Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நன்றி முகநூல்

  2. படித்ததில் எனது மனது தொட்ட அம்மா கவிதை.... அம்மா!! உன் கருவறையில் நானிருந்து உதைத்தது--உன்னை நோகடிக்க அல்ல,,, எட்டு மாதமாய் சுமக்கும்--உன் முகம் பார்க்கவே. பிஞ்சு வயதில் நான் அழுதது,, பசியினால் அல்ல,, பால் குடிக்கும் சாட்டில்--உன் இதயத்தை முத்தமிட.. பள்ளியில் என்னை சேர்க்கும்போது--நான் அழுதது பயத்தினால் அல்ல,, உன் பாசத்தை பிரிகிறேனோ,, என்ற பயத்தினால். இளமையில் நான் அழுதது காதலில் கலங்கி அல்ல,, கல்யாணம் உன்னிடத்தில் இருந்து--என்னை பிரிக்குமோ என்ற பயத்தினால்.. நான் விமானம் ஏறும்போது அழுதது--பிரிகிறேன் என்றல்ல,, நான் உழைத்து உன்னை பார்க்கப்போகிறேன்--என்ற ஆனந்தத்தில்.. இங்கு தனிமையில் அழுகிறேன்,, உறவுகள் இல்லாமல் அல்ல உன் தாய்…

  3. புதுவை இரத்தினதுரை அவர்களின் உலைக்களம் கவிதை- நூல் தொகுப்பு பகுதி 01: http://www.scribd.com/doc/122361060/Puthuvai-Ulaikalam-collection-1 பகுதி 02 : http://www.scribd.com/doc/122361169/Puthuvai-Ulaikalam-collection-2

    • 0 replies
    • 3.6k views
  4. வஞ்சியிடை வளைந்தாட பிஞ்சுக்கையில் வளையாட கொஞ்சியவன் விளையாட மிஞ்சியிருந்த வெட்கமும் உரசிய மூச்சுக்காற்றில் பஞ்சாய்! கட்டியவன் களைந்தாட கட்டிலிலே அளைந்தாட இன்பத்தில் திளைத்தாட உடலெங்கும் வேர்த்தோட காமக் கடலெங்கும் உணர்வலைகள்! கார்கூந்தல் கலைந்தாட கருவிழிகள் கலந்தாட அங்கங்கள் எழுந்தாட உணர்வுகள் திண்டாட மனவானமெங்கும் வாண வேடிக்கை! தாபங்கள் சேர்ந்தாட தாகங்கள் தீர்ந்தாட தேகங்கள் போராட உரசியுரசிப் பற்றிய தீயில் பற்றிக்கொண்டது மோகத்தீ! கையிரும்பு கோர்த்தாட மெய்நரம்பு தெறித்தோட தொட்டுடல் விரித்தாட கட்டுடல் நீர் உடைத்தோட பட்டுடல் நிலம் நனைந்து... ஈரலித்துப் பேதலித்தது! *************************************************** சில எழுத்துப…

  5. வெறிச்சோடிப் போயிருந்த அந்த வெற்றுலகத்தில்... அன்புக்கான ஏக்கம் மட்டும் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது! அந்த மண்டலத்தை என்னவென்று அழைப்பது? மனிதம் வாழும் கூடு என்றா? முதிர்ந்த குழந்தைகளின் கோவில் என்றா? பெற்றவருக்காக பிள்ளைகள் கட்டியமைத்த தனிக்குடித்தன கொட்டகை என்றா? புறக்கணிக்கப்பட்ட புண்பட்ட நெஞ்சங்களின் சரணாலயம் என்றா? அங்கே... நடக்கவே முடியாமல், நான்குச் சக்கர வண்டியில் நகர்ந்துக்கொண்டிருந்தால் ஒருத்தி! தடுக்கி விழுவோமா என்ற அச்சத்தில் தாங்கிப் பிடிக்க நாதியற்று, தடியோடு தள்ளாடிக்கொண்டிருந்தார் ஒருவர்! இவர்களைப் போலவே.. அங்கே.. அறுபதுக்கும் மேற்பட்டவர்கள்... கூண்டுக்கிளிகளாகவும், குற்றவாளிகளாகவும்.. நன்றியில்லா நாய்களை சேய்களாய் ஈன்றெடுத்த தவறைத் தவிர, வேறேத…

  6. வன்னி – மரணவெளிக் குறிப்புகள் கருணாகரன் முதற்காட்சி 1. பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது இரவு பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது பகல் பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது காலை பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது மாலை பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது நிலம் பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது வாழ்க்கை 2. நாட்களை மூடி காலங்களை மூடி மனிதர்களை மூடிப் பேரிருளாய் யுத்தம் விரிந்த போது நாங்கள் கூரைகளற்ற வெளியில் அலைந்தோம். போர்ப்பிரபுக்கள் வெற்றியென்ற போதையைத் தவிர வேறொன்றையும் கணக்கிற் கொள்வதில்லை “எங்கேயுன் பிள்ளை? கொண்டு வா போர்க்களத்துக்கு“ என்ற கட்டளை யுத்தத்தின் பரிசாக அளிக்கப்…

  7. பாரெங்கும் எனது பெயர் மணக்கயிலே படிப்பிக்க ஆயிரம் பேர் இருக்கையிலே படிக்க மறுப்பது ஏன் குழந்தாய்? -எனை படிக்க மறப்பதுவும் ஏன் குழந்தாய்? வள்ளுவனுள் வாசகமாய் வளர்ந்தேனே.. ஔவை மடி ஔடதமாய் தவழ்ந்தேனே கம்பன் வழி காவியமாய் கரைந்தேனே பாரதியில் பாக்களாய் படிந்தேனே தித்திக்கும் என்றார்கள் ஒரு சிலபேர்.. தெவிட்டாது என்றார்கள் பற்பல பேர்.. எத்திக்கும் எனது பெயர் செழிக்குமென்றால் எதற்காக எனை படிக்க மறந்து நின்றாய்? சொக்கும் தமிழ் உனையாள வேண்டாமா? சொல்வளமும் சிறப்புற வேண்டாமா? பிறச்சொல்லை புகுத்தாதே எனக்குள்ளே பாழாகி போவேன் நான் தரணியிலே.. எனது வழி தமிழனாய் பிறந்தவனே எனது வம்ச வாரிசாய் வளர்ந்தவனே எனை வளர்க்க மறந்த மானிடனே எனை சுமக்க வெறுக்கும் வெறும்பயலே நான்படும் வேதனைக்கு …

  8. பெரியதொரு குங்குமச் சிமிழும் சிறியதொரு சாம்பல் பொட்டலமும் போதுமானது... எம் இனத்தை அழிக்க! புரியாத மந்திரமும், அறியாத சடங்குகளும் போதுமானது... எம் சனத்தை கவிழ்க்க!! பால், பழம், தேன், வெண்ணை, சக்கரையென சகலத்தையும் புனிதக் குளியலுக்கு விரையமாக்கும் இடத்தை திருத்தலம் என்கிறார்கள்... திருந்தாத சென்மங்கள்!! பால் வடியும் முகங்கள், பாசத்திற்காக ஏங்கும்போது... "பாவம்" என்று ஒதுங்கி நின்று, பத்து காசை மட்டும் பாத்திரத்தில் போட்டுவிட்டு பாவம் கழிந்ததென பாரினில் பிதற்றிக்கொள்ளும் பாழாய்ப்போன நெஞ்சங்கள்!! வேண்டுதல் எனும் பெயரில்.. வேண்டாத அணுகல்கள்! கூரான ஆயுதத்தால் குருதியின் குவியல்களங்கே.. தானம் செய்ய வேண்டும்போது வானம் அளவிற் வாய்ப்பிளக்கும் பிறவிகள்! தேவையில்லா இடத்தில் விர…

  9. முன் பின் தெரியா நகரில்... காலம் ஒரு பாம்பு போல் தன் ‘சட்டையைக்’ கழற்றும் இந்த மாலைப் பொழுதில் ஒரு கடற்கரை நகரத்துக்கு வந்து சேர்ந்திருந்தேன். இருள்வதும் பின் நீலம் பூசி மீள்வதுமாய் வானத்தின் வித்தைகள். சாலையெங்கும் இலைகளை வீழ்த்திக் கடக்கின்றது ஊசி விரல்களுடன் குளிர் காற்று. எதுவும் நிலையற்றதெனச் சொல்லக் காத்திருக்கின்றன மரங்கள். சூதாட்ட விடுதிகளும் கடைத் தெருவும் குளிர் மெழுகாய் உறைந்து போய்க் கிடக்கின்றன. நெடியவன் ஒருவன் தன் இடுப்பளவேயான சிறுமியைக் குனிந்து முத்தமிட்டவாறே தள்ளிக் கொண்டு செல்கின்றான். மதுப் புட்டிகளுடன் விரைகின்றனர் நகரவாசிகள். பொய்யின் ஏழுவர்ணங்களுடன் அகஸ்மாத்தாய் தோன்றுகிறது வடபுறத்தே ஒரு வானவில். முன் பின் அறியா அந்த …

  10. பெற்றால் தான் பிள்ளையின் பெருமை தெரியும் என்பார்கள் உண்மைதான் நாங்கள் எல்லாம் உனக்கு தெருவில் கிடந்து கரையை சேர்ந்தவர்கள் தானே அது தான் உயிர் வாழ உன் மீது வலை வீசிய எம் உயிர் பறிக்க அலை வீசினாய் அழித்த நீ எம்மை அடியோடு அளித்திருக்கலாம்,ஏன் அங்கொன்று இங்கொன்று விட்டு வைத்தாய் நீ அழியா வரம் பெற்றவள் என்ற திமிரிலையா எம்மை வதைக்கிறாய் தாயே ??? கொன்றுவிடு எம்மை மீதமின்றி கொன்றுவிடு,,, கொன்று விட்டு திரும்பி பார் உன்னை கண்டு கொள்ள ஒரு நாய் கூட வராது, அன்றாவது உணர்வாய் அர்த்தமற்ற உன் செயலின் விளைவால் நாம் பட்ட வேதனையை......... *எழுத்துப்பிழை திருத்தப்பட்டுள்ளது.

  11. மெல்லிசையின் இனிமை மறந்தேன் இயற்கை எழில்மேல் ரசனை இழந்தேன் செயற்கைகள் நிறை வாழ்கை முறை அதனால் நானும் இங்கோர் எந்திரனானேன் உள்ளத்தின் ஓசையின் ஏவல் கேளாமல் உலகின் ஓட்டத்தில் ஓட விளைந்தேன் மனிதனின் மனிதத்தை மதிக்க மறந்து - கொண்ட பொருளினால் அவன் மதிப்பைக் கணித்தேன் பொருளோடு, கல்வியும் தேட வந்து வாழ்வு தந்த தேசத்தில் வாசம் கொண்டு தவழ்ந்து வளர்ந்த தேசத்தின் வாசம் மறந்து விழுமியங்கள் மறந்தேன், என் சுயத்தை இழந்தேன் (27 August 2010)

  12. அனுமானங்களை சுமந்து பரவிக்கொண்டிருந்தது இருளடைந்த சொல்லொன்று. உப்புக்கரிக்கும் அதன் ஓரங்களில் உறங்கிக்கிடக்கும் விசும்பல்களை ஆதங்க பெருமூச்சுக்களை ஓரந்தள்ளி, வக்கிர நிழல்களை பூசினார்கள். பின், திசைகளை தின்று வியாபித்த கரிய நிழலில் ஒளிந்துகொண்டு, அவர்களுக்கான போதனையை ஆரம்பித்தார்கள். அது நிர்வாணத்தை துகிலுரித்தது இருளடைந்த சொல்லின் மறுபக்கம் பற்றிய கவலையேதுமின்றி கொண்டாடத்தொடங்கினார்கள் தங்களுக்குள். அவள் காற்றில் நிறைந்த வக்கிரங்களின் வெப்பத்தால் உருகத்தொடங்கினாள் கொஞ்சம் கொஞ்சமாக ..................

  13. கௌதம முனிவரின் மனைவியை ஏமாற்றி கெடுத்தவன் தேவன் ஆனான் கண்ட பெண்களிடம் எல்லாம் காதல் லீலை புரிந்தவன் கடவுள் ஆனான் பத்து இருவது என மனைவிகளை அடுக்கிவன் எல்லாம் அரசன் ஆனான் நேசித்து பழகிய ஒரே பெண்ணிற்காக அலையும் நான் மட்டும் பொறுக்கி ஆனேன் . - வை .நடராஜன்

  14. இன்று நான் கவிதையொன்றெழுத முயன்றிருக்கின்றேன். நீங்களும் படிச்சுப்பாருங்கோ. பிடிச்சிருந்தாச் சொல்லுங்கோ.அன்புடன்சாதாரணன். உண்மை அல்லது குழப்பம் பனைமரத்தின் கீழே பச்சைத்தண்ணியைக் குடிச்சிட்டுப் பாலென்று சொல்லக் கள்ளென்று நம்பும் …

  15. நான் நானாக இல்லை இரவும் பகலும் மல்லுக்கட்டி முகம் சிவந்த வேளையில் உனைநான் கண்டேன் பைங்கிளி உனைநான் கண்டேன் . செவ்வரியோடிய உன் கயல் விழிப் பார்வையில் கலங்கித்தான் போனேனடி..... குவிவடிவாய் உன் புருவத்திலும் குழிவிழும் உன் கன்னக் கதுப்பிலும் , சின்னஞ்சிறு உதட்டு வெடிப்பிலும், பித்தம் தலைக்கேறி சித்தம் கலங்கியே போனதடி .... நால்வகைப் பெண்ணும் ஓர் உருவமாய் வந்தாய் சிந்தை குழம்பியே சீர்கெட்டுப் போனேன் அடி பைங்கிளியே ..... உன் குதலை மொழி எப்போ கேட்பேன் ? உன்னிதழை என்னிதழ் பற்றுவதெப்போ ?? மொத்தத்தில் , நான் நானாக இல்லை........... கோமகன்

  16. என் சிறகுகளை முறித்தெறிந்துவிட்டு, ஏன் சிரித்துக்கொண்டிருக்கிறாய்? அப்படியே உன் பாதங்களால் நசித்துக் கொன்றுவிடு! என் வலிகளை ரசிப்பாய் என அப்பொழுதே தெரிந்திருந்தால், பூக்களை வெறுக்கும் வண்ணத்து பூச்சியாய் வாழ்ந்திருப்பேன்! வண்ணத்தில் மயங்கி... வாசத்தில் கிறங்கி... வலிகளை வாங்கிய கஷ்டம் எனக்கிருந்திருக்காது. காலங்கடந்த ஞானம் எனக்குள் -இப்போது! என் மெளன மொழிகளில் கெஞ்சிக் கேட்கிறேன், அப்படியே உன் பாதங்களால் நசித்துக் கொன்றுவிடு! -இல்லையேல், என் முறிந்த சிறகுகள் கூட, உன்னைக் காயப்படுத்தலாம்!!!

  17. மனிதம் செத்து விட்டதோ – என் மனம் சொல்கிறது மனிதம் செத்து விட்டது. செய்யாத குற்றத்துக்காக இந்த தண்டனையை ஏற்றுக்கொள்ள என் மனம் குறுகுறுக்கிறது . என் செய்வேன் எனக்கென்று பேச யாருண்டு எங்களுக்கென்று எங்கே நாடுண்டு எவரிடம் கேட்பேன் நீதி..! என் குடும்ப சுமையை இறக்குவதற்காக – என் தலைமேலே நான் ஏற்றிய சிலுவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது தான் மனிதாபிமானமற்ற அரக்கர்களிவர்கள் என உணரவைத்தது. இதைவிட என் குடும்பத்தோடு எனது நாட்டிலிருந்து … பட்டினியால் செத்திருக்கலாமோ என எண்ணுகிறேன். ஒரு பச்சிளம் குழந்தையை நான் கொண்றேன் என்று பழி என்மீது விழுந்தது. அந்த பிள்ளையினால் தானே எனக்கு கிடைத்தது வாழ்வு நானேன் கொல்ல வேண்டும். பால் குடிக்கும் ப…

    • 0 replies
    • 515 views
  18. மூதாட்டி: பெற்றெடுத்த முத்துக்களை காணவில்லை பெயர்காக்க ஒரு மலரும் பூக்கவில்லை தள்ளாடும் வயதில் ஒரு தடியும் இல்லை தளராமல் இருக்கும் மனம் எனக்குமில்லை..! முதியவர்: வாடுவதும் ஏனோ என் கண்ணே... தேடுவதும் எதையோ என் பெண்ணே... உன் மணவாளன் நானிருக்கேன் மணியே.. உன் மகனை மறந்து வா தனியே.. மூதாட்டி: பெற்ற மனம் என்றுமே பித்தத்தான் பெற்ற வலி என்றுமே எனக்குத்தான் விட்டுவர கூவுதிங்கே இதழ்தான் விம்மியழ ஏங்குமிங்கே மனம்தான் ! முதியவர்: மணமுடித்த நாளே முடிவெடுத்தேன் மரணம்வரை நான் உடனிருப்பேன்.. மாதரசி உன்னில் நான் கலந்திருப்பேன் மார்போடு உன்னையே அணைத்திருப்பேன் மூதாட்டி: நரைத்த முடியும் நடுங்கும் உடலும் நடவா காலும் நகைப்பது தெரியலையோ? கிழடு தட்டியும் கிண்டலா …

  19. Started by nedukkalapoovan,

    1993 தைத்திங்கள் 16ம் நாள் இந்திய மத்திய அரசின் நயவஞ்சகச் சதிக்கு வங்கக்கடல் நடுவே தன்னை அர்ப்பணித்த கிட்டு மாமா உள்ளிட்ட வேங்கைகள் நினைவாக..! வெடியோசை எழுந்தது எங்கள் நெஞ்சோசை அழிந்தது களத்தோடு களமாடி கோட்டைக்குள் அடித்தெழுந்த அந்தப் புயலும் ஓய்ந்தது...! தங்க தமிழீழ வேங்கையது வங்கக் கடல் நடுவே சரிந்தது...! அசோகச் சக்கரத்தின் அகோரத் தாண்டவம் - எங்கள் மாமாவின் உடல் கிழித்தது...! ஆதிக்க வெறி பிடித்த அகிம்சா தேசமது அவன் ஆன்மா குடித்துக் குதூகலித்தது...! தமிழீழ அன்னையவள் கொடிதனைச் சுமந்தவன் ஆழி தன் அலையோடு மீண்டிட்டான் தமிழ் மண்ணை...! குரலோசை எழுந்தது - அது அவன் புகழோசை சொன்னது விடியலின் தாய் மகன் விடிவெள்ளியான கதை முடிவின்றிச் சொன்னது....! தர்ம…

  20. அவளை யார் அறிவார் ??? பால்குடி மாறிப் பத்துவயது நடந்தபொழுது அடிவயிற்றில் ஓர்வலி கீறலாய் உதித்தது . எதுவுமே புரியாத அவளுக்கு அவள் அம்மா எடுத்துரைத்தாள் பருவத்தின் அழைப்பு மணியை அவள் வாழ்வு பூராக அவளுடன் தொடரப்போகும் இந்தப் புரியாத வலி அவளிற்குச் சத்தியமாகத் தெரியாது ........ பருவத்தின் தூரிகைகள் அவள் உடலில் பக்குவமாய்க் கோலமிட , அவள் பள்ளிக் கூட்டுகள் பதறியே அவளை நோக்க பாவை அவள் மனதும் கர்வத்தால் பறந்தே திரிந்தது........ முகத்தைக் காட்டும் கண்ணாடி அவள் உற்ற தோழியானது றெக்ஸ்சோனாவும், பெயர் அண்ட் லவ்லியும் அடிக்கடி கரைந்தே போனது !!!! காலதேவன் போட்ட கோலம் அவளை கட்டிளம் குமரியாக்க, அவளை கட்டியேபோட அவள் அப்பா அலைமோதி அலைந்தார் ....... …

  21. உனதன்னையைத் தங்கையை காமவெறியினில் குதறியும் புணர்வாயோ? உடலத்தைத் தின்றபின உயிரென மதியாய் யோனி கிழித்துக் கொலைவெறி கொண்டவனே! நீயோர் அன்னையின் வயிற்றினில் பிறந்தனை தான் உன்னை வளர்த்தது நிச்சயம் அவள் இலை தான்! யாரோ யாரெவரோ? எங்கெங்கு திரும்பினும் பெண்களுக்கெதிராய் நடக்கிற கொடுமைகளுக்களவிலையோ? உனை வலியுடன் ஈன்று மகிழ்ந்த -தாயின் பிரசவ வேதனை புரிகுவையோ? நீயுன் தாய்க்கொரு சேய் தானோ ? கொடூரமாய் இரும்புக்குழலினை நுழைத்து அவள் யோனியைச் சிதைப்பாயோ? வேதனைப்படுத்தும் வெறியினில் ஆனந்தம் கொள்வதை உன் சிரசினில் ஏற்றியதார்? உனை உந்தித் தள்ளிய உளுத்தவர் ஆட்சியில் சட்டச் சூழ்ச்சிகள் செய்குவார் ஆள்சபை உறுப்பினரானகுவராம். காவற்படையென காசினி முழுவதும் பெண்களைப…

  22. தைத்திருநாள் இல்லம் எல்லாம் தழைத்திடும் தைப்பொங்கல் இத்தனை நாள் காத்திருந்தோம் இனிய தமிழ் பொங்கல் கூவியழைத்திடும் சேவல் குதித்தெழுவோம் குளிப்போம் பூவெடுப்போம் புதிதணிவோம் பொங்கலன்று நாங்கள்

  23. காலுடைந்த ஆட்டுக் குட்டியும் சிறுமியும் நொந்து போன நாட்களைத் தனது சின்னஞ்சிறு தோள்களில் சுமந்தலைந்த சிறுமி காலுடைந்த ஆட்டுக்குட்டியைக் கீழிறக்கி வைத்துவிட்டு மண்தெருவில் சிந்திக் கிடக்கும் நெல் மணிகளைக் குடிசைக்குள் காவிச் சென்றிட நினைக்கிறாள் முன்பெனில் வயல் வரப்பொன்றில் குந்தியிருந்து அவளது பிஞ்சுக் குரலெட்டாத் தொலைவு வரை திரிந்து உதிரி நெற்கதிர் பொறுக்கி வரும் அம்மாவுக்காகக் காத்திருப்பாள். அம்மா திரும்பி வரும் வேளை ஒரு முயல் குட்டியை ஒரு செம்மறியாட்டு மந்தையை ஒரு அபூர்வப் பறவையை விழிகளால் துரத்தியவாறு மாபெரிய வானத்தில் முகில் கூட்டங்களிடையே அலைந்து கொண்டிருப்பாள் அல்லது நாரைக் கூட்டங்களுக்குக் கையசைத்து விடைகொடுத்தவாறு அவை சென்று …

  24. பருவம் குழந்தை தொட்டு பருவமும் அடைந்தாள் பலவாறாய் வருடங்கள் கடந்ததே நினைவில் இல்லை அண்ணனின் நண்பனாய் அவளுக்கும் அண்ணனாய் அப்படி ஓர் உறவை தொடராமல் தொலைத்து பதறாமல் அவள் மீது பருவங்கள் காதல் கொள்ள உணர்சிகள் மட்டும் அதை சிதறாமல் காத்துக்கொள்ள சில காலம் இளைக்காமல் பின் நிலைக்காமல் போகவும் விரைந்தோடி போனேன் அவள் விழி தேடி போனேன் கண்டதும் கையில் காதலை விதைத்த காகிதத்தை கொடுத்து மாலை வருவேன் என்று மறு நாள் காலை சென்றும் மனதில் ஆசை அற்றோ வெளியில் வேஷம் கொண்டோ பதில் தர மறுத்தாள் ஓர் சில நாட்களில் என் ஒல்லிக்குச்சிகாரி தொலைவாகியே தொலைந்தாள் தேடியும் கண்ணில் இல்லை ஓரிரு ஆண்டு தள்ளி தூரமாய் என்னில் பட்டாள் மீண்டும் என் காதல் சொல்ல மொத்தமாய் …

  25. 1. எதிர் திசைப் பயணி ஒரு பாதாளத்தின் மேடையில் பிரிந்தவள் சொர்க்கத்தில் சந்திக்கலாம் எனக் கூறிச் சென்றாள். என் பயணப் பையும், கால்களும் நினைவின் பள்ளத்தாக்கில் கீழ் நோக்கி இழுத்துச் செல்லுகின்றன ஒவ்வொரு பறவைக்கும் தெரிகின்றது மாலையில் அதனதன் கூடு அவற்றின் மரக் கிளைகள்... சாபத்தின் சின்னமாய் நின்றபடியே துயிலும் குதிரையாக்கி நடுக்காட்டில் விட்டுச் சென்றிருந்தாள் ஆளுயரப் புல்வெளியில் என் வகிடு எதுவென்று தேடுகின்றேன்... எந்தப் படகும் தென்படாத இரவின் நதியைக் கடக்கு முன் நிற்க ஓர் இடம்.. வெறித்துப் பார்த்தபடி படுத்திருக்க ஒரு கூரை ஏதுமின்றி இருக்கிறேன்... மழைத் தூறலும் குளிர் காற்றும் ஏந்தி வரும் ஒரு தேவாலயத்தின் மணியோசை... அங்கே ஒளி நடனம் புரியும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.