Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பாதைக்கு பழக்கப்படாத பாதங்களாகவே பயணங்கள் தொடர்கிறது எதிர்படும் எல்லா முகங்களிலிருந்தும் எல்லோருக்குமான முகமொன்றை தேடியலைகிறேன் நாட்காட்டியின் கிழிபடாத நாளொன்றின் மூன்றுவேளை உணவிற்கான கனவுடன் மாற்றுமொரு தாள் கிழிபட துவங்குகிறது வசப்பட்டாக வேண்டிய வாழ்க்கையை வரவேற்க வாயிற் படியிலேயே வாழ பழகிக் கொள்கிறேன் நேற்றைக்கும், இன்றைக்கும், நாளைக்குமான தோழமையின் வருகைமீதான நம்பிக்கையில் தனிமையை எதிர்கொள்ள தயாராகிறேன் நாளைய யன்னல்களில் உட்புகும் ஒளியில் எனது இருண்ட அறையெங்கும் வைகறையை நிரப்பி கொள்வேன் புத்தக பைகளை வீசி எறிந்துவிட்டு சுமைதூக்கிகளுக்கு அழகின் வானவில் வர்ணங்களை வரைய கற்றுத் தருவேன் விலைமாதொருவளின் ஒர்நாளின் ஒரிரவின்…

  2. வெல்லட்டும் விடுதலைச் சுடர்!

  3. நீ தடம் பதித்துப் போகும் பாதவெளியில் பட்ட பனித்தூறல் அதன் சூட்டில் உருகிப் பின் என்னைப்போல் உறைகிறது காண் ஒயாமல் மோதி விழும் பனிச் சாரலது உரைந்த பனியதன்மேல் உள்ளக்கற்பனைபோல் கோபுரம் கட்டி எழ ஒரு கோடி மேளங்கள் ஒன்றாய் இசைப்பதுபோல் ஓடி வரும் வான்துளியின் ஒட்டலுடன் ஒளி கீற்றும் சேரந்து வந்து கற்பனையின் ஒப்பனையை கலைக்குது பார் இயற்கைக்கு இயல் இதுவோ? உண்டாக்கி உருப்பெருக்கி உருக்குலைத்து பின் உண்டாக்கும் பெரு இயலோ இவ்வுலகில் யார் அறிந்தும் யார் உணர்ந்தும் முடியாத கற்பனைபோல் கோலமிடும் உள்மனது வான் பரப்பின் மேகமதாய் வாழ்கை எனும் வாழ்வுக்கு

  4. கரைந்து ஓடும் காலங்களின் கரை சேரா நாட்களுடன் கனவுகளைச் சுமந்து கால்கடுக்க நடக்கின்றனர் கண்களை மூடியபடியே காரணம் அற்றவர்கள் காற்றும் சென்றிடமுடியா கனதியான வெளிகளினூடே கர்ப்பம் சுமக்க முடியாதவராய் கருகிப் போனவர் முன்னே கபடு நிறைந்த முகங்களுடன் கல்லறை தேடுகின்றனர் கிரகிக்க முடியாத கணக்குகளை கிஞ்சித்தும் காணமுடியாது கிளர்ந்தெழும் கீற்றுக்களாய் கீழ்ப்படிய மறுப்போர்க்கான கடைநிலைக் கருவறுப்பாய் காகங்களின் கரைதல்கள் கோரமுகங்கள் உருமாற கொடுவினையின் உருவங்களாய் கொள்கைகள் அற்றவராய் கூற்றுக்கள் குதிர்களாக கும்மாளத்துடன் அலைகின்றன காற்றின் கடும் வீச்சில் கலைந்தே குலைந்துபோகும் கனமற்ற கடதாசிக் குருவிகள்

  5. சனங்கள் புத்தகங்களைப் போட்டு விட்டு ஓடித் தப்புகிறார்கள். எங்கும் தீவிரமாய் பரவுகிறது இலக்கிய வித்துவக் காய்ச்சல்கள். மாறி மாறி முட்டுப்படுகின்றன எழுத்தாளர்களின் கொம்பு முளைத்த பேனாக்கள். மேடைக்கு அலையும் வசனங்களோடு இடம் தேடித் திரிகின்றன வசைபாட ஆசைப்படும் வாய்கள். அதிகார ஆசனங்களின் கால்களைத் தடவத் தொடங்குகின்றன விருதுக்காய் உழைக்கத் தொடங்கியிருக்கும் விரல்கள். பார்த்துக் கொண்டிருக்க கண்முன்னே வாடிக் கொண்டிருக்கிறது எழுதப்படாத வரலாற்றுப் பூ. தீபிகா தீப .பேஸ்புக் .

  6. தூக்கத்தில் நடப்பவை தூக்கத்தில் கனவுகள் நிகழ்கின்றன கனவுகள் பெரும்பாலும் நினைவிலிருப்பதில்லை தூங்குவதுபோல் கனவு கண்டு விழிப்பவர்களுக்கு தூக்கமே கனவாகப் போய்விடுகிறது தூக்கத்தில் மரணங்கள் நிகழ்கின்றன தூக்கத்தில் சாவது நல்ல சாவென்று செத்தவனைத் தவிர்த்து எல்லோரும் சொல்லுவார்கள் தூக்கத்தில் விபத்துகள் நிகழ்கின்றன இறந்து போன பயணிகளும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்ததாக யூகங்களினடிப்படையில் ஊடகங்கள் தெரிவிக்கின்றன சாவதற்கு சற்றுமுன் அவர்கள் விழித்திருப்பதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளன. தூக்கத்தில் நிகழ்கின்ற விபத்துகளில் பெண்களின் தூக்கத்தில் அதிகார்ப்பூர்வ கணவர்களால் நிகழ்த்தப்படும் விபத்துகள் சேர்க்கப்படக் கூடாதென உச்ச நீதிமன்றமே தீர்ப்ப…

  7. சலனம் இன்றி மெதுவா பாயும் நீர் .. பாலைவனத்தையும் பசும் சோலையாக்கும் .. நீ என்னை கடந்து போகும் தருணம் அதுபோல் .. திரும்பி பார்க்கும் நேரத்தில் என் மனவெளி ... உன் நினைவில் பூத்து குலுங்குவது இவ்வாறே .. சோகங்கள் இழையோட கண்களில் நீர் நிரம்பி .. வழி எங்கும் என்னை பார்த்திருக்கும் நேரத்தை .. நீ சொல்ல வரமுன் உன் கண்கள் சொல்லிவிடும் .. காதலை நேசித்த வித்தை தெரிந்தவள் அதனால் .. என்னை உன் விழி வளையத்துள் வைத்து .. கண்காணிக்கும் உன் காதலை மட்டும் .. நான் காதலிக்கிறேன் காதலே .

  8. காத்துக் கிடக்கின்றனர் அவர்கள் அவளின் ஒவ்வொரு வரிகளுள்ளும் பிரவகித்து ஓடும் காதலிக்கப்படுவதான பிம்பங்களின் நிழலில் குளிர் காய்தலில் தம் இழந்து போனவைகளையும் கனவுகளுள் புதைந்து போனதையும் எச்சங்களின் படிமங்களில் எப்படியோ காண்பதான பிரமைகளையும் துழாவமுடியாத இருட்டில் தினம் குருடாகிப் போன கண்களின் வெளிச்சத்தில் தேடியபடியே இருக்கின்றனர் கண்முன்னே காத்திருக்கும் காரணமற்ற வெளிச்சங்களை பார்த்திட முடியாத மனக்குருடாய் மடை திறந்தோடும் மனவாற்றின் வழியே ஆசையின் அகல்விளக்கேற்றி அடைந்திடமுடியாததான அகத்தின் அருகே சஞ்சரிப்பதான பிரமை கூட்டியபடி வீழ்ந்திடாத பழமரங்களுக்காய் கற்களைத் எந்நாளும் எறிந்தபடி

  9. Started by Ahasthiyan,

    உனக்கு எப்பொழுதும் அடுத்தவர் துன்பத்தில் ஆனந்தம் அதுவும் தமிழர்கள் பிணங்களை எண்ணுவது பேரானந்தம் நீ செய்ய நினைத்ததை அவன் செய்தான் - ஆதலால் அவன் ரகு வம்சம் நாம் அரக்கர்கள் ஆனோம். தூது போக அனுமார்கள் தேவையில்லை இருக்கிறார்களே எம்மூர் விபீசணன் மார் அரசியல் எமக்கு தெரியாது - ஆனால் காலம் காலமாக அண்டிப் பிழைக்கிற ஆக்களை அடையாளம் காணத் தெரியும் மகா பாரதம் உனக்கு பொருந்துதோ? இல்லையோ ? எம் தர்மம் ஒரு நாள் வெல்லும்

  10. காற்று வெளியிடையே கணங்கள் கனதியாய் நகர்கின்றன காணும் காட்சிகளும் விரைவாய் கடந்து தான் போகின்றன கிழக்கில் காணும் கதிரவன்போல் கீழிருந்து மேலேறும் நினைவுகளில் கிரந்தங்களாய் இடையிடை தோன்றும் கிரகிக்க முடியாத கிடப்பில் போட்ட கீறல் கொண்ட நினைவுகள் குறுக்கும் நெடுக்குமான காலங்களின் கனவுக் கோடுகளில் என்றும் கணக்கிடவே முடியாததான கனமான நினைவுகளின் வரிகள் கண்ணிறைத்துக் கனதியாய்க் காலக் கோடுகளை வரைகின்றன கோலமிழந்த நினைவுகளும் குதூகலிக்கும் கனவுக்களுமாய் காலமிழந்த கணக்கற்ற நாட்களின் கண்டுபிடிக்கவே முடியாத காட்சிக் குவியல்களின் நடுவே கண்மூடிக் கர்வமற்றுக் கிடக்கிறேன்

  11. Started by nochchi,

    நன்றும் தீதும் - 17-Nov-2014 11:11:06 AM ஊருச் சோற்றுக்கு நாக்கை நீட்டாதே ஊழல் செய்தே பொருளை ஈட்டாதே காரி உமிழ்வான் இனிவரும் பிள்ளை கவின்நிறை முகத்தை ‘தொட்டி’ ஆக்காதே ! பதவிப் பசிக்கு ஆடுகள் சாகலாம் கதவின் இடுக்கில் கண்ணகி ஏங்கலாம் உயர்வுக்கு உழைத்தவர் பாதியில் ஏகலாம் ஊர்ப்பணி செய்பவர் உறங்கிட ஏலுமோ? சாதியும் மதமும் சமத்துவம் நல்கா தீதிலா வாழ்க்கை திசைமாறிப் போகா பாடாற்ற வேண்டின் பண்பாட்டு அமைப்பில் பாடமும் பாதையும் ‘நாமாதல்’ வேண்டும் காலச் சூழ்நிலை கறையைப் பூசும் கண்ணியம் காப்போர் உள்ளம் கூசும் குற்றம் களைந்து சுற்றம் பேணடா குருடன்கைத் தடியாய் மாறிடப் பழகடா ! நன்றும் தீதும் பணியைப் பொறுத்ததே பண்பிலாச் செயலால் …

  12. என்ன இப்படி குளிர்கிறது .. உச்சி முதல் பாதம் வரை .. சில மணித்துளி கழிந்து .. அனல் வெட்க்கை உடலை தின்னுது .. ஓ ..நான் இறந்து விட்டேனா .. அரப்பு வைத்து தலைமுழுகி .. பின்தான் எரித்தார்கள் போலும் .. ஒருவேளை என் சாம்மல் ஆவது .. தூன்மையா இருக்கட்டும் என்றா .. மரணம் கூட சுத்தபத்தம் பார்க்கும் ஆ.

  13. வர்ணத்தின் நிறம் -சேயோன் யாழ்வேந்தன் முதலில் நிறத்தில் வர்ணம் தெரிகிறதாவெனத் தேடுகிறோம் நெற்றியில் தெரியவில்லையெனில் சட்டைக்குள் தெரியலாம் சில பெயர்களிலும் வர்ணம் பூசியிருக்கலாம் வார்த்தையிலும் சில நேரம் வர்ணத்தைத் தெரிந்துகொள்கிறோம் நான்கு மூலைகளில் மஞ்சள் தடவிய திருமண அழைப்பிதழ்களில் முந்தைய தலைமுறையின் வால்களில் வர்ணங்கள் தெரிகின்றன சிவப்பு பச்சை நீலம் அடிப்படை வர்ணங்கள் மூன்றென்கிறது அறிவியல் நான்காவது கறுப்பாக இருக்கலாம்.

    • 8 replies
    • 896 views
  14. இலங்கையில் தமிழ்க் கவிதைகள் ஒரு பார்வை பூங்குழலி வீரன் ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சிபற்றிச் சிந்திக்கும்போது அடிப்படையில், அவை நான்காகப் பகுக்கப்பட்டு விவாதிக்கப்படுவது காணக்கூடியதாக இருக்கிறது: 1. மரபு வழிப்பட்ட நிலை 2. சுதந்திரத்துக்கு முந்திய சமூக மறுமலர்ச்சிப் போக்கு 3. சுதந்திரத்திற்குப் பிந்திய நவீன கவிதை வளர்ச்சி 4. அண்மைக்காலப் போக்கு மரபு வழிப்பட்ட நிலை ஆறுமுகநாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சைவசமய ஆசாரம் பேணும் இறுக்கமான செய்யுள், பிரபந்த நடையினை ஈழத்தில் கவிதை எழுதிய ஆரம்ப எழுத்தாளர்களிடம் காண முடிகின்றது. அ.குமாரசுவாமி புலவர், சுவாமி.விபுலாநந்தர், வித்துவ சிரோன்மணி. சி.கணேசய்யர், அருள்வாக்கு அப்துல் காதிர் புலவர், மாதகல் மயில்வா…

    • 3 replies
    • 4.8k views
  15. 1965 இந்தி எதிர்ப்புப் பெருனடைகளைக் கண்டு வியந்து பாடியது. காவிரி போல், வையையைப் போல், கான்யாற்று வெள்ளம் போல், எழுந்தனரே எந்தமிழர் செழுந்தமிழைக் காத்திடவே!

  16. தங்கைகள் தேவைப்படுகிறார்கள்... நடை பழகும் நாட்களில் கைபிடித்து கொள்ள அண்ணன்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்... அடம் பிடித்தோ அழுது புரண்டோ பொட்டோ, பூவோ முதல் முதலில் தங்கைக்கே வாங்குகிறான் அண்ணன்... '' அ" வில் தொடங்கி சைக்கிள் பழக்கி மகிழுந்து வரை அண்ணன்களே ஆசிரியர் தங்கைகளுக்கு... அண்ணனாக மட்டுமன்றி நண்பனாகவும் சில நேரங்களில் தந்தையாகவும் மாற்றி விடுகிறார்கள் தங்கைகள்... தங்கைகளின் எந்தவித கோரிக்கையும் அண்ணன்களிடமே வருகிறது தங்கைகளுக்கான முதல் சிபாரிசை அண்ணன்களே முன்னெடுக்கிறார்கள்... அக்காக்களிடம் மறைத்த அண்ணன்களின் காதலை அறிந்தே இருக்கிறார்கள் தங்கைகள்... அண்ணன்களுக்காக அப்பாக்களிடம் கோபம் கொள்வதில் தங்கைகளே முதலில் இருக்கிறார்கள்... தங்கைகளி…

    • 8 replies
    • 26.7k views
  17. முத்துக்குமரா பார் நீ பாரில் தமிழீழ விடுதலை முத்துக்குமரா எங்களுக்காக உன்னுடல் வெந்தாய் விடுதலைக்காய் வித்தானய் வெந்தணல் மீது உன்னுடல் முத்தே உன் நினைவு எம்மை வாட்டுதய்யா! விடுதலை வித்தே ஈழ மக்களின் சொத்தே! உன் உறவுகள் நாம் எம் இனமடா நீ தீ வைத்தது உனக்கல்ல பேரினவாத பேரசுகளுக்கு வைத்தாய் ஈகை போராளியே உன் ஈகம் தமிழருக்கு விடுதலை தீயை விதைத்தடா பரவியது தீ பார் பாரெங்கும் விடுதலை பெறும் வரை உன் தீ அடங்குமாய்யா! எம் மனங்களில் அது விலகுமாய்யா! பார் நீ பாரில் தமிழீழ விடுதலை வா நீ வந்து பார் அதுவரை நாம் ஓயோம் சரவணை மைந்தன் http://www.eelampoem.tk/2015/01/muththu.html

  18. அலரி மாளிகை மாடி வீட்டு மகிந்த அங்கிள் வர்ணக் கிளி வளர்க்க குறுனி தூவி... ஏசி றூமில் நாய் வளர்க்க நாய்க்கு ஒரு நாலு பெயர் வைச்சு அழகு பார்த்த மைத்திரி அங்கிள்... கொடூர சுறா வளர்த்து குஞ்சு மீனை தீனியாக்கி அது துடிச்சுச் சாக துள்ளிக் குதித்து குரூரமாய் ரசித்து மகிழ்ந்த கோத்தா எனும் கொடூரன் குருவி சுடுவது போல் தமிழனை சுட்டு தள்ள கைக்கட்டி வேடிக்கை பார்த்த மைத்திரி அங்கிள்... செம்மணியை தமிழர் குருதியால் சிவப்பாக்கி.. எங்கள் தங்கை கிருசாந்தியை கிண்டிப் புதைத்து அதை மறைக்க ஆயிரம் சித்து விளையாடிய.. சந்திரிக்கா என்ற அரக்கி வீட்டில் தர்ப்பார் நடத்தும் மைத்திரி அங்கிள்... ஜே ஆர் தாத்தாவின் கொள்கையில் வளர்ந்த.. கொஞ்சம் கொஞ்சமாய் ஈழத்தீவில் …

  19. முகம் தெரியா முகநூலில் நட்புறவாட மறந்து கலவி செய்ய எத்தனிக்கும் கயவர்களை இனம் காணுவோம்... ஓட ஓட விரட்டிடுவோம்... வளைதளத்தில் வக்கிரம் வரையறை மீறி இன்று முகப்புத்தகத்தில் முடிவில்லாமல் தொடரும் தொடர்கதையாய்.... முகப்புத்தகம் சிலருக்கு அவர்கள் காம இச்சையை தீர்க்கும் வடிகால் என்றே உருவாக்கிவிட்டார்கள்.... முகம்தெரியா ஆண் பெண்ணுடனோ அல்லது பெண் ஆணுடனோ அந்தரங்கங்களை பகிர்வதால் வருகிறது இந்த வினை.... எதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது யார் அந்த கோட்டை தாண்டினாலும் அந்த உறவுக்கு அன்றோடு முற்றுப்புள்ளி வைக்க அறிய வேண்டும் அனைவரும்... உலகில் வாழவே தகுதியற்ற சில ஈனப்பிறப்புகள் போலி அடையாளத்தில் உலவும் இடமாக மாறிபோய் இருக்கிறது முகப்புத்தகம்...... ஒருபுறம் நல்லவர் போல் உறவ…

  20. இரத்தம்தோய்ந்த குரூரச்சிவப்பான கொள்ளிக்கண்கள் பார்வைகளே படுபாதகம் செய்யுமாற்போற் சுவாலைப்பார்வைகள் தரவையெங்கும் பிச்செறியப்பட்ட பிணப்பாகங்கள் வல்லுறவினால் சிந்திய விந்துக்கள் வழியெங்கும் செங்குருதி வழிந்து காய்ந்த தேகங்களை ஆட்காட்டிக்குருவிகள் அடையாளம் கண்டுகொண்டாற்போல் அமைதியாய் இருந்தன உள்ளம் துடித்தது பற்கள் நரும்பின மீசைகள் துடித்தன தோள்கள் முறுக்கேறின எல்லாமே கனவானது ஆட்காட்டிகள் எல்லாமிழந்து அனாதரவாய் நின்றன. அவற்றின் உணர்வுகள் நம்மையும் தொற்றிக்கொண்டது பழி வாங்கும் நேரம் இதுவல்ல பார்த்து நடக்கவேண்டிய நேரம் ஏற்றத்தைக் கைவிட்டு ஆற்றைக்கடக்க வேண்டும் ஆற்றுப்படுத்த வேண்டியது அதிகம் இருக்கிறது எங்கோ பனிமலைத் தேசத்தில் இருக்கும் நண்பன…

  21. பாரிஸ் நகரத் தெருக்கள் எல்லாம் இலைகளுதிர்த்தி ஏங்கும் தனித்த மரங்களைப்போல் ஏதோ ஒன்றிற்காய் வெளித்துக்கிடந்தது ஆங்காங்கே கூடும் சனங்கள் அரசல் புரசலாக அரசியல் பேசினர் அதற்கு பின்னால் உள்ள காரணங்களை மறைக்க மூச்சு விடாமல் ஊடகங்கள் உண்மை எனும் பெயரில் ஒப்பாரி கீதங்கள் இசைத்து மரணத்துக்கு பின்னான கற்பித்தலில் தீவிரவாதமாகச் சித்தரிக்கப் பட்டு அனுதாபத்தில் இனவாதம் மதவாதம் விதைத்தது நாடுபூராவும் துக்கநாள் பிரகடனப்படுத்தப்பட்டு வல்லரசுகளின் தலைவரின் வருகை மனிதாபிமானம் எனும் தொனியில் அவர்களால் மூடிய காலனி நாடுகளின் புதைகுழியில் பூக்கள் சொரிந்தது இதற்கிடையில் தாவீதின் கைகள் மாறிய காசையும் அவர்கள் வரைந்த கோட்டையும் உலகிற்கு க…

  22. முன்னைக் கதைகளில் ஐம்புலன்கள் அடக்கி காட்டில் கிடந்தனராம் முனிவர் நாட்டு நடப்புக்களின் கதைபேச்சு அற்று ஐம்புலன்கள் ஒடுக்கி அவை நலிந்தடங்க முக்கிக் கிடக்கிறார் முன்பள்ளியில் புலமைப்பரிசிலி;ல் போட்டிப் பரீட்சையில் பல்கலைப் புலமையில் நிலத்தடியில் நீரிற்கு நடப்பது அறியா அறிவு விருது பெற்று வாழ்த்துப் பெற்று படபடக்கிறது பெருமைக்காற்றில் சி. ஜெயசங்கர் http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115649/language/ta-IN/article.aspx

  23. அடர்ந்த பனிக் கூதலில் நட்சத்திரங்களின் மெல் ஒளியின் படர்தலில் இரவின் நிசப்தத்தை இரசித்துக்கொண்டு இரண்டு இதயங்கள் தொலை தூரப் படபடப்பில் இமைகளை மூடிவிட சாளரம் வளியே முத்மிடும் சாரல் காற்றின் ஸ்பரிசத் தக தகப்பில் மூச்சுக்காற்றின் சுகந்தம் அறிதல் உற கொம்பொன்றில் கொடிபடரும் பேரழகாய் கரை தடவும் மெல்லலையில் மணல்க் கோடாய் மாண்ட நடு இரவின் பொழுதுகள்தான் பொய்த்தனவே ஏக்கத் துடிப்பான எண்ணங்கள் இணைந்துவிட

  24. ‘அடைமழை ஓய்ந்த நாளின் மாலைக்கும் இரவிற்கும் இடைபொழுதில் வாசலில் வந்து நின்றாள் தேவதை . . தொலைதூர பிரயாணத்தின் வழியிடையே எப்போதும் போல் ஏதாவதொரு விடுபடுதலின் நிமித்தமாக இருக்கலாம் . . அடித்து பெய்த மழையின் இறுதி பொழிவுகள் அவளது அதரங்களினூடே . . தேநீர் குவளைகள் இரண்டிலொன்றில் இயலுமான வெப்பம் இதமாயிருக்கும் அவளது உறைகுளிர் போக்க . . பகலிரவு காலத்தை மாற்றிடும் இமை கதவுகள் மூடி திறந்ததும் பெருக்கெடுத்தது வெள்ளி நிரோடை . . ஆசுவாசப் படுத்திக் கொள்ளட்டுமென கன்னங்களை துடைத்து விட்டு மெல்லிய கைகளை பற்றினேன் . . தேவதை மொழியால் விம்மியபடி மாநகர பேருந்தின் லாவகமான காய்நகர்த்தல்களை சொல்லி பேச்சுடைந்தால் . . ஒ! வென அழ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.