ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143264 topics in this forum
-
கொழும்பு பாலத்துறையில் காரில் சென்ற மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பாலத்துறை பாலத்திற்குக் கிழாகச் செல்லும் வீதியிலேயே நேற்றிரவு ஒன்பது மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இனந்தெரியாத நபர்கள்மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயொகத்தில் ஸ்தலத்திலேயே மூவரும் பலியாகியுள்ளனர். கொல்லப்பட்டவர்களது சடலங்கள் இதுவரை அடையளம் காணப்படவில்லை என பாலத்துறைப் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 892 views
-
-
தேசிய கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக மக்களை விழிப்புணர்வூட்டும் முதலாவது அமர்வு கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன்: கிளிநொச்சியில் இன்று சென்று தனிஈழம், ஆயுதப் போராட்டம் பற்றிப் பேசிப்பாருங்கள், அங்குள்ள மக்கள் உங்களை விரட்டியடிப்பார்கள். இதுவே இன்றைய வடக்கின் நிலை என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து அங்கு பேசிய அவர், இந்த நாட்டை எவராலும் பிளவுபடுத்த முடியாது. இதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. நாட்டை பிரிக்கச் செய்வதற்கு வடக்கு மக்களும் தற்போது விரும்பவில்லை. இந்த நிலைப்பாட்டிலேயே அவர்கள் உள்ளார்கள். வடக்கில் இன்று சென்று ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்போம் அல்லது நாட்டைப் பிரிப்போம் என்று எவராவது கூறி…
-
- 2 replies
- 1.1k views
-
-
வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை! வடக்கில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டம் நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு, வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஆகியன இணைந்து இச் செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் ஏற்கனவே ஆராயப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அந்தவகையில் பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யுத் இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு த…
-
-
- 5 replies
- 378 views
-
-
யாழ். மாவட்டத்தில் கடந்த வாரம் பல்வேறு குற்றச் செயல்களுடனும் தொடர்புடையவர்கள் என்று கருதப்பட்ட நூற்றைம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பொலிஸாரால் பிடிக்கப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்டு தண்டனைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரீ குகனேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடகவியலாளர்களுக்கும் யாழ். மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெறும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரீகுகனேசன் தலைமையில் நேற்று சனிக்கிழமை பகல் நடைபெற்றது. இதன் போது கருத்துத் தெரிவித்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரீகுகனேசன், யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சர் பிரிவில் இடம் பெற்ற தேடுதல் …
-
- 0 replies
- 410 views
- 1 follower
-
-
210 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் மீட்பு! கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (14) காலை 210 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சுங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய சந்தேக நபர், சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு சேவைகள் அமைப்பின் தலைவராகவும் உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. இவரிடமிருந்து மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் எடை 5.94 கிலோ கிராம் ஆகும். விமான நிலையத்திலிருந்து ஏற்றுமதி செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட நபர் இந்த தங்க பிஸ்கட் கையிருப்பை அவரிடம் ஒப்படைத்திருக்கலாம் என்றும், சந்தேக நபர் நீண்ட காலமாக இந்தக் கடத்தலை…
-
- 0 replies
- 145 views
-
-
குற்றம் இழைத்த தரப்பே குற்றம் சுமத்தும் விநோதம் 23.08.2008 ஐந்து மாதங்களுக்கு மேல் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸநாயகத்துக்கு எதிராக ஒருவாறு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துவிட்டது இலங்கை அரசு. இதனையடுத்து, இதுவரை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு அவலத்தை அனுபவித்து வந்த திஸநாயகம் ஒருவாறு விளக்கமறியலுக்கு மாற்றப்பட்டிருக்கின்றார். எனினும், திஸநாயகத்துக்கு எதிராக அரசு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பலவீனமானவை எனத் தெரிவித்துள்ள சுதந்திர ஊடக இயக்கம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களை மிரட்டும் முயற்சி இது என்றும் கண்டித்திருக்கின்றது. இலங்கையில் இ…
-
- 0 replies
- 1.1k views
-
-
நகரைக் குளிர்மைப்படுத்தும் யாழ். மாநகர சபை -எம்.றொசாந்த் யாழ். நகர்ப் பகுதியிலுள்ள வீதிகளை வெப்பத்திலிருந்து தணிக்கும் நடவடிக்கையை யாழ்ப்பாணம் மாநகர சபை மேற்கொண்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் நடமாடுவதற்கு அஞ்சும் நிலைமை காணப்படுகின்றது. அதிக மக்கள் வந்து செல்லும் இடமாக இருக்கும் யாழ்ப்பாண நகர வீதிகளில் மக்கள் பயணிக்க முடியாத நிலையில் வெப்பம் காணப்படுகின்றது. இதனைத் தணிக்கும் வகையில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தண்ணீர் வண்டிகள், யாழ்ப்பாணம் நகர வீதிகளில் தண்ணீர் தெளித்து வெப்பத்தை குறைக…
-
- 4 replies
- 596 views
-
-
இரு மகள்களை பாலியல் துஷ்பிரயோகம்: தந்தைக்கு 20 வருட கடூழிய சிறை Editorial / 2025 செப்டெம்பர் 25 , மு.ப. 10:19 தனது 7 மற்றும் 8 வயது மகள்களை 2016 ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு இருகுற்றத்துக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை 4 குற்றத்துக்கு 40 ஆயிரம் தண்டப்பணமும்பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் இரண்டு இலட்சம் ரூபாவை வழங்குமாறுமட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் தீர்ப்பளித்தார். மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய தந்தை உள நலம் பாதிக்கப்பட்ட தனது ஒருமகள் உட்பட 7 மற்றும் 8 வயதுடைய இரு மகள்களையும் கடந்த 2016 அக்டோபர் மாதம் பாலியல்துஷ்பிரயோகம் மேற்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டார் இவ்வாறு கைது செய்யப்பட்டவரு…
-
- 0 replies
- 181 views
-
-
சுற்றிவளைத்து அடக்கும் தந்திரோபாயத்திற்கு எதிரான பின்வாங்கும் தந்திரோபாயம் -எரிமலை- கடந்த செவ்வாய்க்கிழமை திருக்கோணமலை துறைமுகத்தின் மீது விடுதலைப் புலிகளின் வான்புலிகள் நடத்திய தாக்குதலானது பல்வேறு படைத்துறை, அரசியல் பரிமாணங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. அதாவது, சிறிலங்கா அரசும் அதன் படைகளும் விடுதலைப் புலிகள் போரிலே தோற்றுக் கொண்டிருப்பதாகவும் விரைவில் அவர்கள் அனைவரையும் அழிக்கப்போவதாகவும் ஆளுக்காள் தென்னிலங்கையிலே அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் துறைமுகத்திலே வான்புலிகளின் தாக்குதல் நடைபெற்றமையானது விடுதலைப் புலிகளின் படைத்துறை வலிமையினை தென்னிலங்கைக்கும் அனைத்துலகத்திற்கும் பறைசாற்றுவதாக அமைந்து…
-
- 0 replies
- 1.5k views
-
-
'தமிழர்கள் படுகொலைக்கு தி.மு.க-வே காரணம்' 13-05-2016 09:00 AM இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு திராவிட முன்னேற்ற கழகம் தான் காரணம் என தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டமொன்றில் வியாழக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/172102/-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE-#sthash.oWlDqA8O.dpuf
-
- 0 replies
- 242 views
-
-
04 Oct, 2025 | 02:17 PM கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா வந்தாறுமூலை வளாக நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் சனிக்கிழமை (04) ஆரம்பமானது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் தலைமையில் ஆரம்பமான இப்பட்டமளிப்பு விழாவின் முதலாம் நாளில் பிரதம அமைச்சரின் செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்திரி பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டார். இப்பட்டமளிப்பு விழாவில் 1966 உள்வாரி, வெளிவாரி மாணவர்களுக்கான பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு பட்டங்கள் வழங்கி உறுதிசெய்யப்படவுள்ளன. முதலாம் நாளின் சனிக்கிழமை (04) முதலாவது அமர்வின் போது சிவசுப்ரமணியம் பத்மநாதனுக்கு கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது. 240 பட்டதாரிகளுக்கும் இரண்டாவது அமர்வின் …
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
இந்தியாவிற்கான சிறீலங்கா துணைத்தூதுவரை மத்திய, மாநில அரசுகள் கண்டித்து, அவரையும், சென்னையிலுள்ள துணைத் தூதரகத்தையும் தமிழ்நாட்டில் இருந்து அகற்ற வேண்டும் என, தமிழ்நாடு மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு கடற்றொழிலாளர்களை சிறீலங்கா கடற்படையினர் சுட்டுக்கொல்லவில்லை எனவும், தாக்கவில்லை என்றும் இந்தியாவிற்கான சிறீலங்காவின் துணைத் தூதுவர் அம்சா கூறியுள்ளமை பற்றி கருத்துக்கேட்டபோத மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் தலைவர் மங்கையர்ச்செல்வன் தொலைக்காட்சிக்கு இந்தக் கருத்தினைத் தெரிவித்தார். அண்மையில் தமிழ்நாட்டில் தொலைக்காட்சி ஒன்றிற்கு கருத்துரைத்திருந்த சிறீலங்கா துணைத் தூதுவர் அம்சா, தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் மீதான தாக்…
-
- 0 replies
- 932 views
-
-
கிழக்குப் பல்கலைக்கழகத்தை சிங்களப் பிரதேசத்திற்கு தரைவார்க்கும் நடவடிக்கைக்கு கிழக்குப் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் திரு. பத்மநாதன் ஒப்புதல் அளித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு.பந்மநாதன், விஞ்ஞானபீடாதிபதி திருமதி.தேவதாசன், வர்த்தக முகாமைத்துவ பீடாதிபதி அன்றூ ஆகிய மூவரும் தீடீரென கொழும்புக்குச் சென்றுள்ளனர். கொழும்பு சென்ற இவர்களுக்கும், சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் இரகசியப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. சந்திப்பின் போது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளாகம் ஒன்றை மொனராகலை மாவட்டத்தில் உள்ள புத்தல எனும் சிங்கப் பகுதியில் திறப்பதற்கு துணைவேந்த ஒப்புதல் அளித்துள்ளார். இச்சந்திப்பை நிறைவு செய்த இவர்கள், உள்ளுர் …
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்தியாவின் ஜம்மு மாநிலத்தில் இலங்கை இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் காவற்துறையினர் கைது செய்துள்ளனர் என இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயுதக் குழுக்கள் மற்றும் காவற்துறை தொடர்பான தகவல்களை இணையமூடமாக பெற்றுக்கொள்ள குறித்த சந்தேக நபர் முயற்சி மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜம்முவில் அமைந்துள்ள இன்டர்நெட் கபே ஒன்றின் உரிமையாளர் காவற்துறையினருக்கு வழங்கியத் தகவல்களை அடுத்து குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கு இடமான இளைஞனின் பெற்றோர் கனடாவில் வசிப்பதாகவும், ஒரு மாதத்திற்கு முன்னர் இந்தியாவிற்கு வருகை தந்ததாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த பெற்றோர் இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் மாறி மாறி தங்கியிருப்பதாக…
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பான நான்கு அறிக்கைகள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்குக் கிடைத்துள்ளது.வரும் 30ம் நாள் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தொடரில், இந்த நான்கு அறிக்கைகளும் பேரவையினால் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. 30 அரசசார்பற்ற நிறுவனங்கள், சிறிலங்கா மனிதஉரிமைகள் ஆணைக்குழு, சிறிலங்கா அரசாங்கம், மற்றும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை ஆகியன தயாரித்த அறிக்கைகளே இவையாகும். இந்த நான்கு அறிக்கைகளும் ஜெனிவா கூட்டத்தில் ஆராயப்பட்டு, ஒரு அறிக்கையாகத் தயாரிக்கப்படும். இந்தப் பணியை இந்திய, பெனின், ஸ்பெய்ன் நாட்டுப் பிரதிநிதிகள் மேற்கொள்ளவுள்ளனர். இதன் அடிப்படையிலேயே வரும் 1ம் நாள் பூகோள கால மீளாய்வுக் கூட்ட விவாதம் இடம்பெறவுள்ளது.…
-
- 0 replies
- 492 views
-
-
(ஆர்.ராம்) இலங்கையானது கொரோனாவின் தாக்கத்திலிருந்து மீண்டாலும் அதன் பின்னர் ஏற்படப்போகும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முங்கொடுக்கும் சக்தியைக் கொண்டிருக்கவில்லை என்று பொருளாதார துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கைக்கு வருமானம் கிடைக்கும் அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ள நிலையிலும் உள்நாட்டு உற்பத்திகளை தவிர்த்து வெளிநாடுகளில் தங்கியிருக்கும் பொருளாதார கொள்கைகளை பின்பற்றி வந்தமையால் அடுத்துவரும் காலப்பகுதியில் ஏற்படப்போகும் மோசனமான நிலைமைகளை தவிர்க்கவே முடியாதென்றும் அவர்கள் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர். முழு உலகுமே கொரோனா தொற்றுக்குக்கு இலக்காகி நெருக்கடிகளை சந்தித்துள்ள நிலையில் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை அனைத்து நாடுகளுமே சந்திக்கவுள்ள…
-
- 6 replies
- 727 views
-
-
அழுத்து http://puspaviji.net/page121.html
-
- 0 replies
- 773 views
-
-
[size=2][size=4]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயணம் செய்யவிருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தொடர்பில் விசாரணை நடத்தும் பொறுப்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரி வழங்கிய முறைப்பாட்டை அடுத்தே, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த விசாரணைக்கென பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் தனி நபர்களிடமும் வாக்குமூலங்கள் பெறப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனததிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த ஞாயிற்றுக்கிழமை, டுபாய்க்கு ஸ்ரீலங்;கன் எயார்லைன்ஸ் விமானத்தின் மூலம் புறப்படவிருந்தார். அந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது இறுதி நேரத்தில் கண்டறியப்பட்டது. இதன…
-
- 2 replies
- 587 views
-
-
கொழும்பு அருகே ராணுவ முகாமில் பெரும் தீ விபத்து கொழும்புக்கு அப்பால் சாலாவ பகுதியில் அமைந்துள்ள ராணுவ மிகாமொன்றில் சற்று முன்னதாக பெரிய அளவிலான தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக ராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். சாலாவ ராணுவ முகாமில் வெடி பொருட்கள் அடங்கிய கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இந்த தீ பரவியுள்ளதாக சந்தேகிப்பதாக ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவித்த ராணுவ பேச்சாளர் பிரகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார். இதன் காரணமாக ராணுவ முகாமில் சுற்றுப் புறத்தில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த தீயை கட்டுக்குள் கொண்ட…
-
- 8 replies
- 932 views
-
-
Published By: Digital Desk 3 18 Nov, 2025 | 05:20 PM தெளிவுத்தன்மை தான் நம்பிக்கையை உருவாக்கும் அடித்தளம் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில், அமெரிக்காவின் மொண்டானா தேசிய காவல் படைக்கும இலங்கை பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கிடையிலான பாதுகாப்பு பங்காண்மையினை உத்தியோகபூர்வமாக முறைப்படுத்தும் வகையில், (State Partnership Program – SPP) தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) நவம்பர் 14ஆம் திகதி கைச்சாத்தானது. இந்த ஒப்பந்தம் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இது குறித்து அமெரிக்கத் தூதர் ஜூலி சங் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இரு தரப்புகளுக்கும் இடையிலான இந்த ஒத்துழைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான எங்க…
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
பிரபாகரன் ஆயுதம் ஏந்திப் போராடிக் கோரிய தமிழீழத்தை வழங்க கோத்தபாய விரும்புகிறாரா? 29 அக்டோபர் 2012 குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன் பிரபாகரன் நிராகரித்த 13ஆவது அரசியல் திருத்தத்தை ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தூக்கிப் பிடிக்கிறது என்று கேட்டிருக்கிறார் கோத்தபாய ராஜபக்ச. அப்படியெனில் பிரபாகரன் ஆயுதம் ஏந்திப் போராடிக் கோரிய தமிழீழத்தை வழங்க கோத்தபாய விரும்புகிறாரா? என்பதுதான் பெரும் சந்தேகமாக எழுகிறது. 13ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தை அழித்துவிடலாம் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சொல்லியிருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. போரில் புலிகளை அழிக்கலாம் என்று எப்படி சொன்னாரோ, மக்களை அழிக்கலாம் என்று எப்படி ஆணையிட்ட…
-
- 1 reply
- 518 views
-
-
அவசர எச்சரிக்கை ! கொழும்பு, வத்தளை பகுதியில் வெள்ளநீர் அளவு மேலும் உயர்வு : உடனடியாக வெளியேற வேண்டுகோள் : படகு சேவைகளுக்கான இலக்கங்கள் இதோ ! Published By: Digital Desk 3 28 Nov, 2025 | 10:11 PM களனி கங்கையை அண்டிய, கொழும்பு, வத்தளை மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளில் வெள்ளநீர் வேகமாக உயர்ந்து வருவதாக அதிகாரிகள் அவசரமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் விளைவாக வத்தள, ஹுனுப்பிட்டிய, கஹத்துடுவ, எலக்கந்த, பள்ளியாவத்த வீதி உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அபாய எச்சரிக்கை வலயத்தில் உள்ள குடியிருப்பாளர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ மையமும், பொலிஸாரும் கேட்டுக்க…
-
- 1 reply
- 220 views
- 1 follower
-
-
[size=4]சிறிலங்கா மீது அமெரிக்கப் பிரதிநிதி சுமத்திய அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்[/size] [size=4][ வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2012, 03:36 GMT ] [ தா.அருணாசலம் ][/size] [size=4]ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று நடைபெற்ற பூகோள கால மீளாய்வில் சிறிலங்கா மீது அமெரிக்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஜெனிவாவுக்கான அமெரிக்கப் பிரதிநிதி எலீன் சம்பர்லைன் டோனகே, “ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் சிறிலங்கா அரசு ஏற்கனவே முன்வைத்த வாதங்களைத் தான் இன்றும் முன்வைத்துள்ளது. புதிய யோசனைகளையோ திட்டங்களையோ முன்வைக்கவில்லை. சிறிலங்காவில் 18வது அரசியலமைப்புத் தி…
-
- 1 reply
- 429 views
-
-
இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான விடுதலைப் புலிகள் அமைப்பின் மற்றொரு முன்னாள் போராளி, புற்றுநோயினால் மரணமாகியுள்ளார். முன்னாள் போராளிகள் ஒரே மாதிரியான நோயினால் பீடிக்கப்பட்டு மரணமடைந்து வருகின்றார்கள். இராணுவத்தால் புனர்வாழ்வு முகாமில் வைத்துப் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளியான பூநகரி நல்லூர் மகா வித்தியாலய தமிழ் பாட ஆசிரியை செல்வி தம்பிராஜா சந்திரலதா (வயது-37) புற்றுநோயினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம்தி தெல்லிப்பளை வைத்தியசாலையில் சாவடைந்தார். இவர் இராணுவத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னரே, நோய்த் தாக்கத்திற்குள்ளானதாகக் கூறப்படுகின்றது. புனர்வாழ்வு அளி…
-
- 1 reply
- 985 views
-
-
இலங்கையின் வீதி வலையமைப்பை புதுப்பிக்கத் தொடங்கும் கூகுள் மேப்ஸ்! இலங்கையின் பிரதான வீதி வலையமைப்பு இப்போது கூகுள் வரைபடத்தில் நிகழ்நேர நிலை எச்சரிக்கைகளால் ஆதரிக்கப்படுகிறது என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இந்தப் புதுப்பிப்பு 12,000 கிலோமீட்டர் பிரதான வீதிகளை உள்ளடக்கியது. மேலும், வீதி மூடல்கள் மற்றும் கட்டுமானப் பணிகள் உட்பட ஆறு வகையான எச்சரிக்கைகளை வழங்குகிறது. பயணிகள் பாதைகளை மிகவும் திறமையாக திட்டமிடவும், எதிர்பாராத தாமதங்களைத் தவிர்க்கவும், வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த முன்னோடித் திட்டம் உதவும் என்று அமைச்சர் கூறினார். இது குறித்து எக்ஸில் பதிவிட்ட அமைச்சர். “உங்கள் பயணங்களை சிறப்பாக திட்டமிடவும், நேரத்தை மிச்சப்படுத்தவும், எதிர்பாரா…
-
- 0 replies
- 124 views
-