Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உன் தாய் தந்தையின் அருமை நீ வளரும் பொது தெரியாது உன் பிள்ளையை வளர்க்கும் போது தான் தெரியும்...

    • 5 replies
    • 1.3k views
  2. உன்னை என் ஞாபகப் பிரதேசத்தில் இருந்து அழிக்க முயற்சித்தவர்கள் அழிக்க முடியாமல் தோற்றுப் போய் விழிக்கிறார்கள் ஏனென்றால் நீ என் இதயத்தில் READ ONLY MEMORY யாக அல்லவா பதிவாகி இருக்கிறாய்! பவர்கட்! கொஞ்சம் சிரி...மெழுகுவர்த்தியை தேட வெளிச்சம் வேண்டும். என் இதயத்தை திருடிய குற்றத்திற்காக என் மனச் சிறையில் உன்னை ஆயுள் கைதியாக்க சம்மன் அனுப்புகிறேன் தயவு செய்து முன் ஜாமீன் கேட்டு விடாதே! எங்கேயோ,எப்பவோ படித்து சுவைத்தது...சகாறா அக்கா எழுதினது யார் எனக் கேட்டு அடிக்க வரக் கூடாது

    • 4 replies
    • 1.1k views
  3. Started by pakee,

    இழந்து விட்டேன் என்கிறேன் இல்லை இல்லை இன்னும் கொஞ்சம் இருக்கிறது என்கின்றது(நம்பிக்கை)...

    • 0 replies
    • 618 views
  4. Started by putthan,

    பண்டித எழுத்தாளர்கள் பழித்தனர் பாமரனின் எண்ணங்களின் எழுத்துக்களை தலித் இலக்கியங்கள் தரம் குறைந்தவை என்றனர் புரட்சி பண்டிதர்கள் புத்தக புரட்சியே புனித புரட்சி என்று புலியெதிர்ப்பு புராணம் வடித்தனர் ஆயுதம் ஏந்தி அகிம்சையாக போராடி அன்னியனை அழிக்காதபடியால் தான் அர்சுடன் அண்டிப் பிழைக்கின்றார்களாம் அன்றைய போராளிகள் முதலுதவி பயிற்சி ஒருநாள் முன்னரங்கம் இருநாள் முடியாது தொடர‌ பலநாள் என‌ முடிவுடன் புறப்பட்டார்கள் முஸ்லிம் நாடு. முஸ்லிம் நண்பர்களுடனும் சில நாள் கடத்தல் பண்டிதர்களின் புண்ணியதில் கடல் கடந்தனர் கன‌டாவுக்கு கண்டவன் எல்லாம் கனடாவிலாம் கழகதார் மட்டும் கணவாங்களாம்.. இலக்கியம் எம்மவர்க்கு…

    • 10 replies
    • 1.4k views
  5. மூன்று வருடங்களுக்கு முன்பாக சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்க, உலக மக்களின் கண்களுக்கு முன், அனைத்து வேதங்களும் தெய்வங்களும் சாட்சியாக இருக்கையில் முள்ளிவாய்க்காலில் வைத்து படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும். போராளிகளுக்கும் கண்ணீர் அஞ்சலிகளும் வீர வணக்கங்களும் விடுதலை பெருந்தீயில் பேரியக்கமாய் முப்பத்தெட்டு ஆண்டுகளாய் சுடர் விட்டு எரிந்த தியாக விளக்குகளே பற்றி எரியும் பெரு நெருப்பை நெஞ்சின் அறைகளில் தாங்கி உயிரையே எண்ணையாக கொடுத்த பெரு மக்களே உங்கள் காலடித்தடங்களை எமக்குள் இறக்கி கைகூப்பி மண்டியிட்டு தொழுது வணங்குகின்றோம் வீர வணக்கங்கள் !! : யாழ் இணையம் மே, 2012

  6. வா மச்சான் வா மச்சான் உனக்கு கவலை எதுக்குடா காதல் என்பது மூன்று எழுத்து வாழ்க்கை என்பது நான்கு எழுத்து காதலை விட வாழ்க்கைதான்டா பெருசுட நிம்மதி உனக்கு நிச்சயம் கிடைக்கும்ட தோல்வியும் நமக்கு தோழன்ட வருந்தாதே நண்பா நினைச்சவங்க கிடைச்ச காதலிட இல்லை என்றால் வாழ்க்கை காதலிட காதல் தோல்வி மரணம் வேண்டாம்ட லட்சிய வெற்றிய குறி வைச்சட நிச்சயம் நமக்கு இருக்குட வரலாறு வாழ்க்கை என்றும் உந்தன் கையில்ட...

    • 2 replies
    • 786 views
  7. Started by sudalai maadan,

    ஒவ்வொரு முறை நான் பிறக்கும் போதும் நீ எனக்காக ஒவ்வொரு முறையும் இறக்குறாய் , கட்டத்தில் அடைக்க முடிய வில்லை உன் கரை கடந்த அன்பை வார்த்தைகளை தேடி வலு விழந்து போகிறது மனசு உன் ஏக்கங்களே எனது காபரன்களாய் எக்காளிக்கும் கூட்டங்களை தாண்டி வளர்கின்றேன் உன்னாலே . தூக்கம் தொலைத்த இரவுகளில் விம்மி வெடிக்கிறது மனசு விபரம் தெரிந்த நாளில் இருந்து வடிவாக பார்த்ததில்லை எந்நாளும் கடமையில் நீ ஒரு கர்ம வீரி , வீட்டையே உனது உலகமாக்கி யுகம்களை கணமாக்கும் சாமர்த்தியசாலி . இருபத்தியிரண்டு வருடங்கள் இருக்கவில்லை உன்னருகில் , காலங்களே பாரங்களாகி கனக்கிறது இதயம் , இருக்கும் பொது யாருக்கும் தெரிவதில்லை அருமை காலமும் என் வாழ்க…

  8. எரிகற்கள் விழுந்தழிந்த பூநிலத்தின், மீதியான மூத்த குடிகள் நாம்! எறிகணைகள் விழுந்த நிலத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட அகதிகள் நாம்! விட்டகுறை தொட்டகுறை முடிக்கவென... நல்லபடி விடியுமொரு நாளிலென... நம்பியிருந்தோம் நாம்! இழப்புகளும் வலிகளும் எமைத்துரத்த... ஓடியோடியே களைத்தோம் நாம்! ஒரு கையில் கைக்குழந்தை... மறுகைதோளில் அதன் தாயின் உடலென எத்தனை வலிகளை சுமந்தோம் நாம்! கால்வாசி புலமக்கள் மட்டும்... வீடு பெயர்ந்து வீதியில் போராட, நடுக்காட்டில் நாதியற்று ஒளிந்தோம் நாம்! பாதி உலகம் பகலோடு பார்த்திருக்க... பகையாலே பரிதவித்து அழிந்தோம் நாம்! மிச்சம் மீதியின்றி சிந்திய குருதியின்... செவ்வினமான மிச்சசொச்சம் ஆனோம் நாம்! சில இரவு பல பகலில்... வ…

    • 8 replies
    • 1.8k views
  9. Started by pakee,

    எல்லா அம்மாவிற்கும் தெரியும் தன் மகனிற்கு எது பிடிக்கும் என்று, ஆனால் 99% மகனிற்கு தெரியாது தன் அம்மாவிற்கு எது பிடிக்கும் என்று...

    • 12 replies
    • 1.6k views
  10. பள்ளி என்னும் மூன்றெழுத்தில் - கூடி கல்வி என்னும் மூன்றெழுத்தில்- சேர்ந்து அன்பு என்னும் மூன்றெழுத்தில்- இணைந்து பிரிவு என்னும் மூன்றெழுத்தில்- தவிக்கின்றோம்...

    • 16 replies
    • 8.9k views
  11. காரணத்தையேனும் சொல்லிவிட்டு மௌனம் கொள் Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Thursday, May 10, 2012 04.2000...., ஆனையிறவு வெற்றி மேடையில் சந்தித்தோம் அரியதொரு பொக்கிசத்தை அந்த நாள் தந்தது அது உனது ஆழுமையின் வெளி.... பெயருக்கு ஏற்றாற்போல் உனது எண்ணங்களும் பிரகாசமாக மேதைகளை வென்ற தமிழின் வனப்பு உனது திறனாய்.... பேச்சுக்களும் எழுத்துக்களுமே எழுச்சியாக வெற்றுப் பேச்சாளர்களால் நிறைந்த மேடையின் நிறத்தையும் குணத்தையும் மாற்றியவன் நீ..... பழமைவாதிகளாலும் பொறாமையாளர்களாலம் குற்றப்பட்ட உனது திறனை சிரித்தபடி சமாளித்துச் சிகரங்கள் தொட்டவன் நீ.... சமாதான காலக்கதவுகள் திறக்க ஊர்காணப்போவதாய் விடைபெற்று போராளியாய் ஆனவன்.... போ…

    • 7 replies
    • 1.7k views
  12. காலமோ கண்ணீரோ வலிகளை போக்கவில்லை _மாறாக தாங்கவியலா வெறுமைகளை விதைத்துவிட்டது .... உருவான தேசத்தை உருக்குலைத்த உலகஒழுக்கு, உருவாக்கிய வரலாற்றை இரத்தக்கறைசுமந்தவதன் பக்கங்களை ஏதுமறியா அப்பாவிகளின் உயிர்எழுத்துக்களால் நிரப்பிக்கொண்டது ! குளங்களும் வாய்க்கால்களும் நெல்லாடும் வயல்களும் நெடுவென எழுந்த மரங்களும் புள்ளிக்குயில்களும் மயில்களும் புல்லினங்களும் இன்றில்லாமல்போக_ வன்னிமண் சுமந்துநிற்கிறது செத்தழிந்த செந்தமிழன் மேனியை ! வடுக்களை தடவிகொள்கிறோம்.......! அடுக்கடுக்காய் விழுந்த எறிகணைகளை, அடுத்தடுத்து விழுந்த உறவுகளை, அங்கங்கள் அறுந்துதொங்க அவலக்குரல்எழுப்பி மடியில் உயிர்நீத்த மகவுகளை, மீட்பென்று சொல்லிவந்…

  13. http://youtu.be/qDWMxNLuP8o

  14. அன்பின் சம்பந்த சுமந்திர சிறீலங்கா தேச மைந்தர்களே..! சிங்கக் கொடி தூக்கி எம் சினம் தனித்த சிங்கங்களே...! அன்னை சிறீலங்கா மாதா உங்கள் கடவுளாம் காளியின் மறுபிறப்பே..! அவள் தம் வாகனமே எங்கள் கொடி நடுவே நிற்கும் சிங்கம். அவள் கரமிரு ஆயுதமே எம் சிங்கம் ஏந்திய வாள்..! சிரம் தாழ்த்தி ஏற்றோம்... உம்மிருவர் சிங்கக் கொடிதனைப் பற்றிய சீரிய விளக்கங்களை..! வன்னிப் போரும் முள்ளிவாய்க்காலும் வதம்...! அசுர வதம்...! தமிழீழம் என்ற வேண்டா வேள்வி செய்த அசுரர்கள் அழிக்க நாம் செய்த வதம்..! வதம் முடிந்து ஆண்டுகள் 3 ஆகின்ற இப் பொன்னான வேளையில்... தமிழீழம் மறுக்கும் தமிழ் தேசியம் மறந்த.. எம் இனிய தமிழ் பேசும் சிங்கங்கள…

  15. பொய்மையும் கயமையும் கூடிக் கொக்கரிக்க , ஒட்டிய வயிறும் பஞ்சடைத்த கண்களும், உங்களை நோக்கியே ............. நீங்கள் சொல்கின்ற ஒரு இசங்களும் என்செவியில் எட்டவேயில்லை . நீங்கள் உல்லாசமாய் உங்கிருக்க , குடும்பமாய் உறுமினோம் . ஊழிக்காற்றில் உக்கியே போனோம் . எச்சங்களாய் நாங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக , இருப்பதற்கு வக்கற்றவர்களாக இரைப்பையை நிரப்ப கருப்பையை விற்கவே துணிந்தோம் . முன்பு நான் உறுமிய புலி . இன்று நான் சருகு புலி . உங்கள் உல்லாசத்தில் ஒருதுளி சருகுபுலிகளுக்கு வந்தால் , நாங்கள் கருப்பையையும் விக்கமாட்டோம் ...... எங்களை நாங்கள் எரிக்கவும் மாட்டோம் ...........

  16. "இடர்கள் தந்தபோதும்...,எம் இலட்சிய தாகம் தீராது......" கோயில் மணி ஓசையிலும், குயில்களின் இன்னிசையிலும், மங்கள வாத்திய இசையிலும் , மலர்ந்திடும் எங்கள் காலை...., இன்று..., கூவி வரும் செல்(பீரங்கி) ஓசையிலும், பறை எழுப்பும் அவல வசையிலும் , ஐயோ ...என்ற அலறலிலும், விடிகிறது எங்கள் காலை. யுத்தத்தின் வடுக்கள்.... அடுத்தவன் கை ஒன்றை எடுத்து தன் கையோ ?என ஏங்கும் ஒருவன் அங்கே...! பிணமாய் கிடக்கும் ஒருவனுக்கு ......, அவன் குடலே மாலையாய் கழுத்தில் அங்கே...! தமிழன் அல்லவா.....? இறந்தும் அவன் பறவைகளுக்கு தீனி தருகின்றான். பிணக்குவியல் அகற்ற அந்த ஊரில் நாதியில்லை...., நாய்களே நன்றிக்கடன் கழிப்பதாய் இறுதிக்கடன் செய்கின்றன. "இந்தா பிள்ள …

  17. எப்படி நான் தாங்கிடுவேன்... அப்பன் அடித்தாலே ஆவென்று அலறுபவன் எப்பன் நோவெனிலும் ஏலாமல் கிடந்தமவன் முற்றம் முழுதும்-பிணமாகிச் சுற்றங்கள் செத்த கதை எப்படி நான் தாங்கிடுவேன் ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே... கோழி அடைகிடக்க குஞ்சுக்காய் தவித்தமகன் கேவி அழமுதலே ஊரை கூவி அழைத்த மகன் கத்தி அழ யாருமற்று-சொந்தங்கள் கொத்துக்கொத்தாய் செத்தகதை எப்படி நான் தாங்கிடுவேன் ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே.... விக்கல் எடுத்தாலே கெக்கலித்து நின்றமவன் முள்ளுத் தைத்தாலே பாயில் மூன்று நாள் படுத்த மவன் செல்லுக்குத் துண்டுகளாய்-என்னினம் சிதறிப் பிளந்த கதை எப்படி நான் தாங்கிடுவேன் ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே.... நெருப்புச் சுட்டாலே நேர்த்திக்கடன் …

    • 11 replies
    • 1.7k views
  18. வாழ்வு சூறையாடப்பட்ட தேசத்தில் இருந்து வந்த சுடலைக் குருவி எனக்கு கதை சொல்லிற்று தம் நிலங்களில் ஊழித்தாண்டவம் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆயினவாம் மேய்ப்பனும் அவனது ஆடுகளும் அறுக்கப்பட்ட நிலத்தில் அறுக்கப்படா உயிர்களின் கேவல்கள் இன்னும் அடங்கவில்லையாம் பின்னிரவில் கதவுகள் தோறும் கடக்கும் இராணுவ சிப்பாயின் சப்பாத்துகளில் ஒவ்வொரு முறையும் மரணம் வந்து குந்தி இருந்து கணக்கெடுத்து போகுமாம் ஊரெல்லாம் அடங்கிய பின் உடைக்கப்பட்ட கல்லறைகளிலிருந்து உழுதப்பட்ட உடலங்களின் பெருமூச்சு பெரும் காற்றாய் வீசுமாம் தம் ஆத்துமா இளைப்பாற ஒரு சிறு விளக்குத்தானும் இல்லையென அழுது அரற்றுமாம் மம்மல் அப்பிய பொழுதொன்றில் மாட்டு வண…

  19. இதமான முத்தம் இம்சையாகப் போனதேன் ? இனிமையான பொழுதுகள் இன்று இம்சையாகப் போனதேன் ? எத்தனை எதிர்ப்புகள் வந்தது எம்மை நோக்கி இலகுவாய் உடைத்தோமே ஒன்றாக நானும் நீயும் அப்போது இம்சை இல்லையே எம்மிடம் எதெற்கும் துணிந்த என்னை எண்ணையாக்கியவள் நீ இன்று சொல்லால் இறுக வைத்தாயே ஒருவேளை உன்னைக் கோர்க்க நான் தகுதி இல்லாத நூலோ ??????????????

  20. கடவுளே, நாம் பறந்தால் எம்மை கழுகாக்கு, நாம் நீந்தினால் எம்மை சுறாவாக்கு, நாம் கடித்தால் எம்மை முதலையாக்கு, நாம் பிராண்டினால் எம்மை கரடியாக்கு, நாம் சிந்தித்தால் எம்மை நரியாக்கு, நாம் ஓடினால் எம்மை சிறுத்தையாக்கு, நாம் சீறினால் எம்மை புலியாக்கு, நாம் கொத்தினால் எம்மை நாகமாக்கு, நாம் மிதித்தால் எம்மை யானையாக்கு, நாம் முட்டினால் எம்மை எருமையாக்கு, நாம் பிறந்தால் எம்மை தமிழராக்காதே! நன்றி, விடை பெறுகிறேன். குளவி பி. கு: யாழ் கள உறவுகளுக்கு, குளவி கலைந்தாலும், யாழ் கூட்டை சுற்றி சுற்றி பார்க்க வரும். பி.பி.கு: குளவி குழவியாக குலவி வைத்து கலையவில்லை. தமிழக வார இதழில் ஆறு வருடங்கள் ஈசனாக இருந்து, ம…

    • 29 replies
    • 2.8k views
  21. முன்னொரு வேளை முகத்துவாரம் தனில் முத்துப் பல்லக்கில் - சிங்களம் முதுகில் சுமக்க முடிந்தது "நற்காரியம்" சொல்லி.. முக்கியம் பெற்றனர் நம் தமிழர்..! மூடரிலும் கேடாய் மூத்தகுடி வாழ்ந்த மண்ணை மூதேவிகள் சிங்களர் ஆளத் தாரை வார்த்தனர்..! மண்ணின் மைந்தர்கள் என்றோர் மன்னர்களாகி சிங்களச் சகோதரத்துவம் பேசி மகிமை பெற்று சேர்.. பொன்களாகி மணிப் பல்லக்கில் பவனி வர.... மக்களோ இனக்கலவரங்களிடை மரணப் பாடையில் ஏறினர்..! அந்தவொரு வேளை அஞ்சா நெஞ்சன் அருமைத் தமிழ் மைந்தன் அன்னையாம் தமிழீழத் தாயின் இருப்புச் சொல்லி அவள் தலைநகராம் திருமலையில் அருமையாய் சிங்களம் போற்றும் அவர் தம் தேசியக் கொடியாம் அரிவாள் ஏந்திய சிங்கக் கொடி எரித்தான். அன்று அதை …

  22. வசந்தகாலம் கலைகிறதுன் வரவில்லாமல் _என் இளமைகோலம் சிதைகிறது இளமயில் உனை சேராமல். எதிர்கால முகவரியாய் யுன்பெயர் எழுதிடமுனைகையில், முற்றுப்புள்ளியோடு முடிக்க முனைகிறாய் இறந்தகாலம் என்றே. பெண்ணே ,_காதல் பயணப்பாதையின் சருகுகளல்ல, பாடைவரை வருமென் உணர்வுகள் !! நேரிடும் பொழுதெல்லாம் எதோ வேரிடுகிறது_நீ கூறிடும் வார்த்தைகளெல்லாம் நெஞ்சை கீறிடுகிறது _இருந்தும் காதல் பீறிடுகிறது அணைக்கப்படுவதற்காய் காத்திருக்கும் விளக்கு நான் அணையாமல் பார்த்திருக்கிறாய் விடியலின் பின்னும், ஓடம்தெரிந்த மாலுமி நீ அலையிலாடும்படகு நான் கரைசேராமல் அல்லாடுகிறது காதல் ! உனைப்பெற எதையும் இழக்கலாம் எனையிழந்து உனை பெற்று என்ன செய்வேன் _என…

    • 3 replies
    • 919 views
  23. Started by pakee,

    பெண் அன்பில் ஒருதாய் பெண் அழகில் ஒரு தேவதை பெண் அறிவில் ஒரு மந்திரி பெண் அதரவுயில் ஒரு உறவு பெண் வெறுப்பில் ஒரு நெருப்பு பெண் வெற்றிக்கு ஒரு மாலை பெண் தோல்விக்கு ஒரு பள்ளம் பெண் நட்பில் ஒரு நேர்மை பெண் கண்டிப்பில் ஒரு ஆசிரியார் இருந்தாலும் பெண் ஒரு புரியாத புதிர்...

    • 6 replies
    • 1.8k views
  24. தயங்கு, இயங்கு, முயங்கு, மயங்கு, தழுவும் சேலை முகட்டில் விம்மி விழட்டும் அதுவரை தயங்கு. பருவச் சிலிர்ப்பில் கனியிதழ் கவ்வி உணர்வினைக் கிளறி இயங்கு. குறி நகம் பதித்து குவித்து அணைத்து கொஞ்சிக் கெஞ்சி முயங்கு. உருகிய பனித்துளி உயிருக்குள் இணைந்ததும் இணையின் அணைவில் மயங்கு.

    • 72 replies
    • 13.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.