ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142931 topics in this forum
-
சட்ட விரோத ஆர்ப்பட்டங்கள் மற்றும் பேரணிகளை கலைக்க பொலிஸ் கலத்தடுப்புப் பிரிவுக்கு மேலதிகமாக பொலிஸ் குதிரைப்படைப் படை மற்றும் மோப்ப நாய்களைப் பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் சுவீடன் மற்றும் ஸ்கொட்லன்ட்யார்ட் ஆகியவற்றின் கலத்தடுப்பு விஷேட நிபுணர்கள் பொலிஸ் மோப்ப நாய்களுக்கு அது தொடர்பிலான அடிப்படை பயிற்சிகளையும் வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டி பொலிஸ் மோப்ப நாய் தலைமையகத்தில் 30 மோப்ப நாய்களுக்கு இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்கொட்லட்யார்ட் பொலிஸார் செயற்படும் பிரதேசங்களிலும் சுவீடனிலும் சட்ட விரோத பேரணிகளை கலைப்பதில் குதிரைகளும் மோப்ப நாய்களும் வெற்றிகரமாக கலைக்கும் நடவடிக்கைகளை செய்துள்ளதாகவும் அதனை…
-
- 0 replies
- 249 views
-
-
(எம்.மனோசித்ரா) இராணுவத்தில் சேவையாற்றிய போது படைகளுக்கு கட்டளையிட்டதைப் போன்று நாட்டை நிர்வகிக்க முடியாது என்று அமைச்சர் சரத் வீரசேகரவிடம் தெரிவிக்க விரும்புகின்றோம். மத்ரசா பாடசாலைகள் என்றால் என்ன என்பதை முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், மத்ரசா பாடசாலைகளை தடை செய்ய வேண்டும் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இராணுவத்தின் சேவையாற்றிய போது படைகளுக்கு கட்டளையிட்டதைப் போன்று நாட்டை ஆட்சி செய்ய முடியாது என அவரிடம் தெரிவிக்க விரும்புகின்றோம். மத்ரசா பாடசாலைகள் என்றால் என்ன என்பதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மத்ரசா பாடசாலைகள் என்பது ஏனைய மதங்களில் காணப்படும் அ…
-
- 0 replies
- 329 views
-
-
கிளிநொச்சியில் கோர விபத்து ; தந்தையும் இரு மகன்களும் பலி கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் நேற்று (26.03.2021) இரவு இடம்பெற்ற விபத்தில் தந்தை மற்றும் அவரது இரு மகன்கள் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிய திசையில் கார் காணப்படுவதாவும் அதற்கு நேரெதிரே டிப்பர் காணப்படுகிறது. வீதியை விட்டு விலகிய ரிப்பர் காருடன் மோதி விபத்து இடம் பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் 9 மற்றும் 12 வயதுகளை உடைய சிறுவர்கள் இருவரே உயிரிழந்திருக்கின்றனர். விபத்தில் பளை தர்மங்கேணி பகுதியை சேர்ந்த சற்குணம் சாருஜன், சற்குணம் சாரங்கன் என்ற சிறுவர்களே உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் படுகாயம் அடைந்த …
-
- 0 replies
- 283 views
-
-
கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தில் நல்லதொரு குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கப் போவதாக விடுதலை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அணித் தலைவர் தமிழினி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=19430
-
- 11 replies
- 1.4k views
-
-
'படம்பிடித்து அச்சுறுத்தவில்லை' மேனகா மூக்காண்டி போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களைப் படம்பிடிக்கவோ அல்லது வீடியோப் பதிவு செய்யவோ, பாதுகாப்புத் தரப்பு உத்தரவிடவில்லை. அத்துடன், முகாம் தேவைக்காக, அங்கிருக்கும் படையினர் புகைப்படம் எடுத்திருக்கலாமே தவிர, அது பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல என்று, பாதுகாப்புத் தரப்பு, நேற்றுத் தெரிவித்தது. “படை முகாம் என்பது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வெளியிலிருந்து படை முகாமுக்கு வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் தேவையும், அம்முகாமில் உள்ள அதிகாரிகள் வசம் உள்ளது. அதனால், தங்களது பாதுகாப்புக்காக அவர்கள் ப…
-
- 0 replies
- 471 views
-
-
தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் அவலங்களை தடுத்து நிறுத்தி அங்குள்ள தமிழ் மக்களைக் காப்பாற்றக் கோரி பிரித்தானியாவில் ரிம் மாற்றின் முன்னெடுக்கும் உண்ணாநிலைப் போராட்டம் 12 ஆவது நாளாக இன்று வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 278 views
-
-
இவர்களை நேரடியாக தேர்தலில் போட்டியிட வைப்பதா? அல்லது பிரசாரப் பணிகள், தேர்தல் செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதா? என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகிறது. தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/archives/20153
-
- 4 replies
- 832 views
-
-
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் சட்டவிரோதமாக கடத்திச் சென்று கைது செய்யப்பட்டுள்ள அராஜகம் குறித்து உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர். தற்போது 21 மீனவர்களும் 19.7.2013 வரை இலங்கை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் அப்பாவி தமிழர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி சட்டவிரோதமாக கடத்தி கைது செய்வது பற்றி மீண்டும், மீண்டும் நான் உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்து கடிதம் எழுதி வருகிறேன…
-
- 1 reply
- 281 views
-
-
நான் பேஸ்புக் பார்க்கமாட்டேன் : யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு எமக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்த வடக்கு, தெற்கு மற்றும் வெளிநாடுகளில் உள்ள நிறைய பேர் சதி செய்கின்றனர். இதனை பேஸ்புக் ஊடாக அவதானிக்க முடியும். குறிப்பாக நான் பேஸ்புக் பார்ப்பதும் இல்லை. இது போன்ற விடயங்களை தொடர்ந்து பார்ப்பதால் ஒரு பயனும் இல்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழில் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை திறந்து வந்துவிட்டு உறையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இன்று உங்கள் பிரதேசத்திற்கு வருகை தந்ததையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். 2017 ஆம் ஆண்டு …
-
- 7 replies
- 545 views
- 1 follower
-
-
அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு – இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை! கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சுகாதார அதிகாரிகள் நேற்று இரவு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாக இலங்கையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ஐ.சி.யூ) அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையில், கடந்த காலங்களைப் போலவே பயணக் கட்டுப்பாடுகள் …
-
- 0 replies
- 414 views
-
-
இலங்கையில் அதிகூடிய கொரோனா பாதிப்பு பதிவு – ஒரேநாளில் ஆயிரத்து 466 பேருக்கு தொற்று! இலங்கையில் நாளொன்றுக்கான அதிகூடிய கொரோனா பாதிப்பு நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. அதன்படி கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் மேலும் ஆயிரத்து 466 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 953ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 95 ஆயிரத்து 83 பேர் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடுகளுக்கு திருப்பியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 9 ஆயிரத்து 209 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் மேலும் 6 மர…
-
- 1 reply
- 266 views
-
-
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாத அரசு இனத்துவேசமாக செயற்படுகிறது - சாணக்கியன் எம்.எம்.சில்வெஸ்டர் கொவிட் 19 நிவாரண நிதியத்துக்கு கிடைத்துள்ள 1727 மில்லியன் ரூபாவில் இதுவரை 105 மில்லியன் ரூபாவை மாத்திரமே அரசாங்கம் பயன்படுத்தியுள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதுடன், அரசாங்கம் இனத்துவேசமாகவே நடந்துகொள்கிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குற்றம் சாட்டினார். கொரோனா வைரஸ் தொற்று தடுப்புக்கான இரண்டாவது தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்காக நாரரேஹன்பிட்டியவிலுள்ள இராணுவ வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்தபோது ஊடகங்களுக்கு மேற்கண்டாவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூ…
-
- 0 replies
- 297 views
-
-
யுத்த கால மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச ரீதியில் விசாரணை நடத்தப்பட வேண்டும் : மனித உரிமை கண்காணிப்பகம் திகதி: 18.06.2009 // தமிழீழம் சிறீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், நாட்டில் பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவை குறித்து சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளமை பாரதூரமான ஒரு நிலைமையாகும் என மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட யுத்தக்குற்றச் செயல்க…
-
- 0 replies
- 498 views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது ஆயுட்காலம் முழுவதும் நிறைவேற்று ஜனாதிபதியாக இருப்பார் என என்று வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இலங்கையின் ஆயுட்கால ஜனாதிபதியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வருவதை எவராலும் மாற்ற முடியாதிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சேருவிலவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் அவர் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற பின் நாங்கள் அரசியலமைப்பை மாற்றுவோம். அதன்பின் இந்த நாட்டின் ஆயுட்கால ஜனாதிபதியாக ஜனாதிபதி ராஜபக்ஷ விளங்குவார் என்பது மிகத் தெளிவானது என்றும் பேர்டி பிரேமலால் தி…
-
- 1 reply
- 796 views
-
-
01/07/2009, 22:26 ] கொழும்பில் மூன்று தமிழ் இளைஞர்கள் கைது கொழும்பு கொட்டகேன தங்ககங்களில் இருந்த மூன்று தமழ் பொதுமக்கள் சிறீலங்கா குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர்கள் மூவரும் சிறீலங்hக படையினரின் தடுப்பு முகாம்களில் இருந்து வெளியில் வந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறதாக தெரியவருகிறது. காவல்துறையினர் இவர்கள் எவ்வாறு தப்பிசென்றார்கள் எனவிசாரித்து வருவதாகவும் இவர்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் எனவும் நாட்டைவிட்டு வெளியேறுவதற்காக கொழும்பில் தங்கியிருந்ததாகவும் மேலும் தெரியவருகிறது. pathivu
-
- 1 reply
- 569 views
-
-
தமிழ்நாடு செய்தியாளர் ரூபன் 08/07/2009, 03:31 போர்க்குற்றம் புரிந்த இலங்கையர் பிரித்தானியாவில் இன அழிப்பு, மற்றும் போர்க் குற்றத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் பிரித்தானியாவில் இருப்பதாக, தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பிரித்தானியாவிற்கு வந்தால், அவர்கள் மீது எவ்வாறான நடவடிக்;கை எடுப்பது என்பது பற்றிய சட்டத்தை, அரசு நேற்று மீளாய்வு செய்துள்ளது. நடைமுறையில் உள்ள 2001ஆம் ஆண்டு சட்டத்தில் சில குறைபாடுகள் இருப்பதால், போர்க்குற்றம் புரிந்தவர்கள் இலகுவாக அதிலிருந்து தப்பிச் செல்வதாக, மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டியிருந்தன. இவ்வாறு பிரித்தானியாவில் தங்கியுள்ள பலர், வதிவிட உரிமைகூட வழங்கப்படாது, மாணவர்கள், அல்லது சுற…
-
- 1 reply
- 1.2k views
-
-
கடற்படைத் தலைமையகத்தில் தேடுதல் நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிவான் உத்தரவு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான, கடற்படை அதிகாரியைக் கைது செய்வதற்கு சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் தேடுதல் நடத்துமாறு, கோட்டே நீதிவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார். 11 பேர். கடத்தல் தொடர்பான வழக்கு கோட்டே நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கொமாண்டர்…
-
- 0 replies
- 267 views
-
-
பிரிந்து போகும் உரிமை ஓர் (தமிழ்) இனத்திற்கு உள்ளதா? – முத்தமிழ்வேந்தன் சோவியத் யூனியனைக் (ருசியா)கட்டியமைத்த ஜோசப் ஸ்டாலின் இனப்பிரச்சனைக் பற்றி தான் எழுதியுள்ள “தேசிய இனப்பிரச்சனை குறித்து” என்ற புத்தகத்தில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். பிரிந்து போகும் உரிமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமை ஓர் இனத்திற்கு உள்ளதா என்பது கீழ்க்காணும் காரணங்களால் தீர்மானிக்கப்படும் என்று வரையறுத்துக் கூறியுள்ளார். 1) ஒரு சிறுபான்மை இனம், பேரினவாதத்தால் அடக்குமுறைக்கு உள்ளாக்க்ப்பட்டிருக்கவேண்ட
-
- 1 reply
- 754 views
-
-
யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியிருப்பதையடுத்து நகரின் பொதுக்கட்டிடங்கள், வீட்டுச்சுற்று மதில்கள் அனைத்திலும் வகை தொகையின்றி சுவரொட்டிகளை ஒட்டுவதால் மக்கள் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர். இச் சுவரொட்டிகளை சிறீலங்கா காவல்துறையினர் "கழிவோயில் பூசி" அழித்து வருவதால் நகர் அவலட்சணமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நவீன சந்தைக்கட்டிடம் முப்பது வருடங்களின் பின்னர் அண்மையில் தான் பன்னிரண்டு இலட்சம் ரூபா செலவில் வர்ணம் தீட்டப்பட்டிருந்தது. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அனைத்தும் நகரின் அழகுகெட்டுவிடும் என்ற சிந்தனையில்லாமல் நூற்றுக்கணக்கான சுவரொட்டிகளை ஒட்டிவிட அதை பொலிஸாரும் அதே மனப்பாங்குடன் நகரை அலங்கோலமா…
-
- 0 replies
- 678 views
-
-
எமது மே தினக் கூட்டம் வரலாற்றில் இடம்பிடிக்கும்- மஹிந்த ராஜபக்ஷ கூட்டு எதிர்க் கட்சி காலி முகத்திடலில் நடாத்த எதிர்பார்த்துள்ள மே தினக் கூட்டத்தில், பாரிய மக்கள் சக்தியொன்றைத் திரட்டி, அரசாங்கத்துக்கு தங்களது பலத்தை எடுத்துக் காட்டவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலி முகத்திடல் கூட்டு எதிர்க் கட்சிக்குக் கிடைத்தமை ஒரு சந்தோஷமான விடயம் எனவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். காலி முகத்திடல் மே தினம் வரலாற்றில் இடம்பிடிக்கும் ஒரு கூட்டமாக இருக்கும் என்பதுடன், நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பை எடுத்துக் காட்டும் ஒன்றாகவும் அக்கூட்டம் அமையவுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்…
-
- 0 replies
- 272 views
-
-
LTTE உறுப்பினர்கள் உட்பட 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுபவர்களை விடுவிக்குமாறு நாமல் கோரிக்கை வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டதால் 10-15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பதற்கான ஒரு பொறிமுறையை செயற்படுத்துமாறு இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய அவர், முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் உட்பட பல இளைஞர்கள் தங்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்படாமலோ அல்லது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலோ நீண்ட கால சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அவர்களின் வழக்குகளை விரைவுபடுத்துவதற்கும் அல்லது வழக்குகளை விசார…
-
- 31 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பாலித கோஹன்ன, அப்பதவியில் இருந்து நீக்கப்படலாம் என ஜனாதிபதி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐ.நாவுக்கான நியூயோர்க்கின் பிரதிநிதியாக இவர் மாற்றம் செய்யப்படலாம் எனவும், தற்போது அப்பதவியில் இருக்கும்,எச்.எம்.ஜீ.எஸ் பலிஹக்காரவினை பதவிக்காலம் முடியும் முன்னர் நாட்டிற்கு மீள் அழைக்கப்படவுள்ளார் எனவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே வெளிவிவகார அமைச்சுப்பதவியில் இருந்து பாலித கோஹன்னவை நீக்குவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்லப்பட்ட போதும் அவை பயனளிக்காமல் போனது குறிப்பிடத்தக்கது. இதேவேளை அண்மையில் பதவிநீக்கம் செய்யபப்ட்ட ஜெனீவாவிற்கான பிரதிநிதி தயான் ஜயதிலக்கவின் வெற்றிடத்திற்கு பதிலாக அருனி விஜேவர்த்தன நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 828 views
-
-
உதிரத்தையே உழைப்பாக்கிய உத்தமரை வணங்குவோம் - யாழ். பல்கலை முகாமைத்துவ மாணவர்கள் மே தினச் செய்தி உதிரத்தையே உழைப்பாக்கி உலகத்தையே உய்விக்கும் உழைப்பாளர் பெருந்தகைகளை மேதின நன்னாளில் நாமும் தலைவணங்கி நிற்கின்றோம். இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகபீட மாணவர்கள் மே தினச் செய்தியை விடுத்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, உலகுக்கான உணவு, உடை, உறையுள் உள்ளடங்கிய அனைத்தையும் நீங்களே வழங்கு கின்றீர்கள். ஆனால் உங்களது தேவைகள் மட்டும் நெடுங்காலமாகப் பூர்த்தி செய்யப்படாமலே உள்ளன. அரசியல்வாதிகள் தொடக்கம் முதலாளி வர்க்கம் வரையும் உங்க…
-
- 0 replies
- 356 views
-
-
உலகத் தமிழர் பிரகடனத்தை அறிவிக்கும் பேரணி 20ம் திகதி சென்னையில் நடைபெறுகிறது திகதி: 09.08.2009 // தமிழீழம் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைகளை பாதுகாக்க உலகத் தமிழர் பிரகடனத்தை அறிவிக்கும் பேரணி, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் வருகிற 20ம் திகதி நடைபெறவுள்ளதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மதுரையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். அவர் இது தொடர்பாக கூறுகையில், எனது தலைமையில் நடைபெறும் இந்த பேரணியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள். இலங்கை அரசின், வடக்கின் வசந்தம் திட்டத்தை…
-
- 0 replies
- 561 views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் வரும் ஒக்ரோபர் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அண்மையில் புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், ஜி.எல்.பீரிஸ், கொழும்பு வருமாறு, இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதன்போது, வரும் ஒக்ரோபர் மாதம் நிச்சயம் கொழும்பு வருவதாக சல்மான் குர்ஷித் உறுதியளித்துள்ளார். வரும் செப்ரெம்பர் 21ம் நாள் நடக்கவுள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகிறது. இந்தத் தேர்தல் முடிந்த பின்னர், சிறிலங்கா சென்று அது தொடர்பாக ஆராய்வதற்கு சல்மான் குர்ஷித் திட்டமிட்டுள்ளார். வரும் நொவம்பர் மாதம், கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதா இல்லையா என்பத…
-
- 1 reply
- 388 views
-