுக்கிய புத்தகங்களாய் மீண்டும் புரட்டிப் படிக்க நினைத்தால் புண்பட்டு போகுது என் மனசு . நான் எங்கு சென்றாலும் துன்பங்களும் வேதனைகள் என் கழுத்தை நெரிக்கின்றான. எத்தனை பேரின் சொல் காயப…

    • 0 replies
    • 624 views
  24. ஏய் சுதந்திரமே உன்னை எம்மால் தொட அகிம்சையாளும் முடியவில்லை ஆயுதத்தினாலும் முடியவில்லை ஆகவே வேண்டாம் நீ என ஒதுங்கிட முட்கம்பி அகதியல்ல புலம்பெயர் அகதி நாம்

  25. க‌ரும்புலிக‌ள்… ! பெற்ற‌ தாய் நாட்டையும் பேசும் த‌மிழ் மொழியையும் ப‌ற்றுட‌ன் ம‌தித்து ம‌ன‌தில் உறுதியும் கொள்கையும் கொண்டு க‌ட‌ற்புலியாக‌வும் க‌ள‌ப்புலியாக‌வும் சாத‌னை ப‌டைக்கும் க‌ரும்புலி வீர‌ரே! உமை நாம் வ‌ண‌ங்குகிறோம்… நேர‌ம் குறித்து வைத்து சாவைத் தோள்மீது தாங்கி ப‌ட்ட‌ ப‌க‌லிலும் கார் இருளிலும் எதிரியை சித‌ற‌டித்து வெந்து உட‌ல்க‌ருகி வெற்றிக‌ளை ஈட்டித‌ரும் வேங்கைய‌ல்ல‌வா நீங்க‌ள்… ம‌ண்மீது ப‌டையெடுத்த‌ மாற்றானின் முக‌ம் க‌ண்டு ப‌ல்லைக் க‌டித்துக்கொண்டு நெஞ்ச‌ம‌தில் வீர‌த்துட‌ன் மெய்த‌னிலே வெடிக்குண்டைச் சும‌ந்து வெடித்து சித‌றிய‌ வேங்கைக‌ள் நீங்க‌ள் வேத‌னைக‌ட‌லில் மூழ்கிய‌ போதும் சோத‌னைபுய‌லில் சிக்கிய‌ போதும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.