கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
பரந்த வெளியிலே ஒற்றை மரமாய் தனித்து நின்றாலும் இரைதேடும் பட்சிகளுக்கு தங்குமிடமாகிறது மேற்கே மறையும் சூரியனும் தெளிந்த நீரோடையும் மெல்லென் தழுவிச் செல்லும் காற்றும் நீரிலே தோன்றும் சூரிய ஒளியும் இரவை நோக்கி நகர்ந்து சென்று உனக்கும் எனக்குமாய் நாளை எனும் உதயம் ஆழ்ந்த் நம்பிக்கையோடு விடிவு பிறக்கும்.
-
- 3 replies
- 915 views
-
-
தோற்று விட்டோம் நேற்றய தோல்விகண்டு விழ்ந்து விட்டோம் கலைத்து விட்டோம் நாளைய கனவும் தொலைத்து விட்டோம் இதயம் மட்டும் துடிக்கிறது என்றோ ஒரு நாள் எம்மக்கள் விடிவுக்காய்
-
- 0 replies
- 508 views
-
-
விடிவெள்ளி மீண்டும் வானில் தெரிகிறது வெடி கண்ட நிலம் போல் சிதறிய மனம் மீண்டும் விண்மீன்கள் கண்டு சிரிக்கின்றது கொடுவானின் இடி மின்னல் கொடுங் காற்று எல்லாம் கோரத் தாண்டவம் ஆடி முடித்து காற்று அலைகளின் சீற்றம் குறைந்து கோலங்கள் காட்டி நிற்கிறது வேருடன் மரங்கள் வீழ்ந்தன எனினும் வாடை அடங்கி மீண்ட வானின் மிதப்பின் வேகத்தில் மருண்ட மேகங்களின் மகிழ்ச்சி ஒலியாய் மீண்டும் மின்னல் கீறி மறைகின்றன ஓசை அடங்கக் காத்திருந்தேன் என் ஆசை அடக்கி மேகத் தீயுள் மோதும் உன் முகம் காண முடிவேதும் இல்லா மழை வானின் எல்லையில் மண்ணொடு மண்ணாய் மங்கியும் நானும் மகிழ்ந்திருப்பேன் முடிவுற்ற வெளியின் முகில்கள் கடந்து முடிவற்ற என் பயணம் முடிந்து மலர் கண்ட வனமாய் மலர்கின்ற மனம் க…
-
- 9 replies
- 1k views
-
-
அவன் ..... இல்லாவிட்டால் .... நான் இல்லை ... நான் இல்லாவிட்டால் .... அவனுமில்லை .... நாங்கள் இரட்டை .... பிறவிகள் இல்லை .... அப்போ நாங்கள் .... யார் ...................? & & & & & விடை ; உடலும் உயிரும் ...!!! ^ சிறுவர்களுக்கான கவிதை கவிப்புயல் இனியவன்
-
- 1 reply
- 650 views
-
-
ஆணிடமிருந்து பெண்ணிற்கு விடுதலை பெண்ணிடமிருந்து ஆணிற்கும் விடுதலை காதலில் இருந்து கற்பிற்கு விடுதலை கற்பிற்குளிருந்த காதலுக்கும் விடுதலை பெற்றோரிடமிருந்து பிள்ளைக்கு விடுதலை பிள்ளையிடமிருந்து பெற்றோருக்கும் விடுதலை உறவில் இருக்கும் பாசத்திற்கு விடுதலை பாசத்திற்குளிருக்கும் உறவிற்கும் விடுதலை பணத்திலிருக்கும் சொந்ததிற்கு விடுதலை சொந்ததிற்குளிருக்கும் பணத்திற்கும் விடுதலை நட்பிலிருந்து தூய்மைக்கு விடுதலை தூய்மைக்குளிருக்கும் நட்பிற்கும் விடுதலை இறுதியில் பூமியிடமிருந்து மனிதனுக்கு விடுதலை மனிதனிடமிருந்து உயிருக்கும் விடுதலை!!
-
- 14 replies
- 2.2k views
-
-
-
வாசல்களில் மரணத்தின் வரவுகளை கணக்கு வைத்திருந்த கணப்பொழுதுகள் அவை . முன்பெல்லாம் உறவுகள்கூடி உடலம் சுமந்து மயானம் செல்வோம், ஊரே மயானமாகிப்போக இறுதிக்கடன் மட்டுமல்ல இறுதியாய் கண்ணீர்கூட விடாமல் உடலங்களை கடந்த தினங்கள் அவை. எங்காவது எமக்காய் எம் குழந்தைகளுக்காய் எம் உறவுகளுக்காய் ஒரு குரலாவது ஒலிக்காதா என்று ஏங்கிக்கிடந்தோம். கரகரத்த குரலாவது ஒலிக்கும் என்று முனுங்கிக்கிடந்தோம். காற்றும் கடலும் வானும் எண்திசைகளும் எரிந்தன எரிகுண்டுகளாலும் எறிகுண்டுகளாலும், உடலங்களை கண்ட நாய்களும் நரிகளும் இன்னபிற விலங்குகளும் அஞ்சியோடின, அப்போதும் வலிகளோடு ஏங்கித்தான்கிடந்தோம். எதிலியாகி நடந்தோம். அறிந்தவன் நீ எரிந்துபோனாய். தோழனே முத்துக்குமார் !!!! நீ மூட்டியது…
-
- 5 replies
- 605 views
-
-
ஆண்டுகள் ஏழு கடந்தும்.. சுவடுகளாய் கட்டிய சேலைகளும் காவிய பொம்மைகளும் சீன அமிலத்தில் கரைந்து போன எலும்புக்கூடுகளுக்கு மாற்றீடாய்..! இலட்சியம் சுமந்த மறவர் பின் விடுதலைக் கனவோடு பாதம் பதித்த நம்பிக்கைகள்... எதிரியின் உயிர்ப்பிச்சைக்காய் ஏங்கியே ஒதுங்கிய அந்த மணற்றரையில் உப்பில் கலந்து உடல் கரைவார் என்று யார் நினைத்தார்..! கந்தகக் குண்டுகளோடு பொஸ்பரஸ் அதுஇதென்று ஆவர்த்தன அட்டவணையில் அடங்கியவை எல்லாம் கொட்டி உலகம் எல்லாம் ஒன்றாய்க் கூடி ஓர் இனத்தின் தலைவிதியை தலையறுத்து சன்னங்களால் சன்னதம் ஆடிய பூமி அது..! இலைகள் உதிரலாம் கி…
-
- 5 replies
- 1k views
-
-
கொஞ்சி பேசத்தான் தெரிகிறது சிறை பிடித்தவர்களிடமும் உனக்கு இனி போர் பறையாய் முழங்கு விடுதலை பிறக்கும் உனக்கு kaaraimainden.blogspot.com
-
- 0 replies
- 446 views
-
-
மரணம் ! அது உனது முகம் முழுவதும் வியாபித்திருக்கிறது.... சொல்ல எழுகிற சொற்களைக் குற்றித் துளைக்கும் கூர்முனைக் கத்தியிலிருந்து உயிர்க்காற்று மூர்ச்சையுறுகிறது. உதிரும் குருதித் துளிகள் உனக்குள்ளிருந்த பலம் முழுவதையும் உறிஞ்சிக் கொண்டு போகிறது..... கத்தியின் இடுக்கிலிருந்து ஒழுகுகிறது உனது கடைசிக் கனவுகள்..... ஓர் உயிரின் பெறுமதி பற்றிய எந்தவித கவலையுமின்றி உன்னைக் குற்றிக் குருதியில் குளிப்பாட்டி மகிழ்கிறது காடேறிகளின் கர்வம்..... இன்றைய முகப்புச் செய்திகளிலும் தலைப்புச் செய்திகளிலும் நீ நிறைந்து வழிகிறாய்..... வியாபாரிகள் வயிறு முட்ட நீ வலியில் துளித்துளியாய் செத்துப் போகிறாய். எத்தனையோ கொடுமைகள் …
-
- 32 replies
- 4.4k views
-
-
விடுதலை போராளிகள் எதிரியின் சிம்ம சொப்பனங்கள் நம் தமிழீழ எல்லைகளில் எமை தாக்கவரும் எதிரியினை வீரம் எனும் வேல் கொண்டு வீழ்த்திடும் வேங்கைகள். சிந்தனையில் நம் விடுதலையும் சிரத்தினிலே எதிரியினை வீழ்த்தும் பொறிமுறையும் தம் கடமையென நினைத்து கண்ணியமாய் நடப்பவர்கள். துப்பாக்கி ரவைகள் இவர்களின் சொல் கேட்கும் குழந்தைகள் கிரனேட் குண்டுகள் இவர்கள் கைகோர்த்த நண்பர்கள் ஆர் பி ஜி குண்டுகளோ இவர்களின் அடியாட்கள் எதிரியை அழியென்றால் அழித்துவிடும் இவர் அனுப்பும் வெடியாட்கள் ! தமிழ் போராளிகள் ! இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் போரிட மட்டும்தான் - ஆம் எதிரி புற முதுகு காட்டி ஓடும் வரை அவர்களுடன் போரிட மட்டும் தான். துப்பாக்கி …
-
- 0 replies
- 783 views
-
-
கனிவான கன்னி என்று உன்னை நினைக்க நீ, என்னை கண் கலங்க வைத்தாயடி. உதிரம் எல்லாமே உனக்காக என்றிருந்த என்னை, உயிரோடு வதம் செய்தாயடி . ஒரு முறையேனும் உன் இன்முகம் காட்டி கனிமொழி கேட்க நான் , ஏங்கியிருந்து , வாடியிருந்து , இளமைதனை இழந்து ஏமாந்து போனனடி. என்னுயிர் நீ என்று தன்னுயிர் பாராது கண்ணீருடன் இருந்த என் தாயன்பினை நான் உணர்ந்து , பாசம் உள்ள அன்னையவள் அன்பு மட்டும் எனக்கு இப்போ ஈசன் தந்த சொர்க்கமடி. உன் நினைப்பு எனக்கு தந்தது வெறும் வெட்கமடி . சிந்தை கலங்குதடி எந்தன் சிறுபிள்ளை தனத்தை எண்ணி …..கலை http://www.siruppiddy.net/?p=7317
-
- 0 replies
- 595 views
-
-
விடுதலை வேள்வியில் விறகானாய்! வீரர்களின் சுடர்களுடன் இணையானாய்! வெந்திட்ட புண்ணுக்குள் வேல்கொண்டு குத்திவிட்டார் தந்திரமாய்ப் பேச்சுவார்த்தை புதைகுழிக்குள் தள்ளிவிட்டார் விந்தையல்ல நீதிகொல்லல் எங்களுக்கே என்று காட்ட இயந்திரக் கழுகுகொண்டு குண்டுவீசிக் கொன்று விட்டார்! ஆயுதங்கள் போரில்நிற்க அறிவுடனே பேசி நின்று ஆயிரமாய்ப் பொய்யுரைப்போர் நேரெதிர்க்கும் ஆற்றல்தன்னைத் தகர்ப்பதற்கு ஆள்அழித்தல் என்றுநிற்கும் கோழைகளால் அகம்அழவே அகிலமெங்கும் தமிழரினம் கலங்குதம்மா! சத்தியத்தைத் தலைநிமிரற் கிடமளியோம் என்பவர்க்கே சுற்றிநின்று துணைபுரிவோர் இதற்கும்கூடத் தலையசைப்பார் பற்றிநின்று சுதந்திரத்தை மீட்கநிற்போர் வழிமறுப்பார் பற்றுகின்ற தீபெருக மட்டுமன்றி என்னச…
-
- 0 replies
- 1.5k views
-
-
காந்தாளே..! கார்த்திகை முழுதும் கணலாய் எரிக்கும் பூவே..! நாமெல்லாம் சுமந்த விதி தின்ற பெருங்கனவொன்றின் அடையாளம் நீயென்று அறிவாயா..? இரத்தம் சேறான தேசத்தின் நினைவு நூற்கையில் நதியாய் பின்னும் கண்ணீரை நீயறிவாயா..? பெருங்கோடையில் நீரற்ற நதியைப்போல வற்றிப்போனது எம் சந்ததியின் கடலாயிருந்த தாகம் சருகுகளைப்போல உதிர்ந்துபோயின எங்கள் நிழலாயிருந்த மரங்கள் ஊழிக்காலமொன்றில் உப்புமற்றுக் கடலுமற்றுப்போயிற்று எம் மிச்சமிருந்த கண்ணீரும்.. எம்மைத்தவிர யாரறிவார் சுடுகாடொன்றில் உயிரோடெரியும் பிணமொன்றின் வலியை.. காந்தாளே..! எம் கனவெல்லாம் வாங்கிப்பூத்தமலரே..! அறிவாயா.. எம்தேசத்தின் வீதிகளும் வீடுகளும் வயல்களும் காடுகளும் ஞாபகங்களின் ஞாபகங்களும் சேர்ந்தேயழும் துயரை ந…
-
- 9 replies
- 1.1k views
-
-
தனக்கெனவே வாழ்ந்தும் தகுதியாய் வாழத்தெரியாத மனிதர் முன் நீங்கள் பிறருக்காக வீழ்ந்ததின் வீரத்தின் பதிவுகள் எத்தனை எமக்கு எதையெல்லாமோ எண்ணிக் கொண்டிருந்த-நாங்கள். எதையுமே பெற்றுக் கொள்ளாத நிலையில் நீங்கள் உங்களையே விட்டுக்கொடுத்ததில் நாங்கள் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது! உங்களது குருதி எமது நிலத்தில் உறைந்து கிடக்கின்றது , உங்களது சுவாசம் நாங்கள் சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கின்றது உங்கள் வியர்வை எமது இனத்தின் விடுதலைப் பாதையில் சிந்திக்கிடக்கின்றது உங்கள் வீரத்தின் பதிவுகளை எங்கள் மனதில் நிறுத்தி நிமிர்த்து நிற்கின்றோம் !
-
- 1 reply
- 586 views
-
-
-
- 0 replies
- 741 views
-
-
விடுதலையின் விளிம்பில் நாம்..... நம் தாயக மீட்பு வாசல் வரை வந்துவிட்டோம் விடுதலைக்காய் வழிதேடி கண்முன்னே தெரிகிறது காலையது உன் விடியலுக்காய் ! வந்த வழி பார்க்காதே வலி நிறைந்த வாழ்வு அது வடுக்களாலும் வலிகளாலும் நிரம்பி நின்ற சோகமது ! முயற்ச்சியினால் முன்னேறு முழு நிலவைத் தொடுவதற்கு முடிந்துவிட்டால் முழு வசந்தம் உனக்காக காத்திருக்கு ! வாள் நுனியில் நிற்கின்றாய் உன் வசந்தம் ஒரு பக்கம் ? அடிமை வாழ்வோ மறுபக்கம் ? வசந்தந்தான் உன் தேர்வு அடிமை வாழ்வை உன்மனம் தேடாது ! நீரில் மூழ்க மறுத்துவிட்டால் முத்துக்கள் உன் சொந்தமல்ல ! முயற்ச்சியற்று இருந்துவிட்டால் உன் தாய் நாடோ உன் மக்களின் சொந்தமல்…
-
- 2 replies
- 825 views
-
-
விடுத்திடுக வீண் கவலை விழித்தெழுக புலத்தமிழா நிலத்தமிழன் அங்கு நிட்டூர பகைவனுடன் கலக்கம் சிறிதுமின்றி களமாடி வருகின்றான் வலக்கரமாய் நின்றவற்கு வலுவூட்டும் பொறுப்பில்லுள்ள புலத்தமிழர் நாம் புலம்பிச் சுருண்டிடவோ? ஈன தமிழர்களாய் இன்னமும் வாழாமல் மான தமிழர்களாய் மார் தட்டி எழுந்திடுவோம்! ஓயார்,உண்ணார்,உறங்கார் பகலிரவாய்ப் பேயாய் அலைவார்! பிணி நடுவும் களமாடி மடிந்தார் இருபத்தையாயிரம் மாவீரர்! விடுமோ, இத்தியாகம் வீழ்ந்திடநம் விடுதலைபோர்? ஒரு பாவம் அறியா ஒருலட்சம் தமிழ் மக்கள் மரணித்து காத்த அறம் மண்கவ்வ நேர்ந்திடுமோ? பரம்பரை தமிழர்மண் பறிபோகாமற் காக்கும் பெரும் தர்ம போராட்டம் பெற்றிடுமோ தோல்விதனை? மற்றவரின் மண்ணை வன்பறிப்புச் செய…
-
- 0 replies
- 888 views
-
-
[size=4]“என்னங்க சாப்பிட்டீங்களா?” “ம்ம் சாப்பிட்டேம்மா”[/size] [size=4]“நேரத்துக்குத் தூங்குறீங்களா?” “தூங்குறனே?”[/size] [size=4]“மாத்திரையெல்லாம் போடுறீங்களாங்க?” “ம்ம்…”[/size] [size=4]“ஏங்க தனியா கஷ்டமா இருக்கா?“ கேள்விகளை அடுக்கிக் கொண்டேப் போவாள்..[/size] [size=4]எனக்கு அவள் உடனில்லாததை விட பசியோ, உறங்கா விழிகளோ மாத்திரைகளின்றி உள்ளிறங்கும் மரணமோ தொண்டைக்குழி அடைப்பதில்லை..[/size] [size=4]மாத்திரைகளை விழுங்கக் கூட மறந்து அவளை நினைத்துக் கொள்கையில் குணமாகிப் போகிறது என் மனசும் உடம்பும்..[/size] [size=4]மரமெல்லாம் பூக்கும் பூக்களும் துளிர்க்கும் இலையும் வருடந்தோறும் உதிர்ந்துப்போகையில் தனித்து விடப்பட்ட வெற்றுமரத்தின் கிளைகளாக வல…
-
- 2 replies
- 524 views
-
-
குறுக்குக் கட்டி நீ குளிக்கையிலே குறுக்கு மறுக்காய் அலையுதடி மனசு! குறும்புக்காரன் மனசுக்குள்ளே குறுகுறுக்குதடி வயசு! தலைக்கு சீயாக்காய் தேய்ச்சு சிகைக்கு சாம்பிராணி காட்டி நீ குளிச்சு முடிந்தபின்னும், எனக்கு முடியவில்லை! என் இதயம் படியவில்லை!! புது உடையுடுத்தி வந்த பின்னும் என் படையெடுப்பு அடங்கவில்லை! மடையுடைத்த எண்ணத்தில்... தடையுடைக்கும் திட்டத்தில் என் கவனமெல்லாம் உன்னிடத்தில் உன் கவளம் போன்ற கன்னத்தில்! சமயலறைக் கட்டில் நீ சமைக்கையிலே, சமைந்தவள் உனைப் பார்க்கையிலே... என் சிந்தனையும் சமையுதடி! எண்ணெய் ஊற்றாதே...! என் எண்ணமெல்லாம் வழுக்குதடி!! சாமி சிலை முன்னாடி சாந்தமாய்த்தான் தெரிகிறாய்! திரைச்சீலை பின்னாடி காந்தமாய் ஏன் இழுக்கிறாய்…
-
- 11 replies
- 1.8k views
-
-
விடை பெறச் சொல்கிறாயா ?? நெஞ்சில் வரைந்த ஓவியம்.....!! பூமிக்கு வந்த பனி துளி நான்... விடை பெறச் சொல்கிறாயா ? உன் சித்தம் போல புள்ளி மானாக கோலம் போட்டேன்..... வேதனை வடியவில்லை ...... அருவியாய் என்னை காலமெல்லாம் - அழ வைத்து விட்டாய்......., ஞபகம் வருது..... ----காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே!! சிறகுகள் நானும் உடைந்து , திசை தெரியாமல் திண்டாடி மோதிடுதே.. தூறல் பட்டம் அறுந்து , மூங்கிலாய் .......... இசை.....ஓசை மறந்து அடங்கியதே!! என்னென்று சொல்வேனோ முன்ஜென்ம பகையோ ..... ஏன்? காத்லே நீ வந்து கொன்றாய்? ... மீண்டும் வருவாயா ? என் செல்லமே ? ----நிஜங்களின் தரிசனமாய் கண்களினை கடன் கொடுத்து.... வ…
-
- 1 reply
- 1.1k views
-
-
பூங்குயில்களே-உங்கள் முகாரியைக்கொஞ்சம் முடக்கிப்போடுங்கள் காற்றில்கலந்த கந்தகநெடியிலே -என் வெற்றிச்சேதியை விட்டுச்செல்கிறேன் அப்போதுபாடுங்கள்-புதிய பூபாள ராகங்கள். எனை வளர்த்தபாசறையில் நான்வளர்த்த பூஞ்செடியே நாளைய சேதிகேட்டு புதிதாய் மொட்டுவிடுவாயா-இலயேல் உயிர்பட்டு விடுவாயா? நாணல்களே....ஏன்.. கோணல்களானீர்கள் பனித்துளி என்ன உங்களுக்குப்பெருஞ்சுமையோ தலைநிமிர்ந்துநில்லுங்கள் ஆதவனின் அனல்க்கரங்கள் அள்ளிச்செல்கயிலே அறிவீர்கள் நீங்கள் சுமந்தது வைரக்கிரீடமெண்று. வீரதேசத்தின் விடுதலைக்காற்றே-என் மண்ணின் மணம்சுமந்து உயிர்க்கூண்டில் நிறைந்து …
-
- 10 replies
- 1.8k views
-
-
விடைபெறும்வேளை விடைபெறும்வேளை நெருங்கிவிட்டதா எமக்கு என் கண்ணீர் உன் கண்களில் உன் கண்ணீர் என் கண்களில் இடம் மாறப்போகின்றோம் இதயங்கள் பரிமாறாமலே இப்படி இதய தேசத்தில் உன் நினைவுகள் நிறைய இருந்தாலும் எல்லாம் சொல்லபோவதில்லை உனக்கு இக் கவிதை இதுபோல இக் கவிதை சுமக்காத பல நிகழ்வுகள் உன்னுள்ளும்.......... என்னுள்ளும்........... என்ன தான் நான் எழுத உனக்கு என்னையே எழுதி கொடுக்க நினைத்த பின் எனக்கு உன்னிடம் இருந்து நினைவு பரிசு எதற்கு உன் நினவுகளே நீ எனக்கு தந்திருக்கும் பரிசு தானே பிரிவதற்கு துடிக்கும் உன்னை விட எனகென்றும் நிரந்தரம் பிரியமான உன் பிரியாத நினைவுகளே அன்பே சேர்ந்திருந்த பல பொழுதுகளில் ந…
-
- 48 replies
- 6.4k views
-
-
கவிஞர் செல்வி கடத்தப்பட்ட தினம் ஆகஸ்ட் 30, 1991. போராட்டச் சூழல் பலியெடுத்த எழுத்தாளர்களில் இவருமொருவர். இவர் எழுத்தாளர் மட்டுமல்லர். சமூக, அரசியற் செயற்பாட்டாளரும் கூட. இவரது இயற்பெயர் செல்வநிதி தியாகராசா. வவுனியா சேமமடு பகுதியைச் சேர்ந்தவர். யாழ் பல்கலைக்கழக மாணவி. இவர் கடத்தப்பட்ட பின் இவருக்குக் 'பென்' (PEN) அமைப்பின் எழுத்துச் சுதந்திரத்துக்கான பன்னாட்டு விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அவ்விருதாலும் இவரைக் காப்பாற்ற முடியவில்லையென்பது துயரமானது.. கவிஞர் செல்வியின் கவிதைகள் சிலவற்றை 'வைகறை' பத்திரிகை மீள்பிரசுரம் செய்துள்ளது. அவற்றிலொரு கவிதை 'விடைபெற்ற நண்பனுக்கு' நன்றி: வைகறை.
-
- 0 replies
- 468 views
-
-
விட்டில் பூச்சியே.... உனக்குத்தெரியமா? நீ நேசிப்பது நெருப்பின் ஒளியை எரிந்து போவாய் என அறியாமல் என் காதலும் அப்படித்தான் கடசியில் எரிந்து போவது ஆண்கள்தான் உன்னைப்போல ;)
-
- 2 replies
- 1.5k views
-