ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு வெள்ளவத்தையில் நேற்று புதன்கிழமை அதிகாலை படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையில் 15 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 747 views
-
-
கிழக்கு பல்கலையில் ஆர்ப்பாட்டம் கிழக்கு பல்கலைகழக மருத்துவபீட மாணவர்கள் இன்று நண்பகல் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் பேராட்டங்களில் ஈடுபட்டனர். பல்கலை கழகத்தில் நிர்மாணிப்பதற்கென முன்னாள் உயர்கல்வி அமைச்சரால் அடிக்கல் நடப்பட்ட கட்டிடம் பூர்த்திசெய்யப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்படாமை மற்றும் மாணவர்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றாமை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இவ்ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக மாணவர்கள் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/9609
-
- 0 replies
- 209 views
-
-
By General 2012-12-31 13:49:07 இந்தியத் தலைநகர் புதுடில்லியில் ஓடும் பஸ்ஸில் மாணவியொருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டமையைக் கண்டித்தும் உயிரிழந்த மாணவிக்கு ஆதரவு தெரிவித்தும் கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு அண்மையில் கையொப்பம் திரட்டும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், சமூக அமைப்பைச் சார்ந்தோர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர். http://www.virakesari.lk/article/local.php?vid=2335
-
- 5 replies
- 441 views
-
-
யாழ்.குடாநாட்டுக் கடற்பரப்பில் தற்போது கட்டப்பரை மீனினத்தின் பிடிபாடு அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வகை மீனினம் யாழ்.குருநகர், மாதகல், தீவகம், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை ஆகிய கடற்பகுதிகளிலேயே அதிகம் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த மீனினம் அரியவகையாகக் காணப்பட்டாலும் காலத்திற்கு ஏற்ப தற்போது அதிகம் கிடைக்கின்றன. ஒரு பெரிய கட்டப்பரையின் நிறை ஐந்து கிலோ முதல் அதற்கு உட்பட்டும் காணப்படுகின்றது. ஒரு கிலோ கட்டப்பரை மீனின் விலை 1000 ரூபாவாக விற்கப்படுகின்றது. 25 000 ரூபா முதல் 30 000 ரூபா வரை ஒருநாள் வியாபாரத்தில் வருமானமாகக் கிடைக்கப்பெறுகின்றது. இந்த மீன் வகையைப் பலரும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து செல்கின்றனர்…
-
- 5 replies
- 488 views
-
-
யானையை சீண்டி பார்க்காதீர்கள்; அடக்கினாலும் அடங்காது – ஆனந்தகுமார் ஐக்கிய தேசிய கட்சி நடமாடும் பிணமாய் அலையும் இறந்த கட்சியாகும் என அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அவர், எங்கிருந்து வந்தார் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்று இரத்தினபுரி மாவட்ட ஐதேக வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்தார். இறக்குவானை ஸ்ரீமுத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் இன்று (06) வழிபட்ட பின்னர் இதனைக் தெரிவித்தார். மேலும், “ஒருபோதும் பதவிக்காக யானை சோரம்போனதில்லை. எதிர்காலத்திலும் போகாது. ஆனால், பவித்ரா வன்னியாரச்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கையை காட்டிக்கொடுத்துவிட்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டுக்கு முட்டுக்கொடுத்து கொண்டிருக்கின்றார். …
-
- 0 replies
- 268 views
-
-
இராணுவத்தினர் பாடசாலைகளில் கற்பிப்பதாக பிழையான பிரச்சாரம் 04 ஜனவரி 2013 இராணுவப் படையினர் சீருடையில் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பிழையான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.கிளிநொச்சி தமிழ் பாடசாலைகளில் இராணுவப் படையினர் சீருடைகளில் சிங்கள மொழியைக் கற்பித்து வருவதாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.எனினும், இந்தப் பிரச்சாரத்தில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கல்வி வலயத்தில் கணிதம், விஞ் ஞானம் மற்றும் சிங்களம் ஆகிய பாடங்களைக் கற்பிக்க போதியளவு ஆசிரியர்கள் இல்லை என வலயக் கல்வி அதிகாரிகள் அறிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.இதன் அடிப்படையில்…
-
- 1 reply
- 452 views
-
-
நாட்டில் உருவாக்கப்படவுள்ள அரசியல் ரீதியான அதிகாரப் பகிர்வில் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாகவே தொடர்ந்தும் இருக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு பாதிப்பை தோற்றுவிக்கும் சமஷ்டி தீர்வையும் வழங்கக்கூடாது என கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் ஒன்றியத்தினால் பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையினால் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி 24 மணி நேரத்திற்குள் கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புகளின் சம்மேளனம் இந்த பிரகடனத்தை தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கல்முனையில் ஒன்றுகூடி தங்க…
-
- 0 replies
- 350 views
-
-
சிறிலங்காவின் இனப் படுகொலையைக் கண்டித்து தமிழ்நாட்டின் பொன்னேரி பகுதியில் முழு கடையடைப்புப் போராட்டம் இன்று நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 475 views
-
-
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்படவுள்ள சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர்களின் தெரிவு இன்னும் நிறைவுபெறவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் குழுவில் நான்கு பேர் அங்கம் வகிப்பார்கள் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும் அந்த எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க – தமிழ்மிரருக்கு தெரிவித்தார். ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ள மேற்படி சுயாதீன ஆணைக்குழுவுக்கான துறைசார் நிபுணர்கள் தெரிவு துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் அதில் அங்கம் வகிப்பவர்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 678 views
-
-
மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான காணாமல்போனோர் குறித்து விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவானது இன்று தனது இறுதி அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்ட காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் இந்த காணாமல்போனோர் ஆணைக்குழுவின் பதவிக்காலமானது கடந்த ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை இடையிடையே நீடிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் கடந்த ஜூலை மாதம் 15 ஆம் திகதியுடன் ஆணைக்குழுவின் பதவிக்காலம முடிவுக்கு வந்த நிலையிலேயே இன்றைய தினம் இது தொடர்பான அறிக்கையை ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான குழுவினர் ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளனர். இந்தக் குழுவுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு சர்வதேச ஆலோசனைகளை வழங்க சர்வ…
-
- 0 replies
- 292 views
-
-
தமிழருக்கு காங்கிரஸ் இழைக்கும் துரோகம் : இந்திய இணையம்: பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சை 'அதிகபட்சமானது', 'தேவையற்றது' என்று கூறியுள்ள இந்தியா, ஏராளமான மக்கள் கொல்லப்பட்ட அத்தாக்குதலை கண்டித்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் தென் பகுதி மீது ஹமாஸ் போராளிகள் (இஸ்ரேலைப் பொறுத்தவரை பயங்கரவாதிகள்) நடத்திய ராக்கெட் தாக்குதலில் இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக கடந்த சனிக்கிழமை முதல் காசா பகுதி மீது இஸ்ரேலிய விமானங்கள் சரமாரியாக பறந்து குண்டு வீசி வருகின்றன. இதில் 300க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலைக் கண்டித்துத்தான் திங்கட்கிழமை மாலை நமது அயலுறவு அமைச்சகம் ஒரு கண்டன அறிக்கை வெளிய…
-
- 2 replies
- 2.1k views
-
-
-எம்.சுக்ரி கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழையைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 62,240 குடும்பங்களைச் சேர்ந்த 220,525 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டகளப்பு மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை மாலைவரை வெள்ளத்தால் இடம்பெயர்ந்த 135 குடும்பங்களைச் சேர்ந்த 535 பேர் 5 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8,451 குடும்பங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பிரம்படித்தீவு பலநோக்கு மண்டபம், பூவாக்காடு பாடசாலை மண்டபம், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வந…
-
- 0 replies
- 397 views
-
-
வடமராட்சி கிழக்கு மருதங்கேணிக் கடற்கரைப்பகுதியிலிருந்து 25 கிலோ கேரளா கஞ்சா, இன்று மீட்கப்பட்டதாக மருதங்கேணிப் பொலிஸார் கூறினர். இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. மருதங்கேணிப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது மேற்படி கேரளக் கஞ்சா மீட்கப்பட்டது. வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பிரதேசத்தில் கடற்படையினரின் உதவியுடன் பளைப் பொலிஸார் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். கேரளாவிலிருந்து கடல் மார்க்கமாக கஞ்சா கடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மீட்கப்பட்ட கஞ்சா பொதியை, நாளை வெள்ளிக்கிழமை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகத் தெரிவித்த…
-
- 0 replies
- 294 views
-
-
விரிவுரையாளர் கொழும்புக்கு மாற்றம் AddThis Sharing Buttons -எம்.றொசாந்த் கிளிநொச்சியில், அண்மையில், யானைத் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த விரிவுரையாளர் காயத்திரி டில்ருக்ஷி, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே, மேலதிக சிகிச்சைக்காக விமானம் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு, நேற்று மாலை மாற்றப்பட்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிர…
-
- 3 replies
- 913 views
-
-
முல்லைத் தீவுக்கு இந்திய கடற்படையினர்-திருமா திருச்சி: முல்லைத் தீவுக்கு சீருடை அணியாத இந்திய கடற்படையினர் சென்னை விமான நிலையம் வழியாக சென்றிருக்கிறார்கள். இது ஒட்டு மொத்த தமிழ் இனத்துக்கும் இழைக்கப்படும் பச்சை துரோகம் என விடுதலைத் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் ஈவு இரக்கமற்ற இனப் படுகொலைக்கு இந்திய அரசே பொறுப்பு. முப்படைகளும் நேரடியாக இறங்கி, விடுதலைப் புலிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவித்து வருகிறார்கள். 6.5 கோடி தமிழ் மக்களின் தலைவரான முதல்வர் கருணாநிதி இலங்கையில் போரை நிறுத்தக்கோரி இந்தியப் பிரதமரை நேரில் போய் சந்தித்து ஒரு மா…
-
- 5 replies
- 4.7k views
-
-
கடுதாசித் துண்டொன்றில் நாட்டை ஆட்சி செய்த காலம் மீண்டும் இந் நாட்டில் உருவாக இனிமேலும் யாருக்கும் இடமளிக்கப் போவதில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். நாட்டின் சட்டங்களை அலட்சியம் செய்து அரசியல் இலாபம் தேட முனையும் குழுக்களை இனங்காண்பது நாட்டை நேசிக்கும் சகலரதும் பொறுப்பாகுமெனவும் மஹிந்த தெரிவித்தார். நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும் இடையிலான விசேட சந்திப்பில் உரையாற்றிய போதே மஹிந்த இவ்வாறு தெரிவித்தார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் விஜயதாச ராஜபக்ச உட்பட இலங்கை நீதித்துறையின் 14 சட்டத்தரணிகள் சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள…
-
- 4 replies
- 353 views
-
-
சோரன் பற்று கிராமத்தை தாங்கள் கைப்பற்றிஉள்ளதாக இராணுவம் சார்பு ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. 8ம் திகதி மாலை தங்கள் இரணுவத்தின் 55ம் படைப்பிரிவு ஆனையிறவில் இருந்து 9கி.மீ இலும் பளையில் இருந்து 5.2கி.மீ இலும் அமைந்துள்ள சோரன்பற்று கிராமத்திற்குள் நுளைந்ததாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. சோரன்பற்று ஓயாத அலைகள் படை நடவடிக்கையின் போது எமது போராளிகளின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நிலப்பரப்பு ஆகும்.
-
- 10 replies
- 3k views
-
-
முன்னொரு காலத்தில் “ட்குலா”, “மக்கேப்பிறே” போன்ற சினிமாப்படங்கள் வெளிவந்து மக்களை அச்சமூட்டின. அவை வெளிவந்தகாலத்தில் பலர் இரவில் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கே அஞ்சியதுண்டு. அவை சினிமாப்படங்கள்! உண்மை போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தவல்லவை. படங்களின் சலனத் தோற்றங்களுக்கு ஏற்ப இசையும் சேர்ந்து பயத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் இப்போது சில நிழற்படங்கள் அசைவு எதுவுமின்றி, இசையோ, பயங்கர ஓசையோ இல்லாமல் பலரைப் பயமுறுத்திவிடுவதுடன் அடங்கி ஒடுங்கி நடுங்கிப் பணிவையும் ஏற்படுத்திவிடுகின்றன. கடந்த வருடத்தில் இப்படி ஒரு நிழற்படம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திவிட்டது. அந்தப் படத்தில் ஒரு அரச உத்தியோகத்தர் மரத்தில் கட்டப்பட்டு தலைகுனிந்தவாறு நின்றார். அருகில் அமைச்சர் மேர்வின் சில்வா சண்டிக்கட…
-
- 0 replies
- 699 views
-
-
ஏராளமான தமிழர்கள் காணாமல் போனது உண்மையே -வாசுதேவ நாணயக்கார ஏராளமான தமிழர்கள் காணாமல் போனது உண்மையே. இதனை யாரும் மறுக்க இயலாது. எனவே வன்னியில் காணாமல் போன தமிழ்மக்களின் நிலை கண்டறியப்பட வேண்டும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் காணாமல் போனவர்களின் உறவுகள் சாட்சியமளித்துள்ளனர். இதனை இராணுவத் தரப்பினர் மறுக்கின்றமை முழுப்பூசினிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்ற செயலாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். அமைச்சர் வாசுதேவ தொடர்ந்து கூறுகையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் ஸ்தாபிக்கப்பட்டு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட …
-
- 4 replies
- 613 views
-
-
கல்வி முறையை திருத்தியமைக்க வேண்டும் தற்போதைய கல்வி முறையை திருத்தியமைக்க வேண்டும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போதைய கல்வி முறையில் உள்ள குறைபாடுகள் காரணமாக மாணவர்களுக்கு உரிய முறையில் கல்வியை வழங்க முடியாமல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=132385
-
- 0 replies
- 268 views
-
-
தியன் பியன் பூவில் ஹோசிமிங்கின் படைகளின் வலிமையையும் சீனத்து போரியல் பேறறிஞர் சான் சூவின் தத்துவங்களையும் களமுனை பின்னகர்வுகளின் போதான தயவூட்டும் காரணியாக, அல்லது எங்களை ஆசுவாசப்படுத்தும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திய எம்; எண்ணங்களிலெல்லாம் மண்ணைத் தூவிவிட்டு சிறிலங்கா அரசின் வீச்செல்லை அல்லது தாக்குதல் ஆக்ரோசம் மிகுந்திருக்கிற நேரமிது. யாதார்த்ததை உள்ளபடி கிரகிக்க முடியாதபடி, அல்லது எதையுமே சமநிலையோடு ஏற்றுக்கொள்கிற மனப்பாண்மையை வளர்;த்துக்கொள்ள இயலாத வகையில் புலம்பெயர்ந்த தமிழர்களை தமிழ்த் தேசியம் சார் அரசியல் ஆய்வாளர்கள் எனப்படுவோர் வைத்திருந்தார்கள் என்கிற உண்மை ஏற்றுக்கொண்டு ஒருமுறை தாயகத்தை திரும்பிப் பார்ப்போமா?. வெற்றிகளின் படிக்கட்டில் பயணிக்கின்ற போதிலும்…
-
- 6 replies
- 3.4k views
-
-
வடக்கு, கிழக்கை மையப்படுத்தியே தீர்வு தமிழ்பேசும் மக்களாக ஒருமித்து பயணிப்போம் அஷ்ரப் நினைவு நிகழ்வில் சம்பந்தன் அழைப்பு (ஆர்.ராம்) அனைவரும் சமமாக வாழக்கூடிய புதிய அரசியல் சாசனத்தினை உருவாக்கக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இறுதியாக ஏற்படும் அரசியல் தீர்வானது வடக்கு, கிழக்கை மையமாகக் கொண்டதாக அமைவதோடு இற்றைவரையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுங்குகளுக்கு அமைய இருத்தல் வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். அனுபவித்த இழப்புக்கள், அழிவுகளுக்கு ஈடுகொடுக்கக்கூடியதாக அத்தீர்வு அமைய வேண்டு…
-
- 0 replies
- 281 views
-
-
படுகொலை செய்யப்பட்ட மாணவனின் பிரேதத்தை வீதியில் வைத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் வாள்வெட்டு குழுக்களை இல்லாமல் செய்து பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குங்கள் என படுகொலை செய்யப்பட்ட மாணவனின் பிரேதத்தை வீதியில் வைத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு கொம்மாதுரை பகுதியில் நேற்று முன்தினம் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாள் வெட்டுச் சம்பவத்தில் 15 வயது மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மாணவனின் இறுதி ஊர்வலம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதன்போது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் செங்கலடி கொழும்பு மற்றும் பதுளை வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி கோட்…
-
- 0 replies
- 380 views
-
-
சென்னை : சிங்கள இன மக்களுக்கு இணையாக சுதந்திரமாகவும் சமமாகவும் இலங்கைத் தமிழர்கள் வாழ, நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கு உதவ, மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் இன்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனப் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து, பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்பை தவிர்த்து, இலங்கைத் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் சுதந்திரமாக சிங்கள இன மக்களுக்கு சமமாக வாழ நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும் என்பது தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. இதற்கு உதவ மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.…
-
- 11 replies
- 4.7k views
-
-
இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து பேசுவதற்காகவும், போர் நிறுத்தம் வேண்டும் என்றால் விடுதலைப்புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்கும் படி கேட்டுக்கொள்ளவும் இலங்கைக்கு கருணாநிதியும், ஜெயலலிதாவும் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார் ராஜபக்சே. அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயலலிதா ராஜபக்சேயின் அழைப்பு குறித்து தனது கருத்தை தெரிவித்தார். ’’எனக்கு அவர் விடுத்த அழைப்புக்கு நன்றி. நான் போவதால் எந்த நன்மையும் ஏற்படாது. விடுதலைப்புலிகள் நான் சொல்வதை கேட்க மாட்டார்கள். இலங்கையில் அமைதியும், போர் நிறுத்தமும் ஏற்பட வேண்டும் என்பதே இப்போது முக்கியமானதாகும். ஆகவே, கருணாநிதி இலங்கை போக வேண்டும். அவர் சொன்னால் விடுதலைப்புலிகள் கேட்பார்கள். …
-
- 20 replies
- 2.3k views
-