கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
வெறி பிடித்து திரியுது பார்... சிங்கள இனம்- இங்கே சொறி பிடித்து அலையுது பார்... சில தமிழரினம்! கொள்கை என்று குழு பிரிந்த குரங்குக் கூட்டம்-இப்ப கொப்புத் தாவி போனது பார்... கொள்கை வேஷம்! இருந்தாலும்.... மக்களுக்காய் மடிகின்ற மறவர் கூட்டம்! எதிரி வந்தால்தான்-பதில் அடி கொடுப்போம்.... என்குது பார்..! அன்று தொட்டு இன்றுவரை பேச்சு வார்த்தை இடை..இடையே.... எல்லைச் சண்டை....! எதிரி அழைப்பது.... இப்ப-போருக்கு இன்னும் நாம் சொல்லவில்லை இ....தோடா வாறம் என்று! இன்னும் எதற்காக வெயிற்ரிங்.... அடிக்கின்ற மணிக்கும்.. பாடுகின்ற குருவிக்கும்... செயலால காட்ட வேணும்.... இறுதி போரிங்கு …
-
- 14 replies
- 2.4k views
-
-
எம்.எஸ் சுப்புலட்சுமிக்கு வாலியின் இரங்கல் கவிதை எம்.எஸ் .சுப்புலட்சுமி காலமான போது ,வாலி எழுதிய உருக்கமான கவிதை ஒன்று ! நடுத்தமிழ் நிற்கிறது நடுத்தெருவில் .... தன் விலாசத்தை தவறவிட்டு ; அதன் - திருவிழி உகுக்கிறது தீர்த்தச் சொட்டு ! எம்.எஸ் ஏறிவிட்டார் வாகனம் ; எல்லோர்க்கும் இருந்தென்ன ? எமனுக்கு இல்லையே ஏழிசை ஞானம்! இழந்து நிற்கிறது இசைக்கலை - தான் தங்கியிருந்த - எம்.எஸ் என்னும் இன்ஷியலை! ஓதம்சூல் உலகின்காண்- ஓர் ஒப்புலட்சுமி-இல்லாதவர் சுப்புலட்சுமி ; தூய வாய்மலரால்- இசைத் தேனைத் துப்புலட்சுமி என்னணம் எண்டிசை-இனி பயணிக்கக் கூடும் -நம் பண்டிசை? எம்.எஸ் என்பது சங்கீத சாஸ்திரத்தின் ப…
-
- 1 reply
- 2.4k views
-
-
சாதிவெறி இன்னும் சத்தியமாய் தீரவில்லை எங்கள் தமிழ் போராட்டமும் அவ்வெறியை தீர்க்கவில்லை பலநூறு மைல்கள் பறந்து வந்தும் ஐயையோ பார்கின்றோமே சாதியது இங்குமல்லோ ஆதியிலே சாதியில்லை பாதியிலே வந்ததென்று சேதியாகச் சொல்லுறாங்க ஓதியே வைச்சாங்க மோதித்தான் சாகிறாங்க கோதித்ததான் பார்க்கிறாங்க மீதியாய் ஒன்றும் இல்லை சாதியால் அழிவுதாங்க. பார்பனரோ கொண்டு வந்தார் ஏற்பவரோ ஏற்றி விட்டார் தீர்ப்பவரோ இன்று இங்கு திண்டாட்டப் படுறாங்க மோர்மிளகாய் செய்து தந்தால் முட்டி மோதித் தின்னுவாங்க ஊர்காரர் உள்ளே வந்தால் எட்ட நில்லு என்கிறாங்க சாதியில்லை என்று தான் அம்பேத்கர் சொன்னாங்க வாதியாக பெரியாரும் அதைத்தானே சொன்னாங்க நாதி…
-
- 14 replies
- 2.4k views
-
-
கட்டழகி தந்த காயம்.... கவிதை...... என் பார்வையில் மயங்கி பதிலுக்கு சிரித்தாள் நானும் சிரித்தேன்........ பக்கத்தில் வந்தாள் நானும் மகிழ்ந்தேன்...... தன் பெயர் கூடச் சொன்னாள் என் பெயர் நானும் சொன்னேன்..... ஓர் நாள் பழக்கத்தில் ஓர் உடல் ஆனோம்...... ஒன்றாகக் கை கோர்த்து பூங்காவில் நடந்தோம்..... சந்தோசத்தில் நாம் எமை மறந்து நடக்க.... கால் தடம் புரண்டு அவள் ஆற்றினில் விழுந்தாள்...... எனக்கு நீச்சல் தெரியாது இருந்தும் என் உயிரைக்காக்க ஆற்றினில் குதித்தேன்... என்னால் நீச்சல் முடியாமல் நீரின் மேலுக்கு வந்தேன்... தண்ணீரில் விழுந்த வலியும் தாங்காமல் என் மூக்கிலிருந்து நீரை எடுத்தேன்... என்னால் முய…
-
- 16 replies
- 2.4k views
-
-
-
- 14 replies
- 2.4k views
-
-
கலிகாலம் பிறக்கக், காத்திருக்கும் கபோதிகள்! கண்ணீர்க் குமுறலுடன் , கண்ணில் விரிந்தது அவலம்! காற்றையும் நஞ்சாக்கிய, கனரக ஆயுதங்களின் குமுறல்! கார்வண்ணன் தேரோட்டாத, குருசேத்திரப் போர்க்களம்! கருகி எரிந்த பிஞ்சுகள் நடுவில், குருதியில் குளித்தன சருகுகள்! கூட்டாக நடத்திய கொலைக்களம்.. கூட்டங்கள் நடத்தம். கொலைகாரர்! கொஞ்சிக் குலாவுகின்றன, காந்தீயக் கோழைகள் ! கலிங்கத்து மன்னனின், கால் பட்ட தூசியும், காந்தீய தேசத்தின்.,, கதை கேட்டு விலகியோடும்! கலிங்கத்துப் பரணியில், கூழுண்ட பேய்களும், கொடுப்புக்குள் சிரிப்புதிர்க்கும்! போதிமரம் காணும் புதிய குருத்துக்கள், பாவத்தின் சின்னமாகும்! பூவேந்தி நீ செல்லும், புத்தனின் தூபிகள், போர்க…
-
- 16 replies
- 2.4k views
-
-
ஞாபக சக்தி குறைவானவர்கள் ....காதலில் பொய்சொல்ல ....முயற்சிக்க கூட்டாது ....அதுவே சந்தேகமாக ....உருப்பெற்று விடும் ....!!!பெற்றோர் காதலித்து ....திருமணம் செய்தாலும் ...பிள்ளைகளின் காதலுக்கு ....தடையாகவே இருப்பார்கள் இல்லையேல் விருப்பம் ....இன்றி ஏற்கிறார்கள் ....!!!காதலின் பின்னால் ஓடாதீர் ....காதல் இல்லாமலும் வாழாதீர் ....காதல் பேச்சை கூட்டி ....மூச்சை நிறுத்தும் ,,,,,!!!+கவிப்புயல் இனியவன்ஈழக்கவிஞர் காதல் தத்துவ கவிதை
-
- 0 replies
- 2.4k views
-
-
-
- 13 replies
- 2.4k views
-
-
மனத்தின் ரணங்களால் மரணத்தின் வாசலில் மண்டியிட்டு தினமும் கண்ணீர் வடிக்கும் நான் ஒரு பெண் என்னோடு கதை ஆனால் வதைக்காதே நான் ஒரு நிலவு என்னை ரசித்திடு தொட நினைக்காதே நான் ஒரு கிளி எனை பறக்கவிடு அடைக்க முயலாதே நான் ஒரு வாசமுள்ள பூ மோர்ந்து பார் கசக்கி எறியாதே நான் ஒரு புல்லாங்குழல் என்னை வாசித்திடு முறித்து எறியாதே நான் ஒரு புரியா கவிதை எடுத்து படி மடித்து வீசாதே நான் ஒரு நெருப்பு எரிய விடு அணைக்காதே தயவுசெய்து தள்ளி நில்லு எனை அணைக்காதே மரணத்தின் வாசலில் நான்
-
- 14 replies
- 2.4k views
-
-
தோற்றுப் போனவர்களின் பாடல் – முள்ளிவாய்க்கால் போர்க் காலத்தின் சில கவிதைகள்: தொகுப்பு குளோபல் தமிழ் செய்திகள்:- முள்ளிவாய்க்கால் தமிழ் இனம் மறக்க முடியாத இனப்படுகொலையின் வடு. உரிமைக்காக போராடிய இனம் கறுவறுக்கப்பட்ட நிலம். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை உலகத் தமிழ் இனத்தையே உலுப்பிய நிகழ்வு. இந்த தாக்கம் தமிழ் படைப்பாளிகளின் படைப்புக்கள் பலவற்றில் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளது. முள்ளிவாய்க்காலின் சாட்சியாக, குரலாக, இனப்படுகொலையை பதிவு செய்த சில குறிப்பிடத்தக்க கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து தருகிறது குளோபல் தமிழ் செய்திகள். -ஆசிரியர் ஜெய…
-
- 0 replies
- 2.4k views
-
-
கருத்தடைக்கு முயலும் ஒரு தாய்க்கு... நிறுத்து! நீ உட்கொள்வது மருந்தல்ல கருவறையில் கல்லறை கட்ட கச்சிதமாய் அனுப்பும் செங்கட்டிகள்! வளையே வலையாவது கடுமை! கூடே கூண்;டாவது கொடுமை!! குற்றம் செய்தது நீ தண்டனை மட்டும் குழந்தைக்கா? ஆபத்து என்றால் பிள்ளை அம்மாவை நாடும் அம்மாவே ஆபத்து என்றால் அதன் மனம் வாடும். நீ கம்சனிலும் கொடியவள் கம்சன்கூட குழந்தைகளை பிறந்தபின்தான் கொன்றான். நீ பிறக்கும் முன்னமே அழிக்கின்றாய். பிறப்புச்சான்றிதழை எதிர்பார்த்திருக்கும் குழந்தைக்கு இறப்பைச் சான்றிதழாகக் கொடுப்பது என்ன நியாயாம்? பிறந்தவுடன் சுதந்திரம் பறிபோவது வழமை பிறப்பதற்கே சுதந்திரம் மறுக்கப்படுவது கொடுமை ஆட்சி கலைந்தால் அம…
-
- 9 replies
- 2.4k views
-
-
அந்திமந்தாரை திரைப்படத்தில் வரும் உன்னிகிருஷ்ணன் பாடிய பாடல்: சகியே நீதான் துணையே! விழிமேல் அமர்ந்த இமையே" அந்த மெட்டுக்கு என் வரிகளில் ஒரு புது முயற்சி : உயிரே நீதான் உறவே என் உணர்வுக்குள் பூத்த காதலின் தாயே உயிரே நீதான் உறவே! (2) கனவுகளில் நீ காட்சிகளில் நீ காண்பது எங்கணும் நீதான் உறவே(2) வலிகளை தாங்கி சுகங்களைக் கொடுத்தாய் என் இதயத்தில் நீதான் என்றுமே துடிப்பாய்! இடர்களைக் களைந்து இனிமைகள் தந்தாய் உறவே உயர்வாய் எனக்குள்ளே நின்றாய்! (உயிரே நீதான் 2) கரைகளைத் தொடுகின்ற அலைகளைப்போலே உன் நினைவுகள் என்னை அணைப்பதினாலே உயிருக்குள் ஊறும் புது சுகம் கண்டேன் உன்னால் அன்பே காதலைக் கண்டேன் வேருக்கு வார்த்திடும் வான்முகில் போலே என் வாழ்வின் வளமாய் நீ வந்தாய…
-
- 10 replies
- 2.4k views
-
-
மரணப்படுக்கையில் மறவர்களும் மக்களும் முள்ளிவாய்க்காலில் இருந்த போதும் மானாட மயிலாட பார்த்து மோட்சம் பெறும் புலத்து தமிழன் நான் மானாட மயிலாடவில் இடைவேளை வரும் போது ஈழம் பற்றி ஆய்வு செய்கிறேன் ஈழத்து அவலத்தை மறந்(றைத்)து எதிரிக்காய் எழுதிக்கொண்டிருக்கிறேன் புலிகள் தேவைப்பட்டார்கள் எம் பொதி சுமப்பதற்காய் இன்று நான் ஜனநாயகவாதி என் தவறை உணராது தோல்விக்கு விடைதேடும் கட்டுரை ஆய்வாளன் எந்த விமானம் எத்தனை பாகையில் குண்டு போட்டது.. எத்தனை அடி ஆழத்தில் பள்ளம் வந்தது எங்கேனும் தண்ணி வந்ததா என பார்க்கிறேன் என்வீட்டு கதவை எதிரி தட்டுவதை மறந்து ஏனென்றால் என்பெருமையை சொல்ல இதை விட்டால் எனக்கு ஏது சந்தர்ப்பம் நான் நாறுவதே தெரியாமல் ந…
-
- 9 replies
- 2.4k views
-
-
வாளெடுத்தவன் எலாம் வீரனென்றாவானா? தூரிகை தூக்கியவர் அனைவரும் -ஓவியர் ஆவாரா? பாரடா நண்பா - பகை -மெல்ல வெல்கிறது-! நீ இரு - நானும் இருக்கிறேன் என்பதா வேண்டுமிப்போ? நாம் இருக்கணும்- இதை நாவரழ சொல்லியும் - கேட்பார் யாருமிலை - நீயாவது - கேளடா! பச்சைக்கிளியின் சொண்டில் -பற்றி எரியும் அமிலம்-ஊற்றுவார்- பாவமிது என்று நீ சொன்னால் அந்த பகுதியையே இழுத்து மூடுவார்! ஏனடா இப்பிடி-? எலும்பும் தசையும் மட்டுமா- மனிதன் என்றாகும்-? உணர்வென்ற ஒன்று வேண்டும்-! நீ - உறைக்க சொல்லேண்டா - அவருக்கு! பார் பார்- கருத்து விடுதலை என்று பேசாதிருந்து கழுகுகள் - உன் தலையில் கூடு கட்டும் காலம் வந்தாச்சு - சீ போடா- அப்போ- எமக்காய் சிரித்துக்கொண்டே செத்தவர் கனவ…
-
- 13 replies
- 2.4k views
-
-
-
சிங்களவா........... 83 ......... ஆடி........ நாம் ஆடித்தான் போனோம்...... குத்தியும் வெட்டியும்...... குடல் சரிய எம்மை..... குத்தி வீழ்த்தியும்.......... கோவம் போகவில்லையென்றே சொல்லி........ கோவணமும் இன்றி எம்மை குந்தவைத்து.......... சுற்றி வர நின்று - கும்மாளம் போட்டீரே........ ஆடிய ஆட்டம் எல்லாம் ஓய்ந்ததா? உங்கள் ஆவி மேயும் பசி தீர்ந்ததா? இன்றும் ஆடி வருகிறது ....... கறுப்பு ஆடி .......... அந்நாளில் ......... ஆடிப்போவது - நீங்களா? நாங்களா????????? 8)
-
- 9 replies
- 2.4k views
-
-
அம்மா. உன்னை நினைக்கும் போது எனக்குள் எல்லா நரம்பும் இரத்தத்தை கடத்தவில்லை – உன் உருவத்தையே இரத்தமாய் கடத்துகிறது ….!!! பிள்ளை பருவத்தில் செல்ல காயம் வந்தால் கூட விளையாட்டுக் காயங்கலாக எடுக்காமல் -உன் கண்ணுக்கு திரியை வைத்து விடிய விடிய விளக்காய் எரிவாயே தாயே ….!!! சிறு வயதில் எல்லோருக்கும் பசியதிகம் -பள்ளி விட்டு வந்து படாத பாடு படுத்திவிடுவேன் உன் காலை உணவை எனக்காக வைத்திடுந்து நீ பட்டினீயிருப்பாய் தாயே ……!!! என் புத்தகச் சுமை உன் வலது தோலில் சுமப்பாய் … செருப்பில்லாத பாதங்களேடு…. இடுப்பில் என்னைசுமந்திருக்கிறாய். வீடு வந்தவுடம் களைத்து விட்டாய் மகனே என்று -உன் களைப்பை பொருட்படுத்தாத அதிசயப்பிறப்பு தாயே …..!!! …
-
- 11 replies
- 2.4k views
-
-
மறக்க முடியவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை... காற்றிலும் கண்ணீரிலும் தேடுகிறேன் உன்னை உன் நினைவுகள் கொல்கின்றன... உன்னுடன் கழித்த அந்த நாட்கள் நகைக்கின்றன மறக்க மறுகிறது மனம் உறங்க மறுக்கிறது விழிகள் சிரிப்பென்பது என்னவென்றே தெரியாமல் போய்விட்டது... இப்போதெல்லாம் என் இரவுகள் கனவுகளில் அல்ல கண்ணீரில் நிறைகின்றன... நினைத்த போதெல்லாம் வந்தாய் அன்று நினைத்துக்கொண்டே இருக்கிறேன் என்றாவது ஒரு நாள் வருவாய் என்று நிச்சயம் நீ வருவாய் என் இதயம் கலங்குவது தாங்காமால் நீ வருவாய் எல்லா நிராசைகள் போலவே இதுவும் ஒரு நிராசை இருந்தும் நினைத்திருபேன் நீ வருவாய் என இவையனைத்தும் நடக்காவிடின் நான் இறைவனிடம்…
-
- 16 replies
- 2.4k views
-
-
கண் மூடிக்கடவுளைத்தரிசனம் பண்ணினேன் என் முன்னால் ஓர் உருவம் வந்து நிற்பதுபோல் காலடிச்சத்தம் கேட்டது இது யாராக இருக்கும் உள்ளம் கேள்வி கேட்டது இவ்வளவு கம்பீரமான காலடி சத்தம் மெதுவாகக்கண் திறந்தேன் ஆமாம் என் முன்னால் நானே நிமிந்து பார்க்கக் கூடிய ஓர் உருவம் மெல்ல நிமிந்து முகத்தைப்பார்த்தேன் என்னவனை முதல் முதலில் பார்த்த முதல் நாள் மறக்க முடியாத நாளும் கூட கோயிலில் கூட்டம் இருப்பதையே மறந்து உன்னையே பார்த்தேன் உன் மேல் வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை என்னை ஒரு முறையாவது திரும்பிப்பார்க்க மாட்டாயா என்ற ஏக்கத்தில் உன்னையே பார்த்துக்கொண்டு நின்றேன் கடவுளுக்கு என்னிடம் கருணையே இல்லையே என்று திட்டினேன் நான் திட்டியது அவன் காதில் …
-
- 20 replies
- 2.4k views
-
-
-
- 17 replies
- 2.4k views
-
-
வல்ல தமிழீழமென்னும் வலிமைகொண்ட யாழ்மண்ணில் வெல்லவொரு வேங்கை தந்த வேலுப்பிள்ளை யண்ணல் கருச்சுமந்த யன்னையாம் பார்வதி வயிற்றினிலே அருகேகிப் பழமென்று சூரியனை பிடித்தவெங்கள் மாருதியின் பலபொருந்த அவதாரமெடுத்த வொரு சுயபல மிகுத்தவொரு சுந்தரக் கரிகாலன் மருவுபெயர் தாங்கியவன் மாயா வுலகினிலே மண்ணுமொத்துச் சீராட்ட மறத்தமிழன் தமிழ்மணக்க எங்களுயிர் கலந்திருந்து எடுத்தநல் சேனையுடன் வீரத்தின் வித்தகனாய் உலகத்தமிழ் நெஞ்சமதில் மனமுருகி இன்றுனக்கு வாழத்துகின்ற வேளையிலே வாடாத பாமாலை அணிவதற்கு விளைகின்றேன் தமிழீழப் பெருஞ்சுவையாய் வற்றாத கனவோடு எண்ணமதில் பிறந்த மண்ணின் விடிவுக்காய் ஈரெட்டு வயதினிலே எடுத்தவுன் சுதந்திரத்தின் மூச்சாகி உன்னை யுருக்கி வீரர்களை யுருவ…
-
- 2 replies
- 2.3k views
-
-
அம்மா சமாதி பன்னீர் வடிக்கும் கண்ணீரில் அம்மா சமாதியே அரை அடி உயரும். சசி துடைக்கும் கைக்குட்டையில் காவிரி டெல்டா ஒருபோகம் விளையும். அம்மாவை நினைத்தாலே அழத்தான் முடியும். அவர்களுக்கோ, அழுகை சிரிப்பின் முக்காடு சிரிப்பு அழுகையின் வேக்காடு. அழுகைப் போட்டியில் யாருக்கு முதல் பரிசு?. தடுமாறுது தமிழகம் அழுகாச்சி காவியத்தில் அமுக்கி எடுக்குது ஊடகம். சிரித்ததனால் நான் மனிதன் என்பது பன்னீரு சிரித்ததனாலேயே நீ மனிதனில்லை என்பது வெந்நீரு. நீ பெரிய குளமென்றால் நான் மன்னார் குடி! அம்மாவுக்கே நான்தான் ஆன்மா அடைக்கலம் தருமோ அம்மா ஆன்மா? மெரினா தியானத்தை கலைக்கும் சின்னம்மா! பேயைப் பற்…
-
- 5 replies
- 2.3k views
-
-
காதலென்று அலைந்ததில்லை கனவதில் மிதந்ததில்லை என்னோடு உன்னை கற்பனைக் கண்கள் காணும் வரை! காலம் உன்னை இனங்காட்ட காரணமில்லாமல் கரைகிறது என் மனம் உன் நினைவில்! பாராத உன்னுருவம் பார்க்கத் துடிக்குது என் பருவம் பார்த்த விழிகள் பூத்திருக்கு இமைகள் அசைக்காது.! இடியே வரினும் இசைக்காத என் செவிகள் ஏங்குதுன் காற்றிலாடும் சொல் வாங்க! அர்த்தமில்லா கீதம் கூட அற்புதமாய் காதில் விழுகுது! இடைவிடாது இடிக்கும் அந்த இதயம் கூட அமைதிகாக்குது இதமாய் உன் பெயர் உச்சரிக்க! இரவோடு வந்த உறக்கம் கூட இரந்து கேட்டும் இரக்கப்படமால் இல்லையென்று கிடக்குது.! மோதலுக்கு வரியெழுதும் கரங்கள் கூட காதலுக்கு வரியெழுதத் துடிக்குது! நடை பயில பஞ்சிப்பட்ட கால்கள்…
-
- 15 replies
- 2.3k views
-
-
[size=3] ஈழமெழுமெனப் போரிட்ட வீரப்பெண் சேனையை தூக்கித் தெருவில் வீசிய ஈழச்சனமே மாவீரர் நினைவேந்தக் கார்த்திகைக்கு மலர்தூவப் போவீரோ.. வாழ வழியேதுமற்றுச் சாகக் கிடந்தால் சுருக்கிட்டு சாவெனச் சொல்லும் ஈனச் சமூகமிது பசியால் துடிக்கும் குழந்தையைப் பெற்றவள் இதயத் துடிப்பறியா இனமே உடலைவருத்தி உலையேற்றினால் பாலியல் தொழிலாயிது ?[/size] [size=3] வயிற்றுக் கஞ்சிக்கு கைநீட்டினால் பிச்சைக்காரரென்கிறது உடலைக் கடித்துக் குதறி காசெறியும் காமப்பிசாசுகள் அதற்கும் விபச்சாரியென்கிறது தோள் சுமந்த எறிகணைகள் வெடித்துச் சிதறியபோது சுதந்திரப் பறவைகளென்றோம் தரைப்படை வான்படை கடற்படை கட்டிக் களமாடென சிங்களப்படை வீழ்கிறதென எக்க…
-
- 34 replies
- 2.3k views
-
-
நாற்றோடு காற்றுவந்து மோதும் - - கரைகழுவிபோகும் அலைகள் ஏதோ ராகம் பாடும்- - பூ ஒன்றின் இதழெடுத்து பொட்டிடு தோழி- - பொன்மாலையதன் வண்ணம் அள்ளிவந்து வாயிலை அலங்கரி! இராவென்ன பகல் என்ன சொல்லு? நீ இரவுக்குள் பகலாகி நில்லு! மழையென்ன வெய்யில் என்ன -சீ போ! வாழ்வென்ன பலமுறை வருமா? உந்தன் வாழ்வு முடிந்து போனால் -பூமி அதை உனக்கு திருப்பி தருமா? வானத்தை பாரடி தோழி- நீல நிறத்தை கரைத்தூத்தியங்கே நிலவுக்குள் பின்னால் சென்று ஒழிந்து கொண்டதாரடி? வானம் குடைபிடிக்கிறது பார்-பார்! அதன்கீழ் எனக்காய் நானொருமுறை - உனக்காய் நீ ஒருமுறை- - வாழ்ந்து பார்ப்போமே?- வா வா! வரைமுறையென்ற தாலிகட்ட பிறர்யார்? உந்தன் வாழ்வதற்க்கு வேலி போட அவர் யார்? புன்னகைக்க…
-
- 6 replies
- 2.3k views
-