வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
மூத்த மகன் விஷாலின் திடீர் மரணத்தால் நிலைகுலைந்த பிரபுதேவா, சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 'வில்லு' ஷ¨ட்டிங்கில் கலந்துகொண்டார். நேற்று சென்னை மீனம்பாக்கம் அருகிலுள்ள வீட்டில், தன் மகன் விஜய்யுடன் ரஞ்சிதா நடித்த காட்சிகளை பிரபுதேவா இயக்கினார். இதில் நயன்தாரா, கீதாவும் நடித்தனர். பிறகு பின்னி மில்லில் விஜய், நயன்தாரா நடித்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது. http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=419
-
- 0 replies
- 1.5k views
-
-
மீண்டும் ஒரு சர்ச்சையில் சிம்பு.! சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் புது படத்தில் காதலிகளை குற்றம் சொல்லும் வகையில் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய பாடலை எழுதியுள்ளார். அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் சிம்பும் வெகு நாட்களுக்கு பிறகு ஒன்றிணைந்துள்ளனர். சிம்பு அவரது பாணியில் வழக்கம் போல் காதலிகளை குற்றம் செல்லும் வகையில் இரு பாடலை அமைத்துவிட்டு, நியூ ஏஜ் லவ் பாடல் ஒன்று அமைத்து இருக்கிறோம் என்று பெருமையாக கூறியுள்ளார். அந்த பாடலின் தொடக்க வரிகள்:- என்னை விட்டு யாரையாச்சும் நீ கல்யாணம் தான் பண்ணிக்கிட்டா .. கொன்னே புடுவே…
-
- 0 replies
- 601 views
-
-
ஒரே வருடத்தில் மூன்றாவது முறையாக கட்சி மாறும் நடிகை பூஜா காந்தி. எடியூரப்பா கட்சியில் இருந்து விலகி பிரபல நடிகை பூஜா காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஸ்ரீராமுலு முன்னிலையில் பி.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைகிறார். ஜனதாதளம்(எஸ்) கட்சியில்... நடிகை பூஜா காந்தி தமிழ் மற்றும் கன்னடத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கன்னட சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக திகழ்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை பூஜா காந்தி திடீரென்று அரசியலில் காலடி எடுத்து வைத்தார். முன்னாள் முதல்–மந்திரி எச்.டி.குமாரசாமி முன்னிலையில் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இணைந்தார். அதைத்தொடர்ந்து பல்வேறு கட்சி கூட்டங்களிலும் அவர் கலந்து கொண்டு அரசியலில் தீவிரம் காட்டி வந்தார். இந்த நிலை…
-
- 0 replies
- 343 views
-
-
கீர்த்தி சுரேஷின் பாராட்டை பெற்ற குறும்படம் டீடோட்டேலர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணையதளத்தில் வெளியான குறும்படம் "பெண் உறுப்பு". அருண் மிஜோ எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கே.ஆர்.வினோத் நடித்திருந்தார். பெண்களுக்கான சமூக கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த குறும் படத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்து வரும் நிலையில் இந்த படம் ஒரு விழிப்புணர்வாக கருதப்படுகிறது. தற்போது இந்த குறும்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் பார்வையை அறம் பட இயக்குனர் கோபி நாயனார் வெ…
-
- 0 replies
- 434 views
-
-
நானும் நீயுமா? - 1 : உச்சத்தில் ஒருவர், ஒரு படி கீழே இன்னொருவர்... தொடரும் இருபெரும் ஆளுமைகளின் கதை! சுரேஷ் கண்ணன் நானும் நீயுமா? - 1 தமிழ் சினிமாவில் தொடரும் இருபெரும் ஆளுமைகள் குறித்து சுரேஷ் கண்ணன் எழுதும் புதிய தொடர்... நானும் நீயுமா? இந்த இருமைகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து பிரிக்க முடியாத இணைப்பாக அமைந்து இருக்கும். ஒன்றையொன்று சார்ந்திருக்கும். தொடர்ச்சியாக அமைந்திருக்கும். எதிரெதிர் முனைகளில் நின்று கொண்டிருப்பதான பாவனையைத் தரும். ‘'இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்து விடு'’ என ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தில் வைரமுத்து எழுதிய வரியில் இதை அற்புதமாக உணரலாம். …
-
- 1 reply
- 662 views
-
-
'கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?' கேள்வி உருவான கதை: ராஜமௌலி பேட்டி சங்கீதா ராஜன்பிபிசி தமிழ் Image captionபிபிசி தமிழுக்கு லண்டனில் பிரத்யேக பேட்டியளித்த எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் அனுஷ்கா ஷெட்டி பாகுபலி-2 திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் அதிகம் பிரபலமடைந்த கேள்வி 'கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?' என்பது. இது திரைப்படத்தின் விளம்பரத்திற்காக திரைப்படக்குழுவினர் உருவாக்கிய கேள்வி அல்ல என்றும், வட இந்திய ரசிகர்களால் உருவாக்கப்பட்டு அவர்களே பிரபலப்படுத்திய கேள்வி இது என்றும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி கூறினார். பிபிசி தமிழுக்கு லண்டனில் பிரத்யேக பேட்டியளித்த எ…
-
- 0 replies
- 398 views
-
-
மிஷ்கின் - படம் எடுத்தார் போஸ்டரும் ஒட்டினார் இன்றைய சூழலில் நல்ல படம் எடுத்தால் என்னவாகும் என்பதற்கு மிஷ்கின் நல்ல உதாரணம். சொந்த நிறுவனம் தொடங்கி ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை எடுத்தார் மிஷ்கின். சொந்த தயாரிப்பு என்பதால் படத்தின் விளம்பரத்துக்கு அதிகம் செலவளிக்க முடியவில்லை. ஹீரோ, ஹீரோயின், காமெடியன் வேல்யூக்களை மட்டும் வைத்து பெரிய படம், சின்ன படம் என்று தரம் பிரிப்பவர்கள் ஓநாய்க்கு சின்னப் படம் என்ற அந்தஸ்தைக்கூட வழங்கவில்லை. ரசிகர்கள் அதைவிட மேல். தொடர்ந்து குப்பை படங்களாக தரும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு முதல்நாள் முண்டியடிக்கும் சில்வண்டுகள் இணையத்தில், முகமூடி படத்துக்குப் பிறகு மிஷ்கின் படம்னாலே அலர்ஜியா இருக்கு என்று தங்களின் அதிமே…
-
- 24 replies
- 8.5k views
-
-
ஆனந்த யாழை மீட்டும் இளைஞன் ஜெய சரவணன் யுவன் சங்கர்ராஜா - 100 எங்கோ ஆடிக்கொண்டிருந்த ஆறு வயதுப் பிள்ளையை பியானோ தட்டிப்பார்க்க அழைக்கிறார் அப்பா. இன்று சினிமா ரதமேறி வலம்வரும் ஜூனியர் மேஸ்ட்ரோவின் மைக்ரோ பிரதிதான் அந்த வாண்டு. தந்தைக்குத் தெரிந்தும் தெரியாமலும் அன்று தொட்டுப் பார்த்த கருவிகள்தான் இன்று யுவன் சங்கர் ராஜாவின் கனவுகளை நனவாக்கிக்கொண்டிருக்கின்றன. நரம்புகளை மீட்டியே வரம்புகளைக் கடந்து சாதனை படைத்த பரம்பரையில் 1979இல் அந்தப் புது மெட்டு பிறக்கிறது. பள்ளியில் படிப்பென்பது ஒரு கட்டாயமாக மாறிப்போன சூழலில் ஓர் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் சிக்கியவருக்குப் பதினாறாவது வயதில்தான் 'அரவிந்தன்' படம் மூலம் இசைப் பயணத்தைத் தொடங்க முடிந்தது. அம்மாவிடம் அன்பையும் அப்பாவிடம…
-
- 0 replies
- 703 views
-
-
சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி வழங்க இளையதளபதி விஜய் நடிக்கும் “ஜில்லா” படப்பிடிப்பு முழுவதும் நடந்து முடிந்து விட்டது. மோகன்லால் சிறப்பானதொரு தோற்றத்தில் நடித்திருக்கிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். மற்றும் மகத், சூரி, தம்பிராமய்யா, பூர்ணிமாபாக்யராஜ், நிவேதா, சம்பத், சரண்,ஆர்,கே, ரவிமரியா, பிரதீப்ராவத், பிளாக்பாண்டி, ஜோ மல்லூரி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - கணேஷ் ராஜவேல் இசை - D.இமான் எடிட்டிங் - டான்மேக்ஸ் பாடல்கள் - வைரமுத்து, விவேகா, யுகபாரதி, பார்வதி கலை - ராஜீவன் நடனம் - ராஜுசுந்தரம், ஸ்ரீதர் ஸ்டன்ட் - சில்வா தயாரிப்பு மேற்பார்வை - பாபுராஜா கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - R .T.நேசன் இனைதயாரிப்பு - …
-
- 0 replies
- 536 views
-
-
மலையாள சினிமாவின் மனோரமா ‘பட்டிக்காடா பட்டனமா’ படத்தில் சிவாஜியின் மாமியாராக... சுகுமாரி 77-வது பிறந்த தினம்: அக்டோபர் 6 நான் கடந்த ஆறு மாத காலமாக, இதுவரையிலும் யாராலும் மேற்கொள்ளப்படாத ஒரு ரகசிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறேன். ஆய்வின் தலைப்பு: நடிகை கீர்த்தி சுரேஷை பெண்களுக்கு ஏன் பிடிப்பதில்லை? எனக்குத் தெரிந்த எல்லாப் பெண்களும் ஒரே குரலில், ‘எனக்கு கீர்த்தி சுரேஷைப் பிடிக்காது’ என்று கூறி என் மனதைப் புண்படுத்திக்கொண்டேயிருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி விஷயமாக, நான் தினமும் ஏராளமான கீர்த்தி சுரேஷ் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்துக…
-
- 1 reply
- 516 views
-
-
'தாய்மார்களின் பேராதரவுடன்', 'இளைஞர்களின் எழுச்சியில்', 'அனைவரும் விரும்பும் ஆல் கிளாஸ் படம்'. தினசரியை பிரித்தால் கண்ணில் தென்படும் சினிமா விளம்பரங்கள் இவை. சமீபகாலமாக இதில் மாற்றம். 'தமிழில் ஒரு உலக சினிமா', 'தமிழில் ஒரு ஈரானிய படம்' என்று இந்த விளம்பர வாசகங்கள் பரிமாணம் பெற்றிருக்கின்றன. தமிழக தாய்மார்களையும், இளைஞர்களையும் பின்னுக்கு தள்ளிய உலக சினிமாவிலும், ஈரானிய சினிமாவிலும் அப்படி என்ன விசேஷம்? இவற்றின் சிறப்பம்சம் என்ன? தமிழ் சினிமாவுக்கும் இவற்றுக்கும் உள்ள ஆதார ஒற்றுமைகள் வேற்றுமைகள் என்னென்ன? தமிழ் சூழலில் புதிதாக முளைத்திருக்கும் இந்த கேள்விகளுக்கு விடையளிக்க வந்திருக்கிறது 'உலகசினிமா' புத்தகம். இதன் ஆசிரியர் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். …
-
- 0 replies
- 1k views
-
-
டாடா Review: கவனத்துக்குரிய ஜாலி கலந்த உணர்வுபூர்வ டிராமா! கலிலுல்லா கவின், அபர்ணா தாஸ் இருவரும் கல்லூரிக் காதலர்கள். இவர்களின் காதல் சின்னமாக அபர்ணா தாஸ் கர்ப்பமடைகிறார். இதையறிந்த கவின், உடனே கருவைக் கலைக்கச் சொல்லி வலியுறுத்துகிறார். இதற்கு அபர்ணா மறுப்பு தெரிவிக்க, இந்த விவகாரம் இருவரின் வீட்டுக்கும் தெரிய வருகிறது. பிரச்சினை பூதாகரமாக வெடிக்க, அவர்கள் வீட்டில் இதை ஏற்றுக்கொண்டார்களா? இல்லையா? இந்தச் சம்பவத்திற்கு பிறகு இருவரின் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது? தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை எமோஷனல் கனெக்ட்டுடன் சொல்லும் படம் தான் ‘டாடா’. கல்லூரி மாணவனாகவும், குழந்தைக்கு தந்தையாகவும் இரண்டு வெவ்வேறு பரிணாமங்களில், அதற்கேய…
-
- 0 replies
- 233 views
-
-
'அகநக முகநக' பாடல் வரிகள் எப்படி உருவானது ? - குந்தவையின் காதலை சிலாகிக்கும் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் பட மூலாதாரம்,MADRAS TALKIES 31 நிமிடங்களுக்கு முன்னர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து, முதல் பாடல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடல் வெளியான அன்றைய தினம், நடிகர்கள் கார்த்தி மற்றும் த்ரிஷா ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வந்தியத்தேவன் மற்றும் குந்தவையாக உரையாடி வந்தது ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. ”அகநக அகநக முகநகையே” என தொடங்கும் இந்த பாடல் வரிகள்தான் கடந்த இரண்டு நாட்களில் பொன்னியின் செல்வன் ரசிகர்களின் முனுமுனுப்பாக மாறியிருக்கிறத…
-
- 10 replies
- 658 views
- 1 follower
-
-
தமிழ்த் திரையுலகம் செய்யாத ஒரு நற்செயலை இந்தி பட இயக்குநர் பால்கி செய்யவிருக்கிறார். கடந்த 45 ஆண்டு காலமாக தமிழ்த் திரையுலகில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா இதுவரையில் 1000 படங்களுக்கு இசையமைத்துவிட்டார். இவருடைய 1000-மாவது படம் பாலா இயக்கும் ‘தாரை தப்பட்டை’. இந்த நல்ல செய்தியை தெரிந்து கொண்ட இந்தி பட இயக்குநரான பால்கி, நம்முடைய இசைஞானிக்கு மும்பையில் மிகப் பெரிய அளவிலான ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்துள்ளார். இந்த பாராட்டு விழா வரும் ஜனவரி 30-ம் தேதி நடைபெறவுள்ளதாம். இந்த விழாவில் லதா மங்கேஷ்கர், பி.சுசீலா, எஸ்.ஜானகி ஆகியோருடன் முன்னணி பாடகர், பாடகிகளும், நடிகர், நடிகைகளும், இயக்குநர்களும் கலந்து கொள்ளவுள்ளார்கள். இயக்குநர் பால்கி இசைஞானி…
-
- 0 replies
- 620 views
-
-
நான் ரொம்ப எதிர்பார்த்தேன்.. ஆனால் இமான் ஏமாற்றிவிட்டார்.. பாடகி விஜயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு V VasanthiUpdated: Wednesday, February 19, 2025, 17:01 [IST] ஒரு சில பாடல்கள் கேட்கும் போது நம்முடைய மனதிற்குள் இருக்கும் சந்தோஷங்கள், கவலைகள், பாசம் உட்பட எல்லா உணர்வுகளும் நம்மை மீறி வெளிப்படும் அதுபோல பாடல்களை பாடும் பாடகர்கள் மக்கள் மனதில் தனக்கென்று ஒரு இடம் பிடித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் வைக்கம் விஜயலட்சுமியும் ஒருவர். இவர் தமிழில் வெளியான குக்கூ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற "கோடை மழை போல" என்ற பாடல் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமானார். அதற்குப் பிறகு கேட்பவர்களை ஆட வைக்கும் "சொப்பன சுந்தரி நான்தானே", "காக்...கா முட்டை... காக்கா முட்டை கண்ணால" என்ற பாடல்களை இவ…
-
- 6 replies
- 678 views
-
-
இந்தியில் பதிலளிக்க மறுத்த சமந்தா செய்தியாளர் சந்திப்பில் இந்தியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே பதிலளிக்க இயலும் என திட்டவட்டமாகக் கூறியுள்ளார் சமந்தா. படம்: ஊடகம் 12 Dec 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Dec 2019 09:20 மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே பதிலளிக்க இயலும் என திட்டவட்டமாகக் கூறியுள்ளார் சமந்தா. அதன் பிறகும் சிலர் இந்தியில் பதிலளிக்குமாறு வற்புறுத்த, தாம் தென் இந்தியாவை சேர்ந்தவள் என்றும், அதனால் தமக்கு இந்தியில் சரளமாகப் பேச வராது என்றும் கூறினார். …
-
- 1 reply
- 537 views
-
-
முறைப்பையன் தங்கராசுவை பார்வதி காதலிக்கிறாள். காத்திருக்கிறாள். கசிந்துருகி கதறுகிறாள். இதுதான் கதை. ``அந்தப் புள்ளை பாவம்பா. சீக்கிரமா ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு கதைய முடிங்க'' என ஒட்டுமொத்த ஆடியன்ஸையும் புலம்பவிட்டு, ``இதெல்லாம் தப்பு... சொந்தத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டா பொறக்குற குழந்தை சுகவீனமாயிடும்''னு பிரசார நெடியுடன் முடிகிறது `பூ'. செம்மண் புழுதி படிந்த சிவகாசி மண்ணுக்கு, புதுமுகம் பார்வதி `பூ' மாதிரி சரியாகப் பொருந்துகிறார். படத்தின் ஆரம்பத்தில் வரும் மளிகைக்கடை காட்சிகளும், கணவன்-மனைவி அன்னியோன்யமும் `பளிச்'. குறிப்பாக, பார்வதிக்குக் கணவராக வரும் அந்த நபர், வெகுவாகக் கவர்கிறார். இயல்பான காட்சிகளைப் பார்த்து `அடடே...' போட்டுக் கொண்டிருக்கும்போதே த…
-
- 0 replies
- 1.3k views
-
-
களத்தில் கலக்கும் சூப்பர் வில்லன்கள்!- சூசைட் ஸ்குவாட் படம் எப்படி? ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோ படங்களில், ஹீரோவுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கும். சொல்லப்போனால், ஹீரோக்களைவிட வில்லன்களுக்கே ரசிகர்கள் பட்டாளம் அதிகம். பேட்மேன், ஃபிளாஷ் போன்ற ஹீரோக்களைவிட, சூப்பர் வில்லன்களான ஜோக்கர், டெட் ஷாட் போன்றவர்களுக்கே மவுசு ஜாஸ்தி. பேட்மேன் சீரியஸில் சூப்பர் வில்லன்களை சிறைக்குள் தள்ளிவிடுவார் பேட்மேன். இந்த சூப்பர்வில்லன்களுக்கும், அல்ட்ரா சூப்பர் வில்லன்களுக்குமான சண்டை தான் இந்த சூசைட் ஸ்குவாட். இந்த படத்தில் வில்லன்கள் தான் ஹீரோஸ்! வில்லனுக்கும் வில்லனுக்கும் சண்டை வந்தால் என்ற ஒன்லைனுடன் ரசிகர்களை விசிலடிக்க வைக்கிறது இந்த சூசைட…
-
- 0 replies
- 454 views
-
-
விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் சென்னை: விஸ்வரூபம் படம் மீது தமிழக அரசு விதித்த தடையை நீக்கி சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இன்று நடந்த இறுதிக்கட்ட விசாரணைக்கு பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் சுமார் இரவு 10 மணியளவில் கமல் தொடர்ந்த வழக்கில், படத்தின் மீதான தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தார். நடிகர் கமல் நடித்த, சர்ச்சைக்கு உள்ளான, விஸ்வரூபம் படத்தை, தமிழக தியேட்டர்களில் திரையிட, 15 நாட்களுக்கு, மாவட்ட கலெக்டர்கள், தடை விதித்தனர். இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், "ராஜ்கமல் பிலிம்ஸ்' சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை, நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்தார். படத்தை, 26ம் தேதி, திரையிட்டு காட்டும்படி உத்தரவிட்டு, விசாரணையை, 28ம் தேதிக்…
-
- 7 replies
- 994 views
-
-
பொலிவூட்டை சூடேற்றும் ஐஸ்வர்யா ராய், ரன்பீர் கபூர் புகைப்படங்கள் 2016-10-23 10:20:55 நடிகை ஐஸ்வர்யா ராயும் நடிகர் ரன்பீர் கபூரும் இணைந்து போஸ்கொடுத்த போது பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் பொலிவூட்டை சூடேற்றிக் கொண்டிருக்கின்றன. இவ்விரு நட்சத்திரங்களும் இணைந்த நடித்த 'ஏ தில ஹாய் முஸ்கில்' படத்தை எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தான் நடிகர் பவாத் கானும் இப்படத்தில் நடித்ததால் மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா எனும் கட்சி இப்படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. பாகிஸ்தானிய நட்சத்திரங்கள் இந்திய திரைப்படங்களில் பணியாற்றுவதை தடுப்பது சரியா என்பத…
-
- 0 replies
- 591 views
-
-
ரூ.10 கோடி நில அபகரிப்பு புகார் பிரபல இசையமைப்பாளர் தலைமறைவு சென்னை : போலி ஆவணம் மூலம் ரூ.10 கோடி நிலத்தை அபகரித்த வழக்கில் பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவை போலீசார் தேடி வருகின்றனர். அவரது மேலாளர் ரகுராமன் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரை சேர்ந்தவர் கருப்பன். இவர் சேலம் துணை நீதிமன்றம் மூலம் ஏலம் விடப்பட்ட சென்னையை அடுத்த கானத்தூரில் உள்ள 75 சென்ட் நிலத்தை வாங்கினார். இதன் தற்போதைய மதிப்பு ரூ.10 கோடி என்று கூறப்படுகிறது. இந்த நிலத்தை திரைப்பட இசையமைப்பாளர் மணி சர்மா மற்றும் அவரது மேலாளர் ரகுராமன் ஆகியோர் போலி ஆவணம் மூலம் அபகரித்து விட்டதாக கருப்பன் குற்றம் சாட்டினார். இதுகுறித்து கேட்டால் இருவ…
-
- 0 replies
- 488 views
-
-
மிக அழகான நடிகை ஹன்ஷிகா தான் என்று சிம்பு ஒருபக்கம் அவரை புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்கிறார், ஆனால் ஹன்ஷிகாவோ சித்தார்த் தான் செம க்யூட்டான நடிகர் என்றும், அவருடன் காதல் காட்சிகளில் நடித்தால், நம்மை நிஜ காதலி போலவே பார்ப்பார் என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே தெலுங்கில் சித்தார்த்துடன் பல படங்களில் டூயட் பாடியவர் தான் ஹன்சிகா. அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் வெற்றி பெற்றதால், தொடர்ந்து பட படங்களில் இணைந்து நடித்த அவர்கள், சில படங்களில் அதிக நெருக்கத்துடனும் நடித்தனர். இதனால் தெலுங்கில் அவர் ரொமாண்டிக் ஜோடியாக வலம் வந்தனர். ஆனால் தமிழில் ஹன்ஷிகாவுகு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்தந்தால் தெலுங்கு பட உலகை விட்டு வந்தார். இதனால் தொடர்ந்து அவரால் சித்தார்த…
-
- 0 replies
- 429 views
-
-
நேருவும், என் தாயும் உயிருக்கு உயிராக காதலித்தனர்: மவுண்ட்பேட்டன் பிரபு மகள் லண்டன்: முன்னாள் இந்திய பிரதமர் நேருவும், தனது தாய் எட்வினாவும் உயிருக்கு உயிராக காதலித்ததாக மவுண்ட்பேட்டன் பிரபுவின் இளைய மகள் பமிலா ஹிக்ஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கடைசி வைஸ்ராயான மவுண்ட்பேட்டன் பிரபுவின் வாழ்க்கை வரலாற்று வைஸ்ராய்ஸ் ஹவுஸ் என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. 1947ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் பிரிவின்போது நடந்த சம்பவங்களை மையமாக வைத்து படம் எடுத்துள்ளனர். குரிந்தர் சதா இயக்கியுள்ள ஹாலிவுட் படமான வைஸ்ராய்ஸ் ஹவுஸில் ஹ்யூ போன்வில் மவுண்ட்பேட்டன் பிரபுவாக நடித்துள்ளார். இந்நிலையில் படம் குறித்து மவுண்ட்பேட்டன் பிரபுவின் இளைய மகள் லேடி பமிலா ஹிக்ஸ் கூறுகையில், மவுண…
-
- 4 replies
- 979 views
-
-
அசின் வாய்ப்பை கைப்பற்றிய ஸ்ருதி தெலுங்கு, இந்தி சினிமாவில், சில முன்னணி நடிகைகளுக்கு, கிடைக்கவிருந்த படங்கள், ஸ்ருதி பக்கம் திரும்பியுள்ளன.தெலுங்கில், கப்பர் சிங்-2 படத்தை எடுப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்தபோது, காஜலைத்தான், ஹீரோயினாகஒப்பந்தம் செய்ய, பேசி வந்தனர். ஆனால், கடைசியில், அந்த வாய்ப்பு, ஸ்ருதிக்கு வந்தது. அடுத்ததாக, இந்தியில் தமன்னாவை, ரமணா ரீ-மேக் படத்துக்கு கதை சொல்லி ஓ.கே., செய்து வைத்திருந்தனர். டி-டே படம் வெற்றி பெற்றதால், ஸ்ருதியை, அந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்து, தமன்னாவுக்கு அல்வா கொடுத்து விட்டனர். தற்போது, அசின் இந்தியில் நடிக்கவிருந்த, வெல்கம் பேக் என்ற படமும், ஸ்ருதிக்கு கிடைத்துள்ளது.இந்த கதைக்கு ஸ்ருதியே பொருத்தமாக இருப்பதாக, படத் தயாரிப்பாள…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஏழு வருடங்களுக்கு பின்... மீண்டும் நடிக்க வரும், மீரா! நடிகை மீரா ஜாஸ்மின் ஏழு வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்திருந்தார். பின்னர் அணில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு திரைத்துறையில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1244791
-
- 0 replies
- 319 views
-