ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143663 topics in this forum
-
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஜனாதிபதி இல்லத்தில் இன்று (02) காலை இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. அண்மையில் சார்க் மாநாட்டில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது பேசப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கை உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114086/language/ta-IN/a…
-
- 0 replies
- 222 views
-
-
பிரிவினை வாதத்தை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் நூற்று க்கு நூறு வீதம் முன்னெடுக்கப்பட வில்லை. புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்க வேண்டுமாயின் வன்னி, கிளிநொச்சி பகுதிகளில் தாக்குதல் நடத்தி யுத்த நிறுத்த உடன் படிக்கையிலிருந்த அரசாங்கம் உத்தியோக பூர்வமாக விலக வேண்டும் என்று தேசிய பிக்கு முன்னணியில் தலைவர் தம்பர அமில தேரர் தெரிவித்தார். source:www.tamilwin.com
-
- 0 replies
- 798 views
-
-
எனது பெயர்களை அழிக்கிறார்கள் – மகிந்த ஆதங்கம் கட்டுமானங்களுக்குச் சூட்டப்பட்ட தனது பெயர்களை அழிப்பதில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். ஹோமகம புரான விகாரைக்குச் சென்ற மகிந்த ராஜபக்சவிடம், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார். காலி அனைத்துலக துடுப்பாட்ட மைதானத்துக்குச் சூட்டப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவின் பெயரை நீக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது தொடர்பாக அவரிடம், கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மகிந்த ராஜபக்ச, எல்லா கட்டுமானங்களிலும் உள்ள எனது பெயரை நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்த அரசாங்கத்துக்கு உள்ள முக்கியமான பிரச்சினை …
-
- 0 replies
- 203 views
-
-
''வலை வீசும் அரசியலும் ஜே.வி.பியின் வீழ்ச்சியும்'' நா. யோகேந்திரநாதன்- அண்மையில் கொழும்பு அரசியலில் மிக வேகமாகவும் திடீர் திடீர் எனவும் ஏற்படும் மாற்றங்கள் பலருக்கு வியப்பை ஏற்படுத்தக்கூடும். சில சமயங்களில் இவை ஆரசியல் ராஜதந்திரத்திற்கு அப்பாற்பட்ட செய்கைகளாகவும் தோன்றலாம். ஆனால் சிறீலங்காவின் பாராளுமன்ற அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கினால் இது நடைமுறையில் காலம்காலமாக நிலவி வரும் ஒரு மூன்றாம் தர அரசியலின் தொடர்ச்சி என்பதை புரிந்து கொள்ள முடியும். அண்மையில் ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகள் உட்பட பலர் அரசுபக்கம் தாவினர். இவர்களை தம்பக்கம் இழுக்கும் வலையாக திரு. மகிந்த ராஜபக்ஷ மந்திரிப்பதவிகளைப் பயன்படுத்திக் கொண்டார். இதன் பலனாக அரசியலிலே மி…
-
- 1 reply
- 990 views
-
-
தேர்தல் சட்டங்களை மீறும் அரச அதிகாரிகள் தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்கு 'பிளாக் புக்' ஐ (கறுப்பு புத்தகம்) அறிமுகம் செய்த பொது எதிரணி, இந்தப் புத்தக்கத்தில் சேமிக்கப்படும் தகவல்களை வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு வாராந்தம் அனுப்பவும் தீர்மானித்துள்ளது. அத்துடன், அரச அதிகாரிகள் தேர்தல் சட்டங்களை மீறும் நடவடிக்கைகள் தொடர்பில் தகவல் வழங்குவதற்கு 0770 700 371 என்ற 24 மணித்தியாலமும் சேவையிலிருக்கும் துரித அழைப்பு இலக்கத்தையும், booklanka@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் பொது எதிரணி அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து மங்கள சமரவீர எம்.பி. கருத்து வெளியிடுகையில், "யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட கடந்த 5 வருட காலப் பகுதியில் யுத்தத்தை விற்றுத்தான் அரசு …
-
- 1 reply
- 391 views
-
-
முதலமைச்சர் வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்போம் - மாவை வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதும் அது எப்போது அறிவிப்பது என்பதும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைமை ஒன்றுகூடி உரிய நேரத்தில் அறிவிக்கும் என இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாண சபை முடிவடைவதற்கு இன்னும் காலம் இருக்கின்றது. கிழக்கு மாகாண சபை முடிவடைந்துள்ளது. இத்தகைய சபைகளுக்கான தேர்தல் எப்போது நடக்கும் என்பது தொடர்பில் இன்னும் உறுதியான முடியு எடுக்கப்படவில்லை. இவ்வாறான சூழலில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில்…
-
- 0 replies
- 289 views
-
-
நாம் பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் இல்லாதொழித்தபோதும் இன்று அதன் நிழல்கள் சர்வதேசங்களில் செயற்படுகின்றன என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் பாராளுமன்றத்தை அமைத்து அமைச்சரவையை நியமித்து பிரதமர் ஒருவரை தேர்ந்தெடுத்து தனியான அரசாங்கமொன்றை நடத்தி வருன்றனர். “அரசாங்கத்தைத் தோற்கடித்து அவரை எம்மிடம் அனுப்புங்கள்” என்று அவர்கள் கூறி வருகின்றனர். என்னை சர்வதேச இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தி மின்சாரக் கதிரையில் தண்டனை பெற்றுக் கொடுப்பதே அவர்களின் நோக்கம். இன்னொரு பக்கம் இங்குள்ளவர்கள் விமான நிலையத்தை மூடும் கதைகளைக் கூறுகின்றனர். 8ம் திகதி இரவு 12.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை மூடப் போகின்றார்களாம். நான் இந்த நாட்டைக் கைவிட்ட…
-
- 6 replies
- 815 views
-
-
Published By: VISHNU 09 MAY, 2023 | 03:49 PM சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக மறவன்புலோ சச்சிதானந்தம் அவர்கள் இன்றையதினம் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த அறிக்கையில் உள்ளதாவது, இலங்கை சிவபூமி. பாம்பையும் வேம்பையும் கல்லையும் மண்ணையும் நீரையும் தீயையும் வானையும் காற்றையும் சிவனாக வழிபடுவோர் சைவர். இயற்கையை, ஐம்பூதங்களை, சிவபெருமானாகக் கொள்வோர் சைவர். நாகர்களாய் இயக்கர்களாய் தமிழர்களாய் சைவர்களாய் இலங்கையின் ஆதி குடிகளாய் வாழ்கின்ற மக்களுக்கு இயற்கையே கடவுள். தாயின் கருவறையில் வினைவழிப் பிறந்த மனிதரைக் கடவுளாகத் தமிழர் கொள்வதில்லை, சைவர் கொள்வதில்லை. …
-
- 7 replies
- 649 views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளினால் நடாத்தப்பட்ட எறிகணைத்தாக்குதல் ஒளிப்படம்.(video) click
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுவதை ஆதரிப்பதாக நோர்வேயின் முன்னாள் பிரதி வெளியுறவு அமைச்சர் இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுவதைத் தாம் ஆதரிப்பதாக நோர்வேயின் முன்னாள் பிரதி வெளியுறவு அமைச்சர் விதார் ஹெல்கெசன் தெரிவித்தார். தமிழீழ தேசிய துக்கநாள் நேற்றுக் கடைப்பிடிக்கப்பட்டவேளை, நோர்வே தமிழர் தேசிய அவை விதார் ஹெல்கெசனின் வீடியோ ஒளிப்பதிவொன்றை வெளியிட்டது. இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுக்களின்போது, அனுசரணைப் பணியில் ஈடுபட்ட நேர்வேயின் அதி உயர் அதிகாரியாக அவர் பணியாற்றினார். இலங்கையில் புரியப்பட்ட பாரதூரமான மீறல்கள் குறித்து விசாரணை செய்வதில் இ…
-
- 1 reply
- 1.5k views
-
-
நாடுதிரும்பினார் சம்பந்தன்! யாருக்கு ஆதரவு? - கூடுகின்றது கூட்டமைப்பு: [sunday 2014-12-28 13:00] எதிர்வரும் 08ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பிலான இறுதி முடிவை அறிவிக்கும் முகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை கூடிப்பேசவுள்ளது. இக்கூட்டம் கொழும்பில் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பின் மத்திய குழுவினர் தெரிவிக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் அரசியல்வாதிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதேவேளை யாரை ஆதரிப்பது என்ற முடிவினை மேற்கொண்ட பின்னர் தங்களுடைய நிலைப்பாட்டை அறிவிக்குமு…
-
- 54 replies
- 3.3k views
-
-
தமிழர் இனப்படுகொலை குறித்து கனடா பிரதமர் விடுத்த அறிக்கைக்கு இலங்கை கண்டனம்- இராஜதந்திர முறுகல் Published By: Rajeeban 19 May, 2023 | 10:30 AM தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் தினத்தை அங்கீகரிக்கும் விதத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ள கருத்துக்களை தொடர்ந்து இலங்கைக்கும் கனடாவிற்கும் இடையில் இராஜதந்திரமோதல் ஏற்பட்டுள்ளது. கனடா பிரதமர் விடுத்துள்ள அறிக்கையை இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கண்டித்துள்ளார். இன்று நாங்கள் 14 வருடங்களிற்கு பின்னர் துன்பகரமான விதத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை நினைகூறுகின்றோம் என தெரிவித்துள்ள கனடா பிரதமர் முள்ளிவாய்…
-
- 61 replies
- 3.8k views
- 1 follower
-
-
Published By: VISHNU 28 MAY, 2023 | 04:58 PM (எம்.வை.எம்.சியாம்) அடுத்த மாதம் முதல் எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க முடியும். எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைவாக ஒதுக்கீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். வெலிகம பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் புத்தாண்டின் போது எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்தோம். இருப்பினும் குறித்த எரிபொருள் ஒதுக்கீட்டு அதிகரிப்பு எமது வ…
-
- 6 replies
- 313 views
- 1 follower
-
-
வடமராட்சியில் நிர்வாகச் செயற்பாடுகள் மிகவும் மோசமடைந்துள்ளன சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்கிறார் நீதிவான் வடமராட்சியின் நிர்வாகச் செயற்பாடு கள் மிகவும் மோசமடைந்து வருகின்றன. இவ ற்றுக்கு அரச நிர்வாக அதிகாரிகளும், ப.நோ.கூ சங்க நிர்வாகிகளுமே காரணமாவார். இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார் பருத் தித்துறை நீதிவான் க.அரியநாயகம். இந்த நிலையைப் போக்குவதற்கு கடும் நடவடிக்கை எடுக்கநேரிடும் என்றும் நீதிவான் தெரிவித்தார். பருத்தித்துறை நீதிமன்றத்தில் நேற்றுக்காலை நடந்த அவசர கூட்டம் ஒன்றிலேயே நீதிவான் இப்படி எச்சரிக்கை விடுத்தார். இக்கூட்டத்தில் அரச அதிகாரிகள், ப.நோ. கூ.சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அங்கு நீதிவான் சுட்டிக்காட்டிய விடயங்க…
-
- 0 replies
- 722 views
-
-
க.ஆ.கோகிலவாணி '2015 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலானது வரலாற்றில் மிகமுக்கியமாக பதியப்பட வேண்டிய தேர்தலாகும். செருப்பை காட்டினாலும் எமக்கு வாக்களிப்பார்கள் என எண்ணியிருந்த சில தலைமைகளுக்கு மலையக மக்கள் பதலிடி கொடுத்துள்ளதுடன் இனியும் எம்மை யாரும் ஏமாற்ற முடியாது என்று சாட்டையடி கொடுத்துள்ளனர். மலையக மக்கள் தந்த சாட்டையடியை எதிர்வரும் காலத்தில் வரும் தலைமைகளும் நன்குணர்ந்துகொள்ள வேண்டும்' என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பெ.இராஜதுரை தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் வெற்றி தொடர்பில் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர், 'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியில் பாரிய பங்களிப்புச் செ…
-
- 0 replies
- 645 views
-
-
வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் கொடும்பாவி இரண்டாவது முறையாகவும் யாழ். முஸ்லிம் மக்களினால் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது. இன்று மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய முஹீதீன் ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற தொழுகையின் பின்னர் ஒன்று கூடிய முஸ்லிம்கள் குறித்த மாகாண சபை உறுப்பினர் அண்மைக்காலமாக யாழ் முஸ்லிம் மக்கள் தொடர்பாக தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கொடும்பாவி எரிப்பில் ஈடுபட்டனர். இதன் போது இப்போராட்டத்தில் பங்கு பற்றிய மக்கள் வடக்கு மாகாண சபை உறுப்பின ரின் பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைவதை இட்டு மீண்டும் தனக்கான அரசியலை மேற்கொள்ள வட பகுதி முஸ்லிம் மக்கள் குறித்து முன்னுக்குப் பின்னாக முரணான கருத்துக்…
-
- 1 reply
- 750 views
-
-
ஜ வியாழக்கிழமைஇ 22 மார்ச் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ கொழும்பில் வெள்ளைவான் பொலிஸ் குழுவினர் எப்படி பணத்திற்கு மட்டும் கடத்துகிறார்கள் என்பதை இன்றய பாகம் மூன்றில் தருகின்றோம். கொழும்பில் அனைத்து தமிழ் ஒட்டுக் குழு உறுப்பினர்களுக்கும் இலங்கை அரச புலனாய்வு பிரிவு ஒரு மொபிட்டல் தொலைபேசி வசதியினை செய்து கொடுத்துள்ளது. அந்த மொபிட்டல் தொலைபேசியில் குறித்த தொலைபேசியை பெற்றுக் கொடுத்தவர் அடிக்கடி தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொண்டு இருப்பார். இத்தகைய தமிழ்க் குழு உறுப்பினர்களிடம் புதிதாகக் கொழும்புக்கு வரும் தமிழ் அப்பாவி இழைஞர்களின் பட்டியலும் முகவரியும் கொடுக்கபடுகின்றது. தமிழ் குழுக்களின் தகவல் தேடும் கும்பல் கொழும்பில் தங்குமிட விடுதிகள் உட்;பட அனைத்து பகுதியினையும் தேடுதல் நட…
-
- 0 replies
- 1k views
-
-
ஆம் இணைப்பு) மட்டக்களப்பில் குண்டுத்தாக்குதல்: 10 இராணுவத்தினரும் 16 ஈ.பி.டி.பியினரும் பலி [செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2007, 13:50 ஈழம்] [க.திருக்குமார்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கொம்மாந்துறை இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பெண் சிறிலங்கா இராணுவத்தினர் உட்பட 10 இராணுவத்தினரும், 16 ஈ.பி.டி.பி. உறுப்பினர்களுமாக 26 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.50 மணியளவில் இராணுவத்தினரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நிறுத்தாது போன உழவு இயந்திரம் ஒன்றின் சாரதியை நோக்கி, இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது அந்த வாகனம் வெடித்துச் சிதறியதாக சிறிலங்கா படை…
-
- 13 replies
- 4.5k views
-
-
ஐ.நா.வை நோக்கிய 1.6 மில்லியன் மக்களின் கோரிக்கைக்கு அமைய இலங்கை விவகாரத்தினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டிய கடப்பாடு ஐ.நா.வுக்கு உண்டு. அதனைத்தான் வருகின்றதீர்மானத்தின் உள்ளடக்கமாக கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவித்த நாடு கடந் தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திகுமாரன், அதைவிடுத்து தற்போதைய தீர்மானத்தை மீண்டும் கால அவகாசத்துடன் நீடிக்க வைப்பது என்பது நீதிக்காக காத்திருக்கும் மக்களை ஏமாற்றுகின்ற செயலாக அமைந்துவிடும் என்றும் தெரிவித்தார். ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்; கேள்வி : இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைச்சபையில் கால அவகாசத்துடன் கூடிய மற்றுமொரு தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்…
-
- 0 replies
- 338 views
-
-
[31 - Mஅர்ச் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தம்முடைய விமானப் படையைப் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் பிரதிபலிப்புகள் முரண்பாடானதாகவே அமைந்துள்ளன. வான் புலிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் அதேவேளை நாளையே பேச்சுவார்த்தைக்கு தயார் என வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம அறிவித்திருக்கின்றார். அரசின் பிரதிபலிப்புகள் இவ்விதம் வெளிவரும் அதேவேளையில் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் யுத்தகளத்தில் ஏற்பட்டுள்ள புதிய பரிமாணத்தை சரியான முறையில் புரிந்து கொள்ளாமல் தங்களுடைய அரசியல் நலன்களுக்கேற்ற வக…
-
- 1 reply
- 1k views
-
-
14 ஜூன் 2011 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்:- நாங்கள் இந்தியாவுக்காகப் பேசினோம். அவர்கள் இலங்கைக்காகப் பேசினார்கள். எல்லாப் பிரச்சினைகளைப் பற்றியும் நாங்கள் பேசினோம். ஓரு மாநிலம் எழுப்பிய அல்லது சில தனிநபர்கள் எழுப்பியப் பிரச்சினைகளைப் பற்றி நாங்கள் பேசவில்லை. சிவ்சங்கர் மேனன் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் 11 ஜூன் 2011 1 இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ், இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் போன்றவர்களின் இலங்கை விஜயம் முடிவுக்கு வந்திருக்கிறது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ உள்பட இலங்கைப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை சார்ந்தவர்களையும், தமிழ்தேசி…
-
- 0 replies
- 912 views
-
-
ஞாயிற்றுகிழமை, யூன் 19, 2011 சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நல்ல வசதிகளையும் பாதுகாப்பினையும் வழங்கி வருவதாக காங்கிரஸ் அமைச்சர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கை சென்று பேச்சுவார்த்தை நடாத்திவிட்டு திரும்பி இருந்த சிவசங்கர் மேனன் தனக்கு அங்கு உள்ள நிலமையினை தெளிவுபடுத்தியதாக கூறினார். . அங்கு தமிழர்கள் சந்தோசமாக வாழ்வதாகவும் அதற்கான ஏற்பாட்டை பாதுகாப்பு உட்பட இலங்கை அரசு செய்து கொடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார். . இதற்கு பத்திரிகையாளர்கள் ஜிகே வாசனை கேள்விகேட்டனர். அதாவது இலங்கையில் எல்லாம் நல்லபடியாக உள்ளது என்றால் ஏன் ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரும் போது உங்கள் கட்சி எம் எல் ஏக்கள் ஆமா போட்டனர். இவ்வாறு கேட்ட பத்திரிகையாள…
-
- 3 replies
- 935 views
-
-
இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகன் ஹிராஸ் அஹமட், வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.தாஹீர் மற்றும் அபுல்ஹசன் ஆகியோரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் எதிர்வரும் 9ம் திகதி காலை முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்தவினால் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டு வழக்கின் இரண்டாவது தவணை இன்று வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது அடுத்த விசாரணை டிசம்பர் மாத…
-
- 0 replies
- 294 views
-
-
வடக்கில் கோத்தா அபகரித்த தமிழ்மக்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்படும் – சம்பிக்க ரணவக்க FEB 02, 2015 | 9:51by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தமிழ் மக்களிடம் இருந்து அபகரித்த காணிகள் மீண்டும் அவர்களிடமே வழங்கப்படும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். “வடக்கில் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு சில இடங்கள் உயர்பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அவை தொடர்ந்தும் அவ்வாறே கணிக்கப்படும். ஆனால், கடந்த ஆட்சியில் பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்ச தன்னிச்சையாக தனது சொந்த வியாபார நோக்கத்திற்காகவும் தமிழ் ம…
-
- 0 replies
- 522 views
-