ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142953 topics in this forum
-
கொரோனா வைரஸ்: யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலும் கடுமையான சோதனை! by : Jeyachandran Vithushan உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு வருபவர்களும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், அறிகுறிகளைக் காண்பிப்பது உட்பட சந்தேகத்திற்கிடமான அனைத்து நிகழ்வுகளையும் கண்டறிய விமான நிலையத்தில் வெப்ப ஸ்கானர்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறினார். நாட்டில் இதுவரை ஒருவர் மட்டுமே கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டு…
-
- 0 replies
- 688 views
-
-
கொரோனா வைரஸ் உணவு பொருட்கள் ஊடாக பரவாது: சுகாதார அமைச்சு கொரோனா வைரஸ் எந்தவொரு உணவு பொருட்கள் ஊடாகவும் பரவாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே இந்த விடயம் குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளியின் சளி உடலுக்குள் சென்று, தும்மல் அல்லது வேறு வழிகளில் நோயாளியின் தொற்று, வேறு ஒருவரின் உடலுக்குள் செல்வதன் காரணமாகவே கொரோனா வைரஸ் தொற்று பரவுவதாக சுகாதார அமைச்சு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை தற்போது தியத்தலாவை இராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள சீனாவின் வுஹான் நகரில் இருந்து அழைத்துவரப்பட்டுள்ள மாணவர்களில் எவருக்கும் நோய் தொற்று ஏற்படவில்லை என மேலதிக பதில் சுகாதார சேவை ப…
-
- 0 replies
- 344 views
-
-
இலங்கையின் சுதந்திர தினத்தன்று காலி முகத்திடலில் இடம்பெறும் நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது என்பதன் ஊடாக தமிழ் மக்கள் இதுவரை கோரி வந்த தனி நாட்டுக் கோரிக்கையை அங்கிகரிப்பது போன்றும் இக்கோரிக்கையை வலுப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுல்லதாவது, இலங்கை சோசலிச குடியரசின் தேசிய இனங்களில் ஒன்றான தமிழர்களின் உணர்வை மலினப்படுத்தும் வகையில் இலங்கையின் சுதந்திர தினத்தன்று இடம்பெறும் நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது என அரச தரப்பின் முக்கிய அமைச்சர்கள் சூழுரைத்து வரும் நிலையில் இம்மு…
-
- 4 replies
- 485 views
- 1 follower
-
-
திருக்கேதீஸ்வரத்தை புனித பூமியாக மாற்றுவதற்கு தீர்மானம்..!! .sl_box{ margin-bottom: 5px !important; } .sl_box3{ padding-top: 12px !important; } 35 Views திருக்கேதீஸ்வரத்தை புனித பூமியாக மாற்றுவதற்காக எந்தவித எதிர்ப்பும் இன்றி சர்வமத மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பின் செயலாளர் சி.மோகன் தெரிவித்துள்ளார். பௌத்த இந்து ஒற்றுமை சர்வமத மாநாடு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. குறித்த மாநாடு தொடர்பான தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து …
-
- 15 replies
- 1.9k views
-
-
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் தனிநாடு கோரி 30 வருடமாக ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழர்கள், 2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போருடன் அந்தக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டார்கள். அவர்கள் தற்போது பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள்தான் தங்கள் உரிமைகளைக் கேட்டு ஜனநாயக வழியில் போராடி வருகின்றார்கள். இவ்வாறான நிலையில் அவர்களைப் புறக்கணிக்குப் வகையில் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் மீண்டும் அவர்களைத் தனிநாடு கோரும் நிலைக்கே தள்ளிவிடும் என JVPயின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் இம்முறை சிங்கள மொழியில…
-
- 1 reply
- 780 views
-
-
மட்டக்களப்பின் அபிவிருத்திக்கு சகல வழிகளிலும் உதவத் தயார்- பின்லாந்து அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கு பின்லாந்து அரசாங்கம் சகல வழிகளிலும் உதவுவதற்குத் தயாராக உள்ளதாக இலங்கைக்கான பின்லாந்து தூதுவர் ஹரி மெகரீனன் தெரிவித்துள்ளார். கடற்றொழில் நீரியல் வழங்கல் அமைச்சினால் இலங்கைக்கான பின்லாந்து தூதுவராலயத்தற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தினை அபிவிருத்திசெய்யும் நோக்கில் இலங்கைக்கான பின்லாந்து தூதுவருக்கும் மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜாவுக்கும் இடையில் மாவட்டச் செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, இலங்கைக்கான விஜயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில்தான் பல…
-
- 2 replies
- 356 views
-
-
கூட்டுத் தலைமைத்துவம் முக்கியமல்ல - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யதார்த்தத்தை உணரத் தொடங்கியிருக்கின்ற தமிழ் மக்கள் உண்மையான நேர்மையான கொள்கையில் விட்டுக் கொடுப்பில்லாத எங்களது தரப்பிற்கு முழுமையான ஆதரவை வழங்குவார்கள் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டுத் தலைமைத்துவம் முக்கியமல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். கூட்டுத் தலைமையின் முக்கியத்துவம் குறித்து கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்ததாவது, என்னைப் பொறுத்தவரையில் கூட்டுத் தலைமத்துவம் முக்கியமான விடயமல்ல. ஏனெனில் இங்கு கூட்டுத் தலைமத்துவம் அல்ல முக்கியம். கொள்கை தான் முக்கியம். நேர்மைத் தன்மை தான் முக்கியம்…
-
- 2 replies
- 592 views
-
-
60 நாட்களில் 14 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் ஆரம்பம் 60 நாட்களில் 14 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் குருநாகலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ‘கிராமத்துக்கு வீடு – நாளைய நாடு’ என்ற இந்த வீடமைப்பு திட்டத்தின் முதலாவது வீட்டை அமைப்பதற்காக குருநாகல் – கிரிபாவ – வராவௌ கிராமத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது பிரதமரின் வழிகாட்டுதலுக்கு அமைய செயற்படுத்தப்படும் இந்த வீடமைப்புத் திட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா ஒரு வீடு என்ற அடிப்படையில் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்கமைய, 14 ஆயிரத்து 22 கிராம சேவகர் பிரிவில் தலா ஒரு வீடு என்ற அடிப்படையி…
-
- 2 replies
- 698 views
-
-
இலங்கை சிங்கள - பௌத்த நாடு என்பதால் தேசிய கீதம் சிங்கள மொழியில் பாடப்பட்டே ஆக வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அதைத் தமிழ் மொழியில் பாடினால் இந்த நாட்டில் இரண்டு பிரிவினர் இருக்கின்றார்கள் என்று அர்த்தப்படும். அந்த அர்த்தம் தனி நாடு உருவாகுவதற்கு - பிரபாகரன் விரும்பிய தமிழீழம் மலர்வதற்கு வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார். 'தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் பாடினால் அது மீண்டும் தமிழர்களைத் தனிநாடு கோருகின்ற நிலைக்கு தள்ளிவிடும்' என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். மேலு…
-
- 5 replies
- 868 views
-
-
நேற்று, கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை அமர்வில் ஆதன வரி தொடர்பான விவாதம் ஒன்றின் போது... தமிழரசு கட்சி உறுப்பினர் ஒருவர், முன்னாள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர் என்றும் அவர் புனர்வாழ்வு பெறவில்லை என்றும் தான் அவரை காட்டி கொடுப்பேன் என்றும் கூச்சலிடுகிறார் EPDP சந்திரகுமார் கும்பலை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் மோகன்ராஜ் கட்சி அரசியலுக்கு அப்பால்... சொந்த அரசியல் இலாபங்களுக்கு சக தமிழன் ஒருவனை காட்டி கொடுக்க நினைக்கும் ஈன தனங்களை எப்படி சொல்லுவது என்றே தெரியவில்லை. இலங்கை அரச படைகளோடு சேர்ந்து இந்த EPDP கும்பல் பலி எடுத்த ஆயிரக்கணக்கான அப்பாவிகளுக்க்கு என்ன நடந்து என்றே தெரியவில்லை ..ஆனால் இந்த கொடூர கோமாளிகளின் இரத்த வெறி இன்னும் அடங்கவில்லை. இ…
-
- 6 replies
- 793 views
-
-
யாழ்ப்பாண நாய்களை சீனாவுக்கு அனுப்பலாமா? எந்த நாய்களை..? அபிவிருத்தி குழு கூட்டத்தில் சிரிப்பொலி.. யாழ்.மாவட்டத்தில் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது நாய்த்தொல்லையை கட்டுப்படுத்துமாறு விவாதிக்கப்பட்ட நிலையில் சீனாவுக்கு கப்பல் மூலம் அனுப்பலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டதையடுத்து மண்டபத்தில் சிரிப்பொலியுடன் சலசலப்பும் ஏற்பட்டது. யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது. இதன்போது துறைசார்ந்த மீளாய்வு நடைபெற்றவேளை யாழ்.பல்கலைக்கழக பிரச்சினைகள் குறித்து பேசப்பட்ட நிலையில் பல்கலைக்கழகத்தில் நாய்த் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமென கோரப்பட்டத…
-
- 4 replies
- 871 views
- 1 follower
-
-
மாவட்டங்கள் தோறும் முகவர்களைக் களமிறக்கி சிறுபான்மை சமூகத்தை மலினப்படுத்த முயற்சி… February 2, 2020 மாவட்டங்கள் தோறும் அரசியல் வியாபார முகவர்களை களமிறக்கி, சமூக வாக்குகளை சிதைத்து சின்னா பின்னமாக்குவதன் மூலம், தமது குறிக்கோளை அடையும் முயற்சிகள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் றிஸாட் பதியுதீன் தெரிவித்தார். முசலியில் நேற்று (01.02.20) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது உரையாற்றுகையிலேயே முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிஸாட் பதியுதீன் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,, ´இவ்வாறு களமிறக்கப்படும் வேட்பாளர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என துல்லியமாக தெரிந்த போதும், இந்தக் களப்பரீட்சையில் அவர்…
-
- 0 replies
- 227 views
-
-
சீனாவிடமிருந்து பறித்து இந்தியாவிடம் கொடுக்கப்பட்ட யாழ்.மாவட்ட வீதி அபிவிருத்தி திட்டங்கள் கிடப்பில்..! யாழ்.குடாநாட்டிலுள்ள சில முக்கிய வீதிகளின் புனரமைப்பிற்கான ஒப்பந்தம் சீனாவிடமிருந்து இந்தியா வுக்கு மாற்றப்பட்டதால் புனரமைப்பு பயணிகள் கிட ப்பில் போடப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணம்-மானிப்பாய், காரைநகர்- வழுக்கையாறு, புங்குடுதீவு- குறிகாட்டுவான், யாழ்ப்பாணம்- பொன்னாலை- பருத்தித்துறை ஆகிய பெரு வீதிகளின் மறுசீரமைப்பு பணிகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட பின்னர் அவை கைவிடப்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வீதிகளின் மறுசீரமைப்பு பணிக்கான ஒப்பந்தம் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பின்னர் இந்திய அரசு கரிசனை செலுத்தியது. அதன் பின்னர் இந…
-
- 5 replies
- 734 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளின் கொடியை வைத்திருந்தக் குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் ஒருவர் கைது விடுதலைப் புலிகளின் கொடியை வைத்திருந்தக் குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி விவேகானந்தா நகரைச் சேர்ந்த குறித்த நபர் சற்று முன்னர் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட குறித்த நபர் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. http://athavannews.com/விடுதலைப்-புலிகளின்-கொடி/
-
- 0 replies
- 187 views
-
-
சீனாவிலிருந்து மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வந்த மூன்றாவது நாடாக இலங்கை பதிவு சீனாவின் வுஹான் நகரில் இருந்து மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வந்த மூன்றாவது நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் இருந்து நாட்டுக்கு அழைத்த வரப்பட்ட மாணவர்கள் தியத்தலாவ இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள விசேட மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விடயம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையிலான உயர்மட்ட இராஜதந்திர உறவு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அரசாங்கம் மீது சீனா கொண்டுள்ள நம்பிக்கை என்பவற்றினால் சீனாவில் இருந்து மாணவர்களை விரைவில் அழைத்…
-
- 0 replies
- 207 views
-
-
யாழ்ப்பாணம் பனை அபிவிருத்தி அதிகார சபைக்கு தலைவராக ஒரு சிங்களவர் நியமனம். யாழ்ப்பாணம் பனை அபிவிருத்தி அதிகாரசபை தலைவராக வியாங்கொடையை சேர்ந்த சிங்களவர் ஒருவர் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிரிசாந் - பத்திராஜ என்னும் பெரும்பான்மை சிங்கள இனத்தவரே கடந்த மாதம் பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பனை அபிவிருத்திச் சபைக்கு ஆட்சி மாற்றங்களின் போது பலர் மாற்றப்பட்டாலும் தொடர்ச்சியாக தமிழர்கள் நியமிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சபைக்கான தலைவர் நியமிக்கப்பட்டுள்ளபோதிலும் சபை அங்கத்தவர்கள் எவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதேநேரம் வடக்கில் உள்ள சபைகள் நிறுவனங்கள் வரிசையில் காங்கேசன்துறை ச…
-
- 3 replies
- 1.2k views
-
-
Saturday, February 1, 2020 - 6:00am கொரோனா வைரஸை பயன்படுத்தி சீன எதிர்ப்பு அலையை எவரும் உருவாக்க வேண்டாமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அம்பாந்தோட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் காரணமாக நாட்டிலுள்ள ஏனைய வைரஸ்கள் தொடர்பில் தற்போது எவரும் பேசுவதில்லை. ரஞ்சன் ராமநாயக்கவின் செயற்பாடுகளை மறந்துள்ளனர். தினம் தினம் நாட்டில் பலர் டெங்கு நோய்க்கு உள்ளாகுகின்றனர். கொரோனா வைரஸ் போன்று டெங்குவை ஒழிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலர் சீன நாட்டவரை கண்டால் அருகி…
-
- 1 reply
- 401 views
-
-
இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக, கோபால் பாக்லே நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சு இதனை அறிவித்துள்ளது. இதனப்படையில் அவர் விரைவில் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிய வருகின்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பணியாற்றிய தரந்;ஜித் சிங் சந்து, அமெரிக்காவுக்கான இந்திய தூதுவராக பதவி ஏற்றுள்ள நிலையில், இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.hirunews.lk/tamil/233532/இந்திய-வெளிவிவகார-அமைச்சு-வெளியிட்டுள்ள-செய்தி Gopal Baglay appointed Indian envoy to SL Seasoned diplomat Gopal Baglay was on Saturday appointed India's High Commissioner to Sri Lan…
-
- 0 replies
- 397 views
-
-
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை முடக்க சதி செய்கிறதா கோட்டா அரசு..? வாக்குறுதிகளும் பொய்யாக்கப்பட்டது..! யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக பயணிக்கும் பயணிகளுக்கு விதிக்கப்படும் இரு விமான நிலையங்கள் பயன்பாட்டு வரி ஒரு மாதத்திற்கு நீக்கு உத்தரவை சிவில் விமான நிலைய அமைச்சர் பிரசன்ன ரணதுங்கா தெரிவித்தபோதும் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது. கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக பயணிப்போருக்கு ஒரு விமான நிலையத்திற்கு ஒரு வரி விதிக்கும் நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைந்த்தின் ஊடாக பயணிக்கும் பயணிகளிற்கு மட்டும் இரு விமான நிலையங்களிற்கான வரி அறவிடுவது . ஒரு மாத காலத்துற்குள் நீக்கப்படும் என சிவில்விமான நிலைய அ…
-
- 1 reply
- 499 views
-
-
மக்கள் வங்கி ‘நிதஹசே உபத’ எனும் செயற்திட்டத்தின் கீழ் இன்று பெப்ரவரி 01ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பகுதிக்குள் இந்நாட்டில் பிறந்திடும் ஒவ்வொரு குழந்தைக்கும் 2,000ரூபா பெறுமதியான இசுறு உதான பரிசுச் சான்றிதழ் ஒன்றை வழங்க தீர்மானித்துள்ளது. சுதந்திர தினத்தையொட்டி மக்கள் வங்கியினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘நிதஹசே உபத’ (பிறப்பின் சுதந்திரம்) எனும் பிரதான நிகழ்வு எதிர்வரும் 04ஆம் திகதி காலை 9.30மணிக்கு பொரளை காசல் வீதியிலமைந்துள்ள பெண்கள் வைத்தியசாலையில் மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் ரசித குனவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது. தேசத்தின் பெருமையை உருவாக்கிடும் நோக்கத்தை முக்கியமாகக் கொண்டு பிள்ளை…
-
- 0 replies
- 306 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption கோப்புப்படம் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இலங்கையர்களை பாதுகாக்கும் நோக்குடன் இலங்கை ராணுவத்தினால் 48 மணி நேரத்தில் மருத்துவமனை குறிப்பாக சீனாவின் வுஹான் மாகாணத்தில் வாழும் இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வந்து சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகளை வழங்கும் நோக்குடனேயே இந்த மருத்துவமனை நிர்மாணிக்கப்பட்டு வருவதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிடிகேடியர் சந்தன விக்ரமசிங்க பிபிசி தமிழிடம் தெரிவித்தார். …
-
- 3 replies
- 1.1k views
-
-
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது உறுதி என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். குறித்த கட்சியின் கலாசார பிரிவின் ஏற்பாட்டில் பொங்கல் விழா மட்டக்களப்பு களுதாவளை ஈஸ்வரன் ஆலய முன்றலில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இதையடுத்து, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்துவது குறித்து நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அனைத்துக் கட்சிக் கூட்டங்களின் போது கலந்துரையாடியதாக தெரிவித்தமை தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பில் பல விடயங்கள் உரையாடப்பட்டன. அதிலே கல்முனை விடயம…
-
- 5 replies
- 722 views
-
-
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் தன்னிச்சையான செயற்பாடுகளை கண்டித்து நெடுந்தீவு மக்கள் இன்று (31) எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவி ஏதும் வழங்கப்படாத நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஒருங்கிணைப்பு குழு தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரை விட தனக்கு அதிக அதிகாரம் உள்ளதாக தெரிவித்து பிரதேச செயலக அதிகாரிகளுக்கு கடும் தொனியில் உத்தரவிட்டு மக்கள் விரும்பி தெரிவு செய்த திட்டங்களை எல்லாம் தமது சுயநலத்துக்காக மாற்றி அமைத்து திட்டமிட்ட வகையில் தங்களை பழி வாங்குகின்றார் என தெரிவித்தே இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்ப…
-
- 5 replies
- 916 views
-
-
வவுனியா மன்னார் வீதி குருமன்காடு பகுதியில் இராணுவத்தினரால் சோதனை சாவடி ஒன்று இன்று காலை அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த வீதியில் பயணிக்கும் அநேகமான பயணிகள் மற்றும் வாகனங்கள் பதிவு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் குறித்த வீதி வழியாகப் பயணிக்கும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு உள்ளாகியதுடன் விசனமும் தெரிவித்தனர். குறித்த விடயம் ;தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை ஒளிப்பதிவு எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என இராணுவத்தினர் இதன்போது தெரிவித்திருந்ததுடன், வேறு விடயங்களை கூறவும் மறுத்து விட்டனர். நாட்டில் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி கடந்த மாதம் கூறியத…
-
- 2 replies
- 322 views
-
-
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தில் ஆசிரியர் சேவைக்காக பயிற்றுவிக்கப்பட்ட 1300 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமை காணப்படுவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு குறித்த ஆசிரிய தொழிலுக்கான பயிற்சியில் கடந்த வருடம் செப்டெம்பர் 10 ஆம் திகதி பங்கேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு அவர்களுக்கான கடிதங்கள் அனுப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், சட்டத்துக்கமைய பிரதமரால் வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தை மையப்படுத்தி மேற்படி தரப்பினரை சேவையில் இணைத்துகொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. http://ww…
-
- 1 reply
- 384 views
-