ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
கிளிநொச்சியை சூழும் அபாயம் : 815 பேருக்கு இதுவரை டெங்கு நோய்த்தொற்று கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட ஆராய்ச்சியியல் ஆய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். இவ்வாறு அதிகரித்துள்ள நுளம்புகள் டெங்குநோயாளிகளைக் கடிக்கநேரிட்டால் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிதீவிரமாக டெங்குநோய்த்தாக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வுப்பிரிவினர் எச்சரித்துள்ளனர். தை மாதத்திலிருந்து நேற்று வரையான 227 நாட்களில் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் மொத்தம் 815 பேர் டெங்குகாய்ச்சலால் பீடிக்கப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இவர்…
-
- 0 replies
- 157 views
-
-
அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளுக்கிடையிலான விரிசல் மேலும் அதிகரிக்கும் சாத்தியம்! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் தொடர்ந்தும் சிறுமைப்படுத்தினால் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் கூடி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தை விமர்சித்து வரும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அரசாங்கத்தில் இருந்து நீக்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பலம் வாய்ந்த தலைவர்கள் சிலரும் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி ம…
-
- 0 replies
- 208 views
-
-
பொது மக்களின் இடங்களில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் : சலோகா பெயானி ஆணைக்குழுவுக்கு அறிக்கை இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளின் விபரங்க ளின் வெளிப்படைத் தன்மை பேணப்படுவதுடன் பொது மக்களின் இடங்களில் இருந்து இராணுவம் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும் என்று ஐ.நா.வின் அகதிகளுக்கான விசேட அறிக்கையாளர் சலோகா பெயானி தெரிவித்துள்ளார். இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினைக்கு ஒரு காத்திரமான தீர்வைக் காண்பதற்கு வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட யுக்தி தேவை என்றும் அவர் கூறியுள்ளார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த அவர், அது குறித்த அறிக்கை ஒன்றை ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையிலேய…
-
- 0 replies
- 426 views
-
-
(ஆர்.ராம்) இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானியாவின் தென் ஆசிய மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் தரிக் அஹமட் பிரபுவிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/131723/dsd.jpg அதுதொடர்பில் தெரியவருவதாவது, “தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரித்தானிய கொண்டிருக்கின்ற கரிசனைகளுக்கும், அதற்காக வழங்கி வரும் ஒத்துழைப்புக்களும் முழுமையான நன்றிகள். தமிழ் மக்கள் தமது கருமங்களை சுதந்திரமாக ஆற்றக்கூடியவாறாக இரண்டாக இருந்த நாட்டை 1933 ஆம் ஆண்டு பிரித்தானியாவே ஒன்றாக மாற்றியமைத்தது. அதன் பின்னரே தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரஜைகள் ஆக்கப்பட்டார்கள். தற்போது வரையில் …
-
- 12 replies
- 735 views
- 1 follower
-
-
எதிர்வரும் அதிபர் தேர்தலில் தனக்கு 80 சதவீத வாக்குகள் கிடைக்குமென எதிரணிகளின் பொது வேட்பாளர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று நுவரெலியா நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறுகையில் அதிபர் தேர்லினை முன்னிட்டு நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பில் தனக்கு 90 வீதமானோர் வாக்களித்துள்ளதாக தெரிவித்தார். தேர்தலில் தான் வெற்றி பெற்ற பின்னர் தன்னால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். குறிப்பாக, அரச ஊழியர்களின் சம்பள உயர்வு அரச நி்வாகத்தில் அரசியல் தலையீடுகளை தடுத்தல், தோட்டத்தொழிலாளர்கள் உட்பட தனியார்துறை ஊழியர்களுக்கும் நியாயமான சம்பளத்த…
-
- 0 replies
- 358 views
-
-
இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நேச்சல் சந்து நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இருதரப்பு நலன்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் யஷ்வந்த்குமார் சின்ஹாவும் பங்கேற்றுள்ளார். எனினும், இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் இந்தப் பயணத்தின் நோக்கம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. முன்னதாக, இவர், முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு கூட்டத்தில் பங்கேற்கவுள்ளத…
-
- 0 replies
- 349 views
-
-
‘என்னை நீக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை’ முகத்திலடித்தாற்போல டெனீஸ் முதலமைச்சருக்கு நேற்றுக் கடிதம் ‘‘என்னை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவிக்க உங்களுக்கு (முத லமைச்சருக்கு) அதிகாரமில்லை. நானே இப்போதும் அமைச்சுப் பதவியில் தொடர்கின்றேன். அதில் தலையீடு செய் வதிலிருந்து விலகியிருங்கள்’’ இவ்வாறு வடக்கு மாகாண போக்குவ ரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு நேற்றுக் கடிதம் அனுப்பியுள்ளார். அமைச்சரவையில் வெற்றிடம் ஏற்பட வில்லை என்றும் தானே அமைச்சராகத் தொடர்கிறார் என்றும் வடக்கு மாகாண ஆளுநர் குரேக்கும், அமைச்சர் பா.டெனீஸ…
-
- 0 replies
- 218 views
-
-
Published by J Anojan on 2022-02-09 11:30:51 கொள்ளுப்பிட்டி மற்றும் தங்காலை பகுதிகளில் பதிவான இருவேறு சம்பவங்களில் ஜேர்மன் பெண்கள் இருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர். கொள்ளுப்பிட்டி பகுதியில் ஜேர்மன் பெண் ஒருவர் போதைப்பொருள் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்காக 28 வயதான இலங்கை வர்த்தகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஜேர்மன் பெண் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரான குறித்த வர்த்தகர், …
-
- 2 replies
- 391 views
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடத் தீர்மானம் ‐ டக்ளஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக சமூக சேவைகள் அமைச்சரும், ஈ.பி.டி.பி கட்சியின் தலைவருமான டக்களஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பி தலைவர் என்ற ரீதியிலேயே யாழ்ப்பாண மக்கள் தம்மை அறிந்து வைத்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சின்னத்தில் போட்டியிடுவது பொருத்தமாக அமையாது எனவும் அவர் தெரிவித்துள்ளர். ஆளும் கட்சியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதனால் தமது வாக்கு எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சியை விட்டு தாம் விலகப் போவதில்லை …
-
- 3 replies
- 1k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஒத்துழைத்து செயற்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உலக தமிழர் பேரவை என்ற புலம் பெயர்ந்த தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் காணப்படுகின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு வடமாகாண சபை சிறந்த தளமாக காணப்படுகிறது. இந்த மாகாணத்தில் இடம்பெற்ற தேர்தலின் போது தமிழ் மக்கள் தங்களுக்கான தீர்வு குறித்த தெளிவான பதிலை வழங்கியுள்ளனர். இந்த நிலையில் தமிழ் மக்களின் ஆதரவை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பை மேலும் பலப்படுத்துவதன் ஊடாக, அரசியல் தீர்வு நோக்கிய முன்னெடுப்பை மேற்கொள்ள முடியும் என்று அந்த அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. http://akkinikkunchu.com/new/index.php?option=com_conte…
-
- 0 replies
- 438 views
-
-
ஹம்பாந்தோட்டை துறைமுகம் அடுத்த மாதம் சீனாவிடம் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை ஒக்டோபர் முதலாம் திகதி சைனா மேர்சன்ட் நிறுவனத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சைனா மேர்சன்ட் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தம் சில வாரங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்டது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 80 சதவீதப் பங்குகள் சைனா மேர்சன்ட் நிறுவனத்துக்கும் 20 சதவீதப் பங்குகள் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கும் உரித்தாகும் வகையில் 99 வருட குத்தகைக்கு சைனா மேர்சன்ட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இலங்கை அரசுக்கு 1.2 பில்லியன் ரூபா …
-
- 0 replies
- 336 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 09.02.2010 அன்று ஒலிபரப்பாகிய யாழ்ப்பாணச் செய்தியாளரின் கருத்தாய்வு நன்றி- ATBC
-
- 0 replies
- 777 views
-
-
பலஸ்தீனத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெத்லஹேம் நகரிலுள்ள நெற்விட்றி தேவாலயத்திற்கு விஜயம் செய்து நள்ளிரவு ஆராதனைகளில் ஈடுபட்டார். இந்த நிகழ்வுகளில் பலஸ்தீன் ஜனாதிபதி கலாநிதி மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். http://tamil.dailymirror.lk/--main/95958-2014-01-07-09-29-13.html
-
- 1 reply
- 429 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி, EPDPபியும் பிரேரனை! February 26, 2022 இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபையின் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) உறுப்பினர் வைரமுத்து ஜெயரூபனால் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசசபையின் 48வது அமர்வு நேற்றைய தினம் காலை 9 மணிக்கு சபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது இதன்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பிடி.பி) பிரதேச சபை உறுப்பினர் வைரமுத்து ஜெயரூபனால் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரிய பிரேணையொன்று சபைக்கு கொண்டுவரப்பட்டது. குறித்த பிரேரணை சபை உறுப்பினர்களால் …
-
- 1 reply
- 217 views
-
-
வடக்கு, கிழக்கில் தனித்தே போட்டி – கூட்டணி கிடையாது எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தனித்துப் போட்டியிடவும், ஏனைய மாகாணங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது, இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏற்கனவே அடிமட்டத்தில் இருந்து பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏனைய முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்தோ, அல்லது தனியான கூட்டணி ஒன்றை அமைத்தோ, முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடாது. இணைந்து போட்டியிடுவ…
-
- 0 replies
- 353 views
-
-
ஓரணியில் ஒன்றுபட்டுள்ளோம் எனவே இது சிறந்த எதிர்காலத்துக்கான ஆரம்பப்புள்ளி – இரா.சாணக்கியன் தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட வேண்டிய காலம் வந்துள்ளது. அந்தவகையில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக தற்போது ஓரணியில் திரண்டுள்ளோம். மக்களும் ஒன்றுபட்டுள்ளனர். எனவே, சிறந்த எதிர்காலத்துக்கான ஆரம்பப்புள்ளியாகக்கூட இது அமையலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார் . நுவரெலியா நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை ) கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் எமது விடுதலைப்போராட…
-
- 2 replies
- 306 views
-
-
இலங்கை அரசு அடிப்படை மனித உரிமைகளை மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது:- இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பேர்னாட் சவேஜ். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அடிப்படை மனித உரிமைகளை புறந்தள்ளுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பேர்னாட் சவேஜ் கொழும்பு வார ஏடு ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் (21.02.2010) தெரிவித்துள்ளார். அதன் தமிழ் வடிவம் வருமாறு: கேள்வி: ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. எனவே தற்போதைய நிலையில் இருந்து இருதரப்பும் மேற்கொண்டு செல்ல வேண்டிய திசை என்ன? பதில்: இதற்கான திட்டம் 18 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. அது பல விடயங்களை கொ…
-
- 0 replies
- 589 views
-
-
பல தமிழ்க் கட்சிகளை உள்ளடக்கிய புதிய தமிழ் அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கான உடன்பாட்டுக்கான வரைவைத் தயாரிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஈபிடிபி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஈபிடிபி பேச்சாளர் நெல்சன் எதிரிசிங்க, “புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்ற தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் விரைவில், உடன்பாடு கையெழுத்திடப்படும். இந்தக் கூட்டணியின் பிரதானமான நோக்கம், நாடாளுமன்றத் தெரிவுக் குழு மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல்தீர்வு காண்பதேயாகும். நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ள நிலையில், ஈபிடிபி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியை உள்ளடக்கிய …
-
- 2 replies
- 454 views
-
-
இலங்கை அரசாங்கம் தனது நியாயபூர்வ தன்மையை இழந்துவிட்டது – ஆர்ப்பாட்டங்கள் மூலம் அரசாங்கத்தை பதவி விலகச்செய்யப்போகின்றோம்- வெளிநாட்டு ஊடகத்திற்கு ஹர்சா டி சில்வா பேட்டி நாட்டின் கடன்நெருக்கடி மற்றும்அதனுடன் தொடர்புபட்ட ஏனைய பிரச்சினைகளை கையாண்ட விதம் காரணமாக அரசாங்கம்தனது நியாயபூர்வ தன்மையைஇழந்துவிட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா சிஎன்பிசிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுப்பதற்காக தனது கட்சி இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறப்போகின்றன நாங்கள் அரசாங்கத்தை பதவி விலகச்செய்யப்போகின்றோம் – இந்த அரசாங்கம் தனது நியாயப…
-
- 0 replies
- 318 views
-
-
கொன்று குவிப்பைக் கண்டு கதறியோருக்கு ‘ஆறுதலையாவது வழங்க முடியும்’ “இளைஞர், யுவதிகள், வயதுவந்தவர்கள், குழந்தைகள் என்று, எதுவித வேறுபாடும் இன்றி பல்லாயிரக் கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட இந்த மண்ணில் நின்று, அந்த நிகழ்வுகளை நேரடியாகக் கண்டும் கலங்கியும் கதறியும் அனுபவித்த மக்களுக்குச் சற்று ஆறுதலையாவது வழங்க முடியும் என்ற எண்ணத்தில் இந்த அகமானது அமைக்கப்பட்டமை வரவேற்புக்குரியது” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு, வட்டுவாகலில் நிர்மாணிக்கப்பட்ட, பிரம்ம குமாரிகள் இராஜ யோகா நிலையம் திறப்பு விழாவில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில், சிறப்பு…
-
- 1 reply
- 292 views
-
-
ஜி.எல்.பீரிஸின் அமைச்சு பதவியில் மாற்றம் – வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார் ஜனாதிபதி வெளிநாட்டு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் கையொப்பமிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு வெளிநாட்டு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், அவர் மீண்டும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். https://athavannews.com/2022/1272915
-
- 4 replies
- 395 views
-
-
சிவாஜிலிங்கத்தின் கோரிக்கை நாட்டுக்கும் இனத்திற்கும் எதிரானது : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வட மாகாணசபையின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் கோரிக்கை ஏற்புடையதல்ல என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரச படையினர் மேற்கொண்ட யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சிவாஜிலிங்கம் கோரியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.எனினும், சிவாஜிலிங்கத்தின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெ…
-
- 1 reply
- 291 views
-
-
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டம் April 4, 2022 யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை நீக்குமாறு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல்கலை கழகம் முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை காலை குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர். https://globaltamilnews.net/2022/175010
-
- 0 replies
- 241 views
-
-
சுவிஸ் ஈழத்தமிழரவை - சுவிஸ் பூராகவும் 40 வரையிலான வேட்பாளர்கள் தேர்தல் களத்தில்!! அன்பார்ந்த தமிழீழ மக்களே! இன்னும் சில தினங்களில் சுவிஸ்ஈழத்தமிழரவைக்கான தேர்தல் நடைபெறுகின்றது. பெரும்பாண்மையான இளையதலைமுறையினர் மற்றும் சுவிஸ்பிரயைகள் இத்தேர்தலில் வேட்பாளர்களாக தம்மை பதிவு செய்திருப்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். வரும் 28.03.2010 வாக்குச்சாவடியில் எமது எதிர்காலத்தை தீர்மானிக்க சுவிஸ்வாழ் தமிழரின் தனித்துவத்தை நிலைநாட்ட சகல மக்களும் தயாராகும் வண்ணம் அன்புடன் வேண்டுகின்றோம். எமது தாயகதேசத்தின் வளர்ச்சிக்கும் விடுதலைக்கும் பெரும் பொருள் ஈட்டி கொடுத்த சுவிஸ்தமிழராகிய நாம் ஐனநாயக விழுமியங்களை காத்து தமது அரசியல் பண்பை வாக்குச்சாவடியில் நிரூபிக்க வேண்டு…
-
- 0 replies
- 531 views
-
-
இலங்கை தொடர்பில் ஜெனீவாவில் சர்வதேச விசாரணையைக் கோருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கை அரசு உள்ளக விசாரணையை நடத்தாத பட்சத்தில் சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் றெங்கின் தெரிவித்தார். இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தப் பிரச்சினை தொடர்பில் முதலில் தெளிவாகவும் நட்பு ரீதியாகவும் அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை முன்னெடுக்க வேண்டும். வட அயர்லாந்தின் அனுபவங்களை எடுத்துக்கொண்டால் ருவாண்டா மற்றும் சியேராலியோன் போன்ற நாடுகளில் சுயாதீன விசாரணைகள் இடம்பெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நீண்டகால நல்லிணக்கம் மற்றும் உறுதியான ஸ்த…
-
- 0 replies
- 354 views
-