Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by slgirl,

    தவிப்பு... ஏனோ தெரியவில்லை எனக்குள் நானே தனித்துவிட்டது போன்ற பிரமை... உலகம் என்னை மட்டும் விலக்கி வைத்தது போன்றதோர் உணர்வு... அடிக்கடி அடி மனசில் அனல் பற்றியெரிகின்ற கொதிப்பு... எதையோ இழந்துவிட்டது போன்ற வெறுமை... எனதான வாழ்க்கை பயணத்தில் ஏமாற்றங்களை மட்டுமே சுமந்தது போன்ற விரக்தி... திடீரென தோன்றி மறையும் வானவில்லை போல சில சந்தோசங்கள்... ஆனாலும் அடிக்கடி நான் எதிலோ தொலைந்துதான் போகின்றேன் எதிலென்றும்... இதெல்லாம் ஏனென்றும்... புரிந்துகொள்ள முடியவில்லை...

    • 8 replies
    • 4.4k views
  2. கவிதை அந்தாதி ஒருவர் கவிதை வடிக்க அதன் முடிவு சொல்லை அல்லது எழுத்தை வைத்து மற்றவர் கவிதை வடிக்க வேண்டும். கவிதை எதைப்பற்றியதாகவும் எத்தனை வரியாகவும் இருக்கலாம். குறிப்பாக புதிதாக கவிதை எழுத இருப்போரும் மற்றும் கவிகள் படைக்கும் பலரும் தங்கள் கவித்திறமையை வளர்க்க ஒர் அடித்தளமாகவும் அமையும் என்பதே எண்ணம். எங்கே நீங்களும் இந்தப்பகுதியை அலங்கரித்துத்தான் பாருங்களேன். முதலில் நான் எழுதிய முதற்கவிதையோடு தொடக்கி வைக்கிறேன்.

  3. வீடிழந்த நிலவிலிருந்து தள்ளி நிற்கிறாள் கொங்கைக் கிழத்தி. முகத்திலே கொற்ற வஞ்சி சருமங்கள் ரொம்ப பிஞ்சு கானல் கவிதை காணின் நாணுவாள்; பேணுவாள் மயிர்க் கிளர்ச்சி கொள்வாள், உயிர்த் தளர்ச்சி வரையிலும். மன்மதன் இவன்; இங்கித மில்லை இவனிடம் கொங்கை மாந்தர் காணின் தங்காது போகும் சடரூபன் சிருங்காரம் மிகுவானன்; அகங்காரம் தகுவானன். யாவும் படைத்த கிங்கிரன்; தாபத்திலே நிகரில்லா இந்திரன். நாணியவள் மேல் கூசம் காணுகின்றான் கூசாது. ஏனெனவோ எங்கெனவோ கேட்காமல் போவாளா அ(ச்)சாது.? குறுஞ்சீலை களைப்பான்; இருகை வைத்தே ஆயிரம் செய்வான் நுனி நாக்கில் குழைப்பான் இனி தடுக்காது போய்விடின். படுக்காது போன நிலவை கொடுங்கீறினான் சொல்லிங்கே சேர…

  4. வேருக்கு வீறுதரும் விழுதுகளே! விழித்தெழுக!! தேசத்தின் திசையெங்கும் தீ மூண்டு எரிகிறதே! மனிதத்தின் உயிர்ப்பெல்லாம் மண்மூடிக் கிடக்கிறதே! இனவாதம் தினவெடுத்து இரத்தம் கேட்டு அலைகிறதே! ஆதிக்க அசுர பலம் ஆன்ம…..பலம் ஒடுக்க விளைகிறதே! வேருக்கு வீறுதர விழுதுகளே! விழித்தெழுக!! கந்தகம் குதறும் கார்காலப் பொழுதினிலே… காரணம் பல கூறி கண் வளர்தல் ஆகாது. ஊர், உறவு கூர் முனையில் உருக்குலையும் நிலை போதும், உழு ஒடுக்கும் உலகமுகம் உடைத்தெறிந்து வாரும்! வேட்டுக்கள் மாள்வளித்தால் விதியென்று நோவது ஏன்? வீணே வெளிப்புலத்தில் விலகி நின்று வாடுவதேன்? நேர் கொண்டு போர் நின்று நிமிர்வெய்தும் நேரமிது! கார்மேகம் கலைத்தெறியக் கரம் கொட…

  5. ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி மே13' நிகழ இருப்பது ஆண்டவன் கட்டளை.. ஈழத்து வேதனையின் ஏக்க விளைச்சல். கோபப்படாமல் ஐயா குறித்து வைத்துக்கொள்ளுங்கள் வெளியில் நீங்கள் வேசமிட்டு நாடகம் ஆடினாலும் உங்கள் கள்ளமான உள்ளுணர்வில் இப்படித்தான் நடக்கும் என்று கருக்கட்டி ஊற்றெடுத்த உண்மை உத்தியோக பூர்வமாக பிரசவமாகப்போகும் பொழுது. காலதேவன் உங்களுக்கு கட்டை இறுக்கப்போகும் கனிவான கடைசி நாள். சங்கடங்கள் நிறைந்த சகதிக்குள் இப்போதே நீங்கள் தத்தளிப்பது தெரிகிறது இருந்தும் இது சிறிய ஆரம்பம் மட்டுமே. தொடர இருப்பது பெருங்கதை . நவீன நரசிம்மர் உங்களுக்கு இனி நிரந்தர ஆட்சி விடுமுறை ஆனாலும் நீங்கள் தொடர்ந்து அரச விர…

  6. Started by Brammam,

    சுஜீத்ஜியின் முதல் கிப்பொப் இசைப் பேழை SINGLES (2005) இப்பொழுது இணையத்தில் தரவிறக்கக்கூடிய வாய்ப்புடன் வொய்ஸ் ரமிலில்!!! http://www.voicetamil.com/index.php?option...view&id=131

  7. வார்த்தைகள் தோற்றுப்போன போதில் பெரும் கோபத்தோடு வீழ்ந்து போனது இயல்புகள் ..... வெளியில் , ஆரவரத்துடன் ஆரம்பித்த அடைமழை கழுவிகொண்டிருந்தது. மௌனம் மெல்ல மெல்ல விலக மழைபொழுதின் வெளிச்சம் எங்கும் வியாபிக்க தொடங்கியது .. மழை கழுவிய தெருக்களில் வெறுங்காலுடன் நடக்க ஆரம்பிக்கையில் தோற்றுப்போன தடயத்தின் மீது குளிர் பரவ ஆரம்பித்தது . இலைகளில் மினுங்கிய துளிகளில் முகம்பார்க்க முயன்று தோற்றுப்போனதில் இயல்புகள் இயல்பாயிற்று ....... தோற்றுப்போன வார்த்தைகள் சிரிக்க ஆரம்பித்தன எனை பார்த்து தலைகுனிந்து கொண்டேன் .

  8. செக்கு செக்கில் கட்டிய மாடுகள் சுற்றின. போராட்டம் முடிச்சவிழ்த்தது. பழக்கத்திலிருந்து விடுபடாமல் செக்கையே திரும்பத் திரும்பச் சுற்றின. முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டிருப்பதை உணர்த்தியபடியே போராட்டம் வளர்ந்தது. அருகாமையில் குண்டுகள் வீழ சிதறித் திக்கெட்டும் பிரிந்தவை பசுமை வெளிகளையும், பனிபடரும் குளுமை தேசங்களையும் தம் வாழ்விடங்களாக மாற்றிக் கொண்டன. வழமையில் இருந்து மாற்றமடையாது முடிச்சுகளுக்குள் தத்தம் கழுத்துகளை நுழைத்து அரவி அரவித் தழுவும் சுகிப்பில் திளைத்தபடி இரைமீட்டிகள் சுற்றி வருகின்றன. நாகரீக வெளிகளின் மெருகேற்றலில் செக்கிழுப்புகள் பரவி விரிகின்றன.

  9. Started by துளசி,

    மெளனயாய் இருந்த என் அழைபேசி நீண்ட காலத்தின் பின் சலசலக்க தொடங்கியது இன்று தொலை தூரத்தில் இருந்து ஓர் அழைப்பு, அன்பாய் நலன் விசாரிப்பு உரிமையாய் ஒரு அதட்டல் கபடமில்லா நகைச்சுவைகள் பேதமின்றிய நாட்டு நடப்பு விவாதம் செல்லமாய் சிறு சண்டைகள் வாழ்வின் எதிர்காலம் கடந்த பசுமையான நினைவுகள் கரைந்து போன கவலைகள் தொடரும் இன்பங்கள் என இன்றும் தொடர்ந்தது நம் நட்பின் இரு முனைகளிலும்..... தேசங்கள் பல தாண்டி உருவங்கள் மாறிச் சென்றாலும் உயிர் பெற்ற உண்மை நட்புக்கள் என்றும் மரணிப்பதில்லை.. http://www.paristamil.com/tamilnews/view-news-MjA5ODg0NzUy.htm

  10. படித்ததில் பிடித்த ஒரு கைக்கூ...! இடியொடு மின்னல் உன் நினைவுகளுடன் என் இதயம் பேசும் இரவு நேரக் கவிதைகளாகின.....! நன்றி மீண்டும் சந்திப்போம்...!

    • 2 replies
    • 2.1k views
  11. போதும் என்ற மனமே........? -------- குடியிருக்க குடிசையுண்டு.... கூடிவாழ குடும்பமுண்டு...... தூங்கியெழ திண்ணையுண்டு.... அதிகாரம் செய்ய உறவுகளுண்டு.... இதற்கு மேல் என்னவேண்டும் ...? பாசத்தை காட்ட பெற்றோர்.... வேசத்தை காட்ட பதவி .... மோகத்தை காட்ட மனைவி .... பாவத்தை போக்க கோயில்.... இதற்கு மேல் என்னவேண்டும் ...? கொள்ளிவைக்க ஆண்குழந்தை கொஞ்சி விளையாட பெண்குழந்தை ... தட்டிக்கேட்க உடன்பிறப்புகள் ....... கொட்டி கொடுக்க மாமன் சொத்து .... இதற்கு மேல் என்னவேண்டும் ...? குடித்து கும்மாலம் போட நண்பன் .... ஊர்கதை பேச ஆலமரத்தடி...... பஞ்சாயத்து தீர்ப்பு சொல்ல தலைவர்.... பகட்டாக திரிய ஒரு வாகனம் .... இதற்கு மேல் என்னவேண்டும் ...? …

  12. Started by Thamilthangai,

    ஈழத் தலைமகனே! "அடிமை" என்னும் விலங்கறுக்க வந்த தலைவன் "மிடிமை" நீக்கி தலை நிமிரச் செய்த தமிழன் கொடுமை கண்டு பொங்கிய எரிமலை இவன் விடிவை நோக்கி பயணிக்க எழுந்த ஆதவன் பொங்கும் கடல் தந்த ஈழத் தமிழ்மகன்- தமிழ் வாழ வேண்டி தமிழன்னை ஈந்த தலைமகன் ஈழ அன்னையாவருக்கும் மூத்த பிள்ளை நாம் அழைப்போம் என்றும் எங்கள் அண்ணை" தமிழர்க்கொரு இன்னல் என்றால் வேங்கையாவான் தமிழீழப் பிள்ளைக்கெல்லாம் தமையனாவான் ஈழமே மூச்சென்று என்றும் வாழ்பவன்! எந்த இடர் வந்திடினும் சோர்ந்திடாதவன் உறுதிகொண்ட மனங்கள் சேர்த்து படையமைத்தவன் உலகம் வியந்துநிற்கும் வகையினிலே எமைச்சமைத்தவன் கலங்கிடாத களத்திற்கே இவன் தளபதி! அண்ணன் கட்டளைக்காய் காத்திருக்கும் புலிப்படையணி விழி…

  13. வியூகம் யாவும் விடை காண்பார். நினைவிலும்,கனவிலும்,தமிழீழம் பற்றிய பற்றுதலாலான நினைவுகள் ஏந்தி ஒரு சாந்தி தரும் செய்தி ஒன்று பூம்புனலேந்தி ஐம் புலன்களை ஆதங்கமாக நீவி ஆத்ம, ஆதரவுக்கரம் தாராதோ? வனையும் நெஞ்சகத்து கதவின் காந்தங்களை, புனையும் பொய்யர்களின் பீற்றல்களை, புரட்டி,பகை விரட்டி ஏகாந்தமாகும் நமதான ஆதங்கக்கரம் பற்றி! தினையும்,ஆங்கு தினமும் எம் விடுதலை வேங்கைகளின் திளையும் வெற்றிச் சேதி ஆற்றி எம் உளவுரணேற்றி தீந்தான வாகை பகைபுலம் காட்டி நமதான வரமாக்கி மாந்தமாகும் எம் மனவிருளகற்றி,விளக்கேற்றி, விடியல் செய்தித் தீ சுமந்து, நீ எம் அகமாக சுகமான, சுமைஏந்தி சுற்றம் சூழ, மகிழ வலம் வருவாயா? ஏதிலியாக தினம் அங்கு மாயும் எம் இன மாந்தர் ஆ…

    • 0 replies
    • 1k views
  14. முருகதாஸா…. 5 Views ஐக்கிய நாடுகள் அவையின் முன்பாக 2009 பெப்ரவரி 12ஆம் திகதி ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்தார். இவரின் நினைவு நாளையொட்டி அவருக்கான கவிதை பிரசுரமாகின்றது. முத்துச்சிரிப்புக் கொண்டவனே முருகதாஸா! வீர வித்துக்கள் வீழ்ந்தபோது உன்னை நீயே வீரத்தீ மூட்டிக்கொண்டாய்…. விடுதலை முற்றம் பற்றியெரிகையில் வீரனாய் எழுந்துநின்று உன்னையே தீயாக்கி உண்மைக்காய் ஒளி தந்தாய்! உன் முகத்திற்குள் இருந்த பரவசத்தில் உன் அகத்திற்குள் குடிகொண்டதீயை – யாருமே கண்டுகொள்ளவே இல்லை…! சினக்கக்கூடத் தெரியாத சிரித்தமுகத்தில் எப்படி இந்தச் சிறுத்தையின் சீற்றத்தை மறைத்துவைத்தாய்…? அகிம்சை வழியில…

  15. அங்கே பிணங்கள் விழுந்துகொண்டிருக்கின்றன; 'எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?" என்று விசாரித்துக்கொண்டிருக்கிறோ

    • 0 replies
    • 842 views
  16. கிளிசரின் வெட்கப்படுகிறது ! அழகின் உயிர்ப்பு கண் என்றால் உணர்ச்சியின் துடிப்பு கண்ணீர்… கண்ணீர் எனப்படுவது இரண்டு வகைப்படும். செந்நீரை பறிகொடுத்தும் கண்ணீரை பரிதவித்தும் சோகத்தில் குடியிருக்கும் மாந்தருக்கு காலந்தோறும் உடனோடும் ஜீவநதி கண்ணீர்… வேடிக்கை பார்ப்போர் அழுதாலொழிய வேஷம் கட்டியோருக்கு வயிறு நிரம்பாது! அந்தக் கூத்தாடிகள் பிதுக்கும் கண்ணீர் ஒரு நடிப்புக் கலை! சினிமாவில் கண்ணீர் அருவியை திறக்கும் மந்திரப் பொருள் கிளிசரின். பிகினி காலத்து மாடல் பொம்மைகளுக்கு கிளிசரின்கள் டன் கணக்கில் தேவைப்படும். கிளிசிரினுக்கு செலவு வைக்காமல் கண்ணை குழாயென திறந்து விட…

  17. பிரபாகரனைத் தொலைத்து விட்டுத் தேடிக்கொண்டிருக்கும் சிங்கள அரசே பிரபாகரனை உனக்கு நான் காட்டுகிறேன் உன் தடுப்பு முகாம்களின் முள் வேலிகளுக்கு மேலாய் சற்றே எட்டிப்பார். அங்கே தாய் தந்தையரை இழந்து பசியால் வாடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு குழந்தையும் நாளைய பிரபாகரன்கள் அவர்கள் பொங்கி எழும் வேளையில் உன் ஆணவம் பிணமாகும் http://gkanthan.wordpress.com/index/eelam/where/

  18. Started by nochchi,

    அட்டைக் கத்தி -------------------------- 1915 படித்தவர் படியேறிச் சென்று சேர் பட்டம் வாங்கினர் 1948 சிங்கம் கத்தியோடு கொடியேறிக் கொண்டது தமிழர் நிலங்களி;லே சிங்களம் குடியேறியது 1918 முதல் கிழிக்கப்பட்டவை தமிழருடனான உடன்பாடுகள் மட்டுமல்ல உடலோடு உரிமைகளும்... தெளிவோடு சிந்தித்த தலைமையொன்றை தமிழர்கள் கண்டார்கள் முப்படை கொண்டு எம்முதுச நிலம் மீட்டார்கள் வந்தேறு குடிகளோடு வடவர்கள் கூடினார்கள் வரலாறு மீண்டும் தலைகீழாகியது தமிழர்களது கைகளிலே மீண்டும் அட்டைக் கத்தி அட்டைக் கத்தியையும் ஆயுதமாய் கொள்வானா எம் முன்னோர் சொன்ன „வல்லவனுக்குப் புல்லும் ஆயதம்' என்ற முதுமொழிக்கிசைவாக அறிவால் ஒளிர்வானா!

    • 6 replies
    • 731 views
  19. ஈழம் என்பது தமிழ் மக்களின் கனவாம் சிங்களம் சொல்கிறது ஆமாம் ஈழம் என்பது எங்கள் கனவுதான் உங்களால் எங்கள் உறக்கத்தைத்தான் கலைக்க முடியும் எங்களை உறங்க வைக்காத ஈழக்கனவை யாராலும் கலைக்க முடியாது -யாழ்_அகத்தியன்

  20. ஒட்டியுலர்ந்து ஊட்டச்சத்தெல்லாம் உறிஞ்சப்பட்டுப் பதுங்குளியிலிருந்து இழுத்துவரப்பட்ட போது மிரளும் விழிகளின் அருகாய் அருகாய் துப்பாக்கிகள்….. *அம்மா காப்பாற்று அப்பா காப்பாற்று* கண்ணீர் வற்றிய கண்களிலிருந்து சொட்டிய துயர்….. கனவுகளைத் துரத்திக் கொண்டு இரவுகள் அலைகிறது…… கட்டையாய் கத்தரிக்கப்பட்ட தலைமயிருக்கான காரணங்கள் கேட்டுக் கேட்டுப் பதிவிடுகிறார்கள்….. சொல்லால் வசியம் செய்து சொல்ல முடியாக் கதைகள் நிரம்பிய கதைகளை மீள்பதியமிடும்படி வேண்டுகிறார்கள்…… ‘எனக்குத் தெரியாது‘ எத்தனையோ தரம் எழுத்துமூலமும் வாக்குமூலமும் எடுத்த பின்னாலும் கிளறிக் கிளறி ரணங்களைத் தோண்டுகிறார்கள்….. *பம்பைமடு* விசப்பாம்புகளின் குடியிருப்புகள் பே…

    • 12 replies
    • 1.9k views
  21. இல்லாது இருப்பவன் இருந்தும் இல்லாதவன் வரிகொண்டவன் வரிப்புலிகண்டவன் முழுத்தமிழர்க்கும் முகவரிதந் தவர்மனங்களில் முடிசூடினன் இயற்கையின் நண்பன் இமாலய சாதனையின் தொண்டன் தமிழன்னையின் தவப்புதல்வா... தாயகத்துத் தங்கமகனே புறநானூற்றின் புதுத் தொடரே... உனக்கின்று இன்னோரகவையாம்... காலத்தின் கட்டளையே கரிகாலா... உனக்கும் அகவையேதுமுண்டோ? நீ வாழி.. நீ வாழிய பல்னூற்றாண்டு...!!!

    • 7 replies
    • 851 views
  22. அம்மா வெளிநாட்டில் உன்பிள்ளை என்று உனக்கு மகிழ்ச்சி. என் வாழ்க்கை எது என்று நீ அறிந்து கொண்டால் அம்மா நீயும் அழுவாய். வானை முட்டும் கட்டடங்கள், வடிவான வீதிகள் உழைத்து கழைப்பில்திரியும் எமக்காகவோ என்னவோ வீதியெல்லாம் இளைப்பாற ஆசனங்கள், வண்ணமான பூங்காக்கள் எல்லாம் கண்ணைக்கவரும்-ஆனால் அம்மா-என் நெஞ்சமோ உங்களைத்தேடும் நித்திரைக்கு போவேன். தலையருகே உன் படம்-என் தலை நீ கோதுவதாய் கற்பனை செய்வேன், கண்ணீர் சொட்டும்-என் தலையணை நனைந்தே போகும் வாய் விட்டு அழத்தோன்றும் அடக்கிவிடுவேன், தலையணையை கடித்துக்கொண்டு லேசாக கண்கள் மூட அலாரம் எழுப்பிவிடும் வேலைக்கு போ என்று அவசரமாய் எழுந்து ஓடுவேன் காலையில் காப்பியும் …

  23. இரவல் மொழியில் பெருமை பேசி இழந்த உண்மை இன்பம் கோடி கோடி இரைந்து கத்தும் காகத்தை போன்று இல்லாமையில் பெருமை தேடும் பலர் இங்கே தட்டி தமிழ் மகான்கள் சொன்னப் போது தாழ்மையுடன் உணர்ந்தோம் நம் பெரும் பிழையை தாயாய் காக்கும் நம் தமிழ் மொழியை தரணி எங்கும் வாழ்த்த வழி செய்வோம் வெளிநாட்டு மோகம் எம்மை ஆட்கொண்டு வெள்ளையர் வாழ்வு சீர் என நினைத்தும் ஏன் ? வெளிர் நிறத்தில் உள்ள அழகும் நிலையில்லையே …

  24. வானவில்லின் நிறங்களாய் உன்னில் பல வர்ணம் நேரத்துக்கொன்றாய் நாளுக்கொன்றாய் நிறம்மாறிக்கொண்டிருக்கிறாய் நீ உன்மீது கொண்ட நம்பிக்கைகள் இன்னும் வெள்ளை நிறமாகவே என்னுள் இருக்கின்றன காற்றடிக்கும் போதும் கடும் மலையின்போதும் கூட அவை நிறம்மாறும் நிலையற்று நிற்கின்றன ஆனாலும் மனம் என்னும் மாயக்கண்ணாடி சூறைக் காற்றின் வாடையில் மெலிந்து சுழல் காற்றில் சிக்கித் தவித்து இழப்பை எதிர் நோக்கும் வலுவற்று ஓடி ஒளிந்துகொள்ள இடம்தேடி ஒற்றைக்காலில் நின்றுகொண்டிருக்கிறது மீட்க முடிந்தவன் நீ மட்டுமே எனினும் பிடிப்பு எதுவுமற்று பேரன்பு சிறிதுமற்று பருவம் தப்பிக் காய்க்கும் மரமாய் பார்த்துக்கொண்டிருக்கிறாய் நீ என்ன சொல்லி என்ன இயல்பே அற்ற உனக்கு ஏற்புரை எது சொல்லினும் எள்விளையா நிலமாய் உன்மனம்…

  25. இதமான முத்தம் இம்சையாகப் போனதேன் ? இனிமையான பொழுதுகள் இன்று இம்சையாகப் போனதேன் ? எத்தனை எதிர்ப்புகள் வந்தது எம்மை நோக்கி இலகுவாய் உடைத்தோமே ஒன்றாக நானும் நீயும் அப்போது இம்சை இல்லையே எம்மிடம் எதெற்கும் துணிந்த என்னை எண்ணையாக்கியவள் நீ இன்று சொல்லால் இறுக வைத்தாயே ஒருவேளை உன்னைக் கோர்க்க நான் தகுதி இல்லாத நூலோ ??????????????

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.