கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
இரண்டுக்கும் ஐந்துக்கும் நடுவில், என் இடதுகை இரண்டு விரல்களை... பாலர் பள்ளி செல்லும்வரை... சூப்பிக்கொண்டிருந்த காலமது! எல்லோருக்கும் செல்லமாய்... துள்ளித்திரிந்த காலமது! பசி என்பதே வருவதில்லை... கள்ளத் தீனிகளில் பசியாறியதில், அம்மா அன்போடு ஊட்டிவிடும் உணவுகூட அதிகமாகவே தெரியும்! முழுநேர வேலையென்பது ... நாள்முழுதும், விளையாடிக் களைத்த பின்... விரல் சூப்பியபடியே தூங்கிவிடுவதுதான்! என் கனவுகளில் தேவதைகள் வந்து... பறக்கும் விளையாட்டு விமானங்களை... பரிசளித்துச் சென்றார்கள்! எதைப்பற்றியும் எனக்குக் கவலையில்லை! எதிர்பார்ப்புக்களின் உச்சக் கட்டங்கள்... நான் ஆசைப்பட்ட விளையாட்டுப் பொருட்கள்தான்! மூக்கு வழிய அழுது வடித்தால்... என்ன வ…
-
- 16 replies
- 1.9k views
-
-
விரல்கள் .. வேண்டும் எண்ணங்களின் வலி என்னை எழுத வைக்கிறது நண்பர்களே .. எழுதுகோல் என் கையில்; ! எழுது .. எழுது என்ற ஏக்கமேயன்றி எதுகை மோனை. பாடுபொருள்….. பக்குவம் எல்லாம் தொலைந்து விட்டது .. நான் பிறந்த நாடு எனக்கில்லை .. என்றார் ! நான் பிறந்த மண்ணை தமதென்றும் சொன்னார் ! தட்டிக் கேட்ட தமிழரை யெல்லாம் சுட்டுக் கொன்றார் .. விடுபட்டுப் போன சிலரை பூசா முகாமில் பூட்டியே வைத்தார் .. தப்பியோடிய தமிழர்க்கு தந்ததே உலகம்.. அகதி எனும் நாமம் பல ஆயிரம் கண்கள் சிந்திய கண்ணீர் சில ஆயிரம் இதயத்தைக் கூட கரைக்கலையே ! பல ஆயிரம் உடல்கள் சிந்திய இரத்தம் சில ஆயிரம் உள்ள…
-
- 8 replies
- 1.4k views
-
-
சலனம் இன்றி மெதுவா பாயும் நீர் .. பாலைவனத்தையும் பசும் சோலையாக்கும் .. நீ என்னை கடந்து போகும் தருணம் அதுபோல் .. திரும்பி பார்க்கும் நேரத்தில் என் மனவெளி ... உன் நினைவில் பூத்து குலுங்குவது இவ்வாறே .. சோகங்கள் இழையோட கண்களில் நீர் நிரம்பி .. வழி எங்கும் என்னை பார்த்திருக்கும் நேரத்தை .. நீ சொல்ல வரமுன் உன் கண்கள் சொல்லிவிடும் .. காதலை நேசித்த வித்தை தெரிந்தவள் அதனால் .. என்னை உன் விழி வளையத்துள் வைத்து .. கண்காணிக்கும் உன் காதலை மட்டும் .. நான் காதலிக்கிறேன் காதலே .
-
- 4 replies
- 666 views
-
-
விட்டகுறை தொட்ட குறை..... நாடும் சொந்தமாயில்லை.. நாமும் நாமாயில்லை....... எங்கோ பிறந்தோம் எங்கோ வாழ்கிறோம்...... உடையாதா மனசு? ஈசல் இறப்பிற்கும் எல்லை .... இருக்குமாம் சொல்வார்........ ஈழத்தமிழன் எமக்கு??? நாடிழந்த பறவைக்கெலாம்.... ஒரு கூடு தந்தீர். சுய நலத்தில் ... பொது நலம் காணுமாம் உலகம்... மாறாய் உம் பொது நலத்தில்... நாம் சுய நலம் கொண்டோம்! எம் முகத்தை நாமறிய... எம் அறிவை நாம் அறிய...! விழுதுவிட்ட ஆலமரமே... குடை தந்தாய் ....! பழங்களை தின்றுவிட்டு ... எச்சம் போட்டாலும்... தாயென தாங்கி நிற்பாய்.... ஆதலால்.......... உம் உடலில்... ஓடி மகிழும் ஒரு அணிலாய்... என்றும் வாழ...... விரும்புகிறே…
-
- 3 replies
- 1.4k views
-
-
பயம்-பசி-படிப்பில்லை... கதறியழும் கந்தளாய் தமிழர் விரைவாய் வரவேண்டும் விடியலொன்று. எத்தனை எத்தனை இரவுகள். அத்தனைக்கும் விடியல்கள். எங்களின் இந்த இருளுக்கு எப்போதுண்டு விடியல்தான். சொந்தமான நிலத்தினிடை துச்சர்களால் அல்லற்படும் பந்தங்கள் துயர் தீர்ந்திடவே விரைவாய் வேண்டும் விடியலொன்று. பயமேயறியாப் பிஞசுகளை பாடாய்ப் படுத்தும் நரிக் கூட்டம். பரிதவிக்கும் மக்களையே பகடைக்காய் போல் பாவிக்கும். பஞ்சங் காணாப் பூமியிலே பசியால் வாடித் துவழ்கின்ற பந்தங்கள் துயர் தீர்ந்திடவே விரைவாய் வேண்டும் விடியலொன்று. அசுரர் ஆளும் நாட்டினிலே ஆட்சி என்றும் கொடுங்கோல்தான். பகரச் சொற்கள் வேறுண்டா? பாவிகளின்…
-
- 2 replies
- 1k views
-
-
காதல் இல்லாமல் வாழ முடியவில்லை காதலோடு வாழவும் தெரியவில்லை விரைவில் மரணத்தை கொடு இறைவா, அவளை அதிகம் கேள்வி கேட்கின்றேன் அவள் மீது அப்படி ஒரு பிரியம் - ஆனால் எனது போக்கு அவளுக்கு கசப்பாய் இருக்கின்றது, அது தெரிந்தும் என்னை மாற்றிக்க முடியவில்லை மாறாவிட்டால் அவள் எப்படி இன்பமாய் இருப்பாள் அவள் சந்தோசம் தான் எனக்கு வேண்டும், எனக்கு அவளை விட யாரும் இல்லை அவள் இருந்தும் அநாதை போல் உணர்கின்றேன் நான் மண்ணோடு மண்ணாக வேண்டும், அப்போது தான் அவள் பூமியில் பெண்ணாவாள் இப்போது என் உயிராக அவள் இருப்பதால் அந்த பெண் உணர்வுகள் அடங்கிவிட்டன, முடக்கப்பட்ட அவள் உணர்வுகள் விரைவில் தெளிவு பெற வேண்டுகிறேன் ஆனால் அதை தாங்கும் சக்தி எனக்கில்லை, அந்த பெண் பெண்ணாக வேண்டும் அ…
-
- 9 replies
- 1.2k views
-
-
விறைத்த குறிகளில் மதப்பாசிசம்! ரூபன் சிவராஜா கருவறை முடி பிஞ்சுடலின் தசை திறந்து சிதைத்திருக்கிறது பாசிசப் பூமி புத்திரரின் காமவெறி ஆசிஃபா நேற்றுவரை அவள் நாடோடிகளின் செல்ல மகள் குதூகலித்து குதிரை மேய்த்துத் திரிந்தவள் காடு மலை மேடுகளில் சுதந்திரமாய் காற்றோடு நடந்தவள் இன்று அவள் என் மகள் இனி அவள் உலகக் குழந்தை எப்படித் துடித்திருப்பாள் ஐயோ மிருகங்கள்கூட அவளை இப்படிக் குதறியிருக்காது நேற்று நர்பயா இன்று ஆசிஃபா விறைத்த குறிகளில் மதப்பாசிசத்தைக் காவித்திரிகிறது காவிக்கூட்டம் காமவெறியும் பெண்ணுடலைக் கிழிக்கிறது இனவெறியும் ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
பட்டு தெளியாத பாதையில் .. பாடையை கட்டிவைத்து .. இதில் வந்து படுங்கள் என்று .. நான் மட்டும் கூவி அழைக்கையில் .. தெட்ட தெளிவா தெரிந்த பின்னும் .. சீவன் போன ஜீவன் கூட வராது .. ஆவிகளை மீண்டும் போருக்கு அழைக்கும் .. ஆற்றல் மிகு விசுவாசங்கள் ஒருநாளும் .. போரறியாது அதன் வலி அறியாது .. காவி காவி சென்று மாறி மாறி .. புற்றுகள் மேல் கொட்டில் போடும் .. தவளைகள் நிலையறியாது .. பாம்புகளிடம் இருந்து உமக்கு விடுதலை .. வாங்கலாம் அதுவரை அதிலே படும் .. உறக்கம் இன்றி அவர்கள் விழித்திருக்க .. நாம் உண்டுவிட்டு ஏப்பம் விடும் சத்தம் .. பாம்புகள் சீறும் சத்தமாவே காதுகளில் கேட்கும் .. ஒவ்வெரு நாளும் மேட்டில் இருந்து .. நொந்து சாவதை விட தண்ணியில் .. ஊறி திளைக்கலாம் என்று நினைக்கிற…
-
- 1 reply
- 558 views
-
-
விலகி விலகிப் போனாலும்...... அழகாய் இருக்கிறாய் ... பயமாய் இருக்கிறது!! காதல் இது தானா? விலகி விலகிப் போனாலும்...... மனசுக்கு பிடிததால் சந்தோசம் என்கிற தீபம் திறந்து விழிகள் இருண்டும் வியக்கிறது... ஆனால்.... இன்னும் ஒரு பயம்.. ஒரு வார்த்தை போதுமே சொல்லிவிட்டு தொடர்ந்து........., கடந்துப் போனது ....தடம்!! மனதுக்குள் மறைந்திருக்கிறதோ என் காதல்? இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது
-
- 2 replies
- 1.3k views
-
-
பத்தினிகளும் பதிவிரதைகளும் புராணங்களில்... பால பாடங்களில்... பக்கம் பக்கமாய் படித்த மண்ணில் படி தாண்டிய பத்தினிகளும் மாதவிகளும் பெருகி விட்ட நிலை..! மாங்கல்யம் இன்றி மண மேடையின்றி கன்னிகள் வாழ்வு...! விலாசமின்றிய விந்துகளின் சேமிப்பிடங்களாய் அவர் தம் தேகம் இன்று..! சராசரி பாலியல் அறிவு கூடவா இல்லை... ஆண்டு ஒன்பதில் கற்றது கூடவா நினைவில் இல்லை.... தனி மனித ஒழுக்கம் என்ன பல்கலைக்கழகப் பாடமா வாத்தியார் கற்றுத்தர..?! முளைக்க முதல் பொத்திப் பிடிக்கும் கூட்டம் இன்று சந்தி தோறும் முந்தி விரித்துக் கிடக்கிறது.. ஏனிந்த அவலம்..???! பெண்கள்... புலிகளாய் வாழ்ந்த மண்ணில் வீரம் விதைத்து வீழ்ந்த இடத்தில் …
-
- 19 replies
- 2.2k views
-
-
விலைமாது விடுத்த கோரிக்கை..! ராமன் வேசமிட்டிருக்கும் பல ராட்சசனுக்கு என்னை தெரியும். பெண் விடுதலைக்காக போராடும் பெரிய மனிதர்கள் கூட தன் விருந்தினர் பங்களா விலாசத்தை தந்ததுண்டு. என்னிடம் கடன் சொல்லிப் போன கந்து வட்டிக்காரகளும் உண்டு. சாதி சாதி என சாகும் எவரும் என்னிடம் சாதி பார்ப்பதில்லை. திருந்தி வாழ நான் நினைத்த போதும் என்னை தீண்டியவர்கள் யாரும் திரும்ப விட்டதில்லை. பத்திரிக்கையாளர்களே! விபச்சாரிகள் கைது என்றுதானே விற்பனையாகிறது.. விலங்கிடப்பட்ட ஆண்களின் விபரம் வெளியிடாது ஏன்...? பெண்களின் புனிதத்தை விட ஆண்களின் புனிதம் அவ்வளவு பெரிதா? காயிந்த வயிற்றுக்கு காட்டில் இரை தேடும் குருவியைப் போல் …
-
- 0 replies
- 3.6k views
-
-
முகநூலில் அகப்பட்ட கவிதை கவிஞர் தமிழ்தாசன் எழுதியது......கவிதையைப்படித்து முடித்து நீண்ட நேரமாகியும் இன்னும் வெளிவராமல் அதிர்ந்து போய் நிற்க வைத்திருக்கும் எழுத்து..... யாழ்க்கருத்துக்கள நண்பர்களுடனும் இதனைப்பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலில் இங்கு பதிவிடுகிறேன். விலைமாது விடுத்த கோரிக்கை..! ராமன் வேசமிட்டிருக்கும் பல ராட்சசனுக்கு என்னை தெரியும். பெண் விடுதலைக்காக போராடும் பெரிய மனிதர்கள் கூட தன் விருந்தினர் பங்களா விலாசத்தை தந்ததுண்டு. என்னிடம் கடன் சொல்லிப் போன கந்து வட்டிக்காரகளும் உண்டு. சாதி சாதி என சாகும் எவரும் என்னிடம் சாதிப் பார்ப்பதில்லை. திருந்தி வாழ நான் நினைத்தபோதும் என்னை தீண்டியவர்கள் யாரும் திரும்பவிட்டதில்லை. பத்திரிக்கையாளர்கள…
-
- 16 replies
- 7.8k views
-
-
கருமங்கள் கை கூடாமல். சறுக்குகிற நேரமெல்லாம். சனியன் நினைவுக்கு வருகிறான்! ஆச்சியும், அப்புவும், அன்போடு சேர்த்து, ஊட்டி வளர்த்த நம்பிக்கைகள்! சனிபகவானுக்குச் சால்வையோடு, சந்தனமும் பூசியுள்ளார்கள்! பிரபலங்கள் எல்லாம், வரிசையில் நிற்கின்றன! எல்லோரும் படித்தவர்கள்! எனக்கும் பெருமையாக இருக்கிறது! முதல் முறையாக, அப்புவிலும் ஆச்சியிலும், அளவில்லாத மரியாதை, அணையுடைத்துப் பாய்கிறது! எண்ணைச் சட்டிகளும், பெரிதாகி இருந்தன! புலத்தில் பெரிய பிரச்சனைகள், பெரிய சட்டிகளும் தேவை தான்! வரிசை முடிவில், பெரியவர் சிரித்தார்! ஓய்வு பெற்றவராம்! முகத்தில் அமைதியின், முத்திரை தெரிந்தது! சனியன் விலகியதால், சாந்தமாகியது போலும்! …
-
- 13 replies
- 769 views
-
-
உன் மென் சிரிப்பால் மெய்மறந்து கண்கள் மயங்க.... உன் மென் ஸ்பரிசங்கள்... உணர்வுக்குள் ஊடுருவி உலுப்பி நிறுத்த... நாளங்களின் அதிர்வுகள் நாதங்களாக.... இன்ப சங்கீதமாக... என் உதிரத்தை உன் இதழ்களுக்கிடையே சுரக்க... உயிருக்குள் இன்பமாய் வலிக்க.. தமிழ் சினிமாவில் தந்தையே வில்லனாவது போல்.... நமக்கிடையேயும் ஒரு வில்லன்.... தட்டி உலுப்புகிறான் “ஏய் ஊட்டிக் கொண்டே உறங்கி விடாதே... பிள்ளைக்குப் புரைக்கேறும்..” அது உன் அப்பா... http://poonka.blogspot.co.uk/2009/11/blog-post_2903.html
-
- 11 replies
- 1.6k views
-
-
-
- 15 replies
- 5.4k views
-
-
விளக்கெரியும் பொழுது எப்பாடலுமற்று யாரும் வாய்திறக்கா நள்ளிரவுகளின் காலத்தில் இருண்ட தேசத்தில் சூரியனுக்காய் காத்திருக்க சிதை மண்ணிலிருந்து கற்கள் முளைக்க கைகளால் மூட முடியாத மழை இடியோடு பெய்கிறது. வீழும் பொழுது அழுது மீளும் பொழுது தொழுது கனவுகள் முட்டும் கல்லறைகள் பெருகிய தேசத்தில் தாய்மார்களின் அடி வயிறுகளில் கார்த்திகைப் பூக்கள் மலர்கின்றன. வீட்டு மூலையில் விளக்கெரியும் கார்த்திகை மாலைப் பொழுதில் விளக்குகளை தூக்கி வந்து மழையில் நீர் சொட்டும் தென்னங் கீற்றுக்களில் ஒளிரும் உங்கள் முகங்கள் கண்போம். மூட முடியா மழை கொல்ல முடியா மரங்களில் பெய்ய அழியா முகங்கள் மனங்களில் தெரியும் அணைக்க முடியா விளக்குகள் தேசத்தை நிரப்பியெரியும் அப்பொழுது. * * *…
-
- 0 replies
- 711 views
-
-
விளக்கெரியும் பொழுது எப்பாடலுமற்று யாரும் வாய்திறக்கா நள்ளிரவுகளின் காலத்தில் இருண்ட தேசத்தில் ... சூரியனுக்காய் காத்திருக்க சிதை மண்ணிலிருந்து கற்கள் முளைக்க கைகளால் மூட முடியாத மழை இடியோடு பெய்கிறது. வீழும் பொழுது அழுது மீளும் பொழுது தொழுது கனவுகள் முட்டும் கல்லறைகள் பெருகிய தேசத்தில் தாய்மார்களின் அடி வயிறுகளில் கார்த்திகைப் பூக்கள் மலர்கின்றன. வீட்டு மூலையில் விளக்கெரியும் கார்த்திகை மாலைப் பொழுதில் விளக்குகளை தூக்கி வந்து மழையில் நீர் சொட்டும் தென்னங் கீற்றுக்களில் ஒளிரும் உங்கள் முகங்கள் கண்போம். மூட முடியா மழை கொல்ல முடியா மரங்களில் பெய்ய அழியா முகங்கள் மனங்களில் தெரியும் அணைக்க முடியா விளக்குகள் தேசத்தை ந…
-
- 2 replies
- 573 views
-
-
மக்களின் தீர்ப்பை இனத்தின் விதியை ஒருசிலர் கையில் எடுத்து நாங்கள் சொல்வதை மட்டும் எழுத்து என முனிவர் கணக்கா கதை சொல்ல கொம்பு உடைத்து எழுதிய கணபதிகள் சிங்க கொடிபிடித்து விட நீ இன துரோகி சிங்களத்தின் அருவருடி மாமா வேலை என தலைமை செய்த தெரிவை நாங்களே மாற்றுவோம் என பொங்கினர் இங்கின பல தலைமை விளங்கவில்லை ... பலர் வெளிய போயினர் சிலர் உள்ளே வர இவர்கள் சரிவறார் கொள்கையை விடுகிறார் நாங்கள் தொடங்குவோம் புது கட்சி தேசியம் பேசினோம் தேசியத்தை தூக்கலா பேசினோம் எவரும் மதிக்கவில்லை காரணம் விளங்கவில்லை .. காலம் நெருங்கி வர ஈழம் விடை சொல்லும் நேரம் காத்திருந்த மக்கள் பழைய பாடம் மறவாது. மேல்குடி மகன் வடக்கு தெரியாதவர் இவர் வேணாம் புலம் பெயர்த்த புலிகள் என சொல்லிக்கொள்வோர…
-
- 7 replies
- 1k views
-
-
புறமுதுகிட்டு ஓடச் செய்தாய் பூரித்துப் போனேன். பொழுது புலர்ந்து விடும் – உன் புதுமை நிர்வாகம் உலகறியச் செய்யும். காத்திருந்த கணங்கள் அனைத்தும் தொடர்கதையாகி விடுகதையையும் சேர்த்து விட்டுச்சென்றுள்ளது? திசையெல்லாம் கூடிய ஆதரவில் திசை திரும்பாமலே பயணித்தாய். சேர, சோழ, பாண்டிய கதைகள் பழங்கதையாகி தேசமெங்கும் தேசியத் தலைவரானாய். நல்லவரா? கெட்டவரா? நாள்தோறும் முண்டியத்த நாக்குகளுக்கு மட்டுமே தெரிந்ததால் நகைப்பாய், நகைச்சுவையாய் நாள்தோறும் தலைப்புச் செய்தியானாய்? உன் ஓழுக்கம் குறித்து – இங்கு அக்கறையில்லை. ஊடக விற்பனையில் – நீ உரத்துச் சொன்ன அத்தனையும் உலகறியாது? உதிரம் கொடுத்து உள்ளே புதைந்தவர்கள் உறவை விடுத்…
-
- 5 replies
- 882 views
-
-
பாராட்டு பாராட்டு மத்திய அரசுக்கு பாராட்டு ஜல்லிக்கட்டை பரணி எங்கும் தொரியப்படுத்திய அரசுக்கு பாராட்டு விளையாட்டு விளையாட்டு விளையாட்டை மாறிப்போனதா எங்கள் ஜல்லிக்கட்டு திமிரை கொண்டு திமில் பிடிக்கும் தமிழரின் வீரம்டா காளைகளையும் அடக்குவேம் தடையையும் உடைப்போம் விளையாட்டை மாறிப்போனது உங்களுக்கு தமிழரின் வீரத்தை மீண்டும் பதிப்போம் ஜல்லிக்கட்டுக்கு நடக்கும் இதை யார் தடுக்கும் மு.க.ஷாபி அக்தர்
-
- 0 replies
- 758 views
-
-
விழவிழ எழுதிய வீரவணக்கம் என்னவானது ? விழவிழ நீங்கள் வீரவணக்கம் எழுதினோம் நாங்கள். அழஅழக் கவிதையும் ஆறாத்துயர் நிறையக் கண்ணீருமாய் கடைசிச் சொட்டு வீழ்ந்து காயும் வரையுமாய் நினைவள்ளி நினைவள்ளி நீண்ட தூரமெங்கும் நெருப்பு மூட்டினோம். இழந்தவை யாவையும் எழுகையும் நிமிர்வும் என்றெம் எழுத்துகள் யாவிலும் எழுதியே அழிந்தோம். பரணி பாடினோம் பாவினால் உங்களைப் பரவசப்படுத்தியும் பாடையின் முன்னின்று போர் முரசு கொட்டியும் சோடித்து மறைத்துச் சுதந்திரம் பாடினோம். ஈரம் சொட்டச் சொட்ட நீங்கள் சிந்திய குருதியில் எழுதினோம் ஏராளம் ஏராளம்…… கட்டாயங்களை மறைத்து அவை கட்டாயமென்று எழுதினோம்…. காதல் வாழ்வு குழந்தைகள் உறவு முழுவதும் காப்பரண் தேட…
-
- 70 replies
- 9.3k views
-
-
சொல்லத் தெரியவில்லை சுடர் போல எரிகிறது மனம் விம்மி வெடித்து நேற்றைய வானம் போல் பொழிந்து தள்ளிட விழிகள் இரண்டும் முட்டிக் கிடக்கின்றன அழுவதற்கான நாள் இது அல்ல எழுவதற்கான நாள் இது என்று உள்மனம் உறுதியாய் சொன்னாலும் விழி உடைத்து விழி நீர் சொரிகிறது... #ஈழத்துப்பித்தன் #மே18 2016
-
- 3 replies
- 2.9k views
-
-
படுக்கையில் கிடந்தபடி பாதை கேட்காதே எழு….. உடல் முறித்து, பத்தடி நட. பாதை தெரியும். குப்புறக் கிடந்தால் சுவாசமே சுமைதான். திரும்பிப் பார். விடுதலைக்காக கடந்த தணற்காடுகளும், சதுப்பு நிலங்களும் பார்வையில் புலப்படும். தணற்காடுகளில் தீய்ந்தபோது நெஞ்சம் வேகியது சதுப்பு நிலங்களில் புதைந்தபோது சலனம் ஆடியது. மீள எழவில்லையா? களத்திலேயே மீண்டெழுந்த உனக்கு புலத்திலேன் தடுமாற்றம்? போராட்டக்களம் மாறியிருக்கிறது. இப்போது சூறாவளி அவ்வளவே. ஒட்டுமொத்த இன அழிப்பை உலகம் கணக்கெடுக்கிறது. துயர் கொல்லுதென்று நீ முடங்கிவிட்டால் இழப்புகள் கூட மௌனித்துப் போகும். அழுவதாகிலும்... அம்பலத்தில் நின்று அழு. இது உனக்கு மட்…
-
- 0 replies
- 759 views
-
-
காதலை தருவாய் .... என்றால் எத்தனை .... வலிகளையும் .... தந்து விடு .... இழவுகாத்த கிளி .... ஆக்கிவிடாதே ....!!! & விழிகளால் வலிதந்தாய் காதல் சோகக்கவிதை கவிப்புயல் இனியவன்
-
- 1 reply
- 1.1k views
-
-
விழிகளின் பயணம் அவள் விழிகளில் விம்பம் ஒளிக்க விரைந்தது - அவன் விழிகள் கண்டதும் கண்களில்- சிறைசெய்து கொண்டால்- வென்றான் சுகந்திரம்- உயிர் குடுத்து வெல்லா போர். 2விழிகளின் பசி அவள் விழிகள் பட- இவன் விழிகள் விரைந்தோடும்-தெரு பரந்து கிடக்கும்-காடு ஒழிந்திருக்கும்-பொந்து சென்றெட்டா-கடல் கண்டதும் காதல்- பிறந்த்தது கவிதையும் மீண்டும் ஓர் கவிதை எழுத்துபிழைகளுடன். முயற்ச்சி செய்தேன் வந்த்தது தமிழில்.இப்படிக்கு ஜரோப்பிய தமிழ் மகண். திருத்தங்களும் திட்டுதல்களும் தேவைப்படுக்கிறாது. தயவுசெய்து கொடுத்துதவுங்கள்.எழுத்து பிழைகளைல் திருத்த. நன்றி
-
- 2 replies
- 1.2k views
-