Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உறுதியுடன் நடத்திச் செல்ல எவர; வருவார;? நெருங்குகிறது தேர;தல் திருவிழா நெருக்கியடித்து உள்ளே நுழையவும் அடித்துப் பிடித்து இருக்கையை கைப்பற்றவும் ஆள்படை அம்புகளுடன் அணிகள் தயார; வாக்குறுதிகளை வாரி வாரி வழங்கவும் வாய்ஜால இலவசமழையில் மக்களை மயக்கவும் கூட்டங்கள் போட்டும் கூத்துக்கள் ஆடியும் ஆட்களை பிடிக்கும் வேட்டைகள் ஆரம்பம் சாமியைக் கும்பிட செல்லும் சாகசக்காரருக்கு சாட்சிக் கையெழுத்திட்டு அனுப்ப மட்டும் வேண்டுமா நாங்கள் என யாரும் கேட்டால் உத்தரவாதம் எவர; உயிருக்கும் இல்லை வெந்து நொந்து வேதனையில் வாடுவார; வாழ்வினை பந்தாடி விளையாடி வதைக்க போட்டிகள் ஆரம்பம் எத்தனை உயிர;போனாலும் எவர;க்கும் கவலையில்லை வெற்றி கிடைத்தால் போதும் என்பதே …

    • 0 replies
    • 508 views
  2. ஒற்றைச் சொல்லு வலி(NO VISA) 1990 ஆனையிறவுசமர் தரையிறக்கம் இடப்பெயர்வு அகதிமுகாம் இடப்பெயர்வு முகாம் பசி பட்டினி இழப்பு வலி இடப்பெயர்வு...(3) முகாம் செல்லடி பொம்பர் கெலி நேவிக்காரன் படுகொலை இடப்பெயர்வு முகாம் 1995 யாழ்இடப்பெயர்வு கிளாலி படுகொலை வன்னி முகாம் போராட்டம் இடப்பெயர்வு இடப்பெயர்வு இடப்பெயர்வு......(6) முல்லைத்தீவு ஆனையிறவு வெற்றிகள் சமாதானம் ஏ9 ஓமந்தை கொழும்பு சுனாமி அவலம் சாவு இடப்பெயர்வு மகிந்த சண்டை சண்டை படுகொலை கொத்து குண்டு படுகொலை போராட்டம் சண்டை முள்ளிவாய்க்கால் பாதுகாப்புவலயம் படுகொலை இடப்பெயர்வு வவுனியா முகாம் சித்திரவதை சிறை ஏழாம் மாடி அடி உதை காசு லஞ்சம் புத்தளம்…

    • 2 replies
    • 1k views
  3. Naam TamilarGermany சுமார் ஒரு மணி நேரம் முன்பு · கரும்புலி அடிமுடி அறிய முடியாத அற்புதம்....! கரும்புலி சாவுக்கு தேதிகுறிக்கும் சரித்திரம். கந்தகத்தை மேனியிற் கட்டிய சந்தனம். வீதியுலாவுக்காக வெளியில் வராத விக்கிரம். உயிர்மூச்சை ஊதிவிடும் உன்னதம். அடிமுடியை அறியமுடியாத அற்புதம். தென்றலும், புயலும் சேர்ந்ததான கலவை. இவர்களை எழுதத் தொடங்கினால்… வார்த்தைகள் வறுமை அடையும். உளவியலாளர்கள் உள்ளே புகுந்தாலும் வெறும்கையோடுதான் வெளியே வருவார்கள். கற்பனைக்கவிஞர்கள் கவிதை எழுதினால் அற்புதம் என்பார்கள். அடுத்தவார்த்தை வராது. சித்திரக்காரர்க…

  4. காவியக் கவிஞ்ஞன் நான் என் எழுத்துக்கள் ஆயிரம் பேரைப் போராளியாக்கியது அவகளை உலகம் பயங்கரவாதியாக்கியது.. என் உணர்ச்சிப் பாடல்கள் ஆயிரமாயிரம் பேரைப் போர்க்களமேவச் செய்தது - மாவீரராக்கி அவர்தம் குடும்பத்தை அநாதையாக்கியது.. என் சிந்தனைச் சிதறல்கள் குஞ்சு குருமனையெல்லாம் அழித்து எம் குலப்பெண்டிரைக் கைம்பெண்ணாக்கியது எஞ்சியவர்களை அகதியாக்கியது.. மாபெரும் வீரனை முருகனாய் பாவனை செய்து முள்ளிவாய்க்காலில் கோம(வ)ணக் கடவுளாக்கினேன்.. இன்று???????? அவன் அவதாரம் எடுப்பான் என் வயிற்றுப் பிழைப்பு நடக்க அவன் வருவான்.. வரவேண்டும் .!! சூரியத்தேவனாய் சுடர் விட்டழிக்க அவன் வரவேண்டும்...!!!

    • 54 replies
    • 6.4k views
  5. கார் கூந்தல் "டை"களின் இரசாயனத்தில் விளைவு காட்டி செம்மை அடிக்க.. காற்றில் பறக்கும் ஒற்றை முடியும் ஸ்ரெயிட்னர் சூட்டில் நிமிர்ந்து கம்பியாகிக் குத்த நிற்க.. கயல்கள் கண்ட விழிகள் பென்சில் மைகளின் படையெடுப்பால் கரிக்கட்டைகளாகி பயங்காட்டி நிற்க.. அப்பிள் கன்னங்கள் அள்ளிப் பூசும் வர்ணப் பவுடர்களின் சூறாவளியில் சிக்கி சிதைந்து சிவந்து நிற்க.. கொவ்வை இதழில் சுரந்த அமிர்தமும் லிப்ஸ்டிக் கலந்து அமிலமாகி அரித்து வடிய.. சந்திர நகங்கள் மின்னல் இழந்து ஸ்ரிக்கர் ஒட்டி குட்டை கண்ட உடலாய் அலங்கோலம் காட்ட.. வெள்ளிக் கொலுசு சிணுங்கிய இடத்தில் சிறைச்சாலை "ரக்"காய் ஏதோ இரத்தம் கண்டக் கட்டி இருக்க.. பிறை நுதல் தன்னில் முட்டி விழும்…

  6. காற்றும் வறண்டு கிடக்கும் இதுபோன்ற ஒரு கோடையில் தான் உனை பிரிந்தேன். உனைப்பிரிந்த அந்த காலம் புல் நுனிகள் கருகிய அந்த காலம் காலமாகிப் போய்விடாமல் கிடக்கிறது. அன்று, உயிப்பூவிதழ்களின் சாயங்களை வெளுறவைத்த பெரும் கோடையின் கோபம் நரம்புகளின் பச்சையத்தை தீண்டவே இல்லை........ இன்று, விழிப்பூவிதழ்களில் எழுகின்ற வாசம் தளம்பல்களை தந்தாலும் கோடைக்கு முன்னான அந்த இளவேனிற்காலத்தின் படிமங்களை மீட்டுகின்றன.......... வற்றிய குளத்தின் நிலப்பொருக்கிடைகளில் மக்கிக் கிடக்கும் சிறுவெண் நண்டுக்கூடுகளாய் காதல் உனக்குள்ளும் இருக்க கூடும் இன்னும், எனக்குத்தெரியும் இருந்தவரை நல்ல காதலியாக இருந்தவள் நீ. எனக்குத்தெரியும் பிரியும்வரை அன்பை பொழிந்தவள் நீ …

  7. 1 நினைவை விட்டழியா நெருப்பு நாட்கள் இனவெறித்தீ பரவி எமை அழித்த-அந்த நெருப்பு நாட்கள்-எம் இதயம் சுமக்கும் எரிதணல்கள். நீறாகிய எம் உறவுகள் நினைவுகள் நாளும் நாளும் கனன்று-இன்று பெருநெருப்பாகி வியாபித்து எரிகின்றது. இரத்தப்பெருவௌ;ளத்துள் திக்கித்திணறி தத்தளித்து எங்கள் தமிழினம் தவித்த-அந்த கொடியநாட்கள்-எங்கள் நினைவைவிட்டழியா நெருப்பு நாட்கள் தமிழினத்து வேரை தகர;த்தெறிவோமென்று தறிகெட்ட மிருகங்கள் எம்மினத்து குருத்துக்களை குதறிக்கிழித்து குதுhகலித்த-அந்தநாட்கள் எங்கள் நினைவைவிட்டகலா கறுப்புநாட்கள் தமிழினத்தை தலைகுனியவைக்க தமிழ்ப்பெண்களை வன்கொடுமைக்குள்ளாக்கி குதறிக்குற்றுயிராக்கி கொடுஞ்செயல்புரிந்த அந்த கோரநாட்கள் எங்கள் வாழ்வின் இருண்டநாட்கள் பச்சிளம் குருத்துக்கள் …

    • 10 replies
    • 1.1k views
  8. வன்னிக்காடு வைகாசி - 2013 : நிலாந்தன் வண்ணாத்திப் பூச்சிகள் கதிர்காமத்திற்குப் போகும் வழி. சிறுமஞ்சட் பூப்பரவிய வேட்டைப் பாதை. மடுக்காட்டில் வீரை பழுத்திருக்கும். முழங்காவிற் காட்டில் பாலை பழுத்திருக்கும். முறிப்புக்காட்டில் கொண்டல் பூத்திருக்கும் பறங்கியாற்றில் வண்ணாத்திப்பூச்சிகள் சிறகாறும் வேட்டைக்காரர்கள் இல்லை வேட்டைப்பாடல்களும் இல்லை காவலரணில் சலித்திருக்கும் சிப்பாயின் கைபேசி அழைப்பிசை மட்டும் இடைக்கிடை கேட்கும் காடு **** மார்கழி வன்னி - 2012 காப்பற்சாலை சாம்பலையும் கண்ணீரையும் மூடிக் கம்பளம் விரிக்கப்படுகிறது. தறப்பாள் வீடுகள் மழையில் மிதக்கின்றன. காட்டாறு கைவிடப்பட்ட காவலரண்களை அறுத்துப் பாய்கிறது. உத்தரித்த கிராமங்களிற்கோ உய…

  9. Started by லியோ,

    வேர்கள் வெளியில் தெரிவதில்லை கனிகள்,காய்கள் ஏன் மரங்கள் கூட கொண்டாடப்படுகையில் வேர்களின் வியர்வையை யாரும் துடைப்பதில்லை மரத்தை வளர்க்க நிலத்தை துளையிட்ட வேர்களின் வலி யார் அறிவார்? கனிகளை,காய்களை,மரத்தை திருடுகையில் வேரின் அழுகையை யார் நினைத்தார்? வேர் என்பது உயிருள்ள அத்திவாரம் தாயை போல, தாயின் தாயை போல வேர் கிழங்கானால் மட்டும் --- -நிரோன் -

    • 7 replies
    • 4.6k views
  10. Started by அஞ்சரன்,

    ஆணா பிறந்தால் ஒரு வயதுக்கு பிறகு ஆரம்பிக்கும் அதீத ஆசை மீசை எப்பொழுதும் கண்ணாடியில் முகம் பார்க்க உள்மன கேள்வியில் எழும் ஒரு ஆதங்கம் எப்ப வளரும் எப்படி வளரும் நாம வளர்க்க வேணுமா அதுவா வளருமா தாடையை வழித்தா வருமா அல்லது வந்தபின் வழிக்க வேணுமா யாரிடம் கேட்கலாம் எப்படி கேட்கலாம் அப்பா சேவ்செய்யும் பிளேட்டை ஆட்டை போட்டு அடிவளவில் போய்நிண்டு கண்ணாடி இல்லாமல் கண்டபடி இழுத்து வெட்டுக்காயம் இப்பொழுதும் போகவில்லை அடையாளம் மீசையை முறிக்கிட்டு போறவனை பார்த்து பொறாமை பெரிய இவரு எண்டு நினைப்பு எங்களுக்கும் வளரும் எல்லோ உள்மன களிப்பு வளர்த்த பின் தெரித்தது பராமரிக்க பத்து ரூபா கிழமைக்கு வேணும் எண்டு அதுவரை மீசை மேல் இருத்த ஆசையெல்லாம் குறைந்து தடுக்கும் யோசனை தான…

  11. மோகிப்போம் வா......... ( 18+) மெதுமெதுவாய் மேல் எழும்பும் கறையான் புற்றைப்போல் , என் மனதை அரிப்பவளே வா ......... பள்ளியறையில் மோகிப்போம் வா . ஆனானப்பட்ட வாத்ஸசாயனனே முயற்சி செய்துதான் எழுதினான் காமசூத்திரத்தை . எனக்கும் உனக்கும் என்னதான் வெட்கம் சயனவறையில் ??? அடி என்னவளே !!!! மோகம் என்றால் என்னவென்று தெரியுமா ??? கண்டவுடன் ருசிப்பதல்ல கண்டு ரசிப்பது ........ அடி சூரியகாந்தப்பூவே !!!!! இரவின் மடியில் என் ஆண்மையும் , உன் பெண்மையும் அவசியம் . இதைவிடப் , பொறுமையும் திறமையும் என்ற இரு மைகள் அத்தியாவசியமடி ........ அடி என் வெல்லக்கட்டியே !!!!!!! நாங்கள் என்ன மிருகங்களா உச்சக்கட்டத்தை நோக்கி உடனே செல்ல ....... காதல் இல்லாத காமமும் ,…

  12. 1983ம் ஆண்டு கலவரம் தொடங்குவதற்கு ஒரு சில நாட்களின் முன்னம்தான் எனது யப்பானியத் தோழி ஆரி யுடன் தமிழகத்தில் இருந்து கொழும்பு திரும்பியிருந்தேன். கொழும்பில் சி.ஐ.டி தொல்லை இருந்தது. அதிஸ்டவசமாக கலவரத்துக்கு முதன்நாள் முஸ்லிம் கிராமமான மல்வானைக்குப் போயிருந்ததால் உயிர் தப்பியது. 1983ம் ஆண்டுக் கலவரத்தைப் பதிவுபண்ணிய இக் கவிதை வெளிவந்த நாட்களில் பேராசிரியர் பெரியார்தாசன் 100க்கும் அதிகமாக பிரதி பண்ணி தமிழகத்தில் பலருக்கு கிடைக்கச் செய்திருக்கிறார். இது அதிகமாக வாசிக்கப் பட்ட எனது கவிதைகளில் ஒன்று. உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன். ஜெயபாலன் உயிர்த்தெழுந்த நாட்கள் -வ.ஐ.ச.ஜெயபாலன் அமைதிபோல் தோற்றம் காட்டின எல்லாம் துயின்று கொண்டிருக்கும் எரிமலை போல. மீண்டும் காற்றில் மண் வ…

    • 2 replies
    • 713 views
  13. Started by putthan,

    அவர் வருவாரா எனது உடைந்து போன நாட்டை ஒட்ட வைக்க அவர் வருவாரா பள்ளத்தில் உள்ள என் ரட்ட(நாடு) சர்வதேசத்தில் உடட்ட(மேலே)வர அவர் வருவாரா தொப்பியை கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம் என் அமைச்சர் உன் அமைச்சர் சண்டை பிடிக்கும் அரசியலில் இது பரம்பரை பழக்கம் ஸ்டிவாய் யிருக்கும் அவர் மூஞ்சி ஸ்மூத்தாய் செய்வார் சாணாக்கியம் என்னை விட அவருக்கே என் நாட்டில் அதிக நாட்டம் ஆகவே அவர் வருவார் போகப் போக பார் இன்னும் புயல் அடிக்கும் அவர் வந்து போன பின் வட மாகாண சபை இருக்காது மாகாணசபை பொலிஸ் பிடிக்காது தமிழனையே பிடிக்காது அவர் வருவார் பூமி மீது நான் பிறந்ததற்க்கு பொருளிருக்கு பொருளிருக்கு......

    • 19 replies
    • 1.1k views
  14. எங்கு சென்றாலும் எந்த சபையானாலும் என்ன பொருளானாலும் எம்மவரைப் பாட மறந்ததில்லை எவர் மறந்தாலும் எவர் ஒழித்தாலும் எம் அழிவுக்காக வரும் ஒரு இரங்கல் ஆரத்தழுவி மீண்டும் நடக்க தூக்கிவிடும் தமிழரின் தலைவன் பிரபாகரன் தமிழ் இருக்கும் வரை அவனே நாக்கில் பேச்சில் தெளிவாய்ச்சொன்னவன் தமிழரின் சொத்துக்கள் ஒவ்வொன்றாய் போயின இறுதியில் எம் வாலி.... ஒன்று மட்டும் உண்மை நாம் புதிதாக பிறக்கப்போகின்றோம் தேவை அப்படி........ மீண்டும் வருக எம்முள் பிறந்து எம்முள் எழுந்து வழி காட்டுக.... காத்திருக்கின்றோம் ஐயா...

  15. Started by கவிதை,

    தன் அழகான வரிகளால்... தமிழை ஓவியமாய் தீட்டியவன்! தாய்த் தமிழுக்கு பெருமை ஈட்டியவன்! வண்ண வண்ணத் தமிழின்... இனிமை காட்டியவன்! வாலியென்றால் இப்படித்தான் என தனித்துவம் நிலை நாட்டியவன்! இந்த வண்ணத்தமிழ் வாலிபக் கவிஞனின் இழப்பால், தமிழும் கறுப்பு வெள்ளை ஆனதைப்போல் ஒரு பரிதவிக்கும் உணர்வு....

  16. வெட்டி கதை பேசி வெண்ணிலா ஒளியில் என் வீட்டு முற்றத்தில் அக்கம் பக்கம் உள்ளவர் எல்லாம் சேர்ந்து இருந்து பக்கத்துவீட்டு நிலவும் நானும் ஓரமாய் விடுப்பு கேட்டு தெரித்த சினிமா தெரியாத அரசியல் போன கோயில் என வண்ண வண்ண கலர் பூசி கதை பேசி இருந்த காலம் விஜயகந்தும் அர்ஜுனும் இந்தியாவை காப்பது போல் எமக்கு ஒரு ராம்போ இருந்தா நாடு விரைவா கிடைக்கும் என எமக்குள் ஓடும் என்ன ஓட்டம் தலைகால் புரியா சந்தோஷம் பக்கத்து வீட்டு பெடியள் எல்லாம் நல்லவங்கள் இல்லை நிலா நானே உனக்கு எல்லாம் செய்யும் யோக்கியன் என பொய்பேசி அறியாத வயது அதில் ஆயிரம் கதைசொல்லி மனதுக்குள் பூரித்து நமக்குள் ஒரு உலகம் ஏற்படுத்தி வண்ணத்து பூச்சி போல இறக்கை விரித்து திரிந்த காலம் அது வெட்டை வெளியும் பூவரசம் மரநிழ…

  17. கயல் விழியாள்... பயல் மனசைப் பறிக்க, வயல் வழியால் ஏதோ புயல் வருதே! காதலும் வேண்டாம்... கூடலும் வேண்டாமென... ஒதுங்கிப் போனவனின் மனம், பதுங்கிப் பாய்கிறதே! செதுக்கிய சிற்பங்களின் பார்வையில் வழுக்கிய இதயம் இடறி... வாய்க்காலோரமாய் விழுகிறதே! மனத்தடைகளைத் தகர்த்து... உடலுடைகளை அவிழ்த்து... தன் படைகளால் ஆக்கிரமிக்கும் பாதகி! கண்ணகி காலத்தில் வாழ்ந்த மாதவி!! கோவலனாகி கோணலாய்... கேவலமாகி நாணலாய்... மாறும்வரை மாற்றுகிறாள்! முத்து முத்தாய் முத்தங்கள்... ஒத்திக்கொள்ளும் சத்தங்கள்... தூறும் மழைச் சாரலைப்போல், மெதுமெதுவாய் நனைக்கிறாள்! நனைந்தவன் மேனியில், புனைந்தவள் தாகம் தீர்க்கிறாள்! சிதைந்தவனின் சிந்தையில்... புதைந்தவனின் விந்தையில்... இணைந்தவள்,…

  18. தலைவனுன்னா… மக்கள் விட்டு எட்ட நின்று.. குளிரூட்டி வாகனத்தில் தான் மகிழ்ந்திருந்து.. வெயில் காய்ந்த புழுதி குளித்த வியர்வை வழிந்தோடும் மக்கள் முன்.. கசங்காத வெள்ளை வேட்டி மேடை தரிசனம் தந்து.. வலு விழந்த வாழ்விழந்த சொந்தங்கள் முன்.. நாலு வார்த்தை நயவஞ்சகமாய் உதிர்த்து… எதிரி தாழ் பணிந்து சூழ்ச்சி மகுடம் சூடி… கேட்ட கேள்வி நேரிடைப் பதில் இன்றி மேவிப் பேசி.. வாய்கிழிய தத்துவம் பேசி… புத்திசீவித்தனம் என்று தலைக்கன ரவுடீசம் செய்து நடப்பவனல்ல..! தானைக்கும் தலைவன்… தமிழர் தரணிக்கும் பரணிக்கும் சொந்தக்காரன் தமிழர் தளபதி… தகுதி விகுதி என்றின்றி… தமிழ் தாயை தரையில் வந்து அவள் நிகராய் நின்று கையெடுத்து வணங்கி.. அவள் புரியும் மொழி கொண்டு …

  19. 'கொற்றவை' வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதன் தாக்கத்தில், நந்தன் இணைத்த 'ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ஐயா' பதிவையும் வாசித்தபோது இதைப் பதியத் தோன்றியது: -- பிரக்ஞை தொடர்வதென்று பேச்சுண்டு. ஆழத்தின் அதிர்வுகள் பண்டையனவென்று கருத்துண்டு, நிறுவல் அசாத்தியம். ஆனால் உள்ளிற்குள் கரவொலி. பறவைகள் பரிசோதிக்கப்படுகின்றன. பொரித்த முட்டைகளிற்குள்ளால், உணரப்படாத, கடத்தப்பட்ட அனுபவங்கள் தேடப்படுகின்றன. பேசப்படும் மொழி எதுவும் சட்டென்று தோன்றிற்றிலை. சரித்திரம், பணம் பண்ணமுடியாப் பாடந்தான், இருப்பினும், இருப்பின் தடம் அதற்குள்தான். அகத்தியன் செய்த அற்புத பாடல்கள், மதுரை தாழ்கையில் சேர்ந்து தாழ்ந்தனவாம், பின்னொரு பொழுதில், தென்னவன் ஒருவன், சன்னதங் கொண்டு கக்கித்துப்பியதை, அதிகம் கற்றவன் அல்…

    • 8 replies
    • 749 views
  20. எப்படி அழைக்கப்படும் நானில்லாத எனது வீடு யாருமில்லாத இன்றில்......... என் பெயரால் அழைக்கப்படமுன் அண்ணாவின் பெயரால், அப்பாவின் பெயரால், அம்மாவின் பெயரால், அம்மம்மாவின் பெயரால், அழைக்கப்பட என் வீடு......... எப்பவோ துளைத்து கறல் ஏறிய சன்னங்களையும், எறிகணை சிதைத்து சிராம்பு கிளம்பிய வளைமரங்களையும், அண்ணாவை தொடர்ந்து எனது கீறல்களையும் சுமந்த வைரமரக்கதவுகளையும், மஞ்சள் பூக்கொடிமரம் சுற்றிபடர்ந்து மங்கலமாய் நின்ற தூண்களையும், சுமந்த என் வீடு......... எப்படி அழைக்கப்படும் யாருமில்லாத இன்று. எல்லையோர ஒற்றைபனையும், வேலிக்கிளுவையில் படர்ந்த கொவ்வையும், செம்பருத்தியும் நித்தியகல்யாணியும் நாலுமணிப்பூச்செடியும் முற்றத்து மண் அள்ளி கொ…

  21. மிச்சமிருக்கும் உயிரின் கதைகள்: தீபிகா மிச்சமிருக்கும் உயிரின் கதைகள் ————————————————- உங்களுக்குத் தெரியுமா? நாங்களொரு பருக்கை சோற்றுக்காக … உமிக் கும்பிகளை இரகசியமாய் இரவுகளில் கிளறியவர்கள். யானை மிதித்த கால்தடத்திற்குள் வற்றாது மிச்சமிருந்த தண்ணீரில் தாகம் தீர்த்துக் கொண்டு தப்பி வந்தவர்கள். கடவுள்கள் உறுப்பிழந்து அனாதையாகி செத்துக் கிடந்ததை நம்பமுடியாத கண்களுக்குள் ஏந்தியவர்கள். வீடுகளை பார்த்துக் கொண்டு பதுங்குகுழிக்குள் படுத்துறங்கியவர்கள். மின்விளக்குகளை அணைத்துவிட்டு மெழுகுதிரி வெளிச்சங்களில் படித்தவர்கள். விமானங்களை கண்டால் விழுந்தடித்துக் கொண்டு பதுங்கியவர்கள் பட்டாசுகள் வெடித்தாலும் காதுகளைப் பொத்திக்கொண்டு படுத்த…

  22. சார்ள்ஸ் அன்டனிக்கள் களத்தில்தான் வீழ்ந்தார்கள் உன் பெயரை தன் மகனின் முகவரியாக்கினார் எம் தேசியத்தலைவர். அவர் வீட்டில் தினம் ஒலிக்கும்... உன் நாமம் ... சார்ல்ஸ் அன்டனி. மனம் தளர்ந்து ஒதுங்க நினைத்தவரை இழுத்து வந்து நிமிர்த்தியவன் நீ. அதைப் பெருமையாகக் கூறுவான் உன் தலைவன். அவருக்குத் தெரியாத விடயமெல்லாம் நீ கூறுவாயாம். பெருமைகொள்...அதையும் வெளிப்படையாய் கூறும் பரந்த மனமுடையோன் உன் தலைவன். உன் ஆளுமை பற்றிப் பேசுகையில் குழந்தை போலாகிவிடுவார் எம் தலைவன். நண்பனாய், தோழனாய்,சேவகனாய், மந்திரியாய், முதல் படைத்தலைவனாய் வாழ்ந்தாய். தலைவனின் போராட்ட வாழ்விற்கு சரியான அத்திவாரமடா நீ. உறுதிதளரா நெஞ்சங்கள் முதல் வித்துக்களாகி, இறுதிவரை போராடும் பேராளுமையை அளித்தீர். …

  23. Started by nochchi,

    அட்டைக் கத்தி -------------------------- 1915 படித்தவர் படியேறிச் சென்று சேர் பட்டம் வாங்கினர் 1948 சிங்கம் கத்தியோடு கொடியேறிக் கொண்டது தமிழர் நிலங்களி;லே சிங்களம் குடியேறியது 1918 முதல் கிழிக்கப்பட்டவை தமிழருடனான உடன்பாடுகள் மட்டுமல்ல உடலோடு உரிமைகளும்... தெளிவோடு சிந்தித்த தலைமையொன்றை தமிழர்கள் கண்டார்கள் முப்படை கொண்டு எம்முதுச நிலம் மீட்டார்கள் வந்தேறு குடிகளோடு வடவர்கள் கூடினார்கள் வரலாறு மீண்டும் தலைகீழாகியது தமிழர்களது கைகளிலே மீண்டும் அட்டைக் கத்தி அட்டைக் கத்தியையும் ஆயுதமாய் கொள்வானா எம் முன்னோர் சொன்ன „வல்லவனுக்குப் புல்லும் ஆயதம்' என்ற முதுமொழிக்கிசைவாக அறிவால் ஒளிர்வானா!

    • 6 replies
    • 726 views
  24. சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கவிருந்த காலத்தில் எழுதிய கவிதை. குமுதத்தில் வெளிவந்தபோது ஜெயமோகன் கருத்து எழுதியிருந்தார். இன்றைய மது வ.ஐ.ச.ஜெயபாலன் உலகம் விதியின் கள்ளு மொந்தை. நிறைந்து வழிகிறது அது மதுக் கிண்ணம் தாங்கியவர்களால் எப்போதும் நுரைத்தபடி. நேற்றிருந்தது வேறு. இங்கே நுரைபொங்குவது புதிய மது. அது இன்றைய நாயகனுக்கானது. நாளை கிண்ணம் நிறைகிறபோது வேறு ஒருவன் காத்திருப்பான். நிச்சயம் இல்லை நமக்கு நாளைய மது அல்லது நாளை. எனக்காக இன்று சூரியனை ஏற்றி வைத்தவனுக்கு நன்றி. அது என் கண் அசையும் திசைகளில் சுவர்க்கத்தின் கதவுகளைத் திறக்கிறது. மயக்கும் இரவுகளில் நிலாவுக்காக ஓரம்போகிற சூரியனே உன்னையும் வணங்கத் …

    • 2 replies
    • 1.5k views
  25. நினைவுகளை மட்டும் விட்டுச் சென்ற நினைவழியாப் போராளி பிரகாஸ் ! 2ம் ஆண்டு நினைவுநாள்10.07.02013 எழிலெனும் எழிமையான விடுதலை புலியே எங்கள் எண்ணங்களில் நிலைபெற்ற இனியவனே திருமலை மண்ணிலிருந்து புறப்பட்ட எரிமலையே தியாகப் பயணத்தின் வழியெல்லாம் தோழொடு தோழாய் வந்த அன்புத் தோழனே ! விடுதலையின் வேர் நாட்டி உலகின் திசையெங்கும் விழுதெறிந்து சென்றவனே நீயாற்றிய பணிகள் கண்டு நிமிர்ந்தோமே அன்று நாங்கள். அடிமை விலங்குடைய அன்னை மண் விடுதலையடைய உனை வருத்தி நீ சாதித்தவைகள் ஏராளம். சாவின் விளிம்பில் நின்றாலும் சாதுரியமாய் வென்று வரும் சாதனையாளன் நீ. உன் சாவைக் கூட அறிவிக்காமல் சத்தமில்லாமல் போனாயே ! பறந்து திரிந்த புலியுன்னைப் புற்றுநோய் தின்று நீ பாடையிலே போய் முடியு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.