ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142965 topics in this forum
-
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரஸ்வாமி தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே அவர் ராஜினாமா கடிதத்தை கொடுத்திருப்பதாகவும் டிசம்பர் முதலாம் திகதி முதல் அவர் பதவியில் இருந்து விலகிவிடுவாரெனவும் மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். https://www.madawalaenews.com/2019/11/blog-post_736.html
-
- 0 replies
- 441 views
-
-
அரியாலை வீட்டில் ஆயுதக் கிடங்காம் – தோண்டும் பணிகள் ஆரம்பம்… November 24, 2019 அரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட வீட்டின் வளாகத்தில் ஆயுதக் கிடங்கு உள்ளமை தொடர்பில் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அனுமதி வழங்கப்பட்டமையை அடுத்து அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரியாலை தபால் கட்டைச் சந்திக்கு அண்மையாக உள்ள வீட்டில் இராணுவ முகாம் அமைந்திருந்தது. குறித்த முகாம் வடமாகாண சபைத் தேர்தலை அடுத்து அகற்றப்பட்டது. இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்று குறிப்பிட்டு தெய்வீ…
-
- 3 replies
- 918 views
-
-
பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ சற்று நேரத்திற்கு முன்னர் நிதியமைச்சருக்கான தனது கடமைகளை நிதியமைச்சில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி, பொருளாதார அலுவல்கள், கொள்கை அபிவிருத்தி, புத்த சாசனம், கலாசாரம், நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு வசதிகள் அமைச்சராக கடந்த 22 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/69666
-
- 3 replies
- 398 views
-
-
பல்வேறு குற்றச்சாட்டுக்களில் கைதாகி சிறை வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா இராணுவம், புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பை வழங்குமாறு தாய்நாட்டிற்கான இராணுவத்தினர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. கருணா அம்மான், குமரன் பத்மநாதன் உள்ளிட்டவர்கள் இன்று வெளியே சுதந்திரமாக இருக்கின்ற நிலையில், ஏன் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு வெளியே அனுமதிக்க முடியாது என்று அந்த அமைப்பின் இணைப்பாளரான மேஜர் அஜித் பிரசன்ன கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இன்றைய தினம் தாய்நாட்டிற்கான இராணுவத்தினர் என்கிற அமைப்பு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியிருந்தது. இதில் க…
-
- 7 replies
- 973 views
- 1 follower
-
-
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிப்பதற்கான தகுதியை சஜித் அடையவில்லை – ராஜித எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிப்பதற்கான தகுதியை முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச இன்னும் அடையவில்லை என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கட்சிக்குள் நிலவிய முரண்பாடு தோல்விக்கு காரணமாக அமைந்ததாக குறிப்பிட்டார். ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நிறுவனங்கள் மேலும் அதிகமான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியதாகவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிக சிரத்தையுடனும…
-
- 1 reply
- 361 views
-
-
குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் அதிரடியாக இடமாற்றம் நீண்டகாலமாக சி.ஐ.டி.யின் குற்றப் புலனாய்வாளராக கடமையாற்றி வரும் ஷானி அபேசேகர, சி.ஐ.டி. பொறுப்பதிகாரியாக, உதவி பொலிஸ் அத்தியட்சராக, பொலிஸ் அத்தியட்சராக, பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றியிருந்த நிலையில் தற்போதைய சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர அந்த பதவியில் இருந்து நீக்கி, தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக தரமுர்த்தப்பட்ட பின்னர் கடந்த 2017 ஆம் அண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி சி.ஐ.டி.யின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இலங்கையின் மிக அனுபவ…
-
- 4 replies
- 595 views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவசர விஜயமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்று நிறைவடைந்துள்ள நிலையில் புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்று இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்திய வெளிவிகார அமைச்சரின் வருகை பெரும் முக்கியத்துவமாக நோக்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மாலை கொழும்பு வந்துள்ளார். இந்திய பிரதமரின் விசேட பணிப்பின் பேரிலேயே இலங்கை வந்துள்ள அவர், இன்றிரவு ஜனாதிபதி கோத்தாபயவை சந்திக்கவுள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங…
-
- 61 replies
- 5.4k views
-
-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் பயணித்த வாகனத் தொடரணி மீது இன்று ஞாயிற்றுக்கிழமை புத்தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மதுரங்குளி கணமூலை பகுதியில் வைத்து மாலை 5.30 மணியளவில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் தொகுதியில் மாத்திரம் ஐ.தே.மு அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், குறித்த தேர்தலில் ஐ.தே.மு வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மதுரங்குளி கணமூலை பகுதிக்கு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, அ.இ.ம.கா புத்தளம் …
-
- 7 replies
- 4.6k views
- 1 follower
-
-
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஆசி வேண்டி பிரார்த்தனை. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நாட்டுக்கும் நல்லாசி வேண்டி காத்தான்குடியில் துஆப் பிரார்த்தனையொன்று இடம்பெற்றது. காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் புதிய ஜனாதிபதிக்கும் புதிய பிரதமருக்கும் நாட்டுக்கும் நல்லாசி வேண்டி காத்தான்குடியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றது. காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜூம் ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற வைபவத்தில் பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்.எஸ்.எம்.சியாட் உள்ளிட்ட நகர சபையின் மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர். துஆப் பிரார்த்தனையினை காத்தான்குடி முகைதீன் மெத…
-
- 7 replies
- 901 views
- 1 follower
-
-
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்தியா பிரஸ்தாபிக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு. இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமைகள் அடிப்படையிலான தீர்வு ஒன்றை இந்தியா ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. இதனை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு செய்யும் என்று தமிழ் மக்கள் முழுமையாக நம்புகின்றார்கள். என தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கேள்வி:- இந்திய வெளிநாட்டமைச்சர் இலங்கைக்கு பயணம் செய்து புதிய ஜனாதிபதி…
-
- 3 replies
- 778 views
-
-
"மஹிந்த என்னுடைய கையை பிடித்துகொண்டு டி.ஆர்.பாலுவிடம், ’இவர் பிரபாகரனுக்கு நெருக்கமானவர். யுத்தம் நடந்தபோது இவர் மட்டும் வன்னியில் இருந்திருந்தால் அண்ணனோடு சேர்ந்து மேல் உலகம் போயிருப்பார் என்று நக்கல் அடித்தார்.’” - திருமாவளவன்
-
- 3 replies
- 392 views
-
-
புலிகளுக்கு எதிரான போரில் பங்காற்றிய எகொடவெல ஜனாதிபதி செயலக தலைமை அதிகாரியாக நியமனம்? ஜனாதிபதி செயலக தலைமை அதிகாரியாக, இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியான மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெல நியமிக்கப்பட்டுள்ளாரென செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 1971ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்துகொண்ட மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெல விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தீவிர பங்காற்றியவர். ஆனையிறவுப் பெருந்தளம், 2000ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளிடம் வீழ்ச்சி கண்டபோது அதன் கட்டளை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெலவே பணியாற்றியிருந்தார். இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், 2007ஆம் ஆண்டில் இருந்து 2015 வரை அவர் ரக்ன லங்கா பாதுகாப்பு சேவை நிறைவேற்றுப் பணிப்பாளராக இருந்தார்.…
-
- 1 reply
- 416 views
-
-
சாதாரண தரத்தில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி பத்திரம் கிடைக்க பெற்றுள்ள விண்ணப்பதாரிகளுக்கு தாம் கோரிய பாடம் மற்றும் பாட எண்ணில் மாற்றங்கள் இருப்பின் அது குறித்து பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்கள் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் நேரடியாகவும் பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்புகொள்வதன் மூலம் அதனை திருத்திக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இந்த பரீட்சைகள் நான்காயிரத்த…
-
- 0 replies
- 263 views
-
-
-
- 0 replies
- 264 views
-
-
’புதிய தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் உருவாக வேண்டும்’ Editorial / 2019 நவம்பர் 24 , பி.ப. 05:11 - 0 - 8 -செல்வநாயகம் ரவிசாந் தமிழ் மக்கள் தங்களுடைய அரசியலில் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டுமாயின், தமிழ் மக்கள் மத்தியில் புவிசார், பூகோள அரசியல் தொடர்பான விளக்கமுடைய புதிய தலைவர்கள் உருவாக வேண்டியது தற்போதைய காலத்தின் தேவையென, பிரபல அரசியல், சமூக ஆய்வாளர் எம். நிலாந்தன் வலியுறுத்தினார். “தமிழ் மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்க அரசியல் தலையீடு செய்வோம்” எனும் தொனிப்பொருளில், அரசியல் தீர்வை வலியுறுத்தும் மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்துள்ள கலந்தரைய…
-
- 4 replies
- 662 views
-
-
பல்வேறு விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த த சில்வா இன்று (24) தனது குடும்பத்தாருடன் நாட்டை விட்டு வௌியேறி சென்றுள்ளார். அவர் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுவிட்சர்லாந்து நோக்கி பயணமாகியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. இவர் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பட்ட அரசியர்வாதிகளுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த பிரதான பொலிஸ் பரிசோதகர் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் இன்று பிற்பகல் 12.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பயணித்த WK 0065 என்ற விமானத்தின் ஊடாக …
-
- 5 replies
- 1.1k views
-
-
யாழ் – கதிர்காம் வரை சமாதானத்தை வலியுறுத்தி இராணுவத்தினர் நடைபயணம் நாட்டில் இனங்களுக்கிடையிலான சமாதானத்தை வலியுறுத்திய யாழ்ப்பாணம் முதல் கதிர்காமம் வரையில் படை வீரர்களால் ஆரம்பிக்கப்பட்ட நடை பயணத்தின் முதல் நாள் பரந்தனுடன் நிறைவடைந்தது. யாழ்ப்பாணம் நயினாதீவில் அமைந்துள்ள நாக விகாரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்ட சமாதானத்தை வலியுறுத்தும் குறித்த நடை பயணம் கதிர்காமத்தில் நிறைவடைய உள்ளது. படை வீரர்களினால் முன்னெடுக்கப்படும் குறித்த நடை பயணமானது இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை உண்டுபண்ணும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாம் நாளான நாளை பரந்தனில் ஆரம்பிக்கப்பட்டு ஏ-9 வீதி ஊடாக தொடர்ந்தும் நடைபயணம் முன்னெடுக்கப்படவுள்ளது…
-
- 3 replies
- 716 views
-
-
சி.சிவகுமாரன் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டுமல்லாது எதிர்காலத்தில் வேறு எந்த தேர்தல்களிலும் பௌத்த பிக்குகளை போட்டியிட அனுமதி வழங்கக்கூடாது என மிஹிந்தல ரஜமகா விகாரையின் பிரதம விகாராதிபதி வலவகஹென்குணவேவ தம்மாரத்ன தேரர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். மேலும் ஏனைய கட்சித் தலைவர்களும் பௌத்த பிக்குகளை தேசிய பட்டியலிலும் உள்வாங்கக் கூடாது என்றும் அவர் தெரிவிக்கிறார். விகாரையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில் ஜனாதிபதி கோத்தாபய பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். ஆகவே அவர் நாட்டின் தேசியத்தையும…
-
- 3 replies
- 477 views
-
-
-க. அகரன் வவுனியா தமிழ் விருட்சம், விண்மீன்கள் அமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம், வவுனியா - வைரவபுளியங்குளம் கிராம அபிவிருத்திச்சங்க மண்டபத்தில், இன்று (24) நடைபெற்றது. இதில், பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை வந்த 3 வைத்தியர் குழாம் நரம்பு, எலும்பு, தசைக்கான மசாஜ் வைத்தியத்தை நோயாளர்களுக்கு மேற்கொண்டு, ஆலோசனைகளையும் வழங்கினர். இதன் ஆரம்ப நிகழ்வில், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார், விண்மீன் அமைப்பின் தலைவர் புவிகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/வன்னி/வவுனியாவில்-இலவச-மருத்துவ-முகாம்/72-241436
-
- 1 reply
- 750 views
-
-
யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் துப்புரவுப் பணிகள்! November 21, 2019 யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களை நினைவுகூரும் ஏற்பாட்டுப் பணி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெறுகிறது. http://www.errimalai.com/?p=46305
-
- 10 replies
- 1.4k views
-
-
கடந்த அரசு வழங்கிய 7000 பேரின் நியமனங்களை இடைநிறுத்த உத்தரவு ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த சலுகைக் கடன் திட்டங்கள், 7000 பேருக்கு வழங்கப்பட்டிருந்த அரசாங்க நியமனங்களை இடைநிறுத்தி வைக்குமாறு புதிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் திறைசேரி செயலர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல, வங்கிகள், அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் அனுப்பியுள்ளார். இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்களில், என்டர்பிரைஸ் சிறிலங்கா திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட குறைந்தது 11 சலுகைக்கடன்களும் அடங்கியுள்ளன. முன்னைய அரசாங்கத்தின் இறுதிக் காலகட்டத்தில் 7000 பேருக்கு வழங்கப்பட்ட அரச நியமனங்களையும் இடைநிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முக…
-
- 0 replies
- 717 views
-
-
ஸ்ரீகாந்தா, சிவாஜி, சில்வெஸ்டர் ரெலோவில் இருந்து இடைநிறுத்தம் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு நேற்று சனிக்கிழமை திருகோணமலையில் கூடி பொதுச் செயலாளர் என்.சிறிகாந்தா உள்ளிட்ட மூவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தியுள்ளது. கட்சி செயலாளர் என்.சிறிகாந்தா, யாழ் மாவட்ட அமைப்பாளர் சில்வெஸ்டர் விமல்ராஜ், துணை அமைப்பாளர் ஜெயரட்ணம் ஜெனார்த்தனன் ஆகியோரே இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் விளக்கமளிக்க ஒரு வாரம் அவகாசமளிக்கப்பட்டுள்ளது. ரெலோ அமைப்பின் முடிவிற்கு மாறாக, கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தா மற்றும் யாழ் மாவட்ட கிளையின் ஒரு பகுதியினர், ஜனாதிபதி தேர்தலில் எம்.கே.சிவாஜிலிங்கத்தை ஆதரித்திருந்தனர். அத்துடன், சிவாஜி ஆதரவு பிரச்சார கூட்டங்களில் ரெலோ …
-
- 0 replies
- 398 views
-
-
சஜித் பிரேமதாஸவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வழங்க வேண்டுமென நான் சொல்லவில்லை எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், "நான் கூறியதாக ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் தெரிவித்தார். பத்திரிகையொன்றில் முன்பக்க தலைப்பு செய்தியாக சனிக்கிழமை (23) "சஜித் பிரேமதாஸவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வழங்க வேண்டும் _ இரா சம்பந்தன் " என்ற செய்தி குறித்து வினவியபோது, "அப்படி ஒன்றும் நான் சொல்லவில்லை" என மறுப்புத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: இந்நிலையில் தான் இது தொடர்பில் எவ்வித கருத்துக…
-
- 1 reply
- 560 views
-
-
தமது உறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரி ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1009 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று காலை 11 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து பேரணியாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் பகுதிக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை சுவிஸ் உதவும் கரங்கள் அமைப்பின் அனுசரணையுடன் மாவீரர் குடும்பங்கள் உட்பட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்கள் உட்பட 70 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருள்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. https://www.virakes…
-
- 0 replies
- 649 views
-
-
(லியோ நிரோஷ தர்ஷன்) கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண பதவிப்பிரமானம் செய்துக்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே இந்த நியமனத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டார். புதிய ஜனாதிபதி தெரிவையடுத்து ஏற்கனவே பதவி வகித்த 9 மாகாணங்களுக்குமான ஆளுநர்களை உடனடியாக பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம் கடதந்த வாரத்தில் உத்தரவு கடிதம் ஒன்றை அனுப்பியது. இதற்கு அமைவாக அனைத்து ஆளுநர்களும் பதவி விலகினர். இதனடிப்படையில் 6 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் வடக்கு ,கிழக்கு மற்றும் தென் மாகாணத்திற்கான ஆளுநர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்க வில்லை. இந்நிலையில் பேராசிரிய…
-
- 0 replies
- 251 views
-