Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம் – சி.வீ.விக்னேஸ்வரன் சலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் இப்பொழுது நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம். எங்கோ இருந்தவர்கள் வந்து இரவிரவாக மக்களுக்கு சலுகைகளைக் கொடுத்து இன்று மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் என நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் ” எமது உரிமைக்காக போராடிய இளைஞர்கள் மடிந்த காலம் போய் வெறும் களியாட்ட நிகழ்வுகளிலே எமது இளைஞர்களுடைய மனம் லயிக்கக் கூடியதான சூழலை ஏற்படுத்துகின்றார்கள். த…

  2. தேர்தல் பின்னடைவுகளை மறைப்பதற்காக“ஒற்றுமை”யின் பெயரால் கூட்டமைப்பு நாடகம்: கஜேந்திரகுமார் (ஆர்.ராம்) நடைபெற்று நிறைவடைந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்கு வங்கியிலும், பிரதிநிதித்துவத்திலும் பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. அதேநேரம், எமது கொள்கைகளையும், நேர்மையான அரசியல் செயற்பாடுகளையும் மக்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றர்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.தேர்தல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார். கடந்த பத்து வருடங்களாக நாம் எமது மக்கள் மத்தியில் உண்மையாக மேற்கொண்ட தெளிவுபடுத்தல்களுக்கும், கொள்கை ரீதியிலான அடிபணியாத அரசியலுக்கும் …

  3. மாகாணசபை தேர்தலில் தமிழ்க்கட்சிகள் ஓர் தலைமையில் போட்டியிட வேண்டும் – இரா.துரைரெத்தினம் எதிர்வருகின்ற மாகாணசபை தேர்தலில் தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஓர் தலைமையில் போட்டியிடுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் பத்மநாபா மன்றம் ஈ.பி.ஆர்.எல்.எப், முன்னாள் கிழக்கு மாகாணசபை சிரேஸ்ட உறுப்பினரான இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார் தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “மாவட்டத்திலுள்ள நான்கு இலட்சம் வாக்குகளில் அண்ணளவாக ஒரு இலட்சம் வாக்குகள் முஸ்லிம் வாக்குகளாகவும். மூன்று இலட்சம் தமிழ் வாக்குகளில் இரண்டேகால் இலட்சம் தமிழ் வாக்குகளை அளித்து ச…

  4. மனோவின் நம்பிக்கை J.A. George ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பில் அந்தக் கட்சிக்குள் தற்போது சர்ச்சைக்குரிய நிலையொன்று தோன்றியுள்ளது. அது தொடர்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிப்பெறாத நிலையில் கூட்டணி கட்சிகளில் தலைவர்களில் ஒருவரான மனோ கணேசன் கருத்து வெளியிட்டிருந்தார். வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு தேசியப் பட்டியல் ஆசனமொன்று வழங்கப்படாவிட்டால், ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி கட்சிகள் மூன்றின் 15 உறுப்பினர்களுடன் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படபோவதாக தெரிவித்த…

  5. தேசிய பட்டியல் தொடர்பில் முடிவு எடுக்க ஒன்றுகூடும் கட்சிகள் இம்முறை தேர்தல் தேசிய பட்டியல் ஆசனங்களை பெற்றுக்கொண்ட சில கட்சிகள் அது தொடர்பில் முடிவு எடுப்பதற்காக இன்று ஒன்றுகூடவுள்ளனர். பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 17 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 7 ஆசனங்களும், தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, அபே ஜனபல கட்சி, இலங்கை தமிழரசு கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்பவற்றிற்கு தலா ஒரு ஆசனமும் வழங்கப்பட்டிருந்தது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, அபே ஜனபல கட்சி மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ஆகிய தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளனர். அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தொடர்பில் இன்று இறுதி தீர்ம…

    • 0 replies
    • 509 views
  6. ஆவா குழுவின் அச்சுறுத்தல்; ரத்துச் செய்யப்பட்ட முன்னணியின் மக்கள் சந்திப்பு August 10, 2020 இணுவிலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு ஒன்று ஆவா குழுவின் அச்சுறுத்தலால் நடைபெறவில்லை என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. இணுவிலில் நடைபெறவிருந்த சந்திப்பே ரத்துச் செய்யப்பட்டது. புலனாய்வாளர்களின் பின்புலத்தை கொண்ட ஆவா குழு வாள்களைக் காட்டி மிரட்டி, கதிரைகளை அடித்து உடைத்ததால் குறித்த மக்கள் சந்திப்பு நடைபெறவில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி ருவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் முடிவடைந்த பின்னர் தொர்ச்சியாக இவ்வாறான மக்கள் சந்திப்புக்களை முன்னணி நடத்திவருகின்றது. http://thinakkural…

  7. கடற்படையினரை திருப்பி அனுப்புவதற்காக... சிறப்பு விமானங்கள் இயக்கம். இலங்கையின் மத்தள விமான நிலையத்திற்கு கடற்படையினரை திருப்பி அனுப்பும் செயற்பாட்டுக்காக எயார் ஏசியா பிலிப்பைன்ஸ் சிறப்பு விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளது. அதற்கமைய முதல் எயார் ஏசியா பிலிப்பைன்ஸ் விமானம் 13 வெளிநாட்டு கடற்படையினருடன் நேற்று மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. அதேநேரம் எயார் ஏசியா பிலிப்பைன்ஸ் விமானம் இன்று (திங்கட்கிழமை) 14 பிலிப்பனைன்ஸ் கடற்படையினருடன் இங்கிருந்து பிற்பகல் 2.15 மணியளவில் பிலிப்பைன்ஸ் நோக்கிப் பயணிக்கவுள்ளது. உலகளாவிய ரீதியில் கடற்படையினரை இடமாற்றுவதற்கு ஏதுவாக இலங்கை அமைந்துள்ளமையினால் இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின…

  8. ரவிராஜின் சிலை வளாகத்தில் இருந்த பூச்சாடிகள் உடைப்பு: கறுப்பு,சிவப்பு துணிகளும் அகற்றல்! யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் சிலை வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூச்சாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருப்பு வாக்கு குழப்பம் காரணமாக சசிகலா ரவிராஜின் ஆதரவாளர்களால் ரவிராஜின் சிலைக்கு கறுப்பு,சிவப்பு துணிகள் மூடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த துணிகளும் அகற்றப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார்…

  9. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்கள் பலப்படுத்தப்படுவது அவசியம் என இந்து சமய மதகுருமார் தெரிவித்துள்ளனர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்து கலந்துரையாடிய இந்து சமய மதகுருமார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்கள், யுத்த காலத்தில் அழிந்த ஆலயங்களை புனரமைத்து இந்துக்களின் அடையாளத்தினை பேணிப் பாதுகாத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது. அமைச்சரை போன்று வேறு எந்த தரப்பினரும் இதுவரை செய்ததும் இல்லை எதிர்காலத்தில் செய்யப் போவதும் இல்லை. இந்நிலையில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந…

  10. By Rathindra Kuruwita (The Island) https://island.lk/bloody-rumpus-at-jaffna-central-college-blamed-by-cmev-on-lack-of-understanding-of-counting-process/ அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எண்ணும் செயல்முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி கற்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் (சி.எம்.இ.வி,) மஞ்சுலா கஜநாயக்க வியாழக்கிழமை இரவு யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் ஐ.டி.ஏ.கே வேட்பாளர்கள் மாவை சேனதிராஜா மற்றும் சசிகலா ரவீராஜ் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட அமைதியின்மை குறித்து கருத்து தெரிவித்தார். "மதியம் முதல் எங்கள் கண்காணிப்பாளர்கள் எண்ணும் மையத்தில…

    • 5 replies
    • 1.1k views
  11. மனோ கணேசன் அவர்கள் கடந்த தேர்தல் பற்றி என்ன கூறுகிறார்??

    • 0 replies
    • 658 views
  12. விருப்பு வாக்குகளில் மோசடி? சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி On Aug 6, 2020 நடந்து முடிந்த தேர்தலில் செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கவனத்திற்னு இன்றிரவு கொண்டு சென்றுள்ளார். கூட்டடமைப்பின் விருப்பு வாக்கின் படி முதலாம் இடத்தில் சி.சிறீதரனும்,இரண்டாம் இடத்தில் சசிகலா ரவிராஜீம் மூன்றாவது இடத்தில் த.சித்தார்த்தனும் உள்ளனர். இந்நிலையில் சசிகலா ரவிராஜ் வாக்கிi மாற்றி சுமந்திரனை செருக முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றமை அம்பலமாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்விடயத்தை தேர்தல…

    • 119 replies
    • 11.2k views
  13. கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பாக சுமந்திரன் கருத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பாக தீர்க்கமான முடிவுகள் ஏதும் இன்னும் எட்டப்படவில்லை என அக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இரா.சம்பந்தனது இல்லத்தில் நடைபெற்ற முக்கியக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “குறித்த கலந்துரையாடலில் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் மற்றும் சம்பந்தன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். மேலும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தொலைபேசியில் எம்முடன் தொடர்பில் இருந்தார். இதன்போது தமிழ்த்…

  14. விருப்பு வாக்கில் அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சசிகலா ரவிராஜ்க்கு, தேவையேற்படின் சட்ட உதவிகளை பணமின்றி செய்துதர தமது தரப்பினர் தயாராக உள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். மேலும், “சசிகலா ரவிராஜ் விரும்பினால் அவருக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் செய்வதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். தேர்தல் ஆட்சேபனை மனுவாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அவரது குடும்பத்தினரின் ஒருசதம் பணம் செலவின்றி பொதுமக்களே அந்த விடயங்களை பொறுப்பேற்று பல சட்டத்தரணிகள் இலவசமாக வாதாடக்கூடிய நிலைமையை எம்மால் உருவாக்க முடியும். இலங்கையில் வன்முறைக்கு எதிரான கண்காணிப்ப…

    • 3 replies
    • 877 views
  15. எதிர்காலத்திலாவது நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் நடக்க வேண்டுமாக இருந்தால், நடந்து முடிந்த தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு நீதி வேண்டும் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- நடந்து முடிந்த தேர்தலில் மிக இலட்சக்கணக்கான வாக்காளர்களை கொண்ட பல மாவட்டங்களின் இறுதி முடிவுகள் கூட மிக விரைவாக வெளியிடப்பட்டிருந்தது. இருப்பினும் 5 இலட்சத்தில் 71 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திலே 4 இலட்சத்திற்கு குறைவான வாக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையிலே, பிற்பகல் பொழுதிற்குள் அனைத்து…

  16. தமிழ் மக்களின் விருப்பங்களை அறிந்து அதற்கேற்றாற்போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவுகளை எடுக்க வேண்டிய தேவையுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். மேலும், “மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் எனக்கும் வாக்களித்த மக்களுக்கும் எனது வெற்றிக்கு தோள்கொடுத்த அனைவருக்கும் இந்தவேளையில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். எனது வெற்றிவாய்ப்பினை பறிப்பதற்காக பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டன. நான் நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடாது என்பதில் கட்சிக்குள் வெளியே இருந்த எதிர்ப்பினை விட கட்சிக்குள் அதிகளவிலான எதிர்ப்பு இருந்தது…

    • 11 replies
    • 1.2k views
  17. யாழ்.மாவட்டத்தை பிரதித்துவம்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க முன்வர வேண்டும் – அங்கஐன் வேண்டுகோள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை சிறுபான்மை மக்களிடம் பிரதித்துவம்படுத்தியதே இல்லை. எனினும் நாங்கள் செய்கின்ற வேலைத்திட்டம் மற்றும் செய்யபோகின்ற வேலைத் திட்டத்திற்காகத்தான் மக்கள் வாக்களித்துள்ளனர்.ஆகவே சிறுபான்மை தமிழ் மக்களின் உரிமைகளை முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டும். இதனால் யாழ்.மாவட்டத்தை பிரதித்துவம்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஐன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வரலாற்றில் இம்முறை முதற் தடவையாக ஒரு ஆசனம் கிடைத்…

  18. தேசிய பட்டியல் நியமனம்: சஜித்தை எச்சரிக்கும் மனோகணேசன் தேசிய பட்டியல் நியமனத்தில் விளையாட வேண்டாமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்திக்குக் கிடைத்திருக்கும் 7தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிகளுக்கும் சிங்களவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு த.மு.கூ, ஸ்ரீ.ல.மு.கா, அ.இ.ம.கா ஆகிய கட்சிகள் அவசர கூட்டமொன்றை நடத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தன. அதற்கமைய நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற குறித்த கூட்டத்தில் “ஐக்கிய மக்கள் சக்தியில் உறுதியளித்தபடி தேசிய பட்டியல் நியமனம் தரப்படாவிட்டால் த.மு.கூ, ஸ்…

    • 1 reply
    • 722 views
  19. இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார் இலங்கையின் 28ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தற்போது பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் தற்போது பதவியேற்றார். சர்வதேச நாடுகளின் ராஜதந்திரிகள் மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். நிறைவடைந்த பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 5,27,364 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார். இலங்கை வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்றுக் கொண்ட அதிக விருப்பு வாக்குகளாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நான்காவது தடவையாக இலங்கையின் பிரதமராக மஹிந்த இன்று பதவியேற்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியளவில…

  20. பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு சுப்பிரமணியன் சுவாமிக்கு மகிந்த அழைப்பு August 8, 2020 பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு சுப்பிரமணியன்சுவாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பிரதமரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளமை குறித்து நான் மகிழ்ச்சியடைந்துள்ளேன் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். அவர் தனது பதவியேற்பு நிகழ்வில் நாளை கலந்துகொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுத்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் கொரோனா வைரஸ் போக்குவரத்து நடைமுறைகள் காரணமாக என்னால் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது எனினும்…

  21. கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை பூச்சியத்திலிருந்தே மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என சிறிகொத்தவில் நேற்று(07) தனது கட்சி உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் ரணில். அவர் மேலும் தெரிவித்ததாவது: “இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இந்த நேரத்தில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை பூஜ்ஜியத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். இதற்காக நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்” என்றார். வரலாற்று அரசியல் பாரம்பரியம் மிக்க ஐக்கிய தேசியக் கட்சி இத்தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/பூஜ்ஜியத்திலிருந்தே-மீண/

    • 5 replies
    • 927 views
  22. தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார்- ஸ்ரீதரன் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பினை அனைவருமாக இணைந்து வழங்கினால் ஏற்கத்தயார் என சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள தமழரசு கட்சி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பு ஏற்பது தொடர்பில் எனக்கு தனிப்பட்ட ஆசை ஏதும் கிடையாது. இன்னுமொரு தலைமையைத் தூக்கி எறிந்துவிட்டு அந்த இடத்தில் நான் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை. தமிழரசுக் கட்சியில் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அது உடனடியாக ஏற்படுத்த வேண…

    • 9 replies
    • 1.1k views
  23. தமிழரசுக் கட்சியின் தலைவர் தொடர்பில் பொதுவெளியில் தீர்மானிப்பதில்லை -மாவை பதிலடி நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல வகையான நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆறுதலான ஒரு ஜனநாயக வெற்றியைப் பெற்றிருக்கிறது. அதேவேளை தேர்தல் நடைமுறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கும் கூட்டமைப்பு பொறுப்பேற்கின்றது. இவை பற்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமை விரைவில் கூடி ஆராயவுள்ளது. தமிழரசுக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் ஏனைய பதவிப் பொறுப்புக்கள் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே கட்சி யாப்பின்படி தீர்மானங்களை எடுக்க வல்லதாகும். பொதுவெளியில், பத்திரிகையாளர் மாநாட்டில் மேற்குறித்த பதவிப் பொறுப்புக்கள் த…

    • 4 replies
    • 711 views
  24. அரசாங்க கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் துறைகள் மீதான அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வெற்றியினைத் தொடர்ந்து குறித்த அமைப்பு இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது. இது குறித்து சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசிய இயக்குநர் மீனாக்ஷி கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய அரசாங்கம் இன, மத சிறுபான்மையினரை ஒடுக்கும் வகையிலான புதிய கொள்கைகளை அமுல்படுத்துவதுடன் அதற்கான நீதி கோரும் அமைப்புகளின் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிக்கும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2019ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த 2005 மு…

  25. (இராஜதுரை ஹஷான்) ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு இம்முறை 64 புதிய பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அதில் 53 பேர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். கம்பஹா மாவட்டத்தில் 6 பேர் பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார்கள். கலாநிதி நாலக கொடஹேவா, சஹன் பிரதீப், கோகிலா ஹர்ஷனி குணவர்தன, நளின் ருவன்ஜீவ பிரனாந்து, மிலான் சஜித் ஜயதிலக, உபுல் மகேந்திர ஆகியோர் கம்பஹா மாவட்ட புதிய பிரதிநிதிகளாவர். கொழும்பு மாவட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக மேஜர் பிரதீப் உதுகொட, மதுர விக்ரமநாயக்க, பிரேமநாத் சிறி தொலவத்த , ஜகத் குமார ஆகியோர் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு வெற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.