வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5550 topics in this forum
-
எந்திரன் பார்த்தேன் அ.முத்துலிங்கம் நான் என் வாழ்க்கையில் எந்த திரைப்படத்தையும் முதல் நாள், முதல் காட்சி பார்த்தது கிடையாது. நாற்பது வருடங்களுக்கு முன்னர் அது இலங்கையில் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று. கேட் பாய்ந்தோ, சுவரில் தொங்கியோ, ஆட்களின்மேல் நடந்தோ போக சாத்தியப்பட்டவர்களுக்கே அது முடியும். ஆகவே படத்தை 'இன்றோ நாளையோ மாற்றிவிடப் போகிறார்கள்' என்று செய்தி வந்ததும் போய்ப் பார்ப்பேன். அநேகமாக என்னுடைய நண்பர்கள் அந்தப் படம் பார்த்ததையே அப்போது மறந்துவிட்டிருப்பார்கள். கனடாவில் ‘எந்திரன்’ வருகிறது என்றதும் வழக்கம்போல பெரிய பரபரப்பும் ஆயத்தங்களும் தெரிந்தன. பகல் காட்சி, இரவுக்காட்சி, நடுஇரவுக்காட்சி என்று பல காட்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள…
-
- 9 replies
- 1.2k views
-
-
வெயிலை தணிக்கும் ஏ.சி. பிரபல நடிகர் வீட்டில் வெப்பத்தை ஏற்றியிருக்கிறது. ஈக்காட்டுதாங்கல் கலைமகள் நகரில் இருக்கிறது விஜயகுமாரின் வீடு. அவர் மனைவி மஞ்சுளா, அவரது மகன் அருண் விஜய் மற்றும் அருண் விஜய்யின் மனைவி ஆகியோர் அதில் வசித்து வருகிறார்கள். நேற்று காலை 11 மணி அளவில் இரண்டாவது மாடியிலிருந்து புகை கசிந்திருக்கிறது. சில நிமிடங்களில் வீடே புகைமண்டலமாக மாற அலறி அடித்து தீயணைப்புத்துறைக்கு போன் செய்திருக்கிறார்கள். அதற்குள் இரண்டாவது மாடியிலிருந்த அறையின் மெத்தை, தரைவிரிப்பு, புத்தகங்கள் என அனைத்தையும் தின்று ஜீரணித்து விட்டார் அக்னிபகவான். 'தாமிரபரணி' ஷுட்டிங்கில் இருந்த விஜயகுமாரும், அவரது மருமகனும் 'தாமிரபரணி' இயக்குனருமான ஹரியும் உடனே வீட்டிற்கு தி…
-
- 0 replies
- 1.2k views
-
-
தெனாலிராமன்... வடிவேலுவை மிரட்டினால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரும் - சீமான் எச்சரிக்கை. இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமாான் வெளியிட்டுள்ள அறிக்கை: நடிகர் வடிவேலு நடித்திருக்கும் 'தெனாலிராமன்' படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லி சில அமைப்புகள் அவருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அவருடைய வீட்டை முற்றுகை இடப் போவதாகவும், அந்தக் காட்சிகளை நீக்காவிட்டால் வடிவேலு மீது தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் எனவும் சில அமைப்புகள் மிரட்டி வருகின்றன. இன்னும் படமே வெளிவராத நிலையில், கிருஷ்ண தேவராயர் பாத்திரம் எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பது தெரியாமல் காதுக்கு வந்த தகவல்களை வைத்துக்கொண்…
-
- 11 replies
- 1.2k views
-
-
கோமாளிகள்! இலங்கைத்தமிழ் சினிமாவில் அதிக வசூலையீட்டிய திரைப்படம். இத்திரைப்படம் வெளியானபோது யாழ்ப்பாணம் , கொழும்பு நகர்களில் ஐம்பது நாள்களைக்கடந்து ஓடியது. ஏனைய இடங்களிலும் நன்கு ஓடியது நினைவிலுள்ளது. வி.பி.கணேசனின் 'புதிய காற்று' வெற்றியைத்தொடர்ந்து வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம். இத்திரைப்படம் வெளியாகியபோது இதனை நான் பார்க்கவில்லை. யாழ் வின்சர் திரையரங்கில் ஓடியது. இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவையில் 'கோமாளிகள் கும்மாளம்' என்னும் பெயரில் சுமார் இரண்டு வருடங்கள் வாராவாரம் ஒலிபரப்பாகி மிகுந்த வரவேற்பைப்பெற்ற வானொலி நாடகமிது. எஸ்.ராம்தாசின் கதை, திரைக்கதை வசனத்தில், எஸ். இராமநாதனின் இயக்கத்தில் வெளியான திரைப்படத்துக்கு இசையினை கண்…
-
- 3 replies
- 1.2k views
-
-
டோலிவுட்டுக்கும் பாலிவுட்டுக்கும் பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கும் கவர்ச்சிப் புயல் ஹன்ஸிகா ஐதராபாத்தில் ஒரு சாலை விபத்தில் சிக்கிக் கொண்டார். மஸ்கா எனும் தெலுங்குப் படப்பிடிப்புக்கு போகும்போதுதான் இந்த விபத்து நடந்தது. அதிர்ஷ்டவசமாக கையில் காயத்துடன் (ரத்தம் கொட்டியது!) தப்பிவிட்டார். உடனே அவரை பஞ்சாரா ஹில்ஸில் உள்ள மருத்துவமனைக்குக் கூட்டிப் போனார்கள். சிகிச்சைக்குப் பிறகு நன்றாக ஓய்வெடுங்கள் என மருத்துவர்கள் கூறினாலும் இருப்புக் கொள்ளவில்லையாம் அம்மணிக்கு. அடுத்த ஒரு மணிநேரத்திலேயே மருக்குவமனையிலிருந்து வெளியே வந்துவிட்ட ஹன்ஸிகா, நேராக படப்பிடிப்புத் தளத்துக்குப் போய்விட்டார். கதாநாயகிக்கு விபத்து என்பதால் படப்பிடிப்பை ரத்து செய்துவிடும் மூடிலிருந்த இயக…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஒரு பெண் தன்னுடைய வீட்டிலிருந்து வெளியே செல்வதற்குமுன், ஏராளமான கேள்விகளை தனக்குள்ளே கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. நான் போகிற இடம் எனக்குப் பாதுகாப்பானதுதானா? நான் எந்த உடையினை அணிய வேண்டும்? அந்த உடை மிகவும் இருக்கமானதாக இருக்கிறதா? அந்த உடை அணிந்தால், என்னுடைய உடலை வெளிக்காட்டுவதுபோல் இருந்துவிடுமா? எதிலே நான் அவ்விடத்தை அடையப்போகிறேன்? நான் போகவேண்டிய இடத்தில், தனியே நான் நடக்கலாமா? அல்லது ஆண் துணையுடன்தான் நடக்கவேண்டுமா? இப்படியான கேள்விகள் பெண்களின் அன்றாட வாழ்க்கையில் அங்கமாகிப் போயிருக்கிறது. பெண்களுக்கு நிகழ்த்தப்படுகிற உடல்ரீதியான வன்கொடுமைகளே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. (நன்றி - விக்கிபீடியா) கதைச்சுருக்கம்: எகிப்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழ் சினிமாவை கலக்கிய "காதல் மன்னன்" ஜெமினி கணேசன் அவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் காலமானபோது எழுத வேண்டும் என்று நினைத்து தவறிப்போன பதிவு இது! மிஸ்ஸியம்மா முதல் அவ்வை சண்முகி வரை தனக்கென வளர்த்துக் கொண்ட ஒரு பாணியை வைத்து, ஜெமினி தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர். அவர் ஏற்று நடித்த மென்மையான (காதல்!) வேடங்களுக்கு, அவருக்கே உரிய ஸ்டைலில் மெருகேற்றி தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அழியாத் தடங்களைப் பதித்தவர் "காதல் மன்னன்" என்றால் அது மிகையில்லை! பேசும்படம் என்ற சினிமா இதழ் தான், ஜெமினி கணேசனுக்கு 'காதல் மன்னன்' என்ற பட்டம் வழங்கியது! அவர் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன் பிலிம்·பேர் அவருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது மும்பையில் வழங்கியபோது, அவையினர் அ…
-
- 1 reply
- 1.2k views
-
-
லக்ஷ்மி சினிமா விமர்சனம் விமர்சகர் மதிப்பீடு 4 / 5 வாசகரின் சராசரி மதிப்பீடு4 / 5 நடிகர்கள் பிரபுதேவா,ஐஸ்வர்யா ராஜேஷ்,திவ்யா பாண்டே,கருணாகரன் இயக்கம் ஏ எல் விஜய் சினிமா வகை Drama கரு: நடனம் ஆடி 'இந்தியாவின் பெருமை' என்ற பட்டம் பெறும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற துடிக்கும் 10 வயது மகளின் நடனப் போராட்டமே இப்படக்கரு கதை: இந்த படத்தின் மெயின் கேரக்டர் லக்ஷமி. ஸ்கூலுக்கு செல்லும் 10 வயது சிறுமி. இந்த பொண்ணுக்கு நடனம் தான் எல்லாமே. இந்தியாவின் பெர…
-
- 1 reply
- 1.2k views
-
-
தேவாவின் இசையில், குகநாதனின் இயக்கத்தில் "தமிழ்ப் பாசறை" நவம்பர் 26இல் வெளிவருகிறதாம். மேலதிக செய்திகளுக்கு
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழ் திரையுலகில் விட்ட இடத்தை பிடிக்க வீறுகொண்டு எழுந்திருக்கிறார் சினேகா. ஏகப்பட்ட கிசுகிசுக்கள், கதவு தட்டாத படவாய்ப்புகள் உட்பட கடந்த வருடம் பிரச்சனைகளையே பெட்சீட்டாக போட்டு தூங்கினார் சினேகா. அதையெல்லாம் கெட்ட கனவாக மறந்துவிட்டு மீண்டும் புத்துணர்வுடன் புறப்பட்டிருக்கிறார் சினேகா. தங்கர்பச்சான் இயக்கும் 'பள்ளிக்கூடம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் சினேகா, பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய சர்வே ஒன்றில் தென்னிந்திய அளவில் அதிகமான விளம்பர படங்களில் நடிப்பது சினேகாதான் என விளம்பர ராணி பட்டம் கொடுத்து பாராட்டியுள்ளது. முன்பைவிட உடம்பை குறைத்து ஜொலி ஜொலிக்கும் சினேகாவிடம் கூடுதல் அழகின் ரகசியம் பற்றி கேட்டால் நீண்ட பட்டியலை தருகிறார். "முன…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் மாயா இப்பதிவில் இலங்கையிலிருந்து வெளிவந்த திரைப்படங்களையும் சில திரைப்படங்களின் விபரங்களையும் உள்ளடக்க முனைகிறேன் நான் சிறியவன் ? ? சில திரைப்படங்கள் விடுபட்டிருக்கலாம். தெரிந்தவர்கள் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாயிருக்கும் நூலகமொன்றில் நேரம்போகாமல் ? ? புத்தகமொன்றைப்புரட்டிக்கெ
-
- 2 replies
- 1.2k views
-
-
சூரியன் உதிக்கிறானோ இல்லையோ, குசேலன் பற்றிய செய்திகள் இல்லாமல் விடிவதில்லை தமிழர்களின் பொழுது. புளோரா நடிக்கிறார், சுஜா நடிக்கிறார் என்று நாளரு கவர்ச்சியும், பொழுதொரு அட்ராக்ஷனுமாக வளர்கிற குசேலன் பற்றி இன்னொரு புதிய செய்தி. நடிப்பாரோ, அல்லது நடிக்க மாட்டாரோ என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பாடல் காட்சியில் ரஜினியோடு ஆட சம்மதித்துவிட்டாராம் கமல். அதில்லாமல் ஒரு காட்சியில் நடிக்கவும் சம்மதித்திருக்கிறாராம். நடிகர் கமல்ஹாசனாகவே படத்தில் தோன்றுகிறார். இளமை ஊஞ்சலாடுகிறது படத்திற்கு பிறகு இருவரும் ஒன்று சேரும் படம் இது. இடையில் இருவரையும் சேர்ந்து நடிக்க வைத்துவிட எத்தனையோ தயாரிப்பாளர்கள் முட்டி மோதினாலும், தனித்தனியாக நடிப்பது என்பதில் உறுதியாக இருந்தார்கள் இருவரும். வ…
-
- 2 replies
- 1.2k views
-
-
ரீமா சென் கர்ப்பம்... மார்ச்சில் குவா குவா! நடிகை ரீமா சென் கர்ப்பமாகியுள்ளார். மார்ச் மாதம் அவருக்கு குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தேதி குறித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் ரீமாவுக்கும் அவரது காதலர் ஷிவ் கரணுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் நடிக்க வந்துவிட்டார் ரீமா. தமிழில் விஜய் தயாரிக்கும் சட்டம் ஒரு இருட்டறையில் நடித்து வந்தார். இந்தியில் அவர் நடித்த கேங்ஸ் ஆப் வஸீபூர் -2 பெரும் பாராட்டை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது. இந்த நிலையில் அவர் கர்ப்பமானார். இப்போது அவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். அதைக் காட்டிக் கொடுக்கும் அளவுக்கு அவர் வயிறும் வளர்ந்துவிட்டது. எனவே ஷூட்டிங்குகளுக்கு இனி வரமாட்டேன் என்று கூறிவிட்ட ரீமா, மருத்துவ பரிசோதனை செ…
-
- 13 replies
- 1.2k views
-
-
ஒரு சில படங்கள் நம் மனதை விட்டு அகலாமல் உழன்று கொண்டேயிருக்கும். சில படங்கள் பார்க்கும் போது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், ஆனால் படம் விட்டு வெளியே வந்ததும் ஞாபக அடுக்குகளிலிருந்து தேட வேண்டியிருக்கும். இன்னும் சில படங்கள் அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமல் இருக்கும். இதில் யுத்தம் செய் எந்த விதம்? சென்னையில் ஒரு முக்கிய சரகத்தில் தொடர்ந்து மனித கைகள், ஒரு டப்பாவில் போடப்பட்டிருக்க, ஏற்கனவே தொலைந்து போன தன் தங்கையை கண்டுபிடிக்க முடியாமல் விரக்தியின் உச்சத்திலிருக்கும் ஜே.கே எனும் சிபிசிஐடி ஆபீஸரான சேரனிடம் இந்த கேஸ் கொடுக்கப்படுகிறது ஒரு வாய்ப்புடன். இந்த கேஸை கண்டுபிடித்தால் அவரது தங்கையின் கேஸை மீண்டும் ஓப்பன் செய்து விசாரிக்க அனுமதி தருவதாய் சொல்கிறார் சிபிசிஐட…
-
- 0 replies
- 1.2k views
-
-
[size=2] ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் கதையில் தொடங்கி, ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றதன் பின்னணி வரை நீள்கிறது மாற்றான். [/size][size=2] விஞ்ஞானி ராமச்சந்திரனின் மரபு அறிவியல் சோதனை காரணமாக சூர்யா இரட்டையர்களாக பிறக்கிறார்கள். [/size] [size=2] இருவருக்கும் சேர்த்து ஒரு இதயம் தான். அப்பா பால் பவுடர் வியாபாரத்தில் முதலிடம் பிடிக்கிறார். வெளிநாட்டு பெண்மணி ஒருவர் ராமச்சந்திரன் நடத்தும் நிறுவனத்தை உளவு பார்க்க வருகிறார். அவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். தன்னுடைய வெற்றிக்காக எது வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் ராமச்சந்திரனின் சூழ்ச்சியால் இரட்டையர்களில் ஒருவர் இறக்கிறார். அவரின் இருதயம் மற்றொருவருக்கு பொருத்தப்படுகிறது.[/size] [size=2] அவர் வெளிநா…
-
- 0 replies
- 1.2k views
-
-
துணிச்சலான போலீஸ் அதிகாரி உபேந்திரா. அவரைப் பார்த்து போலீஸ் வேலையில் சேர்கிறார் விஷால். தப்பு செய்பவர்களைத் தண்டிக்கிறார். இந்நிலையில் முதல்அமைச்சர் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் சேர்கிறார். அவரது பதவியை கைப்பற்றும் ஆசையுடன் கோட்டா சீனிவாசராவ் உள்பட 4 மந்திரிகள் காய் நகர்த்துகின்றனர். அடியாட்களை வைத்து சக மந்திரிகள் 3 பேரையும் தீர்த்துக்கட்டச் சொல்கிறார் சீனிவாசராவ். அவர்கள் கொல்லப்படுகின்றனர். ஆனால் கொன்றது தனது அடியாள் இல்லை, வேறொரு நபர் என்று தெரிந்ததும் திகிலடைகிறார். திடீர் கொலைகாரனை கண்டுபிடிக்கச் சொல்லி விஷாலுக்கு உத்தரவிடுகிறார். தீவிர வேட்டைக்கு பின் கொலையாளியை பிடிக்கும் விஷாலுக்கு அதிர்ச்சி. அவரை பிடித்து ஜெயிலில் போடுகிறார். இதற்கிடையில் குழந்தைகள் சா…
-
- 0 replies
- 1.2k views
-
-
காதல் கடிதம் திரைப்படத்தை இது வரை பார்க்காதவர்களுக்காக மீண்டும் 20.09.2008 இன்று கனடா மண்ணில் காதல் கடிதம் திரைப்படம் காண்பிக்கப்படுகின்றது. சிறிபாலஜி, அனிசா, நடராஜசிவம் மற்றும் பலர் நடிப்பில் காதல் கடிதம் வசீகரன் - வி.எஸ்.உதயா திரை அரங்கம்: Woodside Cinema Showtime: 13.30 மேலதிக தொடர்புகட்கு: தொலைபேசி இலக்கம்: 416 286 9448
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆஸ்திரேலியாவில் உருவான முதல் தமிழ் சினிமா இனியவளே காத்திருப்பேன் - அக் 6-ல் ரிலீஸ்! இனியவளே காத்திருப்பேன் என்ற முழு நீள புதிய படம் வரும் அக்டோபர் 6-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் சிறப்பு, ஆஸ்திரேலியத் தமிழரால் அங்கேயே உருவாக்கப்பட்ட முதல் தமிழ் சினிமா என்பதுதான். இந்தப் படத்தின் இயக்குநர் பெயர் ஈழன் இளங்கோ. ஈழப் போர்க்களத்தில் இலங்கை படையினரால் நேரடியாக பாதிக்கப்பட்டு சின்ன வயதிலேயே குடும்பத்துடன் இந்தியா வந்து பின் ஆஸ்திரேலியாவில் செட்டிலானவர். இளங்கோவுடன் ஒரு நேர்காணல்... கேள்வி: சினிமா ஆர்வம் எப்படி? ஈழப் போரில் எல்லா தமிழ்க் குடும்பங்களையும் போலவே எங்கள் குடும்பமும் சொல்லொணாத துயரங்களைச் சந்தித்தது. எல்லா சொத்துக்களையும் விட்டுவிட்டு கட்டிய…
-
- 15 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=DnynzxGbI-c&feature=player_embedded இந்தப் பாடலைப் போல இன்னும் பல பாடல்கள் வேண்டுமா? கீழ்வரும் லிங்க்கில் கிளிக்கவும் http://www.thedipaar.com/cinema/cinema.php?id=5611
-
- 1 reply
- 1.2k views
-
-
என் காதல்... ஸ்கூல்ல ஆரம்பிச்சு காலேஜ் வரை அஞ்சு வருஷம் ஒரு பொண்ணைக் காதலிச்சுட்டு இருந்தேன். அப்ப ப்ரீத்தி எங்க ரெண்டு பேருக்கும் நடுவில் பெஸ்ட் ஃப்ரெண்ட். பக்கத்துப் பக்கத்து வீடு. என் காதலில் திடீர்னு ஒரு பிரேக். அவங்க 'போஸ்ட் கிராஜுவேஷன் படிக்க வெளியூர் போறேன்'னு சொன்னாங்க. நீதானே என் பொன்வசந்தம்... நான் அப்போதான் காலேஜ் முடிச்சுட்டு, சென்னை வந்திருந்தேன். கையில பத்து பைசா கிடையாது. வேலை தேடிட்டு இருக்கேன். ஆனா, எனக்கு டைரக்டர் ஆகணும்னு ஆசை. உதவி இயக்குநரா சேர்ந்தா, சம்பளம் கிடைக்காது. 'நீ போகாதம்மா... நாம இங்கேயே ஒண்ணா இருக்கலாம்'னு சொல்றேன். ஆனா, என் பேச்சைக் கேட்கலை. சண்டை. போய்ட்டாங்க. அதுதான் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்துல ஒரு போர்ஷன். நொந்துட்டேன்.…
-
- 5 replies
- 1.2k views
-
-
பாம்பை கண்டால் படையும் நடுங்கும். இதில் கீர்த்தி சாவ்லா எம்மாத்திரம்? கடந்த சில நாள்களாக மைலாப்பூர் கோகுலம் ஹவுசில் 'சூர்யா' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் முதன் முதலாக இயக்கும் படம். இவர் மகன் விஜய சிரஞ்சீவி ஹீரோ. கீர்த்தி சாவ்லா ஹீரோயின். படத்தில் விஜய சிரஞ்சீவி பயங்கர ஜாலி பேர்வழி. அதிலும் கீர்த்தி சாவ்லா என்றால் கேட்கவே வேண்டாம். விஜய சிரஞ்சீவியின் இந்த விளையாட்டுத்தனத்தை கோகுலம் ஹவுசில் எடுத்து வந்தார் ஜாக்குவார். காட்சிப்படி விஜய சிரஞ்சீவி பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென பாம்பு ஒன்றை கீர்த்தி மீது வீச வேண்டும். பாம்பாட்டியை வரவழைத்து பாம்பையும் தயார் செய்தாயிற்று. ஆனால், கீர்த்தியிடம் மட்டும் பாம்பு விஷயத்தை கூறவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
பழம்பெரும் நடிகை ‘சி.ஐ.டி சகுந்தலா’ காலமானார்! பழம்பெரும் நடிகையான ‘சி.ஐ.டி சகுந்தலா மாரடைப்பு காரணமாக தனது 85 ஆவது வயதில் நேற்று உயிரிழந்தார். பின்னணி நடனக் கலைஞராக சினிமாவில் கால் பதித்த நடிகை சகுந்தலா,தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த நேதாஜி (1996), நான் வணங்கும் தெய்வம் (1963), கை கொடுத்த தெய்வம் (1964) உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1399906
-
- 0 replies
- 1.2k views
-
-
விக்ரம் பிரபு ஒரு வெற்றி கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். தொடர் தோல்விகளால் துவண்டு இருக்கு இவர் தன் சொந்த தயாரிப்பில் தானே நடித்து அசோக் குமார் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் நெருப்புடா. இந்த நெருப்புடா அவருக்கு வெற்றியை தந்ததா? பார்ப்போம். கதைக்களம் சிறு வயதில் தன் ஏரியாவில் நடக்கும் தீ விபத்தை அனைத்தவர்களை பார்த்து ஒரு தீயனைப்பு வீரனாக வேண்டும் என்று நினைக்கின்றார் விக்ரம் பிரபு. அவருடன் சேர்ந்து 4 நண்பர்களும் இந்த வேலைக்கு வர விரும்புகிறார்கள். ஊரில் எங்கு தீப்பிடித்தாலும் இவர்கள் டீம் அங்கு இருக்கும், எல்லாம் நல்ல படியாக போக தேர்வு நாளும் நெருங்குகின்றது. தேர்வுக்கு முந்தைய நாள் விக்ரம் பிரபு…
-
- 2 replies
- 1.2k views
-
-
நடிகை காயத்ரி ஜெயராமுக்கும், அவரது அந்தமான் காதலர் சமீத்துக்கும் வருகிற 13ம் தேதி அந்தமானில் கல்யாணம் நடைபெறுகிறது. ஒரு சோப்பு கம்பெனி நடத்திய மிஸ் சென்னை அழகிப் போட்டியில் வென்று அப்படியே மாடலிங்கில் நுழைந்து, மனதைத் திருடி விட்டாய் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் காயத்ரி ஜெயராம். முதல் படத்திலேயே ரசிகர்களை வசீகரித்தார். குறிப்பாக மஞ்சக் காட்டு மைனா பாட்டில் அவர் போட்ட ஆட்டமும், குலுங்கிய குலுக்கலும் காயத்ரிக்கு ரசிகர் வட்டத்தை சேர்த்து விட்டது. இந்தப் படத்தின் மூலம் பிரபு தேவாவின் காதல் வலையிலும் அவர் விழுந்ததாக கூறப்பட்டது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்ததாகவும், ஆனால் திடீரென பிரபு தேவா கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதாகவும் பரபரப்பு எழுந்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இம்சை அரசன் விரைவில் 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' ஆக மாறுகிறார். முதல் படத்தில் எட்டடி பாய்ந்தால் அடுத்த படத்தில் பதினாறு அடி பாயவேண்டும் என்று விதியா? இம்சை அரசனில் இரண்டு வேடங்களில் நடித்த வடிவேலு 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' படத்தில் நான்கு வேடங்களில் வருகிறார். முதல்கட்ட தகவல்களின்படி நான்கு வேடங்களில் ஒன்று நார்மல். மற்ற மூன்றும் வித்தியாசமான கெட்டப்புகள். புராண இதிகாசத்தையும், நவீன உலகையும் இணைக்கும் கதை இது. இதற்காக சென்னை ஸ்டுடியோவில் பிரமாண்ட எமலோக அரங்கை அமைக்க இருக்கிறார் கலை இயக்குனர் பி. கிருஷ்ணமூர்த்தி. படத்தின் ஒரே நோக்கம் பார்வையாளர்களை இரண்டரை மணி நேரம் சிரிக்க வைக்க வேண்டும்! இதனால் வடிவேலுவின் கெட்டப்பை மட்டுமல்லாமல் படத்தில் வரும் எமலோக …
-
- 1 reply
- 1.2k views
-