Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அன்னையர் தினமதில் ஆயிரம்பேர் வாழ்த்திடுவர் அக்கம் பக்கம் எல்லாம் காணும் பெண்களுக்கு முகம் மலர வாழ்த்தி முகமன் செய்திடுவர் முலை தந்த அன்னை முனகிக் கிடக்கையிலே மனம் வந்து ஒன்றும் மாற்றுவழி செய்திடார் மக்கள் என்று கூறி மாய்மாலம் செய்திடுவர் மலர்ந்த முகத்துடனே மண்ணிற்குத் தந்தவள் மனம் கோண நடந்திடுவர் மதிகெட்டு நின்றிடுவர் மலர் ஒன்று வாழ்வில் மயக்கம் தந்தவுடன் மாற்றான் போல் நின்று மார்தட்டிப் பேசிடுவர் மக்களை பெறுகையிலும் மலர் மேனி நோவெடுக்க மற்றவற்றை எண்ணாது மனதாலும் காத்திடும் தாய் முதுமையின் கொடுமையிலும் மெலிந்த மனம் தளராது மேன்மைகள் செய்தே மேதினி விட்டகல்வாள் மாதெனும் மகத்தானவள் மாண்பில் மலையானவள்

  2. 1 இறுக்கி பற்றி பிடித்து இருந்த .. உன் கைகள் லேசாய் பிடி தளரும் .. போது நான் புரிந்து இருக்க வேணும் .. நீ வளர்த்து வருகிறாய் என்று .. மகனே ... 2 ஓடும் உன் மகனை ... பிடிக்கும் வயதில் நான் .. இல்லை மகனே .. முதுமை .! 3 அப்பா என்று என்னை நீ அழைத்தபோது .. இன்னும் ஒருமுறை கூப்பிட மாட்டானா .. என் பிள்ளை என்னை என்று ஏங்கிய.. என்னை இப்பொழுது உனக்கு ஒன்னும் .. தெரியாது போப்பா அங்கால என்கிறான் ... லையிட்டா வலிக்குது மகனே மனது ..! 4 என்ன உனக்கு தொப்பை எட்டி பார்க்குது .. என்று கேட்பவர்களுக்கு தெரியுமா .. அது உனக்காக வளர்த்து தொப்பை என்று .. நீ சிரித்து சறுக்கி விளையாட மகனே ..! 5 உன்னுடன் மிட்டாய்க்கு இட்டா .. சண்டையை விட உன் எச்ச…

  3. 9 நீ செய்யும் குழப்படி பார்த்து .... அப்படியே பேரனை போல என ... அப்பத்தா சொல்கையில் எனக்குள் ... ஓடும் ஒரு இனம் புரியா உணர்வு .. மகனே . 10 எனது சாப்பாட்டு தட்டில் .. இருக்கும் அப்பளத்தை எடுக்க .. நீ அம்மாவிடம் அனுமதி கேட்பது .. பயமா ...மரியாதையா என தெரியாமல் .. நான் மகனே . 11 நீ கேட்டு அம்மா கொடுக்காவிட்டால் ... நீ நின்று பார்க்கும் முறைப்பு பார்வை ... அதைகானும் அம்மா அப்படியே நீ .... உன் அப்பா போல கோவத்தில் என .. சொல்லும்போது நமக்குள் ஒரு ... திமிர் வந்துதான் போகுது மகனே .. 12 அம்மா அடிச்சுட்டா என முறைப்பாடு ... கேட்டுட்டு நான் அம்மாவை ஒரு தட்டு ... அதை பார்த்து நீ சிரிக்கும் சிரிப்பில் .. தொலைந்து போகிறது எனது துன்பம் ... மகனே . 1…

  4. நம்பிக்கைகள் கைகோர்த்து நடக்க எண்ணங்கள் இணையாக பிறக்க பல வண்ணங்கள் இழையோடிச் சிறக்க இரு உள்ளங்கள் உறவாடிப் பழகும் இனிமையான காலத்தின் பெயர்தான் 'காதல்' அப்படியான இனிதான பொழுதுகளை முன்னொரு நாளில்.... நீயும் நானும் பகிர்ந்திருந்தோம்! காதலையும் அன்பையும் அள்ளிக்கொடுத்த நீயேதான், பின்னொரு நாளில்.... பிரிவையும் வலியையும் வாரியிறைத்துவிட்டுப் போனாய்! நீ தந்துவிட்டுப்போன அந்த வலிகளைத் தாண்டி வெளியேவர... நான் பல ஜென்மங்கள் எடுக்க வேண்டியிருந்தது! இன்னும் என் இரவுகள்... என் தூக்கத்தை திருப்பித்தரவில்லை! இன்னும் உன் ஞாபகங்கள்... எனைத் தீயால் தீண்டுவதை நிறுத்தவில்லை! வலிகள் ஒருவனை வலிமையாக்கும்! எப்படியான துன்பத்தையும்... புன்னகையோடு வரவேற்கும் வல்லமையை, உன…

  5. காலமறியாக் கற்பூரங்களாய் காடுகளில் நடந்தவரே....! ஆளரவம் தொலைத்த அடர் வனங்கள் அன்றைக்கு மௌனித்து மயானம் பூண்டு ஆட்களற்றுப் போனது. ஆழகான புற்தரைகளின் பச்சையம் ஆட்களற்றுத் தனித்த பனித்துளியின் ஈரம் குருதித் துளியாகிக் காயத் தொடங்கியது. நீங்களும் வெடியாகி இடியாகி வெளியில் வராத ஒளியாகிப் போனீரென்றுதான் காலமழுதது. எனினும் போரின் கறைகள் காயாமல் கண்ணீரின் ஈரம் தோயாமல் நீங்களெல்லாம் வனமளப்பதான வதந்திகளையெல்லாம் மௌனங்கள் காடேற்றிக் கடந்தது காலநதி. உங்கள் நிழலைக் கூடத் தொட்டறியாத பேயெல்லாம் உங்களைப் பற்றி ஆய்வுகள் செய்தது அங்கென்றும் இங்கென்றும் அறிக்கைகள் கொடுத்தது. சொல்லியழ முடியாத் துயர் கண்ணில் நிறைந்தாலும் வ…

    • 2 replies
    • 719 views
  6. உங்களின் நினைவுகள்…..! காற்தடம் கரைத்து உப்பளக் காற்றிடை மிதந்து போர்த்தடம் தேடி உப்புக்காற்றின் உதைப்பில் உங்களின் நினைவுகள்.....! நெஞ்சினில் நிறைந்த நண்பரின் ஞாபக ஊற்றினில் நாட்குறிப்பினில் காற்றழுத்தக் காற்றழுத்தக் கரைதொட்ட அலையின் கரைமணலில் உங்களின் நினைவுகள்.....! நேற்று இவ் வெளியினில் நெஞ்சுயர்த்திப் போகிறோம் என்ற என் தோழியர் முகங்களில் பூத்திருந்து அப் புன்னகை அரும்பலில் உங்களின் நினைவுகள்....! காற்றில் நுளைந்து கடலில் கரைந்து – என் மூச்சில் நிறைந்து முகவரி மறுத்துப் பெயருமில்லாப் பொருளுமில்லா மெளனக் கிடக்கையில் மாவீரப் பெருமைகள் குவிய போனவென் தோழமைக் குரல்களில் உங்களின் நினைவுகள்.....! போற்றிட உம் பெருமைகள் பேசிடப் பேராயிரம் கவிதைகள் தோற்றன ஈற்…

    • 2 replies
    • 623 views
  7. ONE OF MY OLD POEM 1985 முதற் காதல் - வ.ஐ.ச.ஜெயபாலன் வாடைக் காற்று பசும்புல் நுனிகளில் பனிமுட்டை இடும் அதிகாலைகளில் என் இதயம் நிறைந்து கனக்கும். அன்னையின் முலைக்காம்பையும் பால்ய சகியின் மென் விரல்களையும் பற்றிக் கொண்ட கணங்களிலேயே மனித நேயம் என்மீதிறங்கியது. நான் இரண்டு தேவதைகளால் ஆசீர்வதிக்கப் பட்டவன். "பால்ய சகியைப் பற்றி உனது கவிதையில் ஒன்றுமே யில்லையே" என்று கேட்பான் எனது நண்பன். குரங்கு பற்றிய பூமாலைகளாய் நட்பை காதலை புணர்ச்சியை குதறிக் குழப்பும் தமிழ் ஆண் பயலிடம் எப்படிப் பாடுவேன் என்முதற் காதலை. கேட்கிறபாவி தன் மனையாளிடத்தும் சந்தேகம் கொள்ளுதல் சாலும் தெரியுமா? அடுத்த வீட்டு வானொலியை அணைக்கச் சொல்லுங்கள் ப…

  8. தன்னைப் படைத்த இறைவன் விண்ணைப் படைத்திருக்கக் கூடாது! விண்ணைப் படைத்திருந்தாலும் - பின்னே மண்ணைப் படைத்திருக்கக் கூடாது! மண்ணைப் படைத்திருந்தாலும் - அங்கே உன்னைப் படைத்திருக்கக் கூடாது! உன்னைப் படைத்திருந்தாலும் - முன்னே என்னைப் படைத்திருக்கக் கூடாது! என்னைப் படைத்திருந்தாலும் - என் கண்ணைப் படைத்திருக்கக் கூடாது!

    • 5 replies
    • 993 views
  9. எப்போது விடுதலை எம் கைகள் எப்பொழுது அவிழ்க்கப்படும்? நினைத்ததை எழுதவும் எழுதியதை மீண்டும் நாம் படிக்கவும் காலம் வருமா? என்ன பிழை செய்தோம் ஏனிந்த காலவரையறையற்ற தண்டனை கொச்சைப்படுத்தியோரை பேனா கொண்டு தாக்கினோம் இது தப்பா? நாலு பேர் சிரிக்க மஞ்சல் தடவினோம் நாலு பேர் இன்பம் பெற நீலம் தடவினோம் இது பெரும் தவறா? மாதங்கள் வந்தன வருடங்களும் வந்தன 16 வயசுக்கொண்டாட்டமும் வந்தது விடுதலையை எதிர்பார்த்தோம் அப்படியே எமது கோரிக்கை நிராகதியாய்க்கிடக்கிறது நம்வீட்டுக்கதவை தட்டும்வரை தூங்கிப்பழகிவிட்ட இனம் இங்கும் அப்படியே தொடர்கிறது........... இன்னும் இரு சொற்கள் எழுதினால் மரண தண்டனை கைகள் கட்டப்பட்டு வார்த்தைக்கு வார்த்த…

  10. அம்மா,, நான் உன் கருவறையில் உதைத்தது உன்னை நோகடிக்க அல்ல,, என்னை சுமக்கும் அன்பானவள் உன்னைக்கானவே.. பிஞ்சு வயதில் நான் கெஞ்சலாக அழுதது பசியினால் அல்ல,, பால் குடிக்கும் சாட்டில் உன் இதயத்தை முத்தமிட.. பள்ளிக்கு செல்லும் போதும் அழுதேன் அம்மா படிக்கும் கள்ளத்தால் அல்ல சில மணிநேரம் உன்னை பிரிகிரேனே என்ற துடிப்பால்.. திருமணத்தில் நான் அழுதேன் காதலில் தோற்றுப்போய் அல்ல,, கல்யாணம் உன்னிடத்தில் இருந்து என்னை பிரிக்குமோ என்ற பயத்தால்.. வெளிநாடு போகும்போதும் அம்மா நான் அழுதேன் உன்னை பிரிவதால் அல்ல பசியால் நான் அழுதபோது நீ பசிகிடந்து உன் கண்ணீர் மறைத்து என்னை காத்த தெய்வமே உன்னை நான் காக்கும் காலம் இதுவென்ற…

  11. Started by nunavilan,

    கொழும்பு எனது காயங்களை ஆற்றக்கூடிய எனது வார்த்தைகளை புரிந்துகொள்ளக்கூடிய எனது நியாயங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய நண்பர் ஒருவரை இந்த நகரத்தில் சந்திக்கக்கூடுமென எதிர்பார்க்கிறேன் தலையற்ற பனைகளுக்குள் வடலிகள் முளைக்குமென பறிக்கப்பட்ட வீடுகளுக்கு நாம் திரும்பவேண்டுமென அழிக்கப்பட்ட நகரங்கள் உயிர்க்குமென சிதைக்கப்பட்ட கிராமங்கள் செழிக்குமென சொல்லக்கூடிய ஒருவரை கடற்கரை இருக்கைகளில் தேடுகிறேன் காணாமல் போனவர்கள் திரும்ப வேண்டுமெனவும் பிள்ளைகளை இழந்த தாய்மாரின் கண்ணீர் துடைக்கவேண்டுமெனவும் கொல்லப்பட்டவர்களின் கனவு மெய்யாகவேண்டுமெனவும் சொல்லக்கூடிய ஒருவரை இந்தத் தெருக்களில் சந்திக்க காத்திருக்கிறேன் யாவற்றின் பிறகும் எனது தாய்மொழியை மதிக்கும் ஒருவரை எனத…

  12. எத்தைகைய ஒழுங்குமற்ற எனது சொற்றொடர்களை நீங்கள் கவிதை எனக் கொள்க. பின் நவீனத்துவம் எனக் கொண்டாலும் நலமே..!! சாமத்தில் வீடுசேர்ந்து வைகறையில் தலைசாய்ந்து நண்பகலில் கண்விழித்து - தாமதமுணர்ந்து தவித்து அரக்கபரக்க அங்கம் கழுவி மடித்துவைத்த உடுப்பணிந்து அழுக்கேறிய இருசக்கரத்திலமர்ந்து சாலையோர பெட்டிக்கடை தேடி சிகரெட்டுடையும் சிறுசமோசாவையும் சிற்றுண்டியாக்கி சிக்னலில் சிக்ககூடாதென சிரம்தாழ்த்தி சிவன் தொழுது அண்ணாசாலை நோக்கி வாகனம் பாய வழியில் குறுக்கிடும் வழிப்போக்கர்களை வைது வெம்மையால் வியர்வை வழிய - ஓடோடி அலுவலகத்தின் வாசல் கதவை திறக்க சில்லெனப் பாயும் குளிர்காற்று !!

  13. இசையை ஒலியினாலான கலை வெளிப்பாடு என வரையறுக்கலாம். இசையில் நல்ல இசை கெட்ட இசை என்பதை வரையறுப்பது மிகவும் கடினம். இதற்குக் காரணம் இசை குறித்த உணர்வு தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்பு சார்ந்தது. சில வகையான ஒலிகள் நம் செவியில் இரசிக்கத்தக்க உணர்வை உண்டாக்குகின்றன. வேறு சில வகையானவை இரைச்சலாக உணரப்படுகின்றன. நல்ல இசை குறித்த வரையறை பெரும்பாலும் நாம் எப்படிப்பட்ட இசையைக் கேட்டு வளர்ந்திருக்கிறோம் என்பதைப் பொருத்தது. மேற்கத்திய செவ்வியல் இசையைக் கேட்டு வளர்ந்தவர்களுக்கு கர்நாடக இசையோ அராபிய இசையோ உடனடியாக இரசிக்கும்படியாக இருப்பதில்லை. காரணம் இரண்டு வேறு செவ்வியல் இசைகளுக்குகிடையே ஒலியிலான அடிப்படை வேறுபாடுகள். இந்த வேறுபாடுகள் குறித்து பின்னர் ஒரு நாள் இன்னும் கொஞ்சம் விரிவாகப…

    • 3 replies
    • 2.4k views
  14. மாலை ஒன்று நான் தொடுக்க மலர்பறிக்கப் போயிருந்தேன். கைநீட்டிக் காம்போடு - நான் பூ பறிக்கு முன்னே 'பூ கேட்டது...' 'நாளை நான் வாடிப்போவேன் இன்று என்னை வாழவிடு' பூபதியின் நினைவுநாள் என்று நான் சொன்னதுமே நேற்று என்னை மொட்டோடு பறித்திருந்தால் பூபதித்தாயின் கழுத்தில் இரண்டு நாள் மாலையாய் வாழ்ந்திருப்பேன். வளைந்து கொடுத்தது பூ என்னை வாரி எடுத்துக்கொள் என்று. பூபதித்தாய் அவள் உருகி பூத்த தமிழினத்தின் வாடாத நினைவுப் பூ. வாழ்க்கையே உணவுக்காக வாழும் பிறப்பில் இனத்தின் வாழ்வுக்காய் உணவு மறுத்து உதிரம் உறைந்து உடலை உருக்கி உயிரை காற்றோடு கலந்து மாமாங்கப்பிள்ளையார் உள்ளே கற்சிலையாய் இருக்க உண்மை தெய்வமாய் நீ வீதியிலே கிடந்ததை நெஞ்சம் மறக்குமோ தாயே...? தத்த…

  15. நண்டலையும் கடற்கரையில் அன்று நாம் நின்று கதறியதை வேவு வண்டு விமானம் படமெடுக்க கண்ட பின்னும் சிங்கள தேசம் குண்டுகள் ஏவியெம்மைக் குதறியது. உலக நாடுகளின் தாராள மனசு அள்ளிக் கொடுத்த ஆயுதத்தை முள்ளிவாய்க்கால் நிலம் மீது சொல்லியழித்தார் தமிழினத்தை சிங்களதேசக் கொலைஞர்கள். சிதறிய சதைத்துண்டுகளுள் சிக்கிக் கிடந்த அடையாள அட்டை அது அப்பாவை அடையாளம் காட்டியது. ஐயோவென்று கதறிய அம்மா கையிலிருந்த அடையாள அட்டையோடு – அவள் கையும் பறந்தது. அருகிருந்த தங்கையோ அனுங்கியனுங்கிக் குனிந்து கொண்டே அவள் கிழிந்த வயிற்றுக்குள் குடலை அனுப்பினாள். நான்கு நிமிடத் துளிகள் கடந்து நான் கண்டேன் பேரவலம் அம்மாவும் தங்கையும் சதைத்துண்டங்களாய் ந…

  16. நிலவின் நிர்வானத்தால் கடல் தினவு கொள்ளும் இரவுகளில் உன்னிரு இதழ்களிலும் வழிகிறது சுயத்தை தின்றுவிடும் சூட்சுமம்.. நம் அன்பு தொலைந்துபோன எட்டாவது வர்ணம் மழைப்பொழுதில் விழுந்து தொலைக்கும் மின்னலின் கனம் புல்நுனிகளில் திரளும் நீர் யாருமறியாமல் எங்கிருந்தோ எழுகிறது மறைகிறது உனக்குள் தொலைந்து போதலும்.. அபத்தப் பொழுதொன்றில் இளக்காரம் சுமந்து நெளியும் உதடுகளில் நேசத்தைக் கொட்டிவிட முனைந்து தோற்றுவிடுதலுடன் நீள்கிறது நமக்கிடையிலான களவொழுக்கம்.. வியர்வை நாற்றம் அறிய பயணித்து இடைவெளிகளில் பலியாகிக் போகின்றன ஓசையிழந்த முத்தங்களும் தீண்டல் தவிப்புகளும் துப்பிவிட்ட நேசங்களும்.. எட்டாவது வர்ணம் கொள்ளுதல் முரண் முரண்களால்தான் வாழ்வு வீடுபெறடைகிறது நம் அன்ப…

  17. சந்தன பேழைக்குள் போன ஒரு சரித்திர நாயகன். திராவிட வீரத்தை மீண்டும் காட்டிய இந்த நூற்றாண்டின்-ஒரு தமிழ் மகன். விழிகள் மூடாமல் விடுதலைக்காய் வழிகள் தேடினான் வலிகள் சுமந்து-எதிரி குகையில் வாழ்ந்து இலக்கு தாக்குவான். நகைச்சுவை பேசி நண்பனாய் பழகுவான் நறுக்கென பேசி கடமையில் வெல்லுவான். அமைதியும் ஆற்றலும் இவனிடம் தேடலாம். புராணத்தில் வீரரை கற்பனையால் கண்டோம், புலி மகன் இவனால்-இன்று கண்முன்னே கண்டோம். தலைவனின் சிந்தனையை செயலாக்கினான் -இவன் செயல்கள் எல்லாம்-எதிரிக்கு பெரும் புயலாக்கினான். விடுதலை பயணத்தில் வீரமாய் வாழ்ந்த புலி - இன்று விதையாக வீழ்ந்தது எதிரியின் சதி. விடுதலை வீரனே-நீ வீழ்ந்தும் உயிர் வாழ்கிறாய். ஒற்றை தமிழன் வாழுமட்டும் நீ …

  18. வெண் மணற் பரப்பில் கால் புதைய கனவுகள் சுமந்து நடக்கையில் காலில் இடறிய கல்லின் காயத்தில் கண்ணீர் கனதியானது காலங்கள் காத்திருக்கலாம் என் காயம் ஆற்ற - ஆனாலும் இழந்த நேரத்தின் இன்பங்கள் கணக்கில் வாராது கனவுகளாய் நீரில் போட்ட கோலம் நினைவில் அழிந்து போவதுபோல் காலத்தின் கணக்குகளும் - ஒருநாள் காலாவதி ஆகலாம் எண்ணற்ற எண்ணங்களின் குவியல் எப்போதும் என்நெஞ்சிருக்க போராடும் தெம்பின்றி போருக்கும் எதிரே யாருமின்றி பொங்கிடும் மனதின் பொழுதுகள் போக்கிடமின்றி போட்டிபோட ஏற்புடையது அல்லவெனினும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் எப்போதும் என்னுடனே இருக்கும் சிதைந்துபோன கனவுகளின் சேமிப்பின் நினைவுகள்

  19. மச்சி நீ கேளு கதையை ... நேற்று இதால போனவா .. இன்னைக்கு என்னை கடக்கையில் .. சைக்கிள் வேல் அடித்து போறா.. நான் பார்க்கவில்லை அவாவை .. நினைப்படி உனக்கு என நண்பிக்கு சொன்னா .. சிங்கிசா பாவடை ...லுமாலா சைக்கிள் ... முன்னுக்கு சின்ன கறுத்தக்கூடை .... பச்சை தொப்பி போட்டு நெற்றியில் ... கோபுரம் போல ஒட்டு பொட்டு .. ஒற்றை பின்னல் கட்டி அழகான சிலேட்டு ... செம அழகடா திரும்பி பார்க்கும்போது ... எங்க படிக்கிறாள் என்ன செய்கிறாள் ... யாருடைய மகள் ..யாருடைய பேத்தி ... அண்ணன் தம்பி இருப்பாங்களா .. ஒருவளை அவங்கள் எனக்கு பழக்கமா .. நேற்றுவரை இருந்த புத்தன் மனம் ... எப்படி மாறியது இன்று கண்ணனா .. நாளைக்கு வா மச்சி ஒரு ரவுண்டு போவம் .. ஆளின் வீடு பார்ப்பம் எந்த தெருவென .. பொறு பொறு வைக்காத போன…

  20. நான் அவர்களைத் தேடிக்கொண்டிருந்தேன்! கோயிலுக்குப் போனேன்! அங்கே அவர்கள் இல்லை! தேவன் திருச்சபையிலும் அவர்கள் இல்லை! மசூதிக்குள் சென்றும் எட்டிப்பார்த்தேன்! அங்கும் அவர்கள் இல்லை! இல்லவே இல்லை! கனத்த மனத்துடன் திரும்பிக்கொண்டிருந்தேன்! அந்தோ! அவர்கள்!! ஆம்! அது அவர்களேதான்!! அது அவர்களின் சத்தமேதான்!!! அவர்கள் வெளியிலேதான் நின்றார்கள் - இல்லை அன்போடு விளையாடிக்கொண்டிருந்தார்கள்!! குழந்தைகள்!!! வாலி 14 ஏப்பிரல் 2014 11:30 AM

  21. காற்று கொதிக்கிறது நீ மௌனத்தை கரைத்திருக்கிறாய் மரங்களும் ஏரிகளும் கூட எரிந்துபோகலாம் இனி.. ஏன் இந்த இளவேனில் பொழுதில் உன் விழிகள் துயரப் பாடலை கேட்கிறது.. நேற்றைய உறைபனிவிலக்கி, ஒழுகும் கதிர்கள் தரைகளை தழுவுவதைப் பார் வீட்டுக் கூரைகளில், இலைபோர்க்கும் மரங்களில் மின்சாரக்கம்பிகளில் பெயர் தெரியாத பறவைகளின் மகிழ்வைப் பார் நீ புல்லாங்குழல். காற்றை புகவிட மறுக்கிறாய்.. தூசிகளை நிரப்பி பெருமிக் கிடக்கிறாய் அநாதையாகி அலைகிறது நேற்றைய உன் குழலோசை.. நேற்றுக்கும் நாளைக்கும் இடைப்பட்ட பொழுதொன்றை மென்றுவிட்டு போகிறாய்.. எப்போது அசைமீட்கப்போகிறாய்....?

  22. இதே... சிவந்த‌ மண்ணில், புலியின்... ஒரு வெடிக்கு பயந்தோடிய... நாதாரிகள், இன்று... "இடுப்பில் கை வைத்து அதிகாரம்," பண்ணுகின்றார்கள். பொறடா... பொறு, உனக்கு... வட்டி, குட்டியுடன்... தர, ஒருவன் வருவானடா... அந்தச் செய்தியைக் கேட்ட பின் தான்... என் மூச்சடுங்கும்.

  23. "இசை" என்ற தமிழ் சொல் அற்புதமானது. இசயின் பொருள், இலக்கணம், நோக்கம், பயன் எல்லாமே அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இசைக்கு அடிப்படையான ஸ்வரங்கள் ஒவ்வொன்றும் வேறுபட்டவை. அவற்றின் ஒத்திசைவில் இசை பிறக்கிறது. இசைக்கு வேறுபட்டவை தேவை. எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தால் இசைவும் இல்லை. அதனால் பிறக்கும் இன்பமும் இல்லை. அதனால் தான் மனிதன் முதற்கொண்டு எல்லா படைப்புக்களும் வேறுபாடுகளோடு, விதம் விதமாக, வகை வகையாக படைக்கப்பட்டிருக்கின்றன. மனிதன் தான் சக படைப்புகளோடு ஒத்திசைகிற போது வாழ்க்கை இசையாகிவிடுகிறது. துன்பம் என்பது ஆபசுரம். ஒத்திசைவில் எங்கோ தவறு நடந்திருக்கிறது என்று பொருள். இசை ஸ்வரங்களுக்கு இடையே மட்டுமல்ல, முரண்பட்ட அனைத்துக்கும் இடைய…

    • 0 replies
    • 1.1k views
  24. அன்புத் தோழியின் மரணம் தரும் துயரோடு....! 05.03.2014.., அழகிய வாழ்வை - மரணம் அள்ளிக் கொண்டு போகக் காத்திருக்கிறது. அழகான உனது புன்னகையும் இனிமையான உனது குரலின் கீதமும் எங்கள் காதுகளிலிருந்து இறங்கி மெல்ல மெல்லத் - தனது இறுதிப்பயணத்தின் கதையை எழுதத் தொடங்கியிருக்கிறது.....! 1990...., மாற்றத்தின் பெறுமதிகள் மண்விடுதலை யாகத்தில் வரியுடுத்திய தலைநிமிர்வின் அடையாளம் நீயுமாய் உனது நிமிர்வின் வீரம் இன்னும் நிழலாய் தொடர்கிறது....! 1991...., ஆனையிறவும் அகிலன் வெட்டையும் அந்த உப்பளக்காற்றின் ஈரமும் உன் தோழ் சுமந்த கனரகத்தின் கனவுகளையும் காலம் தன் கைகளில் பொத்தி வைத்துக் காக்கும் பொக்கிசம் நீ. எல்லோர் போலவும் உனக்கான வாழ்வும் வசந்தங்களும் ஆற்றல் மிக்க குழந்தைகளும…

  25. Ranger with Tusks of Killed Elephant, Amboseli 2011 © Nick Brandt கென்யா நாட்டின், கொடும் கோடையிலும், பனிக் கவசம் சுமக்கின்ற, கிளிமாஞ்சரோ மலைக்குன்றின், அடிவாரத்தில்………! பிளெமிங்கோ பறவைகள், உழுது கோடு வரைந்த நிலம், பாளம் பாளமாய், பிளந்து கிடக்கிறது! பிளந்த நிலத்தின் வடுக்களுக்குள், புதைந்து மறைகின்ற, சிறு தவளைக் குஞ்சுகள் கூட, கதிரவனின் கொடுங்கரங்களின், வெம்மையை உணர்கின்றன! நாளைய மேகங்களின், வருகைக்காக, நம்பிக்கை சுமந்து, அவை வாழ்ந்திருக்கின்றன! இரக்கமில்லாத தரவைகளில், கருக்கட்டி வளர்ந்த, பெரிய யானையின் தந்தங்கள், சிறிய மனிதனொருவனின், துப்பாக்கியின் வெற்றிக்குச், சாட்சியாகிக் கிடக்கின்றன! தனது தோள்களில் கூடத், தூக்கிவைக்க முடியா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.