ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
உலகெங்கிலும் உள்ள இலங்கை மக்களை உலுக்கிய ஈஸ்டர் கொலைவெறி தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசு பகீர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் பயங்கரவாத தடுப்பு பணியகம் வெளியிட்டுள்ள அந்த எச்சரிக்கை அறிக்கையில், பயணிகள் எவரும் இலங்கைக்கு செல்ல வேண்டாம் எனவும், இலங்கைக்கு மிக மிக கடுமையான அச்சுறுத்தல் தற்போதும் அமுலில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மட்டுமின்றி இலங்கையில் தற்போதுவரை தங்கியிருக்கும் வெளிநாட்டு பயணிகள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தற்போதைய சூழல் கட்டுக்குள் வரும்வரை எவரும் இலங்கைக்கு செல்ல வேண்டாம் எனவும் வலியுறித்தியுள்ளது. இந்த எச்சரிக்கையானது, இஸ்ரேல் அரசின் பாதுகாப…
-
- 0 replies
- 903 views
-
-
Published By: DIGITAL DESK 7 28 MAY, 2024 | 05:16 PM தமிழ்த்தேசிய இனம் தன் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், இறுதிப்போரில் இலங்கை அரசாங்கம் எமது மக்களை ஆயுத முனையிலும் பட்டினியாலும் இனப்படுகொலை செய்த போது கஞ்சிக்காக வரிசையில் நின்றோம் அதனை எமது தற்கால சமூகத்திற்கு நினைவு படுத்தும் முகமாக சிரட்டையில் கஞ்சி காய்ச்சி தன்னெழுர்ச்சியாக மக்கள் வழங்கியப…
-
- 0 replies
- 132 views
-
-
Published By: VISHNU 05 JUN, 2024 | 08:36 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற மூலோபாயம் பயனற்றது. தென்னிலங்கையில் உள்ள தலைவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்தே இறுதியான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அதேநேரம், தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற ஆணையைத் தென்னிலங்கையின் ஆட்சியாளர்கள் நிராகரித்து வருகின்ற நிலையில் தேர்தல்களைத் தொடர்ச்சியாக நடத்தப்படுவதற்கு அப்பால் தமிழ் மக்களின் ஆணையை ஏற்றுக்கொள்வதற்கான அழுத்தங்களையும் பிரயோகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்…
-
- 2 replies
- 291 views
- 1 follower
-
-
இலங்கையில் போர் முடிந்து ஆறு வருடங்களின் பின்னர் நடக்கும் ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் பல தரப்பட்ட கொள்கைகளை கொண்ட அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமை போன்ற கொள்கைகளை முன்வைத்து மூன்று தமிழ் கட்சிகள் போட்டியிடுகின்றன. அதேவேளை தேசியக் கட்சிகள் மற்றும் ஏனைய பல கொள்கைகளை முன்வைக்கும் கட்சிகளும் போட்டியிடுகின்றன. இதேவேளை, போரினால், இலங்கை தமிழர்களின் கணிசமான அளவினர் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். இவர்களும் கடந்த காலங்களில் போரின் போதும், ஏனைய அரசியல் நடவடிக்கைகளிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தி வந்திருக்கிறார்கள். இந்த தேர்தலில்கூட நேரடியாக இல்லாவிட்டாலும், தமிழ் பிரதேச வாக்களிப்புகளில் இவர்களின் மறைமுக…
-
- 0 replies
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,SJB MEDIA படக்குறிப்பு,அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை தமது ஆட்சியின் கீழ் நடைமுறைப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வட மாகாண விஜயத்தின் போது தெரிவித்திருந்தார். கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் இந்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் பிரசாரத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில், தமிழர்களின் வாக்குகளை கவரும் நோக்கத்துடன், பிரதான எதிர்க்கட்சிகள் அடுத்தடுத்து, வட மாகாணத்திற்கு பயணம் மேற்கொள்வதை காண முடிகின்றது. அதிபர் ரணில் விக்ரமசிங…
-
- 0 replies
- 306 views
- 1 follower
-
-
சமீபத்தில் தங்காலைப் பிரதேசத்தில் பிரித்தானியப் பிரஜை ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக தங்காலை பிரதேச சபை அதிகாரி ஒருவர் கைதாகியிருந்தார் என்ற செய்தி பரவலாக வெளியாகியிருந்தது. 32 வயதான ஷைக்கா சமான் என்பவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்ட நபராவார். அவரது காதலியான விக்ரோரியா அலெக்ஸான்டநோவா என்பவர் சம்பவ தினமன்று பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக மதுபான விடுதி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசானது நடந்த இச் சம்பவதை மூடிமறைக்க மதுபான விடுதியில் நடந்த தகறாரில் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அவரது காதலி காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் எனவும் தெரிவித்துவருகிறது. ஆனால் அங்கே நடந்த கதையோ வேறு. ரஷ்யப் பெண்ணான விக்ரோரியா அலெக்ஸான்டநோவாவின் துணிகளை உரிந்த சிலர் அவரைக் கற்பழித்த…
-
- 4 replies
- 1.2k views
-
-
அனுர யாப்பா, சுசில் பிரேமஜெயந்தவை சுதந்திரக் கட்சியை விட்டே நீக்கினார் மைத்திரிAUG 15, 2015 | 1:40by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாப்பாவும், சுசில் பிரேமஜெயந்தவும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். முன்னதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து அனுர பிரியதர்சன யாப்பாவையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்தவையும் மைத்திரிபால சிறிசேன நீக்கியிருந்தார். கட்சியின் கொள்கைகளை மீறியதாக …
-
- 0 replies
- 386 views
-
-
உயிர்த்தஞாயிறு தாக்குதலை அடுத்து இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் பாதுகாப்பு துறையின் செயற்பாடுகளுக்காக 2.6 பில்லியன்(260 கோடி ரூபாவை வழங்க முன்வந்துள்ள சீனா இலங்கை பொலிஸ்துறைக்கு 1.5 பில்லியன் பெறுமதியான 100 ஜீப் வண்டிகளை வழங்கவும் முன்வந்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (14) பிற்பகல் சீன ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதுகாப்பு துறையினரின் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி அவர்களின் கோ…
-
- 0 replies
- 810 views
-
-
18.11.2007 விடுதலை கோரி தமிழ்க்கைதிகள் சிறைகளில் உண்ணாவிரதம். மட்டக்களப்பு மற்றும் வெலிக்கடைச்சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாநிலைப் போராட்டத்தில் குதித்துள்ளனர். மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 38 தமிழ் அரசியல் கைதிகள் இந்த உண்ணா நிலைப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் 29பேர் சிறைச்சாலையின் கூரைமேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் தாம் வருடக்கணக்காக சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் தம் மீது திணிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரித்து விடுதலை செய்யுமாறும் கோரியே உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக்…
-
- 2 replies
- 1.3k views
-
-
நாடாளுமன்ற தேர்தலில் 16 ஆசனங்களை பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க சுதந்திர கட்சியில் மஹிந்த தரப்பினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரதிநிதிகள் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ள தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், எம்.சரவனபவன், மற்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வாசு தேவ நாணயக்கார, டலஸ் அலகபெரும, விமல் வீரவன்ச, டிரான் அலஸ் மற்றும்…
-
- 1 reply
- 600 views
-
-
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான நிலை- ஞானசார தேரரைச் சிறையில் பார்வையிட்டார் மைத்திரி! ரிஷாட் பதியுதீன் பதவி விலக வேண்டுமென அழுத்தம்- ரணிலும் கேட்டுள்ளார் இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடந்த தாக்குதலையடுத்து சிங்கள அரசியல் கட்சிகளிடையே பலத்த முரண்பாடுகள், மோதல்கள் அதிகரித்துள்ளன. கூட்டு எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி, ரணில் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை இலங்கை நாடாளுமன்றச் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளித்துள்ளது. அதேவேளை. அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு …
-
- 0 replies
- 414 views
-
-
ஈரான் மீதான மேற்குலக அழுத்தம் : அபாயத்தில் சிறிலங்கா அதிகரித்து வரும் ஈரான் மீதான மேற்குலக நாடுகளின் அழுத்தங்களால் அதிகம் பாதிக்ககூடிய நாடுகளில் ஒன்றாக சிறிலங்கா உள்ளதென ரொய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எண்ணெய் இறக்குமதியில் ஈரானை சிறிலங்கா பெரிதும் நம்பியிருப்பதால் இந்த அபாய நிலை ஏற்படுமென ரொய்ஸ்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. http://naathamnews.com/2012/01/15/iran-sri-lanka/
-
- 0 replies
- 674 views
-
-
நாட்டின் பிரதான அமைச்சு ஒன்றில் பணியாற்றும் மொஹமட் அலி ஹசன் கைது இன்று செய்யப்படடுள்ளார். மல்வானையிலுள்ள அவரின் வீட்டினை பரிசோதனை செய்த போது 92 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதாக பியமக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொஹமட் அலி ஹசன் நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளராக செயற்பட்டு வருகிறார். உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் அடுத்து நாடு பூராகவும் இராணுவத்தினர் தேடுல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்போது பயங்கரவாத அமைப்பான தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களை கைது செய்து வருகின்றனர். சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்பின் இலங்கை கிளையாக தவ்ஹித் ஜமாத் அமைப்பு செயற்பட்டு வருகிறது. இதன் தலைவராக தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த…
-
- 3 replies
- 1k views
-
-
இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்குச் சென்று பார்வையிடுவதற்கு ஒழுங்குகளை செய்து தரும்படி சிறிலங்கா அரசிடம் கோரப் போவதாக இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கான நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு அவர் நேற்றிரவு கொழும்பை வந்தடைந்தார். கொழும்பு புறப்பட முன்னர் அவர் இந்திய ஊடகங்களுக்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். "யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களையும், இந்துக் கல்லூரி மாணவர்களையும் சந்திக்கவுள்ளேன். அத்துடன் அங்குள்ள புலமையாளர்கள், நிபுணர்கள், பொதுமக்களை சந்திப்பதையிட்டு நிச்சயமாக மிகவும் மகிழ்ச்சிடைகிறேன். 2020இல் இந்தியாவை ஆற்றலுள்ள நாடாக மாற்றுவதற்கான தி…
-
- 6 replies
- 778 views
-
-
ரிஷாத்தை உடன் கைது செய்ய வேண்டும்:தேரர்கள் உண்ணாவிரதம் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கைதுசெய்யுமாறு கோரி தேரர்கள் சிலர் நேற்றுமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாத்தறையிலுள்ள விகாரை ஒன்றில் தேரர்கள் சிலர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்த ரிசாத் பதியுதினுக்கு எதிராக உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். அவரை கைது செய்யும் வரையில் போராட்டம் தொடரும் என்றும் இவர்கள் அறிவித்துள்ளனர். தேரர்களின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் பெருமளவு மக்கள் அங்கு கூடியுள்ளனர். முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் உயிர்த்த ஞாயிறு தற்கொலை…
-
- 0 replies
- 332 views
-
-
வெள்ளி 07-12-2007 17:44 மணி தமிழீழம் [முகிலன்] யால வனப் பகுதியில் மோதல்கள்: படைத்தரப்பில் ஒருவர் காயம் அம்பாந்தோட்டை யால வனப் பகுதியில் சிறீலங்கா படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றன. இன்று பிற்பகல் 2.15 மணியளவில் யால தல்கஸ்மங்கட வனப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இம்மோதல்கள் இடம்பெற்றன. மோதலின் போது சிறீலங்காப் படைகள் தரப்பில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.2k views
-
-
தேசிய புலனாய்வுப் பிரிவு தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க சிறிலங்கா தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜூன் 1ஆம் நாள் தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவருக்கான நியமனக் கடிதம் நேற்றுமுன்தினம் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொடவினால் கையளிக்கப்பட்டது, இதையடுத்து, அவர், நேற்று முன்தினம் கடமைகளைப் பொறுப்பேற்றார். தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக, இருந்த சிசிர மென்டிஸ், பதவி விலகியதை அடுத்தே, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத்தில் 1984ஆம் ஆ…
-
- 1 reply
- 430 views
-
-
இந்த நாட்டை ஆட்சி புரிந்த அரசுகளின் அராஜகப் போக்கினால் தான் பெண் புலி உறுப்பினாகள் உருவாகியதுடன், மட்டுமல்லாது அவர்கள் தற்கொலைக் குண்டுதாரிகளாக மாற வேண்டியேற்பட்டதற்கும் இதுவே காரணம், என்று மட்டு. மாவட்ட பா.உ கே.தங்கேஸ்வரி பாராளுமன்றில் தெரிவித்தார். 'எனது செயலாளரான நாகலிங்கம் அன்புமணியும் (வயது 72) எனது சக உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன் இருவரதும் உறவினர்கள் இருவரும் அரச கட்டுபப்பாட்டுப் பகுதியில் இயங்கும் ஆயுதக் குழுவொன்றினால் செவ்வாயன்று கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்'. ஜெயானந்தமூர்த்தி எம்.பி.யின் சகோதரரின் மகனான அருணாசலம் சிவபாலன் (வயது 28) மற்றும் அரியநேத்திரன் எம்.பியின் மூத்த சகோதரரும் 4 பிள்ளைகளின் தந்தையுமான ஸ்ரீஸ்கந்த சிவா (கிராமசேவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் முதலாவது மரண விபத்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காரொன்று பாதையைவிட்டு விலகியதால் 26 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த நவம்பர் 27 ஆம் திகதி திறக்கப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உயிரிழப்பு ஏற்பட்ட முதலாவது விபத்து இதுவாகும். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/35369-2012-02-03-02-20-52.html
-
- 1 reply
- 768 views
-
-
(எம்.மனோசித்ரா) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தமது அரசாங்கம் ஆட்சியமைத்தால் கிழக்கிற்கு மத ரீதியான ஆளுநர் ஒருவரைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அந்த அரசாங்கம் எவ்வாறானதாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நாமும் ஜனாதிபதியும் 100 நாள் வேலைத்திட்டத்துக்கமைய செயற்பட்டு வருகின்றோம். எனவே புதிதாக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு ஒன்றும் இல்லை. 18ஆம் திகதி கொட்டகலையில் எமது தேசிய சபை கூடி ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதைத் தீர்மானிக்கும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அதற்கமைய அட…
-
- 0 replies
- 154 views
-
-
அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- இனியும் பொறுத்திருக்க முடியாது. நானே நேரில் போய் இரண்டு தட்டு தட்டினால் தான் இவர்கள் திருந்துவார்கள் - டக்ளஸ் எனது பையன்களை கவனிக்கச் சொன்னால் அக்கறையற்று பேசாமல் இருக்கிறார்கள். இனியும் பொறுத்திருக்க முடியாது. நானே நேரில் போய் இரண்டு தட்டு தட்டினால் தான் இவர்கள் திருந்துவார்கள் போல என திருவாக்கு மலர்ந்துள்ளார் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா. இன்று மாலை தனது சிறீதர் திரையரங்கில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளில் சிலரை சந்தித்து உரையாடினார். அவ்வேளை அங்கு சமூகமளித்திருந்த வடக்கு மாகாண ஆளுநரது செயலாளரான எல்.இளங்கோவன் எனும் அதிகாரி பத்திரிகையில் வெளிவந்த ச…
-
- 5 replies
- 2k views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அன்று பல கோரிக்கைகளை முன்வைத்து ஆயுதமேந்திப் போராடியதை போன்று இன்று நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் கருணா ஆகியோர் உண்ணாவிரத போராட்டம் என்ற ரீதியில் போராடி பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றார்கள். இதற்கு ஒரு தலைப்பட்சமாக ஆதரவு வழங்கும் பௌத்த பிக்குகள் எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் தூரநோக்குடன் ஆராய்ந்து பொறுப்புடன் செயற்படுதல் அவசியமாகும் என முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் மொஹமட் மில்ஹான் தெரிவித்தார். ஏப்ரல் குண்டுத்தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உள்ளடக்கிய 10 கோரிக்கைகளை முன்வைத்து முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர…
-
- 4 replies
- 872 views
-
-
24 AUG, 2024 | 11:33 AM கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதி இயக்கச்சி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று குறித்த பகுதியில் பயணிகளை ஏற்றி சென்றபோது வீதியால் சென்ற ஒருவர் திடீரென பஸ்ஸை வழிமறித்து ஏற முற்பட்ட வேளை பஸ் சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளைப் பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
கொழும்பு, மாளிகாவத்தையில் ஜே.வி.பியினால் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றுவரும் ஆர்பாட்டத்தில் கண்ணீர்ப் புகை பிரயோகம் மற்றும் தண்ணீரடிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.எரிபொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து நாட்டின் பல பாகங்களிலும் ஆங்காங்கே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில், கொழும்பு, மாளிகாவத்தையில் ஜே.வி.பி. ஒழுங்கு செய்த ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் தண்ணீரடிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். http://www.saritham.com/?p=50703
-
- 4 replies
- 711 views
-
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16ஆவது பேராளர் மாநாடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உட்படப் பலரும் உரையாற்றியிருந்தனர். அதிலும் மாவை சேனாதிராசா மற்றும் இரா. சம்பந்தர் ஆகியோரின் உரைகள் அவர்கள் இன்னமும் 1972களிலேயே இருக்கிறார்கள் என்பதை உணரமுடிந்தது. தமிழ் மக்களின் சமகால மனநிலை எப்படியாக இருக்கிறது என்பதைக்கூட அவர்கள் அறிந்து வைத்திருக்கவில்லை என்று நினைக்கும்போது, அவர்கள் பாவங்களா? அல்லது தமிழினம் பாவப்பட்டதா? என்ற எந்த முடிவுக்கு வருவதென்பது பற்றித் தெரியவில்லை. ஆயுதம்தான் பலம் என்று இலங்கை அரசு கருதுமாக இருந்தால், அதுபற்றியும் பரிசீலி…
-
- 0 replies
- 394 views
-