வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
நயன்தாராவிற்கும் காதல் கிசுகிசு செய்திகளுக்கும் ஏக பொருத்தம். நயன்தாரா மீண்டும் சிம்புவிடம் சேர்ந்து இருக்கும் புகைப்படம் வெளியான போது, "இப்படி நடக்கும்னு தெரிந்தது தானே! "என்பது தான் கோலிவுட்டின் பதிலாக இருந்தது. 'வல்லவன்' படத்தில் சிம்புவிடன் காதலை முறித்து கொண்டவர், 'வில்லு' படத்தின்போது பிரபுதேவாவுடன் நெருக்கம் காட்டி வந்தார். பிரபுதேவா உடன் காதல் உறுதியாகி திருமணம் வரை சென்றது. பிரபு தேவாவின் பெயரை தன் கையில் பச்சைக் குத்திக் கொண்டார். அவருக்காக மதம் மாறினார். ஆனால் அந்த காதலும் தோல்வியில் முடிந்தது. 'ராம ராஜ்ஜியம்' படம் தான் கடைசி என்று அறிவித்தார். ஆனால், பிரபுதேவாவுடன் காதல் தோல்வியை அடுத்து மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். தற்போத…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் - மத்திய அரசு விருது அறிவிப்பு இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. அதன்படி 2019ம் ஆண்டுக்கான விருது பட்டியலில் தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு மத்திய அரசின் விருது அறிவித்துள்ளது. இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் கடந்த ஆண்டு ஒத்த செருப்பு என்ற படத்தை இயக்கி இருந்தார். அதில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதை அமைத்து இருந்தார். இந்திய சினிமாவில் இது புதிய முயற்சி என்று பலரும் பாராட்டினர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வ…
-
- 1 reply
- 639 views
-
-
புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராஜமெளலி. இவர் இயக்குனர் கே. ராகவேந்திர ராவ் வழிகாட்டுதலின் கீழ் தொலைக்காட்சித் தொடர்களை இயக்கினார். இயக்குனரும் எழுத்தாளருமான வி. விஜயேந்திர பிரசாத் என்பவருக்கு மகனாக கர்நாடக மாநிலம் ரெய்ச்சூரில் அக்டோபர் 10, 1973 ல் பிறந்தார். இவரின் முதல் திரைப்படம் ஸ்டூடண்ட் நெம்பர் 1, 2001 இல் வெளியானது. இதை ராகவேந்திர ராவ் தயாரிக்க அவரின் உதவியாளராக இருந்த இவர் இயக்கினார். இதில் கதாநாயகனாக ஜூனியர் என் டி ஆர் நடித்தார். இதுவே ஜூனியர் என் டி ஆரின் முதல் பெரு வெற்றிப் படமாகும். தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று இல்லாத காலத்தில், சத்யராஜ் மகன் சிபிராஜ் நடிப்பில், ஸ்டூடண்ட் நெம்பர் 1 என்ற பெயரிலேயே இப்படம் தமிழில் எடுக்கப்பட்டது. ராஜம…
-
- 0 replies
- 353 views
-
-
ஒன்பது ரூபாய் நோட்டு - சுந்தர் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் நலனில் அக்கறை கொண்டு, அவர்களை வாழவைக்கும் ஒர் உன்னத மனிதர், குடும்பச் சூழல் காரணமாக ஒன்பது ரூபாய் நோட்டாக (செல்லாத நோட்டு) மாற நேரும் நிலையை இயல்பு மீறாமல் பதிவு செய்திருப்பதே இப்படம்! தன் மண்ணையும் விவசாயத்தையும் உயிராக நேசிப்பவர் மாதவர் படையாட்சி (சத்யராஜ்). பூமியையே சாமியாக நினைத்து வாழும் அவர், மண்ணில் விளைவதை முடிந்தவரை பிறர்க்கும் கொடுப்பவர். அவரது பிள்ளைகளுக்கு திருமணமாகி, ஒரு வருத்தம் மிகுந்த சம்பவம் நிகழ்ந்தவுடன், கட்டியத் துணியோடு வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார் மனைவி வேலாயியுடன் (அர்ச்சனா). சுய கெளரவத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு எந்தத் தொழிலும் செய்ய முடியாத நிலையில், தன் நண்…
-
- 11 replies
- 7.9k views
-
-
ஒப்பற்ற கலைஞர் ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள்.
-
- 0 replies
- 233 views
-
-
துப்பாக்கி படத்திற்குப் பிறகு விஜய் நடித்துவரும் படம் தலைவா. விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய் இயக்குகிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், கதாநாயகி அமலாபால், சத்யராஜ், சரண்யா, மனோபாலா, ஆர்.பி. சவுத்ரி, எஸ்.ஏ. சந்திரசேகர், இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ், பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் தலைவா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜ் மேடைக்கு அழைக்கப்பட்டார். முன்னதாகத் தலைவர்களைப் பற்றிய லேசர் வரைகலையில் பிரபாகரன் காட்டப் படாததில் ஏற்கனவே பலர் அதிருப்தியில் இருக்க, புரட்சித் தமிழன் மற்றும் ஈழ ஆதரவுப் பிரச்சாரங்களில…
-
- 0 replies
- 2.6k views
-
-
'லாடம்' படத்துக்காக ஒரு முத்தக் காட்சியில் நடிக்க 7 டேக்குகள் வாங்கினாராம் நடிகை சார்மி. காதல் அழிவதில்லை படத்தில் சிம்புவின் நாயகியாக அறிமுகமானவர் சார்மி. அந்தப் படம் சுமாராகப் போனாலும், கோலிவுட்டில் ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டதில் ரொம்பவே அப்செட்டாகி ஆந்திர பூமியில் செட்டிலாகி விட்டார். இன்று தெலுங்கின் பிரபல ஹீரோக்கள் அனைவரோடும் ஜோடி போட்டு விட்ட சார்மிக்கு ஒரே ஒரு பெரும்குறை. தமிழில் கிளிக் ஆகவில்லையே என்று. அந்தக் குறையைத் தீர்க்கும் விதத்தில் தயாராகிக் கொண்டிருக்கிறது லாடம். பிரபு சாலமன் இயக்கும் இப்படத்தின் ஹைலைட்டே சார்மியின் கவர்ச்சிதான். தெலுங்கிலும் இந்தப் படம் ஒரே நேரத்தில் வெளியாவதால், கவர்ச்சியின் எல்லையை இன்னும் கொஞ்சம் விஸ்த…
-
- 0 replies
- 806 views
-
-
ஒரு அழகான ஹீரோயின் கூட நான் டூயட் பாடறது கூட பொறுக்கல பல ஹீரோக்களுக்கு! - வடிவேலுஒரு அழகான ஹீரோயினுடன் நான் டூயட் பாடினா கூட இங்குள்ள பல ஹீரோக்களுக்கு பொறுக்கவில்லை, என்று கூறியுள்ளார் வடிவேலு. 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு வடிவேலு மீண்டும் நடிக்கும் படம் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன். இதில் அவர் தெனாலிராமன், மன்னர் கிருஷ்ணதேவராயர் ஆகிய இரு வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு இந்தப் படத்தில் ஏகப்பட்ட ஜோடிகள். குறிப்பாக கிருஷ்ணதேவராயராக வரும் வடிவேலுவுக்கு 36 மனைவிகளாம்! படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்கவிருந்தவர் பில்லா 2 படத்தில் நடித்த பார்வதி ஓமணக் குட்டன். ஆனால் இப்போது அவர் இல்லை. மீனாட்சி தீக்ஷித் என்பவர் நடிக்கிறார். இதுகுறித்து வடிவேலு கூறுகையில், "அந்தப் புள்ளை தாங…
-
- 4 replies
- 781 views
-
-
மீண்டும் பிரசாந்த்... - தட்ஸ்தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்! சனிக்கிழமை, டிசம்பர் 31, 2011, 19:03 [iST] பிரஷாந்த்- தமிழ் சினிமாவின் அழகான, அத்தனை திறமைகளும் உள்ளடக்கிய, முக்கியமாக நடிக்கத் தெரிந்த நடிகர். மீசை அரும்பத் தொடங்கிய வயதில் வைகாசி பொறந்தாச்சு படத்தில் அறிமுகமானார். இன்றைய வாரிசு நடிகர்களுக்கு முன்னோடி, அஜீத், விஜய், சூர்யா போன்றவர்களுக்கும் சீனியர் என்றால் பிரஷாந்த்தான். எடுத்த எடுப்பிலேயே உச்சத்துக்குப் போனவர் பிரசாந்த். முதல் படம் வெற்றி, அடுத்த படம் பாலு மகேந்திரா இயக்கத்தில் தேசிய விருதுவரை போனது. அதற்கடுத்து வந்த செம்பருத்தியோ, அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படம் என்ற பெருமையைப் பெற்றது. அதன் பிறகு நிறைய படங்களை அவர் செய்தாலும், மீண்ட…
-
- 12 replies
- 2.3k views
-
-
ஒரு ஊர்ல ரெண்டு தாதாவாம்..!? - 'சத்ரியன்' விமர்சனம் கத்தி பிடித்தவனுக்கு காதல் வந்தால் என்ன நடக்கும் என்பதைச் சொல்கிறது இந்த சத்ரியன் ரிட்டர்ன்ஸ். திருச்சியையே ஆள நினைக்கும் இரண்டு நண்பர்கள் விக்ரம் பிரபு மற்றும் கதிர். இருவரும் திருச்சியைக் கலக்கும் வெவ்வேறு தாதாக்களிடம் சேர்கிறார்கள். அதில் விக்ரம் பிரபு, சமுத்திரத்திடம் (சரத்) வேலைக்கு சேர, கதிர் இவர்களின் எதிராளியான மணப்பாறை சங்கரிடம் (அருள் தாஸ்) வேலைக்கு சேர்கிறார். அமைச்சர் சொல்லியதன் பேரில் அருள்தாஸ், சரத்தைக் கொன்றுவிட திருச்சி அருள்தாஸ் கைக்கு செல்கிறது. இதற்கிடையில் சரத்தின் மகள் மஞ்சிமா மோகனுக்கு விக்ரம் பிரபு காவலனாக செல்ல நேரிடுகிறது. வழக்கம் போல ஹீரோவ…
-
- 1 reply
- 495 views
-
-
ஒரு என்கவுன்டர், பின்னணி, விசாரணை, பாடம்! ‘களத்தூர் கிராமம்’ விமர்சனம் Chennai: மூவரின் தனிப்பட்ட விரோதத்திற்கு ஒரு கிராமமே பலிகடா ஆகி, அதிலிருந்து மீண்டு வரும் கதையே 'களத்தூர் கிராமம்'. போலீஸ் வெறுக்கும், போலீஸை ஊருக்குள் அனுமதிக்க மறுக்கும் கிராமம் களத்தூர். தமிழக எல்லையின் முடிவில், ஆந்திர எல்லையின் தொடக்கத்தில் அமைந்திருக்கிறது. வாழ்வாதாரத்திற்காக களவுத் தொழிலைச் செய்யும் அந்த கிராமத்து மக்களுக்கு கிஷோரும், அவரது நண்பர் சுலில் குமாரும்தான் எல்லாம். சுலில் குமாரின் சபலத்தால், நண்பர்கள் இருவருக்குள்ளும் பகை மூள்கிறது. துரோகத்திற்காக சுலீலைக் கொலை செய்கிறார் கிஷோர். பாவத்திற்குப் பரிகாரமாக சுலீலின் தாத்தா பாட்டியிடமே தன் குழந்…
-
- 0 replies
- 453 views
-
-
சென்னை: என்னை மீண்டும் இங்கே இத்தனை சக்தியோடு நிற்க வைத்திருப்பது உங்களின் பேரன்புதான். இந்த அன்பை எப்படி திருப்பித் தரப் போகிறேன் என்று தெரியவில்லை. அதனால்தான் மக்களைச் சந்திக்காமல், ஒரு பெரிய கடன்காரனைப் போல கூச்சத்தோடு ஒதுங்கி நிற்கிறேன், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சிவாஜிகணேசன் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகமாகும் கும்கி படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு திடீரென வந்தார் ரஜினி. பிரபு மகன் விக்ரம் பிரபுவை வாழ்த்தி ரஜினி பேசியதாவது: இப்போதெல்லாம் நான் எந்த விழாக்கள், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை. ஒரு நிகழ்ச்சிக்கு போய்விட்டு இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்லாவிட்டால் வருத்தப்படுவார்கள். சினிமாவில் எல்லோரும் எனக்கு நண்பர்கள். எதி…
-
- 6 replies
- 1.1k views
-
-
[size=2] [size=2] [size=4]நமது இதிகாசங்களும் புராணங்களும் இன்னபிற பண்பாட்டுச் சாதனங்களும் நமது பொதுப்புத்தியிலும் நம்ம வீட்டு பெண்களின் பொதுப்புத்தியிலும் மிகுந்த சூழ்ச்சியோடு ஏற்றி வைத்திருக்கும் கருத்துக்களில் ஒன்றுதான் “ கல்லானாலும் கணவன்..புல்லானாலும் புருசன் “ என்பது. இதை ஒரு கருத்தாகவன்றி தங்களின் வாழ்க்கை தத்துவமாகவே நமது பெண்கள் வரித்துக்கொண்டுவிட்டனர். அது நம்மைப்போன்ற வல்லாட்டம் போடும் ஆண்களுக்கு மிகுந்த வசதியாகப் போய் விட்டதால், ‘ஆமாமாம்..பேஷ்..பேஷ்..அப்படித்தான் பொண்ணா லட்சணமா சமர்த்தா நடந்துக்கணும்‘ என அதற்கு அவ்வப்போது தூபம் போட்டு வளர்த்தும் வருகிறது ஆணாதிக்கச் சமூகம். அந்த பித்தலாட்டத்திற்கு வலு சேர்க்கத்தான், புருசனை விலைமாது வீட்டுக்கு கூடையில் வை…
-
- 0 replies
- 664 views
-
-
ஒரு கல் ஒரு கண்ணாடி முதல் படத்தில் கதையும், காமெடியும் சேர்ந்தார்ப் போல இருந்தது, இரண்டாவதில் கொஞ்சம் கதை முழுக்க முழுக்க காமெடி, இதில் கதை என்ற ஒன்றைப் பற்றி கவலைப் படாமல் வெறும் காமெடியை மட்டுமே வைத்து ஜெயித்திருக்கிறார் இயக்குனர் ராஜேஷ். சத்யம் தியேட்ட்ரில் டிக்கெட் கிழிக்கும் வேலையிலிருக்கும் ஹீரோவும், ஸ்டாலில் சர்வீஸ் செய்யும் சந்தானமும் இணை பிரியா நண்பர்கள். முகத்தில் முகமுடி போட்டுப் போகும் பிகர்களின் பின்னால் அலைபவர்கள். அப்படி பார்த்த பெண்ணை பின் தொடர்ந்து லவ்வுகிறார் உதய். கூடவே எல்லாவற்றிக்கும் உதவுகிறார் சந்தானம். ஒரு கட்டத்தில் லவ் புட்டுக் கொள்கிறது இவர்களது வாயாலேயே பின்னால் எப்படி சேர்ந்தார்கள் என்பதே இப்படத்தின் கதை என்கிற வஸ்து. சந்…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஒரு காட்சிக்கே அதிர்ந்த அரங்கம் ! - முழுநேரம் சினிமாவில் நடித்து வரும் கோபி சுதாகர்.! சென்னை : திருச்சியில் பொறியியல் படித்து விட்டு சினிமாவில் காமெடியனாக ஆக வேண்டும் என்ற ஆசையில் விஜய் டீவியின் கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போராடி பங்கேற்றனர் கோபி மற்றும் சுதாகர். அதில் தோல்வி அடைய சளைத்து போகாத இருவரும் மூன் தொலைக்காட்சியில் நகைச்சுவை ஷோக்களிலில் நடித்து வந்தனர்.அதற்கு பிறகு மெட்ராஸ் சென்ட்ரல் எனும் யூடியூப் பக்கத்தில் இவர்கள் திறமையைக்கண்டு, இருவருக்கும் வேலை கிடைத்தது. அதில் பரிதாபங்கள் என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்து தங்களது முழுதிறமையை அந்த நிகழ்ச்சியில் காட்டி வந்தனர் கோபியும் சுதாகரும். பரிதாபங்கள் நிகழ்ச்சி மாபெரும் வெற்றி அடைந்து இணையத்தை பயன்பட…
-
- 0 replies
- 803 views
-
-
பிறக்கும்போதே நம் தலைவிதி நிர்ணயிக்கப்படுகிறது. அதை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது என்ற கருவை மையமாக வைத்துதான் ‘கால் கொலுசு’ படம் உருவாகிறது. தேனியில் 1980களில் நடந்த ஒரு காதல் ஜோடியின் உண்மை கதை. இப்போதும் அந்த ஜோடி வாழ்ந்து கொண்டிருக்கிறது. கம்பம், சுருளிப்பட்டி இடையே நடக்கும் முக்கிய காட்சிகளை படமாக்க அப்பகுதியில் செல்லும் பஸ்ஸை வாடகைக்கு பேசி ஒரு நாள் முழுவதும் படப்பிடிப்பு நடத்தினோம். இதில் ஜாபர் என்ற 14 வயது சிறுவன் நடிக்கிறான். தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் வரை நடித்தாலும் ஒரு வசனம் கூட பேச மாட்டான். மனசாட்சி பேசுவது போல் சில படங்களில் காட்சி வரும். அதே போல் தலை எழுத்து கதாபாத்திரமாக இதில் அந்த சிறுவன் நடித்திருக்கிறான். ஒவ்வொரு காட்சிக்கு பிறகும் சிரிப்பது மட்டுமே …
-
- 0 replies
- 1.1k views
-
-
திடீர் என்று நிகழும் சில அற்புதமான சந்திப்புகள். வடிவேலுவை நீண்ட காலத்துக்குப் பின் சந்தித்தது அந்த ரகம்! ‘‘நலமா?’’ ‘‘நல்லா இருக்கேண்ணே... நல்லா இருக்கேன். நல்லா ஆரோக்கியமா இருக்கேன். பார்த்தீங்களா... ஒடம்பைக் கட்டுக்குள்ள கொண்டுவந்திருக்கேன் (புஜத்தைக் காட்டுகிறார்).’’ ‘‘ரஜினியே படம் செய்தால்கூட, ‘வடிவேலுவிடம் முதலில் தேதி வாங்குங்கள்’ என்று சொல்லும் நிலை இருந்தது. ஆனால், இப்போது நீங்கள் படம் நடித்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. என்ன நடக்கிறது?’’ ‘‘ஒரு உண்மையைச் சொல்லட்டுங்களா? யாருமே என்கிட்ட பேசுறதே இல்லண்ணே. யாரும் போன்கூடப் பண்றது இல்லை. ஆனா, அதைப் பத்தி நான் கவலைப்படலை. மௌனமா கவனிச்சுக்கிட்டு இரு…
-
- 2 replies
- 951 views
-
-
நாயகன் விதார்த்துக்கு திருமணம் நடந்தால் குலதெய்வம் கோவிலில் கிடாய் வெட்டி சாமி கும்பிடுவதாக அவரது அம்மா வேண்டிக் கொள்கிறார். இந்நிலையில், விதார்த்துக்கும் ரவீணாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது. இதனால், தனது வேண்டுதலை நிறைவேற்ற குலதெய்வம் கோவிலுக்கு செல்ல முடிவெடுக்கிறார் விதார்த்தின் அம்மா. அதன்படி, விதார்த், ரவீணா, விதார்த்தின் அம்மா, ரவீணாவின் பெற்றோர், ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் என அவரது சொந்த பந்தங்கள் எல்லோரும் ஒரு லாரியில் குலதெய்வம் கோவிலுக்கு பயணமாகிறார்கள். அந்த லாரியை விதார்த்தே ஓட்டி செல்கிறார். கோவிலை நெருங்கும் சமயத்தில் எதிரே வந்த மோட்டார் வண்டியில் லாரி மோதி விடுகிறது. இதில், மோட்டார் வண்டியில் வந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்துபோகிறார். விபத்து நடந…
-
- 1 reply
- 711 views
-
-
ஒரு குட்டி ரெட்ரோ – கிருஷ்ணமூர்த்தி என்னிடம் பலர் பேசும் போது நான் நிறைய உலக சினிமாவும் உலக இலக்கியத்தையும் வாசித்ததாக நினைத்து நிறைய கேட்கிறார்கள். அவர்கள் கேட்கும் சினிமாக்களும் இலக்கியங்களும் நான் அறிந்தது கூட இல்லை. தெரியாது என்று சொல்லி சொல்லி வாய் வலித்தது தான் மிச்சம். சில நேரங்களில் இந்த உண்மையை சொல்லக் கூட பயமாக இருக்கிறது. என்னால் அவர்களின் கேள்வியை எதிர்கொள்ள முடியும். முடியாத விஷயம் ஒன்றும் இருக்கிறது. அவர்கள் அந்த குறிப்பிட்ட சினிமாவையோ இலக்கியத்தையோ வைத்து இது கூட தெரியாமல் எப்படி நீ சினிமா இலக்கியத்தைப் பற்றியெல்லாம் எழுதலாம் என்கிறார்கள். இக்கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வேன் ? மௌனம் மட்டுமே என் வசம் மீதம் இருக்கும். அவர்களுக்கு சொல்லமுடியாத ஒரு பதில்…
-
- 11 replies
- 1.3k views
-
-
ஒரு குப்பை கதை திரை விமர்சனம் வாரம் வாரம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கைக்கு குறைவில்லை. ஆனால் பெரிதளவில் சில படங்களுக்கு விளம்பரம் இல்லையென்றாலும் கதையால் ஈர்க்கப்படுகின்றன. அந்த வகையில் ஒரு குப்பை கதை வெளியாகியுள்ளது. வாருங்கள் குப்பைக்குள் என்ன கிடக்கிறது என கிண்டி பார்க்கலாம். கதைக்களம் படத்தின் ஹீரோ தினேஷ் ஒரு சாதாரண கார்ப்பொரேஷன் தொழிலாளி. குப்பை அள்ளும் தொழில் செய்து வருகிறது. ஒரே ஒரு அம்மாவுடன் கூவத்தில் வாழ்ந்து வருகிறார். எங்கெங்கோ பெண் தேடி அலைந்த இவருக்கு கடைசியில் மலைவாழ் கிராம பெண் மனைவியாகிறார். அதுவும் எப்படி? ஆயிரம் பொய்களை சொல்லி கல்யாணம் செய்வார்களே அது போல தான். தன் கணவர் மீதான வேறொர…
-
- 0 replies
- 908 views
-
-
விஜயகாந்த், விஜய் இருவரையும் சுற்றிய அரசியல் இப்போது சத்யராஜ் பக்கம் வீசத் தொடங்கியிருக்கிறது. விஜயகாந்தோடு நெருக்கம்; விடுதலைச் சிறுத் தைகளோடு ஊர்வலம் என்று தென்பட்டவரை நேரில் சந்தித்தே கேட்டோம். ‘சட்டப்படி குற்றம்’ படத்துக்காக வயது குறைந்து தெரிந்தார். எப்படி போயிட்டிருக்கு உங்க சினிமா கேரியர்... எத்தனை படங்கள்ல டூயட் பாடுறீங்க...? ‘‘ஐயோ... அந்த தப்பை மட்டும் இனிமேல் செய்யமாட்டேன். டூயட் இல்லாத கேரக்டர் உள்ள படங்களை செலக்ட் பண்ணி நடிக்கிறேன். கலவரம், முறியடி, த்ரீ இடியட்ஸ், வெங்காயம், குலசேகரனும் கூலிப்படையும், சட்டப்படி குற்றம், சினம், ஆயிரம் விளக்கு இப்படி நான் நடிக்கிற எந்தப் படத்திலும் எனக்கு டூயட் கிடையாது. இனி நான் கதையின் நாயகனாதான் வருவேன்.’’ ‘எ…
-
- 0 replies
- 897 views
-
-
நான் மகான் அல்லமாற்றான்துப்பாக்கி போன்ற படங்களில் நடித்த காஜல் அகர்வால் தற்போது விஜய்யுடன் ஜில்லா கார்த்தியுடன் ஆல்இன்ஆல் அழகுராஜா படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தெலுங்கில் கைநிறைய படங்களில் நடித்து வந்தார். தற்போது நிலைமை மாறிவிட்டது. பெரிய நிறுவனங்கள் தங்கள் படங்களில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினாலும் ஒப்பந்தம் செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றன. அதற்கு காரணம்.. சம்பளத்தை அவர் 1 கோடியாக உயர்த்தியதுதான் என்று கூறப்படுகிறது. தமிழ் படங்களிலும் அவரை ஒப்பந்தம் செய்வதில் தயக்கம் உள்ளது. தெலுங்கில் ராம் சரணுடன் நாயக் ஜூனியர் என்டிஆருடன் பாட்ஷா என 2 படங்கள் மட்டுமே கைவசம் இருந்தது. அப்படங்கள் முடிந்து திரைக்கு வந்துவிட்டது. படங்கள் கமர்ஷியலாக…
-
- 0 replies
- 428 views
-
-
ஒரு சூரியன்; ஒரு சந்திரன்; ஒரேயொரு சிவாஜி! நடிகர்திலகம் சிவாஜியின் நினைவு நாள் இன்று! பல்லாயிரக்கணக்கான நடிகர்கள் கொண்ட தமிழ் சினிமா உலகில், 1952ம் ஆண்டுக்கு முன்பு எப்படியோ... ஆனால் அதற்குப் பிறகு, ஒரேயொருவர் பேசிய வசனங்களைக் கொண்டும் நடையைக் கொண்டும் முகபாவங்களைக் கொண்டும் நடிக்க சான்ஸ் கேட்டு வந்தார்கள் எல்லோரும். ‘எங்கே நடிச்சுக் காட்டு’ என்று சொன்னால், உடனே ஒவ்வொரும் அப்படியாகவே ஆசைப்பட்டு, உணர்ந்து, உள்வாங்கி நடித்தார்கள். சான்ஸ் கிடைத்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அந்த ஒரேயொரு நடிகர்... ஒரேயொரு சாய்ஸ்... நடிகர்திலகம் சிவாஜிகணேசன். சின…
-
- 7 replies
- 2k views
-
-
சாதிய அரசியல் முதல் சர்வதேச அரசியல் வரை சிவப்புச் சிந்தனைகளை சினிமாவில் விதைப்பவர் இயக்குநர் ஜனநாதன். ஜீவா- 'ஜெயம்’ ரவி இணைந்து நடிக்கும் படத்துக்கான ஏற்பாடுகள், இயக்குநர் சங்கப் பொருளா ளராக திரைப்படத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தை, மரண தண்டனைக்கு எதிரான கூட்டங்கள் என்று பரபரப்பாக இருந்தவரைச் சந்தித்தேன். ''ஆரம்பத்தில் என்கிட்ட வந்த ஜீவா - 'ஜெயம்’ ரவி இல்லை அவங்க. படத்தைத் தயாரிக்கப் பலரும் முன் வருகிறார்கள். அடுத்த வருடம் எதிர்பார்க்கப்படும் படங்களில் நிச்சயம் இதுவும் ஒன்றாக இருக்கும். இதுவும் அரசியல் பேசும் சினிமாதான்!'' ''பொதுவாக, மாற்று சினிமாக்களைப் பற்றிப் பேசுபவர்கள் உங்கள் படங்களைக் கவனமாகத் தவிர்ப்பதுபோலத் தெரிகிறதே?'' ''என் சினிமா மீது மட…
-
- 0 replies
- 813 views
-
-
ஒரு தலை ராகம் .......................... ஒரு மன மாற்றத்திற்காக அறையை இருட்டாக்கி, முறுக்கு டப்பாவை கையில் வைத்துக்கொண்டு, வசதியாக சாய்ந்தபடி, மனதிற்கு பிடித்த படம் யூ ட்யூபில் பார்க்கத் தொடங்கினேன்... 1980 ல் வெளி வந்த டி.ராஜேந்தரின் படம்... கதாநாயகி ரூபா அற்புதமான தேர்வு...மிகக் குறைந்த வசனம்தான் அவருக்கு படம் நெடுகிலும்... பேசமுடியாத வசனங்களை பேசும் கண்களால் அப்படியே நம்முன் கொட்டுகிறார்... அந்த அகன்ற கரிய விழிகள்தான் எத்தனை உணர்வுகளை படம் முழுதும் பேசிக் கொண்டே போகிறது...படம் முழுவதிற்கும் இரு முறை தான் சிரித்திரிப்பார்... அவர் கட்டியிருந்த அத்தனை காட்டன் சேலைகளும் அவ்வளவு அழகு... கதாநாயகன் சங்கர் அந்த காலத்தில் எங்களுக்கெல்லாம் ஹீரோ. இந்தத் திரைப்படம் வெளி வந்த உ…
-
-
- 4 replies
- 370 views
- 1 follower
-