கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
வெறுமையாய் தனிமைக்குள் சுழல்கின்ற பயணம் அமைதிக்குள் தொலைந்துவிட நினைக்கின்ற மனம் இவைகளை இயல்பாய் இணைக்கின்ற கோடாய் நின் புன்னகையின் சாயல் நினைவுகளில்-அன்னையே வாழ்க்கைப் பாதையில் வலிமிகும் பொழுதுகளில் ஏக்கங்கள் எழுந்து எரிக்கின்ற வேளைகளில் உணர்வுகள் உடைந்து உயிர்சுடும் கணங்களில் தாங்க முடியாமல் தவிக்கும் தருணங்களில் உணர்வற்ற ஜடமாய் வார்த்தைகள் வடிந்து வலியோடு வருமொரு முனகல் ’அம்ம்ம்மா’ மெல்ல வலிகுறைந்து கண்ணில் நீர் நிறைந்து ஏக்கப் பெருமூச்சொன்று எழுந்து அடங்கிவிட மீண்டும் முன்புபோல் முட்டி மோ…
-
- 6 replies
- 1.3k views
-
-
தலையின் மேல் தொங்கும் தூக்குக் கயிற்றின் கீழிருக்கும் துயரம் அவன்….. பெயருக்குள் பேரறிவைத் தாங்கிய தமிழின உணர்வின் ஊற்று அவன்…. சாவின் நிணம் அவன் நாசிக்குள் முட்டிக் கிடக்க சாவுமின்றி வாழ்வுமின்றி சந்தேகத்தின் பெயரால் இன்னும் செத்துக் கொண்டிருக்கிறான்….. வசந்தம் துளிர்த்த வயதில் வாழும் ஆசைகளுடன் போனவன் மரணம் கொல் இருளில் மன உழைச்சலும் மனப்பாரமிறக்க முடியா வலிகளுடன் பாழும் உயிரும் பாரமாய் பழியுடன் நீதி செத்துக் கிடக்கிற காந்திய மண்ணில் இன்னும் நீதிக்காய் காத்திருக்கும் ஏழை…… 19வருடச் சிலுவையின் பாரம் குருதியழுத்த நோயாளியாய் வாழ்வின் காலங்கள் நோயின் கோரங்களோடு கழிய காற்றணைத்த ஒளியில் கருகிக் கொண்டிருக்கிற திரிய…
-
- 13 replies
- 1.9k views
-
-
அற்றைத் திங்களும் அவ் வெண்நிலவும் வ.ஐ.ச.ஜெயபாலன் இன்பம் துய்ததுடன் முடிந்து விடுகிறதா எல்லாம். பிடித்த புத்தகத்தில் இரசித்த பக்கமென தட்டிச் செல்ல முடியவில்லையடி. முட்டைகள் மீது பின்காலால் மணல்மூடி திரும்பியும் பாராத ஆமைப் பெண்ணாய்ச் சென்றாய். மாயை போலாயிற்று எல்லாம். இன்பம் இருவரும் நாடியதுதான். நட்பு நான் மட்டுமே தேடியதோ ? முதற் கண் பொழுதில் முதுகு சில்லிட ஒரு கணம் தரித்தாய். உன் இதயத்துள் இருந்து அடி வயிறு அதிர இறங்கிய இன்பச் சூனியம் மறைக்க சினந்து முகம் திருப்பினாய். நானும் கள்வன் என்பதறியாது. அடுத்த நாள் ஆயிரம் ஒத்திகையோடு வந்து மணி கேட்டேனே. ஏழனம் தெறித்தது உன் பார்வையில் …
-
- 21 replies
- 4k views
-
-
என்ன இப்படி குளிர்கிறது .. உச்சி முதல் பாதம் வரை .. சில மணித்துளி கழிந்து .. அனல் வெட்க்கை உடலை தின்னுது .. ஓ ..நான் இறந்து விட்டேனா .. அரப்பு வைத்து தலைமுழுகி .. பின்தான் எரித்தார்கள் போலும் .. ஒருவேளை என் சாம்மல் ஆவது .. தூன்மையா இருக்கட்டும் என்றா .. மரணம் கூட சுத்தபத்தம் பார்க்கும் ஆ.
-
- 0 replies
- 609 views
-
-
தேசக்காற்றே அனல் வீசியதேன் - எம் தேவனையும் நீ பறித்ததேன் தேசத்தின் குரல் ஓயந்து நாம் திகைத்து நின்றோம் - இன்று தேசியகீதமே அழிந்ததம்மா ! அலையொன்று அடித்தோய்ந்ததம்மா அந்த ஆண்டவனும் எம்மை மறந்தானம்மா தமிழின் செல்வனை பறித்தானம்மா எம் தாயக வேள்வியை அணைத்தானம்மா
-
- 0 replies
- 1.5k views
-
-
பின் மண்டையில் சுடுபட்டு... நான் வீழ்ந்தபோது, என் மூளைநரம்புகளின் அதிர்வுகளை... நீங்கள் புரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான்!!! வெறும் செய்தியாகத்தான்.... அதுவும் உங்களுக்கு இருந்திருக்கலாம்!!! சாகப் போகின்றோம்.... எனும்போது, "கடைசி ஆசை" என்றொன்று..... எனக்கும் இருந்தது! இயலாமையுடன் எதிர்ப்பட்ட எண்ணங்களில்... யாரேனும் எம்மை காப்பாற்ற வரமாட்டார்களா? எனக் கூட, எண்ணத் தோன்றவில்லை! அனாதையாகி நிற்கும் தாய்மண்ணில்.... நாங்களும் நாதியற்றுத்தான் நின்றோம்!!! பிரடி மயிரைத் தொட்டு... கனலாய் வந்த தோட்டா.... விரைவாகத் துளைபோட்டு... மெதுவாகச் சுழன்று, என் மூளை திருவி... வலக்கண் வழியே, வெளியே வர.... பீறிட்ட இரத்தம்... தொடர்ந்தோடியும், எனக்கு வலிக்கவேயில்…
-
- 42 replies
- 4.7k views
-
-
கனதிகள் அற்ற காகிதக் கப்பலாய் மாறி கவலைகள் அற்று நான் கண்வளர வேண்டும் நினைவின் விளிம்புவரை நிழல்தரும் அனைத்தும் நிர்மூலமாக்குவதாய் நெருடலாய் நிதம் நிகழும் நெருக்குதல்கள் நீங்க நிழற்குடையின் கீழ் நான் நீள்துயில் கொள்ள வேண்டும் மனவறையின் பக்கம் மண்டிய படி கிடக்கும் மூச்சுப் புகமுடியாப் புதரின் முடிவற்ற மீதங்களை மட்டுப்படாத காலத்தால் கருனைக் கொலை செய்திட மனம் ஆர்ப்பரிக்கிறது ஆயினும் அறுதியிட முடியா ஆழத்தில் கால்பதித்து அகக்கதவை எப்போதும் அறைந்து சாற்ற முடியாத அகத்தின் அறம் இழந்து அளக்கமுடியா ஆளத்தை அடிமுடி தேடியபடியே அல்லலுடன் கடக்கிறேன்
-
- 2 replies
- 675 views
-
-
அல்லல் பிட்டி இல்லாத..உயிர்கள்... இறந்த உடல்கள்... சிதைத்த பிறகும்..... சிங்களம்.. சிதைக்கனுப்ப மறுப்பதோ....ஏனடா... துள்ளி விளையாடிய.. அல்லைப்பிட்டி அப்பாவி மக்களுடன்...தோட்டா கொண்டு விளையாடினாய்.... உயிர்களை வாங்கிய.. உன் அற்ப வெறி அடங்கியதா.... ஐயோ.....அழுகிப்போவதா.. தமிழன் உடல்.. யாருமறியாமல்..அழிந்துபோவதா.. தமிழன் நிலம்.. கண் திறவா ஆண்டவனும்... ஆணையிடாத் தலைவனும்.. பொறுமை...காப்பதேன்.. இதற்குமேல் இழக்க என்ன உண்டு எங்களிடம்.. பொறுத்தது போதும்... அல்லல் பிட்டியை... அல்லைப்பட்டியாய்த் திருப்பித் தாருங்கள்.
-
- 5 replies
- 1.3k views
-
-
அல்லி மலரோடு நான் தினம் என் கனவில் வருவாள் புஷ்பாஞ்சலி அழகில் அவள் முகமோ மலர்ந்திட்ட முல்லை மையிட்ட கண்களாலேயே கொள்ளையிட்டாள் கள்ளி கன்னத்தில் கருமையாய் வைத்திருப்பாள் புள்ளி என் மனதிலும் வைத்தாளே ஒரு புள்ளி அவள் பெயரோ லவ் ல் தொடங்கும் லல்லி தருவாள் தரிசனம் தவறாமல் வருவாள் பள்ளி கூடவே ஒட்டிக் கொண்டு வருவான் அவளின் மல்லி அவள் வீட்டிலும் மம்மி கூட எனக்கு பெரும் வில்லி தினமும் வாய்க்கு ருசியாய் வயிறார உண்பாள் உள்ளி மறவாமல் தண்ணீருடன் விழுங்கிடுவாள் வில்லை வங்கியிலே வைத்திருக்கிறேன் நிறைய சல்லி பரிசாய் நானும் தந்திடுவேன் தங்கச் சங்கிலி அவள் நினைப்புடனே அடித்துடுவேன் மில்லி போதையில் உளறிடுவேனே லில்லி லில்லி விளையாட்டிலே…
-
- 22 replies
- 3.2k views
-
-
அளவுகள் தொடர்பான பிரச்னை! - கவிதை செல்வி ராமச்சந்திரன், ஓவியம்: ரமணன் உன்னை எனக்கு எவ்வளவு தெரியுமென்று நம்புகிறேனோ அவ்வளவு தெரியாமலும் இருக்கிறது முதல்முறையாக இன்று உனக்கு ஓர் ஆடை வாங்கச் சென்றபோது உன் அளவு எனக்குத் தெரியாமல் போய்விட்டது எதிர்பாராத ஒரு பரிசுக்கான அளவை உன்னிடமே எப்படிக்கேட்பது என்றும் எனக்குத் தெரியவில்லை இருளில் தழுவிக்கொண்டபோது உன் தோள்கள் எப்படி விரிந்திருந்தன என்றோ உன் மார்புகள் எப்படிப் பரந்திருந்தன என்றோ நான் அறிபவை எல்லாமே உத்தேசமான அளவுகளாக இருந்தன எனது ஒவ்வொரு மனநிலையிலும் அவை வேறு வேறு அளவுகளாக குறுகலாகவோ பரந்ததாகவோ இருக்கின்றன உன்னைப்போலவே இருந்த மாடல் பொம்மையின் முன் நி…
-
- 0 replies
- 881 views
-
-
என்றும் என்னுயிர் பேபிக்கு எண்ணிப்பார் ஒரு தடவை என்ற போது தள்ளிப் போ என்னை விட்டு என்றேன் இன்று தள்ளிப் போ என்று நான் சொல்லவில்லை அள்ளித் தா உன் அன்பை என்கின்றேன் கள்ளச் சிரிப்பால் என்னை மயக்கிய போது உன் கண்களைக் கண்டு வியந்தேன் இன்று உன்னைக் காணாத போது என் கண்களைக் கண்டு வியக்கின்றேன் ஆனால் உன்னைக் காணும் போது பட்டாசு போல் வெடிக்கின்றேன் ஏன் என்று எனக்குள் நான் இன்றும் வியக்கின்றேன் இன்று என்னுயிர் மனைவி நீ என்றும் என் குழந்தை நீ வாத்தியார் **********
-
- 12 replies
- 1.8k views
-
-
அழகான அதிபர் உரை-பா .உதயன் அழகான அதிபர் உரை என்றாராம் அனைவரும் வாழ்த்து சொன்னாராம் நேற்று வரை தூற்றி நின்றவரும் அழகப்பெருமாளை ஆள வைக்க நினைத்தவரும் இன்று அவர் காலடியில் விழுந்தாராம் இதுவெல்லோ நாட்டுக்கு தேவையென்றாராம் சும்மாவா ரணில் என்றால் நரி என்றும் சிலர் சொன்னாராம் அனைவருமே இன் நாட்டு மக்கள் என்றாராம் இருள் கடந்து வெளிச்சம் வரும் என்றாராம் அது தனக்கு தெரிகிறது என்றாராம் அனைவருக்கும் வெளிச்சம் வர செய்வாராம் முன்பு ஆறு தடவை பிரதமராய் இருந்தாராம் அப்பவெல்லாம் ஏன் இவற்றை செய்ய மறந்தாராம் ஆட்டத்திலே இழந்தாலும் அசையாராம் எந்தப் பதவியையும் எப்போதும் வி…
-
- 4 replies
- 701 views
-
-
அழகான கவிதை வாழ்க்கை ----------------------- மூங்கில் நுனிப் பனியை புகழ்கின்றோம் மூக்கின் நுனிப்பனியைத் துடைக்கின்றோம் இரண்டிலும் பனி பார்வையில் பிணி பச்சை மரக்காட்டிடையும் மரங் கொத்தி தேடுவதென்னவோ பட்ட மரம் நீர் மேல் நிலவு நிமிடத்தில் உடையும் நிமிடத்தில் சேரும் நிலவுக்குக் கவலையில்லை வடி கட்டிப் போகும் அமுதத்தைப் பாரார் வடியில் மிஞ்சும் மிச்சத்தைப் பார்ப்பார் காலையும் மாலையும் அழித்து அழித்துப் போடுகின்றது அழகழகான சித்திரம் வானமும் பகலிலும் இரவிலும் பொட்டு வைத்துப் பார்க்கின்றது பச்சைச் சேலையில் பள பளக்கும் நீர்க்கரை கட்டி பூமியும் அழகுதான் இயற்கை சிரிக்கின்றது மனிதன் அழுகின்றான…
-
- 7 replies
- 2.3k views
-
-
மாலையில் மரணம் என்று தெரிந்தும் கூட காலையில் கண்ணீர் வடிப்பதில்லை பூக்கள்...
-
- 7 replies
- 1.3k views
-
-
அழகாயிருப்பேனா..? காயாத ரணங்கள் கொண்ட மனது கஷ்டங்கள் மேல் எழுந்து அமுத்துவதால் கவலைகள் அடிக்கடி தற்கொலைசெய்யும் அழகில் நான் கறுப்பி ஆகிவிட்டதால் நிலைக்கண்ணாடியும் என் நிறத்தின் நிஜமாய் நிதர்சனமாய் சொல்கிறதே அழகின் வரைவிலக்கணம் எது என்று அறியவில்லை இதுவரை சிலந்திவலையை கொண்டு விண்மினை பிடிப்பது போல் இருக்கின்றது வாழ்க்கை இறந்த பிறகாவது நான் அழகாயிருப்பேனா..?
-
- 35 replies
- 6.1k views
-
-
அழகிய கனவு.....! கிழைகளைக் குடையக் காற்றுத் தரையில் மிதக்கிறது இலைகள். மஞ்சள் இலைகளின் அழகு போய் மார்களி வருதல் சாத்தியமாய் மரங்கள் வெறித்துப் போகிறது. குளிர்கால ஆரம்பம் மந்தப் பொழுதாக மழையிருள் வானமும் மாரியின் வருகையும் மனசுக்குள் இதமாயில்லை... வசந்தம் வரும்வரை இரவினி நிரந்தரம் ஒளிக்குமிழின் துணையின்றி இந்த நாட்கள் விடியாது. நள்ளிரவும் நாய்களின் ஊளையுமற்ற பின்னிரவில் எழுந்து வேலைக்கு ஓடும் அவசரம் இவ்விரவுகள் மிகக்கொடுமையானவை. கைவிறைக்க கால்கள் நடுங்கும் உறைபனிக் காலத்திலும் ஓய்வில்லை. பணமரமாய் நான் பெற்றவர்க்கும் மற்றவர்க்கும் வெளிநாடு மிகவும் அழகான கனவு. கழுவுதலும் துடைத்தலும் கோப…
-
- 2 replies
- 983 views
-
-
கைகட்டி கதை கேட்டு உங்கள் புன்சிரிப்பின் மர்மம் தெரியாது ..நாம் திகைத்து நின்ற காலம் மறக்குமா ஆள் கூப்பிடுது வரட்டாம் என்றால் ... பல யோசனை வரும் நடக்கபோகுது எல்லாம் சரியா திரும்ப திரும்ப நாலுதரம் சரிபார்த்து பதட்டமா வந்து நின்றால் நீங்களே சொல்லும் ... கதை வெட்டையில் மாடு நிக்கு . போய் அடிச்சுட்டு வாங்கோடா இரவுக்கு கொத்து சாப்பிடுவம் போங்கோ நான் பின்னாடி வாரேன் வாகனத்தில் .. பயிற்ச்சியில் கவனமும் கடும் போக்கும் பாசத்தில் தோள்தட்டி தலை கோதி தட்டி கொடுத்து ஊக்கம் அளித்து கதை கேட்டு கேட்பதை செய்து கொடுத்து நிப்பியள் .... நிங்கள் வரிப்புலியுடன் மிடுக்கா நடக்கும் அழகே தனி எதிரிக்கி உங்களை கண்டால் பிடிக்கும் கிலி ஏழு பேரிச்சம்பழம் தந்தது எங்கடா ஆறு…
-
- 4 replies
- 778 views
-
-
அழகிய தமிழ்மகன்..... பிறந்த நாள் வாழ்த்து மடல்..... தமிழரின் வாழ்வு மீட்க உலகில் தமிழனின் புகழ்பரப்ப ஜம்பத்தினான்கு வருடங்கள் முன் வட கடலெல்லாம் ஓசைதர கடல்பறவையும் இசைபாட மணற்காட்டு மண்ணெல்லாம் மலர்போல மண்தூவ அழகிய தமிழ்மகனாய் அழுதபடி அவதரித்தான் சூரியன்போல் ஒர் குழந்தை.... அவனின் முதல் அழுகை அன்னையின் பாலுக்கு வேண்டியல்ல அடிமை மண்ணின் சுவாசத்தை அந்தக் கணம் சுவாசித்ததற்காய்... அவன் என் நாளும் வளர்கிறான்..... தன் வாழ்வின் சரித்திரத்தை அவன் நாளொன்றாய் அறிகிறான்.... அடிமைச் சரித்திரத்தை அவனன்று அறிந்ததுமே வீரனாய் அன்று வீறுகொண்டு எழுகிறான்.... தன் இளமையின் சுகமிழந்து தமிழனின்…
-
- 0 replies
- 807 views
-
-
அழகிய திருமுகம் பார்த்து சில நொடி சிரித்தேன் மறு நொடி இதயம் புகுந்தாய் …. தசைகள் சிரிக்க விடவில்லையோ? பெண்ணே நான் உன் இதயம் புகுந்தேன் என்று ஏற்க மறுக்கும் உன் பார்வை அர்த்தம் தெரியா அந்த ப்பார்வை. கற்பனைகளுக்குள் காலடி வைத்தது எந்தன் இதயம். …. ஒருநாள் பொறுக்க வைத்து மறுநாள் மலர்ந்த புன்னைகையில் இதய நாயகணாக வைத்தாய் கண்ணே. ….. தொலைதொடர்வில் பயத்தோடு கேட்டாய் சந்தோச என் அலர்ரலை. சில நொடியில் ராஜரீகம் ஏரினாய் என் ரானியாய். பல நெறி சொல்லி உன் உயிராக்கினாய் அழகிய ராஜ்யதியே ====================================================================== முதல் பார்வையில் வரும் காதல் பற்றி எழுத்து பிழைகளு…
-
- 1 reply
- 3.6k views
-
-
இமைகள் இரண்டின் இரக்கமற்ற பிரிதலில் முட்டாள் விழிகள் முரணாய் ரசித்தன கணநேரம் கூட கதறி அழவில்லை கனத்துப் போன கண்ணிமை இரண்டும் மெதுவாய் வீசிய மெல்லிய தென்றலில் வளியில் மிதந்து விழியில் விழுந்தன தூசித் துகள்கள் விழுந்து உருண்ட தூசித் துகள்களில் கலங்கித் துடித்தன கரிய விழிகள் கலங்கித் துடித்த கரிய விழிகளை இதமாய் வருடி இழுத்து அணைத்தன இமைகளிரண்டும் இமைகள் இரண்டின் இதமான தழுவலில் கடைவிழியோரம் கண்ணீர் துளிகள் புரிதலற்ற நேசத்தின் எரிந்துப…
-
- 8 replies
- 1.7k views
-
-
மொழியில் தமிழ் அழகு தமிழுக்கு கவி அழகு குரலுக்கு குயில் அழகு குயிலுக்கு குஞ்சு அழகு நடைக்கு அன்னம் அழகு அன்னத்துக்கு வெண்மை அழகு நடனத்துக்கு மயில் அழகு மயிலுக்கு தோகை அழகு இசைக்கு யாழ் அழகு யாழ் மண்ணுக்கு பேச்சு அழகு கிளிக்கு சொண்டு அழகு சொண்டுக்கு கொவ்வை அழகு கொம்புக்கு மான் அழகு மானுக்கு புள்ளி அழகு கூந்தலுக்கு பெண் அழகு பெண்ணுக்கு தாய்மை அழகு உழைப்புக்கு ஆண் அழகு ஆணுக்கு தோள் அழகு எனக்கு நீ அழகு உனக்கு நான் அழகு
-
- 3 replies
- 1.3k views
-
-
ஏழு வயதுகள் மட்டுமே நிறைந்த என் மகனின் முதல் கவிதை. அழகு என்ற தலைப்பில். (இந்தியா திருச்சியில் இருந்து.) அழகு. நீல வானம் அழகு - அதில் பறக்கும் குருவிகள் அழகு பச்சைப்பசேல் மரங்கள் அழகு- அதில் மலரும் மலர்கள் அழகு உயர்ந்த மலைகள் அழகு -அதில் வளரும் தேயிலை அழகு நீண்ட கடல் அழகு - அதில் விளையும் முத்து அழகு பூக்களின் இதழ்கள் அழகு - அதில் தேனுறிஞ்சும் தேனீ அழகு பச்சை புல்வெளி அழகு - அதில் மேயும் பசு அழகு மு.ஷதுர்ஜன்.(குட்டி வல்வையூரான் )
-
- 25 replies
- 3.9k views
-
-
கன்னித்தமிழோ கவிதை மொழியோ கொஞ்சும் அழகோ கொவ்வை இதழோ பிஞ்சு விரலோ பேதை மனமோ கொஞ்சம் கொஞ்சமாய் என்னை கொல்லுதே ! கோவில் புறாவாய் ஓடி ஓளியுதே ! வஞ்சம் கொண்ட என்முன்னே வட்ட நிலாவாய் தோன்றி மறையுதே ! விழியழகோ மொழியழகோ மோதிச்சென்று வீழுதே ! விழிதீண்டிச்சென்று விரகதாபம் தோற்தே ! கனவா நினைவா கவிதை தந்து செல்லுதே அழகா ஆபத்தா அருகில் வந்து போகுதே !
-
- 5 replies
- 2.1k views
-
-
அவசரமாய் நான் வீதி கடக்கையிலும் நீயே நினைவுக்கு வருகிறாய் எப்போதோ உன்னோடு வீதி கடக்கையில் நீ குட்டுவைத்து குழந்தை போல் எனை கூட்டிச் சென்றாயே * என்னை எழுத வைப்பதற்காகவே கவிதையாய் படுத்துக் கிடப்பாய் எனக்கு முன் நீ * நீ எழுதிய முதல் கவிதை நான் ஒவ்வொரு பத்திரிகை குப்பைத் தொட்டியிலும் கிழிந்து கிடக்கிறேன் * உன்னை விட தொட்டால் சிணுங்கி பரவாயில்லை நீ பேசினாலே சிணுங்கிறாயே * பெண்களுடன் சுற்றி இருக்கீங்களா என்று கேக்கிறாய் இல்லையென்றால் நீ எனக்கு தேவதையாய் தெரிந்திருக்கமாட்டாய் -யாழ்_அகத்தியன்
-
- 6 replies
- 1.5k views
-
-
அழகு ரோஜாவே!! ரோஜாச்செடி போலவேதான் உறவுகள் என்றெண்ணி உறவுகளை விலத்தியிருந்த என் வாழ்வில் நுழைந்தாய் முட்களற்று வாசனை நிரம்பிய அழகு ரோஜாவாக... உனை கண்டநாள்முதல் நான் ஆனந்தம்கொண்டு தினமும் அலங்கரித்து மனம் மிகமலர்ந்தேன் அன்பே ரோஜா உன்னை கையில்பற்றி துடியிடை தொட பலர் ஆசைபட சிலர் சொந்தமாக்கி முத்தமிட துடித்திட நான் மட்டும் உனை என் கண்களுக்குள் பொத்தி வைத்து அந்த முட்கள் நிரம்பிய ரோஜாப்பூவாகவே பார்த்தேன் ஏனெனில் நீயும் ஒருநாளில் உதிர்ந்துவிடுவாயோ என்று ஆனால்.. நீயோ உதிர்ந்திடாத ரோஜா என் வாழ்வின் ஆயுள்ரோஜா நிம்மதியை தந்திடும் ரோஜா அன்பான அழகான ரோஜா என்று நன்குணர்ந்தேன் நான் போலியான உறவு…
-
- 10 replies
- 3.6k views
-