கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
-
- 0 replies
- 424 views
-
-
ஒரு கூட்டு கிளிகளாக, கொட்டில் வகுப்பொன்றில், கூடிப்பழகிய இனிய கணமொன்று நொடிக்கனவாக மலர்ந்ததின்று. நட்பில் வஞ்சமில்லை.... பதற்றமில்லை நெஞ்சத்தில்... நொடிக்கனவை படம் பிடித்து, மனத்திடையே மாட்டி வைக்க, அழுத்தினேன் புகைப்பட கருவியை. பளிச்சென்று ஒரு வெளிச்சம்... மலரும் காலையின் சூரிய கீற்று கலைத்தது என் இனிய கனவை... மலர்ந்தன என் விழிகள் புலம்பெயர் வாழ்க்கையின் புழுங்கும் கணங்களை முழுநீளப்படமெடுக்க... (17/08/2010)
-
- 8 replies
- 870 views
-
-
பின் தங்கிய சிறுமியிடமிருந்து ..... மேசைமீது உருண்டோடும் பென்சிலை "ஓடாமல் நில்" என அதட்டி நிறுத்தி என்னுலகத்தைச் சரிசெய்தபின் எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில் உங்களால் முன்வைக்கப் படுகின்ற வினாக்களைச் செவியுற்று வெகுவாகக் குழம்புகிறேன் கரும்பலகையின் இருண்மைக்குள் கண்ணெறிந்து தோற்கிறேன் நான், பின்தங்கிவிட்ட சிறுமியாயிற்றே! ஆசிரியரே.. உங்கள் உயர்மட்ட அறிவு நிலைகளிலிருந்து கீழிறங்கி வந்து எனது இருக்கைதனில் அமருங்கள் தங்களின் தேர்ச்சி மிகுந்த சொற்களை தூர எறிந்துவிட்டுத் திக்கித் திணறுகின்ற குரலொன்றினை வழிகூட்டிச் செல்லுங்கள் வளராப் பிள்ளை நான் வகுப்பறையினுள் வந்து விழுந்த நட்சத்திரங்கள் உங்களைச் சூ…
-
- 4 replies
- 782 views
-
-
எனக்குத் தெரியும் என்றாலும் எதிர்மாடித் தமிழனைக் கேட்டேன், எப்போது வரும் தமிழ்ப் புத்தாண்டு? 'எப்போதும் தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரலில் தப்பாது வரும்' என்றான்! 'கண்ணீர் வடிக்கும் சித்திரையாளுக்குக் கைகுட்டை கொண்டுபோ' என்றேன். 'எங்கும் இன்பத் தமிழ் ஒலிக்க வேண்டும்' ஏமாற்றமா? இல்லவே இல்லை என் ஆசைக்கு! காதாரத் தமிழ்ப் பேச்சைக் கேட்கிறேன் கல்லறைகளிலிருந்து! மறைமலை, திரு.வி.க., பாரதிதாசன், பாவணர் தனித் தமிழில் இனிக்க உரையாடுகிறார்களே... கேட்கலையா உங்கள் செவிகள்? ஆனாலும் ஆவலினால் அன்றைய தொல்காப்பியன் திரும்பி வந்தான். மழலையர் பள்ளியில் ஆங்கிலம் படித்தான் அதிலே தவறி ஐந்தாம் வகுப்பிலேயே கல்வியை முடித்தான். ஆர்வத்தால் வள்ளுவனும் திரும்பி வந்தான். தமிழில் படிக்க வாய்ப்பில…
-
- 0 replies
- 415 views
-
-
ஒய்யாரத் தமிழில் செட்டாகப் பாடறியேன் தமிழன் நாளாம் தைத்திருநாளில் பொங்கலோ பொங்கலென்று கவிபாட வந்தேன்........ எட்டுத் திக்கும் ஓங்கியே பாடடி ,பெண் என்றால் யாரென்று ? சிறுமை கண்டு பொங்கி எழுவோம் சிற்றெறும்பாய் நசுங்கியே போகோம் அகப்பை பிடித்த கை அடங்கியே போகுமென்ற , அடம்பிடித்த எண்ணத்தை அடக்கியே வைப்போம் ......... அண்ணை என்று அன்பாக அழைத்தால் , எம்மை ஆள நினைக்கும் கூட்டத்தை கூட்டில் ஏற்றுவோம் . பெட்டிப் பாம்பாய் இருக்மாட்டோம் பொட்டிலே, கொட்டியே தீருவோம் என்று, தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் மனதில் இருத்துவோம் மைத்திரேயி
-
- 13 replies
- 750 views
-
-
மகிந்தவின் கழுத்தில் தொங்குவது சிங்களவரின் கோவணம் இடியமீன் சிரிக்கிறான்
-
- 1 reply
- 869 views
-
-
நாங்கள் பொங்குவோம் பொங்கலோ பொங்கல்... பொங்கலோ பொங்கல்... கல்லு மூண்டு வச்ச அடுப்பில கனதியான புது மண் பானை வச்சு முக்குறிகளை முழுசா அதற்கு வச்சு பக்கத்தில கட்டோட கரும்பு வச்சு புது நெல்லு மணி விளக்கி பசும்பாலும் நெய்யும் மனமா விட்டு பக்குவமா சக்கரை கலந்து பதமாக வெந்து வர முந்திரி வத்தலும் முந்திரிப்பருப்பும் ஏலத்தூளும் தூவி பொங்கல் பொங்கி வர வெடி சுட்டு பொங்கலோ பொங்கல் எண்டு பாட்டி குலவையிட பக்கத்துக்கு வீட்டிலும் முன் வீட்டிலும் கூட வெடியோசை வானைப் பிளத்தது பொங்கலோ பொங்கல்... பொங்கலோ பொங்கல்... இது முன்பொரு காலம். ஆனால் இப்ப முன் வீட்டு குடும்பம் இன்னும் முகாம்ல இருந்து வரயில்ல முள்ளு கம்பிக்குள்ள முழுசா அடைபட்டு இருக்கினம்…
-
- 0 replies
- 1.5k views
-
-
தை பிறந்தால் வழிபிறந்தது அன்று எத்தனை தை பிறந்தும் தமிழனுக்கு மட்டும் வழி பிறக்க வில்லையே ஏர் கொண்டு உழுது பயிர்கள் தான் செய்தோம் ஊரெங்கும் பச்சை வயல் பசுமைகள் கண்டோம் எவரையும் நம்பாது நாம் விழைத்து நம் மண்ணில் தன்னிறைவு கொண்டோம் செம்பாட்டு மண்ணில் செழித்து வளர்ந்திடும் செவ்விளநீரொடு மா பலா வாழை என வாயினிக்க நாமணக்க வகை வகையாய் வாழையிலை மஞ்சள் வானுயர்ந்த கருப்பு கட்டிப் பொங்கி மகிழ்ந்திட்டோம் யார் கண்ணோ பட்டதனால் நாமிருந்த பூமியெல்லாம் நாசமாய் போனதனால் நாள் கூட நமக்கின்றி நாதியற்றுப் போனோம் ஏர்கொண்டு ஏற்றமுடன் எமைக் காத்தோம் இன்று ஏழைகளாகி எதிர்பார்த்து ஏந்தி எம் கைகளை எல்லோரை நோக்கி ஏளனப் பொருளாகி எதுமற்ரோராகி எச்சில் இலைகளாய்…
-
- 9 replies
- 855 views
-
-
வாரா வாரம்... திரை கூர்ந்து விழிப்புலன் கூர்மையாக்கி செவிப்புலன் நேர்மையாக்கி தெளிவாய் பார்க்கிறேன் கேட்கிறேன்.... ராசி பலனில் பகவான்கள் பலர். என்னோட அதிபதி.. குருபகவான் கூட கன்னிப் பெண்கள் மேல தான் கண்ணோட... கருசணையாய் இருக்கிறார். காளை எனக்கு மாதம்.. வருடம் பல... காத்திருந்தும் பலனில்லை. பகவான்... கிருபையும் எனக்கில்லை..! சாத்திரியின் கடைக்கண் பார்வையிலும் நானில்லை..! காளை என்னை விளித்து.. பலன் சொல்லவும் யாருமில்லை..! இருந்தும்.. பூமிப்பந்தில் நாம் நிமிர்ந்து நிற்கிறேன்.. சுய தேடலும் சுய உழைப்புமே என் வாழ்க்கை என்பதால்..! எல்லாம் நான்.. நெஞ்சில் இரண்டு சிரட்டை இன்றி பிறந்ததன் பலன்..!
-
- 6 replies
- 941 views
-
-
எங்கேயோ கேட்கிறது அந்த முனகற் சந்தம்! காரிருள் கவ்விய பொழுதில்... ஈருடல் தழுவிய நிலையாய்... யாருமறியாமல் நடக்கிறது கதகளி! கையில் அகப்பட்டதையெல்லாம் அள்ளியெடுக்கிறான் திருடன்! மெய்யில் வசப்பட்டதையெல்லாம் அள்ளிக்கொடுக்கிறாள் திருடி! கன்னக்கோல் கன்னம் வைக்க எண்ணம்போல் கன்னம் சொக்க, கொஞ்சங் கொஞ்சமாய் திருடுபோகிறது! கொஞ்சிக் கொஞ்சி உதடு நோகிறது! பின்னிப் பிணைந்த அரவங்கள் போல் எண்ணித் துணியும் அவயவங்களுக்குள், சிக்கித் தவிக்கிறது ஒளிபடா இடங்கள்! தறிகெட்டுப்போன மனதுக்கும் வெறி முற்றிப்போன உடலுக்கும் விடை கொடுக்கின்றன துகிலங்கள்! பாலாடை நீக்கி பால்பருக... பசியோடு காத்திருந்த பாலகன்போல் மேலாடை விலக்கி அடம்பிடித்து, கீழ்நோக்கி நகர்கின்றான் பாதகன்! …
-
- 11 replies
- 1.3k views
-
-
பிள்ளைகளின் மரணம் நடுரோட்டில் இரத்ததால் குதறப்படும் குடும்பங்கள் உலகம் கண்டுகளித்த இனப்படுகொலைகள் கொடூரர்களின் ஆட்சி முன்ஜென்ம பாவங்கள் ஏதுமறியா அகால மரணங்கள் போராளிகளின் வீழ்ச்சி விவசாயிகளின் கண்ணீர் ஏழைகளின் வயிற்றடுப்பு பணம் பணமென பேயாய் அலையும் பதர்கள் தீயின் நாக்குக்கு தவறாது பலியாகும் குடிசைகள்(மட்டும்) பிஞ்சுகளை சிதறடிக்கும் குண்டுகள் அப்பாவிகளை நோக்கியே நீளும் ஆயுதங்கள் காமத்திற்கு இரையாகும் பால்முகங்கள் கழுத்தறுக்கப்பட்ட கனவுகள் இவற்றைக் கண்டு நாணாதவன் கடவுளெனில் நானும் கடவுள். http://aazhkadal.blogspot.fr/2012/01/blog-post_28.html
-
- 4 replies
- 873 views
-
-
நள்ளிரவு கடக்கும் நேரம் "உறங்கப் போகிறேன்" என்கிறாய் குறுந்தகவல் வழியாக..! "கனவில் ஒரு நடை வந்து விட்டுப் போ..!" என்கிறேன். நிஜத்திற்கு ஆசைப்படும் நீயோ கனவில் வர மறுத்து சிணுங்குகிறாய்..! மயிலிறகால் வருடும் உன் நினைவுகளின் கூட்டம் மலையாய் கனக்கிறது..! நீ வந்து சேரும் வேளை மலைக்கும் நினைவுகள் மேகக்கூட்டமாய் மிதக்கிறது..! புயல் கடக்கும் போது பெய்யும் பெருமழையைப் போல தென்றல் தீண்டும் வேளை பொழிகிறது காதல் மழை..! ஆண் பெண் என்னும் வண்ணங்கள் கரைகிறது. அன்பை உடுத்திக் கொள்கின்றன நிர்வாணங்கள்..! ஆதாமுக்கும் ஏவாளுக்கும் மறுக்கப்பட்ட கனியை மன்மதன் திருடிச் செல்கின்றான்..! காதலிக்கப் படாமல் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்…
-
- 0 replies
- 407 views
-
-
புத்தாடை கட்டி ஊரில் புதுப்பானை வைத்து கோலம் போட்டு மாவிலை கட்டி திருச்சி வானொலியை திருகிவிட்டு கவியரங்கம் கேட்டு அப்பா அம்மா அம்மாச்சி சின்னன் பொன்னன் ஆளடுக்கு புடை சூழப் பொங்கலோ பொங்கல் என்று பொங்கிய காலமும் உண்டு..... இடையில், கதிரவனுடன் என்வானில் புதிதாய் எட்டிபார்த்த இயந்திரப்பறைவைகள் பறந்து வட்டமிட்டு என் பொங்கலை வேவு பார்த்து எச்சங்களாய் உலோகக் குண்டுகளை உமிழ்ந்து விட பொங்கலோ பொங்கல் என்றிருந்த என்வாழ்வும் மங்கலாகிப் போனதும் உண்டு..... இன்று, விடிந்தும் விடியாத பனிப் புகாரில் என் நினைவுகள் கண்ணாம் மூஞ்சி காட்ட வேலைக்குப் போகும் அவதியில் என் உதடு பொங்கலோ பொங்கல் என்று இயந்திரத் தனமாய் முணுமுணுக்கும்........
-
- 20 replies
- 2k views
-
-
என் இதயமே எங்கு செல்கிறாய் என்னை பிரிவதில் இன்பம் கொள்கிறாய் தன்னம் தனிமையில் நான் தவிக்கின்றேன் எந்தன் இளமையை இன்று வெறுக்கின்றேன் அடி பூவாய் வந்தாய் புயலாய் சென்றாயே புரியவில்லை சகியே ...... இது நியமா என்று நிழலினை கேட்கிறேன் விடியவில்லை சகியே ............ கண் மூடி வாழ்கிறேன் கனவில் கண்ணோடு வாழ்கிறாய் நினைவில் அடி பொய்யாகி போனதே உறவு - பெண்ணே மெய் தானா உந்தன் பிரிவு என் மெய்யான சோகம் உன் மனம் அறியவில்லை அன்பே உன்னை சுடும் வரை நீ வெயிலென இங்கு எரியும் நிலவு நானே அன்பே ஆசை என்னும் வலியுடனே நடை பிணமாய் தெருவில் திரிகிறேன் அடி காரணம் அற்று கழட்டி விட்…
-
- 14 replies
- 1.1k views
-
-
நீ என்னை நேசித்த போது நான் அறிந்து கொள்ளாதது ஒன்று இன்று நீ என் கூட இல்லாத போது புரிகின்றது ...நீ என்னக்குள் உயிராய் இருந்தது !!!! பார்த்த முகம் தனில் உன் கண் என்னை விட்டு பிரிந்தாலும் பழகிய என் இதய நெஞ்சை விட்டு நீ பிரிய வில்லை !!!! உன் அன்புக்கு நான் அடிமை ஆனேன் ..உன் சின்ன சின்ன கோபம் என்னை எளிமை ஆக்கின என் வாழ்வில் சிறு அர்த்தமுடன் .. இன்று நான் அதே நிழல்களுடன் !!!! உலகத்தின் கண்களில் உன் உருவங்கள் மறைந்தாலும் எனில் ஒன்றான உன் உருவம் மறையாது..!!!! …
-
- 1 reply
- 507 views
-
-
கடலின் கரையில் மணிலில் மாளிகை கட்டிட விரும்புகின்றேன் கதிரின் பிழம்பைக் கையால் தழுவிடக் காதல் கொள்ளுகின்றேன் உடலின் கூடுவிட்டு உயிரால் ஓடி உலவிட விழைகின்றேன் ஊருணி நீர்மேல் ஓவியம் தீட்டும் உரத்தை வேண்டுகின்றேன். வெண்முகிலுக்குள் படுத்துக் கிடக்க, வேட்கை கொள்ளுகிறேன். நன்றி கவிஞர் மீரா
-
- 1 reply
- 589 views
-
-
ஒரு தூறல் மழை போலே என் நெஞ்சில் விழுந்தாயே என்நெஞ்சின் ஓரத்தில் ஏதோ ஞாபகம் பெண்ணே நீ போகாதே ஏக்கத்தில் தள்ளாதே உன்னால் என் நிமிடங்கள் வருடம் ஆனதே நெஞ்சுக்குழியினிலே பல்லாங்குழி ஆடுகிறாய் இதய அறைகளிலே ஏன் ஒளிந்து ஓடுகிறாய் சிலநேரத்தில் தொலைவில் போகின்றாய் சிலநேரத்தில் அருகில் வருகின்றாய் ஓரக்கண்ணாலே கோபங்கள் காட்டாதே உன் மௌனப்புன்னகையில் மௌனித்து கொள்ளாதே உன்பாத தடங்கள் இங்கே தேடுகிறேன் என்பாதைகள் மறந்து எங்கோ ஓடுகிறேன் மேகம் பொழியாமல் மழை வந்து வீழ்ந்திடுமோ உன்னைக்காணாமல் என் ஜீவன் வாழ்ந்திடுமோ http://www.youtube.com/watch?v=Lbx5zdgjgwA
-
- 23 replies
- 1.4k views
-
-
அழக்கூட முடியவில்லை அடைத்துப் போகிறது நெஞ்சு! உள்ளத்தில் உறைந்தவளே றிசானா..! உன் மரணச் செய்தி இன்னும் மரணித்துப் போகவில்லை எங்களை விட்டும்! சுவனத்துக் குயிலே! உன் விடுதலைக்காய் எத்தனை உள்ளங்கள் இரவு பகல் அழுதன தெரியுமா..? எல்லாம் முடிந்து விட்டது. இறைவன் அழைத்துக் கொண்டான் உன்னை! என்று நம்புகிறோம் ஏற்பாட்டை ஏற்றுக் கொள்கிறோம். றிசானா! செல்லமாய் விளையாடும் சின்ன வயதில் சிறை சென்ற வண்ண மொட்டு நீ.. அதைக்கூடத் தாங்காமல் உன்பெற்றோர் தீயில் விழுந்த புளுவாய் தீய்ந்து போனதை நாம் அறிவோம். இப்போது இறந்துபோனதை எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள்..! உன் மரணச் செய்தி கேட்டவுடன் தாய் மொழிந்த வார்த்தைகள் 'எண்ட மகள மௌத்தாக்கிட்டாங்களா..?' இன்னும் …
-
- 3 replies
- 598 views
-
-
பெண்ணிற்கு இலக்கணம் வகுத்தவன் அழுது கொண்டிருக்கிறான் ! பெண்ணையே தெய்வமென போற்றியவன் துடித்துக் கொண்டிருக்கிறான் ! பெண்ணையும் அவளின் அங்கங்களையும் விழி தராசுகளில் எடைபோட்டு களவாடப் பார்க்கும் கள்வர்களின் கைகளில் எப்போது தீப்பிடிக்கும்? நடந்தால் சிரித்தால் குனிந்து எதையாவது எடுத்தால் கூட போக உணவு கிட்டிய மகிழ்ச்சியில் ஓர் ஆணினம். இந்தியப் பெண்கள் அறிவில் - அழகில் வல்லவர்கள் தாம்! ஆனால்... நெறிதவறா சிற்பங்கள்! ஒவ்வொரு பெற்றோரும் பெண்ணைப் பிரசவித்து கூடவே ஒரு நெருப்பு வளையத்தையும் இட்டே வளர்க்கின்றனர்... பெண்ணினம் அடிமை என்பது பழையது ! பெண்ணினம் போர் வாள் என்பது புதியது ! ஓர் ஆணின் வாழ்வை விடவும் பெண்…
-
- 0 replies
- 336 views
-
-
முப்பது வருஷங்களாய்த் தெரியும் அவளை, ஒரு வினாடிகூட எனைவிட்டுப் பிரியாதவள்! எங்கெல்லாமோ எனை இழுத்துச் சென்றவள்... இப்பொழுதும், ஒரு கேள்விக்குறியின்மேல் என்னை உட்கார வைத்திருக்கின்றாள்!? என் வாழ்க்கையைச் சுற்றவிட்டு முடிச்சவிழ்ப்பதில்.. அவளுக்குக் கொள்ளைப் பிரியம்! அவளுக்கென்ன... அவளது சுவாரஸ்யத்துக்காக சுவாசிப்பது நானல்லவா? சுமைகளைச் சுமப்பதும் நானல்லவா? அவளுக்கெங்கே தெரியப்போகிறது... அவளோடு கூடவே வாழ்வதின் கஷ்டம்! நான் சிறுகுழந்தையாய் இருந்தபோதில்... இனிமையாகத்தானே இருந்தாள்! எப்படி மாறினாள் என்று... எனக்கே தெரியவில்லை!? இன்றல்லாது... என்றாவது ஒருநாள், இவளது தொல்லை இல்லாமற் போகும்! அப்பொழுது என் சுவாசமும் அவள் கூடவே செல்லும் -பழகிய பாவத்திற்காக!
-
- 11 replies
- 817 views
-
-
மழை பெய்தது வயல் நிறைந்தது உயர்த்தி கட்டிய வரப்பில் நிறைந்து வந்தது வெள்ளம் நிறைந்ததால் நிமிர்ந்தது நிறை குலை தள்ளிய நிறைந்த நெற்கதிர் விளைந்தது விண்ணுயர்ந்து விளைவித்தவன் விவசாயி உழுது மறுத்துளுது உயர் விதை தேடி உண்மை உழைப்பை குருதியை உருக்கி வியர்வையாய் கொட்டி வான் பார்த்த பூமியில் தான் பார்த்து ஆய்ந்து நாற்று நடவு நட்டு அங்கெ இங்கே கடன வாங்கி அதிகமும் இல்லாமல் குறைச்சலும் இல்லாமல் அளவாய் வரப்பு வெட்டி அன்பான குழந்தைக்கு பால் புகட்டுவது போல் நன்றாய் நீர் விட்டு அந்த மருந்து இந்த உரம் என்று இன்னும் கடன் வாங்கி உழைப்பை போட…
-
- 2 replies
- 4.8k views
-
-
நீர் தேங்கி நீண்டு கிடக்கிறது வயல்வெளி, தீண்டுவாரில்லாத ஒற்றைப்பனையில் தூக்கணாங்குருவிக்கூடுகள் நிறைந்துபோய் கிடக்கின்றன சிதைந்த வயல்வரம்புகளில் வெண்கொக்குகளும் காகங்களும் இறகுகோதி உலாத்துகின்றன, கலப்பைகீறாத எங்கள் நிலமதில் அல்லியும் நீர்முள்ளியும். மண்டிக்கிடக்கிறது, உடலங்களை உண்ட மதமதப்பில். நெல்லுத்தூத்தல்களும் அறுவடைக்கால கூச்சல்களும் இல்லாத வெளிபார்த்து சலித்துக்கடக்கிறது பருவக்காற்று, நார்கடகங்களும் சாக்குகளும் மக்கி மண்னேறிப்போகிறது வண்டில் சில்லுகளில் வலைபின்னி சிலந்தி கிடக்கிறது. அசைமீட்கும் எருதுகளின் ஏரிகளில் கரிக்குருவியின் எச்சங்கள் கோடுகளாய், விலைகென்று வளர்த்த கிடாயும் விழியுயர்த்தி மிரள்கிறது. …
-
- 18 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
பாய் விரித்து படகெடுத்து பாய்ந்து கடல் ஆண்டவர் பார் முழுதும் தமிழர் என்று போய்த் திரும்பி மீண்டவர் தாய் மடியில் மீண்டெழுந்து நாங்கள் அன்று ஆளுவோம் தாவும் கடல் புலிகளினால் நாளை கடல் ஆளுவோம் ஏறி வரும் பகை யாவும் இனி இல்லை எனும் நிலை ஆகும் மாறி அடித்திடும் காற்று கடல் மீதினில் புலிக்கொடி ஏற்று - நன்றி முகநூல்
-
- 0 replies
- 1.2k views
-
-
Up.. Down குவாக்சுகளின் கலவையில் குவா குவா என்றே பிறந்திட்ட இரட்டைப் பிறவிகள் புரோத்தனும்.. நியூற்றனும்..! அண்டை அயலில் அலைந்து திரிந்த... லெப்ரோன்கள் மீது கொண்ட காதலில் கலவி கொண்டே தந்தன.. அணுக் குழந்தைகள். காபனின் கறுப்பில் கவர்ந்திட்ட ஐதரசனும் காந்தர்வமாய் கலந்திட்ட ஒக்சிசனும்.. இடையில்.. நைசா நுழைந்திட்ட நைதரசனின் நாட்டமும் கூடவே.. பொஸ்பரஸின் கூட்டும் கூடிக் கண்ட விளைவே டீ என் ஏ...! டீ என் ஏ சுருளிச் சுற்றில் சிக்கிக் கொண்ட காதல் எஸ் எம் எஸ் ஸுக்கள் அமினோ அமிலங்களாய் வாசிக்கப்பட அங்கு பிறந்த கவர்ச்சிச் சண்டையில் நடந்த கலவியில்.. புரதங்கள் பிறப்பெடுக்க கருக்கொண்டது உயிரின் உருவம்..! அழகும் வர்ணமும் அறிவும் திறனும் கூட…
-
- 29 replies
- 2.5k views
-