Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. [size=3] [/size] [size=3] பெண் ஒன்று கண்டேன்… மழையில் நனைந்தவொரு மான் மரத்தடியில் ஒதுங்கியதுபோல் மான்விழி மங்கையவள் மருண்டோடி மாமரத்தடியில் மறைந்து நின்றாள். கார்மேகம் அசைவது போல்- அவள் கருங்கூந்தல் ஆடியது. கண்வைத்தேன். காய் வேல்கள் பாய்ந்தவைபோல்- அவள் கரு விழிகள் என்மீது வேல்பட்டு வீழ்ந்த வேங்கைபோல் நான் ஆனேன் மீண்டும் வெருண்டசைந்து அப்; பக்கம் மெதுவாகப் பாதி விழிவைத்தேன். கோபங்கொண்டென்மீது கொதித்தெழுந்தாள். ஆடையெல்லாம் பாவை உடலழகில் ஒட்டியது அழகு மயில் நனைந்ததுபோல் அதில் நீர் கொட்டியது தோகைமயில் சிறகுவிரித்துபோல் உடல் அசைக்க துளித்துளியாய் நீர்மணிகள் என்மீது சிதறினவே. பனித்துளி பட்டுச் சிலிர்த்த மலர்போலே- நான்…

  2. அகரத்தில் தொடங்கி ஆயுத எழுத்தானது என் இனம் . சிகரத்தை தொட்டே சிங்க பரம்பரையை சிதறச்செய்தது ஒருகாலம் . மெல்லினமாய் நின்ற என் இனத்தை வல்லினமாக்கினான் ஒருவன் . பல்லினம் கொண்ட நாட்டில் ஏன் ஓரினத்திற்கு மட்டும் நாடு வேண்டும் ??? என்று கச்சைகட்டின பலதேசங்கள் . மலினப்பட்ட மானிடக்கொலை மலிவாகவே மலிந்தது என்தேசத்தில் . நீதியும் நியாயமும் இறுக மூடின தம் கண்களை . சிங்கத்திற்கு நேரடியாக வேட்டையாடும் பழக்கம் இல்லை . மறைந்திருந்தே சூது செய்து இரை கௌவ்வும் . வல்லினமாய் நின்று மெல்லினமான என் இனம் மீண்டும் வல்லினமாக , சொல்லும் செயலும் நேர் கோட்டில் வந்தாலே வல்லினமாகும் . இல்லையேல்!!!!!!!!!!!!!!!!!

    • 12 replies
    • 967 views
  3. ஆபாசமாக எழுதுகிறார் என்று கவிஞர் குட்டி ரேவதி மீது விமர்சனம் வைக்கப்படுவது புதிதல்ல. ஆனால் சமீபத்தில் நீட்சி இதழில் வெளியான இவரது “மாமத யோனி” என்ற கவிதை (!) மிக அதிக அளவில் எதிர்ப்புகளை எதிர்கொண்டிருக்கிறது. மாமத யோனி…. தன்னையே காவு கொள்ளும் மாமத யானையென உடல் வெறித்திருக்கும் யோனி எனது திசையெங்கும் எழுச்சியுற்று காமம் கிளர்ந்திருக்கும் பேருயுயிரும் அது தன் மதச்சாறு பொழிந்த காட்டை சேற்று நிலத்தை துவம்சம் செய்து திரிகிறது ஒரு காமக்கிழத்தியைப் போல சேரிப்பரத்தையர் போல….. விடலைகளின் புல்வெளிகளை அறுத்துச் சுவைக்கிறது இந்த ஒற்றை யானையின் மதம் போதும்… என் மாமத யோனியினுள்ளே ஒரு யானையைக் கொண்டிருக்கிறேன் தறிகெட்டோடும் அதன் இச்சைக்கு இந்த இரவுகள் போத…

  4. அது ஒரு நிலம்... விடுதலைக் கனிதனைச் சுவைக்க உயிர்தனைக் கருவியாக்கி உடல்தனை வித்தாக்கி வலிதனை தனதாக்கி... தசாப்தங்கள் மூன்று குருதி பாய்ச்சி செய்த விளைச்சல்தனை அறுவடை செய்யக் காத்திருந்த நேரம்...... முதுகு கூனியதுகளும் முள்ளந்தண்டு விலகியதுகளும் சகுனிகளும் சோனியாக்களும் தம் பழி தீர்க்க உயிர்ப் பலி தனை ஒரு இனம் மீதளிக்க.. விடியற் சூரியனின் திசையில் அன்றி நிலமே சிவப்பானது தமிழர் குருதி தோய்ந்து..! கற்புக்கு அரசி கண்ணகியும் சிலையாகி மெளனமாக.. சேலை வழங்கி மங்கை தன் மானம் காத்த கண்ணனும் கண் மூட சிங்கள ஓநாய்களின் துகில் உரிதல் இச்சைப் பசிக்கு அனுதினம் ஆளாகின்றார் தமிழ்ப் பெண்டிர்..! வீரத் தமிழன்…

    • 23 replies
    • 3.3k views
  5. Started by pakee,

    [size=4]என்னிடம் தான் சொல்லவில்லை நான் இறந்த பின் என் கல்லறையிலாவது ஒரு முறை எழுதுவாய இதில் உறங்குவது என் இதயம் என்று...[/size]

    • 2 replies
    • 733 views
  6. அனார் கவிதைகள் 1 கருமை முற்று முழுதாய் இருட்டி கறுத்துப்போன அமாவாசையின் ஏணியில் உன் உயரங்களுக்கு ஏறிவருகின்றன என் கால்கள் இருட்டிய மழைக் காற்று தூசிகளாலும் காய்ந்த இலைகளாலும் ஆகாயத்தை நிரப்புகிறது கருமுகில் மூட்டங்கள் மூடிய வானத்தின் கீழ் காகங்கள் மாத்திரமே பறவைகள் வீசிக்கொண்டிருக்கும் புயலுக்குள் ஒரு ஜன்னல் என என் கண்கள் திறந்துகிடக்கின்றன முதலும் முடிவுமற்ற உன் உச்சரிப்புகள் இடத்தைப் பாழ்படியவைத்து வவ்வால்களாகத் தலைகீழாய்த் தொங்குகின்றன என் உதடுகளை விரல்களைச் சுழலும் காற்றில் உதிர்த்…

    • 2 replies
    • 1.5k views
  7. [size=5]" நீ ஒரு பொய்க்காரி "[/size] கரி நாக்கா எனக்கு...? கண்ணாடியில்தான் பார்க்கவேண்டும்! அதனால்தானோ என்னவோ... முதன்முதலாய் உனக்கெழுதிய கவிதையின் பெயரும் அதுவாய்த்தான் இருந்தது! ‘ஏனடி இப்படிச் செய்தாய்?’ என கேட்கத்துடிக்கிற என் எண்ணத்தை... கொஞ்சம் அடக்கி வைத்திருக்கின்றேன்! உன் மனதைத்தொட்டு... பின் உன்னைத்தொட்ட என் ஸ்பரிஷங்களின் உணர்வுகள் அடங்குமுன்னே, என் ஒட்டுமொத்த உணர்வுகளையும் வலிகளில் ஒருமிக்க வைத்ததேனடி? நான் வாழ்ந்த உலகத்தின்... ஒரேயொரு தேவதையாய் நீ இருந்தாய்! என் அதிஅன்புக்குரியவளாய்... நீதான் இருந்தாய்! இன்று எங்கிருக்கிறாயடி என் தேவதையே?? காதலின் குணமே இதுதானா? - இல்லை காதலிப்பவர் மனம் இதுதானா?? என…

  8. மொழியென்று ஒன்றாய் திரண்டாலே...! ------------------------------------ தமிழரின் உடல்கள் அடுக்கப்பட்டன நிலத்தின் இருப்பைத் தக்க வைக்க ஒற்றுமை மணி சிதறியதால் ஒற்றர்களாகப் பலர் நுளைந்தார் சத்தியம் காப்பதே உறுதியென சளைக்காது உடல்களால் எல்லையிட்டார் சத்தியம் வெல்வது உறுதியெனச் சண்டாளர் கணித்தார் கவனமுடன் பட்டினியாலும் மடியவில்லை பரிசுகளாலும் வீழவில்லை உறவாடி வீழ்த்துதல் நல்லதென உலகெங்குமிருந்து உள்நுளைந்தே அரசொன்றை வீழ்திய மகிழ்வினிலே நரந்தின்னும் நாடுகளானதன்றோ நாடுகள் வாழ நாம் சாகும் சூனியமான சூழலன்றோ சூனியமான சூழலை நாம் எம் சாதுரியத்தால் மாற்றிடவே மதமென்று நின்றால் தோல்விகளே மொழியென்று ஒன்றாய் திரண்டாலே உலகெங்கள் உரிமைக்கு வழிவிட…

    • 8 replies
    • 736 views
  9. அலைகள் தொடும் கரையினிலே கரை தொடும் அலையினை ரசித்தபடி கற்பனை அலைகளை மனமெனும் கரையினில் மோத விட்டு காத்திருந்தாள் அவனுக்காய்... ஒருதலைக்காதலாய் வளர்த்திட்ட அவள் முடிவை அவனிடம் சொல்லிட அழைத்திட்டாள் அவனை அழைப்பை ஏற்ற அவனுக்காய் காத்திருந்தாள் கடற்கரையினிலே....... எதிர்கால வாழக்கையினை ஏணிபோல் ஏற்றிட இவன் வேண்டும் என்றெண்ணியவளாய் திரும்பினாள் எதிரினிலே அவன் நின்றான்..... அவனை பார்த்தவுடன் அவசரமாய் எழுந்து நின்றாள் ஆவலுடன் அவன் நலம் அறிந்து அமரும்படி அழைத்திட்டாள்...... இடைவெளியுடன் இருவரும் இரு கல்லில் அமர்ந்திட - அவன் இரு கண்கள் இயற்கையின் விந்தையை ரசித்திட இவள் பார்வை அவனை நோக்கி ஏக்கத்துடன்.... ஆறு வருடங்க…

  10. Started by துளசி,

    மெளனயாய் இருந்த என் அழைபேசி நீண்ட காலத்தின் பின் சலசலக்க தொடங்கியது இன்று தொலை தூரத்தில் இருந்து ஓர் அழைப்பு, அன்பாய் நலன் விசாரிப்பு உரிமையாய் ஒரு அதட்டல் கபடமில்லா நகைச்சுவைகள் பேதமின்றிய நாட்டு நடப்பு விவாதம் செல்லமாய் சிறு சண்டைகள் வாழ்வின் எதிர்காலம் கடந்த பசுமையான நினைவுகள் கரைந்து போன கவலைகள் தொடரும் இன்பங்கள் என இன்றும் தொடர்ந்தது நம் நட்பின் இரு முனைகளிலும்..... தேசங்கள் பல தாண்டி உருவங்கள் மாறிச் சென்றாலும் உயிர் பெற்ற உண்மை நட்புக்கள் என்றும் மரணிப்பதில்லை.. http://www.paristamil.com/tamilnews/view-news-MjA5ODg0NzUy.htm

  11. அழவில்லை உடைகிறது மனது விவாகரத்து உயிர் அறுபட்ட கணம் மரணம் இறப்பை நினையாது பிறப்பில் சிரிக்கும் மனிதன் கூர்ப்பு மற்றையவர் தோல்வியை நினையாது தன்வெற்றியை கொண்டாடல் தற்புகழ்ச்சி நாய் கிழித்த உடுப்பு புது டிசைன்னாகிறது நாகரீகம் உடைத்த அரிசி அரைக்கப்படுகிறது போருக்குப் பிந்திய போர் வன்னி (2010) உலக முதல் இராஜதந்திரி நரியாரா?நாரதரா? மனக்குழப்பம் மிதந்தவன் தப்பினான் தாண்டவன் கூழ்முட்டை இனத்தின் துகிலுரிந்து தனக்கு சுருக்கிட்டான் அடிவருடி ஏழைக்குழந்தைகளின் எதிர்காலத்திற்காய் எரிகிறது குப்பிவிளக்கு தண்ணியிலிருந்து தங்கம் வரை தங்கியிருக்கிறது விளம்பரத்தில் …

  12. Started by Nellaiyan,

    ... சுட்டது ...

  13. மறக்க முடியுமா..................? நாற்றிசையும் ஆலயமணி ஒலித்த நாற்புறமும் கடல் சூழ்ந்த ஞானியர் ஐவர் உதித்த நல்லதோர் ஊராம் எம் காவலூர் போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆண்ட ஊர் - அதில் அழகிய கடற்கோட்டையையும் கொண்டது எம்மூர் கலை வளர்ந்து தலை சிறந்து தனித்துவமாய் இருந்தது எம்மூர் மாணவிகள் எம்மனதில் இருக்கவில்லை சஞ்சலம் மான் குட்டிகள் போல் துள்ளித்திரிந்தோம் மகிழ்வுடன் எம் மகிழ்வழிக்க வந்த மாற்றான் படை பறித்தது - பல உயிர்களை அழித்தது - உடமைகளை இழந்தோம் - நண்பர்களை பிரிந்தோம் - சொந்தங்களை அகதியானோம் -அந்நிய தேசத்தில் சிறப்பாக விளங்கிய எம்மூர் சீர்கெட்டுப்போனதேனோ சிறகுடைந்த பறவைகளாய் திக்கெட்டும் வாழ்வதேனோ பசுமை…

    • 37 replies
    • 4.6k views
  14. அபகரிக்கப்பட்ட சிட்டுக்குருவியின் பூமியில் குருதி வார்த்துக் குருதி வார்த்து வளர்க்கப்பட்ட பெருமரங்களின் அகண்ட நீழலின்கீழ் கழுத்தில் ரை சுருக்கிக்கட்டியபடி ஞானசம்பத்தக் கூத்தாடிய கவிஞர்களெல்லாம் காணாமற் போயிருந்தனர் கொஞ்சக் காலமாய் கல்லெறி விழுந்து கலைந்தோடிய இலையான்கள்போல் இவர்களன்றோடிய நாட்கள் நினைவிருக்கிறது நன்றாயின்னமும் சிட்டுக் குருவிக்கு. மேற்குத் திசையில் வெடிச்சத்தம் கேட்ட மேதினத் தோர்நாள் தான் அது. சஞ்சீவி இலைகளில் தோரணங்கட்டி அகண்ட மர நிழலில் கடை பரப்பி கதை கவிதை ஒப்புவித்த காலங்கள் போட்டது போட்டபடி கிடக்க, தலைதெறிக்க ஓடிப்போய் வலுத்தவர் வாலில் நூலேணி பிடித்தேறிய காலங்கள் பொற்காலமல்லவோ உமக்கு ? வலுத்தவர் மகிழ…

  15. [size=4][size=6]எங்கள் தோழனை உயிர்காத்துத் தாருங்கள்…..![/size] Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Wednesday, September 5, 2012[/size] [size=4]காலம் எழுதிய வெற்றிகளில் நெருப்பாய் இயங்கிய வரலாறு. இருளும் கடினமும் இயற்கையின் சீற்றமும் அசையாத இரும்பின் இருதயம் உனக்காய் படைக்கப்பட்டிருந்தது. ஒருகாலம் உனக்கான விலை உலகத்தாலும் கொடுக்க முடியாத பெறுமதி. கையுக்குள் வளர்த்து கடமைக்கு விடைதந்த காவியத்தின் கண்ணில் தெரிந்த ஒளியின் வெளியில் ஓர்மத்தை விதைத்து விடைபெற்ற வீரன். ‘செயலின் பின் சொல்’ அதிகாரியாய் , பணியாளனாய் இலட்சியப் போராளியாய் – நீ இயங்கிய தளங்கள் தந்த அனுபவங்களிலிருந்து இன்னோர் உலகின் மூலத்தைக் கண்ட முழுமுதலான். தடைகளகற்றித் தனித…

  16. இதைப் பார்க்கும்போது வன்னியில் வாடிக்கொண்டிருக்கும் எம் குழந்தைகளின் நினைவுகள் வந்துபோயின...பின் ஒருகணம் வெளிநாட்டில் எம் உறவுகளின் பிள்ளைகளையும் நினைத்தேன்...கண்ணீர்களுக்குள் என்னால் கவிதைகளை தேடிக்கண்டுபிடிக்க இயலவில்லை..ஆற்றாமையில் மனம் துடிக்கிறது... இந்தப்படம் உங்கள் மனங்களுக்குள் தூண்டிவிடும் உணர்வுகளை கவிதை ஆக்குங்கள்...

  17. பாலி ஆறு ஏன் அடிமையாக்கப்பட்டது? தீபச்செல்வன் மணற்ப்படுக்கைகளில் எழுதப்பட்டு விதைபட்ட உன் கவிதைகளும் கதைகளும் மூடுண்டு கிடக்கின்றன நண்பனே! பாலி ஆறு எப்படி இருக்கிறது? என்ற உனது முதலாவது வார்த்தையிலேயே தாங்க முடியாத என் பதில்கள் உதிர்கின்றன நமக்கொரு பெரிய கனவு இருந்தென்பதை வரலாற்றில் பரப்பிச் செல்லும் பாலியாறு என்ன தவறிழைத்தது? நண்பனே நீ கண்ட கரையினில் பெண்கள் யாருமில்லை வீழ்த்தும் கைகளை மீறி நணல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன மீன்கள் வெளியில் வருவதுமில்லை துள்ளுவதுமில்லை யாருடைய கால்த்தடங்களுமில்லாத பாலி ஆற்றங்கரை இருண்டு கிடக்கிறது ஆற்றங்கரை மரங்கள் சலசலத்து மண்ணின் கவிதைகளை பாடிக் கொண்டேயிருக்கின்றன. குருதியை நிலத…

    • 5 replies
    • 1.5k views
  18. மனுஷ்ய புத்திரன் இரங்கல் கூட்டம் இரங்கல் கூட்டத்தில் விளக்குகள் மிகவும் பிரகாசமாக இருந்தன சொல்வதற்கு ஏராளம் இருந்தன உண்மைகள் ஏராளம் இருந்தன பொய்கள் இரண்டுக்கும் இடையிலும் கொஞ்சம் இருந்தன இறந்தவனை எப்படித் தொட்டுப் பார்ப்பது என்று ஒருவருக்குமே தெரியவில்லை ஒவ்வொருவராக முன் வந்தார்கள் ஒருவர் அவனை தண்ணீராக மாற்றிக்காட்டினார் இன்னொருவர் அவனை ஒரு புகையாக மாற்றினார் வேறொருவர் ஒரு காலித் தொப்பியிலிருந்து அவனை ஒரு புறாவாக பறக்கச் செய்தார் யாரோ ஒருவர் சிகரெட் லைட்டரில் எரியும் கணநேர ஜுவாலையாக மாற்றினார் அவனுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் வந்தார் மரணம் ஒரு மலரை காகித மலராக்கி அமரத்துவம் அடையச் செய்துவிட்டது என…

  19. Started by akootha,

    [size=4]அஞ்சாதா சிங்கமென்றும்[/size] [size=3][size=4]அன்றெடுத்த தங்கமென்றும் பிஞ்சான நெஞ்சினர் முன் பேதையர்முன் ஏழையர் முன் நெஞ்சாரப் பொய்யுரைத்து தன்சாதி தன்குடும்பம் தான்வாழ‌ தனியிடத்து பஞ்சாங்கம் பார்த்திருக்கும் பண்புடையான் கவிஞ‌னெனில் நானோ கவிஞ‌னில்லை என்பாட்டும் கவிதையல்ல‌. பகுத்தறிவை ஊர்க்குரைத்து பணத்தறிவை தனக்குவைத்து தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும் சோடனைகள் செய்து வைத்து நகத்து நுனி உண்மையின்றி நாள்முழுதும் வேடமிட்டு மடத்தில் உள்ள சாமிபோல் மாமாய‌ கதையுரைத்து வகுத்துண‌ரும் வழியறியா மானிடத்து தலைவரென்று பிழைத்திருக்கும் ஆண்மையில்லா பேதையனே கவிஞ‌னெனில் நானோ கவிஞ‌னில்லை[/size][/size] ******** **********************…

    • 11 replies
    • 1.8k views
  20. [size=5]"பாவம் அந்தக் காதல்"[/size] http://static-p2.photoxpress.com/jpg/00/15/42/73/400_F_15427365_yloHeMKoTK9B0Nl9jb4Qw2nhYZpwfzaU_PXP.jpg எதேச்சையான சந்திப்புக்கள்! தன்னிச்சையான எண்ணங்கள்! தவிர்க்க இயலாமற்போன பார்வைகள்! சொல்லத் தயங்கிய வார்த்தைகள்! தூக்கம் மறந்த இரவுகள்! தலையணை துணையான பொழுதுகள்! நூலிழை இடைவெளிக்குள்... சிக்கித்தவித்த இருமனங்கள்! பிரியப்போகும் தருணத்தில்... வெடித்துவந்த அழுகையோடு, சொல்லிக்கொண்ட காதல்! பின் சுற்றிச் சுழன்ற நினைவுகள்! ஆழமாய் அழகாய் உணர்ந்த காதல், இப்பொழுது..........பிரிகிறது! காரணங்கள் தெரியாமல், காரியமும் புரியாமல், சொல்லாமல் கொள்ளாமல் மறைகிறது! காதல் ஒருநாளும் தோற்றுப்போவதில்லை…

  21. நந்திக்கடல் – 2012 ஆவணி : நிலாந்தன் மிஞ்சியிருப்பது இரும்பும் சாம்பலுமே, மாமிசத்தாலானதும் சுவாசிப்பதுமாகிய அனைத்தையும் சுட்டெரித்த பின் தங்கத்தாலானதும் துருப்பிடிக்காததுமாகிய அனைத்தையும் கவர்ந்து சென்றுவிட்டார்கள். மாமிசத்தாலாகாததும் துருப்பிடிக்கக் கூடியதுமாகிய இரும்பையெல்லாம் சேகரித்து உப்புக்களியில்குவித்து வைத்திருக்கிறார்கள். உப்புக்களியில் இருபோக மழையில் துருவேறிக் கிடக்கிறது கனவு. காடுகளின் சூரியன் நந்திக் கடலில் உருகி வீழ்கிறான். கானாங்கோழி காணாமற்போனவரின் கடைசிச் சொற்களை அடைகாத்திருக்கிறது. நிலாந்தன், 2012 – ஆவணி, யாழ…

  22. [size=5][size=4] இனம் தின்னும் ராஜபக்சே................. [/size][/size] [size=4]சொந்த நாய்களுக்குச் சொத்தெழுதி வைக்கும் தேசங்களே! ஓர் இனமே நிலமிழந்து நிற்கிறதே நிலம் மீட்டுத் தாருங்கள் பூனையொன்று காய்ச்சல் கண்டால் மெர்சிடீஸ் கார் ஏற்றி மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே! ஈழத்து உப்பங்கழியில் மரணத்தை தொட்டு மனித குலம் நிற்கிறதே! மனம் இரங்கி வாருங்கள்! வற்றிய குளத்தில் செத்துக் கிடக்கும் வாளை மீனைப்போல் உமிழ்நீர் வற்றிய வாயில் ஒட்டிக்கிடக்கும் உள்நோக்கோடு ரொட்டி ரொட்டியென்று கைநீட்டிடும் சிறுவர்க்குக் கைகொடுக்க வாருங்கள்! தமிழச்சிகளின் மானக்குழிகளில் துப்பாக்கி ஊன்றித் துளைக்கும் சிங்கள வெறிக…

    • 21 replies
    • 9.9k views
  23. Started by akootha,

    [size=3][size=4]அன்பு மகனுக்கு,[/size][/size] [size=3][size=4]உன் தந்தை எழுதுவது, இது நீண்ட கடிதம்தான் ஆனால்,[/size][/size] [size=3][size=4]இதுவே இறுதியாகலாம்.[/size][/size] [size=3][size=4]ஏனெனில் உன் நினைவுகள் நெஞ்சடைக்க‌ இருமுறை சுவாசம் இழந்துவிட்டேன்.[/size][/size] [size=3][size=4]உனக்கு நேரமில்லை எனக்குத் தெரியும். முடியும்போது முடிந்தால் படி.[/size][/size] [size=3][size=4]இந்த‌ நிலவினைப் பார்க்கும் போதெல்லாம் உன் ஞாபகம்தான்.[/size][/size] [size=3][size=4]மேலே தெரியும் உத்தரத்து வெண்ணிலவும், கயிற்றுக் கட்டிலும், நான் சொன்ன‌ நட்சத்திரக் கதைகளும், உனக்கு நினைவிருக்குமோ என்னவோ...[/size][/size] [size=3]…

  24. Started by akootha,

    [size=4]பிட்சை வரங்கேட்டேன் தாயிடம்[/size] [size=3][size=4]இச்சையுடன் என்கனவில் வந்தாளே![/size][/size] [size=3][size=4]லச்சையுடன் அவள்முன் பணிந்து [/size][/size] [size=3][size=4]அச்சமுடன் வரமொன்றுக் கேட்டேனே![/size][/size] [size=3][size=4]நுட்பமுடன் என்மனக் கருத்தறிந்த [/size][/size] [size=3][size=4]தட்சன்மகள் தாட்சியாயினி முறுவலிக்க [/size][/size] [size=3][size=4]"குப்பைத் தொட்டி"யாய் நான்மாற[/size][/size] [size=3][size=4]சப்பை வரத்தில் சலிப்புற்றாளே! [/size][/size] [size=3][size=4]ஏனிந்த ஏமாறும் எள்ளினகைக்[/size][/size] [size=3][size=4]கனியும் வரமெனக் கேட்டாளே? [/size][/size] [size=3][size=4]நானிந்த உலகில் நாணிக் [/size][/size] [size=3][size…

    • 0 replies
    • 698 views
  25. பறவை ஒன்றை வரையத் துவங்கினேன் வரைந்து முடிந்ததும் அது பறந்து விட்டது மீண்டும் ஒரு பறவையை வரைந்தேன் அதுவும் பறந்து விட்டது நான் வரைந்துகொண்டே இருந்தேன் அவைகள் பறந்து கொண்டே இருந்தன இறுதியாக மரம் ஒன்றை வரைந்து முடித்தேன் பறந்து போன அத்தனை பறவைகளும் வந்து அமர்ந்து கொண்டன........... நன்றி: தென் பாண்டியன் கவிதை ஒன்று இந்த டிசெம்பர் மாத 'உயிரெழுத்து' பத்திரிகையில். http://rprajanayahem.blogspot.fr/2012/08/blog-post_29.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.