Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. இன்று சார்லி சாப்ளின்(ஏப்ரல் 16) பிறந்த நாள் அதை முன்னிட்டு.... ஒரு காட்சி… பொருளாதார பெருமந்தம் சர்வதேசத்தையே முடக்கிப் போட்டிருந்த 1930கள்… பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் தொழிற்சாலைகளில் வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பு. அப்படியே கிடைத்தாலும் சம்பளம் வாங்குவதற்குள் உன்னைப் பிடி என்னைப்பிடி என்றாகிவிடும். ரொட்டி என்பது மிகக் காஸ்ட்லியான உணவு ஏழை மக்களுக்கு. அந்த சூழலில், எவ்வளவு வேலைச்சுமையாக இருந்தாலும் அதை செய்தே தீர வேண்டிய கட்டாயம் தொழிலாளர்களுக்கு. இன்னொரு பக்கம் வேலைப்பகுப்பு முறையின் கொடுமை. வேலைப் பகுப்பு முறை என்பது, “ஒருவருக்கு எந்த வேலை சரியாகச் செய்ய வருகிறதோ அதை மட்டுமே தொடர்ந்து செய்வது..” உதாரணம், திருகாணியின் மரையைத் திருகுவதுதான் ஒருவருக…

  2. மெல்போர்ன்: சென்னையைச் சேர்ந்த பிரபல தமிழ் நாடக நடிகர் பிரகாஷ், சிட்னியில் தான் தங்கியிருந்த ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதீத குடிபோதையில் அவர் இறந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர். ஆனால் அவர் அப்படிக் குடிப்பவரல்ல என்று சக நடிகர்ள் தெரிவித்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த ஒரு நாடகக் குழு 'ஷேக்ஸ்பியரின் ஏ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம்' என்ற நாடகத்தை பல்வேறு நாடுகளில் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மார்ச் 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை சிட்னி தியேட்டரில் நடத்தப்பட்டது. இந்தக் குழுவில் பிரகாஷும் இடம் பெற்றிருந்தார். இவர் சென்னையைச் சேர்ந்தவர். பிரபல நாடக நடிகர். மார்ச் 23ம் தேதி நாடகக் குழுவினர் நாடு திரும்ப சிட்னி விமான ந…

    • 1 reply
    • 1.2k views
  3. நடிகை டாப்சி: இந்தியில் பேச வற்புறுத்திய நபரிடம், 'தமிழில் பேசலாமா' என்று கேட்டு பதிலடி 24 நவம்பர் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionடாப்சி பன்னு தன்னை இந்தி மொழியில் பேச வலியுறுத்திய நபரிடம் நடிகை டாப்சி எழுப்பிய கேள்வி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச …

  4. குசேலன் திரைப்படம் - குமுதம் விமர்சனம் ரஜினிக்கு முதலில் கை குலுக்க வேண்டும். ஆக்ஷன், அதிரடி, மசாலா படங்களிலிருந்து விலகிக் கதைக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் நடித்ததற்கு. அதை ரசிக்கும்படி செய்ததற்குக் கூடவே ஒரு கொசுறு கை குலுக்கல். மலையாளத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட `கத பறயும் போள்' கதை. இரண்டு நண்பர்கள். ஒருவன் சினிமாவில் சிறந்து சூப்பர் ஸ்டாராகிறான். இன்னொருவன் உடைந்து போன நாற்காலியுடன் முடி திருத்தகம் நடத்துகிறான். இருவரும் முப்பது வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். இந்தச் சின்னப் பொறியை வைத்துத் திரைக்கதை செய்திருக்கிறார்கள், ரஜினிக்காக அதிகம் மாற்றாமல். சூப்பர் ஸ்டாரை, சூப்பர் ஸ்டாராகவே பார்ப்பது தமிழுக்குப் புதுசு. ரஜினியும் கதா…

    • 6 replies
    • 4.3k views
  5. [size=2]சூர்யா& கே.வி. ஆனந்த் கூட்டணியில் உருவாகி இருக்கும் மாற்றான் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. அதுவும் குறிப்பாக நார்வேயில் மாற்றான் படத்தை பெரிதும் எதிர்ப்பார்க்கிறார்கள். [/size] [size=2] காரணம் கே.வி.ஆனந்த் நாணிகோணி என்ற பாடல் காட்சிக்காக நார்வேயின் அற்புதமாக அழகை அப்படியே செல்லுலாய்டில் பதிவேற்றி இருக்கிறாராம். மேலும் நார்வேயில் வாழும் தமிழ் மக்கள் சூர்யாவிடம் காட்டிய அன்பை பார்த்து பெரிதும் வியந்தர்ராம் சூர்யா. நாணிகோணி பாடல் காட்சியை பார்ப்பதற்கு நார்வேயில் மாற்றா-னுக்கு பெரும் கூட்டம் வரும் என்பதில் ஐயமில்லை. [/size] http://pirapalam.net/news/cinema-news/maatraan-111012.html

  6. இந்திய அழகின் பிரதிநிதி நடிகை நமீதா என ஜப்பானின் புகழ்பெற்ற டோக்யோ தொலைக்காட்சி அறிவித்துள்ளது.உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அழகிய பெண்களின் புகைப்படங்கள், அவர்களின் அணுகுமுறை போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பிரபலத்தை அழகியாக அறிவிக்கிறது டோக்யோ டிவி. இந்த ஆண்டு இந்தியாவின் அழகியாக புகழ்பெற்ற நடிகை நமீதாவை அறிவித்துள்ளது டோக்யோ தொலைக்காட்சி. இந்தியாவின் புகைப்படக் கலைஞர் கார்த்திக் சீனிவாசன் எடுத்த புகைப்பட ஆல்பத்திலிருந்து நமீதாவின் ஒரு புகைப்படத்தைத் தேர்வு செய்து, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். http://pirapalam.com/index.php/12785.html

  7. ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கில் 'கபாலி' திரையிடல்! பாரீஸ் நகரில் உள்ள 'லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Grand Rex)' திரையரங்கில் முதல் இந்திய படமாக 'கபாலி' திரையிடப்பட இருக்கிறது. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். இப்படத்தை தணிக்கை செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜூலை 15ம் தேதி இப்படம் திரைக்கு வரும் என்று வெளிநாடு விநியோகஸ்தர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், இப்படம் பாரீஸ் நகரில் உள்ள 'லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Gr…

  8. கமலின் அதிரடி முடிவு - சாதகமா? பாதகமா? அரவிந்த கிருஷ்ணா கமல் ஹாஸன் அதிரடி ஆக்‌ஷன் படங்களுக்குப் பேர்போனவர் அல்ல. ஆனால் தேர்ந்தெடுக்கும் கதை விஷயத்திலும் படத்தைச் சந்தைப்படுத்துவதிலும் சில சமயம் அவர் மேற்கொள்ளும் முடிவுகள் பெரும் சலனங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. உருது எழுத்தின் சாயலில் எழுதப்பட்ட தலைப்பையும் உலகளாவிய பயங்கரவாதம் பற்றிய படம் என்னும் பரபரப்பையும் கொண்ட விஸ்வரூபம் திரைப்படம் கதைக்காகவும் சந்தைப்படுத்தும் உத்திக்காகவும் பரபரப்பாகச் செய்தியில் அடிபடுகிறது. பொங்கலை ஒட்டித் திரைக்கு வரத் தயாராக இருக்கும் விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதில் அதிரடியான ஒரு முடிவை எடுத்து ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகத்தினரின் கவனத்தைத் தன் வசம் திருப்பியிருக்கிறார் கமல். படத்தைத…

  9. “என் வாட்ஸப்ல அந்த நாலாவது மெசேஜ்..!?’’ - செம குஷி டிடி டிடியின் புதிய போட்டோ ஷுட் ஆல்பத்தை முழுமையாகக் காண.. இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்! ‘வாவ்... நம்ம டி.டியா இது!?’ - பாரம்பர்யம், எத்னிக், க்ளாஸிக், ரெட்ரோ... அத்தனை ‘லுக்’குகளிலும் மிளிர்கிறது திவ்யதர்ஷினியின் புதிய போட்டோ ஷுட். மஞ்சள் ஸ்டுடியோ பொட்டிக்கின் விளம்பர போட்டோஸ் அது. அதற்கு நிரஞ்சனி அகத்தியனின் டிசைனிங்கில் ‘அவ்ளோ அழகாக’ இருக்கிறார் டிடி. அதற்கு ‘லைக்ஸ்’ கொடுத்துவிட்டு, ’காபி வித் டிடியில பல பேரை நீங்க கேள்வி கேட்டிருப்பீங்க. இப்போ காபி வித் டிடிக்கு நீங்களே கெஸ்ட்டா வர்றீங்க. பேட்டியை ஸ்டார்ட் பண்ணலாமா..’ என எடுத்த பேட்டி இது. ’’ரொம்ப நாளா நீங்க பேட்டி எடுக்கணும்னு ஆச…

  10. சேட்டை மீதான விமர்சனங்கள் - கிழிபடும் போலித் திரை எஸ். கோபாலகிருஷ்ணன் 2011இல் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், தலைசிறந்த நடிகர்களில் ஒருவராகவும், சிறந்த மனிதராகவும் கருதப்படும் பாலிவுட் நடிகர் அமீர் கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் தயாரிப்பில் 'டெல்லி பெல்லி' என்ற படம் வெளியானது. அமீரின் உறவினரும் வளர்ந்துவரும் நாயகனுமான இம்ரான் கான் இந்தப் படத்தின் நாயகனாக நடித்திருந்தார். படம் பரவலான பாராட்டுகளையும் வணிக வெற்றியையும் பெற்றது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது என்ற தணிக்கை முத்திரையுடன் வெளியான இந்தப் படம் முழுவதும் மனிதக் கழிவுகள் மற்றும் பாலியல் சார்ந்த இரட்டை அர்த்தம் தொனிக்கும் வசனங்கள் இடம்பெற்றிருந்ததாக விமர்சனங்கள் தெரிவித்தன. ஆனால் டெல்லி பெல…

    • 2 replies
    • 642 views
  11. 'பருத்திவீரன்' வெளியாகி 14 ஆண்டுகள்: தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான 'பராசக்தி' மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்ற மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக நிலைத்து நின்றது. அதேபோல் பல வெற்றிப் படங்களில் நடித்தும் வித்தியாசமான படங்களில் நடிப்பவர் திறமை வாய்ந்த நடிகர் என்றெல்லாம் ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றும் திரைவானில் மின்னிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் கார்த்தியின் அறிமுகப் படம் 'பருத்திவீரன்' பல காரணங்களுக்காகத் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள திரைப்படம். மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு தரமான சினிமா, அ…

  12. சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப் பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக் கொண்டபுரம்!. கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் முற்போக்கான மேற்கோள்கள் தெறிக்கும். `பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி’ என்பார் இயக்குநர் மணிவண்ணன்! பாரதிராஜாதான் `கவுண்டமணி’ எனப் பெயர் மாற்றினார். `16 வயதினிலே’ தான் அறிமுகப் படம்! அம்மாவை `ஆத்தா’ என்று தான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டு விட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் …

  13. ஆறுமுகம் வெளியானதுக்கு அடுத்த நாள் பத்தி‌ரிகையாளர்களை சந்தித்தார் பரத். இதற்காகவே காத்திருந்தது போல் எடக்கு மடக்கான கேள்விகளால் அவரை துளைத்துவிட்டனர் நிருபர்கள். கேள்விகளில் முக்கியமானது அவரது அமெ‌ரிக்க பயணம் பற்றியது. ‌ரிலாக்ஸ் செய்வது என்றால் ‌ரிட்டர்ன் டிக்கெட்டுடன் அமெ‌ரிக்கா பறந்து விடுகிறார் பரத். அங்கே அவருக்கு காதலி இருப்பதால்தான் அடிக்கடி ஒபாமாவின் தேசத்துக்கு ஓடிப் போகிறார் என இன்டஸ்ட்‌ரி முழுக்க வதந்தி. இதையே ஒரு கேள்வியாக முன் வைத்தார் நிருபர் ஒருவர். அதுவரை கூலாக பதில் சொல்லி வந்தவ‌ரிடம் ஒரு பதற்றம். அய்யோ, அப்படியெல்லாம் இல்லீங்க என்றவர், அமெ‌ரிக்கா எனக்குப் பிடிச்ச இடம். அதுதான் அங்க போனேனே தவிர, காதலியெல்லாம் கிடையாது சாமி என்றார் சத்தியம் ச…

    • 4 replies
    • 1.6k views
  14. “Children of Heaven” சுவர்க்கத்துச் சிறுவர்கள் உலக சினிமா என்றாலே ஈரானிய சினிமாக்களுக்கு தனி இடம் உண்டு. அதனால்தான் ஒவ்வொரு வருடமும் சினிமாவிற்கு கொடுக்கப்படும் உயர் விருதுகள் பலவற்றை ஈரானிய சினிமாக்கள் தன்வசப்படுத்திவிடுகின்றன. அதுபோன்று உலக சினிமா இரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் “சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன்” (Children of Heaven) படத்தை பற்றித்தான் இன்று பார்க்கப்போகிறோம் . அலி, சாரா என்ற அண்ணன் தங்கையையும் அவர்களின் காலணியை பற்றியதும்தான் இந்தப் படம், ஒரு மசூதியில் வேலை செய்துகொண்டே, கிடைக்கும் கூலி வேலைக்கும் சென்று குடும்பத்தை காப்பாற்றுகிறார் கதையின் நாயகன் சிறுவன் அலியின் தந்தை. மூன்றாவது குழந்தை பிறந்து உடல்நிலை சரி இல்லாததால் வீட்டு வேலைகள் செ…

  15. மாற்று மற்றும் கனவுகள் நிஜமானால் படத்ழத இயக்கிய புதியவன் முழுக்க முழுக்க இலங்கையில் படமாக்கப்பட்ட மண் என்ற திரப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஈழத்து கலைஞர்களுடன் தென்னிந்திய நடிகர்கள் சிலரும் நடித்துள்ளனர். இந்த படம் உலகமெங்கும் எதிரி வரும் மாசிமாதம் திரைக்குவரவுள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் திரையில் ஒரு ஈழத்ததவர்களின் படைப்பு வரவுள்ளது. கோமாளிகள் வாடைக்காற்று போன்ற பேர் சொன்ன திரைப்படங்களின் பின் இந்த படமும் நிச்சயம் ஒரு முத்திரை பதிக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது. தென்னிந்திய தொழில் நுட்பத்தில் இந்த திரைப்படம் உருவாகியமையால் புதியவனின் தொலைக்காட்சி படங்களில் இருந்த தொழில் நுட்ப குறைகள் இதில் அருகிவிடும். தென்னிந்தியாவில் தற்போது எடிட்டிங்வேலைகளும் இலங்கையில் …

    • 82 replies
    • 19.8k views
  16. மாடி மனை, கோடி பணம், கண்ட பின்னும், குடிசை வாழ்வை மறக்காத வடிவேல்… வடிவேலுவின் மருமகள் யார் என்பது பற்றிய தகவல் ஒன்று வேகமாக பரவியுள்ளது. வடிவேலு தனது மகன் சுப்ரமணிக்கு புவனேஸ்வரி என்ற பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தார். அவர்களின் திருமணம் சொந்த ஊரில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் வடிவேலுவின் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டநிலையில் வடிவேலுவின் மருமகள் யார் என்ற விபரம் வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த புவனேஸ்வரியின் தந்தை மரவேலை செய்யும் கூலித் தொழிலாளி எனவும் குடிசை வீட்டில் வசித்த புவனேஸ்வரியை , வடிவேலு தன் வீட்டு மருமகளாக்கியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. …

  17. விஜய் படத்தில் தமிழீழ ஆதரவு கருத்துக்கள்... சீமானின் விறு விறு திரைக்கதை! விஜய் அடுத்து நடிக்கும் பகலவன் படத்தில் தமிழீல விடுதலைக்கு ஆதரவான கருத்துக்கள் இடம்பெறும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளார் சீமான். தமிழக மீனவர்களை பெரும் தொல்லைக்கு உள்ளாக்கியும் காயப்படுத்தி துன்புறுத்தியும் வரும் இலங்கை கடற்படையை கண்டித்து சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார் இயக்குநரும் நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான். இந்த ஆர்ப்பாட்டத்தில் சீமானின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்ததாக குற்றம்சாட்டி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது போலீஸ். தற்போது அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனாலும் சிறையில் இருந்தபடியே சில த…

  18. அண்மையில் நான் பார்த்த படங்களில் உலுக்கி எடுத்த இன்னொரு நல்லதொரு திரைப்படம்.OTT யில் வெளியாகியுள்ளதால் IPTV மற்றும் பல streaming தளங்களில் இப்படத்தை பார்க்கலாம். குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவை செய்கின்றவர்கள் எம் கண் முன் மிகவும் சாதாரணமாக உலவுகின்றவர்களே என்றதை நெற்றிப் பொட்டி பலமாக அறைந்து சொல்கின்றது இப் படம். பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் கண்டிப்பாக பாருங்கள் ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் கண்டிப்பாக பாருங்கள் பிள்ளைகளைப் பெற்றாதவர்களும் கண்டிப்பாக பாருங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து பாருங்கள் --------------- கார்கி: திரை விமர்சனம் ஒரு சிறுமி, அவள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் கூட்டுப் பாலியல்வன்கொடுமைக்கு…

  19. சிறந்த இயக்குனர் லோகேஷ்-சிறந்த நடிகர் சிம்பு: சைமா விருதுகள் Sep 12, 2022 17:21PM IST திரைத்துறையினருக்கு வழங்கப்படும் 2022 ஆம் ஆண்டுக்கான சைமா விருதுகள் வழங்கும் விழா பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருது இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கும், சிறந்த நடிகருக்கன விருது நடிகர் சிம்புவுக்கும் வழங்கப்பட்டது. நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியான படம் மாஸ்டர். இந்த படம் விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்கியதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு சிறந்த இயக்குனருக்கான சைமா விருது வழங்கப்பட்டது. கமல் நடிப்பில் ,…

  20. Started by kirubakaran,

    http://www.dinakaran.com/vannathirai/ :P :P :P :P

  21. இடைவிடாத படப்பிடிப்பு... இடையிடையே இலியானா தொந்தரவு... அனைத்தையும் மறந்து ரிலாக்ஸ் பண்ண மம்மியுடன் வெளிநாடு போகிறார் த்ரிஷா. 'கிரீடம்' படத்தில் அஜித்துடன் பிஸியாக நடித்து வருகிறார் த்ரிஷா. படப்பிடிப்பு தொடர்ந்து நடிப்பதால் மம்மியைகூட பார்க்க முடியவில்லையாம். 'கிரீடம்' படத்தில் இவருக்கு கல்லூரி மாணவி வேடம். அஜித்துக்கு? இப்போதைக்கு அது சஸ்பென்ஸ். இலியானாவும், எம்.எம்.எஸ்.சும்.தான் த்ரிஷாவின் பிரதான எதிரிகள். "நான் பீல்டுக்கு வந்து நாலஞ்சு வருஷமாச்சு. இந்த காலகட்டத்துல யார் யாரோ வந்திட்டுப் போய்ட்டாங்க. இலியானா எனக்கு போட்டினு சொல்றாங்க. சீக்கிரம் அவங்களுக்கும் போட்டிக்கு ஆள் வந்திடுவாங்க." ஏறக்குறைய சாபம் கொடுப்பதுபோல் சொல்கிறார். தனது ஆபாசப் படங்க…

    • 3 replies
    • 1.3k views
  22. சிம்பு சிக்குவாரா நயன்தாராவும் சிம்புவும் காதலித்துக் கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட அந்தரங்க புகைப்படங்கள் இண்டர்நெட்டில் வெளியாகி பெரிய பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறது. இதனால் சிம்புவுடன் பழகிய மற்ற நடிகைகளும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். சிம்புவும் நயன்தாராவும் நெருங்கி உறவாடும் இந்தப் படம் துபாயில் எடுக்கப்பட்டிருக்கிறது. துபாயில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தெலுங்கு பிரபலங்களும் தமிழ் பிரபலங்களும் போயிருந்தார்கள். அப்போது சிம்புவின் ஆட்டத்தை ரசிக்க நயன்தாராவும் போயிருந்தார். அங்கு தங்கியிருந்த இடத்தில் தான் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுத்தது யார்? இந்தக் கேள்விக்கு விடை தேடி கோலிவுட்டை துளாவினோம். …

  23. தனக்கென்று தமிழ் சினிமாவில் 'புதிய பாதை' போட்ட ரா. பார்த்திபன் தற்போது 'வித்தகன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமின்றி, மலையாளத்திலும் இவர் நடித்து வருகிறார். மலையாளத்தில் இவர் கதாநாயகனாக நடித்த 'மேல்விலாசம்' எனும் திரைப்படம் தமிழில் 'உள்விலாசம்' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்திய ராணுவத்தில் அடிக்கடி நிகழும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது. இப்படத்தை மாதவ் ராமதாஸன் என்பவர் இயக்கியிருக்கிறார். பார்த்திபனுடன் சுரேஷ் கோபி, 'தலைவாசல்' விஜய், 'நிழல்கள்' ரவி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை என்னவென்றால் ஜவான் ராமச்சந்திரனாக வரும் பார்த்திபன், தனது ராணுவ உ…

  24. இளையராஜா 75' நிகழ்ச்சியை தொடக்கி வைக்கிறார் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்.. தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற இருக்கும் இளையராஜா 75 நிகழ்ச்சியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கிறார். இந்த தகவலை விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்த நாள் மற்றும் அவரது வெற்றிகரமான இசை பயணத்தை கொண்டாடும் விதமாக வரும் பிப்ரவரி மாதம் 2ம் மற்றும் 3ம் தேதிகளில் பிரம்மாண்ட திரைக் கொண்டாட்டம் நிறைந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சி இரு தினங்களிலும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் முதல் நாளன்று இசைஞானியின் பாடலுக்கு முன்னணி திரை நட்சத்திர…

  25. எம்எஸ்வி – ஓர் அஞ்சலி வெ.சுரேஷ் கடந்த இரு வாரங்களாகச் சற்றே எதிர்பார்த்திருந்த தவிர்க்கவியலாத அந்தச் செய்தி இன்று காலை வந்தே விட்டது. ஆம், எம்எஸ்வி மறைந்துவிட்டார். இருபதாம் நூற்றாண்டு தமிழ் வாழ்வுச் சித்தரிப்பின் இன்றியமையாத அங்கங்களான, மக்களால் மாபெரும் கலைஞர்கள் என்று கொண்டாடப்பட்ட எம்ஜிஆர், சிவாஜி, கண்ணதாசன், (விசுவநாதன்) ராமமூர்த்தி என்ற மகத்தான ஆளுமைகளின் வரிசையில் நம்மோடு எஞ்சியிருந்தவரும் இன்று விடைபெற்று விட்டார். எப்போதும் நம்மைச் சூழ்ந்திருக்கும் அவரது பாடல்கள் இன்று முழுதும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அவற்றை உள்வாங்க முடியாமல் மரத்துக் கிடக்கிறது மனம். உண்மையில் சில தினங்களுக்கு முன் இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கும்போது எழுபதுகளில் வந்த தமிழ் திரைப்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.