Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பருத்தித்துறை யூராம் பவளக்கொடி பேராம் பாவைதனை யொப்பாள் பாலெடுத்து விற்பாள் அங்கவட்கோர் நாளில் அடுத்ததுயர் கேளிர்! பாற்குடஞ் சுமந்து பையப்பைய நடந்து சந்தைக்குப் போம்போது தான்நினைந்தாள் மாது: "பாலையின்று விற்பேன் காசைப்பையில் வைப்பேன்" முருகரப்பா வீட்டில் முட்டைவிற்பாள் பாட்டி கோழிமுட்டை வாங்கிக் குஞ்சுக்குவைப் பேனே புள்ளிக்கோழிக் குஞ்சு பொரிக்குமிரண் டைஞ்சு குஞ்சுகள் வளர்ந்து கோழியாகும் விரைந்து விரந்துவளர்ந் திடுமே வெள்ளைமுட்டை யிடுமே முட்டைவிற்ற காசை முழுதுமெடுத் தாசை வண்ணச்சேலை சட்டை மாதுளம்பூத் தொப்பி வாசனை செருப்பு வாங்குவேன் விருப்பு வெள்ளைப்பட் டுடுத்து மினுங்குதொப்பி தொடுத்துக் கையிரண்டும் வீசிக் கதைகள்பல பேசிச் சுந்தரிபோல் நானே கடைக்குப்போ வேனே …

  2. அடியே, உன்னத்தானடி ஒருக்கா பாரடி ஒரு பதிலாச்சும் சொல்லடி ஒன்பது மாசமா துரத்திரனடி உன் தோழியவாச்சும் கண்ணுல காட்டேன்டி வயசு போன வாலிப பசங்களோட சேர்ந்து குறும்பு காட்டி உசுப்பேத்துறேயடி பேசாப் பொருள பேசி வெக்கப்பட வைக்கிறயடி வெள்ளிக் கிழமை விரதத்தை முடிச்சு வைக்காதேயடி ஊருக்கு முன்னே ஊர் கதை சொல்லி வரும் கிழவியடி நீ வெட்டுற எடத்துல வெட்டி, குட்டுற எடத்துல குட்டி, தட்டுற எடத்துல தட்டிக் கொடுக்குற தங்கமே இணையக் கடலில மூழ்கவிடாம நல்ல கரை சேர்க்க வந்த நாவாய் பெண்ணே பல்பொடி தேடும் முன்னே பாய்ந்து வருவேன் உனை பார்த்து சிரிக்கத்தானே நாடு கடந்தவரை நாட்டிலினைக்கும் நறுமுகை நீயே காலத்தின் கருவூலம் கட்டாயம் விதைக்க வேண்டும் வரலா…

  3. யாழ் அது எனது வாழ்வு அதன் உறவுகள் எனது உடன் பிறப்புக்கள் யாழ் எனக்கு எல்லாம் தந்திருக்கிறது ஐயா அண்ணன் அக்கா தங்கை தம்பி மாமன் மச்சான்......... யாழ் எனக்கு தாய் அமைதி வழி நடந்து அடிவாங்கி ஆயுதம் தூக்கி நரித்தனமாய் அழிக்கப்பட்டு உருக்குலைந்து இனி என்ன செய்ய என்ற நிலையில் நான் சாய்ந்த மடி யாழ்........... யாழ் என் தங்கை போல அழகு செய்ய ஆசை நடந்த நல்லவை அனைத்திலும் நானும் பங்காளி ஆபத்து வந்தபோது காவலன் யாழ் என் பெண்டாட்டி போல அதன் அருமை எனக்கு தெரிவதில்லை எனது பலவீனங்களை நான் ஒரு போதும் வெளியில் சொல்வதில்லை யாழில்லையென்றால் நான்? சொல்லமாட்டேன்.............. அவள் வாழிய பல்லாண்டு....... தமிழிருக்கும் வரை அவள் இருப்பாள்.

  4. அகவை பதினாறு காணும் யாழ் மகளே நீ வாழி . .கற்றோரும் மற்றோரும் கத்துக்குட்டிகளும் காளைகளும் கன்னியரும் .கற்றுத் தெளிந்தோரும்.. கற்க வருபவருக்கும் நீ கலைமகள். கண்ட நாள்முதல் மீண்டும் மீண்டும் காண வைத்தாய் .. அனைவரையும் அணைக்கும் ஆலமரம் நீ.. ஜாதி மத பேதமின்றி சகலருக்கும் சரி சமமாய் பிறப்பிலிருந்து இறப்பு வரை அறிவிக்கும் கருவியாய்.. ஊரிலிருந்து உலக செய்திவரை அத்தனயும் தரும் அமுத சுரபியாய் . .பருகத்தேவிட்டாத தேனாய் நாளும்பொழுதும் வளரும் யாழ் களமே நீ வாழி நான் மட்டும் மல்ல ஊரும் உலகும் என் பேரன் பேத்திகளும் கொள்ளுபேரன் பேத்திகளும் உன் பேர் சொல்ல வேண்டும். என்ன துயர் வரினும் எழுகவே யாழ் களமே

    • 10 replies
    • 813 views
  5. கருத்துக்களம் -- கற்றுக்குட்டிகளின் நந்தவனம் ! ஓடியாடித் திரியலாம் ஒளிச்சுப் பிடிச்சு விளையாடலாம் கும்மியடிச்சு பாடலாம் குலவையிட்டு மகிழலாம் கற்றுக்குட்டிகளின் நந்தவனம் -- இது கற்றோர்க்கு அய்யனின் குறளோவியம் ! வண்ணங்கள் வீசும் முகப்பு வந்தாரை வரவேற்கும் சிறப்பு நறுந்தேன் மலர்களாய் கலைஞர்கள் நாடிடும் வண்டுகளாய் வாசகர்கள் ! தூரமாய் வாழ்ந்திடும் மனிதர்கள் - முகம் தெரியா உறவுகளின் மரண்ங்கள் துடித்தே வந்திடும் பண்பாளர்கள் -- அவர் துயர்தனைப் பங்கிடும் பங்காளிகள் ! சக உறவுகளையும் நேசிக்கிறோம் செமையாய் சன்டையும் போடுகிறோம் சுவையாய் பிரியாணிகள் செய்திடுவோம் சுடுதண்ணி வைப்பதில் சொதப்பிடுவோம் ! இரவே காணாத யாழ் இணையம் -- இதில் எங்கே தோன்றும…

    • 13 replies
    • 1.3k views
  6. காற்று கொதிக்கிறது நீ மௌனத்தை கரைத்திருக்கிறாய் மரங்களும் ஏரிகளும் கூட எரிந்துபோகலாம் இனி.. ஏன் இந்த இளவேனில் பொழுதில் உன் விழிகள் துயரப் பாடலை கேட்கிறது.. நேற்றைய உறைபனிவிலக்கி, ஒழுகும் கதிர்கள் தரைகளை தழுவுவதைப் பார் வீட்டுக் கூரைகளில், இலைபோர்க்கும் மரங்களில் மின்சாரக்கம்பிகளில் பெயர் தெரியாத பறவைகளின் மகிழ்வைப் பார் நீ புல்லாங்குழல். காற்றை புகவிட மறுக்கிறாய்.. தூசிகளை நிரப்பி பெருமிக் கிடக்கிறாய் அநாதையாகி அலைகிறது நேற்றைய உன் குழலோசை.. நேற்றுக்கும் நாளைக்கும் இடைப்பட்ட பொழுதொன்றை மென்றுவிட்டு போகிறாய்.. எப்போது அசைமீட்கப்போகிறாய்....?

  7. யாழிளையா….! கம்பீரம் மொட்டவிழ்க்கும் கட்டழகா! நெடிதுயர்தல், நீள் வளர்தல் அனைத்துமாய் நின் மாற்றம் குரலொலியில் தெரிகிறது ஆண்மையின் ஏற்றம் செறிந்த பலம் குவிந்து நிமிர்கிறது நின் மார்பு அகண்ட பெரு வெளியில் விரிகின்றன உன் தோள்கள் யாழிளையா….! கம்பீரம் மொட்டவிழ்க்கும் கட்டழகா தமிழேந்தி வலையுலவும் மெட்டழகா பதினாறின் விடலையே பயமேது உனக்கு பால் வடியும் முகத்தில் அரும்புதடா மீசை பக்கவாட்டு கன்னங்களில் படருதடா புற்கள் இலக்கியத்தில் உனைச் சொன்னால் இரும்பூக்கும் என் சொல் இன்றுனக்கு பதினாறாம் இளையவனே! தவழ்பருவம் முடித்துவிட்டாய்.. தமிழேந்தித் திரிந்து தரணியை வரி அமிழ்ததொன்றே அவ…

  8. நித்தம் எங்கள் முத்தம் வந்து சத்தம் போட்டு-எம்மை துயில் எழுப்பினாய், ஆதவன் மறையும் வேலை அமைதியாய்-உன் அலையோசை எழுப்பிஎம்மை தாலாட்டினாய், நாம் பிறந்து வளர்ந்தது உன் உன்மடியில், எங்களை பெற்றவள் மடியில் வாழ்ந்ததை விட-எம் பசிபோக்க உன்மடியில் தானே தாயே நாம் இருந்தோம், நீ இறவாத வரம் பெற்ற தாயம்மா, எம்மை வாழ வைத்த கடவுள் கடலே நீயம்மா. என்றும்போல் அன்றும்தானே-எம்மை அலையோசை தாலாட்டி அமைதியாய் உறங்கவிட்டாய் அன்னையாய்-எம்மை அரவணைத்து காத்தவளே, உன் அலையனுப்பி-எம் உறவளித்ததேனோ? தாயே, அன்றும் உன்னை நம்பித்தானே உன் கரைமேலே கண்மூடினோம், ஊர்புகுந்து உறவளித்தாய் உரெல்லாம் பிணம் விதைத்தாய், என் அப்பாவை க…

  9. 'வேப்பம் பூ மிதக்கும் எங்கள் வீட்டு கிணற்றில் தூர் வாரும் உற்சவம் வருடத்துக்கு ஒருமுறை விசேஷமாக நடக்கும் ஆழ நீரினுள் அப்பா மூழ்க மூழ்க அதிசியங்கள் மேலே வரும் கொட்டாங்குச்சி,கோலி, கரண்டி துருபிடித்த கட்டையோடு உள்விழுந்த ராட்டினம், வேலைக்காரி திருடியதாய் சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்' சேற்றுக்குள் கிளறி எடுப்போம் நிறையவே, 'சேறுடா சேறுடா' வென அம்மா அதட்டுவாள் என்றாலும் சந்தோசம் கலைக்க யாருக்கு மனம் வரும்? "படை வென்ற வீரனாய் தலைநீர் சொட்டச் சொட்ட அப்பா மேலே வருவார். இன்று வரை அம்மாவும் கதவுக்கு பின்னாலிருந்துதான் அப்பாவோடு பேசுகிறாள். கடைசி வரை அப்பாவும் மறந்தேபோனார் மனசுக்குள் தூர் எடுக்க"... #விகடனில் ப…

    • 9 replies
    • 3.2k views
  10. நாலிரண்டு திக்கிருந்தும் - நல் அருவிகளாய் ஊற்றெடுத்து யாழெனும்...... ஆழியிலே சங்கமித்து ஆனதுகாண் அருஞ்செல்வம் மானமது காக்கும் மறக்குலத்தின் மாவிளக்கே தேனமிழ்தே தாயகத்தின் மணம் உணர்த்தும் தனிமலரே திசை வெளிகள் உன் உறவொளிரும் தீந்....தமிழால் யாழ் இசைக்கும் நரம்பொளிரும் பாரொளிரும் பருவமது பதினாறின் பேரழகே! நாமொளிரக் களமுவந்த யாழ் அரங்கே நீ வாழீ. வானமெனத் தமிழ் பரந்த வலையுலகத் திருவே, ஊனுனதாய், உளமுனதாய் கானமிது எழுகிறதே கண்மணியே..... ! எம் கவின்வனமே! காலவெளி கடந்தும், காற்றுவெளி நிறைந்தும் நீ ஆனதென வாய்கள் மலர்ந்தும் வாழிய நீ பல்லாண்டு

    • 15 replies
    • 1.2k views
  11. "யாழ்" என் காதலி கனவுகளின் பெருவெடிப்பில் கண்டுகொண்ட களமிவள் கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருக்கவில்லை இருந்தும் என்னைக் கவர்ந்துகொண்டாள் - மோகிக்கவும் முக்குளிக்கவும் கூடச்செய்தேன் விளைவு, என் கிறுக்கல்களையும் கருக்கட்டிக் கொண்டாள்.. களத்து மாற்றங்களையும் கருவறுப்புகளையும் கூடத் தன் காலவோரையில் கல்வெட்டாக்கினாள் - விருந்தினர்களாய் வரும் வேடந்தாங்கல்களுக்கும் விளைநிலமானாள் நச்சுக்களையும், வித்துக்களையும் கூடத்தன் கர்ப்பத்தில் சுமந்தாள்.. வேர்கள் இன்னும் அப்படியே தான் இருக்கின்றன அறுப்புக்களும், விதைப்புக்களும் தொடர்ந்தாலும் அவள் அப்படித்தான் அவளுக்கு ஆயிரம் குழந்தைகள் இருந்தாலும் என் காதலி அவளின் கரம்பிடித்துக் கரைசேர்ந்தவனல்லவா நான் ..! எண்ணி…

    • 18 replies
    • 1.3k views
  12. இருண்டு போய்க் கிடந்த, அமாவாசை இரவொன்றில், வெளிச்சத்தின் தேவை கருதி, வந்துதித்த நிலவு நீ! வானத்தின் சந்திரன் கூட, விடுமுறையில் செல்வதுண்டு, இரவும் பகலும், உறங்காத விழிகள் உன்னுடையவை! நான் பிறந்த தேசத்தின், அழகைப் போலவே, நீயும் வித்தியாசமானவள்! அதனால் தானோ என்னவோ, உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது! வானுயர்ந்த மலைகளோ, வளம் கொழிக்கும் நதிகளோ, வெண்பனி பொழியும், தண்மை காவிய மேகங்களோ, அங்கிருக்கவில்லை! வாடைக்காற்றும், வியாபாரக் காற்றுக்களும், காவி வருகின்ற மேகங்கள், கருக்கட்டினால் மட்டும், மழை பெறுகின்ற தேசம்! இருந்தாலும், வானுயர்ந்த பனைகளும், வளம் கொழிக்கும் வயல்களும், அந்தத் தூவானத்திலும், பிறப்பெடுத்து வாழ்ந்தன! வானம் வஞ்சித்து வ…

  13. வண்ண முகம் கொண்டவளே வடிவழகு யாழ்களமே கண்ணழகு கொண்டவளே கருத்தூன்றிப் பார்ப்பவளே பன்முகம் கொண்டவளே பவளவாய்ச் சொல்லமுதே பாடல் புனைகின்றேன் பாராட்ட உன்னையடி பதினாறு வயதில் பாவைநீ பார்த்து மயங்கிடும் அழகோடு பருவ எழில் பொங்க பார்ப்பவரை உன்பின்னே அலைய வைக்கின்றாய் கோல மயில் உன்னழகைக் கண் குளிரக் காணவென்றே கோடி மக்கள் நாடித் தினம் காலநேரமின்றி கண் விழித்து வருகின்றார் கருத்தூண்றி உன்னைக் கவனித்தும் வருகின்றார் தம் திறமை காட்டி உன்னைக் கவர்ந்திட தம்மால் முடிந்த வரை உன் தாள்களில் வரைகின்றார் ஆசை மனம் காட்டி ஆவலொடு நிதமும் ஆர்பரிக்க நிற்கின்றார் ஆனாலும் நீயோ பகட்டில்லாப் பாவை அனைவரையும் அரவணைத்து ஆசைமுகம் காட்டாது அன்பு மனம் காட்டி ஆண் பெண் பேதமின்றி அணைத்த…

  14. கிட்டு உன் பெயர் சொன்னபோதே சட்டென வாயெடுத்து மாமா என்று சொல்லும்-உன் இறப்பின் பின் பிறப்பெடுத்த மழலைகளும். நீ மரணித்துப்போன மனித பிறப்பல்ல, மண்டியிடாத மனிதராய் விடுதலை வாழ்வை வாழ கற்றுக்கொடுத்த வரலாற்று பிறவி, வரலாறுகளை வாரி வாரி கற்றுக்கொண்டாய்-உன் வாழ்வை எமக்கு வரலாறாய் வழி காட்டிவிட்டாய். எங்கள் விடுதலை போருக்கு நீ ஒற்றை பனைமரம். காற்றை கிழித்த சன்னங்கள் சொல்லும்-உன் களங்களின் வீரத்தை, கழுத்தில் தொங்கிய புகைப்பட கருவி சொல்லும்-உன் கலைகளின் காவியத்தை, போரியல் மரபுகளுள் போராடிய போர்மகனே எதிரி சொல்வான்-உன் அன்பான அரவணைப்பை, கிட்டண்ணா கிட்டண்ணா என்று சொல்லி கட்டப்பொம்மனையே மறந்து போனோம், மண்ட…

  15. கிட்டு உன் பெயர் சொன்னபோதே சட்டென வாயெடுத்து மாமா என்று சொல்லும்-உன் இறப்பின் பின் பிறப்பெடுத்த மழலைகளும். நீ மரணித்துப்போன மனித பிறப்பல்ல, மண்டியிடாத மனிதராய் விடுதலை வாழ்வை வாழ கற்றுக்கொடுத்த வரலாற்று பிறவி, வரலாறுகளை வாரி வாரி கற்றுக்கொண்டாய்-உன் வாழ்வை எமக்கு வரலாறாய் வழி காட்டிவிட்டாய். எங்கள் விடுதலை போருக்கு நீ ஒற்றை பனைமரம். காற்றை கிழித்த சன்னங்கள் சொல்லும்-உன் களங்களின் வீரத்தை, கழுத்தில் தொங்கிய புகைப்பட கருவி சொல்லும்-உன் கலைகளின் காவியத்தை, போரியல் மரபுகளுள் போராடிய போர்மகனே எதிரி சொல்வான்-உன் அன்பான அரவணைப்பை, கிட்டண்ணா கிட்டண்ணா என்று சொல்லி கட்டப்பொம்மனையே மறந்து போனோம், மண்ட…

  16. அம்மாவுக்காய் சில வரிகள் ----------------------------------- அம்மா, சும்மா எல்லோரும் காணும் கடவுள், என் அம்மா, மனித உருவில் நான் கண்ட தெய்வம், என்னை சுமந்தபோது-அவள் கருவறை நிறைந்திருந்தது, வறுமையால்-அவள் வயிறுமட்டும் வெறுமை, ஒற்றை வயிற்ரை நிரப்ப முடியாதவள், பெற்ற என் வயிற்ரை போராடினாள், பற்றைக்குள் செத்த மரங்களின் குச்சிகளை-தன் வலிமைக்கேட்ப ஒடித்துக்கொண்டு உச்சி வெய்யிலில்-அவள் பாதணியில்லா பாதங்களை பதித்து வந்து-என் பசி போக்கினாள், சில நேரம்-அவள் விற்காத விறகுகளை விலையேதும் பேசாமல் அரைப்படி அரிசிக்காய் போட்டுவிட்டு, அறைவயிரேனும் எனக்கு நிரப்பி விட்டால். நிரந்தரமாய் தன் வயிற்ரை காயவிட்டு. அம்மாவின் கண்…

  17. இணைய பரந்தவெளியில் .. பல்லாயிரம் முகவரியில் .. பாமரன் முதல் பண்பாளன் வரை .. தேடி அலையும் தேடலில் ... கூகுளில் மூழ்கி யாழில் மிதந்தேன் .. என்ன ஆச்சரியம் அதிசய தீவா.. அல்லது மூழ்கிய குமரிகண்டமா.. எங்கும் தமிழ் ..எதிலும் தமிழ் .. நெஞ்சம் நிறைந்த தமிழ் என்னை ... நிலை குலைய வைத்த தமிழ் .. நானே என்னை தேடிய தமிழ் .. என்னை நானே வளர்க்க உதவிய தமிழ் .. எல்லாம் ஒருங்கே கண்டேன் உலவி யாழில் .. வணக்கம் வைத்து அழைப்பதில் இருந்து .. அழகா விருந்தினரை சுற்றி காட்டி .. எங்கு நீங்கள் என்ன தமிழ் படிக்கலாம் .. என்று அறைகள் பிரித்து அடுக்கடுக்கா .. பல சுவை தமிழ் படைத்து நிறைந்திருக்கு .. யாழ் உலாவி ... தமிழ் தோன்றல் முதல் தேசியம் வரை .. தமிழை அழகா செதுக்கி வைக்க உளிகள் பல ..…

  18. ஒன்றும் புரியவில்லை, இன்றும் வெளிச்சங்கள் இல்லை, அருகிருக்கும் தோழனின் அம்மா நித்தம் வந்தால், பக்கத்தில் எனக்கும், மலர் வைத்துச்சென்றாள், அவள் வரவும் இன்று இல்லை, விடுதலைக்காய் வீழ்ந்த தோழர்களை, வித்துடலாய் காவி வந்த, தோழர்களே,எம்மை துயிலெழுப்பி மவுனமாய், சத்தியம் செய்து சென்றீரே, உங்களை இன்று காணவில்லையே? எழுந்து வந்து தேடவும் முடியவில்லை. இன்று எல்லாம் மாற்றமாய் கிடக்கிறது, சிங்கள மொழி கேட்கிறது, சீரும் இயந்திரம் எங்கள் கல்லறை மீது போகிறது, சப்பாத்து கால்கள் எங்கள் இல்லங்களை சாக்கடை ஆக்கின்றதே, சத்தியம் செய்து சென்ற தோழர்களே, லட்ச்சியம் மறந்து போனிரோ? பூமிக்குள் நாம் படும் வேதனை புரியவில்லையா? எம்மை புதைத்த தோழர்களே, …

  19. என் மண்மேலே நின்று, என்மேலே இரத்தம் சிந்தி, யுத்தம் செய்த வித்தகரே, காத்த முடியாமல் சத்தம் போடாமல்-உங்களை நித்தம் தேடுகிறேன், தமிழீழ நாடு தமிழரின் தாய் வீடென்று என்மீது தாவி திரிந்த வீரர்களே, தனிமையாய் எல்லாம் வெறுமையாய் தவிக்கிறேன். என் கடல் மேலே ஏறி அலையோடு தாவி அற்புதங்கள் செய்தவரே-உங்கள் படகோசை கேட்காமல் படைவாசம் வீசாமல் பாவி மகளாய் பரிதவித்து வாழ்கிறேன். அலைகள் மட்டும் என்னை முட்டிப்போகுது, அன்று காடு மலைகள் எல்லாம்-உங்கள் பாதச்சுவடுகளால் பசுமையாக்கி சென்றீர் இன்று என்னை அழிப்பவர் கால்பதிக்க, கூடி அழ யாருமின்றி குமுறி அழும் என்குரல் கேட்காமல் போனதோ உங்களுக்கும். வாய் நிறைந்த சிரிப்போடு வானம் எரிய வான்புலியே காற்றிலும் புலி பறக்குமென…

  20. Started by வாலி,

    சர்ச்சுக்குப் போனேன்! கடவுள் அங்கில்லை! சலிக்கவில்லை! மசூதிக்குப் போனேன்! அங்கும் அவனில்லை! விடவில்லை! விகாரைக்குப் போனேன்! எவனும் அங்கில்லை! முடியவில்லை! மயங்கிப் போனேன்! விழித்துப் பார்த்தேன்!! மனைவி மடியிலே!!!

  21. கடிதங்கள் எழுதுவதில் ஒரு இன்பம். வாழ்த்துமடல் வாங்கி அனுப்புவதிலும் ஆர்வம். பி யோனை எதிர்பார்ப்பதில் ஒரு சுகம். தந்தி வந்தால் ஒரு ஏக்கமும் பட படப்பும். கள்ளமாங்காயின் ருசிக்கு இன்னொரு உணவா? கள்ள இளனி ஒரு தேனாமிர்தம். கள்ள மரவெள்ளி சுட்டால் தனி இன்பம். புத்தகத்தினுள் சினிமா எக்ஸ்பிரஸ் படிப்பது. பள்ளிக்கூடம் கட் அடித்த சினிமா. ஊரின் தெருக்கள் கூட்ட பெல்பொட்டம். சோடாபெட்டி கூனிங்கிளாஸ் போட்டகாலம். 20 இஞ்சிக்குமேல் கீல்ஸ் போட்டு விழுந்தகாலம். கிப்பிதலைமயிர் வளர்த்து சடையுடன் திரிந்த காலம். நாவற்பழம் பெறுக்க ஒரு கூட்டம். படிப்பதில் போட்டி போட்ட காலங்கள். சுழட்டலுக்கு ஒவ்வொரு குழுக்களாய் செல்வது. பீடிக்கொம்பனி தொழிலில் ஒரு ஆர்வம். நெசவுசாலை பெண்களுக்கு என ஒரு …

  22. சாம்பல் பூக்களின் கண்ணீரை திருடும் தேசமிது .. வெந்து வடியும் ஊழியின் பெருமூச்சுக்களை தின்று களிக்கும் கூட்டமுமிது இயலாமையின் ஓலங்களின் மீது வக்கிரக்குறிகளால் புணரும் அரசுமிது.. ஒ கட்டியக்காரர்களே.. எங்கு போனீர்கள் ? சாவுப் பட்டியலில் புள்ளடியிடுகிறீர்களா ஜெனிவாவில்? கண்ணீரால் நிரம்பிய எங்கள் வாசல்களில் கால் நனைத்தீர்களே.. நீரருந்தி நிமிர்ந்து நல்ல உணவருந்தி இன்னும் ஓராண்டு உள்ளக விசாரணைக்கு ஒப்புதல் அளியுங்கள்.. பிணங்களைப் புணர்ந்தவர்கள் காவலில் தேவதைகள் சிறகு விரிப்பதாக வரைவுகளை எழுதுங்கள்... இருள் மூடிக்கிடக்கிறது எங்கள் வானம் நட்சத்திரங்களையும் சூரியனையும் தொலைத்துவிட்டு.. பேரமை…

  23. கடவுளே உனக்கு கண்ணில்லையோ? கடவுளுக்கும் கண்ணில்லையோ -அது கல்லாகிப்போய் கன காலமோ! குந்த ஒரு குடிநிலம் கேட்டது பிழையோ -அதுக்கு தமிழீழம் எண்டு பெயரிட்டதுதான் தவறோ? அடிச்சவனை திருப்பி அடிச்சால் குற்றமோ?-நாங்கள் அழுதுகொண்டே செத்துபோவதுதான் விதியோ? தமிழராய் பிறந்ததுதான் தவறோ?-தமிழன் கேக்குறதுக்கு நாதியற்ற இனமோ? இன்னும் எத்தின நாளுக்குதான் அழுவமோ?-இதை கேக்குறதுக்கு யாருமில்லா உலகமோ? நாடு நாடாய் அலைவதுதான் கதியோ? அகதியாய் செத்துப்போவதுதான் முடிவோ? நீதி என்ன ஒரு நிறத்துக்கு மட்டுமோ? -அது தமிழருக்கு ஒரு நாளும் கிடைக்காதோ? மனிதாபிமானம் செத்து கனகாலமோ? -அதை குழிதோண்டிப்புதைத்தவர்கள் தான் பெரிய ஆக்களோ? விடுதலை கேட்பது பயங்கர…

    • 6 replies
    • 890 views
  24. பொல்லாப் பிறப்பும் புளுதியில் எறிபட்ட மீன் குஞ்சுகளும் வல்ல அசுரர்களின் கால்களில் புளுவாய் துடிக்கும் போதிலும் எல்லா வலியும் பொறுத்தருள் என்ற கடவுளுக்கு அரோகரா சொல்லித்திரியும் தெருப்பண்டார பரதேசிகளின் கூச்சல்கள் உலக மூலை முடுக்குகளில் ஓங்கி ஒலிக்கின்றது. கோவணத்துடன் சிலுவையில் அறையப்பட்ட கத்தருக்கு உடல்முழுக்க ஆடையணித்து தோத்திரம் சொல்லும் தேவதூதர்களை அம்மணமாக சிலுவையில் அறையப்பட்டிருப்பவர்கள் குறை உயிருடன் அரைக்கண்ணால் புரியாமல் பார்க்கின்றார்கள் கடவுளால் கைவிடப்பட்டவர்களின் திருவோடுகளில் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் விழையாடும் பந்துகள் தான் தவறி விழுகின்றது அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு அனைத்தும் கலந்து பீத…

  25. கனடாவில் வாழ்வு பத்தொன்பது ஆண்டுகள் கண்ணை மூடி முழிப்பதற்குள் ஓடி மறைந்து விட்டது. திரும்பிப் பார்த்தால் அண்டப்.. பெருவெளியில் நீண்டதொரு பயணத்தின் நடுவில் நின்று கொண்டு இருக்கிறேன். நான் மட்டுமா இல்லை என்னோடு சேர்ந்து இன்னும் பலர் பயணிக்கிறார்களா.....??? கடந்து போன ஆண்டுகள் தராத வேதனையை அடிக்கடி வந்து போகும் வெண்பனி தந்து சென்றது. எங்கே போனேன்-எங்கே வந்தேன் ஒன்றுமே தெரியவில்லை. சிட்டுக்குருவியாய் சிறகு விரித்து வானவெளியில் பறக்க-எனக்கும் ஆசை ஆனால் சிறகு உடைந்தவள் ஆச்சே-இல்லை இல்லை விளக்கில் விழுந்த விட்டில் பூச்சி.. எதைச் சொல்ல எதை விட எனக்குள்ளும் ஆயிரம் ஆசைகள்-ஆயிரம் நிறை வேறாத கனவுகள். விபத்தும் என்னை தன்னுள் அடக்காமல் இன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.