கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
மனிதம் செத்து விட்டதோ – என் மனம் சொல்கிறது மனிதம் செத்து விட்டது. செய்யாத குற்றத்துக்காக இந்த தண்டனையை ஏற்றுக்கொள்ள என் மனம் குறுகுறுக்கிறது . என் செய்வேன் எனக்கென்று பேச யாருண்டு எங்களுக்கென்று எங்கே நாடுண்டு எவரிடம் கேட்பேன் நீதி..! என் குடும்ப சுமையை இறக்குவதற்காக – என் தலைமேலே நான் ஏற்றிய சிலுவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது தான் மனிதாபிமானமற்ற அரக்கர்களிவர்கள் என உணரவைத்தது. இதைவிட என் குடும்பத்தோடு எனது நாட்டிலிருந்து … பட்டினியால் செத்திருக்கலாமோ என எண்ணுகிறேன். ஒரு பச்சிளம் குழந்தையை நான் கொண்றேன் என்று பழி என்மீது விழுந்தது. அந்த பிள்ளையினால் தானே எனக்கு கிடைத்தது வாழ்வு நானேன் கொல்ல வேண்டும். பால் குடிக்கும் ப…
-
- 0 replies
- 513 views
-
-
செக்கு செக்கில் கட்டிய மாடுகள் சுற்றின. போராட்டம் முடிச்சவிழ்த்தது. பழக்கத்திலிருந்து விடுபடாமல் செக்கையே திரும்பத் திரும்பச் சுற்றின. முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டிருப்பதை உணர்த்தியபடியே போராட்டம் வளர்ந்தது. அருகாமையில் குண்டுகள் வீழ சிதறித் திக்கெட்டும் பிரிந்தவை பசுமை வெளிகளையும், பனிபடரும் குளுமை தேசங்களையும் தம் வாழ்விடங்களாக மாற்றிக் கொண்டன. வழமையில் இருந்து மாற்றமடையாது முடிச்சுகளுக்குள் தத்தம் கழுத்துகளை நுழைத்து அரவி அரவித் தழுவும் சுகிப்பில் திளைத்தபடி இரைமீட்டிகள் சுற்றி வருகின்றன. நாகரீக வெளிகளின் மெருகேற்றலில் செக்கிழுப்புகள் பரவி விரிகின்றன.
-
- 5 replies
- 4.6k views
-
-
உனக்கு ஆட்சேபனையில்லையெனில் கவிதை மலர்களுக்குள் உன்னை தூவுகின்றேன் எங்கிருந்தோ வந்த உன் அழகு என் வாலிபத்தை துவசம் செய்தது. உன்னை நினைத்துப்பார்க்கின்றேன்.. நீ அழகான ஆனால் அரிதான படைப்பு. என்னை நினைத்துப்பார்க்கின்றேன் காலம் தந்த சிறகுகளைக்கொண்டு உனக்காக பறக்கின்றேன். வாழ்க்கையின் வெவ்வேறு பகுதிக்குள் - உன் வேர் ஊடுருவியிருப்பதாக உணர்கின்றேன்.. என்னிதயத்தில் எனக்கே தெரியாத ஓர் இடத்தில் நீ பதுங்கு குழி அமைத்திருக்கின்றாய். மனசின் இலைகளின் இடுக்கில் நீ பூத்திருக்கின்றாய். உனக்கு ஒன்று தெரியுமா?.... உன்னைக் காண்பதற்கு முன்னால் நானும் காதலை எதிர்த்தவன் தான்......
-
- 10 replies
- 1.9k views
-
-
மடிகளை உள்ளிழுத்த மாடுகள் காலவெற்றிடத்தில் உறுமத் தொடங்கி நாணயக்கயிற்றுக்குள் வளைந்து உடல் சிலுப்பி நிலம் விறாண்டி மூச்செறியவும் செய்தன.. புளுதிகளையும் மூச்செறியும் கனதியையும் வலியேதுமில்லாமல் வழிந்த வீணீர்களையும் முகர்ந்த உண்ணிகள் தாமும் கூட உறுமமுயன்று உருத்திரதாண்டவமாடின... எரிந்து கிடக்கும் நிலத்தின் எச்சங்களை தின்றும், உறைந்துபோன மனங்களின் மர்மங்களை கொன்றும், ஈரமிழந்த வேர்களிலாலும் உயிர்ப்பை சுமக்கும் புனிதர்கள் தோள்கள் மீதேறியும், இன்னலற்ற சுவரோரம் முதுகு தேய்த்து உண்ணவும் உறங்கவும் ஆகுதிகளை வைத்து அவிபாகம் பெறவும் மடிகளை மறைத்து உறுமத்தொடங்கின கறவைமாடுகள்.. மேச்சல்நிலம் கொண்ட மாடுகளின் ஏவறைகளுக்கும் ஓய்வுநேர அசைபோடலுக்கும் அர்த்தமாயிரம் க…
-
- 5 replies
- 910 views
-
-
அரியாத்தை திருமண்ணே! அனல் எடுத்து மூசு. சத்திய வேள்வி சாய்ந்ததாய்ச் சரிதம் இல்லை. சந்தனக் காடுகள் வாசத்தைத் தொலைத்ததில்லை. நித்திலச் சூரியனை இருள் மூடித் தின்றதில்லை. நிலம் பிடித்த பகையும் நீடிக்கப் போவதில்லை. துருவப் பனிக்காட்டில் அனல்பற்றி எரிகிறது. உருகும் அகப்பாட்டில் ஊர்மூச்சு எழுகிறது. சூரியப் பெருந்தேவே! வீரியச் சுடர் ஏற்றிடுக. அரியாத்தைத் திருமண்ணே! அனல் எடுத்து மூசிடுக. வேட்டைக்கு வந்தோரை வினை அறுக்கும் வேளையிது. வீரத்தின் பாட்டெழுத விழித்திருக்கும் நேரமிது. ஏழ்புரவி பூட்டிய எழுபரிதித் திருவே! எழுந்திடுக பூலோகம் ஒரு கணம் அதிரட்டும். செங்கொடியில் புலி ஏறிச் சிரித்திடுக. அழுகை ஒலி வ…
-
- 2 replies
- 1.4k views
-
-
நீ என்னைத் தேடி வருகிறாய் நான் நீயாக மாறி என்னைத் தேடுகிறேன் * நடைபயிலும் குழந்தையாய் வருகிறாய் தாயாய் என் கவனம் எல்லாம் உன் மேல் * நீ எங்கெல்லாம் என்னைத் தேடுகிறாய் என்பதை ரசிப்பதற்காகவே நான் தொலைந்து போகலாம் * நீ வந்தவுடன் கை கொடுப்பதா கன்னம் கொடுப்பதா என்ற குளப்பத்தை சாதுரியாமாய் தீர்த்து வைத்தாய் கைகூப்பி வணக்கம் சொல்லி * உன் தாவணிக்கு எப்போது என் தாயின் கைவிரல்கள் முளைத்தது தடவியதும் குழந்தையாய் உறங்கி விட்டேனே -யாழ்_அகத்தியன்
-
- 1 reply
- 964 views
-
-
கேட்டலும் படித்தாலும் அரைகுறை பார்த்தாலும் தெரிதலும் அரைகுறை விளக்கமும் தெளிவும் அரைகுறை கன்னியும் கவர்ச்சியும் அரைகுறை படமும் பாட்டும் அரைகுறை பேச்சும் செயலும் அரைகுறை வெட்டியும் பந்தாவும் அரைகுறை வரலாறும் வாழ்கையும் அரைகுறை நம்ம வாழ்க்கையும் அரைகுறை மற்றவன் செயலை விமர்சனம் அரைகுறை என்னை நான் தேடினேன் அரைகுறை நான் முழுமை பெறும் நாள் எப்போ அப்போ நான் மனிதன் ஆகிறேன் .
-
- 7 replies
- 806 views
-
-
அரோகரா அரோகரா நல்லூர்க் கந்தனுக்கு அரோகரா வண்ணமயில் ஏறிவரும் வடிவேலனுக்கு அரோகரா முருகா! என்னப்பா இது? இனம் மொழி தாண்டி உன்ர வாசலிலை நிறையுது பக்தர்கள் வெள்ளம் கடையில விக்கிற பிள்ளையார் சிலையில மேடின் சைனா இருக்கு கடைக்குட்டிக்கு வாங்கிற அம்மம்மா குழலை வடக்கத்தையான் விற்கிறான் ஐப்பான் காரன் வந்து “சோ” றூம் போடுறான் பாகிஸ்தான் காரன் வந்து பாய் வி(ரி)க்கிறான் கண்ணுக்கு தெரியிற இடமெல்லாம் துரோகிகள் கூட்டம் கண்கட்டி வித்தை காட்டுது சிங்கள தேசம் வெள்ளை வேட்டி கட்டி சுது மாத்தையாக்கள் வெறும் மேலோட களு பண்டாக்கள் போதாக்குறைக்கு விமானச் சீட்டுக்கு விலைக்குறைப்பு ஊ…
-
- 3 replies
- 999 views
-
-
அரோகரா! அரோகரா! அரோகரா அரோகரா நல்லூர்க் கந்தனுக்கு அரோகரா வண்ணமயில் ஏறிவரும் வடிவேலனுக்கு அரோகரா முருகா! என்னப்பா இது? இனம் மொழி தாண்டி உன்ர வாசலிலை நிறையுது பக்தர்கள் வெள்ளம் கடையில விக்கிற பிள்ளையார் சிலையில மேடின் சைனா இருக்கு கடைக்குட்டிக்கு வாங்கிற அம்மம்மா குழலை வடக்கத்தையான் விற்கிறான் ஐப்பான் காரன் வந்து “சோ” றூம் போடுறான் பாகிஸ்தான் காரன் வந்து பாய் வி(ரி)க்கிறான் கண்ணுக்கு தெரியிற இடமெல்லாம் துரோகிகள் கூட்டம் கண்கட்டி வித்தை காட்டுது சிங்கள தேசம் வெள்ளை வேட்டி கட்டி சுது மாத்தையாக்கள் வெறும் மேலோட களு பண்டாக்கள் போதாக்குறைக்கு விமானச் சீட்டுக்கு…
-
- 8 replies
- 2.6k views
-
-
அர்த்தமற்ற விடியலிற்காய்..... மித்திரன் ----------------------------------------- தூரத்து விடியலுக்கய் இன்னமும் நாம் பயணித்துக்கொண்டிருக்கின்றோம் பாதையற்று... குந்தியிருக்க குடிநிலமின்றி கூப்பாடுபோடும் மந்தைக்கூட்டமாய் தொலைந்துபோனதாக நாம் நினைத்த நிம்மதியும் நிலவொளியும்..... கட்டிய கோவணமும் உருவ உனக்கு நாள் குறித்த பின்னர் எதற்கு அலங்காரமும் அபிசேகமும்... விதைநிலங்கள் எங்கும் விஷங்களின் விதைகள் இனி உனக்கெதற்கு விளைநிலங்கள்? உறவிழந்தபோதும் உன் விண்ணப்பங்கள் விடையறியாமலே விழுதொடிந்து போகிறது..... எனினும் உன்னுள் உறங்கிக் கிடக்கிறது விடுதலையின் வினாத்துளி..... தினம்தினமாய் நீ …
-
- 3 replies
- 886 views
-
-
அர்த்தமுள்ள காதல்....... பெண்ணே.......... நீ... என் இதயத்தில் இல்லாமல் போயிருந்தால் உறக்கம் என் உயிரை உருவிக்கொண்டு போயிருக்கும்...... நீ....என் உணர்வில் உதிக்காது போயிருந்தால் காற்று என் உடலை கரைத்துக் கொண்டு போயிருக்கும்.... நீ.... என்னோடு வாழாமல் போனால் நான் வாழ்வதில் அர்த்தமே யாருக்கும் தெரியாமல் போய் விடும்........ >>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்<<<<<
-
- 2 replies
- 1.3k views
-
-
எல்லாம் என்பதன் அர்த்தம் புரியாதவரை எல்லாம் இங்கே புதுமையாகத்தான் இருக்கிறது. வாரி வழங்கிய கைகள் இன்று வாட்டம் கண்டன. ஏறு தழுவிய மார்புகள் எல்லாம் சோர்வு கொண்டன. ஏர் பூட்டி உழுதிருந்த நெல் வயல்கள் வான் பார்த்துக் காத்திருக்க வாழாவிருப்பதுவே வாழ்க்கையானது. வசந்தத்தை எதிர்பார்த்து காத்திருந்த வேளையிலே வறட்சி மட்டுமே மீதமானது... பட்டினி கிடந்து பழக்கப் பட்டதால் பசி கூடவே எம்மில் ஒட்டிக் கொண்டது நிரந்தரமாக... எதிர்பார்ப்புக்கள் எல்லாம் ஏமாற்றங்களாகி இன்னும் வாழ்தல் வேண்டி தொடர்கிறது சீவியம்.
-
- 6 replies
- 1.2k views
-
-
அறம் -வ.ஐ.ச.ஜெயபாலன் கண்ணகி உயர்த்திய ஒற்றைச் சிலம்புக்கே மதுரையோடு மன்னனும் அழிந்தான். முள்ளிவாய்க்கால் ஊழியின்போது குருதி சிந்தச் சிந்த உயர்ந்த ஆயிரம் ஆயிரம் ஒற்றைச் சிலம்பால் கொடுங்கோல் மன்னனின் தோழ தோழியர்கள் முடியிழந்தின்று தெருவினில் அலைகிறார்.. சிலம்பே சிலம்பே ஒற்றைச் சிலம்பே இசைப்பிரியாவும் தோழ தோழியரும் உயர்த்திப் பிடித்தத தர்மச் சக்கரமே கடலில் வீழ்ந்த தமிழக மீனவன் கைகளில் உயரும் ஒற்றைச் சிலம்பே தமிழன் குருதியைச் செங்கம்பளமாய் இன்னும் எத்தனை நாட்கள் விரிப்பரோ தர்மம் நசியக் கொடுங்கோல் விருந்து இன்னும் எத்தனை நாட்க்கள் வருவரோ
-
- 6 replies
- 1.3k views
-
-
நெல்லும் உயிரல்ல நீரும் உயிரல்ல முல்லை நிலத்தில் அலைந்து உழன்றவரை கொல்லும் எறிகணைகள் கூட்டாக வீசியவன் மன்னாதி மன்னனென மார்தட்டிக் கொள்கின்றான் எண்ணிக்கை யாருக்கு வேண்டும்? மொழியால் அமைந்த நிலம் எனச் சங்கத் தமிழோடும் செம்மொழியின் வனப்போடும் புதைகுழிக்குள் போனவர்கள் நாங்களன்றோ? குழந்தைகளின் மென்கரத்தை அரிந்து நெருப்பில் எறிந்தவனுக்குத் தாம்பூலம் தந்து தாலாட்டுப் பாடி கால்கள் வருடி தலைமயிருக்கு நிறம் தீட்டி அவன் பேழ் வயிறை வழிபட்ட அப்பாலும் அடிசார்ந்தார் இப்பாலும் இருப்போர்கள் முப்பத்து முக்கோடி படையினர்கள் எல்லோரும் பட்டழிவதன்றி வேறென்ன கேட்கும் என் கவிதை? நன்றி : சேரனின் கவிதைகள் http://www.kala…
-
- 0 replies
- 572 views
-
-
நெல்லும் உயிரல்ல நீரும் உயிரல்ல முல்லை நிலத்தில் அலைந்து உழன்றவரை கொல்லும் எறிகணைகள் கூட்டாக வீசியவன் மன்னாதி மன்னனென மார்தட்டிக் கொள்கின்றான் எண்ணிக்கை யாருக்கு வேண்டும்? மொழியால் அமைந்த நிலம் எனச் சங்கத் தமிழோடும் செம்மொழியின் வனப்போடும் புதைகுழிக்குள் போனவர்கள் நாங்களன்றோ? குழந்தைகளின் மென்கரத்தை அரிந்து நெருப்பில் எறிந்தவனுக்குத் தாம்பூலம் தந்து தாலாட்டுப் பாடி கால்கள் வருடி தலைமயிருக்கு நிறம் தீட்டி அவன் பேழ் வயிறை வழிபட்ட அப்பாலும் அடிசார்ந்தார் இப்பாலும் இருப்போர்கள் முப்பத்து முக்கோடி படையினர்கள் எல்லோரும் பட்டழிவதன்றி வேறென்ன கேட்கும் என் கவிதை? படித்துப்பிடித்தது . ஈழத்துக் கவிஞர் சேரன்.
-
- 6 replies
- 758 views
-
-
அறிமுகமாகாமல் நான் ஆமீ அட்டித்த குண்டில் அம்மாவின் கருவறையோடு நானும் அஷ்தியானவன் அம்மாவின் கல்லறைக்குள் அறிமுகமாகாமல் நான்
-
- 0 replies
- 774 views
-
-
ஓடுகின்ற கால்கள் ஓய்வெடுக்கும் போது நான் எடுத்துக்கொண்ட பயணம் முடிந்திருக்க வேண்டும்! வாழ்ந்த நாட்களை திரும்பிப் பார்க்கும் போது என் பெயரை சிலர் உச்சரிக்க வேண்டும்! கோபுரங்களின் அழகை அத்திவாரங்கள் தாங்குவது போல் நான் பிறந்ததின் பயனை ஊரறியச் செய்வேன்
-
- 20 replies
- 1.7k views
-
-
கடவுளுக்கு...! மூடிக் கிடக்கின்ற சொர்க்கத்தின் கதவுகளைத் திறந்து விட்டால்..., மண்ணின் குரலுமக்குத் கேட்கக் கூடும்! கீழிறங்கி, புழுதி மண்ணின்மேல் நடந்து வந்தால், மானிடத்தின்-- எழுச்சிகளை வீழ்ச்சிகளை முற்று முழுதாக நீரறிதல் கூடும். --கூட, நீர்...வருவீரா? 26.7.68 வா எாிகின்ற-- குறுமெழுகு வாிசை ஒளி நிழலில், ஒப்பாாிக் குரல் கேட்டு இந்தப் *பெட்டிக்குள் நீயேன் கிடக்கின்றாய்? முகம் மூடும், துப்பட்டி நீக்கி-- எழுந்துவிடு!; என்கூட வந்துவிடு! *பெட்டி--சவப்பெட்டி 2.8.68 உறக்கம் சிலுவை எழுந்துநிற்கும் வெள்ளைக் கல்லறைகள் சூழ்ந்திருக்க, கால்மாட்டில் பட்டிப் பூமலர்ந்த *சிப்பிச் சிலுவை மேட்டின் கீழ்-- மண் கு…
-
- 3 replies
- 1.6k views
-
-
வெட்டி கதை பேசி வெண்ணிலா ஒளியில் என் வீட்டு முற்றத்தில் அக்கம் பக்கம் உள்ளவர் எல்லாம் சேர்ந்து இருந்து பக்கத்துவீட்டு நிலவும் நானும் ஓரமாய் விடுப்பு கேட்டு தெரித்த சினிமா தெரியாத அரசியல் போன கோயில் என வண்ண வண்ண கலர் பூசி கதை பேசி இருந்த காலம் விஜயகந்தும் அர்ஜுனும் இந்தியாவை காப்பது போல் எமக்கு ஒரு ராம்போ இருந்தா நாடு விரைவா கிடைக்கும் என எமக்குள் ஓடும் என்ன ஓட்டம் தலைகால் புரியா சந்தோஷம் பக்கத்து வீட்டு பெடியள் எல்லாம் நல்லவங்கள் இல்லை நிலா நானே உனக்கு எல்லாம் செய்யும் யோக்கியன் என பொய்பேசி அறியாத வயது அதில் ஆயிரம் கதைசொல்லி மனதுக்குள் பூரித்து நமக்குள் ஒரு உலகம் ஏற்படுத்தி வண்ணத்து பூச்சி போல இறக்கை விரித்து திரிந்த காலம் அது வெட்டை வெளியும் பூவரசம் மரநிழ…
-
- 8 replies
- 1.1k views
-
-
-
- 14 replies
- 2.1k views
-
-
ஒற்றைப் புத்தகம் வைச்ச இடம் மறந்தாலேஉள்ளம் பதை பதைக்கும்எங்கள் ஊரின் மொத்தப் புத்தகமும்அங்கைதான் குவிச்சுக் கிடந்ததாம்ஓலைச்சுவடி முதல்ஊர்களின் வரலாறும் தொன்மையும்சொல்லும் அத்தனை நூலும்...குறிப்பா இலங்கைத் தீவே தமிழன்ரைஎண்டதை பொழிப்பாச் சொல்லுற ஆவணமெல்லாம்தென்னாசியாவிலை பெரிய நூலகம்இதுவெண்டு எல்லாரும்புழுகமாச் சொல்லிச் சொல்லிசெருக்குப் படுறவையாம்கல்வி அறிவிலை உலக அறிவிலைதமிழன் கொடி கட்டிப் பறக்கஇதுதான் காரணமெண்டதைஎல்லாரும் அறிஞ்சதாலைஎப்பவும் அதுக்கு தனி மவுசுதானாம்கல்வி அறிவைச் சிதைச்சால்கண்டபடி தமிழனாலை வளரேலாதுஎண்டு கற்பனை கட்டின சிங்களம்இரவோடு இரவா வந்து உயிரோடைகொள்ளி வைச்சுப் போனதாம்அப்பிடிச் செய்து அரிய பொக்கிசத்தைஅழிச்சு ஒழிச்சாலும் தமிழன்ரைஅறிவுத் தேடலை அழிக்க முடி…
-
- 1 reply
- 1.1k views
-
-
அறிவுமதி அண்ணனின் க(அ)ண்ணன் பாட்டு ------------------------------------------------------------------------------------------------ என்ன குறையோ என்ன நிறையோ எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்! என்ன தவறோ என்ன சரியோ எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்! என்ன வினையோ என்ன விடையோ அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்! அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்! நன்றும் வரலாம் தீதும் வரலாம் நண்பன் போலே கண்ணன் வருவான்! வலியும் வரலாம் வாட்டம் வரலாம் வருடும் விரலாய் கண்ணன் வருவான்! நேர்க்கோடு வட்டம் ஆகலாம் நிழல்கூட விட்டுப் போகலாம்! தாளாத துன்பம் நேர்கையில் தாயாக கண்ணன் மாறுவான்! அவன் வருவான் …
-
- 2 replies
- 1.5k views
-
-
-
-
- 7 replies
- 3.4k views
-
-
ஆயிரம் கனவுகளுடனும் விழிமூடா தூக்கத்துடனும் உன்னோடு தினமும் வாழவிடும் இரவுகளும், அற்புத சுகமடி அர்த்த ஜாமத்தில் உன்னருகில் வந்து முத்தமிடும் சத்தங்களும், கட்டி அணைத்தபடியே யுத்தம் கொள்ளும் ஈருடலும் ஒவ்வோர் நாழிகையாய் வேரூன்றி கொள்வதுவாய், காலை எழுந்தவுடன் கண்ணை கசக்கிகொண்டும் உன்னை நினைத்துக்கொண்டும் மீண்டும் அந்த இரவுகளை தேடி..
-
- 11 replies
- 1.2k views
-