Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கொழும்பு நகர (நரக) வாழ்க்கை... மனிதம் என்பதே இங்கு இல்லை மனிதரோ கோர உணர்வுகளுடன் மண்ணில் வாழ முடியா தமிழர் மரத்துப்போய் இங்கு வருகின்றனர் மரணத்துக்கு தள்ளும் வண்ணம் மனிதர்கள்(சிங்களவர்) நடக்கின்றனர் செல்லும் இடங்களிலெல்லாம் செல்லாத சோதனை செய்வர் செல் குண்டு வீச்சுக்களை தாங்கியவர்கள் சொல் வீச்சுக்களை கேட்டு தவிக்கின்றனர் செருப்பாக கூட இருந்து உதவுவார்கள் செருப்பாகவும் மதிக்கான் சிங்களவன் சிந்தனைகளின் ஊற்றாக திகழ்பவர்கள் சிந்தனை வாதிகள் எம்மக்கள் என்றும் சிந்தனை ஆமாம் மகிந்த சிந்தனை சிந்திக்க வைக்கவில்லை எம்மவரை சிதறடிக்க வைக்கின்றது இங்கே சிறுமையாக்க படுகின்றார்கள் எம்மவர்கள் பொருளுக்கு ஏற்ப விலையில்லை …

    • 7 replies
    • 1.9k views
  2. Started by அஞ்சரன்,

    கேட்டலும் படித்தாலும் அரைகுறை பார்த்தாலும் தெரிதலும் அரைகுறை விளக்கமும் தெளிவும் அரைகுறை கன்னியும் கவர்ச்சியும் அரைகுறை படமும் பாட்டும் அரைகுறை பேச்சும் செயலும் அரைகுறை வெட்டியும் பந்தாவும் அரைகுறை வரலாறும் வாழ்கையும் அரைகுறை நம்ம வாழ்க்கையும் அரைகுறை மற்றவன் செயலை விமர்சனம் அரைகுறை என்னை நான் தேடினேன் அரைகுறை நான் முழுமை பெறும் நாள் எப்போ அப்போ நான் மனிதன் ஆகிறேன் .

  3. மீண்டும்....எப்போ...? ****************************** அன்பே... தேடுகிறேன் உன்னை-இன்று நீ தந்த பொருழதனை திருப்பி நான் தருவதற்கு... என்னவென்று கேட்கிறியா...? அன்றொருனாள்.... நாமணைத்துக் கொள்கையிலே உன் தலையின் பேனொன்று... எந்தலையே தஞ்சமென்று.. என் தலையில் புகுந்ததுவே... அதை நீ அறியாயோ...? ஓ........ நீ அறிய நியாயமில்லை அன்றோ....... நாமறியும் நிலையிலில்லை.. இன்றதனை உணருகின்றேன்.. கடிக்கையிலே.. கதறுகின்றேன்... கொன்றிடவே எண்ணுகின்றேன் உன் தலையின் பேனதால் மனமேனோ வரவில்லை.... so அன்பே... நீ வந்திடுவாய்... அதை நீயே பெற்றிடுவாய்......

    • 7 replies
    • 1.5k views
  4. தமிழீழத்தின் சிதைந்த அழகுகள்..... கவிதை...... சிதறிடும் சில்லறைபோல் சிரிக்குமெங்கள் மழலைகள்; இன்று மிக்’ குகளின் இரைச்சலிலே சிரிப்பெல்லாம் இழந்து; பிஞ்சுகளின் முகமெல்லாம் விறைத்து தாயின் முகம்பார்த்து விக்கி விக்கி அழுதிடுமே..... அதைப் பார்த்து;நம் மூச்செல்லாம் நின்றிடுமே..... இது நாம் இன்றுகாணும் உயிர் வாட்டும் துன்பம் எமது ஈழத்தின் விடியல்வரை நாமிழந்துவிட்ட இன்பம்....! வெள்ளை ஆடைகளுக்கு திருஸ்ரிப் பொட்டு வைச்சால் போல் தங்கள் கறுப்பு முகங்களிலே முத்துப்போல் பல் காட்டி வெக்கத்துடன் சிரித்திடும்; எங்கள் கருப்பு எலிசபத்துக்களின் கண்களெல்லாம் ஒளியிழந்து கருவாட்டுக் கண்களுடன் தங்கள் கற்பும் அழிந்துபோகும்.... மற…

  5. துன்பத்தை தந்தவனுக்கே திருப்பிக்கொடு நீண்ட நாட்களின் பின் நிலவு பூத்தது போல் இவ் இரவு சொல்ல முடியாத மகிழ்ச்சி வெள்ளம் சோகம் எல்லாம் மறைத்து நிற்க மத்தாப்பு பூத்து மனம் முழுக்க சிரித்து நிற்க எத்தனையோ நாட்களாய் ஏக்கத்தோடு உறங்காத கண்கள் சேதி அறிந்த கணம் முதல் சிலிர்த்து சொரிந்த கண்ணீரில் உப்பு உறைக்கவில்லை உதிரத்தில் கலந்த தமிழ்தான் இனித்தது துன்பத்தை தந்தவனுக்கே திருப்பிக்கொடு - என்று சொன்னவன் வழி வந்த பிஞ்சுகள் ஆடுகளத்தை அசர வைத்து போர்க்களமாடி உலகமுன்றலில் - எங்கள் கதை மீண்டும் கதையாகாமல் கவனப்படுத்திய காட்சி கண்டு உள்ளம் உவகை கொண்டு சிரிக்கின்றது உளமார வாழ்த்துகின்றேன் வீரரே!!! http://inuvaijurmayuran.blogspot.ch/20…

    • 7 replies
    • 1.2k views
  6. சருகானவர்கள்..... எதிர்பார்ப்புக்கள் எதுவுமின்றி ஒளித்தொகுப்பை நடத்திவிட்டு காலங்கள் தொலைந்ததனால் காய்ந்து சருகாவதற்காய் வேர்களை நோக்கி உதிர்ந்துவிழும் இலைகள் நினைவு படுத்துகின்றன பனிமர தேசத்தில் பிடுங்கி நடப்பட்ட ஈழத்துத் தமிழர்களை.... அந்நியன்.... பைன்மரத்தை தீண்டிவரும் மாலைநேரக் குளிர்காற்றில் மனதைப் பறிகொடுத்து மயங்கி நின்றபோது ஓடி வழிந்தோடி ஒருகால்ப் பாதணியை ஊடுருவி உள்ளங்காலூடு புகுந்து உச்சி மண்டையில் சுள்ளென்று உறைக்கும்படி-குளிரில் சில்லென்று குத்திய மழைத்துளி சொல்லியது நான் அந்நியன் என்று.... சுதந்திரம்.... நிமிர்வற்கும் குனிவற்கும் நீட்டிநிமிர்ந்து படுப்பதற்கும் வீட்டில் மூச்சுவிடவும் …

  7. வாழ்க்கை என்பது பாசக்கயிறு வாழ்க்கையின் முடிவில் எமனின்கயிறு கோழையே உனக்கு ஏன் இந்தக்கயிறு?

  8. பட்டென்று நினைத்தே பதறியே போனேன் தொட்டது பட்டறை இரும்பென்ற போது..! அணைக்க நினைத்தே எரிந்தே போனேன் அணைத்தது கொடுந் தீப்பந்தென்ற போது..! கவ்வ நினைத்தே மரணித்துப் போனேன் கடித்தது சயனைட் இதழென்ற போது..! மேகமென்று நினைத்தே சிறைபட்டுப் போனேன் சிக்கியது கூந்தலில் என்ற போது..! இசையென்று நினைத்தே செவிப்பறை இழந்தேன் பேசியது பெண் குரல் என்ற போது..! கலையென்றே நினைத்தே பாடம் படிக்கப் போனேன் படித்தேன் கன்னியவள் கலையெடுத்தாடிய போது..! பஞ்சணை என்று நினைத்தே நிலையிழந்து போனேன் உணர்விழந்தேன் படுக்கையில் அவள் என்ற போது..! வசந்தம் என்று நினைத்தே விவாகத்துள் போனேன் விக்கித்தேன் "வீணாப்போனவனே" என்ற போது..! …

    • 7 replies
    • 1.5k views
  9. சுமக்கும் சிலுவையுடன் -------------------- அந்திப் பொழுதும் வெட்கும் வேளையில் அவளுக்காக காத்திருக்கின்றேன் கரைகளை நக்கும் நுரை கால்களையும் கழுவிப் போகின்றது கடலிலும் பேதமில்லை கரையிலும் பேதமில்லை- அது சுமக்கும் மனிதரில் பேதமில்லை மனங்களில் பேதம் முதுகில் சுமப்பவன் முக்காடு போடுபவன் முக்குறி இடுபவன் அதற்கும் மேலால் மண்ணில் உழைப்பவன் மரத்தில் ஏறுபவன் நித்திலம் கொழிப்பவன் நின் மலசலம் எடுப்பவன் எத்தனை பேதமை இருட்டிப் போன பின்னும் அவள் வரவில்லை... சேதி வந்தது 'அவள் வர மாட்டாள்' மண்ணின் மேலால் நீர் இருக்கலாம் கடல் மண்னின் கீழால் நீர் இருக்கலாம் கிணறு மண்ணும் நீரும் ஒட்ட முடி…

    • 7 replies
    • 1.6k views
  10. யார் இவர்கள்??[/b] உடம்பில் தென்பிருந்தும் மனதில் உறுதியில்லாத சிலர் பிழைக்கத் தெரிந்த நாட்டில் அரசாங்கத்தை நம்பி வாழ்க்கை நடத்தும் இவர்கள் சோம்பேறிகள் பெற்றோறை முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிட்டு மனைவியுடன் சுகபோகம் அனுபவிக்கும் இவர்கள் மன்னிக்கப்படாத பாவிகள் தமிழ் நாட்டை கேவலமாக எண்ணி இந்த நாடு தான் சொர்க்கம் என்று வாழ்பர்கள் அயோக்கியர்கள் குடும்பத்தில் நுழைந்து வீண்பேச்சுக்கள் பேசி வதந்திகளைப் பரப்பி ஒர் அழகிய கூட்டை சிதறடித்துப் பிரிக்கும் இவர்கள் மகா பாவிகள் கஷ்ரம் என்று அலறித்துடித்து பணத்தைப் பெற்றுவிட்டு திருப்பிக் கொடுக்காமல் பூச்சாண்டி காட்டும் இவர்கள் துரோகிகள் சீதணக் க…

  11. Started by pakee,

    ரோஜாச் செடியில் ஏராளமான முற்கள் உண்டு ஆனால் ரோஜாப்பூ அழகாத்தான் இருக்கும் அது போல நீ சில சமயம் கோவபட்டாலும் நீ அழகுடி...

  12. அன்பே..... என்றும் என்னை மறக்கமாட்டேன் என்றாயே....அது பொய்யா? நான் உன்னை நினைக்கா விட்டாலும் நீ என்னை என்றும் நினைத்திருப்பேன் என்றாயே....அது பொய்யா? நான் உனக்கு மெயில் அனுப்பா விட்டாலும் நீ எனக்கு தொடர்ந்து மெயில் அனுப்புவேன் என்றாயே...... அது பொய்யா? நான் உன்னுடன் கதைக்கா விட்டாலும் நீ என்னுடன் எப்பவும் கதைப்பேன் என்றாயே.... அது பொய்யா? நான் என்ன சொன்னாலும் செய்வேன் என்றாயே ..... அது பொய்யா? உன் வாழ்க்கையில் எப்போதும் என் நட்பு வேண்டும் என்றாயே...அது பொய்யா? சொல்லு எனக்கு........... நான் உனக்கு எத்தனையோ முறை மெயில் அனுப்பியும் நீஎனக்கு மெயில் அனுப்பவில்லை ஏன்? நீ சொன்னதெல்லாம் பொய்யா? ஆனால் என்னால் உன்னைப்போல் எதையும…

    • 7 replies
    • 2.5k views
  13. போய்விடு அம்மா வ.ஐ.ச.ஜெயபாலன் காலம் கடத்தும் விருந்தாளியாய் நடு வீட்டில் நள்ளிரவுச் சூரியன் குந்தியிருக்கின்ற துருவத்துக் கோடை இரவு. எழுப்பிவிட்டுத் தூங்கிப்போன கணவர்களைச் சபித்தபடி வருகிற இணையத்துத் தோழிகளும் போய்விட்டார். காதலிபோல் இருட்டுக்குள் கூடிக் கிடந்து மலட்டு மனசில் கனவின் கரு விதைக்கும் தூக்கத்துக்கு வழிவிட்டு எழுந்து போடா சூரியனே. பாவமடா உன் நிலவும் கணணியிலே குந்தி இணையத்தில் அழுகிறதோ மூன்று தசாப்தங்கள் தூங்காத தாய்களது தேசத்தை நினைக்கின்றேன். படை நகரும் இரவெல்லாம் சன்னலோரத்துக் காவல் தெய்வமாய் கால்கடுத்த என் அன்னைக்கு ஈமத்தீ வைக்கவும் எதிரி விடவில்லை. பாசறைகளை உடைத்து உனக்குப் புட்பக விமானப்…

    • 7 replies
    • 1.6k views
  14. புறநானூற்றில் இருந்து தொடரும் தமிழ் இலக்கிய மரபில் புகழ்பூத்த சில கவிதைகளில் கவிஞர்களின் ஊடலும் கோபமும் பதிவாகியுள்ளது. சின்ன்ம் சிறுவயதில் சாதி ஒடுக்குதலுக்கு எதிரான வன்முறைப் போர்க் களத்தில் சந்தித்ததில் இருந்து கவிஞர் புதுவை இரத்தினதுரையும் நானும் ஆப்த நண்பர்கள். மாக்சிய கருத்தாடல்களோடும் கள்ளோடும் கவிதைகளோடும் கழிந்த நாட்கள் பல. 2006ம் ஆண்டின் பின்பகுதியில் வன்னியில் என்னுடைய அம்மா நோய்வாய்ப் பட்டிருந்தபோது நான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். அம்மவை புதுவை சென்று பார்க்கவில்லையென கேழ்விப்பட்ட கோபத்தில் அம்மா கவிதையை எழுதினேன். அதனை புதுவையே தான் வெளியிடும் வெளிச்சம் 100 மலரில் வெளியிட்டது சிறப்பு. 1000 வருடங்கள் நிலைக்கவுள்ள எனது கவிதைகளுள் அ…

    • 7 replies
    • 1.9k views
  15. பாட்டியின் கைகளால் சுடப்படும் அப்பம் ... அம்மாவின் சேலையால் தலை துவட்டும் போது.. அப்பாவின் தோளில் ஏறி இருந்த பொழுதுகள் .. அண்ணனின் கைகளால் முதல் வாங்கிய அடி .. அக்காவின் கை பிடித்து கோயில் போன காலம் .. தங்கையை வெருட்டி அழவைத்த நேரம் . தம்பி என்னை கண்டால் ஓடி ஒழிந்த நிமிடம் .. ஒரு ரொட்டியை எட்டா பிரித்த சமயம் .. விலகி போன உறவு கதறி அழும் கணம் காதல் என்னை கலங்கடித்த கணப்பொழுது .. முதலில் அவளை தாவணியில் பார்த்த படம் .. கோயிலின் வடக்கு வீதி மேளசமா இனிமை ... சாண்டிலியன் கடல்புறா வர்ணனனை .. மெருவிரலால் தடவி மட்டி எடுத்த கடல் .. இசையில் மயங்கி ஒன்றிப்போன சங்கீதம் .. முதல் சினிமாவில் இருட்டில் தடவிய கதிரை ... எல்லாம் நினைவிருக்கு எனக்கு ஆனால் .. உ…

  16. எத்தனை கடவுளிடம் எனக்காக வேண்டியிருப்பாய்! எத்தனை மணித்துளிகள் எனக்காக காத்திருந்தாய்! எத்தனை இரவுகள் என் வரவுக்காக விழித்திருந்தாய்! எத்தனை ஆண்டுகள் இரவில் விழிக்காமல் நானிருக்க விழித்து கொண்டு நீ இருந்தாய்! * கருவறையில் இருக்கும் கல்லைவிட,கள்ளகபடமில்லாத, கருவறையில் சுமந்தவளே, கடவுள் என்பதை நீ உணர்த்தினாய்! * என் வலிக்காக நான் அழுதேன். வளர்த்தவளுக்காக நான் அழுததில்லை... காரணம் தெரியாமல் என்னோடு நீ அழுதாய்! * இதயத்தை உதைத்தவளுக்காக வலியால் நான் அழுதேன்... காரணம் ஏதும் கேட்காமல் அப்போதும் என்னுடன் நீ அழுதாய்! * அன்பு ஒன்றே உலகில் சிறந்தது என்பதை தெரியவைத்தாய்! அன்புதான் அழுகையாக வெளிப்படுகி…

    • 7 replies
    • 1.7k views
  17. அருவி ஊற்றெனஅழுது வடித்தவள்அடங்கிக் கிடக்கிறாள்பொருமி வெடித்திடபுழுங்கித் தவிக்கிறாள்தழுவித் தகித்தவள்தயங்கி நிற்கிறாள்ஒற்றைநாள்ஒருதலைப்பட்சயுத்த நிறுத்தமாம்சத்தம் இன்றிசலனம் இன்றிஇப்போதான்சற்று சிரித்துச்சிவக்கிறாள்சிவக்கிறாள்சிரிக்கிறாள் இவளெனசிந்தை தெளிந்துசிரிக்க முடியவில்லைஒருதலைப்பட்சஒருநாள்யுத்த நிறுத்தம் தானாம்யுத்தம் எப்பவும்சத்தத்தோடு வெடிக்கலாம்பாதிப்பு முன்னதை விடபலமாயும் இருக்கலாம்யுத்த நிறுத்தம்காலவரையற்றுநீடிக்கவும் படலாம்எதற்கும் தயாராய்த்தான்இருப்பை நிலை நிறுத்தஎடுத்தடி வைக்கிறேன்...#ஈழத்துப்பித்தன்19.04.2016 http://inuvaijurmayuran.blogspot.ch/2016/04/blog-post_19.html

    • 7 replies
    • 1k views
  18. Started by சண்டமாருதன்,

    புணர்ச்சியின் பின் பெண் சிலந்தி ஆண் சிலந்தியை கொன்று தின்பதுபோல் ஈன்ற குட்டிகளை தின்னும் கரடிகள் கடற்சுறா போல் தோழில் சுமந்தவர்களை தோழில் இருந்தவாறே தலையை கடித்து குதறிய பொழுதுகள் ஏழாண்டுகள் கடந்தும் விடியாது விறைத்து நிற்கின்றது. யானையை கொன்று தந்தம் எடுப்பதுபோல் பிடரியில் அடித்தும் முதுகில் குத்தியும் தன் விரலைக் கொண்டே கண்ணில் குத்தி குருடாக்கிக் கொன்று கொன்ற பின் கட்டை விரலை வெட்டி எடுத்து கைநட்டு வைத்து பெற்ற பெருவாழ்விலிருந்து நேற்று நீலிக்கண்ணீர் வடித்தோம் இன்று அதற்கும் நேரமில்லை நேற்று எரியிற வீட்டில் புடுங்குவது லாபம் என்ற சூழல் இன்று எரிப்பதற்கு க…

    • 7 replies
    • 1.8k views
  19. Started by சந்தியா,

    புரட்சி அழுது பார்த்தோம் தொழுது பார்த்தோம் உழுதும் பார்த்து விட்டோம் சமூகத்தைப் பழுது பார்க்கவெனத் தலைவன் புறப்பட்டான் ஆலம் விழுதுகளாய் தோழர்கள் ஆயிரம் பார்த்து விட்டோம் இனி எழுகின்ற கதிரவனைப் பார்த்திடுவோம் பார்த்திடுவோம் Inthuja Mahendrarajah நன்றி இது என் மனதை நன்றாக கவர்ந்த ஒரு கவிதை அதனால் தான் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

  20. இல்லாது இருப்பவன் இருந்தும் இல்லாதவன் வரிகொண்டவன் வரிப்புலிகண்டவன் முழுத்தமிழர்க்கும் முகவரிதந் தவர்மனங்களில் முடிசூடினன் இயற்கையின் நண்பன் இமாலய சாதனையின் தொண்டன் தமிழன்னையின் தவப்புதல்வா... தாயகத்துத் தங்கமகனே புறநானூற்றின் புதுத் தொடரே... உனக்கின்று இன்னோரகவையாம்... காலத்தின் கட்டளையே கரிகாலா... உனக்கும் அகவையேதுமுண்டோ? நீ வாழி.. நீ வாழிய பல்னூற்றாண்டு...!!!

    • 7 replies
    • 833 views
  21. எல்லோரையும் போல அவனுக்கும் வாழ்வு மீதான பிரியங்களும் தனக்கான வாழ்க்கை மீதான பிடிமானங்களும் இருந்தன….. பருவவயதின் காதலும் பள்ளிக்கூடக் கனவுகளும் அவனையும் ஒரு சினிமாக் கதாநாயகனாக்கியது ஒருகாலம்…… கால இடைவெளி நதியாய் ஓடிய குடும்ப நிம்மதியைப் பேரலையொன்று விழுங்குமாப்போல குடும்பத்தின் நம்பிக்கையொன்று இடையில் தொலைந்து போக அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எல்லாமுமாகியிருந்தான்…… ஒற்றைப்பிள்ளையாய் ஒருகோடி நம்பிக்கையாய் ஒளி நிறைந்த சூரியனாய் அவனே அனைத்துமாய்….. காதலும் கல்வியும் நிறைந்த நாட்களுக்குள் போரும் அவலமும் புகுந்து கொண்ட போது போராளியாதலே யாவற்றுக்குமான முடிவென்றவன் சொல்லாமல் கொள்ளாமல் காடேகிக் கையில் இயந்திரத்தோடு வீட்டுப் ப…

    • 7 replies
    • 1.2k views
  22. 2 Poems on Canada ஒரு பயணியின் வாழ்வு பற்றிய பாடல் - வ.ஐ.ச.ஜெயபாலன் சீஎன் கோபுரத்தை அண்ணார்ந்து பார்க்கையில் கண்ணாடிக் கோபுரத் தொடரின் மீது வசந்தத்தின் வருகையை எழுதியபடி ஒளிரும் காற்றுப் படிகளில் ஏறிச் சென்றது ஒரு தனித்த காட்டு வாத்து. சிறகுகளால் என் கண்ணீர் துடைத்தபடி. அம்மாவின் மரணத் துயரோடு வெண்பனியையும் உருக்கிவிட்ட காலம் வலியது. ரொறன்ரோ அடி நகரின் இடுக்குகளில் குனிந்துவந்த சூரியன் ஒளி விரல்களால் மிலாறுகளை வருடிவிடுகிறது. மொட்டை மரங்களின்மீது பசிய அறோரா துருவ ஒளியையும் வானவில்லையும் உலுப்பி விடுகிறது சூரியன். எங்கும் பசுமையும் பூக்களும் பட்டாம் பூச்சியுமாய் வண்ண உயிர்ப்பும் வாழ்வின் சிரிப்பும். உலகம் சிருஸ்டி …

    • 7 replies
    • 3k views
  23. வீரக்காய் ஆயயிலே வீழாத வீரம் பேசி என்னையும் ஆய்ந்தவனே நாவல் காய் ஆயயிலே நல்ல நண்பி நீ எனக்கு என நா பிறழாது உரைத்தவனே! காரை முள் குத்தி கடுப்பில் நான் அழுது துடிக்கையிலே உன் நெஞ்ஞ்சு தச்சதைபோல் உருகி அழுதவனே! கார்த்த்ட்கை பூ பறிக்கையிலே காதோரம் வந்து சொன்னேன், பேதை என் மனதில் காதல் பூத்ததென்று. பூ போன்ற மென்மையான உன் மனதோ பூகம்பம் நிகழ்ததை போல ஈச்சம் பழம் ஆயயிலே இரும்பைப்போல் உரத்துச் சொன்னது. ஈழத்தை காதலிக்கும் காளை உன் மனதில் ஒருத்திக்கும் இடமில்லை என்று. இயம்பிய வார்த்தைக்கு ஒப்ப களமாடி நின்றாய். ஆனால் இன்று வீரம்பழம் பழுத்திருக்கு நாவல் பழம் நிறைந்திருக்கு கார்திகையும் படர்ந்திருக்கு. நீ மட்டு…

  24. கிழிக்கப்பட்ட தாள்களில் வரையப்பட்ட ஓவியமாய் உடைந்த சிதைவுகளில் செதுக்கப்பட்ட சிற்பமாய் அதிகாலை கனவில் அவளின் அருகாமை வீணாய் போனது விடியலின் பொழுது விரிக்காத படுக்கை மடிக்காத உடைகள் வேண்டாத உணவு தீண்டாத தேநீர் காலையை தின்று மதியம் கொன்றது மங்கையின் நினைவு மரண வலியாய் தனிமை பயணத்தின் ஒவ்வொரு தரிப்பிலும் தடுக்கி விழுந்து மீண்டும் தொடர்ந்து கற்பனைகளில் சுழன்ற சுந்தர வதனம் கூரிய வாள்முனை குரல்வளை அறுப்பதாய் வேதனை தந்தது அந்தி சாய்ந்து ஆதவன் அணைகையில் மெல்லத் தவழ்ந்து கள்ளம் கலந்து கொல்லத் துடித்த கொள்ளை அழகில் உருகி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.