வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் ஆகிய இரண்டு படங்களுமே குறைந்த பட்ஜெட்டில் படமெடுப்பவர்களை கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்து இருக்கிறது, குறிப்பாக தயாரிப்பாளர்களை! 50 கோடி, 90 கோடி, 150 கோடி என்கிற ரூபாய் கணக்கில் தயாரிப்பு செலவு எகிறும் படியாக படங்கள் தயாரிக்கப் பட்டு, அவைகள்தான் வெற்றி பெறுகின்றன என்று சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் இருந்த போதுதான் வெளிவந்தது, மிக குறைந்த பட்ஜெட் செலவுப் படங்களான பீட்சாவும் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படமும். இந்த இரண்டு படமும் வெளிவந்து படம் சூப்பர் ஹிட்டாக, வெற்றிப்பட நாயகனாகி விட்டார் விஜய் சேதுபதி. அதோடு, குறைந்த சம்பளம்தான் விஜய் சேதுபதி கேட்பதுவாம். இதையெல்லாம் விட இன்னொரு விஷயம் விஜய் சேதுபதி பிரபலமான…
-
- 0 replies
- 911 views
-
-
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வழங்க ஒலிம்பியா மூவிஸ் படநிறுவனம் தயாரிக்கும் படம் 'தேசிங்கு ராஜா'.இந்தப் படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார், கதாநாயகியாக பிந்து மாதவி நடிக்கிறார். இவர்களுடன் சூரி, சார்லி, சிங்கம்புலி, சிங்கமுத்து, ரவிமரியா, சாம்ஸ் ஆடுகளம் நரேன், ஞானவேல், வடிவுக்கரசி ஆகியோர் நடிக்கிறார்கள். கிளு கிளு ஆட்டம். [ photos ] இப்படத்திற்காக சமீபத்தில் விமல் – பிந்து மாதவி பங்கேற்ற “அம்மாடி அம்மாடி அய்யோடி அய்யோடி நெருங்கி ஒரு தடவை பார்க்கவா” என்ற கிளு கிளு பாடல் காட்சி படமாக்க அரங்கம் அமைக்கப்பட்டது. அதற்காக 15 லட்சம் ரூபாய் செலவில் பழ குடோன் அரங்கம் அமைக்கப்பட்டது.. பத்து நாட்கள் இப்பாடல் காட்சி அதிக பொருட்செலவில் படமாக்கப்பட்டது. கொமெடிக்கு முக்கியத…
-
- 0 replies
- 979 views
-
-
விமான நிலையத்தில் ஒன்றாகத் தென்பட்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன்! 1 சிம்மா விருது நிகழ்ச்சிக்காக சிங்கப்பூருக்குச் சென்றுள்ள நயன்தாரா, விமான நிலையத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஒன்றாகச் செல்லும் வீடியோவும் படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன. தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஜோடியாக 'நானும் ரவுடிதான்' என்ற படத்தில் நடித்தார் நயன்தாரா. அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். இதனையடுத்து, நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் ச…
-
- 11 replies
- 790 views
-
-
நேற்று நடந்த மலேசியா விமான விபத்தில் நடிகை நமீதா இறந்து விட்டதாக இணையதளங்களில் செய்திகள் கசிந்தன. இதனால் நமீதா, நான் அதிர்ஷ்டவசமாக விமான விபத்தில் இருந்து தப்பிவிட்டேன் என உருக்கமான தகவலை வெளியிட்டுள்ளார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்று அங்குள்ள தமிழ் மக்களுடன் கொண்டாட வேண்டும் என இரண்டு மாதங்களுக்கு முன்கூட்டியே அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பை ஏற்று நான் மலேசியா செல்ல முதலில் திட்டமிட்டேன். ஆனால் எனது அரசியல் பணிகள் என்னை மலேசியா செல்ல அனுமதிக்கவில்லை. என்னை மலேசியா செல்லவிடாமல் தமிழகத்தில் கட்சி பணியாற்ற சொன்ன மச்சானுக்குதான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். அவர் அப்படி தடுக்கவில்லை என்றால் சீனாவில் உள்ள தமிழ் எப்.எம்-இல் உலக மகளிர் …
-
- 1 reply
- 861 views
-
-
விம்பம் ஏழாவது குறுந்திரைப்பட விழா - யமுனா ராஜேந்திரன் 17 நவம்பர் 2012 விம்பம் கலை இலக்கிய அமைப்பின் ஏழாவது திரைப்பட விழா நவம்பர் 11 ஆம் திகதி மாலை 05.00 முதல் 09.30 வரை சட்டன் நகரத்தின் சிகோம்ப் திரையரங்கில் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து சமுராய், காதல், கல்லூரி மற்றும் வழக்கு எண் போன்ற பிரபலமான படங்களை இயக்கிய இயக்குனர் பாலாஜி சக்திவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சி திட்டமிட்டபடி 05.00 மணிக்குத் துவங்கியது. ஊடகவியலாளர் நடா.மோகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார். புகலிடம், தமிழகம், இலங்கை என மூன்று தொகுதிகளாகப் படங்கள் திரையிடப்பட்டன. புகலிடத்திலிருந்து ஐந்து படங்களும் இலங்கையிலிருந்து இரண்டு தமிழ் படங்களும் இரண்டு சிங்களப் படங்களும் ஒர…
-
- 0 replies
- 559 views
-
-
விரட்டும் செல்போன்கள்... மிரட்டும் கழுகு... சிட்டி ரீ-என்ட்ரி! - ரஜினியின் 2.0 டீசர் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. ஷங்கர் - ரஜினி கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது 2.0 திரைப்படம். கடந்த 2010-ம் ஆண்டு வெளியான, எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு உலக அளவில் எதிர்பார்ப்புக் கூடியிருக்கிறது. முழுக்க முழுக்க 3டி கேமராவைப் பயன்படுத்தி 2.0 படம் படமாக்கப்பட்டுள்ளது. கிராஃபிக்ஸ் வேலைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம், வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாகும் என்று …
-
- 3 replies
- 856 views
-
-
நடிகை அஞ்சலி வீட்டை விட்டு ஓடி சில நாட்கள் தலைமறைவாக இருந்தார். சித்தி பாரதிதேவி பணத்துக்காக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு கூறினார். பின்னர் ஐதராபாத் போலீசில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். தற்போது அங்கேயே முகாமிட்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அஞ்சலி ஐதராபாத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:- கேள்வி: வீட்டை விட்டு ஓடி பரபரப்பை ஏற்படுத்தி வீட்டீர்களே? பதில்:- எனது உறவினர்களால் வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதை ஒரு துரதிர்ஷ்டமாக நினைக்கிறேன். என் வாழ்க்கையில் நடந்த கெட்டகனவாக அதை மறந்து ரசிகர்களும் அதை மறக்க வேண்டுகிறேன். கே:- உங்களைப் பற்றி வதந்திகள் பரவுகிறதே? ப:- என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. அது ஏன் என்று புரியவில்லை.…
-
- 1 reply
- 981 views
-
-
சிறந்த பாப் இசை ஆல்பங்களுக்காக ஆண்டு தோறும் 'பிரிட்டிஷ் போனோகிராபிக் இண்டஸ்ட்ரி' எனும் அமைப்பு 'பிரிட் விருது' வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேற்று லண்டனில் உள்ள 'ஓ2 அரேனா' எனும் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பாப் பாடகி மடோனா கலந்து கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார். 2001 மற்றும் 2006ம் ஆண்டுகளில் சிறந்த பெண் பாப் இசைக் கலைஞர் பிரிவில் மடோனா வென்றிருக்கிறார். கடைசியாக 1995ம் ஆண்டில் இதே பிரிட் விருது வழங்கும் விழாவில் நிகழ்ச்சி நடத்தினார். அதன்பின் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் பாப் பாடகி மடோனா கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் மடோனா மேடையில் நடனமாடும்போது திடீரென சரிந்து விழுந்தார், …
-
- 2 replies
- 737 views
-
-
விருதுகள் வென்ற பிரபல பாடகர் மரணம் தன்னுடைய ஜாஸ் மற்றும் பாப் பாடல்கள் மூலம் புகழ் பெற்ற பாடகர் Al Jarreau, உடல்நல குறைவு காரணமாக இரண்டு வாரமாக மருத்துவமனையில் இருந்த நிலையில், நேற்று காலமானார். அவருக்கு வயது 76. Al Jarreau வின் மேனேஜர் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். 7 முறை கிராமி விருதுகள் வென்றுள்ள அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். http://tamil.adaderana.lk/news.php?nid=87909
-
- 0 replies
- 249 views
-
-
படங்கள் கமர்ஷியலாக வெற்றியும் பெற வேண்டும் கை நிறைய விருதும் கிடைக்க வேண்டும். அமீர் சேரன் போன்ற இயக்குனர்களின் ஆசை இது. அமீரின் 'ராம்' சைப்ரஸ் படவிழாவில் கலந்து கொண்டு இரண்டு விருதுகளை பெற்றது. 'பருத்தி வீரன்' இதனை மிஞ்சும் என்பது இவரது கணிப்பு. 2007 பொங்கலுக்கு 'பருத்திவீரன்' ரிலீஸாகிறது. ஆனால், போன வருடமே இப்படத்தின் சென்சார் முடிந்து விட்டது. 2007-ல் சென்ஸார் செய்தால் அடுத்த வருடமே அதாவது 2008-ல் தான் 'பருத்திவீரன்' தேசிய விருதுக்கான பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 2006-ல் சென்ஸார் செய்தால், அது 2006-க்கான படமாக கருதப்பட்டு 2007-தொடக்கத்திலேயே விருதுக்கு அனுப்பி வைக்கப்படும். அமீரைப் போல் மணிரத்னமும் தனது 'குரு'வை போன வருட கணக்கில் சேர்த்திருக்கிறார். மணி…
-
- 0 replies
- 994 views
-
-
பிரான்ஸ் பாரிஸில் இடம்பெறும் Auber International Film Festival இல் Best Original Screenplay பிரிவில் மதிசுதாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் விருதைப் பெற்றிருக்கின்றது . நீண்டகால கடின உழைப்பு ,தயாரிப்பிற்கான குழு முயற்சி ,தலைப்பு பிரச்சினை ,அதன் பின்னரான சுமூக தீர்வு என பல்வேறு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் குறித்த திரைப்படம் எங்கள் கதைகளுக்கான ஒரு அங்கீகாரமாக விருதை பெற்றிருக்கின்றமை உண்மையில் மகிழ்ச்சிகரமான விடயமே . படக்குழுவிற்கும் இயக்குனரிற்கும் எமது வாழ்த்துக்கள் . ஆதி விருதை பெற்றது மதிசுதாவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் - My Blog (ceylontamilnews.com)
-
- 9 replies
- 600 views
- 1 follower
-
-
விருந்து சாப்பாடு... இப்போதெல்லாம் பெரும்பாலான பேர் விருந்து என்றால் கன்னாபின்னா என்று சாப்பிட்டு மூச்சு விடக்கூட திணறுவதை காண முடிகிறது. இப்படிப்பட்டவர்கள் வயிறு முட்ட சாப்பிட்ட பிறகும் கூட ஸ்வீட், பாயாசத்தையும், ஆசை ஆசையாக உள்ளே தள்ளி விடுகிறார்கள். அவர்கள் சாப்பிட்ட ஒரு லட்டு அதில் உள்ள நெய் அல்லது எண்ணை, சர்க்கரை, பாயாசத்தில் உள்ள வெல்லம் அல்லது சர்க்கரை, தேங்காய், முந்திரி என்று ஒட்டு மொத்தமாக ஜ“ரணமாக 6 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. கொலஸ்ட்ரால், நீரிழிவு பிரச்சினை, போன்றவற்றால் உணவுக் கட்டுப்பாட்டுடன் இருப்பவர்கள் ஒரு வாக் சென்று வந்தால் உடம்பு சிறிது லேசானது போல் இருக்கும். ஆகவே பெரும்பாலும் மாலை 6 மணிக்கு மேல் இனிப்பு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.…
-
- 0 replies
- 1k views
-
-
கைதேர்ந்த பிஸினஸ்மேன் ஆகிவிட்டார் லிங்குசாமி. இவரது வியாபார நுணுக்கத்தை பார்த்து பலகாலம் தயாரிப்பில் இருப்பவர்களுக்கே ஆச்சரியம்! படங்களை இயக்கிக் கொண்டே திருப்பதி பிரதர்ஸ் படநிறுவனத்தை தொடங்கி வேறு இயக்குனர்களை வைத்து படம் தயாரிக்கிறார் லிங்குசாமி. 'தீபாவளி' படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பூபதிபாண்டியன் திருப்பதி பிரதர்ஸுக்காக படம் இயக்குகிறார். 'தீபாவளி' படம் முடிந்து விட்டது. எழில் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை பார்த்த ஜெயம் ரவியின் தந்தை எடிட்டர் மோகன் திருப்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இதன் ஆடியோ வெளியீடு பிரமாண்டமாக நடந்தது. தவிர, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி மூலமாக பெரிய அளவில் படம் குறித்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் லிங்குசாமி. இவரது விளம்பர யுக்திய…
-
- 0 replies
- 744 views
-
-
விரைவில் எனக்கு திருமணம்: ஸ்ரேயா நான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகின்றேன், பெற்றோர் எனக்கு மாப்பிள்ளை பார்க்கின்றனர் என நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். திருமணம் குறித்து ஸ்ரேயா அளித்த பேட்டியில், எல்லாம் அந்தந்த வயதில் நடக்க வேண்டும். பெற்றோருக்கும் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனவே நான் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டேன். பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையே திருமணம் செய்து கொள்வேன். திருமணத்துக்கு நான் சம்மதித்து விட்டதால் ஸ்ரேயாவுக்கு சினிமா வாய்ப்பு போய்விட்டது. அதனால்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்று வதந்திகள் பரவக்கூடும். சினிமாவுக்கும், திருமணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயவு செய்து இதனை புரிந்த…
-
- 6 replies
- 976 views
-
-
விரைவில் திருமணமாம் - புதிய வாய்ப்புகளை தட்டிக்கழிக்கும் அனுஷ்கா! [Wednesday 2014-09-17 22:00] அனுஷ்காவுக்கு முப்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்னவோ உண்மைதான். ஆனால் முன்னெப்போதையும் விட இப்போதுதான் கவனமாக அதற்கேற்ற மாதிரி கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிப்புக்கு தீனிபோடுவது போல தொடர்ந்து சரித்திரப்படங்களாக அவரைத்தேடி வருகின்றன. ஏற்கனவே. தெலுங்கில் குணசேகர் இயக்கத்தில் ‘ராணி ருத்ரமாதேவி’ என்ற படத்திலும் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ‘பாஹுபாலி’ என்ற சரித்திர படத்திலும் நடித்து வருகிறார் அனுஷ்கா. இதுதவிர சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக ‘லிங்கா’ மற்றும் அஜித்துக்கு ஜோடியாக அவரது 55வது படங்களில் நடித்துவருகிறார். இந்தப்படங்களுக்குப்பின்..? நிச்சயமாக டு…
-
- 10 replies
- 5.4k views
-
-
சொன்னது போலவே சனிக்கிழமை காலையே விற்பனைக்கு வந்துவிட்டது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் இசைத் தட்டுகள். இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் கடைகளில் கிடைத்தது எந்திரன் ஆடியோ சிடிக்கள். சர்வதேச அளவில் சனிக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு பாடல் சிடிக்கள் விற்பனைக்கு கிடைக்கும் என திங்க் மியூசிக் அறிவித்துள்ளது. சென்னையில் ரேடியோ மார்க்கெட் எனப்படும் ரிச்சி தெரு, பர்மா பஜார், தி நகர் மற்றும் வட பழனி பகுதிகளில் பெரும் வரவேற்புக்கிடையே எந்திரன் ஆடியோ சிடி விற்பனை துவங்கியது. புற நகர் பகுதிகளில் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எந்திரன் ஆடியோ சிடிக்களை வாங்கிச் சென்றனர். திங்க் மியூசிக் வெளியிட்டு இந்த சிடியின் விலை ரூ. 125. மொத்தம் 7 பாடல்கள். பாடல்கல் அனைத்துமே …
-
- 1 reply
- 897 views
-
-
ஆந்திர மாநிலம் கர்னூலில் நடந்த விலங்கு வதைக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டத்தில் நடிகை அமலா கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ’’நம் நாட்டில் விலங்குகளை வதைப்பது அதிகரித்து வருகிறது. அதைதடுக்க புளுகிராஸ் அமைப்பு பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறது. நம் நாட்டில் மாடுகளை உழவுக்கு பயன்படுத்து கிறார்கள். அப்போது மாடு களை கம்பு மற்றும் ஊசியால் குத்தி சித்ரவதை செய்கின்றனர். எனவே மாடுகளை உழவுக்கு பயன் படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். இதேபோல் சில சர்க்கஸ் நிறுவனங்களில் குரங்கு, யானை, நாய், கரடி, புலி போன்ற விலங்குகளை பயன்படுத்துகிறார்கள். அந் நிறுவனங்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் விலங்குகளை பாதுகாப்பது…
-
- 3 replies
- 1.7k views
-
-
கமல் மகள் சுருதிஹாசன் படங்களில் கவர்ச்சியாக நடிப்பதற்கு விமர்சனங்கள் கிளம்பியுள்ளது. 'டிடே' என்ற படத்தில் விலைமாது கேரக்டரில் ஆபாசமாக நடிப்பதற்கும் எதிர்ப்புகள் வந்துள்ளன. இதற்கு பதில் அளித்து சுருதிஹாசன் ஐதராபாத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- கமல் மகள் எல்லை தாண்டி கவர்ச்சியாக நடிக்கிறார் என்று என்னை விமர்சிக்கின்றனர். சினிமா என்பது ஒரு தொழில் நடிக்க வந்த பிறகு கதை என்ன கேட்கிறதோ அதில் முழுமையாக ஈடுபடவேண்டும். நீச்சல் உடையில் நடிக்க வேண்டிய நிலை வரும் போது நடிக்கத்தான் வேண்டும். அது தவறல்ல. விலைமாது கேரக்டரில் நான் ஆபாசமாக நடிக்கிறேன் என்கின்றனர். கலைகண்ணோட்டத்தோடு அதை பார்க்க வேண்டும். நிறைய நடிகைகள் விலைமாது கேரக்டரில் கவர்ச்சியாக நடித்துள்ளனர். அவர்களை யாரு…
-
- 0 replies
- 919 views
-
-
நடிகை சன்னி லியோன் சமீபத்தில் 'கரென்ஜித் கெளர்' என்ற அவரது வாழ்க்கையைச் சித்தரிக்கும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பெயர் சர்ச்சைக்குள்ள நிலையில், தமது தொழில் குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பிபிசிக்கு சன்னி லியோன் அளித்த நேர்காணல்.
-
- 3 replies
- 1.3k views
-
-
பயணங்கள் முடிவதில்லை, மெல்லத் திறந்தது கதவு, விதி, 24 மணி நேரம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து அக்காலத்ஹ்டில் வெற்றிநடை போட்டவர் மோகன். பல படங்களில் மேடைப் பாடகராக நடித்ததால் 'மைக்' மோகன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். 'உருவம்' படத்தினை அடுத்து படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பின்னர் அவரை தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க அழைப்பு விடுத்தனர். அதற்கு மறுத்த மோகன், பெரியதிரை தான் என் இடம் என சொல்லி அனுப்பிவிட்டார். பிற ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் குணசித்திர வேடத்தில் நடிக்க வந்த வாய்ப்புகளையும் 'நடித்தால் - ஒன்லி ஹீரோ' என தவிர்த்த மோகன், பல வருடங்கள் கழித்து 'அன்புள்ள காதலுக்கு' என்னும் படத்தை இயக்கி நடித்தார். அப்படம் மக்களிடையே வரவேற்…
-
- 0 replies
- 419 views
-
-
வில்லு படத்தின் ஷ•ட்டிங் அங்கே நடைபெறும் நாளில் இருந்தே, தகவல்களுக்கு பஞ்சமில்லை. நயன்தாரா, விஜய் இருவரும் ஜாலி டூயட் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் ஒருபக்கம். ஆனால் டயலாக் பேசி நடிக்க வேண்டிய பிரகாஷ்ராஜ், டயர்டாகி திரும்பிவிட்டார் இன்னொரு பக்கம். காரணம்? வைகைப்புயல்... பாடல் கட்சிகள் மட்டுமல்ல, படத்தில் இடம் பெறும் வசனக்காட்சிகளையும் அங்கு எடுக்க திட்டமிட்டிருந்த இயக்குனர் பிரபுதேவா, நாயகன், நாயகி, மற்றும் பிரகாஷ்ராஜ், ஸ்ரீமன் ஆகியோருடன் ஸ்விட்சர்லாந்து போய்விட்டார். இவர்களுடன் பிளைட் ஏற வேண்டிய வடிவேலு மட்டும், கடைசி நேரம் வரைக்கும் ஏர்போர்ட்டுக்கு வரவேயில்லை. அடுத்த பிளைட்டில் வந்து சேர்வார் என்று நம்பி பிளைட் ஏறிய யூனிட்டிற்கு அதிர்ச்சி. அடுத்தடுத்த பிளைட்டுகள் ஸ்விட…
-
- 0 replies
- 997 views
-
-
வில்லன் ராஜபக்ச: பட்டையை கிளப்புகிறது கத்தி! கத்தி படம் தொடர்பாக தமிழ் அமைப்புகளுடன் பேச தயார், எனக்கும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது என லைகா படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ் கரண் அல்லிராஜ், சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். துப்பாக்கி படத்திற்கு பிறகு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ”கத்தி”. விஜய் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். லண்டனை சேர்ந்த லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய்யின் சமீபத்திய படங்ளை போன்று ”கத்தி” படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தமுறை கிளம்பியிருக்கும் எதிர்ப்பு சற்று சிக்கலானது. அதாவது படத்தை தயாரித்திருக்கும் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரண் அ…
-
- 0 replies
- 743 views
-
-
வில்லியம் வாலஸும் மெல் கிப்சனும் [ ஞாயிற்றுக்கிழமை, 03 மே 2015, 11:03.04 AM GMT ] தமிழினத்தின் புனித மண்ணாக அறிவிக்கப்பட வேண்டிய முள்ளிவாய்க்கால் மண் ரத்தத்தால் நனைந்த நாளை நினைவுகூரும் விதத்தில், 2010ல், கோயம்பேடு அங்காடியில் ஓர் உருக்கமான நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார் பெருவணிகரும் தயாரிப்பாளருமான நண்பர் மணிவண்ணன். சுமார் ஆயிரம்பேர் திரண்டனர். கொல்லப்பட்ட உறவுகளின் நினைவாக மெழுகுவர்த்திகளை ஏற்றினர். அந்த நிகழ்வில் முதல் மெழுகுவர்த்தியை ஏற்றியவர், மறைந்த இயக்குநர் ஆர்.சி.சக்தி. மறுநாள் சக்தி சாரைச் சந்தித்து நன்றி தெரிவித்தபோது, கண்கலங்க அவர் என்ன சொன்னார் என்பதை சக்தியின் சகோதரன் கமல் தெரிந்துகொள்ள வேண்டும். "அந்த மக்களை சர்வதேசம் காப்பாற்றியிருக்க வேண்டும்...…
-
- 0 replies
- 427 views
-
-
வில்லியாக நடிக்கிறார் நமிதா டி.ராஜேந்தர் இயக்கும் படத்தில் வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நமிதா. நமிதா நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்ப் படம் ‘இளமை ஊஞ்சல்’. 2016-ம் ஆண்டு ரிலீஸானது. அதே ஆண்டு மலையாளத்தில் ரிலீஸான ‘புலி முருகன்’ படம்தான் பிற மொழிகளில் நமிதா நடித்து வெளியான படங்களில் கடைசிப் படம். அதன்பிறகு எந்தப் படமும் வெளியாகவில்லை. அரசியலில் ஆர்வம் காட்டிய நமிதா, அதிமுகவில் உறுப்பினராக இணைந்தார். ஒருசில அதிமுக கூட்டங்களில் பங்கேற்கவும் செய்தார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலிலும் ஆர்வம் காட்டாமல், தொழிலதிபரான வீரேந்திர செளத்ரியைக் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். …
-
- 0 replies
- 613 views
-
-
தமிழ் நாட்டிலிருந்து புறப்பட்ட அம்பு, அயல்நாட்டில் செட்டில் ஆகியிருக்கும் தீவிரவாதிகளை பஞ்சராக்குகிறது. ஏன்? 'அம்பு' யாரென்று சொல்லத் தேவையில்லை. கொலைகள் ஏனென்பதுதான் கதையின் மைய முடிச்சு. குக்கிராமத்திற்கு வரும் நயன்தாராவை ஒரே நொடியில் மனசுக்குள் வீழ்த்துகிறார் விஜய். காதலாகி கசிந்துருகும் நயனின் உதவியோடு வெளிநாட்டுக்கு பறக்கிறார். அங்குதான் நயனின் அப்பா பிரகாஷ்ராஜ் இருக்கிறார். சம்பந்தம் பேசுவதற்காகதான் இந்த பயணம் என்று நாம் யோசித்தால், அடுத்தடுத்த படிகள் என ஃபாஸ்ட் ஸ்டெப் வைக்கிறார் விஜய். ஏகப்பட்ட கொலைகள். எக்கச்சக்க சண்டைகள். இறுதியாக அப்பாவை கொன்ற நால்வரை நசுக்கிவிட்டு அம்மாவின் விரதத்தை முடித்து வைக்கிறார் விஜய். நம்பி கழுத்தறுக்கிற வேடம் விஜய்க்கு. நம்…
-
- 1 reply
- 2.9k views
-