கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
-
- 14 replies
- 2.2k views
-
-
வருக புத்தாண்டே... வரும் புத்தாண்டே வசந்தங்களோடு வாழ்த்துக்களையும் சுமந்துவரும்-உன் வரக்கரங்கள் தாய்மொழியை மறந்து தன்மானம் இழந்து வரலாற்றைத்தொலைத்து வளைந்து போன எம் மக்களின் கூன் விழுந்த முதுகுகளை நிமிர்த்திப்போடட்டும் சந்திகளில் நின்று சதிராட்டம் போடும் எங்கள் இளைஞர்களின் மூளைகளில் தன்மானச்சுடரெழுப்பும் தாய்நிலப்பற்றமைக்கும் அக்கினி விதைகளை அள்ளித்தூவி-அந்த உக்கிர வெம்மையிலே உன்கரங்கள் உலகைப்புடம்போடட்டும் கஞ்சிக்காய் கையேந்தும் ஏழைகளின் கரம்பற்றி அஞ்சக என்றழைத்து அவர்களுக்கோர் வழியமைத்து உன்கரங்கள் வஞ்சனையற்ற அவர் வயிறுகளில் சிறிதமிழ்தத்தை வார்த்துச்செல்லட்டும் உறவுக…
-
- 0 replies
- 2.2k views
-
-
உன்போல் ஆயிரமாயிரம் தங்கைகளை அக்காக்களை தின்னக் கொடுத்துவிட்டு அக்கிரமம் இறுதியில் பெண்ணுடலையே தின்னும் ஆதிக்கம் அதற்கு நீயும் விலக்கில்லாமல் ஆழ்கடல் நுனிமட்டும் அலைகிறதுன் ஆத்ம ஓலம்…… கண்ணுக்குள் நிறைந்த சிரிப்பும் கதைசொல்லும் பொன்முகமும் பூவினும் இனியதாய் பொலிந்த உன் பெண்மையும் நாயினும் கடையதாய் உனக்கு நடந்தவைகள்…… நெஞ்சமெல்லாம் நெருப்புப்பற்ற நீ சிரிக்கும் கொள்ளையழகின் தூய்மை அலங்கோலமாய் அணுவணுவாய் படம்பிடித்து மகிழும் காட்சியாய் நினைக்க நினைக்க மூழும் தீயின் எச்சம் நெஞ்சுக்குள் மட்டுமே புதைகிறது…… தீயெரித்த கண்ணகியின் கோபத்தை கதைகளில் தான் படித்தோம். ஆனால் எங்கள் சக்திகள் உங்களின் சாதனைகளை சமகாலத்தில்…
-
- 0 replies
- 2.2k views
-
-
-------------------------------------- மீன்பாடும் தேன்நாடு வங்கக்கடலுக்கோ வெண்பட்டு மணல்விரிப்பு மலையகத்து அருவிகட்கோ பச்சை வயல்விரிப்பு பாடும்மீன் தாலாட்டும் பௌர்ணமி நிலாவுக்கு ஒயிலாக முகம்பார்க்க ஒய்யாரமாய்த் தூங்க மட்டு நகரில் வாவியிலே நீர்விரிப்பு. எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாம் அனுபவிக்க சொந்தங்கள் இங்கே துயரம் சுமக்கிறது. காலமெல்லாம் இங்கே கணபதியும் எங்கள் காக்கா முகம்மதுவும் தெம்மாங்குபாட திசைகாணும் தாய் எருமை. திசைதோறும் புற்கள் முலைதொட்ட பூமியிலே கன்றை நினைந்து கழிந்தபால் கோலமிடும். காடெல்லாம் முல்லை கமழும் வசந்தத்தில் வயல்புறங்கள் தோறும் வட்டக்களரி எழும். வட்டக்களரியிலே வடமோடிக் கூத்தாடும் இளவட்டக்கண்கள் தென்றல்…
-
- 8 replies
- 2.2k views
-
-
நான் லிங்கமாலா ஆனேன் ஜுனில் வெளிவந்த ராவய பத்திரிகையில் அதன் ஆசிரியர் குழுவிலுள்ள மஞ்சுள வெடிவர்தன எழுதி, செல்வர் என்பவரால் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கவிதை இது. சிங்கள வாசகர்களை நோக்கி எழுதப்பட்ட இந்த கவிதை மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட கவிதை. சிங்கள பேரினவாத சக்திகள் மத்தியில் சர்ச்சையையும் கிளப்பிவிட்டிருந்த கவிதை இது. மஞ்சுள வெடிவர்தனவின் கன்னி மரியா எனும் சிறுகதைத் தொகுதி சென்றவருடம் இலங்கை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. அது இன்னமும் நீதிமன்ற விசாரணையில் சிக்கியிருக்கிறது. ”பறை” வாசகர்களுக்காக மீண்டும் அவரது கவிதை. வெசாக்தின முழுநிலவு தலையில் கைவைத்து அழுகிறது அதன் மூக்குச் சளி சாரளம் வழியால் தெறிக்கின்றது அயல்…
-
- 12 replies
- 2.2k views
-
-
விஜயனின் வழித்தோன்றல்களே ! ------------------------------------------- சிங்கத்தைப் புணர்ந்து உங்களைப் போட்ட அன்னைக்குக் கூட உங்களது செயலை நினைத்தால் அருவருக்கும் ! அருவருப்பின் வழிவந்த அரியண்டப் புத்திரரே(?) நீவிர் அழிவது உறுதியடா ! நரமுண்ணும் பிசாசுகளே நாலுகால் பிறவிகளே சாக்கடையில் மிதந்துவந்த சண்டாளப் பிறவிகளே உயிரற்ற உடலம் மீது உங்கள் இயலாமையை காட்டுகின்ற கோளைகளே கண்ணியம் புரியாத காட்டுமிராண்டிக் கயவர்களே நாய் கூடப் புரியாத ஈனச் செயல் புரிகின்ற ஊன மனம் கொண்ட ஈனப் பிறவிகளே புரிய வைக்கும் காலம் வரும் ! மனிதம் இல்லாத மானிட உருக்கொண்ட சிங்கத்துக்குப் பிறந்த சீரியமும் இல்லாத வீரியமும் இல்லாத பிணம் தின்னும் கூட்ட…
-
- 3 replies
- 2.2k views
-
-
தமிழ் படை ஆள் பற்றாகுறையால் பின் வாங்க இலட்சக்கணக்கில் போர்கடவுள் முருகனுக்கு விழா எடுக்கும் போலி பக்திமான்களும் உண்டு, அரை கோடி தமிழர் எதிர்த்து போராட இருபது மைல் தூரத்தில் பார்த்துக்கொண்டிருக்கும் ஏழு கோடி திராவிட தமிழ் வாய் வீர்களும் உண்டு, இரண்டு இலட்சம் தமிழரை இருபது வருடமாக முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கும் வந்தாரை வாழ வைக்கும் தமிழக்கத்தாரும் உண்டு, தமிழ் கோவில்களில் பாரசீக பாசையில் எதோ சொல்ல, விளங்காமல் நேர்த்தி நிறைவேற என்று கடவுளுக்கு இலஞ்சம் கொடுப்போரும் உண்டு, தமிழ் பிட்டையும், தோசையயும், கறி குழம்பையும், ஸ்ரீ லங்கா உணவகம் என்று சிங்கள எதிரிக்கு கோல் போடும் தமிழ் விற்பன்னர்களும் உண்டு, இன வெறியரிடம் இரண்டாயிரம் வாங்கி, தம் ம…
-
- 7 replies
- 2.2k views
-
-
மரணத்தில் தொடங்கும் காலை எனது காலை மரணம் பற்றிய செய்திகளில் விடிகின்றது நாள் முழுதும் அவலத்தின் கூக்குரல் எனது கண்களை ஆயிரம் கைகளால் பொத்தி விடுங்கள் என் காதுகளை அறுப்பதற்காய் வாட்களை கொண்டு வாருங்கள் என்னை நான் ஒளிப்பதற்கு பாதாளங்களை திறந்து விடுங்கள் இறந்த குழந்தையின் தலையை வருடி விடுகின்றாள் தாய் சிதைந்த மகனின் உடலை அள்ளி கொள்கின்றான் தந்தை நொடியில் அழிந்து போன தன் அம்மாவின் கைகளை பற்றிக் கொள்கின்றான் ஒரு சிறுவன் வேண்டாம் இவை எதையும் எனக்கு இனி சொல்லாதீர்கள் ஒற்றைச் கையில் தாயின் கபாலம் ஏந்தி ஒரு குழந்தை கனவில் வருகின்றது என் கோப்பையில் போடும் உணவில் பிஞ்சு ஒன்றின் இரத்தம் கசிகின்றது …
-
- 15 replies
- 2.2k views
-
-
முதியோர் இல்லத்து முதியவரின் முற்றிய வலிகள்...!!! தவமிருந்துதான் பெற்றோம் உன்னை, தடுமாறி வாழ்கை நடத்தியபோதும் தனித்தன்மையாய் வளர்த்தோம், உன் எச்சில் பட்ட என் கண்ணங்கள் இன்னும் குளிருதாடா..!மகனே... உன் மழலை புன்னகையை பிச்சை கேட்டு பல நாட்கள் உன்னிடம் மண்டியிட்டிருக்கிறேன் , என் செல்ல மகனே..., உன் பால் வாசத்தில் என் பாசம் உணர்ந்தேன், நீ கடித்து காயபடுத்திய என் கன்னத்து தழும்பை இன்னமும் முத்தமிடுகிறாள் உன் அம்மா...! என் கிழிந்த வேட்டியை மறைத்து,மடித்து கட்டி வேட்டி வாங்கும் பணத்தில் வாங்கியதுதான் உன் வெள்ளி பாலாடை...! என் அன்பு மகனே..! முதல் முறை நீ பள்ளி செல்லும்போது …
-
- 23 replies
- 2.2k views
-
-
பாரத மாதா வின் கவட்டுக்குள் ஒரு சாக்கடை அங்கோர் அழுக்கு தின்னிக் கெழுத்தி.. அதன் பெயர் ஜனநாயகம்..! கெழுத்தியின் உடலுலோடு ஓர் ஒட்டுண்ணி அதன் பெயர் சுப்பிரமணியம் சுவாமி. அந்த ஆசாமிக்கு ஒரு கட்சி அது தேர்தலில் நின்றதில்லை ஆனால் வெற்றி முழக்கத்திற்கு குறைவில்லை..! மக்களோ அந்த ஐயனின் குசும்பில் தினமும் சொல்லாமல் செல்கின்றார் கீழ்ப்பாக்கம்..! சுவாமிக்கு அடிக்கடி நெஞ்சில் ஓர் வலி உள்ளூரில் ஓய்வின்றிய புறணிக்கு அப்படி வருவது விசேடம் அல்ல..! இருந்தாலும் ஓய்வுக்கு ஊளையிட.. அப்பப்ப எட்டிப் பார்ப்பது அண்டை அயலில் ஈழத்தை..! கூவிற கூச்சலுக்கு றோ போடும் பிச்சையில் மருத்துவம்..! புலி என்றால் ஐயாவுக்கு…
-
- 20 replies
- 2.2k views
-
-
செந்தமிழ் தாயின் சந்தன மேனியர் ஆந்திர எல்லையில் சரிந்தே வீழ்ந்தனர் மரக்கட்டைகள் நடுவே செம்மரக்கட்டைகளாய்..! கிரந்த மொழி பேசும் திராவிட வாரிசுகளாம் தெலுங்கர்கள் பட்சாதாபமின்றி வேட்டையாடி மகிழ்ந்தனர் செந்தமிழன் பிணம் வீழ்த்தி...! சிங்களப் பேய்கள்.. ஹிந்தியப் பிசாசுகள் குடித்த ஈழத்தமிழ் இரத்தம் காய முதல்.. கடலில் கரைந்த தமிழகத் தமிழனின் குருதி நிறம் மாற முன்.. நடந்தது சம்பவம்..! சந்தனக் கடத்தலை சாட்டி முதலைகள் வேட்டையாடி முடித்தன.. மீண்டும் ஓர் இனப்படுகொலையின் நினைவை மனதின் ஓரத்தில் இருத்தி..! புலிக்கொடி நடுவே படை நடத்திய சோழ தேசம் இன்று வீழ்ந்து மடிகிறது..! காரணம் தான் என்ன.. தமிழனை தமிழன் ஆள வழியின்றி போனதே..! மீட்போம் எம…
-
- 29 replies
- 2.2k views
-
-
2.9.16 குங்குமம் இதழில் வெளியாகியுள்ள எனது மூன்று கவிதைகளை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! (கொசுக்களுக்குப் பிடிக்காத நிறம்) வாழ்நாள் முழுவதும் கொசுக்களோடு போராடியவன் கொசுக்கடியால் நோயுற்று செத்தே போனான். சுருள்கள், வில்லைகள், திரவங்கள், மின்மட்டைகள் என்று கொசுவுக்கு எதிராக அவன் பிரயோகித்த ஆயுதங்கள் முடிவுறாத அவனது போராட்டத்தின் மௌன சாட்சிகளாக நிற்கின்றன. அவன் மரணத்தை தொலைக்காட்சியில் விவாதித்தவன் சொன்னான், கொசுக்களுக்குப் பிடிக்காத நிறத்தில் அவன் சட்டை அணிந்திருந்தால் கொசு கடித்திருக்காதாம்! (பரு…
-
- 7 replies
- 2.2k views
-
-
பாரில் சிறந்த மகன் பாரறிந்த மன்னவனை பார்வதியப் பாரில் தந்தாய் - பெரும் காரில் திளைத்து – கண்ணின் வேரில் கரித்து இன்று கோலம் கலைத்துக் கொண்டாய் - தாயே மனக்கோயில் புகுந்து கொண்டாய். பாயிற் கிடந்தபோதும் பகைவர் உனைத் தொழுதர்- பெரும் நோயிற் கிடந்தபோதும் ஊர் உறவு அன்பு செய்தர். – எல்லா வாயிற் பிறந்தமொழி “அம்மா” என்பதுதான் கோயிற் சிறப்பதுவே கொள்கைமகன் பெற்றவளே. தாயிற் பெருஞ்சிறப்பு மானச்சிறையிருப்பு ஊரின் திருமடியில் உன்னுறக்கம் ஒன்று காணும் - மானத்திருமகனின் மனதிற்கு அதுபோதும். ஆரிராரோ பாடிவிட ஆருமில்லை… உண்மையில்லை அவணியே பாடுமம்மா ஆத்மார்த்தத் தாலாட்டு ஆழக்கடல் நாயகனின் அன்னையே என் அன்னையே அமைதியாய் தூங்கம்மா - இது ஆனந்தத் தூ…
-
- 8 replies
- 2.2k views
-
-
என் கவியால் கம்பனை சுடும் நோக்கம் இல்லையடா இராமாயனக் கம்மனும் நானும் இல்லையடா கூனியை போல சூழ்ச்சி செய்பவன் நானும் இல்லையடா கைகேகி போல இராமனைக்காட்டுக்கு அனுப்புபவன் நானும் இல்லையடா பத்துதலை இராவணணும் இங்கே கெட்டவன் இல்லையடா கம்பன் தன் கவிதையிலே ஈழத்தமிழனுக்கு துரோகம் செய்து விட்டானேடா இராமனும் உத்தம புத்திரன் இல்லையடா அவரும் கற்பை சோதிக்க தீக்குளிக்க சொன்னவர் தானேடா இராமயனத்து குரங்குப் படைகள் தமிழன் இல்லையடா இராமாயனம் ஈழத்தமிழனுக்கு ஒரு மாகாவம்சம் தானோடா
-
- 5 replies
- 2.2k views
-
-
முகம் தெரியாத நண்பனும் நாங்களும் “வணக்கம்” அங்கிருந்தொருவன் அருகிருப்பதுபோல் பேசுவான் தொலை தூர வாழ்வில் அதிகாலைப்பொழுதில் தினந்தோறும் வருவான். தாய்நாட்டு வாசனை தன் குரலாலே தெளிப்பான். முன்னைய நாட்களில்.. தனித்தேசக் கனவை தன்மான உணர்வை செயல் திறன் ஆற்றலை எங்களுக்குள் இன்னும் அதிகமாக்கியவன் இறுதி நாட்களில்.. முள்ளி வாய்க்கால் இப்போது என்ன சொல்லுதென்று வரி விடாமல் சொல்லுவான் நீர்க்குமிழி வாழ்வுக்குள்ளிருந்தபடி நிமிர்ந்து வந்து குரல் தருவான். எங்களைப்போல் முகம் தெரியா நண்பர்கள் அவனுக்கு அதிகம். அத்தனை பேரும் தேடுகின்றோம் அவனை. இப்போது நீண்ட நாட்களாய் காணவில்லை. அவனை? அவன் குரலை? இ…
-
- 8 replies
- 2.2k views
-
-
வெல்ல வையுங்கள் வெட்டி வீழ்த்துகிறோம் வீர வசனம் பேசி இரத்தத் திலமிட்டு வீடுகள் தோறும் தன்னாட்சிக்கு உரிமை கேட்டு உரிமையோடு வர.. மக்களோ அள்ளிக் கொடுத்து நம்பிக் கெட்ட காலம் ஒன்று.. 70 களில் வந்து போனது..! மீள அது மீளாதிருக்க தம்பி வழியில் போர்த் தரையில் இட்ட விதை.. மக்கள் இரத்தம் சொரிந்து மாவீரர் தியாகத்தால் உரமிட்டு வளர்த்து விட்டது தமிழ் தேசிய விருட்சமாகி இன்று.. ஊர் கூடி தேர் இழுக்கும் தேரடியாகி நிற்குது. மீண்டும் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும்” அண்ணல் திலீபனின் நோன்பிரு நாளில் ஓர் வெற்றிச் செய்தி “கோட்டை வீழ்ந்ததாம்” என்றது போல் ஆனது செவிகள் இனிக்க கடந்து போன துயரங்கள் நினைவில் ஆட..! பிபிசி.. ராய்டர் எல்லாம் உற்று நோக்க நடந்து முடிந்திருக்கு தேரோட்டம். “தன்னாட்சிய…
-
- 14 replies
- 2.2k views
-
-
ஈழக்கருவறையைக் காத்து வளர்த்தவன் ஆர்த்தெழுந்து தமிழ் தொடுத்துத் தாலாட்டுப் பாடிடவும், அனல் கொட்டும் வீரத்தின் மிடுக்கெடுத்து வனையவும், போக்கற்ற புரட்டனைத்தும் எழுத்தீயில் எரிக்கவும், எழுந்த என் எழுத்தாணி... இன்றுமட்டும், இலக்கு விட்டு.. ஏன் அழுது நிற்கிறது? புறம் படைக்கும் தமிழ் மகளின் போர்க்குணத்தை மொழியவும், புனை கவியில் எழுகை எனும் பெருநடப்பை விதைக்கவும், இணையில்லா விடுதலையில் வனப்பெடுத்துப் புனையவும் இலக்கெடுத்த என் பேனா இன்றேன் நலிகிறது? ஒப்பாரிப் பாடல்களை எப்போதும் பாடாத என் இதயம் இப்போதேன் அழுதபடி ஒப்பாரி உரைக்கிறது? அன்னை மண்ணிலே குருதியாறுகள் காயவில்லையே, உறையவில்லையே... இலக்கெடுத்த நம் தாயின் வேதனை ஆறவில்லையே,.. …
-
- 10 replies
- 2.1k views
-
-
தமிழ்க் கன்னி தோற்றம் எத்தனை எத்தனை இன்பன் கனவுகள்.... என்ன புதுமையடா! - அட புத்தம் புதுக்கிளி சோலைப் புறத்திலே போடும் ஒலியிவளோ? - வந்து கத்துங் குயிலின் இசையோ? கலைமயில் காட்டும் புதுக்கூத்தோ? - அட முத்தமிழ்க் கன்னியின் பேரெழிலை ஒரு மொழியில் உரைப்பதோடா? மன்னர் வளர்த்த புகழுடையாள்! இவள் மக்கள் உறவுடையாள்! - நல்ல செந்நெல் வளர்க்கும் உழவ ரிசையில் சிரிக்கும் அழகுடையாள்! - சிறு கன்னி வயதின் நடையுடையாள்! - உயர் காதல் வடிவுடையாள்! - தமிழ் என்னு மினிய பெயருடையாள்! - இவள் என்றும் உயிருடையாள்! முந்திப் பிறந்தவள் செந்தமி ழாயினும் மூப்பு வரவில்லையே! - மணச் சந்தனக் காட்டுப் பொதிகை மகளுக்குச் சாயல் கெடவில்லையே! - அட விந்தை மகளிவள் சிந்தும் …
-
- 10 replies
- 2.1k views
-
-
ஏய்.. பயங்கர வாத சமூகமே என் மீது காரி உமிழ்வாய் என் கருவருப்பாய் என்னினம் பங்கமுற்று அழிய கொல்லி ஈட்டுவாய் நான் எள்ளி நகைக்கவா????? ஏனென்று கேட்டால் என்னை தீவிரவாதி என்கிறாய்; நீ சுட்டுப் பொசுக்குவாய் புதைகுழிக்குள் உயிரோடு புதைப்பாய் மலை போல் என் மனிதர்களை கொட்டி எரிப்பாய் வெறி வந்தால் வீடேறி கற்பழிப்பாய் என் தேச விடுதலைக்கென போராடும் இதயங்களை வெளியே எடுத்து - நீ தானே.. நீ தானே… என கண்டம் துண்டமாய் வெட்டி வெட்டி அடுப்பு விறகிற்கு மத்தியிலேயிட்டு வெற்றி வெற்றி என கர்ஜிப்பாய்……………… நீ போராளி? நான் தீவிர வாதியா?????? பாருங்கள் உலகத்தீரே.. எங்களின் கண்களிலென்ன கண்ணீரா வடிகிறது அப்படி வேடிக்கை பார்கிறீர்களே, ரத்தம் உலகத…
-
- 3 replies
- 2.1k views
-
-
தேடல்கள்----------------- என் தேடல்களை உனக்குள்ளும் காதலுக்குமாய் வீணாக்கியதன் பிற்பாடு ஏதோ ஒரு ராத்திரியின் மௌனத்தை கனமான இதயத்தோடு ஏற்றுக்கொண்டது மனசு. என் இரவுகளை- நீ வெறுமையாக்கிய போதும் என் இதயத்தை போலவே கனக்கிறது மௌனம். என் மௌனங்களின் பிரிய காதலியே பிரிவு எனக்கும் உனக்கும் தான் காதலுக்கல்ல.....!!!!
-
- 9 replies
- 2.1k views
-
-
சில நாட்கள்... சில நாட்கள் சந்தோசமானவை சில நாட்கள் சோகமானவை சில நாட்கள் சுறுசுறுப்பானவை சில நாட்கள் சோம்பேறித்தனமானவை சில நாட்கள் அறிவுபூர்வமானவை சில நாட்கள் முட்டாள்தனமானவை சில நாட்கள் உயிர்ப்பானவை சில நாட்கள் தூங்கிவழிபவை சில நாட்கள் பையில் காசு உள்ளவை சில நாட்கள் கை கடனில் ஓடுபவை சில நாட்கள் நண்பர்களுடன் கழிபவை சில நாட்கள் எதிரிகளுடன் கழிபவை சில நாட்கள் நீதிவழி செல்பவை சில நாட்கள் திருட்டுத்தனமானவை சில நாட்கள் வெற்றியில் வருபவை சில நாட்கள் தோல்வியில் செல்பவை சில நாட்கள் அமைதியில் கழிபவை சில நாட்கள் அலைச்சலில் கழிபவை சில நாட்கள் பாடம் படிப்பவை சில நாட்கள் பாடம் எடுப்பவை சில நாட்கள் சிரிப்பவை சில நாட்கள் அழுபவை சில நாட்கள…
-
- 12 replies
- 2.1k views
-
-
உயிர் போகும் தருணம் நெருங்குகையிலும் உன் வரவுக்காய் காத்திருக்கிறேன். நீ மட்டும் வரவில்லை இறுதிவரை.... கழுகுகள் தான் வட்டமிடுகின்றன - என் பிணம் தின்னும் பேராசையில்.....
-
- 34 replies
- 2.1k views
-
-
-
- 14 replies
- 2.1k views
-
-
எழுதுங்கள் என் கல்லறையில் இதயத்தை முத்தமிட்ட உன் அழகிய உதடுகள் விஷம் செறிந்த தேன் துளிகள் விழியாலே மொழிபேசும் கிளிமொழியாலே என் விழி பிதுங்கிட வைத்த பைங்கிளியே மை எழுதும் கண்ணாலே தினம் தினம் பொய்யெழுதி பொய்மைக்கு முன்னுரை உரைத்தவளே போதும் போதும் இந்த பொல்லாத உலகமிதில் பெண்ணொன்று வேண்டாம் இனி எனக்கு பெண்ணை நம்மாதே பேயாய் அலைந்திடுவாய் நம்பியவன் கதி நாயாய் நடைப்பிணமாய் நடுச்சாமத்திலும் தலையணை நனைத்திடும் நரகப் பொழுதிலும் புலம்புகின்றேன் அவள் பெயரை மூச்சிலே சுமக்கின்ற அவள் நாமம் அதுவே என்னை வாசகம் செய்கின்ற என் காயத்திரி மந்திரம் எழுதுங்கள் என் கல்லறையில் அவள் பெயரை தழுவும் அவள் வாசம் என் கல்லறையின் வாசகமாய்
-
- 11 replies
- 2.1k views
-
-
போதுமினி எல்லாள போர் முகம் கொள்க.... 'சுதந்திர தினம்' ஐரோப்பியச் சாபம் நீங்கிய விமோசனம் நிரம்பிய நாளாய் 1948 இலங்கையின் இறைமையும் உரிமையும் இறையழித்த வரமான உரிமைகள் தினம். பிரிவினை வேண்டாம் - உடன் பிறப்புகள் நாங்கள் பிரிகிலோம் என்றும் புத்தரும் சிவனும் அல்லாவும் யேசுவும் எமக்கென்றுமே பொதுவென உரைத்தவர் எங்கே ? தோண்டுக அவர் புதை குழிகளை.... சிங்களன் தமிழன் உயிர் எடுத்திடும் பகைவன் என்றதை போய்ச் சொல்க. பாழுயுயிர் தொலைந்து ஐக்கிய இலங்கைக்குள் ஆழுவோம் என்றவர் ஆவிகள் மீளப் பிறந்தெம் அவலம் புரிய.... அவர்களைத் தோண்டுங்கள்...! வரலாற்று எச்சங்களாய் - எம் வாழ்வைச் சிங்களன் கையில் வைத்துச் சென்ற வஞ்சகர் …
-
- 3 replies
- 2.1k views
-