வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5550 topics in this forum
-
நடிகை ரம்பா தற்கொலை முயற்சி? சென்னை: நடிகை ரம்பா தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். நேற்று கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உடல் நிலை தேறியுள்ளது. சென்னை சாலி கிராமத்தில் வசித்து வரும் அவர் நேற்று மாலை கவலைக்கிடமாக நிலையில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். உணர்வற்ற நிலையில் இருந்த அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து பெரும் பணம் ஈட்டிய ரம்பா சொந்தப் படம் எடுத்து எல்லா பணத்தையும் இழந்தார். ஜோதிகா, லைலாவுடன் இணைந்து இவர் தயாரித்த திரிரோசஸ் பெரும் நஷ்டத்தை ஏற்…
-
- 15 replies
- 4.6k views
-
-
ரஜினி நடிக்கும் எந்திரன் படத்தின் ஷூட்டிங் 3 நாட்களாக மீஞ்சூரில் நடந்தது. ரஜினிகாந்த்-ஐஸ்வர்யாராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. தினமும் இரவு 7 மணிக்கு படப்பிடிப்பு தொடங்கி, மறுநாள் அதிகாலை 3 மணி வரை படப்பிடிப்பு நடந்து வந்தது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, ரஜினி தனது போயஸ் கார்டன் வீட்டிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டார். கோயம்பேடு 100 அடி ரோடு வழியாக மீஞ்சூருக்கு போய்க் கொண்டிருந்தபோது மணலி அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பஸ், கார், வேன் மற்றும் கண்டெய்னர் லாரிகள் நின்றிருந்தன. இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கியவர் இரவு 7 மணி வரை மீஞ்சூரை அடை…
-
- 0 replies
- 2k views
-
-
விஜய்யுடன் ஒரு பாட்டுக்கு ஆட மறுத்தது ஏன் என்பதற்கு திவ்யா பதிலளித்தார். இதுகுறித்து திவ்யா கூற¤யதாவது:வாரணம் ஆயிரம் படத்தில் குடும்பப் பாங்கான வேடத்தில் நடித்ததாக பலரும் பாராட்டினார்கள். தொடர்ந்து வித்தியாசமான வேடங்களை ஏற்கவே விரும்புகிறேன். அடுத்ததாக காதல் டூ கல்யாணம் படத்தில் நடிக்கிறேன். மணிரத்னத்தின் உதவியாளர் மிலின்த் ராவ் இயக்குகிறார். ஆர்யாவின் தம்பி சத்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறேன். இது முழுக்க காமெடியான குடும்ப கதை. கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் வேடம். சிறிதும் கலாசார சம்பந்தமே இல்லாத இரு குடும்பத்தை சேர்ந்தவர்கள், காதலிக்கிறார்கள். இதன் விளைவுகளை யூமர் கலந்து இப்படம் சொல்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயஸ்ரீ நடிக்கிறார். மவுலி முக்கிய வேடம் …
-
- 0 replies
- 2.7k views
-
-
தமிழ் நாட்டிலிருந்து புறப்பட்ட அம்பு, அயல்நாட்டில் செட்டில் ஆகியிருக்கும் தீவிரவாதிகளை பஞ்சராக்குகிறது. ஏன்? 'அம்பு' யாரென்று சொல்லத் தேவையில்லை. கொலைகள் ஏனென்பதுதான் கதையின் மைய முடிச்சு. குக்கிராமத்திற்கு வரும் நயன்தாராவை ஒரே நொடியில் மனசுக்குள் வீழ்த்துகிறார் விஜய். காதலாகி கசிந்துருகும் நயனின் உதவியோடு வெளிநாட்டுக்கு பறக்கிறார். அங்குதான் நயனின் அப்பா பிரகாஷ்ராஜ் இருக்கிறார். சம்பந்தம் பேசுவதற்காகதான் இந்த பயணம் என்று நாம் யோசித்தால், அடுத்தடுத்த படிகள் என ஃபாஸ்ட் ஸ்டெப் வைக்கிறார் விஜய். ஏகப்பட்ட கொலைகள். எக்கச்சக்க சண்டைகள். இறுதியாக அப்பாவை கொன்ற நால்வரை நசுக்கிவிட்டு அம்மாவின் விரதத்தை முடித்து வைக்கிறார் விஜய். நம்பி கழுத்தறுக்கிற வேடம் விஜய்க்கு. நம்…
-
- 1 reply
- 2.9k views
-
-
விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு நஷ்டம் ஏற்பட்டால், கமலின் அடுத்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடிப்பேன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார். கமல்ஹாசனின் விஸ்வரூபம் வெளியாவதில் தடை நீடித்து வருகையில், பேச்சுவார்த்தைக்கு பின்னர் படம் வெளிவந்தாலும் கமலுக்கு நஷ்டம் தான் ஏற்படும் என்று கூறப்படுகின்றது. இந்த படத்திற்காக கமல், தனது சொத்துக்கள் அனைத்தையும் எழுதி கொடுத்து பெரும் செலவில் இந்த படத்தை எடுத்துள்ளார். இந்த நிலையில் கமலின் நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், கமலுக்கு விஸ்வரூபம் படத்தால் நஷ்டம் ஏற்பட்டால், கமலின் இயக்கும் அடுத்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்து அந்த நஷ்டத்தை ஈடுசெய்வேன் என்று கூறியுள்ளார். ரஜினியின் இந்த பேச்சு அனைத்து …
-
- 7 replies
- 957 views
-
-
ராம்சரண் தேசா மற்றும் ஸ்ருதி ஹாசன் மெயின் கேரக்டரில் நடிக்கும் ஏவடு என்ற படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க எமி ஜாக்சன் புக் ஆகியுள்ளார். சுவிட்சர்லாந்து கடற்கரையில் எமிஜாக்சன் மற்றும் ராம்சரண் இருவரும் கடற்கரையில் நடித்த பாடல் காட்சி ஒன்று சென்ற வாரம் படமாக்கபட்டது. இந்த பாடலில் படுகவர்ச்சியாக நீச்சலுடையில் நடித்து கலக்கியிருக்கிறார் எமி ஜாக்சன். அவருடைய காஸ்ட்யூமை பார்த்து ராம்சரணே அதிர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் தனது கவர்ச்சியால் தெலுங்கு படவுலகை ஒரு கலக்கு கலக்கலாம் என்ற எண்ணத்தில் திடீரென மண் அள்ளிப்போட்டிருக்கிறார் எமிஜாக்சன். இதனால் தனக்கும் ஒரு கவர்ச்சியான பாடல் வைக்கும்படி இயக்குனர் வம்சியை இம்சித்து வருகிறார். எமிஜாக்சனின் சுவிஸ் …
-
- 9 replies
- 1.2k views
-
-
நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் 30.06.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்று 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் வீதம் ரூபாய் இரண்டரை லட்சம் பரிசு வழங்கினார்கள். ஏழை மாணவர்களுக்காக தாய் தமிழ் பள்ளிக்கு ரூபாய் ஒரு லட்சமும், வாழை சமூக சேவை இயக்கத்துக்கு ரூபாய் இரண்டு லட்சமும் வழங்கினர். விழாவில் சூர்யா பேசுகையில், கடந்த 34 வருடமாக சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வேறு உதவிகளை விட கல்விக்கு செய்கின்ற உதவி ஒ…
-
- 2 replies
- 626 views
-
-
நடிகர் விஜய், அமலாபால், சத்யராஜ், சந்தானம் நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கியுள்ள படம் ‘தலைவா’. இப்படத்தை மிஸ்ரி புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். இப்படம் கடந்த 9-ந் தேதி உலகமெங்கும் வெளியாக இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் இப்படத்தை வெளியிட்டால் திரையரங்குகளில் வெடிகுண்டு வைக்கப்படும் என மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து, இப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை. ஆனால், மற்ற மாநிலங்களிலும், நாடுகளிலும் படம் வெளியானது. அங்கு படம் வெளியானதால், திருட்டு விசிடி கும்பல், இப்படத்தை திருட்டு விசிடி தயாரித்து புழக்கத்தில் விட ஆரம்பித்தது. இதனால் தயாரிப்பு வட்டாரம் பெரும் நெருக்கடியை சந்தித்தத…
-
- 6 replies
- 674 views
-
-
தமிழ் சினிமா ரசிகனும், விமர்சனங்களும்....... அ.ஜீவதர்ஷன் உலகம் முழுவதும் உள்ள மக்கள் ரசிக்கும் பொழுதுபோக்கு கலை/தொழில் சினிமா!! சினிமாமீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் சினிமா ஜதார்த்தத்தில் மக்களால் தவிர்க்கப்பட முடியாதது, இன்னும் சொல்லப்போனால் அழிவில்லாத அம்சமது. உலகம் முழுவதும் சினிமாவின் தாக்கம் வியாபித்திருந்தாலும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை சினிமாவின் தாக்கம் சற்று அதிகமாகவே அன்றாட வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்துள்ளது. உடல்மொழி, வசனங்கள், உடை என சினிமாவின் தாக்கம் இங்கு அதிகம்; அரசியல்வரை இந்த தாக்கம் கெட்டியாகப் பீடித்துள்ளது!!! பொழுதுபோக்கு சினிமா, கலைப் படைப்புக்கள், மாறுபட்ட சினிமா என சினிமாவை பிரித்துச் சொன்னாலும்; எல்லாமே வர்த்தகரீதியில்…
-
- 1 reply
- 2.4k views
-
-
டேஷா... டேஷ் டேஷா... டேஷ் டேஷ் டேஷா...?! - ரிச்சி விமர்சனம் உலகில் இருக்கும் ஒவ்வொருவரும் யாரோ ஒருவருக்காகக் காத்திருக்கிறார்கள், அந்தக் காத்திருத்தல்தான் உலகை இயக்குகிறது. ரிச்சியில் யார் யாருக்காகக் காத்திருக்கிறார்கள், யாருடைய காத்திருப்பிற்குப் பலன் கிடைத்தது, யாருக்குப் பொய்த்துப்போகிறது என்பதை ஃபிளாஷ்பேக் பீரியட் திரைப்படமாகச் சொல்ல முயன்றிருக்கிறது ரிச்சி. ஒரிஜினல் படமான ’உளிடவரு கண்டன்டே’ படத்தின் கதையையும் கதாபாத்திரங்களையும் இசையையும் மட்டும் எடுத்துக்கொண்டு புதிதாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். ஆனால், அதுதான் படத்தின் பலவீனமாகவே மாறிவிட்டது. கதையை ஏகப்பட்ட பேர் சொல்வதால், நாம் பார்த்துக்கொண்டிருக்கிற கதை…
-
- 0 replies
- 580 views
-
-
"மிஷ்கினு, ராமு... நீங்க அப்படின்னா, அப்புறம் நாங்க எப்படி?!'' - 'சவரக்கத்தி' விமர்சனம். 'கத்தி எதுக்குத்தான்... தொப்புள்கொடி வெட்டத்தான்' - படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலின் வரிகள்தான், படத்தின் கதைக்களம். பரோல் முடியும் நாள், மாலை 6 மணிக்கு மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும் என்கிற வெறுப்பில், அழுத்தத்தில் காரில் நகரத்தைச் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு கேங் லீடர், சந்தர்ப்பவசத்தால் அவனது வழியில் மாட்டிக்கொள்ளும் ஓர் அப்பாவி குடும்பஸ்தன்... இருவருக்குமிடையிலான துரத்தல்களும் ஓட்டமுமான திரைக்கதை, துயரத்திலும் நகைச்சுவையிலுமாக மாற்றி மாற்றி தீட்டப்பட்டதுதான், இந்தக் கூர்மையான 'சவரக்கத்தி'. தன் ஏழ்மையான அன்றாட வாழ்க்கையைச் சுவாரஸ்யமான பொய்களால் …
-
- 2 replies
- 720 views
-
-
ஹாலிவுட் ஜன்னல்: உலகை உலுக்கிய விமானக் கடத்தல் ஒ ரே உண்மைச் சம்பவம் வெவ்வேறு கோணங்களில் திரைப்படங்களாகும் வரிசையில் சேர்ந்திருக்கிறது ‘7 டேஸ் இன் என்டபி’. 1976-ல் இஸ்ரேலில் இருந்து பிரான்சு கிளம்பிய ‘ஏர் பிரான்ஸ்’ பயணிகள் விமானத்தை பாலஸ்தீனத் தீவிரவாதிகள் கடத்தினர். உகாண்டாவின் அப்போதைய அதிபர் இடி அமீன் ஆசிர்வாதத்துடன் அந்நாட்டு விமான நிலையமான ‘என்டபி’யில் 200 பயணிகள் அடங்கிய கடத்தல் விமானம் அடைக்கலமானது. உலகை உலுக்கிய இக்கடத்தல் சம்பவத்தில், இஸ்ரேல் சிறைகளில் இருக்கும் பாலஸ்தீனப் போராளிகளை விடுவிப்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் விடுக்கப்பட்டன. பேச்சுவார்த்த…
-
- 0 replies
- 345 views
-
-
ரஜினிக்கு மற்றவர்களை பாராட்டுவது என்பது ஒரு வீக்னஸ். விக்ரம், சூர்யா, தனுஷ், விஜய், த்ரிஷா ஹரி, தரணி, ஏ.ஆர். முருகதாஸ்... என பாதி இன்டஸ்ட்ரி இவரது பாராட்டுக்கு பாத்திரமாகியிருக்கிறது. இரண்டு நாள் முன்பு தனது பிரதான ரசிகர் விஜய்யின் 'போக்கிரி' படத்தை பார்த்தார் ரஜினி. தனது ஸ்டைலில் விஜய் பன்ச் டயலாக் பேசி எதிரிகளை பந்தாடுவது ரஜினியை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. படம் முடிந்த உடனே 'போக்கிரி'யின் இயக்குனர் பிரபுதேவாவை தொடர்பு கொண்டிருக்கிறார். அவரிடம் தனக்கு படம் ரொம்பப் பிடித்திருப்பதாக கூறியிருக்கிறார். "படம் தொடங்கியதும் தெரியலை முடிஞ்சதும் தெரியலை, வெரிபாஸ்ட்" என பிரபுதேவாவின் டைரக்ஷ்னை புகழ்ந்து பாராட்டியிருக்கிறார். மைசூரில் சந்தோஷ்சிவன் இயக்கத்தில் குறும்படத்தில்…
-
- 0 replies
- 2.5k views
-
-
பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்தால் திருமணத்துக்கு ரெடி! - காஜல் பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்தால் விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் தயார், என்கிறார் நடிகை காஜல் அகர்வால். இந்தியிலும் அங்கீகாரம் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் மிதக்கும் காஜல் அகர்வால் சமீபத்தில் ஹைதராபாதில் அளித்த பேட்டி: சிங்கம் படம் இந்தியில் நன்றாகப் போவது மகிழ்ச்சி. இப்போது நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கிறேன். படம் வென்றதா, தோற்றதா என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. காதல் என்பது முதல் பார்வையிலேயே வரும் என்கின்றனர். இதை நான் நம்பவில்லை. இருவருக்கிடையில் காதல் மலர்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இருவரின் எண்ணங்கள், ஆசைகள் பற்…
-
- 0 replies
- 884 views
-
-
1,200 திரையரங்குகளில் ரஜினியின் சுல்தான்! 'சிவாஜி' படத்தின் சாதனையை முறியடிக்கும் வகையில், ரஜினியின் 'சுல்தான்' படத்தை 1,200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுகிறார்கள். உலக அளவில் வசூலில் பல சாதனைகள் படைத்த சிவாஜிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம் 'சுல்தான்-தி வாரியர்'. இந்தியாவை ஆட்சி செய்த சுல்தானாக இதில் நடிக்கிறார் ரஜினி. வரலாற்றுப் படம் என்பதால் சுல்தானை மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கி வருகிறார் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு பெல்ஜியம், பிரேஸில், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஆறு வாரங்கள் நடந்தது. முதலில் ரஜினியை நடிக்க வைத்து பின்னர், அந்தக் காட்ச…
-
- 1 reply
- 1.5k views
-
-
காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம் பிரபல காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ். இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்றோருடன் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இடிச்சபுளி செல்வராஜ் உடல் நலக்குறைவால் இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73. நந்தனம் சத்தியமூர்த்தி நகரில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை இறுதி சடங்கு நடக்கிறது. இவருக்கு செல்வம் என்ற மனைவியும், வசந்தி என்ற மகளும் உள்ளனர். இடிச்சபுளி செல்வராஜின் தம்பிதான் நடிகர் பாண்டு. http://vizhiyepesu.blogspot.com/ பிரபல காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ். இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி,ரஜினி, கமல் போன்றோருடன் …
-
- 8 replies
- 2.6k views
-
-
அவர் இறந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னமும் அவர் எழுதிய பாடல்களைக் கொண்ட பல படங்கள் திரைக்கு வரக் காத்துக்கொண்டிருக்கின்றன. அதில், சில பெரிய இயக்குநர்கள் படங்களும் அடக்கம். கலைஞனுக்கு அவன் மரணம் முடிவல்ல என்பதையும் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார், நா.முத்துக்குமார்! பாடல்களை ரசிப்பதில் இரண்டு வகைகள் உண்டு. குழந்தைப் பருவத்தில் பெரும்பாலும் இசையில் மூழ்குவதே ரசனையின் வடிவமாக இருக்கும். முதிர்ச்சியை நோக்கி வாழ்க்கை நகர நகர இசையைக் காட்டிலும் வரிகளே நமக்கான தேடலாக மாறும். காதல், அன்பு, ஏக்கம், பிரிவு, நட்பு, வலி, ஊக்கம், தேவை, வெற்றி, தோல்வி என வாழ்வின் எந்த ஒரு நிலைக்கும், சூழலுக்கும் ஒரு பாடல் நம்முடைய மனதில் தொடர்புபடுகிறதென்றால், அது பெர…
-
- 2 replies
- 2.8k views
-
-
நேர்கொண்ட பார்வை: சினிமா விமர்சனம் முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ் 7 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க திரைப்படம் நேர்கொண்ட பார்வை நடிகர்கள் அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆன…
-
- 1 reply
- 966 views
- 1 follower
-
-
10 மணித்தியாலம் தண்ணீாில் மிதந்தபடியே நடித்த ஹரிப்பிரியா கன்னட படவுலகில் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜய ராகவேந்திரா தமிழுக்கு அறிமுகமாகும் படம் ‘அதர்வனம்’. இப்படத்தை ‘சிலந்தி’ படத்தை இயக்கிய ஆதிராஜன் இயக்கி வருகிறார். விஜயராகவேந்திரா, கன்னட சூப்பர் ஸ்டார்களான சிவராஜ் குமார், புனித் ராஜ்குமார் ஆகியோரின் மைத்துனன் ஆவார். விஜயராகவேந்திரா அறிமுகமாகும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஹரிப்பிரியா நடிக்கிறார். இந்த படத்தில் மாறுபட்ட வேடத்திலும், கவர்ச்சியிலும், நடிப்பிலும் ஹரிப்பிரியா வெளுத்து வாங்கியுள்ளாராம். குறிப்பாக…
-
- 0 replies
- 317 views
-
-
சிலம்பாட்டம் கிளைமாக்ஸ் காட்சிக்காக பில்லா அஜீத் கெட்டப்பில் நடிக்க வேண்டும் என இயக்குனர் சரவணன் கூறியுள்ளார். உடனே ஓகே சொன்னதுடன் பில்லாவில் அஜீத் பயன்படுத்திய உடையை அணிந்து அதே கெட் அப்பில் நடித்திருக்கிறார் சிம்பு. அஜீத்தோட ரசிகன் நான். டைரக்டர் இப்படியரு சீனை சொன்னதும் உடனே சரின்னுட்டேன். அதுமட்டுமில்ல. பில்லா படத்துல வந்த பின்னணி இசையையும் இந்த படத்துல பயன்படுத்தியிருக்கோம் என்கிறார் சிம்பு. http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=265
-
- 0 replies
- 808 views
-
-
பொன்ட் கேர்ளாக நடிக்க தீபிகா, பிரியங்கா போட்டி? 2016-05-22 10:39:53 பொலிவூட் திரையுலகின் முன்னிலை நடிகைகளான தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா இருவரும் ஹொலிவூட்டிலும் கால்பதித்துள்ள நிலையில் ஜேம்ஸ் பொன்ட் திரைப்படத்திலும் நடிப்பதற்கு முயற்சிக்கின்றனராம். 33 வயதான பிரியங்கா சோப்ரா நடித்த குவான்டிகோ தொடர் அமெரிக்கத் தொலைகாட்சியொன்றில் ஒளிபரப்பாகுகிறது. ட்வைன் ரொக் ஜோன்ஸன் கதாநாயகனாக நடிக்கும் பே வோட்ச் திரைப்படத்திலும் பிரியங்கா நடிக்கிறார். 30 வயதான தீபிகா படுகோனே வின் டீஸல் கதாநாயகனாக நடிக்கும் “எக்ஸ் எக்ஸ் எக்ஸ்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில்…
-
- 1 reply
- 358 views
-
-
திரை விமர்சனம்: கிடாரி துரோகம் ஒருவனது ரத்தத்தில் கலந்து ஓடினால் அதன் விளைவு என்னவாக மாறும்? அதுதான் இந்த ‘கிடாரி’. கவுரவத்துக்காகப் பஞ்சாயத்து, மிரட்டல் என்று திரிகிறார் பெரியவர் கொம்பையா பாண்டியன் (வேல.ராமமூர்த்தி). அவருக்கு வலது கையாக, கிட்டத்தட்ட ஒரு மகனாகவும் இருக்கிறார் கிடாரி (சசிகுமார்). ஆட்டுச் சந்தை, ரைஸ் மில் என்று தன் கவுரவத்துக்காகப் பஞ்சாயத்து, அடிதடியில் இறங்கி ரத்தம் பார்த்து ஊரில் பெரும் பகையைச் சேர்த்து வைத்திருக்கிறார் கொம்பையா பாண்டியன். இந்நிலையில், வேல.ராமமூர்த் தியை, அடையாளம் தெரியாதவர்கள் கழுத்தில் வெட்டிவிடுகிறார்கள். ஊரில் பதற்றம் பீறிட, அவரை வெட்டியது யார் என்பதை ந…
-
- 0 replies
- 348 views
-
-
விஸ்வரூபம் இரண்டாம் பாகம்! கடைசி கட்ட படப்பிடிப்பு! கமல் இயக்கத்தில் உருவான விஸ்வரூபம் படத்தின் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து பிப்ரவரி 7-ஆம் தேதி தமிழகமெங்கும் ரிலீஸாகிறது. கமல்ஹாசன் நீண்ட நாட்களாக உருவாக்கிக்கொண்டிருந்த படமே இப்போது தான் ரிலீஸாகவிருக்கிறது. ஆனால் அதற்குள் கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் விரைவில் ரிலீஸ் செய்யவிருக்கிறாராம். விஸ்வரூபம் படத்தின் புரமோஷன் வேலைகளில் ஒரு சமயத்தில் மும்மரமாயிருந்த கமல் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் “ அடுத்த படத்திற்கு ‘மூ’ என்று பெயர் வைத்துள்ளேன். விரைவில் அந்த பெயரை பதிவு செய்யவிருக்கிறேன்” எனக் கூறினார். ’மூ’ என்றால் மூன்று பேர் என்று பொருள். இதனால் கமல் இந்த படத்தில் மூன்று …
-
- 3 replies
- 2.7k views
-
-
ஒரு பக்க கதை மேகா ஆகாஷ் - காளிதாஸ் ஜெயராம் இளம் காதலர்கள். காளிதாஸ் தனது அரியர்ஸை முடித்து வேலைக்குச் சென்று சம்பாதிக்க ஆரம்பித்ததும் திருமணம் என இருவர் குடும்பமும் சம்மதமும் சொல்லியிருக்கிறது. இந்நிலையில் மேகா ஆகாஷ் கர்ப்பமாக இருக்கிறார் என்கிற தகவல் தெரிய வர, இதனால் மேகா, காளிதாஸ் என இருவருமே அதிர்ச்சியாகிறார்கள். ஏன் அந்த அதிர்ச்சி, அந்த கர்ப்பத்தால் என்னென்ன நடந்தது என்பதே 'ஒரு பக்க கதை'. நிஜமாகவே ஒரு பக்கத்தில் சொல்லியிருக்க வேண்டிய கதை. அதை நீட்டித்து, கூடுதலாகச் சமுதாயத்துக்காக ஒரு கருத்தையும் சொல்ல வேண்டும் என்று நினைத்த நேரத்தில் பக்கத்தில் இடம் காலியாகிவிட்டிருக்கிறது. ஆனால் இந்த நீளம் மட்டுமே படத்தின் ஒரே பிரதானப் பிரச்சினை. …
-
- 0 replies
- 662 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதவன் - கோப்புப்படம் மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடித்து 2015ஆம் ஆண்டில் வெளிவந்த சார்லி திரைப்படத்தின் ரீ - மேக்தான் மாறா. சார்லி விமர்சன ரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் பெரும் வெற்றிபெற்ற படம் என்பதால், இந்த ரீ - மேக் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. பாரு என்ற பார்வதி (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) பழைய கட்டடங்களை புதுப்பிக்கும் கலைஞர். கேரளாவில் உள்ள ஒரு சிறு நகருக்குச் செல்லும்போது, அங்குள்ள கட்டடச் சுவர்களில் தான் சிறுவயதில் கேட்ட ஒரு கதையின் காட்சிகள் வ…
-
- 9 replies
- 1.6k views
-