வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
பாலா இயக்கிய சேது படம் மூலம்தான் விக்ரமுக்கு தமிழ்சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் அதை தக்கவைத்துக்கொண்டு விக்ரம் ஒரு கமர்ஷியல் ஹீரோவாக மேலேறிவரமுடியவில்லை! இதை தில், தூள் படங்களின் மூலம் மாற்றிக்காட்டியவர் இயக்குனர் தரணி! இருவரும் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். கல்லூரிக் காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். இதைவிட ஆச்சர்யம்.. இருவருமே மிகப்பெரிய சாலை விபத்தில் சிக்கியவர்கள். இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்த தில், தூள் படங்களின் அதிரடி வெற்றியை தமிழ்சினிமா ஃபாக்ஸ் ஆபீஸ் அத்தனை சீக்கிரம் மறந்து விடாது! இப்படி இரண்டு மாபெரும் வெற்றிப்படங்களை கொடுத்தும்கூட இருவரும் நீண்ட நாட்களாக இணைந்து படம் பண்ணாமல் இருந்தார்கள். விக்ரம் - தரணி இருவருக…
-
- 0 replies
- 787 views
-
-
சமந்தாவுடன் மனோஜ் பாஜ்பாய் மற்றும் தமிழ் நடிகர்கள் சிலரும் நடித்திருந்த தி பேமிலி மேன் 2 தொடருக்கு தமிழ்நாட்டிலும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடமும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையில் ‘தி பேமிலி மேன்’ தொடரின் 3-வது பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்று சர்ச்சை கிளம்பியது. விஜய் சேதுபதி எப்படி சம்மதம் தெரிவித்தார் என்று மீண்டும் பரபரப்பு எழுந்தது. இந்நிலையில் தி ஃபேமிலி மேன் 3 தொடர் குறித்து விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் கூறியதாவது. “நான் ‘தி பேமிலி மேன் 2’ தொடரின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் நடிப்பது உண்மைதான். ஆனால், இந்தத் தொடரில் ஷாஹித் கபூர் ஹீரோ, நான் வில்லனாக நடிக்கிறேன். மனோஜ் பாஜ்பாயுடன் சேர்ந்து எந்தத் தொடரிலோ, …
-
- 0 replies
- 583 views
-
-
அப்படியெல்லாம் எளிதில் மறந்துவிட முடியாது இந்திய சினிமா வரலாற்றை...! கிராபியென் ப்ளாக் இந்தியசினிமாவின் நூற்றாண்டு விழா சிறப்பாக சென்னையில் நடந்தேறியது.அரசு ரூ. 10 கோடி வழங்கி விழா ஏற்பாட்டாளர்களை ஊக்குவித்தது.தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்தியாவின் சினிமா கலைஞர்கள் அனைவரும் ஒருசேர விழாவில் பங்கெடுத்துக்கொண்டார்கள்.அந்தந்த மாநில அரசு சார்பில், கலைஞர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது.தமிழ் சினிமாவில் ஏராளமான கலைஞர்கள் விருதுக்கு தேர்வு- பெற்றிருந்தார்கள். பழம் பெரும் நடிகைகள், நடிகர்கள், சூப்பர் ஸ்டார், உலகநாயகன் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.சினிமா எனும் மகத்தானஊடகத்தின் மூலம் மக்களின் வாழ்வில் இரண்டறக்…
-
- 0 replies
- 724 views
-
-
கொண்டாட்டத்துக்கானதுதானா கிருஷ்ணா நடித்த ‘பண்டிகை’? - பண்டிகை விமர்சனம் வேலுவுக்கு (கிருஷ்ணா) தனது பாஸ்போர்ட் மற்றும் வெளிநாட்டு வேலைக்காக நிறைய பணம் தேவை, சூதாட்டத்தால் இழந்த பணத்தையும், வீட்டையும் மீட்க முனிக்கு (சரவணன்) நிறைய நிறைய பணம் தேவைப்படுகிறது. கிருஷ்ணாவின் சண்டைத் திறனைப் பார்க்கும் சரவணன், அவரைப் ‘பண்டிகை’யில் கலந்து கொள்ள வைத்து பணம் பார்க்க நினைக்கிறார். திறமையான சண்டைக்காரர்கள் இருவரை மோதவிட்டு, யார் ஜெயிப்பார் என பந்தயம் கட்டி விளையாடும் "ஃபைட் க்ளப்" ஆட்டமே பண்டிகை. இழந்ததை மீட்க நினைத்து இருப்பதையும் இழந்து போகும் சரவணன், மீண்டும் ஒரு திட்டமிடுகிறார். அது என்ன திட்டம், பணம் கிடைக்கிறதா என்பதை ரத்தம் தெறிக்க தெறிக்க காட்ட…
-
- 1 reply
- 759 views
-
-
தமிழ் சினிமாவில் இப்போதுள்ள டைரக்டர்கள் அனைவரும் தமிழ் பெயர்களையும் தாண்டி சங்கத் தமிழ் வரைக்கும் சென்று பட தலைப்பை வைக்க சென்றுள்ளார்கள்.தமிழ் பட டைரக்டர்களுக்கு தமிழ் பற்று பொங்கி வழிகிறது. சங்க இலக்கியத்திருந்தெல்லாம் சொற்களை கண்டுபிடித்து படத்துக்கு டைட்டிலாக வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு முன் வாரணம் ஆயிரம், பொன்மாலை பொழுது, விண்ணைத்தாண்டி வருவாயா என கவுதம் மேனன்தான் அழகு தமிழில் பெயர் வைப்பார். லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு அஞ்சான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அஞ்சான் என்றால் எதற்கும் அஞ்சாதவன், பயப்படாதவன் என்ற பொருள். கே.வி.ஆனந்த் டைரக்ஷனில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு அனேகன் என்று டைட்டில் வைத்திருக்கிறார். அனேகன் என்றால் அனைத்த…
-
- 2 replies
- 941 views
-
-
ஆரவ்வை காதலிக்கவில்லை என்று ஓவியா மக்கள் முன்னிலையில் கூறிய வீடியோ..! பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை ஓவியா தனக்கென மக்கள் மனதில் மிக பெரிய இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் புதிய கடை ஒன்றின் திறப்பு விழா இன்று நடந்தது. அந்த கடையை ஓவியா திறந்து வைத்தார், அவரை பார்க்க மக்கள் கூட்டம் திரண்டு வந்துள்ளது. கடையை திறந்து வைத்த பிறகு மக்களிடம் பேசுகையில் ‘உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி, இதற்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். மேலும், கண்டிப்பாக பிக்பாஸ் 100வது நாளுக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் வருவேன்’ என்று கூற, ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தனர். அதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் ஓவியாவிற்கு பிடித்தவர் அனு…
-
- 4 replies
- 1.4k views
-
-
"திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன்"- நடிகை சமந்தா 'பாணா காத்தாடி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது 'மெர்சல்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து, தமிழில் முன்னணி கதாநாயகியாக இயங்கி வருகிறார், நடிகை சமந்தா. 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆனபோது, அதில் த்ரிஷா வேடத்தில் சமந்தா நடித்தார். அப்போது அறிமுக கதாநாயகனாக நடித்த நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவுடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. பல வருடங்களாக ரகசியமாக இருவரும் காதலித்துவந்தனர். இவர்களின் காதல், இரு வீட்டுப் பெற்றோர்களுக்கும் தெரியவந்த நிலையில், அவர்கள் காதலை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்துவைக்க சம்மதித்தனர். சமந்தா, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்…
-
- 3 replies
- 356 views
-
-
தங்கர்பச்சானின் உதவியாளர் கீரா இயக்கியுள்ள பச்சை என்கிற காத்து என்ற தமிழ் படத்தில் வரும் பாடல்களில் உள்ள வரிகள் ஈழத்தமிழர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக உள்ளது. இது தமிழக முதல்வரை எரிச்சல் படுத்தும் என்று அரசியல் அவதானிகளால் கருதப்படுகின்றது. இப்பாடல்கள் உண்மையாக தமிழை நேசிக்கும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே இப்பாடல் இடம் பெற்றுள்ள பச்சை என்கிற காத்து திரைப்படத்திற்கு பல நெருக்கடிகளை ,தனது அரசு இயந்திரத்தைக் கொண்டு, கலைஞர் ஏற்படுத்தக்கூடும் என்று தமிழக அரசியலை உற்று நோக்கும் அவதானிகள் ஆரூடம் கணிக்கத் தொடங்கி உள்ளனர். இம்மாதிரியான காரியங்களைச் செய்வதன் மூலம் அவர், காங்கிரஸின் மனசை குளிரச் செய்து கூட்டணியில் காங்கிரஸை நீடிக்கச் செய்யலாம…
-
- 0 replies
- 670 views
-
-
வினுசக்கரவர்த்தியின் வேலிக்காத்தான் வினுசக்கரவர்த்தியை அனைவருக்கும் நடிகராகத் தெரியும். ஒரு சிலருக்கு மட்டுமே அவர் ஒரு கதாசிரியர் என்பது தெரியும். 24 வயதில் இயக்குனராகும் வேட்கையில் சென்னை வந்தவர் அவர் என்பது பெரும்பாலானவருக்குத் தெரியாது. ஆனால் அவரது வேட்கை 64வது வயதில்தான் செயல்வடிவம் பெற்றிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், வினுசக்கரவர்த்தி படம் இயக்குகிறார். படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்துடன் அவரே படத்தையும் தயாரிக்கிறார். இசை இளையராஜா. வண்டிச்சக்கரம் மூலம் சினிமாவில் அறிமுகமானதால் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு சக்கரா கிரியேஷன்ஸ் என்ற பெயரை சூட்டியிருக்கிறார் வினுசக்கரவர்த்தி. படப்பிடிப்பை ஆர்ப்பாட்டமில்லாமல் தொடங்கியிருப்பவ…
-
- 0 replies
- 857 views
-
-
எம்.ஆர்.ராதாவின் கடைசி நாள்கள் சுதாங்கன் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட சுட்டாச்சு சுட்டாச்சு என்னும் புத்தகத்தின் இரண்டாம் பதிப்பில் சேர்க்கப்பட்ட பின்னிணைப்பு. எம்.ஆர்.ராதா கவர்ச்சிகரமான மனிதர். அவரது வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது. இன்றைக்கு, எம்.ஜி.ஆரைச் சுட்டவர் என்று மட்டுமே வெளி உலகுக்குத் தெரியும் ராதா நடிப்புக்கலையில் கைதேர்ந்தவராக இருந்திருக்கிறார். புரட்சிகரமான நாடகங்களை நடத்தியிருக்கிறார். அதற்காக அப்பொழுதைய காங்கிரஸின் அடக்குமுறைகளைப் பலவிதமாக எதிர்கொண்டிருக்கிறார். இவரது முழுமையான வாழ்க்கை வரலாறு இன்னமும் சரியாக எழுதப்படவில்லை... 12 ஜனவரி 1967 அன்று எம்.ஜி.ஆர் வீட்டில் நடைபெற்ற வாக்குவாதம், தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் யார் யாரைச்…
-
- 0 replies
- 2k views
-
-
ரஜினி பற்றிய கட்டுரை... மன்னிப்புக் கேட்ட இந்தியா டுடே! எந்திரன் படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன் அமெரிக்க ஆன் லைன் பத்திரிகையான ஸ்லேட் ஒரு சிறப்புக் கட்டுரை வெளியிட்டது. "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நீங்கள் இதுவரை அறியாத மிகப் பெரிய நடிகர்" என்ற தலைப்பில், அமெரிக்கர்களுக்கு ரஜினியை அறிமுகப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டிருந்த கட்டுரை அது. ரஜினியின் புகழ், அவரது படங்களின் லாஜிக் மீறல்கள், அவர் படங்களின் மூலம் குவியும் வருமானம் போன்றவற்றை வியப்பும், சற்றே எள்ளலும் கலந்த நடையில் கிராடி ஹென்ட்ரிக்ஸ் என்பவர் எழுதியிருந்தார். கட்டுரையின் ஆரம்பம் இப்படி இருந்தது: "ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ஜாக்கி சான் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. 1980லி…
-
- 0 replies
- 762 views
-
-
n எனக்கு மிகப் பிடித்திருந்தது பேட்டியின் இறுதிப் பகுதி தான்.. முக்கியமாக கடவுள், மதம் சம்பந்தமான கேள்விக்கான பதில் .. பகுதி 1 http://www.youtube.com/watch?v=66WuNg0XplE பகுதி ௨ http://www.youtube.com/watch?v=VDS__mpTxQo பகுதி 3 http://www.youtube.com/watch?v=7hbr-h-tc1w மிச்ச பகுதிகள் இன்னும் தரவேற்றப் படவில்லை போலிருக்கு... வந்தவுடன் இணைக்கின்றேன்
-
- 4 replies
- 873 views
-
-
84 வயதான சினிமா டைரக்டர் கே.பாலச்சந்தர் உடல்நிலை கவலைக்கிடம் 84 வயதான சினிமா டைரக்டர் கே.பாலச்சந்தர் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய உடல்நிலை கவலைக்கிடம் அடைந்ததை தொடர்ந்து ரஜினிகாந்த் ஆஸ்பத்திரிக்கு சென்று உடல்நலம் விசாரித்தார். கே.பாலச்சந்தர் தமிழ் பட உலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவர் கே.பாலச்சந்தர். இவருக்கு 84 வயதாகிறது. சமீபத்தில் இவருடைய மகன் கைலாசம் மரணம் அடைந்தார். அந்த சோகம் கே.பாலச்சந்தரை மிகவும் பாதித்தது. அதிர்ச்சியில் இருந்து அவர் மீளவே இல்லை. அதைத் தொடர்ந்து அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரமாக அ…
-
- 0 replies
- 2.4k views
-
-
http://www.youtube.com/watch?v=vtkrS2w_0T0 http://www.youtube.com/watch?v=uBdz8YPWuC8&feature=related
-
- 1 reply
- 1.4k views
-
-
ரஜினி அஜித்தின் அதிகாரவர்க்கம்: சிதைக்கப்பட்ட "சிகை" நடிகர் கதிர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது சிகை. இந்த படம் இன்று வெளிவந்துள்ளது என்பதே பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் பேட்ட , விஸ்வாசம் என தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைக்கும் இரு பெரும் ஜாம்பவான்கள் மோதிக்கொண்டுள்ள இந்த பொங்கலில் தெரிந்தே தேவையில்லாமல் வந்து மாட்டிக்கொண்டது சிகை. சினிமாவில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்கள் மக்களிடம் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறுவது உறுதி. அப்படி நல்ல வித்தியாசமான கதையம்சம் கொண்டிருந்தும் அதிகாரவர்க்கத்தால் ஏழை நீதிக்காக வாதாடுவது போன்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது கதிரின் சிகை படத்திற்கு. தியேட்டர் சிக்கல்கள், பட வியாபாரம் என பல விசயங்களை கடந்து படத்தை வாங்கக்கூட…
-
- 4 replies
- 1k views
-
-
நடிகர் பிரஜின் கதாநாயகனாக நடிக்கும் ‘நினைவெல்லாம் நீயடா’ எனும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த பலர் சிறப்பு அதிதிகளாக படக்குழுவினருடன் பங்குபற்றினர். ‘சிலந்தி’, ‘அருவாச்சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘நினைவெல்லாம் நீயடா’. இதில் பிரஜின், மணிஷா யாதவ், ரோஹித், யுவலட்சுமி, சினாமிகா, மறைந்த நடிகர் மனோபாலா, மதுமிதா, இயக்குநரும், நடிகருமான ஆர். வி. உதயகுமார், முத்துராமன், பி. எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். காதலை மை…
-
- 0 replies
- 577 views
-
-
கலீவரின் யாத்திரைகளில் வரும் குள்ளர்களின் உலகத்தை போன்று நார்நியாவும் ஒரு மாறுபட்ட அதிசய உலகம். இவ்வுலகத்தில் பேசும் மிருகங்கள், குதிரை உடலோடு தோன்றும் மனிதர்கள், வினோத தோற்ற ஜீவராசிகள் வாழுகிறார்கள். சி.எஸ்.லூயிஸ் என்பவர் எழுதிய குழந்தைகளுக்கான இந்த இலக்கியத்தொடர் ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக பரபரப்பாக விற்பனை ஆனது. சுமார் நாற்பத்தியொன்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட காவியம் இது. இவ்வரிசையில் மொத்தமாக ஏழு புத்தகங்கள் வெளிவந்திருக்கிறது. பீட்டர், சூசன், எட்மண்ட், லூஸி என்ற முக்கிய நாலு மனித கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு மேஜிக்கல் ரியலிஸம் வகையில் எழுதப்பட்ட நாவல் தொடர் நார்நியா. தொலைக்காட்சித் தொடர்களாகவும், மேடை நாடகங்களாகவும், வானொலி நாடகங்களாகவும் புகழ்பெற்ற நார…
-
- 0 replies
- 2.9k views
-
-
பார்ப்பனர்களை அப்பாவியாக சித்தரிக்கின்ற அரசியலுக்கு துணை போகின்ற கமல்ஹாசன் இந்துத்துவத்தின் இன்னொரு அரசியலுக்கும் தசாவதாரத்தின் மூலம் துணை போகின்றார். பாபர் மசூதி பிரச்சனைக்குப் பின் நடைபெற்றுவரும் இந்த அரசியலை சற்று சுருக்கமாகப் பார்ப்போம். “அறை எண் 305இல் கடவுள்” படத்தில் ஒரு காட்சி வரும். பிரகாஸ்ராஜ் ஒவ்வொரு மதத்தினதும் கடவுளின் வடிவத்தில் தோன்றுவார். இந்து மதத்தின் முறை வருகின்ற போது அங்கே விஸ்ணுவின் வடிவத்தில் பிரகாஸ்ராஜ் தோன்றுவார். இதுதான் அந்த அரசியல். சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தமிழ் சினிமாவின் பக்திப் படங்களைப் பார்க்கின்ற போது விஸ்ணு ஒரு துணைப் பாத்திரமாகத்தான் இருந்தார். இரண்டு மூன்று வசனங்களுக்கு மேல் அவருக்கு இருக்காது. தெலுங்கிலிருந்த…
-
- 2 replies
- 1.7k views
-
-
இது போன்ற தவறை மீண்டும் செய்ய மாட்டேன், 'குசேலன்' படத்தை திரையிட அனுமதியுங்கள் என்று ரஜினிகாந்த் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பிரச்சினையில், தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது பேசிய ரஜினிகாந்த் 'இந்த திட்டத்தை தடுக்க வந்தால் அவர்களை உதைக்க வேண்டாமா' என்று பேசினார். இதற்கு கர்நாடகா ரக்ஷனா வேதிகா அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இனி தமிழ் திரைப்படங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று கூறிவந்தனர். தொடர்ந்து வாசிக்க.... http://kisukisuc…
-
- 22 replies
- 4.8k views
-
-
கும்கியின் வெற்றியில் முதல் பலனை அனுபவிப்பது அதன் ஹீரோ விக்ரம் பிரபு தான். ஏற்கனவே எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில் 'இவன் வேறமாதிரி' என்ற படம் துவங்கப்பட்டு சூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது. இப்போது 'தூங்கா நகரம்' படத்தை இயக்கிய கௌரவ் இயக்கத்தில் யூடிவி தயாரிப்பில் 'சிகரம் தொடு' என்ற படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். மற்ற டெக்னீஷியன்கள், நடிகர் நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை. விக்ரம் பிரபுவும் இன்னொரு கார்த்தி போல முதல் பட வெற்றியில் சிகரத்தை தொட்டு விட்டார். வாழ்த்துக்கள் அவருக்கும், கௌரவ்விற்கும். http://www.soundcameraaction.com/cinema-news/item/1187-vikram-prabhu-signs-3rd-film-with-utv-titled-sigaram-thodu
-
- 0 replies
- 665 views
-
-
இந்தி பட உலகில்.. எனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது.. ஏ. ஆர் ரகுமான் பரபரப்பு தகவல்! டெல்லி: பாலிவுட் பட உலகில் தனக்கு எதிராக ஒரு கும்பல் தனக்கு எதிராக செயல்படுகிறது என்று இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார். இந்தியா முழுக்க இவர் பேட்டி பெரிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் உலகில் நடக்கும் உள் அரசியல் குறித்த நிறைய தகவல்கள் வெளியாக தொடங்கி உள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பின் வரிசையாக பலரும் முன்வந்து தாங்கள் அனுபவித்த கஷ்டங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த இசை அமைப்பாளர் ரகுமான் அதேபோல் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை குறித்து அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களைகுறிப்பிட்டுள்ளார். இசை அமைப்பாளர…
-
- 21 replies
- 2.6k views
-
-
http://www.youtube.com/watch?v=t-cn23FCOBM இந்த குறும்படம் சில தமிழர்கள் இன்றைய நிலையில் நேர்கொள்ளும் மறைக்கப்படும் சிங்கள பயங்கரவாத செயல்களை வெளியில் கொண்டுவந்துள்ளது. இதை உருவாக்கிய கலைஞர்கள் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரித்தானவர்கள். இப்படியான படைப்புக்களை ஊக்குவிப்பது எமது கடமை.
-
- 3 replies
- 479 views
-
-
நண்டு கொழுத்தா வலையில தங்காது.. வாய் கொழுத்தா வாழ்க்கை தங்காதுன்னு சொல்வாங்க… அது சிலர் விஷயத்தில் எப்போதுமே சரியாகத்தான் இருக்கிறது. சின்மயி விஷயத்தில் இது எப்படி என்று கீழ் வரும் அவரது பேஸ்புக் ஸ்டேடஸைப் படித்துவிட்டு சொல்லுங்கள்… ட்விட்டர், பேஸ்புக்கில் குழாயடிச் சண்டை நடத்தி, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அமைதியாக இருந்த சின்மயிக்கு, இப்போதுதான் சில வாய்ப்புகள் கிடைத்துள்ளன, பாடுவதற்கு. அந்த தைரியத்திலோ என்னமோ அவர் இன்று பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள சவால் ஸ்டேடஸைப் பாருங்கஷள்… “ஒரு வருடம் கூட ஆகல. தமிழ்நாட்டிலேந்தே துரத்த்தறேன், நீ பாடாம இருக்க அத செய்யறேன் இத செய்யறேன் ன்னு இந்த பேஜ் லயே வந்து மிரட்டினாங்க சில பேர். கடவுள் என்னையும் என் தாயாராயும் நல்லா காப்பாத…
-
- 1 reply
- 618 views
-
-
சென்னை: இசை படம் இளையராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் எடுக்கப்படுகிறதாம். இதில் ஏ.ஆர். ரஹ்மான் தோற்றத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். எஸ்.ஜே.சூர்யா இயக்கி, இசையமைத்து, நடிக்கும் படம் இசை. இந்த படத்தில் அவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தோற்றத்தில் நடிக்கிறாராம். படம் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கையைப் பற்றியது தானாம். இசைஞானி என்பதில் ஞானியைத் தூக்கிவிட்டு இசை என்று படத்திற்கு தலைப்பு வைத்துள்ளாராம் சூர்யா. படத்தில் இளையராஜாவை ரசிகர்கள் கடவுளாக நினைத்து வணங்கியது, போஸ்டர் அடித்து ஒட்டியது உள்ளிட்ட பல சம்பவங்கள் இடம்பெறுள்ளதாம். http://tamil.oneindia.in/movies/news/2013/07/isai-is-ilayaraja-s-biopic-178188.html
-
- 0 replies
- 400 views
-
-
தலைவா படம் இன்னும் சென்சார் ஆகவில்லை! அதற்குள் யூ சான்றுதழ் பெற்றுவிட்டதாக வந்த செய்திகள் தவறு என்று மறுத்தார் படத்தின் இயக்குனர் விஜய்! ஆனால் சென்சார் வட்டாரத்தில் விசாரித்தால் தகவல் வேறு மாதிரியாக உள்ளது! உண்மையில் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்ட தலைவா படத்தை நேற்று தணிக்கைக் குழுவினர் பார்த்திருக்கின்றனர். See more at: http://vuin.com/news/tamil/thalaivaa-facing-censor-issues
-
- 0 replies
- 487 views
-