வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
குறிப்பிட்ட ரசிகர்கள் என்ற வட்டத்தைத் தாண்டி ரசிக்கப்படும் நடிகர்களுள் ஒருவர் விக்ரம். கஷ்டப்பட்டு நல்ல நடிகர் என்ற இமேஜையும், தேசிய விருதையும் பெற்ற அவரது படங்களை ரசிகர்கள் ஓரளவுக்கு எதிர்ப்பார்க்கவே செய்கிறார்கள். தெய்வத் திருமகள் படம் முழுக்க முழுக்க ஹாலிவுட் காப்பியாக இருந்தாலும், விக்ரம் நடிப்புக்காக அந்தப் படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டனர். அதற்குப் பிறகு அதிரடியாக ஒரு படம் தருவதாகக் கூறி ராஜபாட்டையை வெளியிட்டுள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் நேற்று வெளியான இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. குறிப்பாக திறமையான இயக்குநர் எனப் பெயரெடுத்த சுசீந்திரன், தேசிய விருது பெற்ற விக்ரம் காம்பினேஷனில் உருவாகும் படம் என்பதால், தூள்…
-
- 0 replies
- 927 views
-
-
பிரசாந்த் கல்யாணமும் சில பிற்போக்குச் சிந்தனைகளும்... பத்திரிக்கைகளில் எட்டாம் பக்கச் செய்தியாக ’பிரசாந்த் திருமணம் செல்லாது - கோர்ட் அறிவிப்பு’ சென்ற வாரம் வெளியானது. பல வருடப் போராட்டம், அவமானத்திற்குப் பின் ஒருவழியாக பிரசாந்த் நல்ல தீர்ப்பைப் பெற்றிருக்கிறார். 2005ல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில், அனைத்துத் தரப்பினரின் வாழ்த்துகளுடன் நடந்த பிரசாந்த்-கிரகலட்சுமி திருமணம், இப்படி ஒரு கொடுமையான முடிவைச் சந்திக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. திருமணம் முடிந்து ஹனிமூன் எங்கு போவது என்பதிலேயே பிரச்சினை ஆரம்பித்துவிட்டது. சிங்கப்பூர் தான் போக வேண்டும் என்று அடம்பிடித்த கிரகலட்சுமி, அங்கு சென்ற பின் போனில் யாருடனோ மணிக்க…
-
- 2 replies
- 1.8k views
-
-
- நீரை.மகேந்திரன் படம் : செங்கடல் ஆண்டு : 2011 மொழி : தமிழ் - ஆங்கிலம் - சிங்களம் - தெலுங்கு இயக்கம்: லீனா மணிமேகலை. செங்கடல்... நீண்ட சட்ட மற்றும் தணிக்கைப் போராட்டங்களை சந்தித்த திரைப்படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. ஏற்கெனவே சென்னையில் சில முறை திரையிடப்பட்ட பொழுது (இரண்டு தடவை என நினைக்கிறேன்) பார்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையாததால் இந்த முறை தவற விட்டுவிடக்கூடாது முதல் நாளே முடிவு செய்து விட்டேன். இந்தப் படம் குறித்து ஏற்கெனவே ஊடகங்கள் வழி கேள்விப்பட்டிருந்த தகவல்கள், தணிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்ததாக வெளியான செய்திகள், தமிழின் முக்கியமான ஆவணப்பட இயக்குநர் இ…
-
- 2 replies
- 826 views
-
-
நெடுநாளா பார்கவேண்டும், ஆனால் நல்ல கொப்பி கிடைத்தால் மட்டுமே பார்ப்பது என்றிருந்து, இன்று தான் மூடுபனி படம் பார்க்க முடிந்தது—லீவில் நிற்பதால் பகலில் பார்க்க முடிந்தது. நாங்க பாராட்டித்தான் பாலுமகேகந்திராவின் திறமை வெளிப்படவேண்டிய நிலை இல்லை, இருந்தும் மனதில் பட்ட சிலதைப் பகிர இந்தச் சிறிய பதிவு. மற்றவர்களிற்கு என்னமாதிரியோ தெரியாது, ஆனால் எனக்கு பிரியா படப்பாடல்கள் குறிப்பா அக்கரச்சீமை அழகினிலே மற்றும் டார்லிஙடார்லிங் பாடல்களைக் கேட்கும் போது ஏதோ ஒரு நேரக்குடவைக்குள் நுழைந்ததைப் போல, அதுவும் கருமேகம் நிறைந்து பகலில் நன்றாக இருட்டி, சாதுவாகத் தூறல் தொடங்கி ஆனால் இன்னும் மழை பொழியத் தொடங்கு முன்னான ஒரு மழைநாளில் ஊரில் பூத்துக்குலுங்கும் சீமைக்கிளுவை மரத்தின் கீழ் நின…
-
- 10 replies
- 6.9k views
-
-
முள்வேலிக்குள்ளே வாடும் தமிழ் ஈழம்போல் ஆனேனே,அன்பே உன் அன்பில் நானும் தனி நாடாகிக் போவேனே இது அண்மையில் வெளியாகின விக்ரமின் ராஜ பாட்டை படத்திலுள்ள ஒரு பாடலின் ஒரு வரி..இந்த வரிக்கு ஈழத்தமிழர்களிடமிருந்து சில எதிர்ப்பு குரல்கள் எழுந்தன ...அதற்க்கு அப்பாடல் ஆசிரியர் யுக பாரதி தனது வலைப்பூவில் பதிலளித்துள்ளார் இரண்டு தினங்களுக்கு முன்பு ராஜபாட்டை திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.விழா முடிந்த ஓரிரு தினங்களுக்கு உள்ளாகவே சமூக வலைதளங்களின் மூலம் அப்பாடல்கள் சிலாகிக்கப்பட்டன.புலம் பெயர்ந்த தமிழர்களின் ஒரு ஆறுதலாக இருக்கும் தமிழ்த் திரையிசை பாடலுக்கு இத்தனை வரவேற்புக் கிட்டியிருப்பது மகிழ்ச்சிக்குரியதே.அப்பாடல்களில் குறிப்பிடத்தக்க பாடலாகப் பனியே பனிப்பூவே ப…
-
- 0 replies
- 841 views
-
-
"தேன் கூடு" - உண்மைக்கதையின் திரைப்பட முன்னோட்டம்: [Wednesday, 2011-12-21 13:27:13] ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றை எவ்வித சமரசமும் இல்லாமல் உண்மைகளை உலகுக்கு எடுத்துச்சொல்லும் வகையில் எடுக்கப்பட்டுள்ள முழு நீளத்திரைப்படமான "தேன் கூடு" திரைப்படம் திரையரங்குகள் பற்றாக்குறை காரணமாக காலதாமதாகி விரைவில் வெளிவரவுள்ளது. இத் திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சியினை கீழே காண்கின்றீர்கள். http://seithy.com/breifNews.php?newsID=53402&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 1.5k views
-
-
"திலீபன்" தமிழருக்கான படம்! விடுதலைப் புலிகளின் போராட்டக் களத்தை பின்னணியாகக் கொண்டு வெளியான ஆணிவேர் படத்தில் நடித்ததன் மூலம் உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களின் அபிமானத்தைப் பெற்றவர் நடிகர் நந்தா. பல படங்களில் நடித்துவிட்ட நந்தா, இப்போது தயாரிப்பாளராகியுள்ளார். அடுத்து 'திலீபன்' என்ற பெயரில் புதுப்படம் தயாரிக்கிறார். இதில் பிரபாகரன் கதையை படமாக்குவதாக செய்தி பரவியது. பிரபாகரன் வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஈழத் தமிழர் பிரச்சினைகள் பிரபாகரன், திலீபன் போராட்டங்கள் இதில் காட்சிப்படுத்தப்படுவதாக கூறினர். இதனால் உலகத் தமிழர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்தது. ஆனால், 'திலீபன்' படம் பிரபாகரன் கதையல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்…
-
- 0 replies
- 859 views
-
-
பெரும்பாலான ஹீரோக்கள் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம், சாகுறதுக்குள்ளே ஒரு முக்கியமான கேரக்டரில் நடிச்சுடணும். அதுதான் என் ஆசை என்றெல்லாம் அளப்பார்கள். ஆனால் யாராவது அந்த குறிப்பிட்ட கேரக்டரோடு வந்தால், ‘…ந்தா. சுவிட்சர்லாந்துல டீ குடிச்சுட்டு வந்துடறேன்’ என்று எஸ்கேப் ஆகிவிடுவார்கள். அப்படி எல்லாரையும் ஒரே நேரத்தில் கவர்ந்து, ஒரே நேரத்தில் அலறவும் வைக்கிற கேரக்டர் மாவீரன் பிரபாகரன் வேடம்தான். ஆனால் எவ்வித பதற்றமோ, பயமோ இல்லாமல் இந்த கேரக்டரில் நடிக்கப் போகிறார் சத்யராஜ். நடிகர் நந்தா தற்போது விடுதலைப்புலி திலீபனின் வரலாற்றை படமாக்கிக் கொண்டிருக்கிறார். இடையில் நிறுத்தப்பட்டிருந்த இப்படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டு விட்டது. இதில்தான் நடிக்க …
-
- 5 replies
- 1.1k views
-
-
வெற்றிகரமாக ஓடிய ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் 2ம் பாகம் விரைவில் வருகிறது என்று வடிவேலு கூறினார். மேலும் அவர் கூறியதாவது: தமிழ் படங்களில் இப்போது அருவருப்பான காமெடி சீன்கள் வருகின்றன. இதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. அதுபோன்ற காமெடி காட்சிகளில் நடிக்க விருப்பம் இல்லை. அடுத்த கட்டத்துக்கு செல்ல விரும்புகிறேன். இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன். ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் 2ம் பாகம் உருவாகிறது. இதற்கான பேச்சுவார்த்தை இயக்குனர் சிம்பு தேவனிடம் நடக்கிறது. சமீபகாலமாக நான் விரும்பி நடிப்பது போல் எந்த பாத்திரமும் வரவில்லை. சிறு, மீடியம் பட்ஜெட் படங்களில் நடிக்க விரும்பவில்லை. இதனால்தான் சமீபகாலமாக படம் ஒப்புக்கொள்ளவில்லை. ht…
-
- 5 replies
- 1.3k views
-
-
"மயக்கம் என்ன": செல்வராகவன் தவறி நுழைந்த ஏரியா ஆர்.அபிலாஷ் செல்வராகவனின் படங்கள் இறந்த காலத் துயரில் இருந்து மீள முடியாது தவிக்கும் தனிமனிதர்களின் தனிமை, வன்மம், சீரழிவு, இறுதியில் மீட்பு என்று முழுக்க முழுக்க உள்குவிந்தவை. கடந்த சில வருடங்களில் தமிழ்-உலக சினிமா என்ற பெயரில் சேப்பியார் டோனில் ஏகப்பட்ட தனிமனித சீரழிவு சினிமாக்கள் இங்கு எடுக்கப்பட்ட போதும் செல்வராகவனின் படங்கள் ஒரு முக்கிய காரணத்துக்காக காலாவதியாகவில்லை. அதற்கு ஒரு காரணம், அவரது மையபாத்திரங்கள் அனுபவிக்கும் தத்துவார்த்த தனிமை. காலத்தின் முன் தன்னை வெறும் பகடைக்காயாக உணரும் முத்துவும் கொக்கிகுமாரும் தமிழ் சினிமாவின் தளத்தை நிச்சயம் விரிவடைய வைத்தனர். "மயக்கம் என்ன" படத்தில் செல்வராகவன் இப்படியான …
-
- 2 replies
- 1.1k views
-
-
ஈழத்தில் தமிழ் திரைப்படம் சாத்தியமா என்ற கேள்விக்கு பதில் சொல்ல வருகிறது 'பனைமரக்காடு' முழுநீள தமிழ் திரைப்படம் .இப்படத்தை இயக்குனர் கேசவராஜ் இயக்கியிருக்கின்றார்.இத்திரைப்படத்தில் தென்னிந்திய கலைஞர்களோடு ஈழத்து கலைஞர்களும் நடித்துள்ளனர். முற்று முழுதாக யாழ்மண்ணில் படப்பிடிப்புக்கள் நடாத்தப்பட்டுள்ளன.இத்திரைப்படத்தில் ஜெகதீஸ் கதாநாயகனாகவும் கதாநாயகியாக அக்சராவும் நடிக்கின்றனர்.இத்திரைப்படத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. http://youtu.be/Gn76vl5Tayk பாடல்களை முகேஷ் மாணிக்கவிநாயகம் பாலாஜி ஆனந்த் இன்னும் பல முன்னணி பாடகர்கள் பாடியுள்ளனர்.இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு அருமையான பாடலை உங்களுக்கு நாம் தருகின்றோம். இசையமைப்பாளர் விமல் ராஜாவின்…
-
- 0 replies
- 1.1k views
-
-
'இருப்பாய் தமிழா நெருப்பாய் ! ' - கவிஞர் காசி ஆனந்தனின் திரைப்பாடல் 'இருப்பாய் தமிழா நெருப்பாய் -இருந்தது போதும் இதுவரை செருப்பாய் ' என்று உணர்ச்சியை வளப்படுத்தும் இக்கவிதை வரியை தமிழ் நேசிப்பாளர்கள் எவரும் அறிந்திருப்பர்.தமிழீழ விடுதலைப் போராட்ட பாடலில் இருந்த இந்த வரிகளும் அதை புனைந்த உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனும் தமிழ் திரைப்படப் பாடல் துறைக்கு வர வேண்டும் என்பது கோடிக்கணக்கான தமிழர்களின் ஆசை. ஈழ சோகங்களை இலக்கிய வடிவில் படைத்திருக்கும் 'உச்சிதனை முகர்ந்தால்' என்ற புகழேந்தி தங்கராஜின் திரைப்படம் மூலம் தமிழர்களின் அவ்விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறார் காசி ஆனந்தன். "இருப்பாய் தமிழா நெருப்பாய் ... நீ! இழிவாய் கிடக்க செருப்பா... நீ! ஓங்கி ஓங்…
-
- 0 replies
- 4.1k views
-
-
Friday, December 16, 2011 பிரச்சனைகளுடன் தொடங்கிய 9வது சென்னை சர்வதேச படவிழா/2011 சென்னை பிலிம்பெஸ்ட்டிவல் இனிதே தொடங்கியது என்றுதான் இதுவரை அந்த தகவலை பகிர்ந்து இருக்கின்றேன்... ஆனால் தமிழ்நாட்டில் தலைநகரம் சென்னையில் நடக்கும் ஒரு சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற தமிழ் படங்கள் அதுவும் இந்திய சென்சார் போர்டு அனுமதி அளித்து பல விருதுகளை பெற்ற படங்கள் புறக்கணிக்கபட்டு இருக்கின்றன.. அவற்றுள் முக்கியமானது.. செங்கடல் மற்றும் தென்மேற்கு பருவகாற்று போன்ற படங்கள் திரையிட அனுமதி அளிக்காமல் புறக்கணிக்கபட்டது என்பதுதான் போராட்டத்துக்கான அடிப்படை.. நேற்று சென்னையில் தொடக்கவிழா நிகழ்சி நடந்து கொண்டு இருக்கும் போதே....த…
-
- 0 replies
- 729 views
-
-
-
நடிகர் நடிகைகளுக்கு பாலாபிஷேகம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் சில வெறிபிடித்த ரசிகர்கள். எட்டாத தொலைவில் நின்று கிட்டாத தெய்வத்துக்கு ‘நமஸ்தே’ போடுவது போலதான் இந்த அபிஷேக அன்புறுத்தல் எல்லாம். ஆனால் மேற்படி நடிகைகளில் பலர் தங்களுக்கு தாங்களே பீராபிஷேகம் செய்து கொள்வதை அறிந்தால் என்ன செய்வார்களோ? குடிமகன்களின் தாகத்திற்கு டாஸ்மாக், எலைட் என்று விதவிதமாக வசதிகளை செய்து கொடுக்கிறது அரசு. இந்த நேரத்தில் அழகுராணி ஒருவர், குடிப்பதற்கு வைத்திருந்த பீர் பாட்டிலை தலையில் கொட்டி தனி ஆராய்ச்சி செய்திருக்கிறார். கிடைத்த ரிசல்ட்? தாவர பெட்ரோலை கண்டுபிடித்த ராமர் பிள்ளைக்கு கூட அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். கூந்தலை அள்ளி கொத்து கொத்தாக வகுந்து அதில் பீரை ஊற்றி கழுவினால் தலை…
-
- 3 replies
- 2.8k views
-
-
போராளி : விமர்சனத்திற்கு மாற்றாகப் பிறிதொரு பார்வை -குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன் பாசாங்குகள் அற்றுச் சொல்வதானால் தமிழ் மனங்களின் ஞாபகத்தில் போராளிகள் எனும் வார்த்தை ஈழ விடுதலைப் போராளிகள் பற்றிக் குறிப்பிடுவதாகத்தான் இருக்கிறது. மிலிட்டன்ட் எனும் ஆங்கிலச் சொல் போரையும், போர்ச்சூழலில், போரோடு வாழும் மனிதனையும் குறிக்கிறது. போராளி எனும் தமிழ்ச் சொல்லும் குறிப்பாகப் போர்ச்சூழலில் வாழுபவன், போரை ஆள்பவன், போரை வாழ்வாகக் கொண்டிருப்பவன் என்பதனையே குறித்து நிற்கிறது. இங்கு போர் என்பது ஒரு சமூகச் செயல்பாட்டுக்கானதாக, சமூகக் கடப்பாடு கருதியதாக, தன் நலன் அல்லாத, ஒரு மக்கள் கூட்டத்தின் நலன் கருதியதாகவே நாம் குறிப்பிடுகிறோம். தன்மறுப்பில் விளைந்த, பிற…
-
- 0 replies
- 1.3k views
-
-
வாக்கு மூலம் விமர்சனம்: இலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம்! போர் இடம் பெறும் பகுதிகளில் அராஜகம், அக்கிரமம் நிறைந்த மனிதாபிமான உணர்வுகள் அற்ற இராணுவத்தினர் தம் எதிர்த் தரப்பினரைக் கைது செய்தால் சொற்களால் வடிக்க முடியாத மிக - மிக கொடுமையான துன்புறுத்தல்களை நிக்ழ்த்திப் பல ரசசியங்களைக் கேட்டு அறிந்து கொள்ள முனைவார்கள். உலக வரலாற்றில் ஹிட்லரின் சித்திரவதை கூடாரங்களையும், அமெரிக்கப் படைகளால் ஈராக்கியப் போராளிகளை,மக்களைச் சித்திரவதைக்கு உட்படுத்திய குவாண்டனமோ சிறை ஆகியவற்றினை விடவும் மிகவும் குரூரமான சிறைக் கூடங்கள் இன்றும் இலங்கையில் இருந்து வருகின்றன. ஈழத்தில் இறுதிப் போர் இடம் பெற்…
-
- 0 replies
- 1.9k views
-
-
சர்வதேச படவிழாவில் 12 தமிழ் படங்கள் போட்டி சென்னையில் நடக்கும் 9வது சர்வதேச திரைப்பட விழாவில் அழகர்சாமியின் குதிரை, வாகை சூடவா உள்பட 12 தமிழ்ப் படங்கள் பங்கேற்கின்றன. 9வது சர்வதேச படவிழா, சென்னையில் வருகிற 14-ந் திகதி தொடங்கி, 22-ந் திகதி வரை 9 நாட்கள் நடைபெற இருக்கிறது. சென்னை உட்லண்ட்ஸ், ஐநாக்ஸ், சத்யம், பிலிம்சேம்பர் ஆகிய தியேட்டர்களில் சர்வதேச படங்கள் திரையிடப்பட உள்ளன. பிரான்சு, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பின்லாந்து, எகிப்து, ஈரான், இத்தாலி உள்பட 44 நாடுகளில் தயாரான மொத்தம் 154 படங்கள், இந்த படவிழாவில் திரையிடப்படுகின்றன. அதில், 9 படங்கள் இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டவை. ´கான்´ படவிழாவில் திரையிடப்பட்ட 8 பட…
-
- 0 replies
- 681 views
-
-
இன்று கனடாவில் திரையிடப்படுகிறது ஸ்டார் 67 இன்று இல 300 Borogh Drive இல் உள்ள Cineplex தியேட்டரில் நாம் உருவாகிய முழு நீளத்திரைப் படத்திற்கான vip காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது . புலம்பெயர் சினிமாவின் வளர்ச்சிப்பாதையில் ஒரு முக்கிய வளர்ச்சிக்கட்டத்தை நாம் அடைந்துள்ளதாக நானும் எனது திரைப்பட குழு நண்பர்களும் நம்புகிறோம். எமக்கான ஒரு பலமான சினிமா அவசியம் என்பதை யாரும் மறுத்துவிட போவதில்லை . எமது கதைகளை வேறு யாரும் எங்களை விட தத்ரூபமாக சொல்லிவிட முடியாது. வளமான ஒரு சினிமாவை நாம் அமைக்க உங்களின் முழுமையான ஆதரவினை எதிர்பார்த்து நிற்கிறோம். இன்றைய தொழில்நுட்பமானது உலக சினிமாவிற்கு மிக அருகில் எங்களை நிறுத்தியுள்ளது . இனி உலகம் அங்கீகரிக்கும் சினிமாவை உருவாக…
-
- 2 replies
- 1k views
-
-
வாடகைத்தாய் மூலம் ஆமிர்கானுக்கு ஆண் குழந்தை பிறந்தது. வாடகைத்தாய் மூலம் ஆமிர்கான் -கிரண் ராவ் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறந்துள்ள இந்தக் குழந்தை எங்களுக்கு மிகவும் விசேஷமானது, சிறப்பானது என்று ஆமிர்கான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஆமிருக்கு தற்போது 46 வயதாகிறது என்பது நினைவிருக்கலாம். ஆமிர்கான் -கிரண் ராவ் தம்பதிக்கு திருமணமாகி பல காலமாகியும் குழந்தைப் பேறு கிடைக்கவில்லை. இதையடுத்து செயற்கை முறையில் கருவூட்டம் செய்து வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற ஆமிர்கான்-கிரண் முடிவு செய்தனர். அதன்பிட செயற்கை முறையில் கருத்தரிப்பு நடத்தப்பட்டு வாடகைத்தாயின் கருவறையில் ஆமிர்கான் தம்பதியின் குழந்தை வளர்ந்து வந்தது. தற்போது அழக…
-
- 0 replies
- 904 views
-
-
விமர்சனம்: இறுதிப் போரில் பாலை உலகம் முழுவதும் நிகழும் முக்கிய நிகழ்வுகளை, கடந்த காலப் பதிவுகளை உடனுக்குடன் பதிவு செய்வதில் ஹாலிவுட் திரைக்கலைஞர்கள் எப்போதும் முன்னணியில் இருப்பவர்கள் என்றாலும் அவர்களுக்கு நாமும் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை மெய்ப்பிக்கும் வகையில் வெளிவந்திருக்கிறது ம.செந்தமிழனின் “பாலை’ திரைப்படம். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்குடி தமிழினத்தின் வரலாற்றைப் பேசும் இந்தப் படத்தில் உட்கருவாக ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை சொல்லியிருப்பது இயக்குநரின் சாமர்த்தியம். காட்சிக்கு காட்சி விரியும் பழந்தமிழர்களின் பண்பாடும் வாழ்வியலும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. உலகின் பெரும்பாலான பகுதிகளில் விலங்குகளை மனிதர்கள் வேட்டையாடிக்க…
-
- 1 reply
- 907 views
-
-
கொலைவெறியின் ரகசியம் என்ன? உண்மையை உடைக்கிறார் இசையமைப்பாளர் அனிருத் 'வொய் திஸ் கொல வெறி’ என்ற ஒரே பாடலின் மூலம் பிரபலத்தின் உச்சம் தொட்டிருக்கும் அறிமுக இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். அமிதாப் பச்சன், ஆனந்த் மஹிந்திரா தொடங்கி சர்வதேசப் பிரபலங்கள் வரை பலரும் இந்தப் பாட்டுக்குப் பாராட்டுத் தெரிவிக்க, இணையத்தில் காட்டுத் தீயாகப் பற்றி எரிகிறது பாடல். அனிருத்துக்கு வயசு 21. ஆளே ஜீன்ஸ் மாட்டிய கிடார் மாதிரிதான் இருக்கிறார். செம குறும்புப் பையன் என்பது பேசும்போது புரிகிறது. ஜஸ்ட் லைக் தட் ஜெனரேஷன்! ''ம்ம்ம்... என் அம்மாகிட்ட கேட்டா, மூணு வயசுலயே ஏதாவது பாட்டு கேட்டா பொம்மை கீ-போர்டில் நானே டியூன் போடுவேன்னு சொல்வாங்க. நாலு வயசுலயே பியானோ கத்துக்கிட்ட…
-
- 7 replies
- 2.4k views
-
-
நகைச்சுவையின் தன்னிகரில்லா கலைஞரான கவுண்டமணி பற்றி விகடன் வெளியிட்டுள்ள சில சுவாரஸ்யமான குறிப்புகள்: கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்க *சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம் * கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். ‘பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி’ என்பார் இயக்குநர் மணிவண்ணன்! * பாரதிராஜாதான் ‘கவுண்டமணி’ எனப் பெயர் மாற்றினார். ‘16 வயதினிலே’தான் அறிமுகப் படம்! * அம்மாவை ‘ஆத்தா’ என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்ட…
-
- 0 replies
- 787 views
-
-
அதிமுகவில் வடிவேலு. திசை மாறும் வைகைப்புயல். தொலைத்ததை தொலைத்த இடத்திலேயே தேடுவதுதான் சரியாக இருக்கும்’ என்பது வடிவேலுவுக்கு இப்போதுதான் புரிந்திருக்கிறது. அதனால்தான் அரசியலால் தொலைத்துவிட்ட சினிமா வாய்ப்பை மீட்டெடுக்க மீண்டும் அரசியலையே பயன்படுத்த முடிவு செய்திருக்கிறார் போலும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் பிரசார பீரங்கியாக வலம் வந்தவர் வடிவேலு. தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் அ.தி.மு.க. கூட்டணியை மேடைகளில் வறுத்தெடுத்தார். அதிலும் விஜயகாந்தை தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் வடிவேலு செய்த விமர்சனங்கள் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது. தி.மு.க. ஆதரவு தொலைக்காட்சிகள் கருணாநிதி, ஸ்டாலினை விட அதிகமாகக் காட்டியது வடிவேலுவைத்தான். …
-
- 1 reply
- 5k views
-
-
இதுவரை மன்னர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறு என்றிருந்த தமிழ்த் திரையுலகின் மரபுகளை உடைத்தெறிந்து, முதன் முறையாக 2000ஆண்டுகளுக்கு முந்தைய எளிய தமிழ் மக்களின் வாழ்வியலைப் பற்றி சித்தரிப்பதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது. இத்திரைப்படத்தை தமிழ் உணர்வாளரும், ஆய்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கியுள்ளார். அதோடு படத்தின் பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சுமார் 6 ஆண்டுகள் ஆய்வு செய்து இத்திரைப்படத்தின் கருவை உருவாக்கியுள்ளதாக அவர் கூறுகிறார். ஏ.ஆர்.ரகுமானிடம் இசைப் பயின்ற திரு. வேத் ஷங்கர், இசையமத்துள்ள படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தேசிய விருது பெற்ற “போஸ்ட் மேன்” குறும்படத்தின் ஒளிப்பதிவாளரான திரு அபிநந்தன் இராம…
-
- 2 replies
- 1.1k views
-