ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142925 topics in this forum
-
மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜெயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு by : Jeyachandran Vithushan மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜெயசேகர இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினராக பதிவிப்பிரமாணம் செய்துகொண்டார். நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க இன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று பிரேமலால் ஜெயசேகராவுக்கு நாடாராளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதி வழங்கியது. நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வ…
-
- 4 replies
- 627 views
-
-
இண்டர்போல் உதவியுடன் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கை.! சர்வதேச மட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முடக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். "சர்வதேச பொலிஸாருடன் (இண்டர்போல்) இணைந்து புலிகளின் சர்வதேச நிதிச் செயற்பாடுகளை முடக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்" எனவும் அவர் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "புலிகளின் தேவைக்காகவே மாகாண சபை முறைமை இலங்கையில் கொண்டு வரப்பட்டது. இன்றும் புலிகளின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. நாம் புலியின் வாலையே அழித்துள்ளோம். தலை இன்னமும் சர்வதேச மட்டத்தில் உயிர்ப்புடன் இயங்குகின்றது. எனவே, …
-
- 34 replies
- 3.1k views
-
-
(எம்.மனோசித்ரா) அரசியலமைப்பின் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராகவும் 19 ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று 19 பிளஸ் என்ற செயற்திட்டத்தை வலியுறுத்தும் வகையில் ஆர்ப்பாட்டமொன்று இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இன்று மாலை 4 மணியளவில் பாராளுமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள மாதுலுவாவே சோபித தேரருடைய உருவச்சிலைக்கு முன்னால் உறுதிமொழியெடுத்ததோடு இந்த ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்தனர். இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான பீல்ட் மார்ஷர் சரத் பொன்சேக்க , ராஜித சேனாரத்ன , ரஞ்சித் மத்தும பண்டார , வடிவேல் சுரேஷ் , அரவிந்தகுமார் , கபிர் ஹசிம் , முஜிபுர் ரஹ்மான் , ஹெக்டர் அப்புஹாமி, கயந்த …
-
- 0 replies
- 358 views
-
-
இலங்கையில் தனது இராணுவதளத்தை உருவாக்க சீனா முயற்சி- பென்டகன் September 4, 2020 இலங்கை உட்பட பல நாடுகளில் சீனா இராணுவதளங்களை உருவாக்க முயல்கின்றது என பென்டகன் குற்றம்சாட்டியுள்ளது. சீனா வலுவான வெளிநாட்டு விநியோக தள உட்கட்டமைப்புகளை உருவாக்க முயல்கின்றது என தெரிவித்துள்ள பென்டகன் தொலைதூரங்களில் சீனா இராணுவத்தின் வல்லமையை வெளிப்படுத்துவதும் அதனை தக்கவைப்பதுமே இந்த நடவடிக்கையின் நோக்கம் என தெரிவித்துள்ளது. மியன்மார் தாய்லாந்து சிங்கப்பூர் இலங்கை பாக்கிஸ்தான் உட்பட பல நாடுகளில் சீனா தனது இராணுவஉட்கட்டமைப்புகளை உருவாக்க முயலக்கூடும் என பென்டகன் தெரிவித்துள்ளது. சீனா தனது முப்படைக்களுக்காக மேலதிக இராணுவவிநியோக உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஏற்கனவே ஆராய்ந்த…
-
- 37 replies
- 3.6k views
- 1 follower
-
-
-என்.ராஜ் அச்சுவேலி, பலாலி, நவக்கிரி ஆகிய பகுதிகளில் தக்காளி செய்கையில் ஈடுபடுவோர் பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக, செய்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். நீண்ட வரட்சி நிலையின் பின்னர் அண்மையில் திடீரென ஏற்பட்ட மழை வீழ்ச்சியின் காரணமாக தமது தக்காளி பழங்கள் அழுகி பழுதடைந்துள்ளதோடு சந்தைப்படுத்துவதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குவதாகவும் அப்பகுதி தக்காளி செய்கையாளர்கள் தமது கவலையை வெளியிட்டுள்ளார். குறிப்பாக தக்காளி செடியை ஒரு வகையான பங்கஸ் நோய் தாக்குவதனால் அதனாலும் தமது செய்கையில் பாதிப்பினை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனர். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/Tomato-growers-affected-by-rains/71-255214
-
- 0 replies
- 379 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நுண் கடன் திட்டங்களை உடணடியாக நிறுத்துமாறு அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தனியார் நிறுவனங்களுக்கு கன்டிப்பான உத்தரவு வழங்கியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் திட்டமிலாய்வு கூட்டம் இன்று (08) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.https://newuthayan.com/நுண்நிதி-கடன்-வழங்குவதை/
-
- 0 replies
- 302 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) கடத்தி தடுத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்பட்ட, பொய்யான தகவல்களை வழங்கி தேசத்தை அசெளகரியப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட சுவிஸர்லாந்து தூதரகத்தின் வீசா பிரிவின் சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் விவகார விசாரணைகள் குறித்த விரிவான அறிக்கை ஒன்றினை எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி மன்றுக்கு அளிக்குமாறு சி.ஐ.டி. க்கு இன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்த வழக்கு விசாரணைகள் இன்று கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த போதே நீதிவான் இந்த உத்தரவை பி…
-
- 0 replies
- 396 views
-
-
முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் பயங்கரவாதிகள் அல்ல அப்பாவி பொதுமக்கள் – சி.வி. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தோடு, விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ள அவர், தங்கள் சமூகத்திற்கு அநீதி இழைத்ததால்தான் அவர்கள் ஆயுதம் ஏந்தி போராட தூண்டப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த நேர்காணலில், விடுதலைப் புலிகள…
-
- 17 replies
- 2.1k views
-
-
ஜனாதிபதி உள்ளிட்டோருக்கு மரண அச்சுறுத்தல்! சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால், சிறைச்சாலை அத்தியட்சகர், ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று (08) நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பாதாளக் குழுத் தலைவர்களான திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பொடி லெஷி மற்றும் கொஸ்கொட தாரக ஆகியோரினால் விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் தொடர்பிலேயே இன்று வெளியிடப்பட்டது. இதனையடுத்து தற்போது பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொடி லெஷி மற்றும் கொஸ்கொட தாரக ஆகியோரை எதிர்வரும் 25ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்யுமாறு காலி பிரதான நீதிவான் ஹர்ஷண கெக்குணவெல இன்று உத்தரவு பிறப்பித்த…
-
- 0 replies
- 457 views
-
-
20 தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுரேஸ்! இருபதாவது அரசியல் யாப்புத் திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரவுள்ள நிலையில், இது குறித்து நாட்டின் மீதும் பாராளுமன்ற ஜனநாயக விழுமியங்களின் மீதும் அக்கறை உள்ள அனைவரும் கட்சி, இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்று திரண்டு இதனை எதிர்க்க வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் நாடு படுபாதாளத்திற்குத் தள்ளப்பட்டுவிடும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் நாட்டு மக்களை எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு: இலங்கையில் ஏற்படவிருக்கி…
-
- 0 replies
- 391 views
-
-
மனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமரர் சந்திரசிறி கஜதீரவின் ஆண்டு நினைவு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “யுத்தம் நிறைவடையும் காலத்தின்போது சந்திரசிறி கஜதீர, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக சேவையாற்றினார். இந்நாட்டின் சுமார் 13 ஆயிரம் தமிழீழ விடுலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் புனர்வாழ்வு பெறுவதற்காக அவரிடம் சரணடைந்தனர். இது மிகவும் பொறுப்பான முறையில் மேற்கொள்ள வேண்டிய கடமையாக இருந்தது. அவரது ஆட்சிக் காலத்தில், 13 ஆயி…
-
- 0 replies
- 326 views
-
-
தமிழ்க் கட்சிகள் ஓரணியில் திரள்வது இனவாதத்தை எதிர்கொள்ள அவசியமானது; ரெலோ யாழ். மாவட்ட பொறுப்பாளர் நிரோஷ் அரசியல் பரப்பில் உள்ள தமிழ்த் தேசிய சக்திகளை ஒன்றிணைத்து செயற்றிட்டம் ஒன்றை வகுத்துச் செயற்படுத்த வேண்டிய தேவை காலத்தின் தேவையாக உணரப்பட்டுள்ளது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்டப் பொறுப்பாளர் தியாகராஜா நிரோஷ் தொரிவித்தார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் பாராளுமன்றிற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணம் நவலர் மண்டபத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுரேன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வரவேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேல…
-
- 0 replies
- 344 views
-
-
கோப்பாயில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் பலி கோப்பாய் பூதர்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதி இடம்பெற்ற விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் அல்வாயைச் சேர்ந்த மகாலிங்கம் வின்சன் கோமகன் (வயது-63) என்ற வடமராட்சி வலயக் கல்வி அலுவலக முன்னாள் சேவைக்கால ஆசிரியர் ஆலோசகரே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது என்று கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மகாலிங்கம் வின்சன் கோமகன் உயிர…
-
- 0 replies
- 437 views
-
-
அனைத்துப் பாடசாலைகளும் இன்று முதல் வழமைபோல்; முகக் கவசம் அணிவது கட்டாயம் இன்று தொடக்கம் அனைத்துப் பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் வழமை போல் ஆரம்பமாகின்றன. இந்நிலையில், அனைத்து மாணவர்களும் முகக் கவசம் அணிவதும், அவர்களுக்கு வழிகாட்டப்பட்ட சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதை கட்டாயமாக்க வேண்டும் என் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கொரோனா தொற்றுநோய் இன்னும் பல நாடுகளில் பரவலாக இருப்பதால், இந்த நோய் நம்நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது என்று கருத முடியாது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதி ஹரிதா அலுத்ஜ் கூறுகிறார். பாடசாலைகளின் கல்வியின் இயல்பான தொடக்கமாக சமூக இடைவெளி ஒரு மீற்றருக்கு இடையில் உள்ள தூரம் குறைக்கப்பட …
-
- 0 replies
- 650 views
-
-
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்றுக்கு செல்ல முடியுமா? – தீர்ப்பு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியுமா என்பது தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கவுள்ளது. நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரேமலால் ஜயசேகர, சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என சட்டமா அதிபர் அறிவித்திருந்தார். இதனையடுத்து, குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணி ரிட் மனுவொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக…
-
- 4 replies
- 643 views
-
-
மீண்டும் எமது மக்கள் அடக்கப்படும் நிலை – கருணாகரம் மாகாண சபை தேர்தலில் ஆளும் தரப்பிற்கு ஆதரவு தெரிவித்தால் எமக்கு கிடைத்த அடிப்படை புள்ளியான மாகாண சபை முறைமை உரிமை கூட எதிர்காலத்தில் இல்லாமல் போகும் நிலமையும் எமது மக்கள் மீண்டும் அடக்கு முறைக்கு செல்லும் நிலைமையும் ஏற்படும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். வாழைச்சேனை கிண்ணையடி மில்லர் விளையாட்டு கழகத்தில் உயிர் நீத்த விளையாட்டு வீரர்களின் நினைவாக மென்பந்து சுற்றுப்போட்டி நிகழ்வு கழகத் தலைவர் வ.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கைய…
-
- 0 replies
- 378 views
-
-
ஒத்துழைப்பினை வழங்க முடியாதவர்கள் மாவட்டத்தினை விட்டு செல்லுங்கள் -அரசாங்க அதிபர் அதிரடி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு ஒத்துழைப்பினை,ஒருங்கிணைப்பினை வழங்கமுடியாத உத்தியோகத்தர்கள் இந்த மாவட்டத்தினை விட்டு வெளியேறி வேறு மாவட்டத்திற்கு சென்று கடமையாற்றுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார். ஜனாதிபதி கோத்தபாய விவசாயிகளின் நன்மை கருதி பல்வேறு செயற்;றிட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று (7) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவ…
-
- 0 replies
- 496 views
-
-
நேற்றைய சங்குபிட்டி கோர வீதி விபத்தில் உயிரிழந்தவர் 4 பிள்ளைகளின் தாயான, முன்னாள் பெண் போராளி மீரா (வயது 47) என அடையாளங்காணப்பட்டுள்ளார். யாழ்.சாவகச்சேரி - தனங்களப்பு - அறுகுவெளி - ஐயனார்கோவிலடியில் நேற்று இடம்பெற்ற டிப்பர்- மோட்டார் சைக்கிள் விபத்தில் முன்னாள் போராளியான குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார். ஒரு காலை போரில் இழந்த நிலையில் வாழ்க்கையில் போராடி வாழ்ந்த பெண், மோட்டார் சைக்கிளில் பயணித்த உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய முன்னாள் போராளியான துசாந்தி என்ற பெண்ணே உயிரிழந்தவராவார். முன்னாள் போராளியான குறித்த குடும்பப் பெண் ஒரு காலை இழந்தநிலையில் செயற்கைக் கால் பொருத்தியுள்ளார். பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். https://w…
-
- 2 replies
- 664 views
-
-
தங்கம் விலை குறையும் வாய்ப்பு: ஜனாதிபதியின் அதிரடி சலுகை அறிவிப்பு! தங்கம் மீதான 15 வீத இறக்குமதி வரியையும், இரத்தினம் மற்றும் நகை உற்பத்தியாளர்களின் வருமான வரி 14 வீதத்தையும் நீக்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு இன்று (திங்கட்கிழமை) பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 1971ஆம் ஆண்டு முதல் மாணிக்கம் மற்றும் நகைத் தொழிலுக்கு வழங்கப்பட்ட வருமான வரிச் சலுகை 2017இல் அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரிக் கொள்கையினால் நீக்கப்பட்டது. இதையடுத்து 2018இல் தங்க இறக்குமதிக்கு 15 வீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரிகள் நகைகளின் விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட வரிகளை உடனடியாக நீ…
-
- 0 replies
- 379 views
-
-
வீராப்புடைய தலைவர்தான் பிரபாகரன் – எரிக் சொல்ஹெய்ம் பாராட்டு! விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறந்த தலைவராக, வீராப்புள்ள இராணுவத் தளபதியாக விளங்கினார். கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நேர்மை அவரிடம் இருந்தது. எங்கெல்லாம் போர்நிறுத்தம் செய்தாரோ அங்கெல்லாம் அவர் தாக்குதல்கள் மேற்கொள்ளவில்லை – என்று தெரிவித்தார் நோர்வேயின் சமாதானத் தூதுவரான எரிக் சொல்ஹெய்ம். கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: ” உண்மையில் தலைவர் பிரபாகரன் அடிக்கடி சந்தித்த தமிழரல்லாத ஒருவன் நானாகத்தான் இருக்க வேண்டும். தலைவர் பிரபாகரன் போரின் இறுதிக்கட்டம் வரை வீராப்புள்ள ஒரு தலைவராக செயற்பட்டார…
-
- 10 replies
- 1.1k views
-
-
பஸிலின் வலைக்குள் சிக்க போகும் தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள்.! மாகாணசபை தேர்தலில் கிழக்கு மாகாணத்தை கைப்பற்றுவதாக சபதமெடுத்து அதற்கான வியூகங்களை பஸில் ராஜபக்ஷ வகுப்பதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த செய்திக் குறிப்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்கி குறுகிய கால பகுதிக்குள் மூன்று தேர்தல்களிலும் ஹட்ரிக் சாதனை புரிந்த பஸிலிடமே குறித்த மாகாணசபை தேர்தலை நடத்தும் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு தவிர்ந்த 07 மாகாண சபைகளையும் இலகுவில் வென்று விடலாமென கணக்கு போட்டுள்ள பஸில் எப்படியாவது கிழக்கிலும் இம்முறை மொட்டு மலர வேண்டுமென உறுதியாக உள்ளார். இதற்காக மக்கள் மத்தியில் ஆதரவு பெற்ற தமிழ், முஸ்லிம் அரசியல்வா…
-
- 1 reply
- 578 views
-
-
அம்பாறை – கல்முனை பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 305 பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (01) கையளிக்கப்பட்டன. கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்களை கையளித்தார்.https://newuthayan.com/கல்முனையில்-305-பேருக்கு-நி/
-
- 22 replies
- 1.8k views
-
-
கிழக்கு தொல்லியல் செயலணிக்கு பொருத்தமானவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை கிழக்கு தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணிக்கு பொருத்தமான தமிழ், முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்வது சவாலான விடயமாக இருக்கின்றது என்று தனது ஆதங்கத்தினை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த கால அரசியல் தலைமைகளின் செயற்பாடுகளும் இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். தமிழ், முஸ்லீம் மக்களின் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் குறித்த ஜனாதிபதி செயலணிக்கு பிரதிநிதிகள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர், பொருத்தமான இருவரை சிபாரிசு செய்யுமாறு …
-
- 6 replies
- 681 views
-
-
யாழில் இன்று தனது ஆதரவாளர்களிற்கு எம்.ஏ.சுமந்திரன் தடல்புடலான விருந்தளிக்கிறார். கடந்த பொதுத்தேர்தலில் தனக்கு பிரச்சார பணியில் ஈடுபட்டவர்கள் மற்றும் தனது ஆதரவாளர்களிற்கு இந்த விருந்தளிக்கப்படுகிறது. சிறுப்பிட்டி, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த ஆதரவாளர்கள் சுமார் 1,000 பேரை ஒன்றுதிரட்டும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு நிகழ்வு ஆரம்பிக்கும். இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது, எம்.ஏ.சுமந்திரனுக்கு வரவேற்பளிக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில…
-
- 28 replies
- 3.4k views
- 1 follower
-
-
கிழக்கு தொல்பொருள் செயலணியில் இணைய தயார் - மருத்துவர் முரளி பகிரங்க அறிவிப்பு.! கிழக்கு தொல்பொருள் செயலணிக்கு தமிழ் புத்திஜீவிகள் இணையத் தயாரில்லை என கூறப்பட்ட நிலையில் தாம் இணைந்து செயற்பட தயராக இருப்பதாக மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார். தொல்பொருளியல் துறையை நான் சாராதவனாக இருந்த போதிலும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவில் தொல்பொருளியல் துறை சாராத மகப்பேற்றியல் நிபுணர் கபில குணவர்தன உட்பட பலர் உறுப்பினர்களாக இருக்கும் நிலையில் சமுதாய மருத்துவ நிபுணராக கடமையாற்றிவரும் எனக்கு ஒரு துறை சார் நிபுணராக செயலணியில் கடமையாற்ற முழுமையான தகுதி இருக்கிறது. இதை விட நான் கட்சி அரசியலுக்கு அப்பால் பட்டவன் என்பதையும் 2015 யாழ் மருத்துவச் சங்கத்…
-
- 14 replies
- 1.3k views
-