ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
பொலிஸ் மா அதிபரை இராஜினாமா செய்யுமாறு அறிவிப்பு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை, அப்பதவியை இராஜினாமா செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அறிவித்துள்ளனர். இரண்டு வாரக் காலப்பகுதிக்குள், அந்த இராஜினாமா இடம்பெற வேண்டுமென்றும், ஜனாதிபதியும் பிரதமரும், பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/பொலிஸ்-மா-அதிபரை-இராஜினாமா-செய்யுமாறு-அறிவிப்பு/175-222247
-
- 1 reply
- 637 views
-
-
தேசத்துரோகியை எவ்வாறு ஆதரிக்கலாம்: ஐ.தே.க கேள்வி சிறீலங்காவுக்கு எதிராக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் சதி செய்வதாக சிறீலங்கா தரப்பு தெரிவித்து வந்துள்ளது. மூனுக்கு எதிராக வீரவன்சாவும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தார் ஆனால் தற்போது எவ்வாறு சிறீலங்கா அரசு மூனை ஆதரிக்கலாம் என ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கா தெரிவித்துள்ளார். நேற்று (13) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஐ.நா அறிக்கையை நிராகரித்துள்ள சிறீங்கா அரசு, பான் கீ மூனின் இரண்டாவது பதவிக்காலத்திற்கு எவ்வாறு ஆதரவுகளை வழங்கியுள்ளது. மூன் ஒரு தேசத்துரோகி எனவும், அவர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் எனவும் அரச ஊடகங்கள் செய்தி…
-
- 0 replies
- 741 views
-
-
வெளிநாட்டு தலையீடு வேண்டாம் – எமது பிரச்சினையை தீர்த்துக்கொள்ள இடமளியுங்கள்! – ஜனாதிபதி மைத்திரி இலங்கை பிரச்சினைகளில் வெளிநாடுகளின் தலையீடு அவசியமில்லையென்றும், நாட்டிற்குள்ளேயே பிரச்சினையை தீர்த்துக்கொள்ள இடமளியுங்கள் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் சுயாதீனத் தன்மையை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் தான் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபையின் 73ஆவது அமர்வு நியுயோர்க்கில் நேற்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதில் இலங்கை நேரப்படி இன்று (புதன்கிழமை) அதிகாலை உரையாற்றிய ஜனாதிபதி மேற்குறித்த வேண்டுகோளை முன்வைத்தார். ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகை…
-
- 3 replies
- 920 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011 10:24 | சிறீலங்கா படையினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட இருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் அளவெட்டியில் கடந்த 16ஆம் நாள் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கூட்டமைப்பினர் மீது படையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். எனினும் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறீலங்கா படையினர் மறுத்துள்ளதால், அடிப்படை மனித உரிமைகள் மீறல் மனுத் தாக்கல் செய்யப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அளவெட்டி தாக்குதல் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டார். செய்தியாளர் ஒருவரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சுமந்திரன், சிறீலங…
-
- 3 replies
- 792 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அசித பிபாத் என்ற ஓய்வுபெற்ற மேஜர் அதிகாரி கடந்த 26ஆம் திகதி முதல் உண்ணாநிலைப் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகிறார். தன்னையும், சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏனைய அரசியல் கட்சிகளையும் வதைத்துவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரியே அவர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். இராணுவ அதிகாரியுடன் ஏற்பட்ட தனிப்பட்ட குரோதத்தினால் தன்மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இவ்வாறு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளவரின் குரல் (சிங்கள) பதிவை இங்கே கேட்கலாம். http://www.tamil.…
-
- 3 replies
- 529 views
-
-
கூட்டுக் கடல் ரோந்து புலிகளுடனான சண்டையில் இந்தியாவைச் சம்பந்தப்படுத்தும்: தமிழகக் கடற்படைப் பொறுப்பதிகாரி. இந்திய இலங்கைக் கடற்பரப்பில் இரு நாட்டுக் கடற்படைகள் கூட்டு ரோந்து மேற்கொள்ளும் பட்சத்தில், விடுதலைப் புலிகளுடனான சண்டையில் இந்தியக் கடற்படையை அது சம்பந்தப்பட வைத்துவிடும் ஆகையால் கூட்டுக் கடல் ரோந்து இந்தப் பிரதேசத்தில் சாத்தியப்படும் என்று நான் நினைக்கவில்லை ஆயினும் இந்திய அரசின் உயர்மட்டத்தில் முடிவெடுக்கப்படவேண்டிய விடயம் இதுவாகும் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருக்கிறார் தமிழகத்துக்குப் பொறுப்பான இந்திய கடற்படையின் அதிகாரி கொமடோர் வான் ஹால்ரன். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அந்நாட்டுக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படும் விவகாரம் குறித்த செவ்வி…
-
- 0 replies
- 980 views
-
-
பொதுமக்கள் ஒருவராவது கொல்லப்படவில்லை என்று இன்று வரை சாதிக்கும் அரசு இலங்கை பூராகவும் கொல்லப்பட்ட அனைத்துத் தமிழர்களுக்கும் அரச செலவில் விசேட பூசைகளையும் அர்ச்சனைகளையும் செய்ய முன்வந்தள்ளது. முன்னுக்குப் பின் முரணாக நடப்பதில் வல்லமை பெற்ற அரசு கொலையையும் செய்யும் கொல்லப்பட்டவருக்கு இரங்கலையும் தெரிவிக்கும். வன்னியில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் உட்பட சிங்களப்படைகளின் எறிகணை வீச்சு, விமானக் குண்டு வீச்சு, சித்திரவதைகள் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் போன்றவற்றால் படுகொலை செய்யப்பட்ட அனைவருக்கும் ஆத்மசாந்திக் கிரிகைகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 30ம் நாள் வரும் ஆடி அமாவாசைத் தினத்தன்று சகல சிவாலயங்களிலும் விசேட வழிபாடுகள் மற்றும் மோட்ச அர்ச்சன…
-
- 3 replies
- 780 views
-
-
இலங்கை அரசியலில் ஒவ்வொரு நிமிடமும் அதிர்ச்சி தரும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றது. காட்டுத் தீ போல் சுதந்திரக் கட்சி ஆதிக்கம் சந்திரிக்காவினதும் மைத்திரியினதும் கட்டுப்பாட்டில் வந்த கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் தற்போது இலங்கை அரசியலில் பரபரப்பாகப் பேசப்படுகின்ற ஒரு விவகாரம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபே ராஜபக்ஷ பற்றியது. அவர் எங்கிருக்கின்றார் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டாரா? சிங்கப்பூர் போய்விட்டார். மாலைதீவு போய்விட்டார் என்று ஒன்றுக் கொன்று முறனான செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றது. ஆனால் எமக்கு கிடைக்கின்ற நம்பகத்தனமான தகவல்களின் படி அவர் கொழும்பை விட்டு எங்கும் செல்லவில்லை. அவரை அப்படி சுலபமாக அனுப்பிவைக்கவும் தற்போதய ஆளும் தரப்பு கடும் ப…
-
- 6 replies
- 920 views
-
-
சுமார் 10,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் – அரசாங்கம் அறிவிப்பு தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக, மாற்று மற்றும் ஒப்பந்த அடைப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது தரவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் நியமனங்கள் வழங்கப்படும் எனவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார். உள்ளூராட்சி அமைப்புகளில் தற்போது 12,000 பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளன. அமைச்சரவையின் அங்கீகாரத்தை அடுத்து தற்காலிக ஊழியர்கள் நிரந்தரமாக்கப்படவுள்ளதாக ஜானக வக்கும்புர கூறினார். தற்போது உள்ளூராட்சி அமைப்புகளில் தற்காலிக பண…
-
- 0 replies
- 171 views
-
-
முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்சவின் மனைவி சசி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஆகியோர் விரைவில் கைதுசெய்யப்படலாம் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். போலி கடவுச்சீட்டை வைத்திருந்தமைக்காக சசியும், போதைபொருள் குற்றச்சாட்டுகளுக்காக துமிந்தவும் கைதுசெய்யப்படலாம் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். துமிந்த சில்வாவிற்கு எதிரான 50வீத விசாரணைகள் பூர்த்தியாகிவிட்டன,அடுத்த சில வாரங்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைகளுக்கு மிக முக்கியமானவை,விசாரணைகளுக்கு பின்னர் அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள். சசி வீரவன்ச போலிகடவுச்சீட்டிற்கு விண்ணப்பித்தமை தொடர்பான விபரங்களை குடிவரவுகுடியகல்வு திணைக்கள ஆணையாளர் நாயகம் பொ…
-
- 0 replies
- 487 views
-
-
இலங்கை இராணுவத்தின் கஜபா படைப் பிரிவிலுள்ள தமக்கு நெருக்கமான அதிகாரிகளுக்கு மாத்திரம் விசேடமான கவனிப்புக்களை மேற்கொண்டுவரும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஸவின் கொள்கையானது பெரும்பாலான இராணுவ அதிகாரிகளை அதிருப்தியடையச் செய்துள்ளது. இது இராணுவ அதிகாரிகளுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்துவதற்கு பெரும் காரணமாக உருவாகி வருவதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோதாபய ராஜபக்ஸ இராணுவத்தில் பணியாற்றிய போது மிக நீண்டகாலமாக கஜபா படைப் பிரிவிலேயே பணியாற்றினார். இதன்காரணமாக அவர் தன்னுடன் பணியாற்றிய தனக்கு ஆதரவான இராணுவ அதிகாரிகளுக்கு மாத்திரம் இராணுவ நடைமுறைகளையும் மீறி பதவி உயர்வுகள், வெளிநாட்டு புலமைப் பரிசில்கள் மற்றும் வேறு சிறப்புரிமைகளை வழங்கி வருவதாக …
-
- 1 reply
- 807 views
-
-
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கம்… October 23, 2018 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் “ஞானலிங்கம்” – ஸ்ரீ ஞானலிங்கேஸ்வரர் ஸ்தாபிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பிரார்த்தனை மண்டப வாயிலில் அமைந்துள்ள பழமையான மேடையில் குறித்த சிவலிங்கம் பிரதிஸ்டை செய்ய்யப்பட்டுள்ளது. 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவலிங்கம் பிரதிஸ்டை செய்யும் விம்பஸ்தானம் நிகழ்வு நடைபெற்று; அன்றைய தினமே மாலை எண்ணெய்காப்பு சாத்தப்பட்டது. தொடர்சியாக 22.10.2018 திங்கட்கிழமை அன்று ஸ்ரீ ஞானலிங்கேஸ்வரருக்கான மகா கும்பாபிசேக நிகழ்வி சிறப்புற நடைபெற்றது. மகா கும்பாபிசேக நிகழ்வுகள் சாகித்ய சிரோன்மணி யாழ் நயினை சிவஸ்ரீ. வை.மு.ப. முத்துக்கு…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஆபத்தான நிலையில் வட்டுவாகல் பாலத்தின் ஊடாக பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் 11 Aug, 2023 | 11:34 AM முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான பாதைகளில் ஒன்றாக காணப்படுகின்ற ஏ-35 தர வீதியின் வட்டுவாகல் பாலமானது எந்தவித புனரமைப்புக்களுமின்றி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுகின்றது. இவ்வாறு சேதமடைந்து காணப்படும் பாலமானது அடிக்கடி உடைவுகள் ஏற்படும்போது தற்காலிக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றதே தவிர, நிரந்தர புனரமைப்புகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது பாலத்தின் மையப்பகுதியில் உடைவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் பாரிய குழியும் காணப்படுகின்றது. ஆபத்தான நிலையில் வட்டுவாகல் பாலத்தில் ப…
-
- 0 replies
- 425 views
-
-
இனப்படுகொலையைக் கண்டித்து பன்னாட்டு சுதந்திர விசாரணைக்கு, இலங்கை ஆட்படுத்தப்பட வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது பிரித்தானிய தமிழர் பேரவை. கடந்த வாரம் லண்டனில் தமிழருக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களும் பிரித்தானிய தமிழர் பேரவையும் கலந்துகொண்ட நிகழ்வு நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவி, இலங்கையில் நடந்த மாபெரும் இனப்படுகொலையை உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இந்த இறுதிக்கட்ட போரின் கடைசி வாரங்களில் மட்டும் கிட்டத்தட்ட 70,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தாமதமாக ஒப்புக்கொண்டிருக்கிறது ஐ.நா அமைப்பு. பாதுகாப்பு வளையத்துக்குள் இலங்கை இராணுவம் பொழிந்த குண்ட…
-
- 0 replies
- 391 views
-
-
கூட்டத்துக்கு வராவிடின் மீண்டும் தடுப்பு முகாம் செல்ல நேரிடும் – படையினர் எச்சரிக்கை Tuesday, July 12, 2011, 10:47 சிறீலங்கா, தமிழீழம் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தாவில் நேற்று (10-07-2011) நடாத்தப்பட்ட சிறீலங்கா அரசாங்கத்தின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்கு இளையோர்கள் சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படையினரால் மிரட்டி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சிறீலங்கா படையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்திற்கு தமிழ் இளையோர்கள், குறிப்பாக சிறீலங்கா படையினரால் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பலர் மிரட்டி அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாமல் ராஜபக்ச கிளிநொச்சியில் நடத்திய பரப்புரைக் கூட்டத்த…
-
- 0 replies
- 383 views
-
-
சிறிலங்காவின் வணிகச் செயற்பாடுகளில் இந்தியா தலையிடக் கூடாது – சம்பிக்க ரணவக்க FEB 23, 2015by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் சீனாவின் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம், இராணுவப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாமல், முற்றிலும் வணிக நோக்கம் கொண்டதாக இருந்தால், அதுகுறித்த இந்தியா கவலைப்படத் தேவையில்லை என்று சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இது குறித்து விளக்கமளித்தார். கொழும்புத் துறைமுகமோ, துறைமுக நகரமோ, எந்தவகையான இராணுவ நடவடிக்கைக்கும் சீன அரசாங்கத்தினால் பயன்படுத்தப்பட்டால், அது இந்தியாவிலும் சிறிலங்காவிலும் மோசமான பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, இவை வணிக நோக்கம் மட்டும்…
-
- 1 reply
- 478 views
-
-
பாராளுமன்றத்தைக் கூட்ட முடியாமைக்கான காரணம் என்ன? – பிரதமர் மஹிந்த விளக்கம் 7 வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதனாலேயே பாராளுமன்ற கூட்டத்தை நடாத்த முடியாமல் இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அல்ஜெஸீரா சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். தமக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போதிய உறுப்பினர்கள் உள்ளனர். 113 பெரும்பான்மையை தம்மால் நிரூபிக்க முடியும். தனது நியமனம் அரசியலமைப்புக்கு ஏற்பவே முன்னெடுக்கப்பட்டது. தான் தொடர்ந்தும் பிரதமராக கடமையாற்றவுள்ளேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://www.dailyceylon.com/171369
-
- 0 replies
- 164 views
-
-
தேர்தலுக்கு முன் சிலையை உடைத்த மர்மம் என்ன ? பிரசுரித்தவர்: admin July 15, 2011 யாழ். உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அதிகாரம் மாறினால் சங்கிலியன் சிலையை உடைக்க முடியாது. ஆகவேதான் தேர்தலுக்கு முன்னரே அச்சிலை உடைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தலில் மக்களின் வாக்குகளை கேட்போர் அதிகமாக தேர்தலுக்கு பின்னரே இத்தகைய செயலை செய்வதுண்டு. ஆனால் சிறீலங்கா ஆட்சியாளர் தேர்தலுக்கு முன் சங்கிலியன் சிலையை உடைத்தமை அதிகாரம் மாறப்போவதைக் காட்டுகிறது. தற்போது யாழில் பெருகும் தமிழின உணர்வை அரசு சரியாக அளவிட்டுள்ளது. இது குறத்த இன்றைய செய்தி : யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னன் சங்கிலியனின் உருவச் சிலையை புதுப்பொலிவுடன் உருவாக்குவதற்காக பழைய சிலை மாநகரசபையால் அகற்றப்பட்டுள்ள…
-
- 0 replies
- 704 views
-
-
தலைமை அமைச்சர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக் கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலமை வகிக்கவேண் டும் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை முன்வைத்துள்ளார். இருப்பினும், கூட்டமைப்பு அந்தக் கோரிக்கையை அடியோடு நிராகரித்துள்ளதுடன், தமது கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்கும் முடிவை ஏற்கனவே எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ச…
-
- 1 reply
- 760 views
-
-
புலிகளின் விமானப்படை இந்தியாவுக்கு வலிப்பது ஏன்? (கலைஞன்) ஈழப்பிரச்சினையும் இந்தியாவும் தனது ஜென்ம விரோதியான பாகிஸ்தானின் விமானப் படையைவிட விடுதலைப் புலிகளின் விமானப் படை ஆபத்தானதென காட்டிக் கொள்வது போல் இந்திய அரசின் அண்மைக் கால நடவடிக்கைகள் அமைந்துள்ளதுடன் புலிகளின் விமானப் படையால் தமது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தாக்கப்படலாமென கூறிவருவது தொடர்பில் இராணுவ ஆய்வாளர்கள் ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஏதாவது ஒருவகையில் நெருக்கடி கொடுக்க வேண்டுமென்ற முனைப்புடன் செயற்பட்டு வரும் இந்திய மத்திய அரசு தற்போது விடுதலைப் புலிகளின் விமானப்படை தொடர்பாக தனது கவனத்தை திருப்பியுள்ளது. புலிகளின் விமானப் படை தொடர்பாக கடந்த ப…
-
- 2 replies
- 1.8k views
-
-
சுன்னாகம் பிரதேசத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்த பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்கு நோர்வே கூடிய கவனம் செலுத்தியுள்ளதுடன் அது தொடர்பான சகல பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் கிறீற்டா லோசன் தெரிவித்ததாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். நோர்வே உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கும் இடையிலான சந்திப்பு, வெள்ளிக்கிழமை (06) அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தரையை ஊடுருவி நிலத்தில் என்ன இருக…
-
- 1 reply
- 337 views
-
-
தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தம் – மகிந்த தேசப்பிரிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான செயற்பாடுகள் அனைத்தையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தி வைத்திருப்பதாக, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், சிறிலங்கா அதிபரின் அரசிதழ் அறிவிப்புக்கு இடைக்காலத் தடைவிதித்துள்ளது. அத்துடன், பொதுத் தேர்தலுக்கான செயற்பாடுகளையும், உடனடியாக இடைநிறுத்துமாறும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உச்சநீதிமன்றம், இடைக்கால தடைஉத்தரவைப் பிறப்பித்திருந்தது, இந்தநிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு…
-
- 0 replies
- 320 views
-
-
November 20, 2018 தமிழ்தேசிய கூட்டமைப்பு பச்சை நிறத்தின் மீது காதல் கொண்டு நிபந்தனை இல்லாமல் ஜ.தே.கட்சியை அல்லது ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை. என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவா ஜிலிங்கம், தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , சமகாலத்தில் உள்ள அரசியல் நிலமையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பேரம் பேச கூடிய சக்தியுடன் இருந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதா? ரணிலை ஆதரிப்பதா? என்பதல்ல இப்போதுள்ள பிரச்ச…
-
- 0 replies
- 999 views
-
-
வெள்ளிக்கிழமை 25 மே 2007 -priyan- கொழும்புத்துறைமுகத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்துரைத்திருக்கும் விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன்... சிறீலங்கா அரசாங்கமும் அரச படைகளும் விடுதலைப் புலிகளால் தான் இக்குண்டு வெடிப்பை நடத்தியுயுள்ளார்கள் என தவறான பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்கள். முப்படைகளும் வளச்சியடைந்த நிலையில் குறிப்பாக வான்படைகள் சிறீலங்கா படைத்துறையுடன் தொடர்புபட்ட இலக்குகள் மீது மிகவும் துல்லியமாக தாக்குதலைத் நடத்தும் போது இவ்வாறான சில்லறைத் தனமாக குண்டுத் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தவேண்டிய தேவை இல்லை. அவ…
-
- 0 replies
- 736 views
-
-
ஓமந்தை சோதனை நிலையம் வாரத்தில் மூன்று நாள்கள் திறக்கப்பட்டிருக்கும் அரசின் யோசனைக்கு விடுதலைப் புலிகள் இணக்கம் கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த, ஓமந்தைச் சோதனை நிலையம் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்கள் சோதனை நிலையத்தை திறந்து போக்குவரத்துக்கு வகை செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளது. செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு ஊடாக அரசாங்கம் தெரிவித்த யோசனைக்கு விடுதலைப் புலிகள் நேற்று இணக்கம் தெரிவித்தனர். இந்த இணக்கப்பாடு, வன்னியில் ஏற் பட இருந்த பெரும் மனிதாபிமானப் பிரச் சினைகளைத் தவிர்த்துள்ளதாக அரச சார் பற்ற நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத் தரப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் திருப்தி தெரிவித்துள்ளனர். இம் மாதம் 22ஆம் திகதி தொடக்கம் …
-
- 1 reply
- 1k views
-