கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நேற்று கனடாவில் கிரவுண்ட் ஹாக் டே அது குழியில் இருந்து வெளியே தலையை நீட்டி தனது சுதந்திர நாளை எண்ணி போனது குழிக்குள் இன்று நவீன துட்ட கெமுனு தமிழீழ தலைநகரில் அறுபத்தி ஐந்து வருட அவலத்தை தொடருவேன் பண்டைய மன்னர்கள் புறாக்களை பறக்கவிட்டனர் சுதந்திரமாக அந்த பறவை போல நாமும் பறந்திடவேண்டும் எமது மண்ணில்..
-
- 4 replies
- 580 views
-
-
உன் மென் சிரிப்பால் மெய்மறந்து கண்கள் மயங்க.... உன் மென் ஸ்பரிசங்கள்... உணர்வுக்குள் ஊடுருவி உலுப்பி நிறுத்த... நாளங்களின் அதிர்வுகள் நாதங்களாக.... இன்ப சங்கீதமாக... என் உதிரத்தை உன் இதழ்களுக்கிடையே சுரக்க... உயிருக்குள் இன்பமாய் வலிக்க.. தமிழ் சினிமாவில் தந்தையே வில்லனாவது போல்.... நமக்கிடையேயும் ஒரு வில்லன்.... தட்டி உலுப்புகிறான் “ஏய் ஊட்டிக் கொண்டே உறங்கி விடாதே... பிள்ளைக்குப் புரைக்கேறும்..” அது உன் அப்பா... http://poonka.blogspot.co.uk/2009/11/blog-post_2903.html
-
- 11 replies
- 1.6k views
-
-
செத்துப் போனவர்களெல்லாம் வானத்தில் நட்சத்திரங்களாய் மாறிவிடுவார்களாம்!? அம்மம்மா எனக்குச் சொன்ன சிறுபருவக் கதைகள் இன்னும் ஞாபகம் இருக்கு! என் பேரப்பிள்ளைகளுக்கு சொல்வதற்கு நிறையக் கதையிருக்கு...! அம்மம்மா சொன்னகதை நிறைய இருக்கு...! பாட்டி வடை காகம் நரியிலிருந்து உச்சிக் கொப்பு முனியிருக்கும் புளியமரத்தடி தாண்டி... வைரவருக்கு நாய் வாய்ச்ச கதையோடு, தமிழருக்கு கரிகாலன் கிடைச்ச கதையெல்லாம் அம்மம்மா சொல்லித் தந்தா! அம்மம்மாவை நினைத்துக்கொண்டே இருண்ட வானத்தை அண்ணாந்து பார்க்கின்றேன்... புதிதாய் ஒரு நட்சத்திரம் எனைப்பார்த்துச் சிரிப்பதுபோல் மின்னுகிறது! என் பேரப்பிள்ளைகளின் வானத்தில் இன்னும் பல நட்சத்திரங்கள் புதிதாய்ச் சிரிக்கும்! வானத்தைப…
-
- 1 reply
- 751 views
-
-
இலங்கையில் தமிழர்களுமேற்றினர் சுதந்திரதினக் கொடி அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது கொடி ஏற்றாதிருக்கும் சுதந்திரம் கூட.
-
- 0 replies
- 680 views
-
-
1)என் இனத்தின் சில மனிதங்கள்..... போராட்டம் வீறு கொண்டு பயணித்த நாட்களில் விடுதலை கனவினை உன் உரிமைக்காக தங்கள் வாழ்வினை அர்பணித்த புலிகள் மேல் நீ துரோகத்தின் காலில் கிடந்தது ஆயிரம் ஆயிரம் இழிநிலை வதை சொற்கள் வீசினாய் என் இனத்தின் சில மனிதங்கள்..... * சிறுவர்களை பிடிபதாகவும் * காணிகளை பறிப்பதாகவும் நடக்காதவற்ரை நடந்ததாக சித்தரித்த என் இனம் ஈழத்திலும் / புலத்திலும் ஆயிரம் ஆயிரம் ஊடகத்துக்கு செல்விகள் வழங்க்கினீர்களே ? ஆனால் இன்று கண் முன்னே வயது வேறுபாடு இன்று பிஞ்சுக் குழந்தை கூட இனவெறியனாலும் சில துரோக காடையர்களாலும் சிதைக்கபட்டு எம் இனதின் ஆணிவேர்களே அறுக்கபட்டும் செல்கிறதே எங்கே உங்களின் வாய்மையின் வீச்சு ?... இன்று எங்கே உங்கள் ஊடக பற்று ! .... புத்த…
-
- 125 replies
- 7.5k views
-
-
கண்ணா லட்டு தின்ன ஆசையோ ?? எல்லோர்க்கும் தெரிந்த லட்டு எண்ணத்தில் இனிக்கும் லட்டு தின்னத் தின்ன திகட்டா லட்டு ரவா லட்டு , பூந்தி லட்டு....... நாலுபக்கமும் நாலுபேர் இழுக்க நாம் செய்த லட்டோ பலர் பல்லுடைத்து பாவப்பட்ட லட்டு.......... அவரவர் வாழ்வை அவராகவே தியாகம் செய்து திகட்டுவதற்கே , ரத்தத்தையும் தசையையும் பக்குவமாய் கலந்து தேசியத்தில் பதமாய் குழைத்து எங்கள் தியாகநெருப்பில் செய்த லட்டு ........... லட்டால் வந்த வெக்கை பலபேரைக் கிலி கொள்ள பலகைகள் ஒன்றாய் சேர்ந்ததே செய்த லட்டை பிரிக்கவே!!!!!!! லட்டுக்கு வந்த சோதனை உடன் சேர்த்த கஜூ பிளம்ஸ்சால்........ மெல்லிசு மெல்லிசாக லட்டுவும் உலுர்ந்ததே !!!!! மண்ணுடன் மண்ணாக கரைந்ததே !!!!!!!! கண்ணா ம…
-
- 8 replies
- 2.3k views
-
-
பால்ய நண்பனை பேஸ்புக்கில் பார்த்தேன் - நேற்று தெருவில் பார்த்த பள்ளிச் சிறுவனின் புத்தகப் பையைப் போலவே கனக்கிறது மனசு! பாடப் புத்தகங்களின் பக்கங்களைவிட எமக்கான நினைவுப் பக்கங்கள் அதிகம்! அவனது முகத்தைப் போலவே எல்லாமே மாறிவிட்டது! மாற்றங்கள் அவனுக்குள் மட்டுமல்ல, எனக்குள்ளுந்தான்! இப்போதைய "ஹாய்" "ஹலோ" பண்வழக்க வார்த்தைகளைவிட, கண்டபடி வாயில் வரும் அப்போதைய கெட்ட வார்த்தைகளில்... நட்பின் உரிமையும் அன்பும் நிறைந்திருந்தது! நெருங்கிய நட்புக்களை பிரிவுகள் மட்டும் பிரிப்பதில்லை! காலங்களும் சேர்ந்தே பிரித்துவிடுகின்றன!! மீண்டும் இணைக்கும் முகப்புத்தகம்... பழைய நண்பர்களை "புதிதாய்" இணைத்துக்கொண்டே இருக்கிறது! இது புதிதா...? அல்லது புதிரா...? விடைதெர…
-
- 4 replies
- 653 views
-
-
கனவுகளும் நிஜங்களும் புணர்ந்து கொள்கையில் நம்பிக்கைகளின் பிரசவம் கணக்கு வழக்கின்றி... முன்னொரு போதில் இவை தேர்தல் வாக்குறுதிகளாகவே அறியப்பட்டிருந்தது... ஜனநாயகியோடு படுக்கையை பகிராதவரில்லை! போனவன் வந்தவனெல்லாம் பெற்றுத்தள்ளிவிட்டு போனான்..... தலை ஒன்றுக்கு மூளை இன்னொன்றுக்கு வயிறு வேறொன்றுக்கு அதன்கீழ் ஏதோவொன்றுக்குமாக.... குழந்தைகளோ.... பல்வேறு தேசங்களில் பல்லின மக்களாயின.... நோய் முற்றித்தளர்ந்த விபசாரி வீதிக்கு வந்தாள் பிச்சைக்காரியானாள்.... ராஜ்ய பரிபாலினி ராப்பிச்சையானாள் புடவை கிழிசல்களுக்குள்ளால் தசைப்பகுதி தெரிந்தது..... எஞ்சிய அரசியல்வாதிகளும் இடியாப்பம் வாங்கிக் கொடுத்துவிட்டு இன்பம் அனுபவித்து போனார்கள்.... வயித்தெரிச்சலில் இப்போத…
-
- 1 reply
- 924 views
-
-
வீடெங்கும் தடபுடல் அமளியென அதிர்ந்திடவே வீதியெங்கும் தோரணங்கள் தொங்கிச் சிரித்திடவே வீடியோக்காரர்களும் வித விதமாய் படம்பிடிக்க வீணான செலவுகள் எதற்கென்றே புரியவில்லை! பதின்மூன்று வயதிலவன் பத்து "ஏ"க்கள் பெற்றிருந்தான் பந்தலும் போடவில்லை பரிசுகளும் குவியவில்லை பத்தே வயதுபெண் பருவம்தான் அடைந்துவிட்டால் பட்டுப்புடவைகட்டி பலகாரங்கள் பல ஊட்டி பத்திரப்படுத்துவாதாய் பதுக்கியேவைத்தார்கள் பத்தியமானதாய் எதை எதையோ சொன்னார்கள் ஆருமில்லா அறைதனிலே அவளை அமர்த்திட்டர் ஆணியொன்றினையோ அவள்தலையில் செருகிட்டர் அதற்கான காரணம் யாதென கேட்டிட்டால் அமுக்கிப்போடும் பேயினை விரட்டவே என்றிட்டர் ஆண்பாலும் பெண்பாலும் தெரிந்திருக்கு பேயுக்கு அப்பெண்படும் பாடுத்த…
-
- 1 reply
- 460 views
-
-
சாத்திரக்காரர்கள் தலைமறைவானார்கள். சனங்களின் பெரும்பிணி சாத்திரியின் பரிகாரங்களில் தீராதென்பதை சாவு சனங்களை நெருக்கிய மலந்தோய்ந்த கடற்கரையில் பிணங்கள் மிதந்த கடனீரேரிகளில் தம்மை நோக்கி இரண்டு பக்கங்களிலிருந்தும் குறிபார்த்துக்கொண்டிருந்த துப்பாக்கிகளை அஞ்சிய இரவில் சனங்கள் கண்டுகொண்டார்கள். சனங்களோடு சனங்களாய் தப்பியோடும் அவசரத்திலும் சாத்திரக்காரர்கள் பரிகாரப் புத்தகத்தை குழிதோண்டிப் புதைப்பதற்கு மறந்திருக்கவில்லை. போகுமிடம் எப்படியோ? சூரியன் மேற்கில்தான் உதிக்குமோ? நிலவு பகலில்க் காயுமோ? போன பின்னர் பார்க்கலாம். முக்காடிட்டபடி தமக்கு முன்னர் ஓடித் தப்பிய சாத்திரக்காரர்களைச் சபித்தபடி சனங்கள் உத்தரித்தனர். ஊழி முடிந்தபின்னர்…
-
- 6 replies
- 1k views
-
-
பாட்டி வீட்டுப் பழம் பானை பாட்டியின் வீட்டுப் பழம்பானையடா அந்தப் பானை ஒரு புறம் ஓட்டையடா ஓட்டைவழி ஒரு சுண்டெலியும் அதன் உள்ளே புகுந்து நெல் தின்றதடா உள்ளே புகுந்து நெல் தின்று தின்று வயிறு ஊதிப் புடைத்துப் பருத்தடா மெள்ள வெளியில் வருவதற்கும் ஓட்டை மெத்தச் சிறிதாக்கிப் போச்சுதடா பானையைக் காலை திறந்தவுடன் அந்தப் பாட்டியின் பக்கமாய் வந்த ஒரு பூனை எலியினைக் கண்டதடா அதை அப்படியே கௌவிச் சென்றதடா கள்ள வழியில் செல்பவரை எமன் காலடி பற்றித் தொடர்வானடா! நல்ல வழியில் செல்பவர்க்கு தெய்வம் நாளும் துணையாக நிற்குமடா! படித்ததில் பிடித்தது குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
-
- 9 replies
- 7.4k views
-
-
ஆர்கலிவானம் புணர்ச்சி வேட்கையில் தன்னிறம் உழல கார்மேக இதழ்கள் கனைகடலைத் தழுவ கலவிமேவலில் வான் தனைமறந்து மின்னலிசைக்க நறுந்தென்றல் பரவி கலவி வெம்மையகற்ற விண்வெளி இருள்பரப்பி குடைவிரிக்க மோகமிகுதலில் தன்முனைப்பு அறுந்து ஏகாந்த அமைதி நிலவ கனைகடல் அடங்கி விசும்பின் துளிகள் ஏற்க பிரபஞ்சம் எங்கும் புது உயிர்களின் தோற்றம்....... ஆர்கலிவானம் - சத்தத்துடன் முழக்கமிடும் வானம் கனைகடல் - கத்தும் கடல் கலவிமேவலில் - கலவி விருப்பம் விசும்பின் துளிகள் - மழைத்துளிகள்
-
- 1 reply
- 557 views
-
-
என் மேனி விரல் நுனி கொண்டு உன் மேனி தடவ நாழிகையோடு - அது சூடாகி இதமாக நீ சிணுங்கும் ஒலியதில் உன்னாசை நானுணர்ந்து மெல்லத்தட்டி... வரிகளில் நான் பேச வாக்கியங்கள் நீ அமைப்பாய். ஆண்டுகள் நாலு நமக்குள் இந்த ரகசிய உறவு நாம் பேசியவை பரகசியமாக.. ரசிக்கவும் விமர்சிக்கவும் நாலு நல்லவரும் உறவுகளும் உண்டு வையகத்தில்..! எம்முறவு கண்டு எம் பேச்சில் குருதி அழுத்தம் கூடியோரும் சினங்கொண்டு திட்டியோரும் நிறையவே உண்டு. அசிங்கம்.. பப்பிளிக்கில.. இப்படியுமா.. ஆற்றாப் போக்கில் பேசியோரும் உண்டு..! என் விரல்களின் நளினம் நீயறிய உன் சிணுங்களின் தேவை நான் உணர நீயும் நர்த்தனமாடி சதா மகிழ்விக்கிறாய் ஒலியாய்.. ஒளியாய் வரியாய் வசனமாய் யாழெனும் மங்கையின் சேலையி…
-
- 22 replies
- 1.5k views
-
-
உரிமையுள்ள ஒன்றிற்காய் உளம் ஏங்கி உயிர் துடிக்கும் கருணையற்ற மனிதருக்கு காணும்வலி கணம்கூட உணராது நெஞ்சில் வெடித்தெழும் நேசத்து நிகழ்வுகளின் சொல்லொணாத் துயர் சுமந்து சொல்லி அழாச் சுமைகளுடன் காத்திருக்கும் கணங்கள் கவி சொல்லிட முடியாது காலாண்டு கூடவில்லை கடல்போல் அன்பு காட்டாற்று வெள்ளமாய் கரையுடைக்க காலத்தின் வரவுக்காய் காத்திருக்க மட்டுமே முடிகிறது முடிவின்றி முடிவேதுமில்லா அண்டப் பெருவெளியில் அரவமற்று அனாதையாய் நிற்பதாய் உணர்கையில் உள்ளத்தெழும் உணர்வின் கொடுமையில் உறக்கம் மட்டுமா தொலைந்து போவது???
-
- 16 replies
- 1.3k views
-
-
தமிழனின் விஸ்வரூபம் திருவள்ளுவர்; தமிழரின் விஸ்வரூபம் தந்தை பெரியார்! ... ஈழத்தின் விஸ்வரூபம் பிரபாகரன்; ஈகத்தின் விஸ்வரூபம் திலீபன்! ... சோற்று வயிறின் விஸ்வரூபம் தோழர் ஜீவானந்தம்; ஆற்று மணலின் விஸ்வரூபம் தோழர் நல்லகண்ணு! ... தரையுலகம் விடுத்து திரையுலகம் பார்ப்போமாயின்… கொடையின் விஸ்வரூபம் கண்டி; கொள்கையின் விஸ்வரூபம் காஞ்சி; நடிப்பின் விஸ்வரூபம் விழுப்புரம்; வசனத்தின் விஸ்வரூபம் திருவாரூர்; ... இசையின் விஸ்வரூபம் பண்ணைப்புரம்; இயக்கத்தின் விஸ்வரூபம் அல்லி நகரம்; பாடலின் விஸ்வரூபம் சிறுகூடல்பட்டி; தேடலின் விஸ்வரூபம் பரமக்குடி; .... ஆம்; ஆழிசூழ் உலக நாயகனாம் - கமல் எனும் கலைஞன்… பரமக்குடியில்; ஒரு பார்ப்பனக் குடியில் - கதர…
-
- 1 reply
- 394 views
-
-
கதிரவன் கரங்கள் தீண்டக் கண்டால் சூரியகாந்தி நாணும்.. கார்முகில் வரவு கண்டால் மயில் தோகை கொண்டாடும் பனித்துளி ஒட்டக் கண்டால் புல்லும் கூசிக் கூனும் மழைத்துளி ஒளித்தொடுகை கண்டால் வானம் கோலங்கொள்ளும் தூறல்தன் முத்தம் கண்டால் நிலம் நிறம் மாறிப் பூரிக்கும் பூவிதழ் விரிதல் கண்டால் வண்டு போதை கொள்ளும் நீரோட்டம் தேடக் கண்டால் ஆறு சலசலத்து குதூகலிக்கும்.. தென்றல் தடவக் கண்டால் தென்னங்கீற்று தெம்மாங்கு பாடும் சோடியது கூடக் கண்டால் கானக்குயில் கவி பாடும்... சூரியனின் சூடு கண்டால் பனி உணர்ந்து உருகும்... வான் மழை புணரக் கண்டால் சிப்பி கர்ப்பம் தரிக்கும்.. பெண்ணே உனைப் புவி கண்டால் நயகரா உறையும்... நான் உன் அழகு கண்டால் சிலையாகிச் சரணடைவேன் உன்னிடம்..! இய…
-
- 9 replies
- 766 views
-
-
ஏன் உதைத்தீ ( ர )ர்களே ?? இருட்டில் இருந்த உங்களுக்கு வெளிச்சம் காட்டியவர்கள் நாங்கள் உங்கள் பசியெடுத்தபொழுது குறிப்பறிந்து ஊட்டியவர்கள் நாங்கள்..... உங்கள் வலி கண்டு எங்கள் வலியாய் துடித்தவர்கள் நாங்கள்....... உங்கள் வெம்பலுக்கும் தேம்பலுக்கும் குளிர்நிலாவாய் இருந்தோம் நாங்கள்..... எங்களுக்கு என்று ஒரு சந்தோசம் நீங்கள் கண்டதுண்டா ?? உங்கள் வாழ்கையில் மெழுகுதிரியாய் எரியும் எங்களை ஒருகணம் உங்கள் , பார்வை திரும்பியதுண்டா ?? உங்கள் ஏற்றம் இறக்கம் எதிலும் ஒன்றாய் கலந்த எங்களை ஏன் எட்டி உதைத்தீ(ர)ர்களே ?? மைத்திரேயி 19/01/2013
-
- 14 replies
- 940 views
-
-
விரல்களுக்கிடையில் புகைக்கும் வெண்சுருட்டைப் போலவே... என் இதயமும் கருகிச் சிறுக்கிறது! புகைந்த சாம்பலைப் போல... என் நினைவுகள் அங்கங்கே சிதறிக் கிடக்கிறது! எல்லாம் தீர்ந்து... மூன்றாவது விரல் வந்து தூக்கி வீசும்வரை... அதன் போதையிலேயே கிடந்தேன்! என்றாவது ஒருநாள்... அது எனைச் சாகடிக்கும் எனத் தெரிந்திருந்தும், அதைத் தாங்கிப்பிடித்திருந்தேன்! நெருப்பும் புகையும் பழகிவிட்டது! சுட்டாலும் மீண்டும் மீண்டும் பற்றிக்கொள்ளச் சொல்லுது மனசு! உள்வந்து செல்லும் புகையோடு என் பெரு மூச்சுக்களும் ஒருநாள் அடங்கிப்போகும்! அதுவரை இருட்டில் இந்த சிகப்பு வெளிச்சம் துணையிருக்கும்!!!
-
- 18 replies
- 1.3k views
-
-
மலர்களும் வெட்கி தலைகுனிந்தன அவை கண்டது உந்தன் மலர்முகம். தனிமையில் முழுநிலவும் தகிக்கிறது திருடிப்போனாய் தண்மையெல்லாம். நேற்றுப்போலவே இன்றும் இனிக்கிறது உன் நினைவுகள் காதல். அவள் திறந்து பார்த்தது கடிதமல்ல என் இதயம். தூங்கும் போதும் விழித்தே இருந்தது இடம்மாறிய மனசு. முட்கள் குத்திய போதும் வலிக்கவில்லை - அது காதல். வல்வையூரான்.
-
- 2 replies
- 3.9k views
-
-
தம்பி பாத்து மெதுவா ஆடு- உன் காலடிக்கு கீழே இன்னொரு “கிருசாந்தி” புதைக்கப்பட்டிருக்கலாம். நீ பிடித்திருக்கும் “பியர்” போத்தலுக்குள்ளே கனடாவில் குளிரிலும் பனியிலும் நித்திரையில்லாமல் ஓடி ஒடி உழைக்கும் - உன் அண்ணனின் வியர்வை இருக்கிறது. சிந்தாமல் வீணாக்காமல் குடி..!!! கனடாவில் உன் அண்ணன் கடற்கரை பக்கம் போனதேயில்லை... அதற்கு நேரமும் இல்லை ... நிம்மதியும் இல்லை...!! “கசூறினா” கடற்கரையில் “கையேஸ்” வாகனம் “கயர்” பண்ணி நீ காற்று வாங்கு... உன் அண்ணன் மூச்சு வாங்கி உழைக்கும் காசில்...!!! என் தம்பி “கம்பஸ்” என்று கருவத்தோடு உன் அண்ணன் அவன் தம்பி நீயோ ஒண்டரைக்காலில் “பைலா” பாடு.. நீ “கலோ” என்றால் உனக்கு “காசு” வரும். அந்த காசைத்தேடி நாலு “கூட்டு” வரும். …
-
- 40 replies
- 3.1k views
-
-
மின்னல்கள் கூத்தாடுதே உன்விழிகள் பார்த்து மேகங்கள் மழை தூவுதே உன் அழகை பார்த்து விட்டு விட்டு தூறும் மழையே கொஞ்சம் நில்லாயோ நெஞ்சை தொட்டு போகும் பெண்ணின் முகவரி சொல்லாயோ மேகங்கள் கொண்டு வானம் மழை பொழிகிறது மேகத்தில் நின்று மின்னல் ஒளி தெறிக்கிறது மழை போல் நீ வருவாயோ மண் போல் நான் ஏங்குகிறேன் வானத்தின் தூரத்தில் உன்னை நான் தேடுகின்றேன். http://www.youtube.com/watch?v=113R1IanoMo
-
- 4 replies
- 509 views
-
-
வாசல்களில் மரணத்தின் வரவுகளை கணக்கு வைத்திருந்த கணப்பொழுதுகள் அவை . முன்பெல்லாம் உறவுகள்கூடி உடலம் சுமந்து மயானம் செல்வோம், ஊரே மயானமாகிப்போக இறுதிக்கடன் மட்டுமல்ல இறுதியாய் கண்ணீர்கூட விடாமல் உடலங்களை கடந்த தினங்கள் அவை. எங்காவது எமக்காய் எம் குழந்தைகளுக்காய் எம் உறவுகளுக்காய் ஒரு குரலாவது ஒலிக்காதா என்று ஏங்கிக்கிடந்தோம். கரகரத்த குரலாவது ஒலிக்கும் என்று முனுங்கிக்கிடந்தோம். காற்றும் கடலும் வானும் எண்திசைகளும் எரிந்தன எரிகுண்டுகளாலும் எறிகுண்டுகளாலும், உடலங்களை கண்ட நாய்களும் நரிகளும் இன்னபிற விலங்குகளும் அஞ்சியோடின, அப்போதும் வலிகளோடு ஏங்கித்தான்கிடந்தோம். எதிலியாகி நடந்தோம். அறிந்தவன் நீ எரிந்துபோனாய். தோழனே முத்துக்குமார் !!!! நீ மூட்டியது…
-
- 5 replies
- 606 views
-
-
பேராவலுடன் பெய்யும் பெருமழையாய் எனக்குள் இறங்கிச் செல்கின்றாள் என்னுயிர்த் தோழி என் வரண்ட காடுகளுக்கிடையே பாய்ந்து செல்லும் பெரும் ஆறாய் பெரும் தீயுக்குள் இறங்கிச் செல்லும் பனிக்காற்றாய் மனவெளிகளில் புரண்டு எழும் கடலலைகளாய் எப்பவும் எனக்குள் வியாபித்த பெரும் பொருளாய் நீக்கமற நிற்கின்றாள் என் தோழி ஆயிரம் முத்தங்களை பதியும் இரு இதழ்களில் கோடி கணங்களை உறையவிடும் தந்திரக்காரி மார்புகளின் இடையே என்னை சோழிகளாய் சுழட்டி எறிந்து வித்தைகாட்டும் சாகசக்காரி தன் வாசல்கதவுகளால் வாரிச் சுருட்டி தனக்குள் பொதித்து இன்னும் இன்னும் என என்னை தனக்குள் பருகிக் களிக்கும் பேராசைக்காரி ஆற்றாத் துயர் மேவி நான் எனைத் தொலைந்த கணங்களில் எல்லாம் ஆயிரம் விரல்கள்…
-
- 16 replies
- 7.4k views
-
-
-
- 1 reply
- 515 views
-
-