Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தாயகவிடுதலைக்கனவோடு சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்! சட்டென்று போனானே… சிறகு முளைக்கும் முன்னால்! பாடல்கள் பல தந்து நின்றவன் – மண்ணின் தேவைகள் சில முந்த… தன் காதலையும் தேடலையும், தனியாக ராகம் பாட விட்டவன், தான் காதலித்த மண்ணுக்காய்… சிட்டாய்ப் பறந்து போனானே பாடலோடு! வந்த பகை நின்று முறிக்க, இடையிடை புகுந்தவன்… தன் வாழ்வினை விடை கொடுத்து… வந்தானே பாடையோடு! நீ தந்த ராகங்களும் பாடல்களும்… சிறுநாக்காய்…. எம் தொண்டைக் குழியில் இன்னும், அவ்வப்போது அலறி இசைக்கும்! – ஆனால் உன்னினிமை ராகம் கேட்க... நீ வரணும் மீண்டும் சிட்டாய்! உறுதியாய் ஒன்றுமட்டும்…. எம் தாகம் தீரும்வரை… உன் ராகம் ஓயாது! உன் ராகமும் தாளமும் இன்ற…

  2. நிர்வாணமாக கொலையுண்டவர்களின் பின்பக்கம் தேங்கிய நீரில் துடித்து மிதந்து கொண்டிருக்கின்றன பிடரிகளும் கண்களும் கைகளும். நிருவாணம் எல்லோரது உடைகளையும் களைந்து விடுகிறது. மிகவும் அஞ்ச வைத்தபடி கோணல் துவக்கு தலையின் பின்பக்கம் துளையிடுகிறது. நிலம் பரிதாபமான குருதியால் நனைகிறது. யாருடைய முகமும் தெரியவில்லை. எல்லோரிடமும் எங்கும் குருதி கொட்டிக்கொண்டிருக்கிறது. பேரூந்திலும் நகரத்தின் உள் தெருக்களிலும் வீட்டிலும் தொலைக்காட்சிப்பெட்டியிலிரு

  3. Started by இலக்கியன்,

    இயற்கையை நீயும் கவி ஆக்கினாய் வாழ்க்கையை நீயும் இன்பமாக மாற்றீனாய் வழியில் வந்த காதலன் அவன் ஏன் இடையில் நின்று விட்டான் உன்கண்களைப் பார்தும் அவன் இரங்கவில்லையா உன் இதயத் துடிப்பு அவனுக்கு ஏன் கேட்கவில்லையா அவன் இதயத்தை இரும்பாக்க எப்படி முடிந்தது உன்னுடய மெளனம்தான் அவனை வாட்டவில்லையா நீ பேசும் மொழி அவன்காதில் கேட்கவில்லையா காதிருந்தும் செவிடனாக ஏன் இருக்கிறான் அவனும் இங்கே

  4. உலகம் ஏன் இன்னும் காணவில்லை...????????????? போர்க்கோலம் புண்டிருக்கும் ஈழம் பாரடா.... அந்த போருக்குள்ளே வாழும் தமிழர் பாவம் தானடா..... சிறகுடைந்த பறைiவாயகி இன்று ஏனடா....?? அந்த சிறைதனிலே வாழும் நிலை சோகம் தானடா..... பசியோடு பட்டினியில் பாவம் அவரடா.... அந்த பாலகரின் நிலையதுவோ சோகம் காணடா.... அந்த பால் பட்ட பகையால் எங்கும் ஓலம் தானடா.... கண்ணீரோடு எம் மக்கள் அங்கு பாரடா... இதை காணவில்லை உலகமின்னும் ஏனோ கேளடா....??? -வன்னி மைந்தன்- :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?:

  5. இல்லை...இல்லை... - இரத்தின “மை” Saturday, 13 January 2007 உணவுக்கு மரவள்ளிகூட இல்லை உயிர்காக்க மருந்தில்லை நத்தாருக்கு கேக் அடிக்க மாஜரினில்லை பொங்கலுக்கு சக்கரையில்லை பாறணைக்கு காய்கறியில்லை பள்ளிசெல்லும் பையனுக்கு குமுழ்முனை பேனையில்லை குழந்தைக்கு பால்மாயில்லை எக்ஸ்றே இயந்திரத்துக்கு எனேஜி இல்லை எக்ஸ்போவில் ரிக்கறில்லை ஏரியாகொமாண்டரிடம் கிளியரன்ஸ் இல்லை. ஏ நைனுக்கு விழிப்பில்லை மரக்கறிக்கு உரமில்லை சந்தையில் மீனில்லை விலைவாசிக்கு குறைவில்லை தேரிழுக்க பக்தனில்லை ஏர்பிடிக்க வலுவில்லை மனித உரிமைக்கு மதிப்பில்லை சிந்தும் குருதிக்கு பெறுமதியில்லை விசாரணைகளுக்கு முடிவில்லை மிகிந்தலைக்கு பாதையில்லை மகிந்தரின்…

    • 1 reply
    • 1.2k views
  6. இணைய உறவு இனிய உறவு இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு இருபத்தோராம் திகதி இதே சித்திரை மாதத்தில் இதோ பசுமையாக அவ்நினைவுகள் இன்றும் என் நெஞ்சில்; இனிமையான காலைப்பொழுதில் இயக்கினேன் கணனியை இணைந்தேன் அரட்டைக்குள் இயற்பெயர் வெண்ணிலாவாக இவளுக்காகவே காத்திருப்பதுபோல்; இன்முகத்துடன் அரட்டைக்குள் இளங்கவிக்குயிலாக நீயிருந்தாய் இதமாக கதைக்க நினைத்து இதழ்விரித்துக் கேட்டேன் இருக்கின்றீர்களா நலமா என்று இதயத்தை தொடுவது போல் இயம்பினாய் ஆம் நலமே என இலங்கையில் வசிக்கின்றேன் நான் இங்கிலாந்தில் வசிக்கின்றாய் நீ இவ்வாறாக தொடர்ந்த அரட்டையில் இருநாடுகளில் வாழ்ந்தாலும் இணைபிரியாது வாழ எண்ணி இருவரும் கலந்தாலோசித்…

  7. Started by Ahasthiyan,

    வாழ்க்கையை மண்ணின் விடுதலைக்கும் மரணத்தை அஞ்சாத தியாகத்தாலும் எம் விடுதலைக்கு வித்தாகிய மாவீர செல்வங்களே! நியாயத்தின் செவிகளில் உமது கர்ச்சனை வரலாற்றின் நெற்றியில் உமது திருப்பெயர் இந்த மானுட பிறப்பின் நல்ல உள்ளங்கள் முகர்ந்து பார்க்கும் ஒவ்வொரு பூவிலும் உங்கள் உயிரின் வாசம் கமழும் நாளை பிறக்கும் ஈழத்தில் உமது உயிரின் சூடும் கலந்து இருக்கும் இந்த நாளை எமக்காக மரணித்த உமக்காக எம் மக்களுக்காக நாம் ஓரணியில் நின்று சிரம் தாழ்த்தி வணங்குகின்றோம்

  8. பொய்த்துத்தான் போகாயோ ******************************* சத்தம் இன்றி - பெரும் யுத்தம் இன்றி சலசலப்பு ஏதுமின்றி சிணுங்கி வழிகிறாள் சிலநாளாய் வானமகள் முன்பெல்லாம் அவள் வரவு கண்டு ஆனந்தித்த பொழுதுகள் அளவுக்குள் அடக்க முடியாதவை மனம் ஆனந்தப்பூங்காற்று பாடி மமதையிலே திழைத்திருக்கும் மண் மணம் நாசி ஊடு புகுந்து மண்ணில் வாழ்ந்த நாளை மறுபடியும் மறுபடியும் கிளறி நிற்கும் ஊர் போய் வந்த பின்னர் உறவுகள் நிலை கண்ட பின்னர் பெய்யெனப் பெய்யும் மழை பிய்ந்த கூரை வழி வழிந்து நிறைவில்லா வீடுகளை நிறைத்து நின்றதனை கண்டதனால் நீ எம்மவர் நிலை மாறுமட்டும் பொய்த்துத்தான் போகாயோ எனும் பெரும் ஏக்கம் நெஞ்சமெங்கும்... #ஈழத்துப்பித்தன் 01.02.2016 …

    • 0 replies
    • 1.8k views
  9. Started by arjun,

    சிந்தனை செய் ஆதியும் கல்வியிற் சிறந்த ஜலஜாவும் வீரத்தில் வல்ல கட்டை சாந்தியும் மஞ்சள் முகமாம் மலர்வதனியும் கோள் செய் வல்ல கோமதியும் ஜப்பான் குண்டு தாரணியும் கண்களாலே மோகன வலை வீசும் மா. கௌரியும் சாந்தமே உருவான ச. சொரூபாவும் புள்ளிமானாய் வெருண்டோடும் கட்ட கௌரியும் நித்திரைக்குயின் ரொனிக் ரேணுகாவும் கொடியிடையாள் நடைபயிலும் ச. வத்சலாவும் மூக்காலே ரெயில்ஓடும் மூக்குச்சளி மீராவும் பூங்குயிலாம் இசைபாடும் பொருக்குவண்டு வத்சலாவும் வெடுக்கென்ற பேச்சால் கொடுக்காய் கொட்டும் கொடுக்கு சாந்தியும் (எனது பள்ளித் தோழிகளை பற்றி ஒன்பதாம் வகுப்பில் எழுதியது) இதில் ஒருத்திக்கு என்னில் சரியான கோபம், கொஞ்ச காலம் என்னுடன் க…

    • 10 replies
    • 893 views
  10. எங்களது வாழ்க்கையின் அவலங்களை, அதன் வலிகளை, என்னைப்பாதிக்கும் நிகழ்வுகளை, நான்வாழும் சூழலது சமகால மாற்றங்களை எழுத்துருவாக்க முனைகின்றேன். 1. இடப்பெயர்வு அவசரத்தில் அவிழ்க்காமல் விட்டு வந்த மாடு பூட்டிய கூட்டுக்குள் கோழியும் , குஞ்சும் உலையில் புட்டு வரும்போது அரையவியல் எரிந்துபோயிருக்கும் இப்போது யார் சோறுவைக்கப்போகிறார்கள் பூனைக்கும் , நாய்க்கும் வெட்டி அடுக்கியமாதிரி வேலிக்கான கதிகால்கள் வாஞ்சையுடன் வளர்த்த பயிர்கள் வாடிப்போய்விடும் பராமரிப்பில்லாமல் பாழாய்ப்போன யுத்தம் வீடுகூடப் பூட்டவில்லை வாழ்ந்தவரெல்லாம் மாண்டுவிட மிஞ்சி இருப…

  11. எதிரியுடன் உனக்குத் தேனிலவு தமிழர்க்கு எல்லாம் தலைக்குனிவு நீயானாய் நாடாளும் அமைச்சனாய் தமிழர் காடெல்லாம் அகதிகளாய் ஆடுகிறாய் அழகியுடன் பெந்தோட்டையில் வாடுகிறோம் அழுகையுடன் இனவேட்டையில் உன்குடும்பம் பணத்துடன் வெளிநாட்டில் தமிழரெல்லாம் பிணத்துடன் சுடுகாட்டில் நீயின்று பகைவனுடன் படுக்கையில் தமிழினம் மரணத்தின் படுக்கையில் http://gkanthan.wordpress.com/index/eelam/bed/

    • 1 reply
    • 1.9k views
  12. இரத்தம் எழுதிய கவிதை வ.ஐ.ச.ஜெயபாலன் (1985ல் குமுதினிப் படுகொலைச் சேதி கேட்டு எழுதிய கவிதை) மே பதினைந்தில் இந்துட்துமா கடலில் வானம் அதிர ஓலமிட்டது புயல் தீண்டிய கருங்கடலல்ல. என்னரும் தீவின் மக்கள் அறிவீர்! அன்று என் கரைகளில் சிவப்பாய்ச் சுடர்ந்தது மேதினத் தன்றென் தோழர்கள் கட்டிய தோரணங்களும் கொடிகளுமல்ல. உருண்ட நம் தலைகள் சிந்திய குருதி! கண்கள் அகன்று பிதுங்கிய முகங்களில் கடித்துக் கிடந்த நாவுகள் தோறும் இரத்தம் எழுதிய கவிதையைச் சொல்வேன். போர்த்துக்கீசரை எதிர்த்து வீழ்ந்த என் மூதாதையரின் கிராமியப் பாடலில் முன்னரும் இதுபோற் கவிதைகள் கேட்டுளேன். கொதித்து எழுந்த நம் இளைஞரைப்போல வெண்மணல் போர்த்த முருகைக் கற்களில் தலைவிரித்தடின கறுத்த பனைகள். நெடுந்தீவின் பசும்…

  13. மேதினியில் உயிர்களது மேன்மை பற்றிப் பேசுகின்ற மேற்பூச்சுப் பூசிய மேலான நாடெல்லாம், காதிருந்தும் செவிடனாக கண்முன்னே இனஅழிவை வாய்மூடிப் பார்த்திருந்த வரலாற்றுத் துயரநாள். பூர்வீக நிலம்தனிலே பூச்சரம் போல்வாழ்ந்த மக்கள் தார்மீக நெறிகளற்று தரக்குறைவாய் அழித்தநாள். கோணிகளை அவிழ்த்துக் குப்பைகளைக்கொட்டுதல்போல் வானிருந்தும் நிலமிருந்தும் வளம் கொழிக்கும்கடலிருந்தும் குண்டுகளைக் கொட்டிக் கொலை புரிந்த கரிநாள் குஞ்சென்றும் கிழவியென்றும் கொஞ்சுமிள நங்கையென்றும் இஞ்சித்தும் இரக்கமின்றி வஞ்சம் கொண்டு அழித்தநாள் மே பதினெட்டு மேதினியில்…

  14. காலம் எழுதியின் கவனப்பிழை தேடற்கவியின் உழல்வை இதயக்குழி உள்வாங்க உயிர்ப்பின் மூச்சு ஓசோன் ஓட்டையாக… காலம் எழுதியின் கவனப்பிழை கருப்பைச் சுவர்களில் விசமுட்களாய்… தரித்த குளவியின் பாதி உடல் சீழ்கட்டிப் போய் சிகிலமாக… பிணவாடை, கொள்ளை கோமாரி ஐயோ…. பச்சை உடம்புக்காரி படுக்கையிலே…. காலம் எழுதியை அழைத்து வருவீர். வனையும் சூட்சுமத்தை வசீகரித்து கால் செருப்பாக்கி கொப்பளிக்கும் கானல் வெளியில் கிடந்துழலும் மனிதர்களின் வேதனையை உணர்த்த வேண்டும். பாழும் உலகிடையே வாழக் கேட்டு வெட்கங்கெட்டுக் கிடக்கும் ஆறாம் அறிவு தேவையற்றதாகத் தீர்மானிக்கப்பட்டாயிற்று. த்தூ….. மண்ணாங்கட்டிகளே! குந்தியிருந்து மணிக்கணக்காப் பேசுக. எங…

  15. Started by theeya,

    மூன்று கவிதைகள் இங்கு மூன்று கவிதைகள் பற்றிய தொகுப்பினை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். உங்களின் கருத்துக்களினை முன்வையுங்கள். சங்ககாலத்தில் கடையேழு வள்ளல்களில் ஒருவனாகிய பாரி வஞ்சனையால் இறந்தபின்னர் பாரிமகளிரின் நிலைகண்டு எழுதப்பட்ட ஐந்து வரிகளில் அமைந்த கண்ணீர்க் காவியத்தின் தொடர்ச்சி இன்றுவரை நீண்டுகொண்டிக்கின்றது. "அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையுமுடையேம் எம் குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் வென்றெறி முரசின் வேந்தர் எம் குன்றுங் கொண்டார் யாம் என்தையுமிலரே" (கலித்தொகை - முல்லை - 13) நீண்ட நெடிய தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக வரும் இன்றைய கவிதைகளிலும் சங்க காலத்தின் சாயலைக் க…

    • 0 replies
    • 898 views
  16. வெல்ல வையுங்கள் வெட்டி வீழ்த்துகிறோம் வீர வசனம் பேசி இரத்தத் திலமிட்டு வீடுகள் தோறும் தன்னாட்சிக்கு உரிமை கேட்டு உரிமையோடு வர.. மக்களோ அள்ளிக் கொடுத்து நம்பிக் கெட்ட காலம் ஒன்று.. 70 களில் வந்து போனது..! மீள அது மீளாதிருக்க தம்பி வழியில் போர்த் தரையில் இட்ட விதை.. மக்கள் இரத்தம் சொரிந்து மாவீரர் தியாகத்தால் உரமிட்டு வளர்த்து விட்டது தமிழ் தேசிய விருட்சமாகி இன்று.. ஊர் கூடி தேர் இழுக்கும் தேரடியாகி நிற்குது. மீண்டும் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும்” அண்ணல் திலீபனின் நோன்பிரு நாளில் ஓர் வெற்றிச் செய்தி “கோட்டை வீழ்ந்ததாம்” என்றது போல் ஆனது செவிகள் இனிக்க கடந்து போன துயரங்கள் நினைவில் ஆட..! பிபிசி.. ராய்டர் எல்லாம் உற்று நோக்க நடந்து முடிந்திருக்கு தேரோட்டம். “தன்னாட்சிய…

    • 14 replies
    • 2.2k views
  17. பெய்து முடிந்த மழையின் ஈரம் உலராத கவிதை ஒன்று.. ------------------------------------------ இப்போதெல்லாம் நாம் சந்தித்த இடங்களில் யாருமே இருப்பதில்லை... சிந்திக்கிடக்கின்றன காய்ந்துபோன சில மஞ்சள் பூக்களும் நம் நினைவுகளும்.... காதலும் கவிதைகளுமாய் மாறி மாறி துலங்கிய அந்நாட்கள் தொலைந்துவிட்டன.. மாலை வெய்யில் தன் மஞ்சள் நிறமிழந்த ஒரு கோடையில்தான் நேசிப்பை விற்று காய்ந்துபோனது உன் இதயம்... நினைத்துப்பார்க்கையில் நெஞ்சத்தின் ஆழத்துள் மெல்ல இறங்குமொரு முள்.. அந்தரவெளியும் கலவர நிழலுமாய் நூறாயிரம் கதைகளை சுமந்தலையும் இதயத்தை உடைத்துவிடுகிறது ஒற்றைக்கண்ணீர்த்துளி.. பொழுதில்லை அழுவதற்கும்.. நினைத்துக் கவலையுற்று துன்புற்றுவிட்டு பனிக்குளிரில் வேலைக்கு இறங்கிச்செல்ல…

  18. நீ வரும் பாதையில் உனக்காக காத்து இருந்தேன் புள்ளிமான் போல துள்ளி வருவாய் என்று எழுதிய காகிதத்தை உனக்குத் தரகாத்து இருந்தேன் நீயும் மண மாலையுடன் வந்தாயே பக்கத்துவீட்டு பாலனுடன் எழுதிவைத்த காகிதமும் என்னை பார்த்து சிரிக்கிறது இதை எப்படித்தான் தாங்குவேனோ கண்ணே பெண்ணே

  19. பள்ளி நாட்களில் பட்டாம் பூச்சிபோல் பழகிய உன் நினைவு பசுமையாக என் மனதில்... பல்லாண்டுகள் பல பொழுதுகள் பறந்து போனாலும் பால் நிலவாக உன் நினைவு... நட்புக்கு நீயும் தோழி இரங்குவதில் நீயும் என் தாய் அன்புக்கு நீயும் காதலி அறிவில் நீயும் என் ஆசான் உன்னை நான் சந்தித்தேன் இளவேனிற்காலம் உன்னை நான் பிரிந்தேன் இலையுதிர்காலம் உன்னைப்பிரிந்த பின் என்வாழ்வு மாரிகாலம் வாழ்கை என்பது உன் நினைவுகள் உறங்குமா உன்

  20. தலையிடிக்கிறது இப்போதெல்லாம் கொஞ்சம் அதிகமாக , தூக்கமாத்திரை இல்லாத இரவுகள் இனி இல்லாமல் போகுமோ ? பயமாய் இருக்கிறது ........ வாசிப்புக்காய் தலையணை அருகிருக்கும் புத்தகத்தை தொட்டால் , அறையெங்கும் ஓலமிடுகிறது _என்னால் கோர்க்க இயலாமல் போன சொற்கள் ௬ட்டம் ௬ட்டமாக , காதடைக்கும் ஒலி கடந்து ஒளியனைத்து விழி மூடினால் , ஏதேதோ படர்வுகள் இருளுள்ளே உதறவும் முடியாமல் உணரவும் முடியாமல் ........ அறுந்தறுந்து வரும்_அந்த நினைவுநிழல்கள் அனுங்கிக்கொண்டு தற்கொலை செய்கின்றன ..... எங்கும் சகிக்க முடியாத மயான எரிதலின் வாசம் பரவ கைகளால் இறுக்கிக்கொள்கிறேன் தலையை , நிலவும் நீள் நிசப்தத்தில் அந்தரங்கமாய் அழுதுமுடிகையில் அநாதரவாய் அந்தரத்…

  21. மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா ஒளியின் நர்த்தனம்! மின்னொளியே! என்னரும் ஒளியே! உள்ளத்துக் கினிய ஒளியே! விழிகள் முத்தமிடும் ஒளியே! உலகை மூழ்க்கிடும் ஒளியே! என் கண்மணியே! நர்த்தனம் ஆடும் ஒளிக்கதிர்கள், வாழ்வின் வாலிபக் காலத்தில்! மோதி மீட்டும் ஒளிச் சிதறல், காதல் வீணையின் நாண்களை! மின்னலிடி திறக்கும் விண்ணை! மீறிக் கொண்டு ஏறி அடிக்கும் காற்று! என் கண்மணியே! வானத்தின் மின்னல் வெடிச்சிரிப்பு ஞாலத்துக்கும் அப்பால் தாவிச் செல்லும்! தமது பாய்மரத்தை விரித்துப் பட்டுப் பூச்சிகள் படகாய் மிதந்தேகும் ஒளிக் கடல் மீது! அல்லி மலர்களும், மல்லிகைப் பூக்களும் ஒளியலைகளின் சிகரத்தில்…

  22. [size=4]காலை விடிந்து கண் விழித்தால் குழந்தைக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே இருப்பான் எதிர்வீட்டுக்காரியின் கணவன் இவளைப் பார்த்தபடி[/size] [size=4]வீட்டு வாசலைக் குனிந்து வளைந்து கூட்டும்போது மாடியின் ஜன்னல் வழியே கிழட்டு விழியிரண்டு கீழே விழும்[/size] [size=4]ஏறிட்டுப் பார்த்தால் உதிர்ந்த விழிகள் உடனே சென்று ஒட்டிக் கொள்ளும்[/size] [size=4]நகரப் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்கும்போது தரிசனம் கேட்கும் வழியில் சில தடிமாடுகள்[/size] [size=4]அலுவலகம் போய் அடைந்தால் மின்விசிறி சுழல வீற்றிருக்கும் மேலதிகாரியின் கண் விசிறி சுழல… இளமைக் காகிதம் படபடக்கும்[/size] [size=4]உடன் பணியாற்றும் உத்தமக் கொக்குகளோ ஓடும…

  23. Started by suthesigan,

    தமிழ் செல்வன் வான் செல் தமிழ் சமர்களில் சிலிர்த்தான் சமாதானத்தில் சிரித்தான் நீ சிலிர்த்த போதெல்லாம் சிங்களம் மரித்தது. சிரித்த போதெல்லாம் - புறா சிறகு விரித்தது. தமிழீழத்தின் பிரமாதம் அவர் - நீ பிரதமர். சிரித்தே சிகரம் தொட்ட உத்தமர். பல களம் வென்ற போரியல் வித்தகர். தமிழீழ அரசியல் துறை - தரணி அரசியலில் துரை - உலகில் தமிழ் உள்ள வரை - தமிழா இவர் புகழ் பறை. சமாதான செயலகத்தில் சமாதான செயல் அகத்தில் - அதனால் ஆயுதம் இல்லை கரத்தில் - இன்றேல் எதிரி வீழ்ந்திருப்பான் கணத்தில் எங்கே? எங்கள் சமாதானத்தின் சமாதி. புலியும் புறாவும் சரி பாதி - புவி வல்லரசுகளின் போதி - புத்தா உன் மக்களுக்கு சமாதானத்தை போதி. …

    • 3 replies
    • 1.3k views
  24. [size=5]மவுனத்தின் மொழிபெயர்ப்பு ! [/size] சிறகு விரிச்சி பறக்குதே -மனசும் சித்தாடைக் கட்டி விரியுதே கொத்தோட பறிச்சவன் யாரடி கொண்டாட தேதியுந்தான் கூறடி. சித்திரையில் முளைத்தவனோ சினம் கொண்டே பிறந்தவனோ கத்திரியிலும் குளிரெடுக்க கற்கண்டாய் சொல் உதிர்ப்பவனோ? மலர் வனமே சென்றாலும் மணமேனோ வீசலையே- கட்டாந்தரையில் நானும் களையெடுக்கப் போனேனே.. கடுகுவெடிக்குமுன்னே காதை பொத்தி நின்றேனே களவு போனது நிஜம் தானோ கண்ணுறக்கம் மறந்ததேனோ? சொல்லுனக்காய்த் தேடித்தேடி சொப்பனத்தில் ஆழ்ந்தேனோ மவுனத்தை மொழிபெயர்க்க மல்யுத்தம் பயில்கின்றேன. மன்றாடித்திண்டாடி நானும் மயங்கித…

  25. உங்கள் வீடுகளில் 3 மணி நேர மின்வெட்டாமே! எமக்கு அந்த பிரச்சினை இல்லை! உங்கள் தெருக்களில் உள்ள குழாய்களில் நல்ல குடிநீர் வருவதில்லையாமே! எமக்கு அந்த பிரச்சினை இல்லை! உங்கள் கிராமங்களில் உள்ள தெருக்கள் குன்றும் குழியுமாமே! எமக்கு அந்த பிரச்சினை இல்லை! உங்கள் நகரங்களில் வாகன நெரிசல் அதிகமாமே! எமக்கு அந்த பிரச்சினை இல்லை! மெழுகுவர்த்தி வெளிச்சத்திற்காக 50 ரூபாய் எரியவைக்கும் ஒரு தீப்பெட்டிக்கும் , ஆறடி ஆழத்தில் தோண்டிய பின் கிடைக்கும் அரைச்சொட்டு தண்ணீருக்கும், பதுங்கு குழி அமைப்பதற்கு வேறிடமில்லாமல் கைவைக்கும் மண் பாதை ஹைவேக்களுக்கும் சைக்கிள்களையும், செல்ல நாய்க்குட்டிகளையும் ஏற்றிச்செல்லவதற்காகவாவது, இடம் தரு…

    • 0 replies
    • 807 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.