கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கேட்டலும் படித்தாலும் அரைகுறை பார்த்தாலும் தெரிதலும் அரைகுறை விளக்கமும் தெளிவும் அரைகுறை கன்னியும் கவர்ச்சியும் அரைகுறை படமும் பாட்டும் அரைகுறை பேச்சும் செயலும் அரைகுறை வெட்டியும் பந்தாவும் அரைகுறை வரலாறும் வாழ்கையும் அரைகுறை நம்ம வாழ்க்கையும் அரைகுறை மற்றவன் செயலை விமர்சனம் அரைகுறை என்னை நான் தேடினேன் அரைகுறை நான் முழுமை பெறும் நாள் எப்போ அப்போ நான் மனிதன் ஆகிறேன் .
-
- 7 replies
- 807 views
-
-
மழைபோல் வந்த குண்டுகளால் மண்ணோடு மண்ணாக மாண்டுபோன மக்களைத்தான் மறக்க முடியுமா! மானம் தான் வாழ்வில் மகத்தானெதென்று மண்ணுக்காக மாண்டுபோன மாவீரர்களை மறக்க முடியுமா! முள்ளீவாய்க்கலில்,முழுவதும் தொலைத்துவிட்டு வட்டுவாய்க்கால் பாலத்தால் வானரக் கூட்டத்தின் வாய்க்குள் நுழைந்ததை மறக்க முடியுமா! தண்ணீர்த் தாகத்தால் தண்ணீர் கேட்டபோது தண்ணீர் குழாயினால் நீரைப் பீச்சிஅடித்ததை மறக்க முடியுமா! தலையால் வடிந்த தண்ணீரை நாக்கால் நனைத்து தாகம் தீர்த்ததைத்தான் மறக்க முடியுமா! நீர்த் தாகம் தீர்ந்தது அன்று இன்னும் தீரவில்லை நாம்கேட்ட சுதந்திர தாகம்.
-
- 3 replies
- 808 views
-
-
எழுபதில் கட்டிய வீடு, முற்றத்தில் மல்லிகை பூக்களாய் சொரிய வீடே மல்லிகை வாசம் கிணற்றடியில் செவ்வந்திபூக்கள் விரிந்திருக்க நிலமெல்லாம் பாக்குகள் தேசிமரத்தில் மஞ்சள் பல்ப்புகள் மூடிக்கட்டியிருக்கும் மாதாளம் பழங்கள் பழைய பூவரசிலிலும் பூக்கள் வளவில் ஆங்காங்கே செத்தல்கள் அண்ணாந்து பார்த்தால் தேங்காய்க்குலைகள் ஊஞ்சல் கட்டியிருக்கும் வேம்பு அணில் ஓடிவிளையாடும் கொய்யா திடுக்கிட நொங்கு விழும் சத்தம் நாய் கூடபுகமுடியா வேலி அம்மா,அம்மாவின் அம்மா,அம்மம்மாவின் அம்மா அவர்களின் ஆத்மா உலாவும் காணி கோடி ஆசையோடு வீடு பார்க்க போனோம் வாசலில் பூட்டு முற்றத்தில் குறியீட்டுப்பலகை " இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது"
-
- 7 replies
- 703 views
-
-
முஸ்லீம் மக்கள் சிங்கள தமிழ் போரில் தேவையான போதெல்லாம் சிங்களத்திற்கு முண்டு தந்தனர் சிங்களனின் புலனாய்வில் முதுகெழும்பாய் இருந்தனர் கிழக்கு தேர்தலிலும் சிங்களத்துடன் கூட்டாகி தமிழரை தோற்கடித்தனர் ஜெனிவாவிலும் சிங்களத்திற்கு தோள் கொடுத்தனர் தமிழ் இலக்கியத்திலும் சிங்களத்திட்காய் பேசினர் கூட இருந்து குழிபறித்தனர் தமிழர்கள் விழும்போதெல்லாம் ஏறி உலக்க தவறவேயில்லை பண்டமாற்றாய் பணம் சிங்கள குடியேற்றம் போல் முஸ்லீம் குடியேற்றத்திற்கும் குறைவில்லை சிங்களம் முகத்தில் குத்த முஸ்லீம் முதுகில் குத்தினர் இன்று சிங்களம் பள்ளிவாசல்களை உடைக்கிறது வாழும் சுதந்திரத்தை பறிக்கிறது தமிழன் மட்டுமல்ல நீயும் அடிமை என்கிறது நாம் குரல் கொடுப…
-
- 3 replies
- 583 views
-
-
தனக்கெனவே வாழ்ந்தும் தகுதியாய் வாழத்தெரியாத மனிதர் முன் நீங்கள் பிறருக்காக வீழ்ந்ததின் வீரத்தின் பதிவுகள் எத்தனை எமக்கு எதையெல்லாமோ எண்ணிக் கொண்டிருந்த-நாங்கள். எதையுமே பெற்றுக் கொள்ளாத நிலையில் நீங்கள் உங்களையே விட்டுக்கொடுத்ததில் நாங்கள் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது! உங்களது குருதி எமது நிலத்தில் உறைந்து கிடக்கின்றது , உங்களது சுவாசம் நாங்கள் சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கின்றது உங்கள் வியர்வை எமது இனத்தின் விடுதலைப் பாதையில் சிந்திக்கிடக்கின்றது உங்கள் வீரத்தின் பதிவுகளை எங்கள் மனதில் நிறுத்தி நிமிர்த்து நிற்கின்றோம் !
-
- 1 reply
- 586 views
-
-
கணவன் இந்திய இராணுவத்தால் அல்லது கூட இருந்தவரால் காணாமல் போனவர் தம்பி கடற்தொழிலில் கடற்பீரங்கி சத்ததிற்கு பின் காணாமல் போனவன் மூத்தவன் செம்மனிக்காலத்தில் காணாமல் போனவன் இளையவன் முள்ளிவாய்க்காலுக்குப்பின் சரணடைந்து காணாமல் போனவன் மருமகளும்,பேரக்குஞ்சுகளும் அவுஸ்ரேலியாவிற்கான கடற்பயணத்தில் காணாமல் போனவர் இவள் வானத்தையும் கடலையும் மாறி மாறி பார்க்கிறாள்
-
- 12 replies
- 810 views
-
-
மணமற்ற மலர்கள் மரமற்ற வெளிகள் மனிதரற்ற மனைகள் மகிழ்ச்சியற்ற மனங்கள் ஒளியற்ற கண்கள் ஒலியற்ற ஓலம் மட்டற்ற துயரம் பற்றற்ற உலகம் திலகமற்ற நுதல்கள் திங்களற்ற வானம் நிழலற்ற பகல்கள் நீரற்ற ஊற்று உயிரற்ற உடல்கள் உணர்வற்ற உறவுகள் அருளற்ற இறைவன் இருளுற்ற வாழ்வு
-
- 19 replies
- 1.2k views
-
-
மறந்தும் வலிக்கும் நினைவு மறைந்தும் தெரியும் தழும்பு அணைந்தும் எரியும் அகல் காய்ந்தும் தளிர்க்கும் காம்பு ஓய்ந்தும் வீசும் காற்று உறைந்தும் மீளும் உணர்வு அடங்கியும் எழும் ஆன்மா இறந்தும் வாழும் உயிர் எரியும் அகலில் வலிகள் விலக தளிர்க்கும் காம்பால் தழும்பு மறைய வீசும் காற்று உணர்வை மீட்க எழும்பும் ஆன்மா வாழும் இனி....
-
- 9 replies
- 754 views
-
-
மேய்ந்து கொண்டு இருந்த மாடுகள் திடீர் என தலையை நிமிர்த்தி மேல பார்த்து தங்களுக்குள் பேசிவிட்டு கிழக்கே நடக்க தொடங்கின வேகமாக மிக மிக வேகமாக கருமேகம் வடக்கு திசையில் சுழன்று மேலுருளும் காட்சி அமாவாசை இருளை நினைவு படுத்த மாடுகள் வரிசையாய் நடந்தவண்ணம் இருந்தது பட்டியை திறந்து விட்டு பரமர் வானத்தை பார்த்தபடி மிக் 27 தாழபறக்க அவரவர் பக்கத்தில் இருக்கும் மரங்களுக்குள் பாதுகாப்பை தேட அண்ணாந்து பார்த்து சைக்கிள் ஓடி வேலியுடன் மோதியவனும் கிடங்கில் விழுந்தவனும் தங்களுக்குள் சிரித்து விட்டு தம்பாட்டில் அலுவல்களை தொடர ஒலியின் ஓசைகேட்டு என்ன என இனம் கண்டு மக்கள் வீடு போவதும் மாடு மழைவருவது முதலே தெரிந்து பட்டி திரும்புவதும் வன்னியின் அன்றாட வாழ்க்கை ஆகிப்போனது மக்களுக…
-
- 2 replies
- 606 views
-
-
முப்பாட்டனின் பாடலும் அவனுக்கு முன்னான ஆதிமுந்தையோனின் பாடலும், எனக்கு கேட்கிறது. வேட்டையும் வேட்கையும் வேளாண்மையும் போதுமென, கூடில்லாத கூட்டமாக நகர்ந்த ஆதிமுந்தையோனின் நிலாப்பாடலில்... அடங்காத வீரமும் திடங்கொண்ட தோள்களின் தீரமும் முடங்கிக்கிடக்காத விவேகமும் தடங்குலையாத வேகமும் கேட்கிறது. சீரான காலடிகளும் குதிரைக் குளம்படி ஓசைகளும் காற்றை கிழிக்கும் வன்ம பிளிறல்களும் ஒளிபட்டு தெறிக்கும் வேல் முனைகளும் குருதி வழிந்து உயரும் வாள்களும் பொருதி முடித்த களத்தே முனகும் பேய்களும் நாய்களும் நரிகளும் தெரிகிறது அடுத்தவன் பாடலில், பாடல் கேட்கிறது மென்மையாக மெல்லியதாக சம நிலத்தின் பயணிக்கும் காற்றுப்போல..... பாடல் கேட்கிறது........ பாடல் கேட்கிறது ஒரே இர…
-
- 8 replies
- 757 views
-
-
Windows வழியே பார்வை Walls இன் மேலால் பேச்சு உன் கண்கள் எனும் Icons Double click இல் திறக்கும் என் மன file. Snail-mail எனும் கடிதம் Encryption பலவும் கொண்டு Firewalls சிலதைத் தாண்டி அடையும் என்னவள் Inbox இதயம் எனும் Hard-Drive இல் Hidden-File போல் அழியாமல் அப்பப்போ pop-up செய்யும் Dynamic web-Page முதற்காதல்
-
- 1 reply
- 526 views
-
-
வீதியின் ஓரம் நின்று வேடிக்கை பார்.. தமிழர் படை அலைகடல் என..பொங்கி பீறிட்டு எழுந்து குபு..குபுவென்று வருவதை! *************************** மு.வே.யோகேஸ்வரன் ********************************* பாதியிலே போர் முடிந்தாலும் நீதி கிடைக்கும் வரை மீண்டும் மீண்டும்.. நெருப்புக்குள் இருந்து பீனிக்ஸ் பறவைகள்போல் பிரளயமாகப் புறப்பட்டு வருவோம்..! நாங்கள் வெறியர் களடா.. .. சாதி வெறியர்கள் அல்ல.. மத வெறியர்கள் அல்ல.. மொழி வெறியர் களடா .. தமிழ் மொழி.. வெறியர் களடா..! எம்மோடு அணிவகுத்து வர இன்னும் நீ துணியவில்லை என்றால்.. சும்மா வீதியின் ஓரம் நின்று வேடிக்கை பார்.. தமிழர் படை அலைகடல் என.. பொங்கி பீறிட்டு எழுந்து குபு....குபு வெ…
-
- 1 reply
- 798 views
-
-
வஞ்சியிடை வளைந்தாட பிஞ்சுக்கையில் வளையாட கொஞ்சியவன் விளையாட மிஞ்சியிருந்த வெட்கமும் உரசிய மூச்சுக்காற்றில் பஞ்சாய்! கட்டியவன் களைந்தாட கட்டிலிலே அளைந்தாட இன்பத்தில் திளைத்தாட உடலெங்கும் வேர்த்தோட காமக் கடலெங்கும் உணர்வலைகள்! கார்கூந்தல் கலைந்தாட கருவிழிகள் கலந்தாட அங்கங்கள் எழுந்தாட உணர்வுகள் திண்டாட மனவானமெங்கும் வாண வேடிக்கை! தாபங்கள் சேர்ந்தாட தாகங்கள் தீர்ந்தாட தேகங்கள் போராட உரசியுரசிப் பற்றிய தீயில் பற்றிக்கொண்டது மோகத்தீ! கையிரும்பு கோர்த்தாட மெய்நரம்பு தெறித்தோட தொட்டுடல் விரித்தாட கட்டுடல் நீர் உடைத்தோட பட்டுடல் நிலம் நனைந்து... ஈரலித்துப் பேதலித்தது! *************************************************** சில எழுத்துப…
-
- 14 replies
- 1.8k views
-
-
பழஞ்சோற்றிலும் பழைய மீன்குழம்பிலும் இருந்த ருசி, இங்குள்ள பீட்சாவிலும் பர்கரிலும் இல்லை! நாட்டுக்கோழி... நம்நாட்டு நாட்டாடுபோல... கென்டுக்கியும் மக்டொனால்டும் இல்லவே இல்லை!! அழகான காரிலிங்கு சொகுசாக சுற்றினாலும், ஊரிலுள்ள தெருவெல்லாம்... சைக்கிள் மிதித்துத் திரிந்ததுபோல் சந்தோசமாயில்லை...! பெட்டிக்கடையில் மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டால், வாய்மட்டுமா இனிக்கும்...?! முழு மனசுமே சேர்ந்தினிக்குமே! கிடைச்ச நேரமெல்லாம் கந்தப்புவின்ர காணியில விளையாடி மகிழ்ந்த கிரிக்கெட்டினை நேரடி அலைவரிசையில் பார்க்கமட்டுந்தான் முடிகிறது... இரசிக்க முடியவில்லை! அதிகாலை சுப்ரபாதத்தையும் திருவெண்பா காலச் சங்கொலியையும் அதிகாலைத் தூக்கத்திலும் இரசித்த மனதுக்கு ...இப்பொ…
-
- 14 replies
- 1.5k views
-
-
கடலை போன்றது நிலையாய் இருக்கா அலையும் காற்றும் உறங்க விடா படகில் பலர் அலையுடன் பேசி நகர என் மன வானில் விடி வெள்ளி சீவாத தலை முடியும் பொட்டில்லா உன் நெற்றியும் எனக்கு அம்மவாசை இரவை நினைவில் கொண்டுவர உன் புன்சிரிப்பு நட்சத்திரம் ஆனது நீ பேசினால் புல்லாங்குழல் இப்பொழுது எனக்கு சங்கு சத்தமா கேட்குது உன் அண்ணன் பார்த்த நாள் முதல் கனவிலும் சுடலை தெரியுது நான் உன்னை பார்க்கிறேன் காதல் பார்வை நீ என்னை பார்க்குறாய் ஏக்க பார்வை நான் உன்னை அடைய விரும்பினேன் ஆனால் உன் அண்ணன் என்னை அடிக்க தேடுறான் என்றோ ஒருநாள் உன்னை சேரும் நாள் வரும் அதுவரை என் மனம் நிலையில்லா கடலில் பயணம் செய்து கொண்டு இருக்கும் உன்னை தேடி காதலியே .
-
- 10 replies
- 1.4k views
-
-
-
முள்ளிவாய்க்கால் பாலைமரக் கிளிகளே! பாசமுடன் பாடும் பறவைகளே ! சோலையதை விட்டெங்கே சென்றீர்கள்? பாவியரின் 'பொமபரினால்' . பாலைமரம்..வீரைமரம் எல்லாம் வேரோடு சாய்ந்து விழுந்தன..! தாவியதில் ஏறும் மந்தியினம் கூவிவந்த குண்டுகளால் அழிந்தன..! பாட மறந்தன குயில்கள். ஆட மறந்தன மயில்கள் ஓட மறந்தன மான்கள் காடுதரும் சுகத்தில் களித்திருந்த காடைகளும்..சேவல்களும் பாடையிலே ஏறி பறந்தன! தேன்தேடும் வண்டினம் வான்கூவி வந்த 'பொஸ் பரசால்' தாம் கூடும் கானகத்து மரக்கிளையில் எரிந்தன ! கூழைக் கடாக்கள் .... கட்டிய கூடுகளில்... சிறகு முளைக்காத சிறுகுஞ்சுகள் பாவியர்.. கொட்டிய …
-
- 1 reply
- 583 views
-
-
மரணத்தின் முகநூலுக்கு, மனம் விரும்பி, நட்பு நாடிய, மாவீரர்கள் வரிசையில், முண்டியடித்து முன்னேறியவன்! வாழ்வின் வசந்தத்திற்கு விடை கொடுத்தனுப்பிய, வீரத் தளபதிகளின் வரிசையில் விதையாகி வீழ்ந்தவன், மாவீரன் மேஜர் சிட்டு! வீசும் வாடைக் காற்றின் வெறி அடங்கும் ஓசையில்… அசையும் காவோலைகளின் சர சரப்புச் சத்தத்தில் , ஆசையுடன் நிலம் தழுவும் அலைகளின் முனகலில், சிற்றாறுகளின் சிரிப்பொலியில், சங்கீதம் படித்தவன்! ஓயாத அலைகளின் காலத்தில், வெற்றி நடை பயின்ற, வேங்கைகளின் படை நடையில், ‘கம்பீர நாட்டை’ வாசித்தவன்! கலைப் பண்பாட்டுக் கழகத்தின். காவலனாய் வாழ்ந்தவன்! கறையாக நிலைத்து விட்ட கண்ணீரால் காவியங்களும், சிதறிப் போன சொந்தங்களின், செந்நீரால் ஓவியங்…
-
- 4 replies
- 815 views
-
-
காவியக் கவிஞ்ஞன் நான் என் எழுத்துக்கள் ஆயிரம் பேரைப் போராளியாக்கியது அவகளை உலகம் பயங்கரவாதியாக்கியது.. என் உணர்ச்சிப் பாடல்கள் ஆயிரமாயிரம் பேரைப் போர்க்களமேவச் செய்தது - மாவீரராக்கி அவர்தம் குடும்பத்தை அநாதையாக்கியது.. என் சிந்தனைச் சிதறல்கள் குஞ்சு குருமனையெல்லாம் அழித்து எம் குலப்பெண்டிரைக் கைம்பெண்ணாக்கியது எஞ்சியவர்களை அகதியாக்கியது.. மாபெரும் வீரனை முருகனாய் பாவனை செய்து முள்ளிவாய்க்காலில் கோம(வ)ணக் கடவுளாக்கினேன்.. இன்று???????? அவன் அவதாரம் எடுப்பான் என் வயிற்றுப் பிழைப்பு நடக்க அவன் வருவான்.. வரவேண்டும் .!! சூரியத்தேவனாய் சுடர் விட்டழிக்க அவன் வரவேண்டும்...!!!
-
- 54 replies
- 6.4k views
-
-
ஒற்றைச் சொல்லு வலி(NO VISA) 1990 ஆனையிறவுசமர் தரையிறக்கம் இடப்பெயர்வு அகதிமுகாம் இடப்பெயர்வு முகாம் பசி பட்டினி இழப்பு வலி இடப்பெயர்வு...(3) முகாம் செல்லடி பொம்பர் கெலி நேவிக்காரன் படுகொலை இடப்பெயர்வு முகாம் 1995 யாழ்இடப்பெயர்வு கிளாலி படுகொலை வன்னி முகாம் போராட்டம் இடப்பெயர்வு இடப்பெயர்வு இடப்பெயர்வு......(6) முல்லைத்தீவு ஆனையிறவு வெற்றிகள் சமாதானம் ஏ9 ஓமந்தை கொழும்பு சுனாமி அவலம் சாவு இடப்பெயர்வு மகிந்த சண்டை சண்டை படுகொலை கொத்து குண்டு படுகொலை போராட்டம் சண்டை முள்ளிவாய்க்கால் பாதுகாப்புவலயம் படுகொலை இடப்பெயர்வு வவுனியா முகாம் சித்திரவதை சிறை ஏழாம் மாடி அடி உதை காசு லஞ்சம் புத்தளம்…
-
- 2 replies
- 1k views
-
-
என்றோ ஒரு நாள், எனது அபிமானத்துக்குரிய கள உறவு, சாந்தியின் வேண்டுகோளுக்கு இணங்க, மாவீரன் சிட்டுவின் நினைவாக,அவரது வலைத்தளத்துக்காக அடியேன் எழுதிய கவிதையொன்றை, இன்று தேசக்காற்று இணையதளத்தில் கண்டேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்ற ஆவலில், இங்கு பதிகின்றேன்! மேஜர் சிட்டுவுக்கு எனது வீர வணக்கங்களுடன்...... மரணத்தின் முகநூலுக்கு, மனம் விரும்பி, நட்பு நாடிய, மாவீரர்கள் வரிசையில், முண்டியடித்து முன்னேறியவன்! வாழ்வின் வசந்தத்திற்கு விடை கொடுத்தனுப்பிய, வீரத் தளபதிகளின் வரிசையில் விதையாகி வீழ்ந்தவன்! வீசும் வாடைக் காற்றின் வெறி அடங்கும் ஓசையில்… அசையும் காவோலைகளின் சர சரப்புச் சத்தத்தில் , ஆசையுடன் நிலம் தழுவும் அலைகளின் முனகலில், சிற்றா…
-
- 5 replies
- 1.1k views
-
-
உன் - வாழ்க்கைப் பயணம் துவங்கட்டும்..! வெறும் வெளிச்சத்தை நோக்கி அல்ல விடியலை நோக்கி ======================= பதவி - இதன்மேல் நீ அமர் உன்மேல் - பதவியை அமரவிடாதே ========================= உதவி - எல்லோரிடத்தும் கேட்காதே! உதவி செய்பவர்களைத் தேர்ந்தெடு.. ========================== மரணத்தின் கர்ப்பப்பையில் கலைந்து போனவனே ! நீ செத்திருந்தால் ஊர் அழுதிருக்கும் சாகவில்லை நீயே அழுகிறாய் கைக்குட்டை இந்தா கண்களைத் துடை உயிரின் உன்னதம் தெரியுமா உனக்கு? மனிதராசியின் மகத்துவம் தெரியுமா? உயிர் என்பது ஒருதுளி விந்தின் பிரயாணம் இல்லையப்பா அது பிரபஞ்சத்தின் சுருக்கம் உன்னை அழித்தால் பிரபஞ்சத்தின் பிரதியை அழிக்கிறாய் பிரபஞ்சத்தை அழிக்க …
-
- 1 reply
- 793 views
-
-
அவள் 1 மண்ணும் விண்ணும் மட்டுமல்ல மனசும் பூச்சூடிய ஒரு இரவின் பாடல். அதை எப்படி ஆரம்பிப்பது? யார் எடுத்துத் தந்த அடியிலிருந்து? இல்லை எடுத்துச் செல்லுங்கள் உங்கள் அதீதக் கற்பனைகளை. மதுவும் விந்தும் ஊறிய சொற்களை. கனவுவரை மண் தோய அவள் இட்ட அடிகளில் உள்ளதே கவிதை. அவள் பி.ஏ. முடிக்கவில்லை என்றார்கள். அவள் காட்டில் என்றார்கள். மேலும் அவள் ஒரு கெரிலா போராளி என்றார்கள். நானோ அவளை கொழும்பு நகரத் தெருவில் பார்த்தேன். நான் உறைந்தது அச்சத்திலா ஆச்சரியத்திலா அல்லது அவள் மீதான மதிப்பினிலா. கோப்பிக் கடை மேசையுள் மறைத்தேன் நடுங்கும் என் கால்களை. அவள் அதே அமைதி ததும்பும் முகமும் குருத்துச் சிரிப்புமாய் முகவரி கேட்காதீர்கள் என்றாள். வாழ்வு புதிர்கள் போன்…
-
- 4 replies
- 706 views
-
-
1983ம் ஆண்டு கலவரம் தொடங்குவதற்கு ஒரு சில நாட்களின் முன்னம்தான் எனது யப்பானியத் தோழி ஆரி யுடன் தமிழகத்தில் இருந்து கொழும்பு திரும்பியிருந்தேன். கொழும்பில் சி.ஐ.டி தொல்லை இருந்தது. அதிஸ்டவசமாக கலவரத்துக்கு முதன்நாள் முஸ்லிம் கிராமமான மல்வானைக்குப் போயிருந்ததால் உயிர் தப்பியது. 1983ம் ஆண்டுக் கலவரத்தைப் பதிவுபண்ணிய இக் கவிதை வெளிவந்த நாட்களில் பேராசிரியர் பெரியார்தாசன் 100க்கும் அதிகமாக பிரதி பண்ணி தமிழகத்தில் பலருக்கு கிடைக்கச் செய்திருக்கிறார். இது அதிகமாக வாசிக்கப் பட்ட எனது கவிதைகளில் ஒன்று. உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன். ஜெயபாலன் உயிர்த்தெழுந்த நாட்கள் -வ.ஐ.ச.ஜெயபாலன் அமைதிபோல் தோற்றம் காட்டின எல்லாம் துயின்று கொண்டிருக்கும் எரிமலை போல. மீண்டும் காற்றில் மண் வ…
-
- 2 replies
- 713 views
-
-
அக்கா நீங்களுமா....? Jul 3, 2013 வாழ்வு வசமாச்சுதென்று பாடிச் சென்றான் ஒருவன் நாசமாப் போச்சுதென்கிறேன் நான் இருதலைக் கொள்ளியாய் எம் தேசம் நம்பிக்கைகள் நரம்பறுந்து போயின எனக்கு ஊமைக்கனவுகள் தொடர்கின்றன. வெள்ளை மாளிகையையும் செங்கோட்டையையும் நம்பி எங்கள் வாழ்வு துக்கத்திலும் ஏக்கத்திலுமாய் கழிகிறது இரவுகள் வெடியோசைகள் கேட்கவில்லை விசும்பல்கள் தொடர்கின்றன. அழுதாலும் புனர்வாழ்வாம் நிமிர்ந்து நிற்றல் குற்றமென்றா சொல்கிறார்கள் உறைந்து கிடந்த ஊத்தைகள் எல்லாம் உன்மத்தம் கொண்டு ஆடுகின்றன. சாதிச் சங்கங்கள் பிரதேசப் பெயர்க் குழுக்கள் மூலை முடுக்கெங்கும் வக்கிரங்கள் என்ன இழிவடா எங்கள் இனத்துக்கு அன்று முளாசியெரிந்த நெருப்பில் இந்தக்குப்பைகள் எரியாமல் போன மாயம் என…
-
- 1 reply
- 691 views
-