ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
ஜனநாயக தேசிய கட்சி வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும் முப்படைகளின் முன்னாள் பிரதானியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=20162
-
- 1 reply
- 330 views
-
-
லண்டனில் பொது இடங்களில் வைத்து பெண் பொலிஸ் ஒருவர் உட்பட பல பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்ததாகக் கூறப்படும் இலங்கை வைத்தியரொருவர் தொடர்பான வழக்கு மருத்துவ நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்துள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது, திலங்க கசுன் இதமல்கொட என்ற 32 வயதான குறித்த வைத்தியர் லண்டனில் உள்ள டிரபல்கார் சதுக்கத்தில் வைத்து சந்தேகத்தின் அடிப்படையில் பெண் பொலிஸ் ஒருவரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது இவரது ஐபோனில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்துள்ளமை தெரியவந்துள்ளது. மேலும் குறித்த பெண் பொலிஸையும் குறித்த வைத்தியர் படமெடுத்துள்ளமையும் பல்வேறு இடங்களில் வைத்து இதே போன்று பெண்களை இலாவகமாக சந்தேகம் வராத வண்ணம் படமெடுத்துள்ளமையும்…
-
- 18 replies
- 1.9k views
-
-
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தாக்குதலுக்கு உள்ளான சீயோன் தேவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள்! இலங்கையினை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவுபெறுகின்றன.இந்த நிலையில், இந்த தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நாடெங்கிலும் நடைபெற்று வருகின்றன.அதன்படி, 2019 ஏப்ரல் 21ஆம் திகதியன்று பயங்கரவாதிகளின் இலக்குக்கு உள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் இன்று (புதன்கிழமை) காலை விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.குறித்த தேவாலயத்தில் தாக்குதலுக்கு பின்னர் முதன் முறையாக இன்றைய தினம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.பலத்த பாதுகாப்புக்கும் மத்தியில் இடம் பெற்ற இந்த விசேட வழிபாட்டில் ஈஸ்டர் தாக்குதலி…
-
- 0 replies
- 235 views
-
-
சாய்ந்தமருதில் வட்டியில்லா வங்கி ஆரம்பமானது. March 11, 2017 -எம்.வை.அமீர்- இஸ்லாம் மிகக்கடுமையாக வெறுக்கும் வட்டியில் இருந்து சமூகத்தைக் காக்கும் பணியில் சில ஊர்களில், அவ் ஊர்களின் பள்ளிவாசல்களை மையப்படுத்தி, வட்டியில்லாக் கடன் உதவித்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு, வட்டியின் பக்கமிருந்து மக்கள் மீட்க்கப்பட்டு வரும் இப்போதைய சூழலில், சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசல், பல்வேறு கலந்துரையாடல்கள் மற்றும் அனுபவப்பகிர்வுகளின் பின்னர் 2017-03-10 ஆம் திகதி மக்தப் அத்- தகாபுல் எனும் பெயரில் வட்டியில்லா வங்கி ஒன்றினை அங்குரார்ப்பணம் செய்து வைத்தது. சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபாவின் தலைமையிலும் ஐ.அப்துல் குத்தூஸின் வழிநடத…
-
- 11 replies
- 1.1k views
-
-
ரஸ்யா, சீனா, ஈரான் பாணியில் சிறிலங்கா இராணுவம் [ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 06:26 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்கா இராணுவத்தின் எல்லா பற்றாலியன்களுக்கும் முழுமையான, நவீன வசதிகளுடன் கூடிய முகாம்களை அமைப்பதற்கான நிலம் தனியாரிடம் இருந்தாலும் சுவீகரிக்கப்படும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். சிறிலங்கா இராணுவத்தின் ஒவ்வொரு பற்றாலியன்களுக்கும், முழுமையாக நவீன வசதிகள் கொண்ட முகாம்களை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த முகாம்களை அமைக்கும் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்துக்கு சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அனுமதி அளித்துள்ளார். அதற்காக தெரிவு செய்யப்பட்ட க…
-
- 1 reply
- 1.6k views
-
-
இலங்கையர்கள் தொடர்பான விசா கொள்கையில் மாற்றம் இல்லை கனேடிய தூதரகம் தெரிவிப்பு இலங்கையிலிருந்து கனடாவுக்கு செல்லும் இலங்கையர்களுக்காக தமது விசா கொள்கையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கனடா நாட்டுக்கு செல்லும் இலங்கையர்கள் குறித்த நாட்டில் 90 நாட்கள் வரையில் விசா இன்றி சுற்றுலா அடிப்படையில் பிரவேசிக்க முடியும் என வெளியாகியிருந்த தகவல்களை நிராகரித்து கொழும்புக்கான கனேடிய உயர் ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது இலங்கையிலிருந்து வர்த்தக நடவடிக்கைக…
-
- 0 replies
- 228 views
-
-
புலிகளின் தலைவரின், ஒளிப்படம் பொறிக்கப்பட்ட உடையுடன் வந்த தமிழக மீனவர்கள்- விசாரணை முன்னெடுப்பு இலங்கை கடற்படையினரால் அண்மையில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சிலரின் உடையில் (T-Shirt) தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படம் பொறிக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக இலங்கை கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை தமிழக மீனவர்கள் சட்டவிரோதமாக இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர். குறித்த மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில், அதில் ஒரு படகில் இருந்தவர்கள் அணிந்திருந்த உடையில் புலிகளின் …
-
- 35 replies
- 2.5k views
-
-
மஷூர் மௌலானாவின் அகவை 80 விழாவில் 2013.02 21ந் திகதி மாலை 4.30 மணிக்கு தமிழ்சங்க மன்டபத்தில் நீதியரசர் சீ.வீ. விக்னேஸ்வரன் ஆற்றிய தலைவருரை மஷூர் மௌலானா அவர்களின் அகவை எண்பது நிறைவு விழா 2013ம் ஆணடு பெப்ரவரி 21ந் திகதி மாலை 4.30 மணிக்கு தமிழ்சங்க மண்ட்டபத்தில் இடம்பெற்றது. அந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கிய ஓய்வுபெற்ற நீதியரசல் சீ.வீ. விக்னேஸ்வரன் ஆற்றிய தலைவருரையை என் நண்பரும் ஊடகவியலாளருமான வரதராஜன் நியூசிலாந்தில் இருந்து அனுப்பி வைத்தார் காலத்தின் தேவை கருதி மீள் பிரசுரம் செய்யப்படுகிறது. இந்த விழாவின் நாயகன் மஷூர் மௌலானா அவர்கள் பற்றிய எனது நினைவையும் இங்கு பதிய வேண்டியது இன்றைய காலத்தின் தேவை. 2006ல் மீண்டும் உக்கிரமடைந்த போரின் போது கிழக்கில் திருகோணமலையில் இர…
-
- 2 replies
- 491 views
-
-
2008 ஆம் ஆண்டில் 11 பேர் கடத்தல்: லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டியாராச்சியைக் கைது செய்யுமாறு உத்தரவு 2008 ஆம் ஆண்டு கொழும்பில் ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் நான்காவது சந்தேகநபரான லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டியாராச்சியை உடனடியாகக் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்ன முன்னிலையில் இன்று இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரைக் கைது செய்வதற்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அவர் கைது செய்யப்படாமை ஏன் என நீதவான் கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த சந்தேகநபரைக் கைது…
-
- 0 replies
- 238 views
-
-
24/06/2009, 12:00 [சிறப்புச் செய்தியாளர்] இலங்கையின் பொருண்மிய வீழ்ச்சி – வெளிநாடுகளுக்கு வலை விரிப்பு சிறீலங்கா தனது பொருண்மீய வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு மலேசிய முதலீட்டாளர்களை தமது நாட்டில் முதலிடுமாறு அழைப்பு விடுத்துள்ளது. விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விட்டதாக, அரசு அறிவித்து ஒரு மாதமாகியுள்ள போதிலும், சிறீலங்காவின் பொருளாதாரம், ஒரு தேக்க நிலையிலேயே இருந்து வருகின்றது. இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களிற்கு பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் வெளிநாடுகள் நிதி வழங்குவதால், சிறீலங்காவின் இனவாத அரசு அதற்கு மறுப்புத் தெரிவித்து வருகின்றது. இதனால் ஐக்கிய நாடுகள் சபையின் உப அமைப்பு உட்பட பன்னாட்டு மனிதநேய அமைப்புக்கள் மூலம் தமது நிதியுதவிக…
-
- 0 replies
- 536 views
-
-
உதுகள் ஒரு புறம் கிடக்க ...... கம்போடியா அன்று கம்பூச்சியா என்றழைக்கப்பட்ட நாட்டில் 70களில் சீன ஆதரவுடன் பொல்பொட் எனும் இயக்கம் போராட்டத்தை ஆரம்பித்தது. அது நாட்டை கைப்பற்றி எல்லாம் பிழையாகிப் போய்இ இறுதியில் உள்ளுக்குள்இ வெளியில் என்று தொடங்கி வியட்னாமும் உள்ளட்டு முடிக்கபட்டது!! ஏறக்குறைய பல மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர்!! சன இறப்பிற்கு சீனாஇ வியட்னாம்இ அமெரிக்கா ....... உட்பட பொல்பொட்டும் காரணமாக இருந்தது!!! ....... இப்போ எல்லா சாவுகளையும் பொல்பொட்டினது தலையில் உலகம் போட்டது மட்டுமல்லாதுஇ அங்குள்ள சந்ததியினரும் பொல்பொட்டையே வெறுக்க வேண்டிய சூழ்நிலை!!! உலகில் உள்ள பல அடக்கப்பட்ட மக்களின் விடுதலை அமைப்புகள் சிறிய இராணுவ அமைப்பையும்இ பலமான அரசியல் அமைப்பையும் கொண்ட…
-
- 7 replies
- 1.7k views
-
-
அன்டனோவ்-32யை சுட்டுவீழ்த்திய புலிகள் இருவரின் மறியலும் நீடிப்பு வில்பத்து சரணாலயத்தில் வைத்து 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதியன்று, அன்டனோவ்-32 விமானத்தை சுட்டு வீழ்த்திய தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவரின் விளக்கமறியலும், மே மாதம் 25ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விடுதலைப்புலிகள் அமைப்பின் மெசெய்ல் பிரிவின் மற்றுமொரு உறுப்பினர், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் சட்டரீதியானது என்றும், அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மஹேஷ் வீரமன் அறிவித்தார். …
-
- 0 replies
- 185 views
-
-
'இந்து' என்.ராம் பேட்டி இலங்கையில் பார்த்தது..! போரினால் தன் சொந்த நாட்டிலேயே சொந்த பந்தங்களையும்வீடு வாசல்களையும் இழந்து அகதிகளாக மாறியிருக்கும் ஈழத் தமிழர்களை, அவர்கள் அடைபட்டுக் கிடக்கும் முகாம் களுக்குச் சென்று சந்தித்ததோடு, இலங்கை ஜனாதிபதி மஹிந்தா ராஜபக்ஷேவையும் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார், 'இந்து' நாளிதழின் முதன்மை ஆசிரியர் என்.ராம். ''ஈழத் தமிழர்கள் அடை பட்டுக் கிடக்கும் முகாம்கள், இந்தியாவில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான அகதிகள் முகாம்களைவிட மேம்பட்டதாக இருக்கிறது...'' என்று அவர் செய்தி வெளியிட்டிருக்கிறார். இதையட்டி அவர் வெளி யிட்டிருக்கும் படங்கள் மற்றும் கருத்து களை கடுமையாக விமர்சிக்க ஆரம் பிக்கின்றன, ஈழத் தமிழர் ஆதரவு இ…
-
- 5 replies
- 1.9k views
-
-
தேர்தல் விதிமுறைகளை மீறிய சம்பவங்கள் கண்டி மாவட்டத்திலேயே அதிகமாக இடம்பெற்றள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் கெபே அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்கவும் குரல் பதிவைக் கேட்பதற்கும்,http://tamilworldtoday.com/?p=26806
-
- 0 replies
- 310 views
-
-
தமிழ் மக்களிடமிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை அந்நியப்படுத்துகின்ற இரகசிய சதித்திட்டம் ஒன்றை அரசாங்கம் அரங்கேற்றுகிறதா? கடந்த 7ம் திகதி பாராளுமன்றில் உரையாற்றிய த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இக்கேள்வியை எழுப்பியிருந்தார். வடக்கு கிழக்கில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற ஜனநாயக ரீதியான போராட்டங்களை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதை சுட்டிக்காட்டியே அவர் இந்தக் கேள்வியை அரசாங்கத்தை நோக்கி எழுப்பினார். காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவினர்கள் 50 நாட்களுக்கு மேலாக கிளிநொச்சி, வவுனியாவில் கொதிக்கும் வெயிலுக்கு மத்தியிலும் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையிலும் அதற்குச் சமாந்தரமாக முல்லைத்தீவு, மருதங்கேணி, திருகோணமல…
-
- 1 reply
- 411 views
-
-
நாயாறு – நந்திக்கடல் – காக்கைதீவு என நாடெங்கும் அபிவிருத்தி : டக்ளஸ் தீவிரம் நந்திக்கடல், நாயாறு களப்பு புனரமைப்பு பணிகளை நடைமுறைப்படுத்துமாறு தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் வோனந்தா, யாழ். காக்கைதீவு கடல் நீரேரியை தூர்வாருவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் குறிப்பிட்டார். நடளாவிய ரீதியில் காணப்படுகின்ற களப்புக்களை புனரமைக்கும் வேலைத் திட்டம் தொடர்பாக இடம்பெற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே, கடற்றொழில் அமைச்சரினால் மேற்குறித்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்ற சுமார் ஒன்பது பிரதான களப்புக்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நக்டா,…
-
- 15 replies
- 826 views
-
-
சிறிலங்காவுக்கான புதிய இராணுவத் தளபதியை நியமிக்கும்போது சேவை மூப்பு எந்தவகையிலும் கவனத்திற்கொள்ளப்படாமையால் அதிருப்தியடைந்திருக்கும் இராணுவ உயர் அதிகாரிகள் பலரும், தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாக தமது சேவையில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்குத் திட்டமிட்டிருப்பதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படைத் தலைமைகளில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கடந்த வாரத்தில் மேற்கொண்ட திடீர் மாற்றங்களினால் இராணுவ உயர் அதிகாரிகள் பலரும் பெரும் அதிருப்தியடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் தனிப்பட்ட விருப்பத்துக்கு அமைவாகவே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். கூட்டுத் தலைமை அதிகாரிப் பத…
-
- 0 replies
- 689 views
-
-
யுத்தம் நிறைவடைந்த நிலையில் மீதமாகும் நிதிவளங்களை சர்வதேச நாடுகளின் தலைவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு புலம்பெயர்ந்தவர்கள் முயற்சிப்பதாக மஹிந்த அமைச்சரவையின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சிலாபம் – மாதம்பை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். தற்போது நாட்டில் பயங்கரவாதம் இல்லை எனவே, யுத்தம் நிறைவடைந்து விட்டது. அது மீண்டும் ஏற்படாது. ஆனால் யுத்தம் நிறைவடைந்த போதும், எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.சர்வதேச மட்டத்தில் பல சவால்கள் பல உள்ளன. ஈழக்கனவு இன்னும் நிறைவடையவில்லை. புலம்பெயர்ந்தவர்களிடம் பிரபலமான பொறிமுறையொன்றே செல்கிறது. 30 வரு…
-
- 2 replies
- 418 views
-
-
காவி உடை, நீண்ட தாடியுடன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார் முருகன் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் முருகன் எனப்படும், சிறீதரன் காவி உடை தரித்த நிலையில் நேற்று வேலூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். வேலூர் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் முருகனிடம் இருந்து, கைபேசிகள், சிம் அட்டைகள் கைப்பற்றப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காகவே அவர் நேற்று வேலூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். கடுமையான பாதுகாப்புடன் காலை 11.30 மணியளவில் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்த முருகன், நீண்ட தாடி வளர்த்து, தலையில் குடுமி வைததிருந்ததுடன் காவி உடையும் அணிந்திருந்தார். விசாரணைகள…
-
- 0 replies
- 560 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தின்... சில விதிகளை, மீள ஆராய நடவடிக்கை – ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்தது இலங்கை! பயங்கரவாத தடைச் சட்டத்தின் சில விதிகளை மீள ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நல்லிணக்கத்திற்கான முன்னேற்றம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரஸ்தாபிக்கப்பட்ட போது, போதிய விளக்கம் வழங்கப்பட்டதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உரிய மற்றும் பன்முக உரையாடலுக்காக தொடர்ச்சியாக பொறுப்புடன் செயலாற்றும். …
-
- 0 replies
- 337 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 2, ஆகஸ்ட் 2009 (18:8 IST) நிர்வாணமாக்கி தமிழக மீனவர்கள் சித்ரவதை:இலங்கை கடற்படை அட்டூழியம் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் தாக்கி நிர்வாணமாக்கி சித்தரவதை செய்த சம்பவம் ராமேஸ்வரத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மாலை 4 மணிக்குமேல் இறால் மீன்பிடிக்க கச்சத்தீவு கடல் பகுதிக்குள் செல்லமுயன்ற மீனவர்களை வழிமறித்த இலங்கை கடற்படையினர் பிளாஸ்டிக் பைப்பினால் தாக்கி அடித்து விரட்டியுள்ளனர். மேலும் இரவில் கச்சத்தீவு கடல் பகுதிக்குள் சென்ற படகை நிறுத்தி படகில் இருந்த இறால் மீன்களை பறித்துக்கொண்டு மீனவர்களை நிர்வாணப்படுத்தி அட…
-
- 4 replies
- 868 views
-
-
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் பிரதமருடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை- ஐ.தே.க ஐக்கியதேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மகிந்தராஜபக்சவுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்ககளில் வெளியாகியுள்ள படங்களை அடிப்படையாக வைத்து ஐக்கியதேசிய கட்சி இதனை தெரிவித்துள்ளது. ஐக்கியதேசிய கட்சியின் தலைவரும் பிரதமரும் ஒன்றாக இரவு உணவருந்துவதை இந்த படங்கள் காண்பித்துள்ளன. கொழும்பு கொள்ளுப்பிட்டியில உள்ள ரணில்விக்கிரமசிங்கவின் அயலவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஐக்கியதேசிய கட்சியின் தலைவரும் பிரதமரும் கலந்துகொண்டனர்- அவர்கள் அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுப…
-
- 0 replies
- 206 views
-
-
வன்னியில் யுத்தம் தீவிரமடைந்திருந்த இறுதி காலகட்டத்தில் "சுடர் ஒளி' ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டாரா இல்லையேல் கைது செய்யப்பட்டு கடத்தப்பட்டாராவென பெரும் விவாதங்கள் நிகழ்ந்தன. மே மாதம் 18 ஆம் திகதிக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கொல்லப்பட்டாரா அல்லது உயிருடன் உள்ளாராவென்கிற அலசல்களும் ஆய்வுகளும் ஊடகப் பரப்பை ஆக்கிரமித்திருந்தன. இன்னமும் இந்த விவாதம் முற்றுப் பெறாமல் நீடிக்கையில் புதிய சர்ச்சையொன்றும் இம்மாத ஆரம்பத்தில் வெளிக்கிளம்பியுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலராக பிரகடனப்படுத்தப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதனின் கைது குறித்து வெளிவரும் ஊகங்களும் வதந்திகளும் புலம்பெயர்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சர்வதேச விசாரணைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது நீதி அமைச்சர் விஜேதாஸ திட்டவட்டம் (ஆர்.யசி) இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் முன்வைக்கும் காரணிகள் நியாயமானவையேயாகும். எனினும் ஒரு தரப்பினர் சர்வதேச விசாரணை பொறிமுறை அவசியமென கருத்துக்களை முன்வைக்கின்ற போதிலும் இவர்களின் கோரிக்கையை சாதகமாக பயன்படுத்தி நாட்டில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்த புலம்பெயர் அமைப்புக்கள் முயற்சிக்கின்றன. எவரையும் தனிப்பட்ட முறையில் திருப்திப்படுத்த சர்வதேச விசாரணைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். தமிழ் மக்களின் நியாயமான கோரி…
-
- 0 replies
- 308 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட 100 ஆவது நினைவு நாள் கனடாவில் கடைப்பிடிக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 401 views
-