வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
ஹாலிவூட் அதிரடி ஆக்சன் திரைப்பட விமர்சனம்! ஒரு தாக்குதலை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க வேண்டுமாயின் சிறந்த திட்டமிடல் அவசியம். திட்டமிடலுக்கு அடுத்த கட்டமாக ஆயுத வளம், மனித வலு,மற்றும் தாக்குதலுக்கான இலகு வழிகளைக் கண்டறிவது அவசியமாகின்றது. குறுகிய வளங்களுடன், பெருமளவான சேதத்தினை ஏற்படுத்தக் கூடிய தாக்குதலை செய்வதற்கு பல குறுக்கு வழிகளைக் கையாள வேண்டியிருக்கலாம். அதே வேளை, ஆயுத வளம் இல்லாத சந்தர்ப்பத்தில் சுயமாக தமக்கு உள்ள அறிவின் அடிப்படையில் ஆயுதங்களையும் வடிவமைக்க வேண்டிய சாத்தியம் ஏற்படலாம். அமெரிக்க உளவுத்துறையினைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட கும்பலானது, CIA நிறுவனத்தின் நடவடிக்கைகள் பிடிக்காததன் காரணத்தினால் CIA நிறுவனத்தினை அழிக்க முயற்சிக்கின்றார்கள். இது சாத்தியமா…
-
- 0 replies
- 531 views
-
-
The Mehta Boys- அப்பா - மகன் உறவு பற்றி நான் பார்த்த படங்களில் மிகச் சிறந்த, அருமையான படம்! எந்த போலித்தனமான, சினிமாத்தனமான template களும் இல்லாத, நல்லதொரு படம். அநேகமான அப்பாக்களும் மகன்களும் ஒரு குறிப்பிட்ட வயதின் பின் கட்டி இணைப்பதில்லை.. கொஞ்சுவதில்லை.. சேர்ந்து ஒரு வேளை சாப்பிடுவது கூட இல்லை. அப்படி அணைக்கும், hug பண்ண மனசு விரும்பும், சேர்ந்து உண்ணும் தருணங்களை போலி ego நிராகரித்து விடும். ஆனால் அப்படி செய்யாமல் விட்டு, அப்பாவை புரிந்து கொள்ளும் முயற்சிகளை வேண்டும் என்றே ego காரணங்களால் மறுத்தமையால் உருவாகும் காயங்கள் வலி மிகுந்தவை. ஆயுள் வரைக்கும் ஆறாதவை. நான் அந்த வலியை அனுபவிக்கின்றவன். …
-
-
- 1 reply
- 292 views
-
-
சங்க இலக்கியங்கள் காதலையும், காமத்தினையும் கைக்கிளை, பெருந்திணை எனும் இரு வேறு பிரிவுகளினூடாகப் பிரித்து நிற்கின்றன. ஆனால் இன்றைய மாறி வரும் நாகரிகச் சூழலுக்கு அமைவாகவும், மனித உணர்வுகளை மதிக்கப் பழக வேண்டும் எனும் நல் எண்ணத்தின் வெளிப்பாட்டிற்கமைவாகவும் ஓரினச் சேர்க்கையினையும் தமிழ் இலக்கியப் பகுப்பினுள் உள்ளடக்கி அங்கீகரிக்க வேண்டிய நிலைக்கு எம் தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டிருக்கின்றது. கைக்கிளை என்பது ஒரு தலைக் காதலாகவோ அல்லது ஒருவர் தனது மனதுக்குப் பிடித்தவரைப் பற்றி மனதால் விரும்பி வாழுதலை குறித்து நிற்கிறது. பெருந்திணை என்பது பொருந்தாத காதல் மற்றும் காமத்தினைப் பற்றிப் பேசி நிற்கிறது. அண்மைக் காலத்தில் எம் சமூகத்தில் காலாதி காலமாக நிலவி வந்த ஓரினச் சேர்க்கைய…
-
- 1 reply
- 1.5k views
-
-
மேலை நாட்டிற்கு வந்த ஆரம்பத்தில் இருந்த குறைவான நேரத்தில் சிறந்த படங்களை பார்க்கும் நோக்கில் வேலையில் ஒரு வேலை நண்பரிடம் சிறந்த படம் ஏதாவது கூறுங்கள் என கூறிய போது அவர் கூறிய திரைப்படம் இந்த திரைப்படம். முதல் தடவை இந்த திரைப்படத்தினை பார்த்தபோது அது எனது எதிர்பார்ப்பினை எட்டியிருக்கவில்ல்லை என்பதுதான் உண்மை, ஆனால் பின்னர் ஒரு தடவை தொலைக்காட்சியில் பார்த்தபொது அது ஈர்த்தது, பல தடவை வேலை இடைவேளைகளில் இந்த திரைப்படத்துணுக்குகளை இன்றுவரை பார்ப்பதுண்டு அவ்வாறு இந்த திரைப்படம் பாதிப்பினை ஏற்படுத்தும் படம். பொதுவாக ஒரு தடவை பார்த்த படத்தினை திரும்ப பார்க்கும் பொறுமை இருப்பதில்லை ஆனால் இந்த திரைப்படம் எனதளவில் ஒரு வித்தியாசமான படம். இந்த திரைப்படத்தின் கரு நம்பிக்கை ( அவ்வ…
-
-
- 5 replies
- 266 views
-
-
The Song of Sparrows அழகியலுடன் கூடிய ஒரு கவித்துவமான சிறுகதையை வாசித்தது போன்ற உணர்வை தருகிறது இரானிய இயக்குனரான மஜித் மஜீதியின் ’தி சாங் ஆஃப் ஸ்பாரோஸ்’ திரைப்படத்தைப் பார்க்கையில். புறநகரில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் கரீமிற்கு நெருப்புக் கோழி பண்ணையில் செய்யும் வேலைதான் வாழ்வாதாராம். நெடிது வளர்ந்திருக்கும் அக்கோழிகளை பராமரிப்பதும், அதன் முட்டைகளை வேனில் ஏற்றி சந்தைக்கு அனுப்புவதும்தான் அவன் அன்றாட வேலை. காது கேளாத மூத்த மகள், மிகவும் சூட்டிகையான மகன் மற்றும் இளைய மகளையும் கரீம் பண்ணையில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான் போஷித்து வருகிறான். வேலை முடிந்து தன் ஓட்டை பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த கரீம் வீட்டின் அருகில் மகன் தன் வயதை…
-
- 0 replies
- 860 views
-
-
The way back ஆங்கில சினிமா சுதந்திரத்திற்கான வேட்கை அடக்க முடியாதது. மற்றவனுக்கு தாழ் பணிவதும், அடங்கி வாழ்வதும், கொடும் சிறையில் அடைக்கப்பட்டு அல்லலுறுவதும் எந்தவொரு மனிதனுக்கும் உவப்பானதல்ல. அதுவும் செய்யாத குற்றத்திற்காக அடைபட்டுக் கிடப்பது கொடூரமானது மட்டுமல்ல அவலமானதும் கூட. Janusz (Jim Sturgess) சிறையில் அடைபடுகிறான். அவன் குற்றம் செய்யவில்லை என்பது சூசமாக எமக்கு உணர்த்தப்படுகிறது. அவனது மனைவியே அவனுக்கு எதிராகச் சாட்சி சொல்வதைப் பார்க்கிறோம். பயத்தில் உறைந்த முகமும், கலைந்து கிடக்கும் கேசமும், சிவந்த கண்களும், முட்டிக் கொண்டு வரும் கண்ணீரும், அது உதிர்வதைத் தடுக்க முயலுவதுமாக அவள். மறுபு…
-
- 0 replies
- 593 views
-
-
Thiruvilaiyaadal Arampam - watch Online http://www.oruwebsite.com/movies/thiru1.html
-
- 1 reply
- 2.4k views
-
-
காக்கக் காக்கவுக்குப் பின் ஜீவனுக்குக் கிடைத்திருக்கும் அதிரடிப் பாத்திரம். படத்தின் முற்பகுதி முழுவதும் தன்னை ரவுடியாகவளர்த்த போலீஷ் காரனுக்காக கொலை செய்யும் கதாநாயகன் படத்தின் இறுதிப் பகுதியில் அந்தப் போலீஷ் காரனையே எதிர்த்து தனது காதலிக்காக உயிரை விடுவதுதான் கதை. இதில் பரிதாபம் என்னவென்றால் காதலியின் கைய்யாலேயே அவர் உயிரை விடுவதுதான். ஜீவனின் அலட்டிக் கொள்ளாத நடிப்பும், போலீசு ரவுடியாக வரும் வில்லனின் நடிப்பும் அபாரம். பல படங்களில் பார்த்த கதைதான். ஆயுதம் எடுத்தவன் அதனாலேயே சாவான் என்று மீண்டுமொருமுறை சொல்லியிருக்கிறார்கள். பரவாயில்லை !
-
- 0 replies
- 853 views
-
-
சினிமா பாத்தேன்னா விமர்சனம் எழுதற பழக்கமே இல்ல. ஏன்னா விமர்சனம் பண்ற அளவுக்கு நம்ம பொதுஅறிவு கிடையாது. படத்துல நமக்கு பிடிச்ச காட்சிகளையும் அதை பார்வையாளன் பார்வையில சொல்றதும்தான் எனக்கு பிடிச்சது. அதுவும் ஆங்கில படம்னாவே ரெண்டு அடி தள்ளியே நிப்பேன். நேத்திக்கு என்னவோ ஆங்கிலப் படம் பாக்கணும்னு வெறி வந்துடுச்சி சரி பாத்துருவோம்னு பக்கத்துல இருக்குற டப்பா டி.வி.டிகடைக்கு போனேன். என் அறிவுக்கு எட்டிய வரைக்கும் ஆங்கிலத்துல தமிழ்ல டப் செய்யப்பட்ட படங்கள்தான் ஆங்கிலப்படங்கள்னு சொல்வேன். அதனால நம்ம விஷயத்துல ஆங்கிலப்படம்னாவே அனகோண்டா, ஜுராசிக்பார்க் இந்த லெவல்தான். கடைக்காரர்கிட்டயே கேட்டேன் எதுனா நல்லா ரசிச்சி பாக்கற மாதிரி படம் இருந்தா குடுங்கண்ணேன்னு அவரும் அருமையா இருக்கும்ன…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தாஸ் (சசிக்குமார்), அவரது மனைவி வசந்தி (சிம்ரன்), இரு மகன்கள் (மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ்) ஆகிய நால்வரும், அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால், பொருளாதார அகதிகளாக ஆக்கப்பட்டு படகில் ராமேஸ்வரத்திற்குத் தப்பித்து வருகிறார்கள். அங்கிருந்து, வசந்தியின் அண்ணன் (யோகி பாபு) உதவியுடன் சென்னையிலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் குடியேறி புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறது தாஸின் குடும்பம். Tourist Family review தெருக்காரர்களிடம் ஈழத் தமிழர்கள் என்பதை மறைத்து, சகஜமாக வாழத்தொடங்கும்போது, ராமேஸ்வரத்தில் நடக்கும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தாஸின் குடும்பத்தைத் தேடுகிறது காவல்துறை. இச்சம்பவத்திற்கும் தாஸ் குடும்பத்திற்கும் தொடர்பிருக்கிறத…
-
-
- 6 replies
- 646 views
-
-
சக மனிதனின் அழுகைதான் இருப்பதிலேயே மிகப்பெரிய ஆயுதம். அந்த ஆயுதம் உயிரோடு கொன்று போடும். செத்த பின் இல்லாமல் செய்து விடும். இப்போது நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அதே கதை தான் இந்தப் படத்தின் கதை. Train to Busan - Director : Yeon Sang-ho -South Korean- 2016 மனைவியை பார்க்க தன் 7 வயது பெண் பிள்ளையை அழைத்துக் கொண்டு ஹீரோ Busan க்கு பயணிக்கிறான். அதே ட்ரைனில்...ஒரு ஜோடி... அவள் நிறை மாத கர்ப்பிணி வேறு. கல்லூரி டீம் நண்பர்கள். அதிலும் ஒரு ஜோடி. வயதான அக்கா தங்கை...ஒரு பிச்சைக்காரன்.. என்று அந்த கப்பார்ட்மெண்ட் ஆட்கள். ட்ரெயின் கிளம்பிய நொடியில்..... கடைசி நேரத்தில் ஒரு பெண் ஓடி வந்து ஏறுகிறாள். வினை சொட்டும் குருதிப் பு…
-
- 0 replies
- 500 views
-
-
எல்லாரும் இந்த படத்தை பாருங்கள் என்று சொன்னதால் இன்று இருந்து இப் படத்தை பார்த்தேன் ...இன்றைய கால கட்டத்தில் வட,கிழக்கில் உள்ள தமிழர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் ...இப்ப எல்லோருக்கும் நேரம் இருக்கும்....பொறுமையாய் இருந்து இப் படத்தை பாருங்கள். பகத் பாசில் இந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்...எப்படி இப்படி ஒரு படத்தை சென்சார் வெளியில் விட்டார்களோ தெரியவில்லை ...படத்தை இயக்கியது ஒரு முஸ்லீம்...நம்மட கெளதம்மேனனும் படத்தில் இருக்கிறார் . அநேகமாய் இப்படியான படங்கள் வந்தால் அபராஜிதன் வந்து எழுதுவார் ...ஆளைக் காணவில்லை ...EINTHUSANல் பார்க்கலாம்
-
- 58 replies
- 8.1k views
- 1 follower
-
-
வலுவில்லாத ஒரு திரைக்கதையின் மூலம் எந்தவொரு அதிஉயர் கன்சப்டையும் சிதைத்துவிட முடியும் என்பதற்கு இந்தத் திரைப்படம் ஒரு உதாரணம். இருந்தாலும் படத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட Concept நவீன யுகத்தின் அதி உன்னத கண்டுபிடிப்பாக போற்றப்படும் இணையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இவற்றின் பாரதூரம் பற்றிய ஒரு சீரியஸ் அலசலை படத்தின் இயக்குனர் Wally Pfister மேற்கொண்டிருக்கிறார். இவர் கிறிஸ்டோபர் நோலனின் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். ஒளிப்பதிவுக்காக ஆஸ்கார் விருதையும் வென்றிருக்கிறார். நோலனின் பாதிப்பு படத்தில் நிறைய இடங்களில் தெரிவது தவிர்க்க முடியாததாகிறது. திரைப்படத்தில் பல இடங்களில் நிறைய விஞ்ஞான புனைவுத் திரைப்படங்களை நினைவூட்டுவதை தவிர்க்க முடியவில…
-
- 2 replies
- 1.6k views
-
-
TRAPPED - சினிமா ஒரு பார்வை இந்த உலகம் விளிம்பு நிலை மனிதனை ஒரு போதும் கவனிப்பதில்லை. விளிம்பு நிலை என்பது சொல்லுக்கு பழகிய சொற்றொடர் என்ற போதிலும். சொல்லில் அடங்காத பெரும்பாலும் வகைமையில் வரும் மனிதர்களுக்கும் அதே கதிதான். இந்த உலகம் விளிம்பில் நிற்கும் மனிதனையும் ஒருபோதும் கவனிப்பதில்லை. மூன்று பக்கம் மக்களால் சூழப்பட்டிருந்தாலும்.. ஒரு பக்கம் புறக்கணிப்பாலும்....வெறுமையாலும்... வெற்றிடமாகவுமே இந்த மானுட பிழைப்பு இருக்கிறது. 'Trapped' ஒரு சினிமா படம் தான். ஆனால்.. பார்க்க பார்க்கவே....பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பிக்கும் சக மனிதன் ஒருவனின் உச்ச பட்ச தவிப்பு. இரண்டு நாட்களில் காதலிக்கு கல்யாணம் என்ற பதட்டம்.. பரிதவிப்பு. "சீக்கிரம் …
-
- 0 replies
- 548 views
-
-
-
Vantage Point - ஆரம்பம் புள்ளியில் இருந்து ஒரு பார்வை என்னும் படம் இந்த வருடம் மாசியில் வெளியாகியிருக்கிறது. இது நிகழ்கால உலக சூழ்நிலையைக் மய்யமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் பற்றி வரலாற்று மாநாடு ஒன்று ஸ்பெயின் நகரான சலமன்கா இல் நடக்கிறது. அதற்கு வந்த அமெரிக்க சனாதிபதியை கொலைசெய்யத முயற்சிக்கப்படுகிறது. இந்தக் கொலை முயற்சிக்கு கிட்டத்தட்ட 23 நிமிடங்களிற்கு முன்னர் நடந்த சம்பவங்களை இதில் சம்பந்தப்பட்ட பலதரப்பினரது பார்வை கண்ணோட்டம் அவதானிப்புகள் மூலம் பல கோணங்களில் காட்டுவது தான் படத்தின் முக்கிய பாகம். இதில் சம்பந்தப்பட்ட தரப்புகளாக 1) ஒரு தொலைக்காட்சி செய்திச் சேவையின் தயாரிப்பாளர் எவ்வாறு தனது களத்தில் உள்ள ஒளிப்…
-
- 4 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 661 views
-
-
காலம் காலமாக மனிதனை மனிதன் அடக்கி ஆளும் மரபும், குனிந்தே பழகிய மனிதனும் திடீரென்று ஒருநாள் முதுகெலும்பின் பயனறிந்து நிமிர்ந்து நிற்பதும் நடந்து கொண்டேதானிருக்கிறது. தற்போது சைனாவின் ஒரு பகுதியாக இருக்கும் தைவான் 1930களில் ஜப்பானின் அதிகாரப் பிடியில் இருந்த போது நடந்த “Wushe Incident” என்றழைக்கப்படும் பழங்குடியின மக்களின் எழுச்சிப் போராட்டத்தின் அப்பட்ட பதிப்பே "Warriors of the Rainbow: Seediq Bale" என்னும் இந்தத் திரைப்படம். தைவானின் திரைப்பட வரலாற்றிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், சென்ற ஆண்டின் சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கர் விருதுப் பட்டியலில் இறுதி வரை பங்கேற்று ஈரானின் 'A Seperation' படத்திடம் தோற்றது குறிப்பிடத்தக்கது. படத்தின…
-
- 0 replies
- 685 views
-
-
Water (தண்ணி காட்டிய தீபா மேத்தா) மேலதிக விபரங்களுக்கு:- http://ajeevan.blogspot.com/
-
- 13 replies
- 2.5k views
-
-
Welcome to Dongmakgol - திரைவிமர்சனம் கொரிய போர் உக்கிரத்தின் உச்சத்திலிருந்த 1950களில் நடப்பதாக சித்தரிக்கப்பட மிகச்சிறந்த திரைப்படம் " Welcome to Dongmakgol". தென்கொரிய படைவீரர்களும் வட கொரிய வீரர்களும் கடும் போரில் ஈடுபடுகிறார்கள். ஒரு மலையடிவாரத்தில் நடக்கும் போரில் சிதறி ஓடுகின்ற வடகொரிய வீரர்கள் மூவரை மனநலம் குன்றிய ஒரு இளம்பெண் பார்க்கிறாள். அவளை தொடர்பவர்கள் மலையடிவாரத்தில் அவள் வசிக்கும் குக்கிராமத்திற்குள் நுழைகிறார்கள். அங்கே விமானம் விபத்தொன்றில் சிக்கிய அமெரிக்க விமானி ஒருவனும் தென்கொரிய படைவீரர்கள் இருவரையும் சந்திக்கிறார்கள். இவர்களை கண்டவுடன் தென்கொரிய வீரர்கள் துப்பாக்கியை உயர்த்துகிறார்கள். இவர்களும் தென்கொரிய வீரர்களை நோக்கி துப்பாக்கியை…
-
- 0 replies
- 2.1k views
-
-
">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=NLLwJYnrlVk&feature=BFa&list=WL533CE1746B53FE71&lf=plpp_video http://www.youtube.com/watch?v=yaDhSKKBRJw&feature=BFa&list=WL533CE1746B53FE71&lf=plpp_video
-
- 3 replies
- 1.3k views
-
-
-
நடிகை அமலா பால் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்கையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ஃபேஸ்புக்கில் தீயாக பரவி உள்ளது. இயக்குனர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்து கொண்ட பிறகும் அமலா பால் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் . தோழிகளுடன் பார்ட்டிகளுக்கு செல்வது, அவர்களுடன் நேரம் செலவிடுவது என்றும் உள்ளார். அமலா சூர்யாவுடன் சேர்ந்து பசங்க 2 படத்தில் நடித்துள்ளார். இது தவிர அவர் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். திருமணமான பிறகு சிலருக்கு வெயிட் போடும். ஆனால் அமலா திருமணத்திற்கு முன்பு இருந்தது போன்றே தற்போதும் சிக்கென்று உள்ளார் அவர் என்ன தான் சாப்பிட்டாலும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து உடல் எடை அதிகரித்துவிடாமல் பார்த்துக் கொள…
-
- 1 reply
- 2.2k views
-
-
சித்த மருத்துவத்தில் புகழ் பெற்றவர் பிரபு. சென்னையில் படிப்பு முடிந்து திரும்பும் ஒரே மகள் மோனிகாவுக்கு திருமணம் செய்ய எண்ணுகிறார். பாசமாக வளர்த்த மகளை பிரிய மனமில்லாமல் உள்ளுரிலேயே இருக்கும் ஹனீபாவின் மகன் அரவிந்துக்கு மணம் முடிக்க பேசுகிறார். திருமண தேதி முடிவு செய்தபிறகு தனிமையில் அரவிந்தை சந்திக்கும் மோனிகா, ஏற்கெனவே நவ்தீப்பை காதலித்ததாகவும், அவரிடம் கற்பை பறிகொடுத்ததாகவும் சொல்லி அதிர வைப்பதுடன் திருமணத்தை நிறுத்தச் சொல்கிறார். நமக்கு நிச்சயித்த தேதியிலேயே நவ்தீப்பை உனக்கு மணம் முடித்து வைக்கிறேன் என்று வாக்கு தருகிறார் அரவிந்த். சென்னை சென்று நவ்தீப்பை அழைத்து வருகிறார். அரவிந்தின் ரகசிய திட்டம் என்னவாகிறது என்பதே கிளைமாக்ஸ். நீக்குபோக்கு இல்லாத தெளி…
-
- 0 replies
- 1.2k views
-