கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
"காதல் கனியும் நேரம் கவிதைகளோடு உன்வாசலில்..". எரிமலையின் உச்சியிலும் ஏற்றிடும் எந்தச்சிகரத்திலும் கொண்டு சேர்த்திடும் பாராமுகம் காட்டியபோதிலும்-அந்தப் பார்வைகள் உனைச் சுட்டெறிந்திடும் முன்னெவரும் கண்டிராதது போலவே முதல் உன்னை சிந்திக்க வைத்திடும் நித்திரையின் போதும் உன் நினைவுகளை நிலைகுலைத்து உன் மனதில் அலை மோதும் சத்தமில்லாத ஒரு தனி உலகில்-உன்னை சந்திக்க விரும்பும் ஒரு சுதந்திரப்பறவை போலும் எண்ணங்கள் திரைபுரண்டு ஓடும் மனதில் எள்ளழவும் உதடில் வருமுன் அழிந்து போகும் இன்னுமதைச்சொல்லப் போனால்-உன் இரவுகளை சுட்டெரித்துவிடும் பக்கத்தில் இருப்பவரை பார்த்திராது-மனம் பட்டப்பகலிலும் வான்வெள…
-
- 7 replies
- 1.7k views
-
-
வதை முகாமில் வாடும் நம் உயிர்கள்..... கவிதை - இளங்கவி அம்மா இந்த இடம் வேண்டாம் நாங்கள் போவம் வாங்கோ.... சிணுங்கிறது ஓர் சிட்டு... மலராத அம் மொட்டு..... உன் அண்ணாவை காணவில்லை அவன் சென்ற இடமும் தெரியவில்லை.... அவனின்றி நாம் மட்டும் எங்குமே செல்வதில்லை........ ............................................... பெரும் முற்றுகையில் நடுவினிலும் பெற்றோரின் முகம்பார்த்து சில காலம்.... சிரித்திட்ட மழலைகள்; இன்று சிந்திய முத்துக்களாய்..... பல முகங்களை பார்க்கவில்லை தம்மை பார்ப்போரையும் கண்டதில்லை... பாதியாய் பட்டினி வாழ்க்கையிலே வழியின்றி தவிக்கின்றன....... ................................................... குளித்திடும் வேளையிலே …
-
- 14 replies
- 1.7k views
-
-
இதுவரை கணக்குகளை மட்டும் விளங்கபடுத்த என் கையோடு கூடிய பேனா முதல் முறை உனக்கு கவி எழுத என் கையோடு கூட்டியதில் வந்த கழித்தல்கள் இவை தயவு செய்து சிரித்துவிடாதே கலைந்து கிடக்கும் என் எழுத்துக்கள் இன்னும் கலைந்துவிடும் பல கோடி கவிதைகளை கண்டபின்னும் பசியாறவில்லை இன்னும் காதலுக்கு எப்படி எழுதப்போகிறேனோ உனக்கொரு கவி சிலையின் கையில் கொடுக்கப்பட்ட பேனாபோல் அசையாமல் மிதக்கிறேன் கற்பனைக்கடலில் எப்படி எழுதப்போகிறேனோ உனக்கொரு கவி எண்ணில் விட்டதில்லை எழுத்துக்களில் விடுவதுண்டு பிழை எப்படி எழுதப்போகிறேனோ உனக்கொரு கவி உனக்காய் கவி எழுத விடிய விடிய யோசித்ததில் இரவுகளின் நீளத்தை என்னால் இப்படித்தான் அளக்க முடிந்தது ந…
-
- 5 replies
- 1.7k views
-
-
காதலின்,,,, வாழ்நாள் மூலதனம்....நினைவுகள் தான் ....!சுகமான நினைவுகள் ...இதயத்தில் தென்றல் ...!சோகமான நினைவுகள் ...இதயத்தின் முற்கள் ...!காதலில் நினைவுகளின் வலியே அதிகம் ....!!! +காதல் நினைவுகளின் வலி என் கற்பனை வலிகள் ( 01)
-
- 6 replies
- 1.7k views
-
-
ஒலி வடிவம் ------------------------------------- நெஞ்சில் ஓர் மூலையில் ஏதோவொரு சோகம் எனை அணைக்கும் உடம்பு சோர்வின் கைப் பிள்ளையாகும்! மனசு விரக்தியின் விளிம்பில் தற்கொலை செய்யும் எதிர்காலம் கண்முன் விஷ்வரூபமெடுக்கும் தனிமையில் தத்தளித்து தாய் மடி தேடும் மனம் பொல்லாத கற்பனைகளால் இதயம் வெடிக்கும் தலை கோதி நெஞ்சில் முகம் சேர்த்து அணைக்க ஓருயிர் வாராதா என விழிகள் தேடும்! "எனக்கு மட்டும் ஏன் இப்படி" கண்முன் தெரியா கடவுளிடம் விசாரணை நடக்கும் கால் போனால் ஊன்றுகோல் மனசு உடைந்தால் என்ன உதவும் ? "நம்பிக்கை" என்ற பழகிப்போன பதிலில் சமாதானம் …
-
- 7 replies
- 1.7k views
-
-
பனி தந்த ஈரலிப்பு எதுவரை? காலக்கரைகளிலே வீசிய காற்றில் பறந்த சருகுகள் எங்கோ நாற்றமெடுத்த கூவங்களில் மிதந்து, கானல் கழிவுகளாய் காய்ந்து, மறுபடியும் வீசிய காற்றில் பறந்தபோது மகுடம் சூடியதாய் நினைத்துக் கொண்டன. மடி கனத்த முடிப்போடு குடி கெடுக்க மனக்கணக்குப் போட்டபடி மல்லாக்கக் கிடந்தன. பூமிச்சுழற்சியிலே மல்லாக்கக் கிடப்பவை புதிய புல்வெளிகளில் தம்மைப் பச்சையம் உள்ளவையாகப் பதிவிக்க முயல்கின்றன. பனி தந்த ஈரலிப்பு எதுவரை என்று அறியாத வரைக்கும் அனைத்துச் சருகுகளும்......
-
- 5 replies
- 1.7k views
-
-
அந்தா பிள்ளையள் அம்மா பிறந்த வீடு. -சாந்தி ரமேஷ் வவுனியன் - கால்களுக்கடியில் மிதிபட்டுக் கொண்டிருந்த சருகுகளை விலக்கிக் கொள்கிறேன். பதின்னான்காண்டுத் தவம் கலைத்த மிதப்பில் சருகுகளுக்கடியிலிருந்து என் சிறுவயது ஞாபகங்கள் மெல்ல மெல்லப் பொலிவு பெறுகிறது. 'சடான்ரை மோளெல்ல' பழுத்துக் கிழப்பவருவத்தையண்டிய நாகேசு ஆச்சியின் கேள்வியில் இன்னும் ஞாபகம் மறவாது நினைவுகளில் நினைபடும் ஒருத்தியென்பதில் உள்ளுக்குள் புழுகம் சொல்லுக்குள் அடங்காச் செருக்கு. மழையரித்த செம்பாட்டுப் புழுதிக்குள்ளிருந்து பெயராத மண்வாசமாய் என் சின்னக் கிராமத்துச் சீரெல்லாம் எழுந்துவர ஆமியும் அவர்களின் வாகனங்களும் எவரங்கே ? கேள்விக்குப் பதிலிறுக்க …
-
- 4 replies
- 1.7k views
-
-
இடமொன்று தருவாயா? ஈர்பத்து ஆண்டுகளாய் இடறாத என்மனதை அசைத்தவளே அகிலத்தை அழகாக்க வந்தவளே வாசமில்லா மலராகி வாடி நிலம்தொட்டு கசங்கிக் கிடந்தவனை கவர்ந்திழுத்த காரிகையே கானல் நீரென்று கனவெல்லாம் களைந்தகற்றிக் கடிமனதைத் திடப்படுத்தும் காலம்வரை காத்தனையோ ஆண்டைந்து பொறுத்(து)அன்னை அகிலத்தில் போட்டிருந்தால் துணையாக வாவென்று துணிவோடு கேட்டிருப்பேன் விதிவந்து விளையாடி விரிசல்கள் செய்யாமல் கற்றவனாய் இருந்திருந்தால் கன்னியுனைக் கேட்டிருப்பேன் எட்டாத கொப்பென்று என்மனது சொன்னாலும் என்னவளே உன்நினைவை எடுத்தெறிய முடியலையே அன்பென்ற வார்த்தைக்கு அழகூட்ட வந்தவளே - உன் இதயத்தில் உட்கார இடமொன்று தருவாயா?
-
- 10 replies
- 1.7k views
-
-
பாரே பார் பாரே உந்தன் இதயம் உள்ள பக்கம் கையை வைத்துப் பார் வீட்டை விதியை எண்ணித் தினமும் விழிகள் கலங்கும் எம்மைப் பார் தனியாய் வாழ்ந்த தமிழரைச் சிங்களத் தலையினில் கட்டியே விட்டவர் நீர் உரிமை இழந்த இனமாய் நாங்கள் உலகம் முழுதும் உழல்வதைப் பார் அல்லற் பிட்டியில் வழிவழி வாழ்ந்தோர் அல்லற் பட்டு மடிவதைப் பார் அகதியாய்த் தினந்தினம் இருப்பிடம் தேடி அலைபவர் துயரைக் களையப் பார் காமுகர் வெறியால் ஆவியை இழந்து கிணற்றில் கிடக்கும் பெண்ணைப் பார் கன்னியர் தங்கள் சுதந்திரம் தேடிக் கருவியை எடுத்த காரணம் பார் புனிதரின் பிறப்பில் பிரார்த்தனை செய்கையில் புலையனை ஏவியே விட்டனர் பார் சிறுமையைப் பேனா முனையால் செப்பிய சிவராம் உயிரும் போனது பார…
-
- 9 replies
- 1.7k views
-
-
[An assault rifle and fragments of skull coming out at a scratch of the earth in a mass burial area. Mu'l'livaaykkaal bunker area.] ஐரோப்பாவில்.. ஒற்றைச் சிறுமியின் கடத்தல்... ஒரு தேசமே கண்ணீர் வடிக்கிறது..! இந்து சமுத்திரத்தில் ஒரு தேசமே கூட்டழிப்பு யார் கண்ணிலும் தண்ணீர் படாத துயரமங்கு..! மண்ணோடு மண்ணான மண்டை ஓடுகளும் விடுதலைக்காய் முழங்கித் தள்ளிய துப்பாக்கிகளும் பயங்கரவாதக் கூக்குரலில் அடிபட்டு.. கூடவே உக்கி உரமாகின்றன..! தூரத்தே இருந்து கூச்சலடித்த கூட்டமும் மனிதப் பிணங்களின் "ஸ்கோர்" எண்ணி செய்தி போட்ட ரொய்டர்களும் ஏ எவ் பிகளும் ஏ பிகளும் இன்னும் இன்னும் பிழைப்பை ஓட்டிய தீரர்களும் இன்று எதிரிக…
-
- 8 replies
- 1.7k views
-
-
கடவுள் என்ற கருத்து பிறக்க ஆலயம் என்ற கட்டிடம் எழும்ப மதம் என்ற கருத்து பிறக்க போதனையாளர் என்ற கூட்டம் கிளம்ப மாற்றுகருத்து பிறக்க மாற்று போதனையாளன் என்று கூட்டம் கிளம்ப சம்பிரதாயம் என்ற கருத்து பிறக்க சமூகம் என்ற கூட்டம் அமைய சமூகங்கள் கருத்தை உருவாக்க அவ்வுலகம் ஆத்மா பற்றிய கருத்தை மதம் போதிக்க மொழி என்ற கருத்தை குடும்பம் போதிக்க கலை,கல்வி என்ற கருத்தை பாடசாலை போதிக்க தகவல்கள்,செய்திகளை ஊடகங்கள் போதிக்க எமதுக்கு பங்கிற்கு யாழ்களத்தில் நாம் தகவலை வெட்டி ஓட்ட இவ்வளவு சோதனையும் தாங்கி நிற்கும் கருத்து உலகம்
-
- 7 replies
- 1.7k views
-
-
உணர்ச்சியலைகள் அடித்தோய்ந்த பின்பும் உன் கரையில் மணலையள்ளி வருடியபடி வெண்ணிலா உன்னை ரசித்திருப்பேன்! கடல் மீண்டும் கரைதொடும்... நிலவு மீண்டும் வானம் வரும்... என்ற எதிர்பார்ப்புடன், வெற்று வானத்தை பார்த்தபடி... சுடுமணலில் நான்!
-
- 4 replies
- 1.7k views
-
-
மறக்க முயல்கிறேன் உன்னை மறக்க முயல்கிறேன் முடியவில்லை உன்னை வெறுக்க முயல்கிறேன் முடியவில்லை என்னை அறியாமலே உன்னை நான் விரும்புகிறேன் என்னை அறியாமலே நான் உன்னை காதலிகின்றேன் என் மந்தில் உன்னை கோவிலாக நினைத்து இருந்தேன் என் மனம் சில பொழுதுகளில் அழுகின்ற வேளையில் உள்ளிருக்கும் நீ நனைவாய் என்ற தயக்கம் வேறு அதனால் உள்ளத்தால் பொய் சிரிப்பு சிரிக்க முடியாத போதும் கற்றுக்கொண்டேன் இதற்க்கு மேல் என்னிடம் உனக்காக பொய்யாக்க என்னிடம் எதுவுமில்லையடா இதற்க்குமேல் நான் நானாக இல்லை இனியும் கொடுக்க இருப்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்... என் உயிர் தான் அது கூட உனதாகி பலகாலாமே...
-
- 7 replies
- 1.7k views
-
-
நந்திக்கொடி தூக்கினேன் சைவக்காவலர் என்றனர் சிவப்புக்கொடி தூக்கினேன் புரட்சிவாதி என்றனர் கட்ச்சிக்கொடி தூக்கினேன் அரசியல்வாதி என்றனர் கண்டுகொள்ளவில்லை ஜன நாயக உரிமை என்றனர் தேசியக் கொடி தூக்கினேன் பயந்தனர் ஆட்சியாளர்கள் என்னை பயங்கரவாதி என்றனர் பயந்தனர் அயலவர் என்னை பிரிவினைவாதி என்றனர்
-
- 9 replies
- 1.7k views
-
-
Jan 21 2005, 05:53 AM ஓஓ என் பழையவளே வருடங்கள் எத்தனை போனபின்பும் உன்நினைவுகளில் நான் என்நினைவுகளை நீ எத்தனையாவது பக்கத்தில் பதிந்து வைத்திருக்கறாய் உன்பெயரை மறக்க நான்உண்ட தூக்கமாத்திரை கூட தோத்து போனதே நீ மாறியிருக்கிறாய் கண்ணருகே கருவளையம் கருங்கூந்தல் நிறம்மாறி ஆனால் உதடுகள்மட்டும் அதேசிரிப்பு இப்போதும் நாம் பேச போவதில்லையா?? பேசமுடிந்தபோது பிரிந்தவர்கள் பேச முடியாத போது சந்திக்கிறோம் உன்நினைவுகள் உன்குழந்தையைபோல உறங்கியிருக்கலாம் ஆனாலும் ஒரேயொரு கேள்விதான் நீயும் என்னை காதலித்தாயா?? பழைய பதிவினை தேடிஎடுத்துத் தந்த மேகனிற்கு நன்றிகள்;
-
- 6 replies
- 1.7k views
-
-
நான் குறும்பன் குரல் கொடுத்த பழைய கவிதைகளை கேட்க விரும்பி சொடுக்கிய போது Not Authorised என வருகிறது. என்ன செய்யலாம்.
-
- 6 replies
- 1.7k views
-
-
நான் ஒரு கவிஞை அல்ல. பெற்றெடுத்து அதை உலகத்தில் சிறப்பிக்க ஆனால் கவிஞை ஆக்கப்படுவேன் இருட்டில் நடக்கும் எண்ணங்களால் என் நெஞ்சில் கருவொன்று திணிக்க முயன்றான் ஒருவன் எண்ணங்களை உடைத்து துளிகளின் மேலமர்ந்து கசங்கிய நிலையில் விதைத்துப் போனான் ஒரு கவிதை மட்டுமே விளையும் கருவை. ஆள் அரவமின்றி காய்ந்து கிடக்கும் ஒரு தாளில் அழுத்தமாய் புள்ளியிட்டு சென்றுவிட்டான். என் கரங்களில் வலிமை இல்லை வலி ஏற்பட்ட நேரத்தில் என் கரங்களும் என்னிடமில்லை என்னை அறியாமல் திணிக்கப்பட்ட எண்ணக்கருவால் ஊற்றெடுத்தது கவிதை ஒன்று ஆம் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். கரு என்ன என்பது அறியேன் ஆனால் கவிதை நிச்சயம். யாவருக்கும் ஏற்பட்ட அதே காலத்தில் கவ…
-
- 9 replies
- 1.7k views
-
-
இமைகள் இரண்டின் இரக்கமற்ற பிரிதலில் முட்டாள் விழிகள் முரணாய் ரசித்தன கணநேரம் கூட கதறி அழவில்லை கனத்துப் போன கண்ணிமை இரண்டும் மெதுவாய் வீசிய மெல்லிய தென்றலில் வளியில் மிதந்து விழியில் விழுந்தன தூசித் துகள்கள் விழுந்து உருண்ட தூசித் துகள்களில் கலங்கித் துடித்தன கரிய விழிகள் கலங்கித் துடித்த கரிய விழிகளை இதமாய் வருடி இழுத்து அணைத்தன இமைகளிரண்டும் இமைகள் இரண்டின் இதமான தழுவலில் கடைவிழியோரம் கண்ணீர் துளிகள் புரிதலற்ற நேசத்தின் எரிந்துப…
-
- 8 replies
- 1.7k views
-
-
மாட்சிமை பொருந்திய பெருநரகம் யாரிவார். நாட்களின் சிதைவுகளில் நாற்றம். கனவின் மீதியெங்கே எதைத் துணைகொள்வது நாய் கட்டையை சுற்றி கறிக்கு அலையும் நாய். எறும்புகள் புற்றை நீங்குகின்றன. வாயில் இரை. இனி எப்பாம்பு அங்கு நிலை கொள்ளுமோ? வெளிச்சத்தில் கடவுள் தலைகுனிந்திருந்தார். கேள்விகளில்லை. சந்தனம் குங்குமம் பன்னீர் கலந்த வாசனையும் இல்லை ஓவியன் வரைந்திருந்த சிறு புன்னைகை கூட இல்லை. சிவந்த உதடுகளை முத்தமிட நெருங்கினேன். ஓ கடவுளே மரணித்துவிட்டாயா ? யாரிடமிருந்து பகலை திருடமுடியும் தானாய் விடிந்த ஒரு பகல். கால்களில் இடறுகிறது கிழிந்துபோன நேற்றைய பகல். இருளின் முடிவில் நல்நிமித்தங்கள்…
-
- 1 reply
- 1.7k views
-
-
உன்னை பிரிந்தது வலியில்லை.... பிரிய நீ ஆசைப்படுவது வலிக்கிறது .... மறந்து வாழ்வது வலியில்லை..... மறக்க வைப்பதுதான் வலி ..... காதல் வலியால் தைத்த ஆடை .....!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - காதல் தோல்வி கவிப்புயல் இனியவன்
-
- 9 replies
- 1.7k views
-
-
ஆசை அதிகாலை தன்னில் பறவைகளின் இசையில் எழுந்திட ஆசை சூரியன் தீண்ட முதல் பணித்துளிதன்னை-நான் தொட்டு விளையாடி மகிழ்ந்திட ஆசை தென்றலின் வருகையால் அசைந்திடும் மொட்டுக்கள் மலர்ந்திடும் அழகால் சிந்திடும் பனித்துளியில் நான் நனைந்திட ஆசை மென்மையான பூக்களின் இதழ்களில் - என் முகம் புதைத்து கண்முடி -இந்த வாழ்கை தன்னை மறந்திட ஆசை இளங்காற்றின் அசைவில் ஆடிடும் மரங்களின் ஓசை தனை ரசித்தபடி நதிக்கரை ஒரமாய் நடத்திட ஆசை சண்டை இல்லா உலகில் மனிதர்கள் மகிழ்ச்சியுடன் மட்டும் வாழ்வதை பார்த்து ரசித்து விட ஆசை நிறைவு பெறுமா இவள் இறுதி ஆசைமட்டும் புரியாது …
-
- 9 replies
- 1.7k views
-
-
எங்கிருந்தோ வந்து அன்பு என்னும் மூன்று எழுத்தால் இணைக்கப்பட்டுள்ளோம்... அவளின் கள்ளமில்லா பேச்சு என்னை கைது செய்தது அவளின் கள்ளமில்லா பார்வை என்னை உருக்கியது அவளின் கள்ளமில்லா சிரிப்பு என்னை சந்தோசப்பட வைத்தது. அவளின் துக்கம் என்னை சங்கடப்பட வைத்தது ஆனால் நானே அவளை சங்கடப்பட வைத்து விட்டேன். அதை எண்ணும் போது என் மனம் இன்னும் சங்கடப்பட வைத்தது. என்றும் பிரிவு என்னும் மூன்று எழுத்தால் பிரியாமல் இருக்க வேண்டும் நாம்......... படத்தை சிறியதாக்கி இணைத்துள்ளேன்.- யாழ்பிரியா
-
- 4 replies
- 1.7k views
-
-
எத்தனை கடவுளிடம் எனக்காக வேண்டியிருப்பாய்! எத்தனை மணித்துளிகள் எனக்காக காத்திருந்தாய்! எத்தனை இரவுகள் என் வரவுக்காக விழித்திருந்தாய்! எத்தனை ஆண்டுகள் இரவில் விழிக்காமல் நானிருக்க விழித்து கொண்டு நீ இருந்தாய்! * கருவறையில் இருக்கும் கல்லைவிட,கள்ளகபடமில்லாத, கருவறையில் சுமந்தவளே, கடவுள் என்பதை நீ உணர்த்தினாய்! * என் வலிக்காக நான் அழுதேன். வளர்த்தவளுக்காக நான் அழுததில்லை... காரணம் தெரியாமல் என்னோடு நீ அழுதாய்! * இதயத்தை உதைத்தவளுக்காக வலியால் நான் அழுதேன்... காரணம் ஏதும் கேட்காமல் அப்போதும் என்னுடன் நீ அழுதாய்! * அன்பு ஒன்றே உலகில் சிறந்தது என்பதை தெரியவைத்தாய்! அன்புதான் அழுகையாக வெளிப்படுகி…
-
- 7 replies
- 1.7k views
-
-
விழுகை என்பது விதிப்படியும் எழுகை என்பது வினைப்படியும் நிகழ்ந்தே ஆகவேண்டும். நேற்றொரு நாள் சத்திய வேள்வியில் திலீப சொரூபம் தீய்ந்த போது கண்ணீரில் கருத்தரித்தது கால நெருப்பு இந்தியப்பூதத்தின் பொம்மலாட்டம், புனைவெல்லாம் விடுதலைத் தழலில் வெந்து போயின. சத்திய வேள்வி சாகாவரம் பெற்றது. இந்தியத்தை விட்டு காந்தீயம் கப்பலேறிக் காணாமல்போனது. இனத்தின் நித்திய வாழ்வுக்கு நிம்மதியைக் கேட்ட சத்தியத்தேவன் சருகாய் உலர்ந்து உயிர் களைந்தான். பிராந்திய வல்லரசின் சூழ்ச்சி தோற்றதன் எதிரொலியை ஈழத்தின் முற்றம் வடுக்களாய் ஏந்தியது. மக்களின் தோள்களே மண்மீட்பைச் சுமந்தன. ஒப்பாரியின் உள்ளொலியில் பறைகளும் முரசுகளும் அதிர்ந்தன. கால நெ…
-
- 9 replies
- 1.7k views
-
-
வாடா வாடா வாடா தோழா நம்ம யாழ் களம் வந்து பார்டா தோழா.. எழுதிப் பார்ப்பம் எழுதிப் பார்ப்பம் வாடா நீயும் நானும் நீயும் நானும் ஒன்னா சேர்ந்து எழுதினா இந்த உலகம் நம்ம கையிலடா..! உன்னோட உயர்வுக்கு உன்னோட எழுத்து என்னோட உயர்வுக்கு என்னோட எழுத்து யார் எழுத்தையும் யாராலும் தடுக்க முடியாதடா யாரும் கெடுக்க முடியாதடா..! அடுத்தவன் வாயைப் பார்க்காம வாடா வாடா வந்து சுய ஆக்கமா எழுதிப் போடடா இது உன்னோட களமடா..! வாடா வாடா வாடா தோழா நம்ம யாழ் களம் வந்து பார்டா தோழா.. எழுதிப் பார்ப்பம் எழுதிப் பார்ப்பம் வாடா நீயும் நானும் நீயும் நானும் ஒன்னா சேர்ந்து எழுதினா இந்த உலகம் நம்ம கையிலடா..! அடுத்தவன் காக்காவை காவடியை தூக்கிப் போடடா …
-
- 8 replies
- 1.7k views
-