வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5563 topics in this forum
-
கேபியின் உடல் நிலையும்..... மீடியாக்களின் ‘கொலை’ப் பசியும்! கடந்த சில நாட்களாக சினிமா வட்டாரத்திலும் மீடியாக்கள் வட்டாரத்திலும் பெரிய பரபரப்பு ஏற்படுத்திய செய்தி தமிழ் சினிமாவின் பிதாமகன் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரின் உடல் நிலை பற்றியதுதான். இது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், அதைவிட பெரிய அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியது இந்த விஷயத்தில் சில மீடியாக்களின் அநாரீகமான அணுகுமுறை. இரண்டு நாட்களுக்கு முன் கே.பி அவர்கள் லேசான மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆழ்வர்பேட்டை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் சில விஷமிகள் மூலம் வாட்ஸ் அப்பில் கே.பி இறந்து விட்டதாகவே ( மன்னிக்கவும்) பரபரப்பப்பட்டது. உடனே ஒட்டு மொத்த மீடியாக்களும் தங்கள் ஊழியர்களை மருத…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஒரு பாத்திரத்துக்காக எந்த அளவு ஆபத்தையும் சந்திக்கத் தயங்காதவர்களில் விக்ரமும் ஒருவர். குறிப்பாக ஷங்கரின் ஐ படத்துக்காக அவர் எடுத்த ரிஸ்க், உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்றால் மிகையல்ல. கடந்த சில தினங்களாக இணையத்தில் உலா வரும் அவரது ஒரு நோஞ்சான் படத்தைப் பார்த்தாலே அதைப் புரிந்து கொள்ளலாம். படத்தில் வரும் கூனன் கதாபாத்திரத்திற்காக உடல் எடையைக் குறைத்து, எலும்பும் தோலுமாக அவர் காட்சியளிக்கும் அந்தப் படம் பார்ப்பவர் கண்களை குளமாக்கும். இது விக்ரம்தானா? இந்த மனிதர் ஏன் இப்படி ரிஸ்க் எடுக்கிறார்.. இப்படியெல்லாம் கூட ஒருவரால் சினிமாவுக்காக மெனக்கெட முடியுமா? என்று பிரமிப்பும் கவலையும் கலந்த தொனியில்தான் ஒவ்வொருவரும் கேட்டு வருகின்றனர். இனி விக்ரம் இ…
-
- 0 replies
- 972 views
-
-
தமிழக கவிஞர் முத்துக்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம். தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளாக அதிக பாடல்கள் எழுதி முதலிடத்தில் உள்ள கவிஞர் நா.முத்துக்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ”தங்கமீன்கள்” படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை பாடலுக்காக நா.முத்துக்குமார் தேசிய விருது பெற்றது நினைவிருக்கலாம். தற்போது அமெரிக்க உலகத்தமிழ் பல்கலைகழகம் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்துள்ளது. இந்த விழா தியாகராயநகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. அமெரிக்க உலகத்தமிழ் பல்கலைக்கழகத்தின் தலைவர், முனைவர் திரு.செல்வின்குமார் அவர்கள் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கி கௌரவித்தார். ஏற்கனவே 2006 ஆம்…
-
- 0 replies
- 517 views
-
-
84 வயதான சினிமா டைரக்டர் கே.பாலச்சந்தர் உடல்நிலை கவலைக்கிடம் 84 வயதான சினிமா டைரக்டர் கே.பாலச்சந்தர் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய உடல்நிலை கவலைக்கிடம் அடைந்ததை தொடர்ந்து ரஜினிகாந்த் ஆஸ்பத்திரிக்கு சென்று உடல்நலம் விசாரித்தார். கே.பாலச்சந்தர் தமிழ் பட உலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவர் கே.பாலச்சந்தர். இவருக்கு 84 வயதாகிறது. சமீபத்தில் இவருடைய மகன் கைலாசம் மரணம் அடைந்தார். அந்த சோகம் கே.பாலச்சந்தரை மிகவும் பாதித்தது. அதிர்ச்சியில் இருந்து அவர் மீளவே இல்லை. அதைத் தொடர்ந்து அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரமாக அ…
-
- 0 replies
- 2.4k views
-
-
லண்டன் பிரபல அமெரிக்க போர்ப் ஸ் மேகசின் இந்திய அளவில் இந்த ஆண்டு அதிகபட்ச வருமானம் உள்ள நட்சத்திரங்கள் பட்டியல் குறித்து சமீபத்தில் சர்வே ஒன்று எடுத்தது. இந்த சர்வே முடிவு இன்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் முதலிடம் பெற்றார். நம்மூர் விஜய், ரஜினி, அஜீத் ஆகியோர்களும் இந்த பட்டியலில் உள்ளனர். இந்தியாவின் டாப் 100 நட்சத்திரங்கள் பட்டியலில் சல்மான் கான் ரூ.244.5 கோடி வருமானத்துடன் முதல் இடத்தில் உள்ளார்.அமிதாப்பச்சன் (ரூ.196.5 கோடி) 2 வது இடத்திலும், ஷாருகான் ( ரூ.202.4 கோடி) 3 வது இடத்திலும், தொடர்ந்து எம்.எஸ் தோணி (ரூ.141.8 கோடி), அக்சய் குமார், வீராத் கோலி, அமீர்கான், தீபிகா படுகோனே,ஹிருத்திக் ரோசன், சசின் தெண்டுல்கர் ஆகியோர…
-
- 0 replies
- 964 views
-
-
தண்ணீர் பிரச்சனை, இரண்டு ரஜினிகள், கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கம், அனுஷ்கா, சோனாக்ஷி என்று ஒன்றுக்கு இரண்டு தேவதைகள், ரஹ்மானின் இசை, ரத்னவேலின் ஒளிப்பதிவு... விசிலடிச்சே வாய் வலிக்கணும்டா என்ற வேண்டுதலுடன்தான் ரசிகர் கூட்டம் தியேட்டருக்குள் பாய்ந்தது. அந்த ஆர்வத்துக்கு படம் அணை போட்டதா இல்லை கரை உடைத்ததா? சோலையூரிலுள்ள அணைதான் படத்தின் மையம். கம்பீரமாக நிற்கும் அணையை, இடிகிற நிலையில் இருக்கு என்று பொய் சான்று தரச் சொல்கிறார் அவ்வூர் அரசியல்வாதி. அதிகாரி மறுக்க அவர் கொலை செய்யப்படுகிறார். அணையை முன்னிட்டு நடக்கும் அனைத்து அனர்த்தங்களுக்கும் மூடிக்கிடக்கும் கோயில்தான் காரணம், அதனை திறந்தால் அனைத்தும் சரியாகும் என்று கோயிலை திறக்கும் முயற்சியில் இறங்குகிறது ஊர். கோயி…
-
- 12 replies
- 1.6k views
-
-
சென்னை இங்கிலாந்தை சேர்ந்த ” ஈஸ்டர்ன் ஐ” வார பத்திரிகை ஒன்று ஆண்டு தோறும் ஆசியாவின் கவர்ச்சிகரமான ஆண்கள் மற்றும் பெண்கள்கொண்ட 50 பேரை தேர்ந்து எடுத்து வெளியிட்டு வருகிறது. இதில் கடந்த ஆண்டு கவர்சிகரமான பெண்கள் பட்டியலில் நடிகை காத்ரீனா கையூப் முதல் இடத்தில் இருந்தார். இந்த முறை அந்த இடத்தை 32 வயதான நடிகையும், பாடகியுமான பிரியங்கா சோப்ரா தட்டி பறித்து உள்ளார். புகழ் பெற்ற டிவி நடிகை தர்சிதி டாமி இரண்டாவது இடத்தில் உள்ளார். சானியா இரானி டிவி நடிகை 3-வது இடத்தில் உள்ளார். கடந்த முறை முதல் இடத்தை பிடித்த காத்ரீனா கையூப் இந்த முறை 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். மாதுரி தீட்ஷித் 28-வது இடத்தை பெற்று உள்ளார். குறிப்பாக பாலிவுட் நட்சத்திரங்கள் ,ஐஸ்வர்யா ராய் பச்சன் …
-
- 7 replies
- 1k views
-
-
அகி மியூசிக்... தமிழ் சினிமா இசைத் துறையில் கடந்த சில தினங்களாக இளையராஜாவை மோசடி செய்து, நீதிமன்ற தண்டனைக்கும் ஆளான ஒரு நிறுவனம். சட்டப்படி இந்த நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்த இளையராஜா, இனி அகி மியூசிக் தனது இசையை, பாடல்களை எந்த வடிவிலும் விற்கக் கூடாது என தடை பெற்றுள்ளார். ஆனால் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து இளையராஜா சிடிக்களை விற்பனை செய்து வந்த அகி, கிரி ட்ரேடிங் போன்ற நிறுவனங்களுக்கு எதிராக மீண்டும் இளையராஜா புகார் தர, சேலையூரில் உள்ள இந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தி, அங்கிருந்து இளையராஜாவின் இசை - பாடல் ஆல்பங்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கு முழுவதுமாக இளையராஜாவுக்கு சாதகமாக முடிந்துள்ள நிலையில், அகி மியூசிக் இப்போது இளைய…
-
- 1 reply
- 1.9k views
-
-
60 வயதில்.. என்னை டூயட் பாட வைத்தது, கடவுள் கொடுத்த தண்டனை. ரஜினி பேச்சு. ஹைதராபாத்: லிங்கா படத்தின் கதைக்கு நான்கு பேர் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதில் உண்மையில்லை. இந்தக் கதை பொன் குமரன் எழுதியது. மிகச் சிறந்த கதை. இதில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது," என்று ரஜினிகாந்த் கூறினார். ஹைதராபாதில் நடந்த லிங்கா படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் சுத்தத் தெலுங்கில் நகைச்சுவை ததும்பப் பேசியது அனைவரையும் மகிழ வைத்தது. அவரது பேச்சிலிருந்து... சமீபத்தில் நடந்த புயல் நிவாரண நிதி திரட்டும் கலை நிகழ்ச்சிக்கு என்னையும் அழைத்திருந்தனர். ஆனால் அன்றைக்கு எனது குடும்பத்தில் முக்கிய திருமண நிகழ்ச்சி இருந்ததால் இங்கு வரமுடியவில்லை. ஆனால்…
-
- 14 replies
- 2.6k views
-
-
மதுரை: தன் கடந்த கால ஏழ்மையை மனதில் வைத்து, கூரை வீட்டில் வசித்த பெண்ணை, தன் மகனுக்கு மணம் முடித்தார், நடிகர் வடிவேலு.தமிழ் சினிமாவில், சிரிப்பு நடிகராக, கொடி கட்டிப் பறப்பவர், வடிவேலு. கடந்த சட்டசபைத் தேர்தலில், தி.மு.க.,விற்காக பிரசாரம் செய்து, எடுபடாமலும், சினிமாவில் ஓரங்கட்டப்பட்டாலும், இன்றும், தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை தக்க வைத்துள்ளார். சினிமா வாய்ப்பிற்கு முன், மதுரை விரகனூரில் வசித்த வடிவேலு, ஏழ்மையில் பல சிரமங்களை சந்தித்தவர். சினிமா மூலம் வசதியான வாழ்க்கை அமைந்த பிறகும், தன் சொந்த ஊர், உறவுகளுடனான தொடர்பில் அவர் விலகவில்லை. சில மாதங்களுக்கு முன், வடிவேலு மகள் திருமணம், அவரது சொந்த ஊரில் ஆடம்பரம் இன்றி நடந்தது. நேற்று, அவரது மகன் சுப்ரமணி திருமணம், மத…
-
- 8 replies
- 3k views
-
-
வன்னிப் போரின் இறுதி நாளை மையப்படுத்திய கதையுடன் படப்பிடிப்பை முடித்துவிட்டு. சட்ட ரீதியான அங்கீகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டு. ஒரு முழுப்படம் செய்யக் கூடிய (என்னால்) சொந்தப் பணம் முழுதையும் அள்ளி இறைத்து விட்டு அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் இப்படி ஒரு கனவுப் படைப்போடு காத்திருக்கிறேன் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். குறிப்பு - போரின் வலி ஒரு தனி மனிதனை எந்தளவுக்கு பாதிக்கும் என்ற கருப் பொருளைக் கொண்ட எந்த அரசியலாளர்களையும் சார்ந்தோ/எதிர்த்தோ உருவாக்கப்படாத படைப்பாகும். போர் என்பது இந்த உலகத்தில் இருந்தே விரட்டப்பட வேண்டிய ஒன்றாகும். (இந்த வருட இறுதிக்குள்ளாவது வெளியிட நினைக்கும் இப்படைப்பு தொடர்பான விபரங்களை அறிய இப்பக்கத்துடன் இணைந்திருங்கள்) https://www.face…
-
- 1 reply
- 581 views
-
-
ஒரு நடிகரை, 20 வருஷமாவா அரசியலுக்கு கூப்பிடுவீங்க? பாரதிராஜா சாட்டையடி. சென்னை: நடிகனிடம் ஆஸ்கார் விருது எப்போது வாங்குவீர்கள் என்று ஊடகங்கள் கேட்பதை விட்டுவிட்டு, அரசியலுக்கு எப்போது வருவீர்கள் என்று ஏன் கேட்கிறீர்கள்... அரரசியலில் ஈடுபட நடிகனுக்கு என்ன தகுதி இருக்கிறது.. ஒரு நடிகரை 20 வருஷமாவா அரசியலுக்கு கூப்பிட்டுகிட்டே இருப்பீங்க.. என்பது போல தடாலடியாக பேட்டியளித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா ஒரு வார இதழுக்கு தந்துள்ள பேட்டியின்போது, விஜயகாந்த், ரஜினி, விஜய் என நடிகர்கள் அரசியலுக்கு வர்றதுக்கு சினிமாதான் பாதையா? என்ற கேள்விக்கு பாரதிராஜா பதிலளித்துள்ளதாவது: இதுக்கு அடிப்படையான காரணம் யார் சொல்லுங்க? ஊடகம்தான். நடிகர்களைத் தூண்டிவிட்டு, 'அரசியலுக்கு …
-
- 5 replies
- 1.2k views
-
-
சிவதாச சுவாமிகள் (நாசர்) குருவாக இருக்கும் நாடக சபாவில் சிறுவர் களாகச் சேருகிறார்கள் காளியும் (சித்தார்த்) கோமதியும் (ப்ரித்விராஜ்). பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் தமிழ்ப் புராண நாடகங்களை மனப்பாடம் செய்து, கதாபாத்திரங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். பின்னாளில் இவர்கள் காளியப்ப பாகவதராகவும் கோமதி நாயகம் பிள்ளையாகவும் நாடக மேடையில் அடையாளம் காணப்படுகிறார்கள். இந்தக் குழுவில் பாட்டிலும் நடனத்திலும் சிறந்து விளங்கும் வடிவு (வேதிகா) வந்து சேர்கிறார். கோமதி இவள்பால் கவரப்படுகிறார். சித்தார்த் தனது நடிப்பில் பாரம்பரிய வழியைப் புதுமையாக வெளிப்படுத்துகிறார். இதனால் நாசருக்கு சித்தார்த்தை மிகவும் பிடித்துப்போகிறது. பாரம்பரிய முறையை மீறாத ப்ரித்விராஜ், நாசர் தன்னைத் திட்டமிட்டு…
-
- 1 reply
- 933 views
-
-
பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு இன்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மிகுந்த செலவு பிடிக்கும் இந்த அறுவை சிகிச்சையின் மொத்த செலவையும் நடிகர் சிவகுமார் ஏற்றுக் கொண்டார். எழுத்தாளன் என்பவன் ஒரு சமூகத்தை நெறிப்படுத்தும் ஆசிரியன். சமூகத்தின் சீக்குகளை களையும் மருத்துவன். அவனை போஷிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் சமூகத்துக்கு உண்டு. முக்கியமாக அரசுக்கு. ஆனால், தமிழகத்தில் எழுத்தாளனின் நிலை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. கேரளாவில் வைக்கம் முகமது பஷீர் இறந்தபோது அனைத்து ஊடகங்களிலும் பஷீரே நிறைந்திருந்தார். மாநிலமே மூன்று நாள்கள் துக்கம் அனுஷ்டித்தது. அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கு நடந்தது. சமீபத்தில் கவிஞர் அய்யப்பன் இறந்தபோது ஆறு அமைச்…
-
- 2 replies
- 1.7k views
-
-
'கண்ணிவெடிகளுக்கு மத்தியில்' - போராட்டத்தை மையமாக கொண்டு மற்றொரு தமிழ் திரைப்படம்! [sunday 2014-11-30 20:00] இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலை புலிகள் போராட்டத்தை மையமாக கொண்டு பல ஆவண படங்கள் கடந்த காலங்களில் வெளிவந்துள்ளன. சமீபத்தில் புலி பார்வை என்ற தமிழ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விடுதலை புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, ஈழம் போரில் உயிர் தப்பிய திரைப்பட தயாரிப்பாளரின் உண்மை கதையை அடிப்படையாக கொண்டு மைன்பீல்டு (கண்ணிவெடி பகுதி) என்ற பெயரில் படம் ஒன்று தயாராகிறது. இதனை ஷிலாதித்யா போரா என்பவர் இயக்குகிறார். அவருக்கு இது முதல் படம். இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலை புலிகள் போராட்டத்தை மையமாக கொண்டு பல …
-
- 0 replies
- 587 views
-
-
சோனியா, ராகுலை சந்தித்து.... காங்கிரஸில் சேர்ந்தார் குஷ்பு! டெல்லி: நடிகை குஷ்பு டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை இன்று மாலை சந்தித்து அந்த கட்சியில் சேர்ந்தார். அப்போது கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடன் இருந்தார். திமுகவில் பரபரப்பாக இருந்த குஷ்பு தான் ஒதுக்கப்படுவதாகக் கூறி அக்கட்சியில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு அவர் அரசியலை பற்றி நினைக்காமல் சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் குஷ்புவை தங்கள் கட்சியில் சேர்க்க பாஜக முயற்சி செய்வதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குஷ்புவை சந்தித்து பேசியதாக கூறப்பட்டது. பாஜக தவிர அதிமுகவும் க…
-
- 16 replies
- 3.5k views
-
-
ஆண் குழந்தைக்குத் தாயான ஜெனிலியா பாய்ஸ், சச்சின், வேலாயுதம், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து இருப்பவர் ஜெனிலியா. அவருக்கும், மராட்டிய மாநில முன்னாள் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும், நடிகருமான ரிதேஷ் தேஷ்முக்குக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், ஜெனிலியா கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. இத்தகவலை ரிதேஷ் தேஷ்முக், சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். ஜெனிலியாவும், ரிதேஷும் கடந்த 2003-ம் ஆண்டு ‘துஜே மேரி கசம்’ படம் மூலமாக ஹிந்தியில் அறிமுகம் ஆனார்கள். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. மஸ்தி, தேரே நால் லவ…
-
- 3 replies
- 735 views
-
-
தமிழ் திரைப்படத்துறையின் பழம் பெரும் இயக்குநர் சி.ருத்ரய்யா (67), சென்னை தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். சி.ருத்ரய்யாவின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் 1978-ம் ஆண்டு வெளியான “அவள் அப்படித்தான்” என்ற திரைப்படம் தமிழ் திரையுலகின் மைல்கல்லாக போற்றப்படுகிறது. ரஜினிகாந்த், கமலஹாசன், பிரியா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த அந்த படம், இந்தியாவில் வெளியான மிகச்சிறந்த 100 படங்களில் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தை பூர்வீக மாகக் கொண்ட ருத்ரய்யா, மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற அவருக்கு ஒரு மகள் உண்டு. அவர் வெளிநாட்டில் வசிக்கிறார். தனது இறுதிக் காலத்தை சென்னை லாயிட்…
-
- 12 replies
- 2.7k views
-
-
மலேசிய கடலில் 50 வில்லன்களுடன் மோதிய விஜயகாந்த் மகன்! சகாப்தம் படத்திற்காக சில தினங்களுக்கு முன் மலேசியாவில் உள்ள பினாங் என்ற இடத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக போட் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதில் கதாநாயகன் சண்முகப் பாண்டியன் ஐம்பது வில்லன்களுடன் 15 போட்டுகளில் இரு நூறு துணை நடிகர்களோடு சேர்ந்து நடுக் கடலில் சண்டைக் காட்சியில் பங்கேற்றார். அந்த சண்டைக் காட்சி ஐந்து கேமிராக்கள் வைத்து பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டது. மேலும் பிரமாண்டம் சேர்ப்பதற்காக ஹெலிகாப்டர் மூலமாகவும் இந்த சண்டைக் காட்சியைப் படமாக்கினர். இந்த சண்டைக் காட்சி மொத்தம் நான்கு நாட்கள் நடைபெற்றது. தாய்லாந்தைச் சேர்ந்த பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் கேச்சா இந்தக் காட்சியை அமைத்தார். …
-
- 2 replies
- 899 views
-
-
சென்னையில் இருப்பது கடும் நரகம்தான்.பட்டை வெயில் , கடல் வேறு இருப்பதால் வேர்த்து ஊற்றிக்கொண்டேயிருக்கும். பொண டிராஃபிக் , பொல்யூஷன் , மக்கள் கூட்டம் & குப்பை கூளம்.அதனால் எல்லோரும் கடு கடுவென எரிச்சலோடுதான் திரிந்து கொண்டிருப்பார்கள்.ஏசி இல்லாத வீடுகளில் புணர்ச்சி கூட திட்டிக்கொண்டே எரிச்சலோடுதான் நடக்கும். இந்த மாதிரி சூழ்நிலையில் , சினிமா ஸ்டாரக்ள் ,அரசியல்வாதிகள் , பிஸினஸ்மேன்கள் , பல்கலைக்கழக பேராசிரியர்கள் , அறிவு ஜீவிக்கள் என பலரும் சீரியஸாக ஜோக்கர் வேலை பார்ப்பதால் கொஞ்சம் பேலன்ஸ் ஆகி , ரிலாக்ஸ் ஆகி சென்னையில் வாழ்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறோம். ரஜினி அரசியலைப்பற்றியும் , அவரது பட ரிலீஸுக்கு முன்பு , நான் அரசியலுக்கு ....என ஆரம்பித்து ஏதேனும் உளறிக்கொட்…
-
- 2 replies
- 776 views
-
-
திருமணமே முடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்து ஒற்றைக் காலில் நின்ற இலங்கையின் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமாகிய அனர்கலி ஆகார்ஷா இரகசிய திருமணம் முடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள இலங்கை வர்த்தகர் ஒருவரையே அனார்கலி திருணம் முடித்துள்ளதாக தெரியவருகிறது. அனார்கலியின் திருமணத்தை நடத்தி வைக்க இலங்கையில் இருந்தும் ஒரு குழு அமெரிக்கா சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியின் உண்மை நிலை குறித்து ஆறிய ´அத தெரண கொசிப்´ பிரிவு அனார்கலி ஆகார்ஷாவை தொலைபேசியில் தொடர்புகொள்ள எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. தெனிலவு வேலையில் பிசியாக இருக்கிறாரோ தெரியவில்லை. எனினும் திருமணம் முடித்த அனார்கலி தனது கணவருடன் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை வரவுள்ளதாக தெரிவ…
-
- 7 replies
- 1.2k views
-
-
திரைப்படம் - ஹிட்லர் உமாநாத் இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியவர் - மலேசியா வாசுதேவன், சுருளிராஜன் .......... .......... அழுதிடுவார் அது அராபி ராகம், கர்ஜனை செய்வார் இது கல்யாணி ராகம், சிரிச்சிடுவார் அது செஞ்சுருட்டி, சினுங்கிடுவார் இது சிந்து பைரவி, சீக்கி அடிப்பார் அது நாட்ட குறிஞ்சி, சத்தமிடுவார் அது சங்கராபரணம், குரட்ட போட்டா ... குரட்ட போட்டா அது கேதாரம், கும்பகர்ணனே இதுக்கு ஆதாரம். நடையழகு இது ரூபக தாளம், நாடி துடிப்பினிலே ஆதி தாளம், அப்படியே படம் பிடிக்க கேமிரா இல்ல, அம்புட்டையும் சொல்ல நானும் கம்பனும் இல்ல.... மகாராசன் கோட்டையில கோவில் வாசலு, உடுத்த வேஷ்டியையும் கேட்டு வந்தா - தான் உடுத்தி இருக்கும் வேட்டியையே உடு…
-
- 2 replies
- 1.4k views
-
-
கும்கி படப்பிடிப்பில் ஒத்துழைக்கும் யானை பெரிய நடிகர்கள், இயக்குநர், டெக்னீஷியன்கள் உள்ளடங்கிய புராஜெக்டா என்று பார்த்துத்தான் ஒரு படத்துக்கு ஃபைனான்சியர் பணம் கொடுக்கிறார். அதற்குப் பிறகு அந்த புராஜெக்டை ஆரம்பித்திருக்கும் தயாரிப்பாளரின் சொத்து, அவர் தயாரித்த முந்தைய படங்களின் ட்ராக் ரெக்கார்ட் ஆகியவற்றையும் பார்க்கிறார்கள். கொடுத்த காசைத் திரும்ப வாங்க முடியவில்லையென்றால் படத்தின் விநியோக ஏரியாவையோ, அல்லது சாட்டிலைட் ரைட்ஸையோ ஹோல்டிங் வைத்திருப்பார்கள். இவர்களது நோக்கமே வட்டியும், முதலும்தான். படத்தின் தரமோ, அல்லது அதன் கதையோ எதுவும் பிரச்சினையில்லை. இந்த இரண்டு வகையில் ஏதாவது ஒரு பிடிமானம் இல்லையென்றால் படம் வெளியாகும் முன்பு, என்னிடம் இந்தத் தயாரிப்பாளர் கடன் வாங்க…
-
- 0 replies
- 561 views
-
-
இண்டர்ஸ்டெல்லார் திரைப்படத்தின் திரைக்கதை சென்ற வருடம் இணையத்தில் லீக் செய்யப்பட்டது. உடனேயே அதனை நான் படித்தேன். படித்ததும் இண்டர்ஸ்டெல்லார் பற்றிய இரண்டு விபரமான கட்டுரைகளை எழுதினேன். முதல் கட்டுரையில் காலப்பயணத்தைப் பற்றியும், இரண்டாவது கட்டுரையில் கருந்துளைகளைப் பற்றியும் முடிந்தவரை தகவல்களைக் கொடுத்திருந்தேன். இந்தக் கட்டுரையை மேற்கொண்டு தொடருமுன் அந்த இரண்டு கட்டுரைகளைப் படித்துவிட்டால், படம் இன்னும் தெளிவாகப் புரிய வாய்ப்பு உள்ளது. 1. Interstellar and Time Travel 2. Interstellar and Black Holes ஒருவேளை எந்த விபரமும் தெரியாமல் இந்தப் படத்துக்குப் போகிறோம் என்று வைத்துக்கொண்டாலும், அதில் சொல்லப்படும் விஷயங்கள் அத்தனை கடினமானவை அல்ல. அவை வரும்போதே அவற்றுக்கான விளக்க…
-
- 1 reply
- 3.1k views
-
-
ஒரு படம் எப்படி எடுக்கப்படக் கூடாது என்பதற்கான சகல கூறுகளுடன் எடுக்கப்பட்டுள்ள படம் ‘புலிப்பார்வை’. ஒளிப்பதிவு, காட்சி அமைப்பு, பின்னணி இசை என்று அனைத்து அம்சங்களும் மிகவும் நேர்த்தியாக கையாளப்பட்ட காட்சிகள், இப்படத்தில் இரண்டே இரண்டு காட்சிகள் தான் இருக்கின்றன. ஒன்று – படத்தின் ஆரம்பத்தில் வரும் காட்சி. அடுத்தது – இடைவேளை முடிந்து படம் மீண்டும் ஆரம்பிக்கும் இடத்தில் வரும் காட்சி. இந்த இரண்டு காட்சிகளிலும் நடித்த நடிகர்களுக்கு வசனங்கள் இல்லை என்றாலும், அவர்கள் இவ்விரு காட்சிகளிலும் சிறப்பாக நடித்து தங்கள் திறமையை வெளிபடுத்தி இருந்தார்கள். ஆனால், இந்த இரண்டு காட்சிகளையும் அனைத்து திரைப்படங்களிலும், தேவையென்றால் இணையத்தில்கூட பார்க்கலாம். இந்த இரண்டு காட்சிகளும் “புகைபி…
-
- 4 replies
- 1.3k views
-