ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
விடுதலைப் புலிகளின் விமானங்களை "விமானப்படை' என அழைக்க வேண்டாம் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரம்புக்வெல வேண்டுகோள் கொழும்பு, மே,8 புலிகளுடைய விமானங்களை அவர்களது விமானப்படை என்று அழைக்காதீர்கள். ஊடகவியலாளர்களைப் பார்த்து இவ் வாறு வேண்டுகோள் விடுத்தார் அமைச்சரும் பாதுகாப்பு தொடர்பான பேச்சாளருமாகிய கெஹலிய ரம்புக்வெல. இதனால் நேற்றைய ஊடகவியலாளர் மாநாட் டில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டு அது பின்னர் சர்ச்சையாக மாறியது. "இலங்கையில் சட்டபூர்வமாக ஒரு விமானப்படைதான் இருக்க முடியும். சில ஊடகங்கள் புலிகளின் விமானப்படை என குறிப் பிடுகின்றன. இது தவறு. ஊடகங்கள் இதைத் திருத்திக் கொள்ள வேண்டும்' என்று கெஹ லிய ரம்புக்வெல தெரிவித்தார். "அல்குவைதா' அமைப்பின் விமானங்களை "அல்குவைதா' வ…
-
- 20 replies
- 5.9k views
-
-
இறுதிப் போர் நிகழ்வுகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட கவலைகள் குறித்து இலங்கை அரசு விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்: தட்டிக் கேட்காமல் தடவிக் கெஞ்சும் இந்தியா [Friday, 2011-07-15 23:44:53] இலங்கை இறுதிப் போரில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட கவலைகள் குறித்து இலங்கை அரசு விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்திய அரசு கருத்துத் தெரிவித்துள்ளது. இலங்கைப் போரின் இறுதிக்கட்ட சம்பவங்கள் தொடர்பாக சானல் 4 தொலைக்காட்சியில் வெளியான காட்சிகள் தொடர்பாகவும், அந்தப் போர் தொடர்பாக ஐ.நா தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாகவும் இந்தியா முதல் முறையாகக் கருத்துத் தெரிவித்துள்ளது. சானல் 4 வெளியிட்ட இறுதிப் போர் தொடர்பான காட்சிகள் குறித்து, …
-
- 0 replies
- 436 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மூத்த மகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவர் பொலன்னறுவை மாவட்டத்தில் எதிர்வரும் பொது தேர்தல் மூலம் அரசியலுக்குள் பிரவேசிக்க உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. மைத்திரிபால சிறிசேன அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் அவரின் மகள் செயற்பாட்டு ரீதியான அரசியலை ஆரம்பிக்க உள்ளதாகவும் அந்த சிங்கள ஊடகம் கூறியுள்ளது. எவ்வாறாயினும் தனது பிள்ளைகள் எவரையும் அரசியலுக்கு கொண்டு வரப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அவரது மகள் அர…
-
- 3 replies
- 938 views
-
-
தமிழர் பிரச்சினைக்கு குறைந்தபட்ச தீர்வைக் கூடமுன் வைக்க முடியாத நிலையில் அரசு -(பீஷ்மர்) சென்ற வாரத்து மழை வெள்ள `புதினத்தினால்' அரசாங்கத்துக்கு சில நன்மைகள் கிடைக்காமலில்லை. கொழும்பின் வெள்ளப் பிரச்சினை காரணமாக சுதந்திரக் கட்சி முன்வைத்த பிரச்சினைத் தீர்வுக்கான ஆலோசனை பற்றிய ஆழமானதொரு விவாதம் நடக்காமலேயே போய்விட்டது. இரண்டு நாட்களுக்கு முன்னர் கஜேந்திரன் எம்.பி. பாராளுமன்றத்துக்குள் காட்டிய எதிர்ப்பைத் தவிர தமிழ் மக்களின் நிலைபாடு பற்றி எதுவுமே அறிய முடியாது போய்விட்டது எனலாம். சுதந்திரக் கட்சியின் ஆலோசனைகள் பற்றிய போதாமையும் நிச்சயமின்மையும் பற்றிய அம்சங்களை மீளமீள பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. சிங்களத்துவ குரலின் நிச்சயமான பிரதிபலிப்புகளிலொன்று என…
-
- 0 replies
- 668 views
-
-
நாளை மகிந்தருக்கு ஆதரவாக வாக்குக் கேட்டு கிளிநொச்சியில் தென்னிந்தியப்பாடகர்கள்! Tuesday, July 19, 2011, 22:56இந்தியா, சிறீலங்கா வடக்கில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் அரசாங்கம் விடுத்த அழைப்பினை ஏற்று தென்னிந்திய திரை இசைப் பாடகர்கள் மூவர் இலங்கை வந்திருக்கின்றமை வன்னி மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையினைத் தோற்றுவித்திருக்கின்றது. உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் குறிப்பாக யாழ்.தேர்தல் மாவட்டத்தில் வெற்றி பெற்று அதனை சர்வதேசத்திற்குக் காட்டவேண்டும் என்ற முனைப்பில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவும், 24 அமைச்சர்களும் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மாவட்டங்களில் தீவிர பரப்புரை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக கிளிநொச்சியில்…
-
- 7 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவை உன்னிப்பாக கண்காணிக்கிறது ஜப்பான் ஜப்பானின் நீண்டகால நட்பு நாடான சிறிலங்காவில், நாடாளுமன்றக் கலைப்பு உள்ளிட்ட அண்மைய அரசியல் நிலவரங்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக, ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பானிய வெளிவிவகார அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளது. சட்ட நெறிமுறைகளின் ஊடாக சிறிலங்காவில் உறுதித்தன்மை தொடர்ந்தும் உறுதிப்படுத்தப்படும் என்று, ஜப்பான் நம்புகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.puthinappalakai.net/2018/11/14/news/34417
-
- 1 reply
- 887 views
-
-
மோசமான அரசியல் சூழலினால் மக்களும் புத்திஜீவிகளும் நாட்டை விட்டு தொடர்ந்து வெளியேறுகின்றனர்: பேராசிரியர் எஸ்.ரீ. ஹெரிகே சிறிலங்காவின் மோசமான அரசியல் சூழலினால் மக்களும் புத்திஜீவிகளும் நாட்டை விட்டு தொடர்ந்து வெளியேறுகின்றனர் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எஸ்.ரீ.ஹெரிகே தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றில் அவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்: விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சத்தின் காரணமாக கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையம் தற்காலிகமாக மூடப்பட்ட போது நானும் அங்கு இருந்தேன். சில ஆயிரம் பயணிகள், பணியாளர்கள் அறை ஒன்றினுள் கூடுமாறு பணிக்கப்பட்டனர். நான் ஒரு வெளிநாட்டு பயணியின் பின்னால் நின்றிருந்தேன். அவர் அச்சமடைந்திருந்தது வெளி…
-
- 0 replies
- 847 views
-
-
நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு கலந்துள்ளமை தொடர்பில் பரிசோதித்து அறியக்கூடிய 4000 என்ற நவீன கருவி அமெரிக்காவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்துள்ளது என வடக்கு மாகாண சுற்றுச்சூலல் அமைச்சர் தெரிவித்தார். ரூபா 20 இலட்சம் பெறுமதிமிக்க இந்த நவீனகருவியை தான் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு தொடர்பாக ஆராய்ந்து வரும் நிபுணர்குழுவிடம் நேற்று கையளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வலிகாமம் பிரதேசத்தில் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு கலந்துள்ளது தொடர்பாக வடமாகாணசபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. எனினும், தற்போது பயன்பாட்டில் உள்ள கருவிகளைப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அதிக நேரம் தேவைப்படுவதால் ஆய்வு முடிவுகளைப் பெற…
-
- 2 replies
- 561 views
-
-
வெள்ளி 25-05-2007 17:26 மணி தமிழீழம் [தாயகன்] புத்தளத்தில் தேடுதல் - 14 தமிழர்கள் கைது புத்தளத்தில் சிறீலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து நடத்திய தேடுதலில் 14 தமிழர்களைக் கைது செய்து, மேலதிக விசாரணைகளுக்காகத் தடுத்து வைத்துள்ளனர். புத்தளம் வென்னப்புவ நகரில் இன்று காலை கைது செய்யப்பட்ட அனைவரும் 18 முதல் 26 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும், அங்குள்ள காலணித் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிவர்களே கைது செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. ஹற்றன், புஸ்ஸல்லாவ பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டதுடன், இவர்களில் நால்வர் பெண்கள் எனவும் புத்தளம் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். வெள்ளி 25-05-2007 17:17 மணி தமிழீழம் [தாயகன்] கண்டியில் நா…
-
- 0 replies
- 893 views
-
-
யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் இருந்து 2 கிலோ ரி.என்.ரி வெடிமருந்து விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டம் கடற்கரைப் பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் இருந்தே நேற்று இரவு (24) விசேட அதிரடிப் படையினர் குறித்த வெடிமருந்தினை மீட்டுள்ளனர்.விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கொய்யாத் தோட்டம் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கொண்டு செல்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த போதே விசேட அதிரடிப் படையினர் குறித்த வெடிமருந்தினை மீட்டுள்ளனர்.மீட்கப்பட்ட 2 கிலோ நிறையுடைய ரி.என்.ரி வெடிமருந்தினை விசேட அதிரடிப் படையினர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.யாழ்ப்பாணம் பொலிஸார் மீட்கப்பட்ட வெடிமருந்து தொடர்பில் …
-
- 1 reply
- 1.8k views
-
-
காட்டுச் சட்டங்களை எல்லாம் நாட்டில் அமுல் செய்யமுடியாது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவேசம் ""காட்டுச்சட்டங்களை எல்லாம் நாட்டில் அமுல் செய்யமுடி யாது. கொழும்பில் குண்டுகள் வெடித்தாலும், வடக்கில் சண்டை நடந்தாலும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கை ஒருபோதும் ஸ்தம்பிதம் அடையாது.'' இவ்வாறு ஆவேசமாகக் கூறினார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நேற்று அலரிமாளிகையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது: இந்த நாட்டில் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர்களில் நான் மாத்திரமே ஊடகத் தணிக்கையை இதுவரை அமுல் செய்யவில்லை. இந்நிலையில் ஊடகங்கள் நாட்டின் முக்கியமான விடயங்களையெல்லாம் அக்குவேறு ஆணிவேறாக வெளிச்சம் போட்டுக் காட்ட…
-
- 5 replies
- 1.6k views
-
-
இலங்கையில் இருந்து கடல்வழி மார்க்கமாக, தமிழகத்திற்குள் ஊடுருவி வரும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல், 'பஜ்ஜி' என்ற பெயரில், போதைப் பொருளை சப்ளை செய்து வருவது, போலீசாரை அதிர்ச்சியடையச் செய்து உள்ளது. 'சுடோ எபட்ரின்': கடந்த டிச., மாதம், சென்னை, அம்பத்தூர் தபால் நிலையத்தில் இருந்து பார்சல் மூலம் ஸ்பெயின் நாட்டிற்கு, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 'சுடோ எபட்ரின்' என்ற போதைப் பொருள் கடத்திய, நைஜீரிய வாலிபர், ஹென்றி சிட்டி, 34, சிக்கினார். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், விசா உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி சென்னை, காஞ்சிபுரம், திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களில் பதுங்கி உள்ள தன் கூட்டாளிகள், கல்லூரி மாணவ, மாணவியர், பிரபலங்கள் சிலருக்கு, போதைப் பொருள் சப்ளை செய்து வ…
-
- 1 reply
- 687 views
-
-
அடுத்த இரு ஆண்டுகளில் 3 தேர்தல்கள் – மஹிந்த தேசப்பிரிய அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று தேர்தல்கள் நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பிரதேச செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்தவகையில் மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி நிறைவு செய்யப்பட்டு, 2020 நவம்பர் 13 ஆம் திகதி தேர்தல் ஆணையத்தின் பதவி காலம் முடிவடையும் என்று சுட்டிக்காட்டினார். மேலும் எல்லை நிர்ணய அறிக்கையின் தாமதமே மாகாண சபை தேர்தல்கள் பிற்போட காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு நாடாளுமன்றம் அல்லது நீதிமன்றம் தெதா…
-
- 0 replies
- 320 views
-
-
தெற்கில் இனம்தெரியாத நால்வரின் உடலங்கள் கண்டெடுப்பு Sunday, 03 June 2007 சனிக்கிழமை சிறீலங்கா காவல்துறையினரால் நான்கு இனம்தெரியாத உடலங்கள் சிறீலங்கா தெற்குபகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இரு உடலங்கள் சப்பிரகமுவ மாகாணம் வெலிஓயா பகுதியிலும் மற்றொரு உடலம் வெலிகண்டி மாத்தளை பிரிவில் மத்திய மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும
-
- 0 replies
- 709 views
-
-
முப்பதாண்டுகாலப் போருக்குப் பின்னர், 2009ம் ஆண்டு நாட்டை ஒன்றுபடுத்தக் கிடைத்த வாய்ப்புகளை சிறிலங்கா பயன்படுத்திக் கொள்ளத் தவறியுள்ளதாகவும், இதனால், நல்லிணக்கத்தை அடைவதற்கு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக போராடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்கு தற்போது, நல்லிணக்கம், நீதி, உண்மையான அமைதியை அடையும் வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும், ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று கொழும்பில், போருக்குப் பிந்திய நல்லிணக்கத்தில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “ஒருதரப…
-
- 1 reply
- 449 views
-
-
முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கைது. முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் (ஓய்வு பெற்ற) ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் வாகனம் ஓட்டி மூன்று வாகனங்கள் மீது மோதியதையடுத்து நேற்றிரவு மெரின் டிரைவ் பகுதியில் வைத்து வெள்ளவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2023/1356120
-
- 0 replies
- 744 views
-
-
விமானம் லேட்: தட்டிக் கேட்ட நாகை பயணிக்கு இலங்கை விமான நிலையத்தில் அடி, உதை ஜூன் 07, 2007 திருச்சி: கொழும்புக்கு சென்ற நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவரை கொழும்பு விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். நாகை மாவட்டம் இருக்கை என்ற ஊரைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (41). இவர் உள்பட 130 பயணிகள் கொழும்பிலிருந்து திருச்சி வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று பயணித்தனர். விமானம் நேற்று காலை 7.30 மணிக்குப் புறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் கிளம்புவது தாமதமானது. அரை மணி நேர தாமதத்திற்குப் பின்னர் விமானம் கிளம்பியது. ஆனால் கிளம்பிய சில வ…
-
- 11 replies
- 3.3k views
-
-
நல்லாட்சியை ஏற்படுத்துவதன் மூலம் தமிழர்களின் பிரச்சினையை தீர்த்துவிட முடியாது! குருபரன் [ வியாழக்கிழமை, 09 ஏப்ரல் 2015, 04:48.34 PM GMT ] நல்லாட்சியை ஏற்படுத்துவதன் மூலமும் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதன் மூலமும் தமிழர்களின் பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்கின்ற வாதத்தினை நாங்கள் மறுதலிக்கின்றோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார். 19வது திருத்த சட்டம் தொடர்பாகவும், தேசிய அரசாங்கம் உட்பட்ட முக்கிய விடையங்களை தமிழ்வின் இணையத்திற்கு வழங்கியுள்ள சிறப்பு செவ்வியிலேயே குருபரன் தெரிவித்துள்ளார். https://www.youtube.com/watch?v=6Z8WM-Q7piU http://www.tamilwin.com/show-RUmtyETdSUku3E.html
-
- 0 replies
- 331 views
-
-
[Monday, 2011-08-22 16:30:30] மன்னார் பேசாலை பகுதியில் உள்ள வீடுகளுக்குள் நுழைய முற்பட்ட மர்ம மனிதர்களை பொதுமக்கள் துரத்திச் சென்ற போது அவர்கள் பேசாலை கடற்கரையோரமாக அமைக்கப்பட்டிருக்கும் கடற்படை முகாமுக்குள் நுழைந்து ஒழிந்து கொண்டதினைத்தொடர்ந்து பொது மக்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு அவை தற்போது கலவரமாக மாறியுள்ளது. இவ்விடையம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,,, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் பேசாலை கடற்கரைப் பகுதியில் இருக்கும் வீடுகளுக்குள் நுழைய முற்பட்ட மர்ம மனிதர்களை பொதுமக்கள் பிடிப்பதற்காக துரத்திச் சென்றனர். அப்போது அங்கிருக்கும் கடற்படை முகாமுக்குள் மர்ம நபர்கள் ஓடிச்சென்று ஒளிந்து கொண்…
-
- 0 replies
- 614 views
-
-
கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கு சம அந்தஸ்து வழங்க வேண்டும்! - சுரேஸ் பிறேமச்சந்திரன் [Wednesday 2015-04-15 19:00] தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடுவது தொடர்பாக கட்சிகள் அனைத்திற்கும் சம அந்தஸ்தை நாம் கோரியிருக்கின்றோம். தனித்தொரு கட்சிக்கு பெரும்பான்மை கொடுப்பதை ஏற்றுக் கொள்ளோம் என்று தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறியுள்ளார். அங்கத்துவக் கட்சிகளின் தலமைகளுக்கிடையிலான சந்திப்பு நடத்தப்பட்டு அதில் எடுக்கப்படும் முடிவே இறுதியானது. மாவட்ட கட்சிக் கிளைகள் எடுக்கும் தீர்மானங்களை குறித்து நாங்கள் கவலையடையவில்லை. கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான புளொட…
-
- 0 replies
- 490 views
-
-
மட்டக்களப்பில் பிரதான வீதி ஒன்றில் தேங்கி நிற்கும் மழை நீரில் கடற்றொழிலாளர் ஒருவர் மீன்களை பிடிக்கும் காணொளி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயல் ஒரு வினோதமானது என்பதை தாண்டி அரசாங்கத்தின் அவல நிலையை எடுத்துக்காட்டுகிறது. மழைக்காலங்களின் போது குன்றும் குழியுமாக காணப்படும் வீதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை மேற்கொள்கின்றனர். இதனை அவதானித்த கடற்றொழிலாளர் இது தொடர்பில் வழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த வித்தியாசமான செயற்பாட்டை செய்துள்ளார். https://tamilwin.com/article/street-in-batticaloa-damaged-1700153905
-
- 0 replies
- 190 views
-
-
அதிகாரப்பகிர்வு யோசனையை அமுல்படுத்த விடமாட்டோம் அதிகாரப்பகிர்வின் அடிப்படையில் அமைந்த தீர்வு யோசனையை சர்வகட்சி பிரதிநிதிகள் குழு வெளியிட்டால் நாங்கள் வீதியிலிறங்கி போராட்டம் நடத்துவோம். இந்த நாட்டில் ஒருபோதும் அதிகாரப்பகிர்வில் அமைந்த தீர்வு யோசனையை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என்று ஜே. வி.பி. யின் கம்பஹா மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். அதிகாரப்பகிர்வில் அமைந்த தீர்வு யோசனை இன்னும் ஆறு வாரங்களில் வெளியிடப்படும் என்று சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளமை குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது : அதிகாரப்பகிர்வில் அமைந்த தீர்வு யோசனையை…
-
- 1 reply
- 1.3k views
-
-
தூக்குத்தண்டனை விதிப்பதற்கு இன்றிலிருந்து இரண்டு வாரங்கள்! நிறுத்த இரண்டு தெரிவுகள் கைவசம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் எதிர்வரும் செப்டம்பர் 09ம் திகதி வெள்ளிக்கிழமை தூக்கிலிடப்படுவர் என வேலூர்ச் சிறை அதிகாரிகள் அவர்களிற்கு நேரடியாத் தெரிவித்துள்ளனர். வேலூர்ச்சிறைச்சாலை ஜனாதிபதியின் ஆணையைப் பெற்றுள்ளது. எனவெ அவர்கள் தூக்குத் தண்டனைக்கு தேவையான ஆயத்தங்களைச் செய்வதற்கான “கறுப்புப் பிடிவிராந்து” என்ற செயற்பாட்டில் ஈடுபடுவர் என பாதுகாப்புத்துறை அதிகாரியொருவர் ஊடகமொன்றிற்குத் தெரிவித்துள்ளார். இருந்தும் தற்போது இவர்களிற்கு இரண்டு தெரிவுகள் கைவசம் உள்ளன. முதலாவதாக …
-
- 6 replies
- 766 views
-
-
மைத்திரியின் நூறுநாள் திட்டத்தில் மக்களுக்கு கருத்து சுதந்திரம் கிடைத்துள்ளது : விஜயகலா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நூறுநாள் வேலைத்திட்டத்தில் ஜனநாயகம் பிறந்து கருத்து சுதந்திரம் மக்களுக்கு கிடைத்துள்ளதாக மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நூறுநாள் வேலைத்திட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பில் நேற்று கொழும்பில் ஒன்றினை அவர் மேற்கண்டவாறு கருத்தை வெளியிட்டுள்ளார். யாழ். மாவட்டத்தில் உள்ள 7 தேசிய பாடசாலைகளில் பணியாற்றவுள்ள 95 பேருக்கு அடுத்த வாரங்களில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அத்துடன் 250 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல் …
-
- 0 replies
- 325 views
-
-
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் குறித்துப் பார்வையிடுவதற்காக தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க நாளை வருகை தரவுள்ளார். இதனால் வெள்ள இடரால் ஏற்பட்ட சேத விவரங்கள் தற்போது தீவிர கதியில் திரட்டப்பட்டு வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த 21ஆம் திகதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மக்கள் இடம்பெயர்ந்தனர். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வீட்டிலிருந்த உடமைகளைக் கைவிட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓடினார்கள். இ…
-
- 1 reply
- 369 views
-