வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
திரை வெளிச்சம்: பலே… பலே… ‘பஃபே’ விருந்துகள்! ‘பாவக் கதைகள்’ ஆந்தாலஜியிலிருந்து.... திரையரங்குகளுக்கெனத் தயாரானத் திரைப்படங்கள் பலவும், கரோனா காரணமாக ஓ.டி.டி தளங்களில் வெளியாகிவருகின்றன. இவைதவிர ஓ.டி.டி. தளங்களுக்குப் பிரத்யேகமாகத் தயாரான ஆந்தாலஜி திரைப்படங்களும் அவ்வப்போது வெளியாகின்றன. தமிழ்ச் சூழலில், பிரபல இயக்குநர்கள், கலைஞர்களின் கூட்டணியில் உருவாகி அமேசானில் வெளியான ‘புத்தம் புது காலை’, நெட்பிளிக்ஸில் வெளியாகவிருக்கும் ‘பாவக் கதைகள்’ போன்ற ஆந்தாலஜி முயற்சிகள், தமிழ் சினிமாவின் அடுத்தகட்ட நகர்வுபோல் சினிமா ரசிகர்களைப் பரவலாக ஈர்த்துவருகின்றன. வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதிய பொதுவான ஒரு கருத்தாக்கம், காலகட்டம் அல்லது இலக்கிய வடிவத்தைக் கொண்ட க…
-
- 0 replies
- 512 views
-
-
தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மற்றும் வாக்குப்பதிவு சென்னை திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில், தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் விசு மற்றும் விக்ரமன் போட்டியிட்டனர். அதே போல் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டனர். 2700 உறுப்பினர்களை கொண்ட இயக்குநர் சங்கத்தில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் இன்று மாலையே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது இந்த தேர்தலில் விக்ரமனுக்கு 716 வாக்குகளும், விசுவுக்கு 556 வாக்குகளும் கிடைத்தது. 716 வாக்குகள் வாங்கிய விக்ரமன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.http://www.d…
-
- 1 reply
- 547 views
-
-
நடிகை ஸ்ரேயா இப்போது சந்திரா, பவித்ரா என கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். சந்திரா படத்தில் இளவரசியாக அசத்தினாலும் பவித்ரா படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கிறார். அழகாக இருந்தாலும் சில படங்கள் மட்டுமே ஹிட் ஆகி தமிழில் சரியான வாய்ப்புகள் இன்றி இருக்கிறார் ஸ்ரேயா. தெலுங்கில் இஷ்டம், தமிழில் உனக்கு 20 எனக்கு 18 படத்தில் அறிமுகமான ஸ்ரேயா, சிவாஜி படத்தில் ரஜினியுடன் ஜோடி என்ற அளவிற்கு உயர்ந்தார். அடுத்தடுத்த படங்கள் ஹிட் ஆகாமல் ஏமாற்றவே சரியான வாய்ப்புகள் இல்லை. ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், விஷால், என பல முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் சந்திரா, பவித்ரா படங்கள் தனக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில…
-
- 20 replies
- 3k views
-
-
இலங்கையில் இனப்பிரச்சினை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட 'பியம்பனா மாலுவோ' (பறக்கும் மீன்கள்) என்ற திரைப்படத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த திரைப்படம் இருப்பதனால் அத்திரைப்பிடத்திற்கு தடைவிதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த திரைப்படத்தை தயாரித்தவருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை சஞ்ஜீவ புஷ்பகுமாரவே தயாரித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்படவிருந்த நிலையிலேயே தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படமானது பொதுமக்களுக்கு காண்பிப்பதற்கு உ…
-
- 1 reply
- 422 views
-
-
தொடர்பு எல்லைக்குள் வந்தார் அஞ்சலி... திருமணம் குறித்து விளக்கம்! சென்னை: அரசியல் புள்ளியுடன் காதல், திருமணம், அமெரிக்காவில் செட்டில் போன்ற செய்திகளுக்கு இன்று விளக்கம் அளித்துள்ளார் நடிகை அஞ்சலி. நடிகை அஞ்சலிக்கும் தமிழகத்தின் பிரபல அரசியல் தலைவரின் மருமகனுக்கும் ரகசிய திருமணம் என்றும், இருவரும் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக தான் நடித்த மதகஜராஜா படத்தின் தெலுங்கு டப்பிங்குக்குக் கூட அவர் வர மறுப்பதாகவும் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை என்றும் படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளருமான விஷாலே வருத்தப்பட்டிருந்தார். இப்போது இந்த செய்திகளுக்கு விளக்கம் தெரிவித்துள்ளார் அஞ்சலி. இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: …
-
- 9 replies
- 1k views
-
-
அக்கா ஸ்ருதிஹாசனைப் போலவே பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா. சில இந்தி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார் அக்ஷரா ஹாசன். இவரை கதாநாயகியாக நடிக்க வைக்க நிறைய பேர் கேட்டுள்ளனர் ஆனால் நடிப்பில் ஆர்வம் இல்லை இயக்குனராக விரும்புகிறேன் என மறுத்து வந்தார் அக்ஷரா. இப்போது திடீரென கதாநாயகியாக நடிக்க அவர் முடிவு செய்துள்ளார். கும்பகோணத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்கிற பால்கி, பாலிவுட்டில் இயக்குனராக உள்ளார். இவர் கமல்ஹாசனின் நண்பர். இந்தியில் அமிதாப் நடிப்பில் சீனி கம், பா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இப்போது இவர் அடுத்து இயக்கும் படத்தில்தான் அக்ஷரா நடிக்க உள்ளார். இதற்கிடையே அக்கா ஸ்ருதியை போல மும்பையில் தனியாக வசிக்க அக்ஷரா முடிவு செய…
-
- 2 replies
- 966 views
-
-
தியேட்டரில் படம் பார்த்து... விழுந்து, விழுந்து சிரித்த... வாலிபர் மரணம். மும்பை: மும்பையில் கிராண்ட் மஸ்தி இந்தி படம் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த வாலிபர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். மும்பை வசாய் பகுதியைச் சேர்ந்தவர் மங்கேஷ் போகல்(22). அவர் தனது காதலியுடன் கிராண்ட் மஸ்தி இந்தி படம் பார்க்க தியேட்டருக்கு சென்றார். படத்தில் ஏராளமான காமெடி காட்சிகள் உள்ளன. அவற்றை பார்த்த மங்கேஷ் விழுந்து விழுந்து சிரித்துள்ளார். சிரித்துக் கொண்டிருக்கையிலேயே அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை வசாயில் உள்ள கார்டினல் கிராசியாஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மங்கேஷ் படத்தை…
-
- 14 replies
- 996 views
-
-
உங்கள் ஆசைகள் எல்லாம் நிறைவேறி இருக்கின்றனவா....? நான் என்னை நானே கேட்டுக் கொண்ட கேள்வியை இங்கும் பகிர விரும்புகிறேன்....நாம் அனைவருமே கடந்த காலத்தின் முக்கியமாக நமது பால்யங்களின் நினைவுகளை பொக்கிஷமாக சுமப்பவர்கள்தான்... அதற்கான காரணம் நாம் நம் அம்மா அப்பா, உண்மையான நண்பர்கள், உறவினர்கள் என்ற ஒரு வளையத்துக்குள் மிகப் பாதுகாப்பாக உணர்ந்தோம்.. ஆனால் வயது போக போக.. அது புகையைப் போல.. வாழ்வின் தீரா பக்கங்கள் நகர்ந்து கொண்டே வந்து வெற்றிடம் நோக்கிய புள்ளியில் முதுமை என்ற கருப்பு வெள்ளையில் நிற்க வைத்து விடுவதில்.. பகிரவே முடியாத பகிர்ந்தாலும் உணரமுடியாத தூரத்தில் ஆளற்ற தனிமைக்குள் நின்று விடுவதாக மனம் செய்யும் மாயம் அல்லது நிஜம் சொல்லும் உலகம் என்று எப்படி …
-
- 0 replies
- 329 views
-
-
விஜய் விவகாரம்: சன் டிவிக்கு வந்த தலைவலி கலைஞர் டிவியும், சன் டிவியும் விஜய் நடிக்கும் 50-வது படமான சுறா’வை வாங்குவதற்கு போட்டியிட்டன. இறுதியில் சன் வென்றுள்ளது. படத்தை வெளியிடும் உரிமையையும் பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் சுறா...என்று பார்க்கலாம் என்றால் அதில் ஒரு சிக்கல். இந்த சிக்கலுக்கு காரணம் விஜய் சந்தித்திற்கும் புதிய வில்லங்கம். ’’ஈழத்தமிழருக்கு ஆதரவு என்பது போல் உண்ணாவிரதம் இருந்து விட்டு ஈழ துரோகி காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு ராகுல் காந்தியை சந்தித்தார் விஜய். இது போதாது என்று தனது வேட்டைக்காரன் படத்தில் சிங்களப்பாடல் மெட்டில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. தமிழர்களுக்கெதிரான போரில் சிங்கள ராணுவத்தினரை உற்சாகப்ப…
-
- 2 replies
- 2.4k views
-
-
ஹைதராபாத் சிறையில்.... இளையதளபதி விஜய். சென்னை: ஹைதராபாத் சிறையில் விஜய் என்று தலைப்பை பார்த்து பயந்துவிட்டீர்களா?. அது போலி சிறை, முருகதாஸ் படப்பிடிப்புக்காக போடப்பட்ட செட். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் தீரன் படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. கொல்கத்தாவில் ஆக்ஷன் காட்சியையும், சென்னையில் பிரமாண்டமாக ஒரு பாடல் காட்சியையும் படமாக்கினர். இதையடுத்து மூன்றாவது கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ஹைராதாபாத் சென்றுவிட்டது. தீரன் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. ஹைதராபாத்தில் சுமார் ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடக்கிறது. படத்தில் உள்ள சிறை காட்சிகளை ராஜமுந்திரி…
-
- 1 reply
- 1.1k views
-
-
அவள் திரைவிமர்சனம் பல கதைகள் படங்களில் எடுக்கப்பட்டாலும் பேய் படங்களுக்கு இன்னும் மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. படப்போட்டிகள், விடாப்பிடி மழைக்கு நடுவே வந்துள்ள இந்த அவள் யார், பின்னணி என்ன, நம்மை விரட்டுமா இல்லை உட்காரவைத்து படம் காட்டுமா என திகிலுக்குள் செல்வோம். கதைக்களம் நடிகர் சித்தார்த் ஒரு கைதேர்ந்த மருத்துவர். மூளை குறித்த அறுவை சிகிச்சையில் ஸ்பெஷலிஸ்டாக இருக்கிறார். ஆண்ட்ரியாவை காதலித்து திருமணம் செய்கிறார். பின் மலைப்பகுதியில் உள்ள வீட்டில் குடியேறுகிறார்கள். நெருக்கம், அன்யோன்யம் என இவர்களின் வாழ்கை நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. இவர்களின் வீட்டிற்கு அருகே…
-
- 1 reply
- 901 views
-
-
இலங்கை தமிழ் சமூகத்தில் வாழும் திருநங்கைகள் தொடர்பாக கனடிய தமிழ் இயக்குநர் லெனின் எம் சிவம் இயக்கிய (கனடிய) தமிழ் சினிமா 'ரூபா' வில் Lead role லில் நடித்து இருக்கும் திருநங்கையின் உரை
-
- 3 replies
- 453 views
-
-
'சிறந்த ஜோடி நயன்தாரா - பிரபு தேவா' - கேலிக்கூத்தான ஒரு விருது! நயன்தாரா - பிரபு தேவா 'கள்ளக் காதல்', சட்ட விரோத திருமணம், இருவருக்கும் எதிரான நடவடிக்கை [^] பற்றியெல்லாம் ஒரு பக்கம் பரபரப்பாக செய்திகள் [^] வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த இருவரையும் அழைத்து சிறந்த ஜோடி (தம்பதி) விருதினை வழங்கியிருக்கிறார்கள் ஹைதராபாதில்! ஒரு ஆங்கில சினிமா பத்திரிகையின் விருது வழங்கும் (ஒரு வெளம்பரம்ம்ம்!) விழா சமீபத்தில் ஹைதராபாதில் நடந்தது. தமிழ், தெலுங்கு [^], கன்னடம் மற்றும் மலையாள மொழித் திரைப்படக் கலைஞர்களுக்கு இதில் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழில் சிறந்த நடிகராக பிரகாஷ் ராஜும், சிறந்த நடிகையாக தமன்னாவும் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. ச…
-
- 2 replies
- 1.1k views
-
-
டி.ராஜேந்தர் இயக்கத்தில் 1980-ல் வெளியான ‘ஒரு தலை ராகம்’ படக்குழுவினர் 34 வருடங்களுக்கு பிறகு சென்னையில் நேற்று சந்தித்தனர். இச்சந்திப்பு உருக்கமானதாக இருந்தது. இந்த படம் அப்போதைய இளம் தலைமுறையினரை உலுக்கி எடுத்தது. இதில் இடம் பெற்ற ‘நான் ஒரு ராசி இல்லா ராஜா’, ‘வாசமில்லா மலர் இது’, ‘இது குழந்தைபாடும் தாலாட்டு’, ‘கடவுள் வாழும் கோவிலிலே’ உள்ளிட்ட பாடல்கள் பட்டி, தொட்டியெங்கும் கலக்கின. காதலர்களின் தேசிய கீதங்களாக இவை அமைந்தன. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த சங்கர் தற்போது ‘மணல் நகரம்’ என்ற படத்தை டைரக்டு செய்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா வடபழனி ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடந்தது. இதில் ‘ஒரு தலை ராகம்’ படக்குழுவினர் சந்திப்புக்கு அவர் ஏற்பாடு செய்து இருந்தார். …
-
- 2 replies
- 1.7k views
-
-
கே.துரை, விருதுநகர். ''தலைக்கனம் பிடித்தவராமே நீங்கள்?'' ''பின்னாடி கால் கிலோ கறி... நல்லி எலும்பு மாதிரி கையும் காலும். அதுக்கு ஒரு தலை... அதுல ஒரு கனம் வேறயா?'' எஸ்.மரிய இருதயம், தூத்துக்குடி. ''அறியாமையை அறிந்துவிடுவார்கள் என்பதால்தான் அதிகம் பேசுவது இல்லையா?'' ''கண்டுபிடிச்சுட்டியே ராசா!'' வி.திவ்யா ஷங்கர், சென்னை-17. ''புதுமுகங்களைக் கதாநாயகர்களாக அறிமுகப்படுத்தும் தைரியம் உங்களுக்கு இல்லையா?'' ''விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால் எல்லோரும் என்னிடம் புதுமுகங்கள்போல்தான் வந்தார்கள். எனக்குத் தேவைப்பட்ட விதத்தில் அவர்களை நான் வடிவமைத்துக்கொண்டேன். அதற்கான அர்ப்பணிப்பு அவர்களிடம் இருந்ததையும் குறிப்பிட வேண்டும். என் திரை…
-
- 16 replies
- 3.3k views
-
-
வாட் இஸ் யுவர் நேம்? என்று கேட்டால்கூட சிரிப்பையும் சிணுங்கலையும் வெளிப்படுத்தும் சிரிப்பழகி லைலா. தனது கன்னக்குழியழகில் தமிழ் சினிமா ரசிகர்களை தடுமாறி விழவைத்த லைலா, கடந்த வருடம் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமலேயே கல்யாணம் கட்டிக்கொண்டு மும்பையில் குடிபுகுந்தார். பால் கணக்கில் ஆரம்பித்து கணவனுக்கு வாய்க்கு ருசியாக சமைத்து போடுவதுவரை முழுமையான இல்லத்தரசியாக மாறிவிட்ட லைலா விரைவில் அம்மா ஸ்தானத்தையும் அடையப்போகிறாராம். இப்போது அவர் சிலமாத கர்ப்பமாக இருக்கிறாராம். குழந்தையின் ஆரோக்கியம் கருதி ஆறுமாதம் வரை லைலாவை ஒய்வெடுக்க சொல்லி டாக்டர் அறிவுறுத்தியிருக்கிறாராம். லைலா மீண்டும் நடிக்க வேண்டுமென்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இதற்கு லைலாவின் பதில் எ…
-
- 0 replies
- 767 views
-
-
குடும்ப பாங்கான வேடங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறார் சினேகா. சக நடிகைகள் கவர்ச்சியில் நீச்சல் உடைவரை வந்து விட்டனர். ஆனால் சினேகா அது போன்று நடிக்க மாட்டேன் என்பதில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறார். சினேகா தோற்றத்தில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பை விட அழகாக மாறி இருக்கிறார். இதுபற்றி சினேகா கூறியதாவது: என் அழகுக்கு யோகா தான் காரணம் தினமும் 2 மணி நேரம் யோகா பயிற்சி செய்கிறேன். யோகா செய்ததால் அழகு கூடிவிட்டது. இது எனக்கு நிறைய பலன் அளித்துள்ளது. சாப்பாடு விஷயத்திலும் கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன். நிறைய நேரங்களை என் குடும்பத்தினருடன் செலவிட விரும்புகிறேன் என்றார். நக்கீரன்.
-
- 17 replies
- 13.3k views
-
-
புதன்கிழமை, 29, ஜூன் 2011 (8:23 IST) சினிமா பட உலகில் இருந்து விலகல் : கதறி அழுதார் நயன்தாரா பிரபுதேவா டைரக்டு செய்த `வில்லு' படத்தில் நயன்தாரா நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாக மாறியது. இரண்டு பேரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்கள். கணவர்-மனைவி போல் ஒரே ஓட்டலில் தங்கினார்கள். நயன்தாரா, திருமணம் ஆகாதவர். பிரபுதேவாவுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர்கள் காதலுக்கு ஆரம்பத்தில், பிரபுதேவாவின் மனைவி ரமலத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதையும் மீறி நயன்தாரா-பிரபுதேவா காதல் தொடர்ந்தது. இந்த நிலையில், பிரபுதேவா-ரமலத் இருவரும் விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்கள். இந்த வழக்கு கோர்ட்டி…
-
- 6 replies
- 1.8k views
-
-
அன்பார்ந்த யாழ்கள வாசகர்களே... என்னால் வெட்டி ஒட்டப்படும் சிறு..சிறு.. அன்றாட சினிமா குப்பை செய்திகளால், யாழ்கள வண்ணத்திரைப்பகுதியை குப்பை மேடாக்காமல் தடுப்பது எப்படி என்ற சிந்தனையில் உருவான கருவே..இந்த புதிய திரி. யாழ்கள உறுப்பினர்களே... இது இன்றைய தமிழ் சினிமாவை விவாதிக்கும் களம். உங்கள் வாதத்திறமையால் இந்தக்களத்தை வெறுமனே அரட்டைக்களமாக மாற்றாது சிறந்த விவாதக்களமாக மாற்றுவது உங்கள் பொறுப்பு. அன்றாட சிறிய சினிமா செய்திகள் இங்கு விவாதத்திற்கு எடுததுக் கொள்ளப்படுவதால் புதிய செய்திகளையும் நீங்கள் இணைக்கலாம். இங்கு பதிவை மேற்கொள்பவர்கள் நிர்வாகத்தினது அன்பான அறிவுறுத்தல்களை கவணத்திற்கொள்ளவும்.
-
- 27 replies
- 5.1k views
-
-
காதலை கடைசி வரை சொல்லாமலே ரசிகர்களின் மனதை கனப்படுத்தும் நடிப்பை வெளிபடுத்தி வெற்றி பெற்றவர் நடிகர் முரளி. தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களி்ல் நடத்துள்ளார். அதில் பல படங்கள் வெள்ளி விழாப் படங்கள். கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்தார் முரளி. இதனால் சினிமாவில் அவருக்கு பெரிய இடைவெளி விழுந்தது. இந்நிலையில் தற்போது மறு அவதாரம் என்ற படத்தின் மூலம் மறு பிரவேசம் செய்கிறார் முரளி. ஹீரோயினாக விலாசினி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் டத்யா எனும் புதுமுகம் அறிமுகமாகிறார். பிரபல இயக்குனர்கள் பலரிடம் பணியாற்றிய கே.பாலேந்தர் இந்தப் படத்தை இயக்குகிறார். அண்ணன் தங்கை பாசம்தான் படத்தின் மையக் கரு. சைடில் ரொமான்ஸ், சண்டை போன்ற மசாலா…
-
- 2 replies
- 1.4k views
-
-
[size=2] ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் கதையில் தொடங்கி, ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றதன் பின்னணி வரை நீள்கிறது மாற்றான். [/size][size=2] விஞ்ஞானி ராமச்சந்திரனின் மரபு அறிவியல் சோதனை காரணமாக சூர்யா இரட்டையர்களாக பிறக்கிறார்கள். [/size] [size=2] இருவருக்கும் சேர்த்து ஒரு இதயம் தான். அப்பா பால் பவுடர் வியாபாரத்தில் முதலிடம் பிடிக்கிறார். வெளிநாட்டு பெண்மணி ஒருவர் ராமச்சந்திரன் நடத்தும் நிறுவனத்தை உளவு பார்க்க வருகிறார். அவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். தன்னுடைய வெற்றிக்காக எது வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் ராமச்சந்திரனின் சூழ்ச்சியால் இரட்டையர்களில் ஒருவர் இறக்கிறார். அவரின் இருதயம் மற்றொருவருக்கு பொருத்தப்படுகிறது.[/size] [size=2] அவர் வெளிநா…
-
- 0 replies
- 1.2k views
-
-
விக்ரம் பிறந்தநாள்: டப்பிங் கலைஞராக தொடங்கி முன்னணி நடிகரான ‘சீயான்’ விக்ரமின் கதை - பிறந்தநாள் பகிர்வு ACTOR VIKRAM OFFICIAL / FACEBOOK ஒரு கதாபாத்திரத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் மெனக்கெடும் கலைஞராக அறியப்படுபவர் 'விக்ரம்'. இன்று (ஏப்ரல் 17)அவருடைய 54ஆவது பிறந்தநாள். விக்ரமின் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள். அவர் கடந்து வந்த பாதை குறித்த ரீவைண்ட்ர் இதோ! விக்ரமின் இயற்பெயர் கென்னடி ஜான் விக்டர். இவர் பிறந்த ஊர் சென்னை. தன்னுடைய பள்ளிப் பருவத்திலேயே கராத்தே, நீச்சல், குதிரையேற்றம் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்தார். சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை விக்ரமிற்கு சி…
-
- 0 replies
- 391 views
-
-
``அல்லு அர்ஜுன்கூட நடிக்க மாட்டேன்னு நேர்ல போய் சொல்லிட்டு வந்தேன்... ஏன்னா?!'' - விஜய்சேதுபதி எங்கேயாவது ஆடிஷனுக்குப் போனா, `மூஞ்சி ரொம்ப முத்தியிருக்கு... ஹீரோ மெட்டீரியல் இல்ல'னு சொல்லுவாங்க. நானும், சரி அப்பா கேரக்டருக்கு முயற்சி பண்ணலாம்னு இருந்தேன். ஏன்னா, நிஜ வாழ்க்கைல வயசு முப்பதைத்தொட்டு ரெண்டு குழந்தைகளுக்கு அப்பாவா இருந்தேன். விஜய்சேதுபதி என்றாலே வெரைட்டிதான். ஹீரோ, வில்லன், தாத்தா, திருநங்கை எனத் தனக்குப் பிடித்திருந்தால் எந்தவிதமான கேரக்டரிலும் நடிப்பார். சினிமாவிலும் நடிப்பார், குறும்படத்திலும் இருப்பார், வெப்சிரிஸூக்கும் வருவார் எனத் தன்னைச் சுற்றி எந்த இமேஜ் வட்டத்தையும் வரைந்துகொள்ளாதவர். கையில் ஏகப்பட்ட படங்களோடு …
-
- 0 replies
- 358 views
-
-
திரைவிமர்சனம்: கொடி இயக்குநர் துரை செந்தில்குமார் ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’ படங்களைத் தொடர்ந்து இயக்கி யிருக்கும் படம் ‘கொடி’. தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் முதல் படம் என்பதால் இந்தப் படத்தை ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்தனர். தனுஷ் த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதும், ‘ப்ரேமம்’ புகழ் அனுபமா பரமேஸ்வரன் தமிழில் அறிமுகமாகும் படம் என்பதும் கூடுதல் ஆவலை உருவாக்கியிருந்தன. கொடி (தனுஷ்) பிறக்கும்போதே அரசியல் அவனுடைய வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது. அவனுடைய அப்பா (கருணாஸ்) தான் வாய் பேச முடியாததால் அரசியலில் சாதிக்க முடியாததை தன் மகன் சாதிக்க வேண் டும் என்று விரும்புகிறார். ஊரில் மெர்குரி கழிவுகளைக் கொட்டி …
-
- 1 reply
- 698 views
-
-
இதுவரை ஹீரோக்கள் கூட கிள்ளாத தனது இடுப்பை சந்தானம் கிள்ளிவிட்டதை நினைத்தால் அவரால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லையாம். இனியும் இங்கிருந்தால் நம்ம இமேஜ் டேமேஜ் ஆகிவிடும். யா யா படத்தில் சந்தானம் தனது இடுப்பில் கிள்ளியதை நினைத்து நினைத்து புலம்புகிறாராம் சந்தியா. Â சந்தியாவின் மார்க்கெட் படுத்துவிட்டதையடுத்து அவர் யா யா படத்தில் காமெடி சந்தானத்தின் ஜோடியாக நடித்துள்ளார். படத்தில் ஹீரோ ரேஞ்சுக்கு சந்தானத்திற்கும் காதல், ரொமான்ஸ், கொஞ்சல் காட்சிகளாம். சில காட்சிகளில் சந்தானம் சந்தியாவின் இடுப்பை கிள்ளுவது, முத்தம் கொடுப்பது என்று ரொம்பவே ரொமான்டிக்காக நடித்துள்ளாராம். இப்படி காமெடி நடிகரோடு முத்த காட்சியில் நடித்துவிட்டோமே என்று சந்தியா நொந்து கொண்டிருக்கிறாராம். இங்கிருந்…
-
- 10 replies
- 2.7k views
-